அசையாதிருக்கும் இரவின் வெளிச்சத்தில் ஊர்ந்து கொண்டிருக்கிறது ஓலைக் கூரையின் நடுவில் இரை தேடும் பாம்பு இப்புறம் திரும்புமா அப்புறம் செல்லுமா என்பதில் இருக்கிறது வாழ்வு
பிரார்த்தனையின் இரைச்சலில் திரும்பிய பாம்பு விழுங்கிச் செல்லும்
பன்முகம் அர்த்தம் கொண்ட கவிதை. பொதுவாக பாம்பு என்பது ஒரு தொல்மனப்படிவம். அதன் குறியிட்டுப் பொருள் ஆண்குறி. இது ஒரு தொண்மக் கவிதையாக உள்ளது. பிரார்த்தனை என்பதை மதமாக குறியிட்டால் கவிதை இறையியலுக்கு எதிரான ஒடுக்கப்பட்ட உடலின் கலகம் பற்றியதாக உள்ளது. ஓலைக்கூரை என்பதை எல்லாம் உடைக்க உடைக்க கவிதை அதன் அர்த்த சாத்தியங்களை விவரித்துக் கொண்டே விரிந்து செல்கிறது. இறுதிவரிகள் "எதை?" என்கிற கேள்வியுடன் திறந்து கிடக்கிறது. அருமை. மதங்களுக்கு இரையாகும் உடல்கள் அதனால்தான் பாம்பு என்பது ஓரு முக்கிய மதக் குறியீடாகிறது போலும்.
பாம்பை ஆன்குறி மற்றும் காமத்திற்குக் குறியீடாகவும் பிரார்த்தனையை மதத்திற்குக் குறியீடாகவும் உபயோகித்திருந்தேன். கடைசி வரி எதை விழங்கிச் செல்கிறது என்பதைத் தெரிந்தே குறிப்பிடாமல் விட்டிருந்தேன்.
நீங்கள் நிறைய கவிதை எழுதாவிட்டாலும், கவிதையைச் சிக்கெனப் பிடிக்கிறீர்கள். நன்றி, ஜமாலன்...
//அசையாதிருக்கும் இரவின் வெளிச்சத்தில்//
ReplyDeleteரொம்ப ரசித்தேன்..
நன்றி, தங்ஸ்...
ReplyDeleteபன்முகம் அர்த்தம் கொண்ட கவிதை. பொதுவாக பாம்பு என்பது ஒரு தொல்மனப்படிவம். அதன் குறியிட்டுப் பொருள் ஆண்குறி. இது ஒரு தொண்மக் கவிதையாக உள்ளது. பிரார்த்தனை என்பதை மதமாக குறியிட்டால் கவிதை இறையியலுக்கு எதிரான ஒடுக்கப்பட்ட உடலின் கலகம் பற்றியதாக உள்ளது. ஓலைக்கூரை என்பதை எல்லாம் உடைக்க உடைக்க கவிதை அதன் அர்த்த சாத்தியங்களை விவரித்துக் கொண்டே விரிந்து செல்கிறது. இறுதிவரிகள் "எதை?" என்கிற கேள்வியுடன் திறந்து கிடக்கிறது. அருமை. மதங்களுக்கு இரையாகும் உடல்கள் அதனால்தான் பாம்பு என்பது ஓரு முக்கிய மதக் குறியீடாகிறது போலும்.
ReplyDeleteஅன்புள்ள ஜமாலன்,
ReplyDeleteபாம்பை ஆன்குறி மற்றும் காமத்திற்குக் குறியீடாகவும் பிரார்த்தனையை மதத்திற்குக் குறியீடாகவும் உபயோகித்திருந்தேன். கடைசி வரி எதை விழங்கிச் செல்கிறது என்பதைத் தெரிந்தே குறிப்பிடாமல் விட்டிருந்தேன்.
நீங்கள் நிறைய கவிதை எழுதாவிட்டாலும், கவிதையைச் சிக்கெனப் பிடிக்கிறீர்கள். நன்றி, ஜமாலன்...
ஜ்யோவ்ராம் சுந்தர்
நல்லதொரு கவிதை சுந்தர்.
ReplyDeleteஜமாலனின் பின்னூட்டமும் கவிதையை இன்னும் விரிவான தளத்துக்குக் கொண்டு செல்கிறது.
நன்றி, DJ.
ReplyDeleteI cant understand this kavithai. What should i do(read) to understand these kavithaigal
ReplyDeleteNandri