தலையில் பாதி வழுக்கையும்
தடித்த மூக்குக் கன்ணாடியுமாய் இருந்த
அவன் பெயர் பார்த்திபனாம்
அவனும் நானும் ஆத்ம நண்பர்களாம்
எனக்கெதிர் வீட்டில் இருந்தானாம்
பன்னிரெண்டாவது வரை
ஒன்றாகப் படித்தோமாம்
என் ஞாபக அடுக்குகளில்
மறைந்துவிட்டதாய் நினைத்துக் கிளறப் பார்த்தான்
பள்ளி - மதிய உணவு
ஒன்றுக்கிருந்து வளர்த்த செடி
பட்டக்கல் எனப் பட்டப்பெயர் கொண்ட சங்கரை
இரண்டு ஃபில்டர் கோல்ட் பிளேக்
இரண்டு கோல்ட் பிளேக் ஃபில்டர்
வாங்கிவரச் சொல்லிக் கலாய்த்தது
பேருந்தில் செல்லும் ராதிகாவை
சைக்கிளிலேயே மாதவரத்திலிருந்து மிண்ட்வரை தொடர்ந்தது
பட்டியலிட்டுக் கொண்டே வந்தான்
மீண்டும் சந்திப்போம் எனச் சொல்லி
அவசரமாய் ரயிலேறிப் போனான்
இரவில் மனைவியிடம் தன் பால்யகால
நண்பனைச் சந்தித்ததை
அவன் விவரித்து மகிழக்கூடும்
என்ன காரணத்தினாலோ நான் அவன் நண்பனில்லை
என்பதைச் சொல்லவேயில்லை கடைசிவரையிலும்
(மீள் பதிவு. பழைய பதிவையும் பின்னூட்டங்களையும் வாசிக்க : http://jyovramsundar.blogspot.com/2008/09/blog-post_13.html)
கார்காலக் குறிப்புகள் - 58
1 day ago
20 comments:
எனக்குப் பிடித்திருக்கிறது.
நல்ல கவிதை. சிறுகதையாக எழுதியிருந்தால் இன்னமும் ரசித்திருப்பேன்.
தலைப்பில் அவசரமாக புதர் என்பதை புத்தர் என்று படித்துவிட்டேன். புத்தர் இடம்பெறும் கவிதைகள் என்றே இப்போதெல்லாம் அலர்ஜி ஆகிவிட்டது :-)
இது மாதிரியே எனக்கும் நடந்திருக்கிறது.
//சூர்யவம்சம் படத்தில் வரும் மணிவண்ணன்-ராஜகுமாரன் காட்சி//
அருமை, லவ்லி.
இருந்தாலும் அவரிடம் உண்மை கூறாது இருத்தல் நல்ல பண்பா
ippooththaan patikkke
beautiful
irul suzhwtha puthar thalaippum arumai
ஆள் மாறாட்டம் கான்செப்ட் அருமை குருஜி.
நல்லாயிருக்குங்க
அழகு குருஜி :)
இந்த கவிதை மாதிரியே எஸ்.ராமகிருஷ்ணன் துணையெழுத்துல ஒரு கட்டுரை எழுதியிருப்பார். ஆனா கடைசியில அதுல உண்மையை சொல்லிட்டதா சொல்லியிருப்பார்!
எனக்கு பிடிக்கவில்லை.
//
என்ன காரணத்தினாலோ நான் அவன் நண்பனில்லை
என்பதைச் சொல்லவேயில்லை கடைசிவரையிலும்
//
எனக்கும் பிடித்திருக்கிறது!
நெஞ்சை பிசைந்தது..
ஏற்கனவே படித்தியிருப்பினும்.
அருமை
//இரவில் மனைவியிடம் தன் பால்யகால
நண்பனைச் சந்தித்ததை
அவன் விவரித்து மகிழக்கூடும்
எதற்கு ஒருவனின் சந்தோசத்தை கெடுக்க வேண்டும்?
இந்த வரிகளில் கவிதை உச்சம் அடைகிறது.
எனக்கும் ஏற்கனவே இதுபோன்று ஒரு சிந்தனை வந்து ஒரு கவிதை பிறந்தது. ஆனால் வேறு தாக்கம். தெரிந்த நண்பனே மறந்து போனது போல...
அருமையாய் இருக்கு சுந்தரா.இப்போதான் வாசிக்கிறேன்.தலைப்பு மிக அருமை!
சந்தோஷத்துல பெரிய சந்தோஷமே அடுத்தவங்களை சந்தோசப்படுத்தி பார்க்குறதுதானே.... :)
//என்ன காரணத்தினாலோ நான் அவன் நண்பனில்லை
என்பதைச் சொல்லவேயில்லை கடைசிவரையிலும்//
அதான் ஏன்?
ப்ளீஸ் சொல்லிடுங்க......
கவிதை அருமை .
- ப்ரியமுடன் ,
பிரவின்ஸ்கா
ரவிஷங்கர், லக்கி, வெங்கிராஜா, ராம்ஜி யாஹூ, மண்குதிரை, தராசு, சென்ஷி, அப்துல்லா, ராஜூ, அது சரி, அஷோக், விநாயக முருகன், ராஜாராம், துபாய் ராஜா, பிரியமுடன் வசந்த், பிரவின்ஸ்கா ... நன்றி.
எனக்கு மிகவும் பிடித்த கவிதை, முன்பே வாசித்திருக்கிறேன், மீண்டும் இப்போது படிக்கும் போதும் பல சம்பவங்களை கவிதை நினைவுறுத்தியது.
நன்றி, யாத்ரா.
Post a Comment