தண்ணீர் இழுக்கத் தேவையின்றி
குழாயில் நீர் வந்தால்
முழித்த முகம் நல்ல முகம்
ரயில் நிலையம் வந்தவுடன்
ரயில் வந்தால் நேரம் நல்ல நேரம்
டீக்கடை காபி
பாயாசமாய் இல்லாதிருந்தால்
மகிழ்ச்சியோ மகிழ்ச்சி
ஒழுங்காய் வேலை செய்து
ஷொட்டு வாங்கினால்
நல்லது ரொம்ப நல்லது
மதிய தயிர்ச் சாதம்
புளிக்காமல் இருந்தால்
நீரூற்றிச் சாப்பிடலாம்
நிறைவாய் இருக்கும்
செலவில்லாமல் குவார்ட்டர் கிடைத்தால்
ஆத்ம சந்தோஷம்
காய்கறிகள் வாங்கிக் கொடுத்து
மனைவி திருப்தியடைந்தல்
நிம்மதி வெகு நிம்மதி
நேரத்திற்குப் படுத்து
உறங்க முடிந்தால்
சொர்க்கமோ சொர்க்கம்
காணி நிலம் வேண்டாம் பராசக்தி
பத்துக்கு எட்டு அறை போதும் -
வாடகைக்கு
கார்காலக் குறிப்புகள் - 60
1 day ago
4 comments:
"வாரம் இரு பதிவிட முடிந்தால் அது நல்ல வாரம். " என சேர்த்திருக்கலாம் சுந்தர்..
நன்றி, கிருத்திகா.
இன்னும் கொஞ்சம் செதுக்கியிருந்தால் கச்சிதமாக அமைந்திருக்குமோ என தோன்றுகிறது.
நன்றி, மஞ்சூர் ராசா. இனி, இன்னும் கவனமாயிருப்பேன்.
Post a Comment