தெருவில் எப்போதும்
அலைந்து கொண்டிருக்கும்
இந்தக் கறுப்பு நாயை
எனக்கு ரொம்பப் பிடிக்கும்
அகால வேளைகளில்
வீடு திரும்பும் போது குரைக்காது
வாலைக் குழைத்தபடி
ஓடி வந்து கால்களை நக்கும்
நான் பிஸ்கெட் போடுவேன்
பிஸ்கெட் போடாவிட்டால்
கால்களை நக்குமா
கால்களை நக்கா விட்டால்
பிஸ்கெட் போடுவேனா
கார்காலக் குறிப்புகள் - 60
1 day ago
8 comments:
நல்லா இருக்கு தல..!
ஆனா.. கடைசி வரி.. 'போடுவேனா' என்பதற்கு பதில் 'போட்டிருபேனா'என்று வரவேண்டுமா.. அல்லது இப்படித்தானா?
நன்றி, தல.
தொடர் நிகழ்வென்பதால் ‘போடுவேனா' என்பது தான் சரி என நினைக்கிறேன்.
'போடுவேன்' என்று முதல் வரியில் உள்ளதால் 'போடுவேனா' என்பது சரி என்றே படுகிறது. அதாவது இது ஒரு முறை நடந்தது அல்ல. பெரும்பாலும் நிகழ்வது எனலாம். சுந்தர், கதையில் பிடிக்காத நாய் கவிதையில் பிஸ்கட் சாப்பிடும் அளவுக்கு பரஸ்பர அன்பு வளர்ந்ததில் மகிழ்ச்சி.
ராஜா
இந்த கவிதை ஏற்கனவே படித்த ஒரு கவிதையை நினைவூட்டுகிறது.
நகுலனுடையதா அல்லது வேறு யாருடையதா என்பதை நினைவில் கொண்டுவர முடியவில்லை.
பரஸ்பரம் என்பது சுயநலம்தானே.. நல்ல கவிதை.
நன்றி, ராஜா.
நன்றி, மஞ்சூர் ராசா. 1993ல் எழுதிய கவிதை இது. நகுலன் எழுதியிருக்காரா என்ன இது மாதிரி.. எனக்கு நினைவில்லையே...
நன்றி, ஜமாலன்.
நன்றி, முரளி கண்ணன்.
நல்லாருக்குங்க!
Post a Comment