நானொரு மனநோயாளி
விழித்திருக்கும் நேரமெல்லாம்
சலித்திருப்பேன்.
கோவில் கல்வெட்டு
பள்ளி சத்துணவு
திருமண வீடு, ஐயர் குடுமி
சமையல்காரர் வியர்வை
பேருந்து, எரியாத விளக்கு
கிழிந்த கைப்பை நடத்துனர்
மரண வீடு, மருத்துவமனை
சவக்கிடங்கு
சவரக்கத்தி, நிலைத்த பார்வை
நூலகம், மௌனி, காஃப்கா
பிரமிள், பிரளயம்
மனம் நோய்
நோயாள், நோயால்
யாழி, ஆழி
மனம் நோயாய்
நான்
ஒரு மன
நோயாளி
குமார்ஜி எழுதியது
கார்காலக் குறிப்புகள் - 58
5 days ago
24 comments:
நன்றி.
Received with thanks
முதல்முறையா எனக்கு முதல்வாசிப்புல புரிஞ்ச கவிதை ! ஒருவேளை நானும் மனநோயாளியா ?
நானொரு குடிகாரன்
அடித்திருக்கும் நேரமெல்லாம்
லயித்திருப்பேன்.
அவிச்ச முட்டை
ஆஃப்பாயில்
டாஸ்மாக்,ஊறுகாய்
சக குடிகாரனின் வியர்வை
போலீஸ் ஜீப், திறக்காத சரக்கு
அரை டவுசர் பார் சப்ளையர் பையன்
கல்யாண வீடு, மார்ச்சுவரி
ரேசன் கடை
அரை பிளேடு, போதைப்பார்வை
ஏசி பார், வெள்ளரிக்காய், பாப்கார்ன்
சரோஜா தேவி, பரதேசி
குடி நோய்
அவளாள், வாயால்
வாந்தி, வேட்டி
குடி காரணமாய்
நான்
ஒரு கொடுர
குடிகாரன்.
(இந்த கவிதை குறித்த தங்களின் மேலான கருத்தை எதிர்பார்க்கின்றேன்.)
::::
yes,............
ராஜூ, எதிர் கவுஜைகள் என்றாலே குடியோடு இணைத்துத்தான் எழுத வேண்டுமா என்ன!
//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
ராஜூ, எதிர் கவுஜைகள் என்றாலே குடியோடு இணைத்துத்தான் எழுத வேண்டுமா என்ன!
//
இது மாதிரி எதிர்கவிதைகளை ஆரம்பித்து,பிள்ளையார் சுழி போட்டது ஒரு ராசியான கை.
நானொரு பிணவறைக் காவலன்
தனித்திருக்கும் நேரமெல்லாம் காமுற்று இருப்பேன்
தற்கொலை பெண்கள்,நடிகைகள் பிரேதம்
சாலையோரப் பிணங்கள், காவல் அறை மரணங்கள்
தீக்குளித்த உடல்கள்
உயிர் பிரிந்திருக்கும் வழிகள் ,வலிகள் ,உறைந்த புன்னகைகள்
தூக்கிலிட்ட உடல்களில் இருந்து வழிந்திருக்கும் விந்து
பெண்களுக்குள் உறைந்த விந்து
சீழ் நுதல் நாற்றம் நரை
திறந்த விழிகள் மடங்காத விரல்கள்
வளரும் நகம் வளரும் மயிர்
புணர்ச்சி கீறல் காயம் மாயம்
காசு மாசு லஞ்சம்
ரச்புடின் பிரகாஷ்
கர்ப்பவதி கைம்பெண்
நீரால் காரால்
ஊழி மூளி
நான் பிணவறைக் காவலன்
kalakkal kumaararji.
Thanks sundar for sharing with us.
அது எதிர்கவுஜையென் நான் குறிப்பிடவே இல்லையே..!
ஒண்ணும் புரியல குருஜி,
யாராவது விளக்குங்களேப்பா?????
ஜ்யோவ், பின்நவீனத்துவ கவிதைன்னாலே அது கொலாஜ் கவிதையாக தான் இருக்கணுமா? ஒரு ஸ்டீரியோடைப் தென்படுதே! பின்நவீனமே அந்த ஸ்டீரியோடைப்பை உடைக்கிற விஷயம் தானே?
குமார்ஜி ம்ற்றும் நேசமித்தரன் கவிதைகள் நன்று.
//திருமண வீடு, ஐயர் குடுமி//
உள்ளார்ந்த அரசியல் என்ன?
குமார்ஜி அவர்கள் கவிதைகள் எனக்கு எப்போதுமே பிடித்தமானவை, இந்தக் கவிதையும்.
இங்கு,நேசமித்ரன் கவிதை நல்லா இருக்கு,குமரா,சுந்தரா.பகிர்தலுக்கு நன்றி சுந்தரா.
நர்சிம், தண்டோரா, மணிகண்டன், ராஜூ, சூரியன், மண்குதிரை, அர்விந்த், நேசமித்ரன், ராம்ஜி யாஹு, தராசு, அனானி, அஷோக், வால்பையன், யாத்ரா, ராஜாராம்... நன்றி.
@அனானி, நிச்சயம் கிடையாது. ஆனால் இவரது நிறைய கவிதைகள் கொலாஜ் வடிவக் கவிதைகளாக இருப்பதை நானே இப்போதுதான் கவனிக்கிறேன் :)
நர்சிம் தண்டோரா
நன்றி, பெறுதல்
முதல்வாசிப்பு மணிகண்டன்,
ராஜு கருத்து கவிதை
ஆமாம் மண்குதிரை
சூரியன், புள்ளிகள்
சுந்தர்ஜி, பதில்
ராசியான கை, இரும்புத்திரை அர்விந்த்
நேசமித்திரன்
பிணவறைக் காவலன்,
ராஜு, மீண்டும்
புரியலை , தராசு
அனானி, ஸ்டீரியோடைப்
டாக்டர் அசோக், பாராட்டு , வால்பையன் , கேள்விநாயகன்
யாத்ரா, ரசிகரும் கூட
பா.ராஜாராம், விஜய டி ஆர்
சுந்தர்ஜி,
பின்னூட்டம்,
நான் சஞ்சய்காந்தி...
அண்ணே , உங்க மற்ற எழுத்துக்கள் எவ்வளவு பின்னவீனமா இருந்தாலும் புரிஞ்சிடுது , ஆனா கவிதைகள் தான்...
உன் தளத்தின் பின்னூட்டங்கள் ஒரு வசீகரம்!உதாரணம் சஞ்சைகாந்தி!!
சஞ்சய் காந்தி, கோயமுத்தூர் நண்பன், ராஜாராம்... நன்றி.
nesa mithran sir.. kavithai pidiththathu..
ஜ்யோவ். பிப்ரவரி ஆரம்பங்களில் ஏதோவொரு பதிவை படித்து பின் போன வாரம் தான் உங்கள் பதிவுக்கு வந்தேன் ஏதோ ஒரு வாசல் வழியாக.
உங்கள் பதிவுகளில் நான் படித்தது கிழித்தது என்றெல்லாம் போக, முதல் முறை உங்கள் (?) பதிவுக்கு வந்த பின்னூட்டங்களுக்கு ஒரு சபாஷ். ரசித்தவை நேசன் மற்றும் சஞ்சய் எழுதியவை.
:)) வாழ்க.
--வித்யா
Post a Comment