இன்றைய கவிதைக்காரன்

'முன்னேறிச் செல்ல
முழுப் பாதை தெரிய வேண்டும்'
சின்னச் சின்ன வரிகளாய்
அறிவுரைகளாய் கவிதை எழுதுவார் அவர்
வார்த்தைகளை மாற்றி மாற்றி
மாற்றி வைத்து
வித்தை புரிவார் இன்னொருவர்
ராஜ ராகங்களிலும்
சோகச் சுற்றுலாக்களிலும்
தொலைந்து விடுவார் சிலர்
ஞாபகச் செதில் மன அடுக்கு
என எழுதுவார் இவர்
கிண்டல் செய்து தடாலடி
கவிதை எழுதுவதே மற்றொருவரின் பாணி
இல்லாத பேரர்த்தத்தை
இருப்பதைப் போல் பாவனை
செய்வார் பிறிதொருவர்
ஒவ்வொன்றாய்ப் படித்து
ஒவ்வொன்றாய் எழுதி
எப்படி முன்னேற
இன்றைய கவிதைக் காரன்

7 comments:

கிருத்திகா said...

"இல்லாத பேரர்தத்தை"
என்னது இது - பேர் அர்த்தம்" என்பதன் கூட்டுத்தொகையா

ஆடுமாடு said...

//ஒவ்வொன்றாய்ப் படித்து
ஒவ்வொன்றாய் எழுதி
எப்படி முன்னேற
இன்றைய கவிதைக் காரன்//


சரிதாங்க.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, கிருத்திகா. பெரிய / நுட்பமான அர்த்தம் என்பதாய் உபயோகித்திருந்தேன்.

நன்றி, ஆடுமாடு.

கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...

பேரர்த்தத்தை? "த்" இல்லாட்டி, பேரனோட கிளி! கிருத்திகா பின்னூட்டம் / உங்க பதில் படித்த பின்னே தான் என் மண்டையில் உதயமானது... //இல்லாத பேரர்தத்தை இருப்பதைப் போல் பாவனை// ஹிஹி. ஒண்ணும் சொல்லலை.

இட வந்த ஒரிஜினல் பின்னூட்டம்: இன்றைய கவிதைக்காரன் பதிவிடலாம். என்னைப் போன்றவர்கள்
(பதிவு) ஒவ்வொன்றாய்ப் படித்து
(பின்னூட்டு) ஒவ்வொன்றாய் எழுதி
எப்படி முன்னேற
இன்றைய ஆட்டு மந்தைக் காரி/ரன்?

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, கெக்கேபிக்குணி (என்ன பேர்பா, எழுதவே கஷ்டமா இருக்கு.!).

உங்கள் பின்னூட்டம் பார்த்தபின் தான் அபத்தம் புரிந்தது. மாற்றி விட்டேன்.

அருட்பெருங்கோ said...

நல்ல கேள்விதான்.
அதனாலதான் காதல பத்தி என்ன எழுதினாலும் கவிதையாகிடும்னு நான் ஒப்பேத்திட்டு இருக்கேன்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, அருட்பெருங்கோ.