மாற்றுப் பார்வைகளும் ஆபாசமும்

வார்த்தைகளில் கண்ணியம் வேண்டுமாம் - யார் சொல்கிறார்கள்? - பத்தாம் நம்பர் செருப்பால் அடிப்பேன் என்பவர்களும், மன நோயாளிகள் எனத் தலைப்பு வைப்பவர்களும், சூப்பர்டா அய்யரே என்பவர்களும், போலி செக்யூலரிஸ்டுகள் என நக்கலடிப்பவர்களும்தான் - வேறு யார் சொல்வார்கள் - எல்லாம் இவர்கள்தான் - எழுத்திலே கூடாதாம், ஆபாசமாம்!

அடப் போங்கய்யா! அரசியல் படத்தைப் பற்றிய மாற்றுக் கருத்துகளை முன்வைத்தால், எனக்கு இடைவேளையில் கிடைக்கும் சமோசா மற்றும் படம் முடிந்ததும் எனது வண்டி கீறல் இல்லாமல் இருக்குமா என்பதுதான் முக்கியம்; ஏனெனில் நான் ஒரு அரசியல் - நீக்கம் செய்யப்பட்ட காமன் மேன் என்கிறார் பரிசல். அது சரி, எல்லா காமன் மேன்களும் அரசியல் பார்வையுடைய கமல் மாதிரி போலீஸ் கமிஷனர் கண்ணில் விரல் விட்டு ஆட்ட முடியுமா என்ன? அப்படி கமல் முன் வைக்கும் அரசியல்தான் வயிற்றைப் புரட்டிக் கொண்டு வருகிறது எனச் சொன்னால் தவறா?

திரும்பத் திரும்ப வெண்பூ (மற்றும் சிலர்) படத்தை ரசிக்க மட்டுமே செய்ய வேண்டும் என்கிறார்கள். ஏன் அப்படி? படத்தில் ஒளிந்திருக்கும் மௌனங்களைப் பேசச் செய்வதே விமர்சனமாயிருக்க முடியும். நீங்கள் சொல்வது மாதிரி, ஆஹா, ஓஹோ, வாராது போல் வந்த மாமணி இந்தப் படம் எனச் சொல்லத்தான் நிறைய பேர் இருக்கிறார்களே... எல்லாரும் அதே திருப்பணியைத்தான் செய்ய வேண்டுமா என்ன? இதில் சென்னையில் நடக்கும் கதையை ஏன் ஹைதையில் படம் பிடித்திருக்கிறார்கள் என்ற வெளங்கா வெட்டி கேள்வி வேறு! நல்லா பண்றாங்கய்யா விமர்சனம். இப்படி ஆபத்தில்லாமல் தயிர் வடை ஆராய்ச்சியை யார் செய்தாலும் பரவாயில்லை, இவர்களும் கலந்து கொண்டு கோஷ்டி கானம் பாடுவார்களாம். ஆனால், படத்தில் இருக்கும் ஹிந்துத்வா அரசியலைப் பற்றி மட்டும் பேசக் கூடாது! அப்போது படத்தை ரசிக்கத்தான் வேண்டும் என்று நீட்டி முழக்கிக் கொண்டு வந்துவிடுவார்கள்.

சரி, வார்த்தைகளில் கண்ணியம் வேண்டும் என்ற நர்சிம், கார்க்கி மற்றும் பலர் மாற்றுக் கருத்துடையவர்களை மன நோயாளிகள் என்று சொன்ன ஆசிஃப் மீரானுக்கு ஏதாவது எதிர்ப்பு தெரிவித்தார்களா எனத் தேடித் தேடிப் பார்த்தேன்.. ம்ஹூம், ஒரு .... இல்லை. (பாருங்க மக்கா, புள்ளி புள்ளியா வச்சு கண்ணியத்தைக் காப்பாத்திட்டேன்!). ஆசிஃப் மீரானின் அந்தக் கட்டுரை நகைச்சுவையாம் - மற்றவர்களுக்கு எப்படியோ தெரியவில்லை - எனக்கு சிரிப்பு வரவில்லை, எரிச்சல்தான் வந்தது.

