Tuesday, January 1, 2008

வாழ்தல்

பயமுறுத்தியபடி நின்றிருக்கிறது
கேள்விக் குறியான எதிர்காலம்
கழுவி விடப்பட்ட தரையைப் போல்
கிடக்கிறது மனம் சலனமற்று
வேலை செய்ய மறுக்கிறது மூளை
உதறுகின்றன கால்கள்
எதிரிகளின் கெக்கலிப்பு
ஒலிக்கிறது காதுகளில்
பெற்ற மற்றும் பெறப் போகும்
அவமானங்களை நினைத்து
தற்கொலைக்கும் வாழ்விற்கும்
இடையில்
ஊசலாடிக் கொண்டிருக்கிறது உயிர்

சோடியம் வேப்பர் வெளிச்சம்
தொட முடியாத தூரம்
பௌர்ணமி நிலா ஒளி
தடவிக் கொடுக்க
ஆர்பரிக்கும் கடல் அலைகளின்
வெள்ளை நுரை
படுதா விரிப்பு
பார்வைக்கெட்டிய வரையில்

2 comments:

  1. //கழுவி விடப்பட்ட தரையைப் போல்
    கிடக்கிறது மனம் சலனமற்று//

    நுட்பமான வரிகள்.

    தற்கொலைக்கும் வாழ்விற்கும்
    இடையில்
    ஊசலாடிக் கொண்டிருக்கிறது உயிர்

    இன்றைய வன்மறை உலகில் இதனை இப்படி வாசிக்கிறது மனசு.

    "தற்கொலைக்கும் கொலைக்கும்
    இடையில்
    ஊசலாடிக் கொண்டிருக்கிறது உயிர்".

    இரண்டாவதுது பகுதி தற்கொலைக்கு முந்தைய கணங்களா?

    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. நன்றி, ஜமாலன்.

    /இரண்டாவதுது பகுதி தற்கொலைக்கு முந்தைய கணங்களா?/

    ஆம்.

    ReplyDelete