பதிவுலக நண்பர்களுக்கு,
கோபி கிருஷ்ணனின் நேர்காணலைத் தொடர்ந்து அவரது 'டேபிள் டென்னிஸ்', 'தூயோன்' தொகுப்புகளை இலவசமாக அனுப்பி வைப்பதாகக் குறிப்பிட்டிருந்தோம். பதிவுலக நண்பர்கள் இதற்குத் தந்த ஆதரவு உண்மையில் எங்களை மலைக்க வைத்துவிட்டது.
நேற்று மாலை 6 மணி வரையில் 254 நண்பர்கள் தங்களது முகவரிகளை கொடுத்திருக்கிறார்கள். இதில் 26 நண்பர்கள்தான் வலைத்தளத்தில் எழுதுபவர்கள். மற்ற அனைவருமே பதிவுலகை தொடர்ந்து படிப்பவர்கள். குறிப்பாக பின்னூட்டம் கூட போடாதவர்கள்தான் அதிகம். இதிலிருந்து ஒரு விஷயம் நன்றாகப் புரிகிறது. அதாவது பதிவுலகை வாசிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. பின்னூட்டங்களை மட்டுமே கொண்டு படிப்பவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிட முடியாது.
இந்த 254 நண்பர்களில் 68 பேர், 'மொழி விளையாட்டு' மூலமாக வந்தவர்கள். 12 நண்பர்கள், நண்பர் லக்கிலுக், 'டேபிள் டென்னிஸ்' குறித்து எழுதிய பதிவை வாசித்துவிட்டு முகவரி கொடுத்தவர்கள். மீதமுள்ள 174 நண்பர்களும் சாருவின் இணையதளம் வழியாக பதிவு செய்தவர்கள்.
கோபி கிருஷ்ணனின் படைப்புகள் பரவலாகப் போய்ச் சேர வேண்டும் என தங்களால் இயன்ற அளவுக்கு உதவிய நண்பர்கள் சாரு, லக்கிலுக் ஆகியோருக்கு நன்றி.
பதிவில் குறிப்பிடாமல், ஆனால் நூல்களை பெறுபவர்கள் ஆச்சர்யமடைய வேண்டும் என்பதற்காக 'தமிழினி' வசந்தகுமாருடன் இணைந்து ஒரு ஏற்பாடு செய்திருந்தோம். அதாவது கோபி கிருஷ்ணனின் 'டேபிள் டென்னிஸ்', 'தூயோன்' நூல்களைத் தவிர, அவரது 'இடாங்கினிப் பேய்கள்...' நூலையும் நண்பர்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறோம்.
உண்மையில் இந்தளவுக்கு நாங்கள் ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. அதனாலேயே மிகுந்த தயக்கத்துடன் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கிறது.
நேற்று மாலை 6 மணி வரை - அதாவது மே 6ம் தேதி வரை - முகவரி கொடுத்த நண்பர்களுக்கு மட்டுமே நூல்களை அனுப்ப முடியும் என்ற இக்கட்டான நிலையில் நாங்கள் இருக்கிறோம். காரணம், பிரதிகள் அனைத்தும் தீர்ந்துவிட்டன. இதிலும் ஒரு சிக்கல். நேற்று வரை பதிவு செய்தவர்களில் 7 நண்பர்களுக்கு 'டேபிள் டென்னிஸ்' தவிர மற்ற இரு நூல்கள் மட்டுமே அனுப்ப இயலும். தவிர்க்க இயலாமல் நிகழ்ந்துவிட்ட இந்த ஏமாற்றத்துக்காக நண்பர்கள் எங்களை மன்னிக்க வேண்டும்.
இன்று முதல் மெயில் மூலமாக முகவரியை கொடுக்க ஆரம்பித்திருக்கும் நண்பர்களுக்கு தனிப்பட்ட மடல் அனுப்பி வருகிறோம். கோபி கிருஷ்ணனின் மேலே குறிப்பிட்டுள்ள 3 நூல்களின் பிரதிகளுமே தற்சமயம் கைவசமில்லை. எனவே இனி யாரும் பதிவு செய்ய வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
நேற்று வரை பதிவு செய்துள்ள நண்பர்களுக்கு அதிகபட்சம் இன்னும் ஒரு வார காலத்துக்குள் கோபியின் 3 நூல்களும் கிடைத்துவிடும். தபால் துறையினரின் சுறுசுறுப்பை பொறுத்து ஒரு வாரம் என்பது 10 நாட்களாகவும் உயரலாம்.