எனக்கு எப்போதுமே செல்வேந்திரன் எழுத்துகளில் பெரிய நம்பிக்கை இருந்ததில்லை. ஆனால், குறைந்த பட்சம் ஒரு forward thinking person என நினைத்திருந்தேன் அவரை. ஆனால் அவர் கோட்பாடு என்ற பெயரில் முன்வைக்கும் விஷயம் மிக மிக ஆபத்தானது. இந்த எழவிற்கு ஆங்கிலப் பெயர்களெல்லாம் எதற்கு? வாந்தியெடுப்பதும் வன்மம் காட்டுவதும் தமிழுக்கு மட்டுமே சொந்தமான விஷயங்களா என்ன?

/ஒரு காலணியில் இருக்கிற 100 பேர்களில் 99 பேர் இந்துக்கள் ஒருவர் மட்டும் இஸ்லாமியர் என்று வைத்துக்கொள்வோம். இந்த 99 பேர்களும் அந்த ஒருவரைத் தன் சொந்த சகோதரர்களாகப் பாவித்து தங்கத் தாம்பாளத்தில் வைத்துத் தாங்கினாலும் அந்த ஒருவராகிய இஸ்லாமியர் தான் ஒடுக்கப்படுவதாகவே உணர்வார். காரணம் ரொம்ப சிம்பிள் அவர் ஒரு மைனாரிட்டி! இந்த ஒரு மைனாரிட்டி தான் மைனாரிட்டி என்கிற சைக்காலஜிகல் பிரச்சனையில் 99 பேரையும் பகைத்துக்கொள்வார். எதிர்ப்பார்.
/

இப்படிக்கூட அப்பட்டமான பெரும்பான்மைவாதத்தை முன்வைக்க முடியுமா என ஆச்சரியமாகவும் பயமாகவும் இருக்கிறது.

இப்படி, உன்னைப் போல் ஒருவன் படத்தின் மூலம் பல பூனைக்குட்டிகள் வெளியே வந்ததுதான் ஒரே நல்ல விஷயமென நினைக்கிறேன்!

கடைசியாக - ஆசிஃப் அண்ணாச்சி, இந்துத்துவ வெறியனாக இருப்பதைவிட மனநோயாளியாக இருப்பதையே நான் தெரிவு செய்கிறேன். உரக்கச் சொல்லிக் கொள்ளுங்கள், இவன் ஒரு மன நோயாளி!

(முதல் பத்தி, சி மணியின் பச்சையம் கவிதையை ஒட்டி எழுதப் பட்டது)

52 comments:

yegalaivan said...

ஒன்றல்ல,இரண்டல்ல ஒரு கூட்டமாக ஓடிவருகின்றன.தண்டோரா,அகநாழிகை,செல்வேந்திரன் என்று ஒரே அலைவரிசையில் சிந்திக்கும் ஒரு பெரிய கூட்டம்.

உறையூர்காரன் said...

//திரும்பத் திரும்ப வெண்பூ (மற்றும் சிலர்) படத்தை ரசிக்க மட்டுமே செய்ய வேண்டும் என்கிறார்கள்.//

இதே கருத்தை ஓவியர் எம்.எஃப் ஹுசேனை நாடு கடத்த காரணமாக இருந்தவர்களிடம் சொல்லிவிட்டு உடலில் காயம்படாமல் திரும்ப வரச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

Karthikeyan G said...

//இப்படி, உன்னைப் போல் ஒருவன் படத்தின் மூலம் பல பூனைக்குட்டிகள் வெளியே வந்ததுதான் ஒரே நல்ல விஷயமென நினைக்கிறேன்!//

ஆம்..

Thekkikattan|தெகா said...

ஆங்கிலத்தில் அதுவும் வெள்ளைக்காரன் தத்துபித்து தனமாக உளறி வைத்தால் கூட அதனையும் 'மேற்கோள்' காட்டும் தனம் இப்போதைக்கு ஒழிவதாக இல்லை.

//இப்படிக்கூட அப்பட்டமான பெரும்பான்மைவாதத்தை முன்வைக்க முடியுமா என ஆச்சரியமாகவும் பயமாகவும் இருக்கிறது. //

எனக்கும் அப்படியேதான் வந்தது, ஏனெனில் என் எண்ணமும் மைனாரிடி வகைதான் எங்கே நானும் நசுக்கப்பட்டுவிடுவேனோ என்று ...

Sunday Thoughts said...

Dear Sir,

Good Post. I think your post, lucky post, Senshi post and Joe post are tangible and reasonable about UPO. All other review posts about UPO are useless. Selvendran post is horrible and pathetic, I am literally scared to see his page in the web.

I have commented in Asifmeeran blog, condemning him rubbish UPO review post, but he didn't released it.

Regards,
Tharani.

ஆசிப் மீரான் said...

யோவ் சுந்தர் அண்ணாச்சி

என்னங்கய்யா எழவாப் போச்சு :-) நான் எதிர் கருத்து வைப்பவ்ர்க்ளை மனநோயாளிகள் என்று எப்போதைய்யா சொன்னேன்?

நான் கண்ணியக் குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தினேனா என்ன? இதில் என்னை யாரும் கும்மவில்லையென்ற வருத்தம் வேறு உங்களுக்கு

தீவிரமாக எல்லாரும் பேசும் விசயத்தை விட்டு விலகி ஒரு மொக்கை என்ற அளவில் நான் எழுதியது நகைச்சுவையாக இல்லாமல் போனது கவலையில்லை ஆனால் எரிச்சலைத் தந்ததென்பது கொஞ்சம் கவலையாகத்தான் இருக்கிறது :-(

சில சமயங்களில் நாம் செய்யும் பகிடிகள் கோமாளித்தனமாக மாறி விடும் அபாயத்தை உணர்கிறேன்

இனி கொஞ்சம் கவனமாக எழுத முயலகிறேன் சவத்த முடியுமான்னுதான் தெரியல :-(

மணிகண்டன் said...

****
படத்தில் ஒளிந்திருக்கும் மௌனங்களைப் பேசச் செய்வதே விமர்சனமாயிருக்க முடியும்.
****

நீங்க யாரோட விமர்சனத்தை வச்சி இந்த பதிவு எழுதி இருக்கீங்க ? சுகுணா திவாகரா ?

கல்வெட்டு said...

//மாற்றுப் பார்வைகளும்....//

மாற்றுக்கருத்து என்று ஒரு கருத்து கிடையாது. எல்லாமே கருத்துகள்தாம். ஒருவர் கருத்துடன்(1) மற்றறொருவரது கருத்து(2) மாறுபடும்போது, எந்தக் கருத்தை மாற்றுக் கருத்து என்பது?

உலகம் தட்டை(1) என்று எல்லாருமே ஜல்லி அடித்த காலத்தில் ( தூதுவரில் இருந்து துஷ்டர் வரைக்கும்...) அப்படி இல்லை இப்படி(2) என்று சொன்னபோது இரண்டாவது கருத்து மாற்றுக்கருத்தாகி கல்லடி வாங்கியது.

தேவதாசி தொழில் ஷேமமானது, கடவுள் சேவை (1) என்று ஜல்லி அடித்தபோது ஏன் உங்கள் வீட்டுப் பெண்களை அந்தச் சேவை செய்யுங்கள் (2) என்று சொன்னபோது அதுவும் மாற்றுக் கருத்துதாகவே பார்க்கப்பட்டது.

முலையை மூட துணி போட உரிமையும், உடன் கட்டை ஏறுவதை எதிர்க்கவும் கொடுக்கப்பட்ட கலகக்குரல்கள் எல்லாம் மாற்றுக் கருத்தாகவே பேசப்பட்டது.

**

பெரும்பான்மையினர் பழகிக்கொண்டு இருக்கும் சினிமாவை சினிமாவப் பார்க்கனும்,பஜ்ஜி சாப்பிட்டு வந்துடனும் என்ற கருத்தை (1) ஏற்காமல் அதிலுள்ள அரசியலை(2) வேலை வெட்டி இல்லாமல் பேசித் திரிந்தால் உங்கள் கருத்து, Opinion differs என்று எளிதாக எடுத்துக் கொள்ளப்படாது. பின்னே நம்பிக்கையை அல்லவா கேள்வி கேட்கிறீர்கள்?

பொதுக்கருத்தோடு(1) ஒத்துப்போகாத எதுவுமே மாற்றுக் கருத்து(2) ஆகி ஊரைவிட்டு விலக்கிவைக்கப்படும். ஏண்டா இப்படி லூசா இருக்க என்ற கேள்வியோடு , ஊரோடு ஒத்துப்போக அறிவுரைகளும் கொடுக்கப்படும்.

http://www.narsim.in/2009/09/blog-post_22.html?showComment=1253709971751#c50908453570265819

**

கமல் தனது சொந்த வாழ்க்கையில் கலக்காரராகவே இருக்கிறார்.பலமுறை பொதுக்கருத்தை எதிர்த்துள்ளார். சினிமா பெப்சி விவகாரங்கள் மற்றும் அவருடைய வாழ்க்கையே பொதுப்புத்தியை எதிர் நீச்சல் போடுவதாய்தான் உள்ளது.