பதிவுலக நண்பர்களுக்கு இப்படியொரு வாய்ப்பை வழங்கிய 'தமிழினி' வசந்தகுமாருக்கு ஸ்பெஷல் நன்றி.
கோபி கிருஷ்ணனுக்கு நீங்கள் அளித்துள்ள ஆதரவு, எங்களை உணர்ச்சிவசப்பட வைத்திருக்கிறது. இதுபோல் தொடர்ந்து செய்யலாம் என்ற எண்ணம் இருக்கிறது.
பார்ப்போம்.
தோழமையுடன்,
பைத்தியக்காரன் / ஜ்யோவ்ராம் சுந்தர்
கார்காலக் குறிப்புகள் - 58
2 days ago
41 comments:
// இதுபோல் தொடர்ந்து செய்யலாம் என்ற எண்ணம் இருக்கிறது.//
தொடருங்கள் உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்துக்கள்
ஒட்டு போட்டாச்சு , உக்கார்ந்து பணம் சம்பாதிக்கறது எப்படின்னு ஒரு பதிவு போட்டு இருக்கேன் கொஞ்சம் நம்மளையும் கவனிங்க http://technotamil.blogspot.com/2009/05/blog-post_06.html
மிக்க மகிழ்ச்சி.
தங்கள் முயற்சிகளுக்கு நன்றி ஜ்யோவ்ராம்/பைத்தியக்காரன்.
இதுபோன்ற சில முயற்சிகளை நண்பர்களோடு இணைந்து முன்னெடுக்க முன்னுதாரணமாக அமைந்து விட்டீர்கள்.
Hi Jyo,
Appreciate your efforts. I have also registered. Hope to get it soon. Eagerly looking fwd to read Gopi's works. What you said about the reader count is very true. A lot of my frnds like me have never posted even a comment. So, it is not a true indicator of reader count. From what i read, I think your blog is really good.
உங்கள் முயற்சிக்கு நன்றியும் வாழ்த்துகளும்
குருஜி உங்க இருவரின் முயற்சியும் வெற்றியடைய வாழ்த்துகள். காதல் படத்துல அந்த உதவி இயக்குனர் சொல்ற மாதிரி 'உங்ககிட்ட இருந்து இன்னும் எதிர்பார்க்கிறேன்' :)
முகவரி கொடுத்து நாளாச்சி, பொஸ்தவம் வரலை, அழுதுடுவேன்...!
இவ்வளவு ஆர்வம் மகிழ்ச்சி தான். உங்கள் அனைவருக்கும் பாராட்டுகள்.
அனுஜன்யா
Why do you give them free when his family is not rich. You could have raised money through a campaign and could have announced that these books would be sent free for those who contribute more than Rs 500. I wanted to read them but not as freebies. So I did not make a request. I can afford to buy and will buy. If that can be some help to his family so be it.
This freebie culture is not always good. Give respect to others efforts and buy books and things
when you can afford. Gopi's family is not like the family of AVM or
Kamal Hasan.So any effort to recognise his works should benefit his family.Keep this in mind.
தல என் ஞபகமறாதியாயால மின் அஞ்சல் அனுப்ப மறந்துவிட்டேன்..என்னையும் அந்த பட்டியலில் ஒருவனாக இணைத்துவிடுங்கள்.என் மின்னஞ்சல் முகவரி :agnipaarvai@gmail.com
மற்றபடி உங்களின் இந்த முயற்ச்சிக்கு என் வாழ்த்துக்கள்...
ஜ்யோவ்ராம்/பைத்தியக்காரன் - முயற்சிக்கு நன்றி தெரிவிக்கும் அதேசமயத்தில், இந்த புத்தகங்களை மின்னூலாக்கி எப்போதும்/எங்கேயும் கிடைக்குமாறு முயற்சி செய்ய வேண்டுகோள் விடுக்கிறேன்.
மின்னூலை விற்கவும் முயற்சி செய்தால், வெளிநாட்டில் இருக்கும் என்னைப்போன்றோரும் வாங்குவோமே.
முடியுமா?