ஆனால் கல்லா கட்டுவது என்று வரும்போது வித்தியாசமாய் இருக்கிறார். போற்றிப்பாடடி பெண்ணே தேவர்காலடி மண்ணே என்று கல்லா கட்டிய கமல் , அம்பேத்காரையோ அல்லது இம்மானுவேலையோ நாயகராக வைத்து போற்றிப்பாடடி பெண்ணே அம்பேத்கார் காலடி மண்ணே என்று பாட ஏன் முடியவில்லை என்பது இன்னும் புரியவில்லை.

**

தினசரி அவர்கள் படம் இடும் தியேட்டரில் விற்கும் கள்ள டிக்கட் பிரச்சனைகளை எல்லாம் சாய்ஸ்ல விட்டுவிட்டு , ஏன் சாதி,மத,ஊழல் போன்ற சமூகப்பிரச்சனைகளை மையமாக வைத்து வடை சுடுகிறார்கள். மக்களுக்கு விரலை ஆட்டி மேசேஜ் சொல்கிறார்கள்?

பொழுது போக்குமட்டும் என்றால் பஜ்ஜி சுடுவது எப்படி என்ற பிரச்சனையை வைத்து படம் எடுத்தால், எல்லோரும் இடைவேளையில் பஜ்ஜி சாப்பிட்டுவிட்டு அதைப் பேச வசதியாய் இருக்குமே.

பெஸ்ட் பேக்கரி பிரச்சனை என்பதை ரொட்டி சுடும் பிரச்சனையாக யாரும் சொல்லியிருப்பார்களோ?

TBCD said...

மாற்று பார்வையா...அதெப்படி, எல்லாம் எங்க பார்வையாக இருக்கனும். இல்லாவிட்டால், உங்க பார்வை நொள்ளை பார்வையாக இருக்கனும். :)

Muthu said...

நீங்க படம் பார்த்துட்டீங்களா? எல்லா வசனத்தையும் காட்சிகளையும் வலைப்பதிவுகளில் பார்த்து அல்லது கேட்டு விட்டபடியால் இதை வைத்தே நாமும் விமர்சனம் எழுதிடலாம் போல...

:)

எப்படியோ சுகுணா ஃபார்மிற்கு வந்துட்டார்...

dondu(#11168674346665545885) said...

//உரக்கச் சொல்லிக் கொள்ளுங்கள், இவன் ஒரு மன நோயாளி!

(முதல் பத்தி, சி மணியின் பச்சையம் கவிதையை ஒட்டி எழுதப் பட்டது)//
சமீபத்தில் 1972-ல் வெளியான வசந்த மாளிகையில் இந்த வரிகள் நினைவுக்கு வருகின்றன.

“எழுதுங்கள் என் கல்லறையில் - அவள் இரக்கமில்லாதவள் என்று
பாடுங்கள் என் கல்லறையில் - இவன் பைத்தியக்காரன் என்று”

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

நீ ஒரு லூசு உனக்கு ஜால்ரா போட சில லூசுகள்.

Thamira said...

கோஷ்டி, எதிர்கோஷ்டி எதுவும் வேணாம் பொத்தாம் பொதுவாய் எதுவாவது சொல்லிவைப்போம் எனப்பார்த்தால் அவங்களுக்கும் மூக்கிலேயே ஒரே குத்து. என்ன பண்றதுன்னே தெரியலை..! பதிவு படிக்கிறது/எழுதுவது குத்தமாய்யா.?

(இதென்ன பொறுப்பற்றத்தனம் என இதுக்கும் ஒரு குத்து விழும் எனத்தெரியும்)

ஆகவே படிச்சுட்டேன்னு சொல்லிட்டு ஓடிப்போயிர்றேன்.

வெண்பூ said...

சுந்தர்ஜி, எனக்கென்னவோ நான் எல்லா விசயங்களையும் ரொம்ப லைட்டா எடுத்துக்கிறேனோன்னு பயமா இருக்கு. உன்னைப்போல் ஒருவனை விடுங்க, ஆசிப் அண்ணாச்சியோட பதிவையும் மொக்கையாத்தான் பார்த்தேன், படிச்சிட்டு வாய்விட்டு சிரிச்சிட்டு இருந்தேன்..