இன்று காலை மூன்று புத்தககங்களும் கிடைக்கப் பெற்றேன்.
உங்களுக்கும் பைத்தியக்காரன் அவர்களுக்கும், தமிழினிக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்
Thank You very much for the books. I am also one of those guys who don't post a comment, but still i enjoy reading your blog and charu's. Keep writing.
மிக்க நன்றி நண்பரே. தொடரட்டும் தங்கள் இலக்கிய சேவை.
ஜ்யோவ்ராம்/பைத்தியக்காரன்,
என்னுடைய மின்னூல் requestக்கு - ஏதாவது தேறுமா?
வாழ்த்துக்கள், சுந்தர்.
“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்
மிக அருமையான விஷயம். பாராட்டுக்கள் சுந்தர்.
நூல்களுக்காக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். நன்றி.
--
சுமேஷ் முகுந்தன்
பெங்களூர்
அடுத்து எதுவா இருந்தாலும் எனக்கு ஒரு பிரதி அட்வான்ஸ் புக்கிங்!
Hi Jyo,
If the list of ppl who have requested for book is too huge, the ppl who got it can circulate it to the ppl in waiting list. Guess, the ppl who got it will have no issues in doing this favour. Afterall, you are trying to popularize Gopi's work. Am sure readers will be happy to participate in this chain. This will be a really good beginning. Plz see if this can workout.
நூல்களுக்காக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். நன்றி.
-FIRTHOUSE RAJAKUMAAREN
COIMBATORE-8
Cell- 99438 70919
Dear J Sundar,
Awaiting for the books,
Thanks for your efforts,
alongwith the book please send
the list of good book available
with the publisher, so we can order
some good books.
Thanks again.
Sureshkumar.
"Why do you give them free when his family is not rich. You could have raised money through a campaign and could have announced that these books would be sent free for those who contribute more than Rs 500. I wanted to read them but not as freebies. So I did not make a request. I can afford to buy and will buy. If that can be some help to his family so be it."I very much agree with this.
I too have registered to recieve Gopi's works and i'm ready to pay for these books if i know the proper channel. And that can enable jyovram to send to others who havent got these books.
Why do you give them free when his family is not rich. You could have raised money through a campaign and could have announced that these books would be sent free for those who contribute more than Rs 500. I wanted to read them but not as freebies. So I did not make a request. I can afford to buy and will buy. If that can be some help to his family so be it.
அன்பின் ஜ்யோ,
இந்த கோரிக்கையில் மிகுந்த நியாயம் இருப்பதாகவே படுகிறது.
கோபி கிருஷ்ணனை தெரியாதவர்கள் அல்லது படித்தறியாதவர்கள் வேண்டுமானால் பிறகு படித்தபின் வாய்ப்பிருப்பிருந்தால் உதவட்டும்.ஆனால் இணைய உலாவிகளான நமது நண்பர்கள் மனது வைத்தால் நிச்சயம் அவர் குடும்பத்திற்க்கு நம்மால் குறிப்பிடத்தகுந்த அளவு உதவ முடியும் என்றே நினைக்கின்றேன்.
தயவு கூர்ந்து, வரும் உதவிகளை ஒன்றினைத்து முன்னின்று சேர்ப்பீர்களென்ற நம்பிக்கையுடன், என்னால் இயன்ற தொகையினை அனுப்பிவைக்க வசதியாக வங்கி கணக்கு எண்ணோ அல்லது டிமாண்ட் ட்ராப்ட் அனுப்பிவைக்க ஏதுவாக தங்கள் முகவரியோ எனது மின்னஞ்சல் முகவரிக்கு உடன் அனுப்பிவைக்க கேட்டுக்கொள்கிறேன்.
நூல்கள் வந்தன, நன்றி. நான் இப்பணிக்கு ஏதேனும் செய்ய இயலுமா என்றும் காத்திருக்கிறேன்
அன்புடன், ருத்ரன்.
மிகத்தேவையான ஒன்றை செய்திருக்கும் சுந்தர் / பைத்தியக்காரனுக்கு வாழ்த்துகள்.
தாங்கள் அனுப்பிய புத்தகங்கள் நேற்று (08/05/09) கிடைத்தது..மிக்க நன்றி.
ஜ்யோவ்ராம் தான் பைத்தியக்காரனா...
இன்றுதான் தெரிந்துக்கொண்டேன்.
’நான் கடவுள்’ நர்சிம் பதிவில் உங்கள் பின்னாட்டோங்கள் அருமை
புத்தகங்கள் எதிர்காலத்தில் கிடைத்தால் அனுப்பிவையுங்கள்.
நீங்களும் அவரும் வேறு என்பதை உங்கள் பிற பதிவிகளை படிக்கும் போது உணர்ந்துக்கொண்டேன். misconception
மிகவும் மகிழ்ச்சியாய் உணர்கிறேன்.
உங்கள் முயற்சிக்கு பதிவுல நண்பர்கள் கொடுத்த ஆதரவை விட ஒரு நல்ல எழுத்தாளரின் படைப்பு பரவலாக அறியப் பட வேண்டும் என நீங்களும் நண்பர் பைத்தியக்காரனும் செயல்பட்டது தான் மிகப் பெரிய விஷயம். கேட்டவருக்கெல்லாம் இலவசமாகக் கொடுத்து ஒரு படைப்பாளியை பரவலாக்கிய உங்கள் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
நீங்கள் அனுப்பிய புத்தகங்கள் இன்று கிடைத்தது மிக்க மகிழ்ச்சி.
கோபி உடையே வேறு ஏதேனும் புத்தகங்கள் சந்தையில் விற்பனைக்கு உள்ளதா ? அப்படி இருக்கும் எனில் அந்த புத்தகங்கள் பெயரை சொல்லுங்களே .
இந்தப் பதிவில் உள்ளததைத் தவிர கோபிகிருஷ்ணனின் பிற புத்தகங்கள் :
ஒவ்வாத உணர்வுகள் (சிறுகதைத் தொகுதி), உணர்வுகள் உறங்குவதில்லை (குறுநாவல்கள்), உள்ளேயிருந்து சில குரல்கள் (இந்தப் புத்தகத்தைப் பற்றிய விவரம் அவரது நேர்காணலில் இருக்கிறது) மற்றும் முடியாத சமன் & மானுட வாழ்வு தரும் ஆனந்தம் (சிறுகதைத் தொகுதிகள்). வேறு வந்திருப்பதாகத் தெரியவில்லை.
அவரது சகல எழுத்துகளையும் அடக்கிய முழுத் தொகுதியொன்றை தமிழினி ஜனவரி 2010ல் சென்னை புத்தகக் கண்காட்சியின்போது வெளியிட இருக்கிறது.
அடடா.. வட போச்சே :-)
Np, Can wait for 2010.
புத்தகங்கள் வந்து சேர்ந்தன.
மிக்க நன்றி ஜ்யோ மற்றும் பைத்தியக்காரனுக்கு.
மேலும் முந்தைய எனது பின்னூட்டத்திற்க்கு எந்தவித பதிலும் காணோம்....கவனிக்க.
பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.
@கிரிதரன் - மின்னூல் ஆக்கினால் காப்பிரைட் பிரச்சனை வராதா?
@கும்க்கி - அதற்கு மேலதிக உழைப்பு தேவைப்படும். பார்ப்போம், முடிகிறதா என்று.
கோபிகிருஷ்ணனின் புத்தகங்களை இலவசமாக கொடுத்திருக்க வேண்டாம் என்ற அனானிகளின் கருத்தோடு நானும் ஒத்துப் போகிறேன். எனது பதிவில் இது குறித்து பேசியிருந்தேன்.
http://joeanand.blogspot.com/2009/05/blog-post_14.html
மின்னஞ்சலிலும் & பதிவிலும் கூறியபடி, சுந்தருக்கு என் நன்றிகள்.
அன்பு நண்பரே!
கோபிகிருஷ்ணனின் புத்தகங்கள் கிடைத்தன. மிகவும் நன்றி. உங்கள் ஈ மெயில் அட்ரஸ் என்ன?
இப்பிடில்லாம் நடக்கும்னு தெரிஞ்சிதான் போன தடவை பாக்கும் போது உங்களுக்கே தெரியாம 3 புக்கையும் லவுட்டிக்கொண்டு வந்துவிட்டேன்.. ஹிஹி.. எப்பூடி?
சேவை வாழ்த்துகளுக்கு அப்பாற்பட்டது..
Post a Comment