உண்மையில், உங்களின் இந்த பதிவு எனக்கு கொஞ்சம் ஆச்சர்யமாகவும், கொஞ்சம் பயமாகவும் இருக்கிறது. :(

வெண்பூ said...

//
ஆசிப் மீரான் said...
சில சமயங்களில் நாம் செய்யும் பகிடிகள் கோமாளித்தனமாக மாறி விடும் அபாயத்தை உணர்கிறேன்
//

புரியலை அண்ணாச்சி. அப்ப நீங்க எழுதுனது தப்புன்னு நீங்களே சொல்ற மாதிரி இருக்கு. உங்கப் பதிவு என்னைப் பொறுத்தவரை மொக்கைக்காக எழுதப்பட்டது, அது கோமாளித்தனமாத்தேனே இருக்கணும். என்னைப் பொறுத்தவரை நீங்க எந்த கோணத்தில் எழுதுனீங்களோ அதே கோணத்தில்தான் நான் அதைப் படித்தேன்.

Raju said...

!@#$%^&*()_+

யேய்..பாத்துக்கோங்க..பார்த்துக்கோங்க..
நானும் மாற்றுக் கருத்தாளன்..!
நானும் மாற்றுக் கருத்தாளன்..!
நானும் மாற்றுக் கருத்தாளன்..!
நானும் மாற்றுக் கருத்தாளன்..!
நானும் மாற்றுக் கருத்தாளன்..!

அகநாழிகை said...

ஜ்யோவ்,
உ.போ.ஒ. விஷயத்தில் உணர்வெழுச்சியோடு சண்டை போடுவதில் எனக்கு விருப்பமில்லை. என் கருத்து எனக்கு, உன் கருத்து உனக்கு என்பதுதான் என் நிலை. அந்த வகையில் உங்கள் கருத்தை சரியாக பதிவு செய்திருக்கிறீர்கள்.
000
என்னுடைய கருத்தை சுகுணா திவாகருக்கு முதல் பின்னூட்டத்தில் தெரிவித்தேன். அதற்கு அவர், தண்டோரா போட்ட பின்னூட்டத்தோடு என்னையும் சேர்த்து எனக்கு பதிலளித்தார். சுகுணாவிற்கு மறுபடியும் ஒரு பின்னூட்டம் இட்டேன். அதை அவர் வெளியிடாமல், அதற்கு பதில் மட்டும் அளித்தார். இடையில் லக்கிலுக் என்னிடம் மின்னஞ்சலில் தொடர்பு கொண்டார். அதன் பிறகு நான் ஏற்கனவே வெளியிட்ட முதல் பின்னூட்டத்தை நானே அழித்து விட்டேன். இது எனக்கு தெரிந்த நேர்மை.
000
ஆனால், இதே சுகுணா திவாகர் எனது இரண்டாவது பின்னூட்டத்தை வெளியிடாமல், தான் பணிபுரியும் இடத்தைப் பற்றி பேசும் தகுதி எனக்கு கிடையாது விளக்கிவிட்டு,வாஜ்பாய் பிரதமரானால் நான் சாப்பிடக்கூடாதா என்று கேள்வியெழுப்பினார். புத்திசாலித்தனமான கேள்விதான்.
இது தவிர கூடுதலாக, இன்னும் வெளிவராத ‘அகநாழிகை‘ பத்திரிகை எப்படியிருக்கும் என தீர்க்கதரிசியாக அருள்வாக்கும், வாழ்த்தும் கூறியிருக்கிறார்.
000
ஆனால் பதிவர்களில் பலரும் (உங்கள் பதிவில் உள்ள ஏகலைவன் என்பவரும்) ஏதோ நான் தீவிர பார்ப்பன ஆதரவாளன் என்பது போல ஒரு பிம்பத்தை உருவாக்க முயற்சி செய்து வருகிறார்கள். நான் பார்ப்பான் கிடையாது. ஆனால், ஒரு குறிப்பிட்ட இனத்தை அது எந்த இனமானாலும், விமர்சிக்கும் போது, ‘ங்கோத்தா‘ ‘பாப்பார பாடுகளா‘ பாப்பார தேவிடியா பசங்களா‘ என்று பேசும் உரிமை ஒருவருக்கு இருக்கும் பட்சத்தில் அதே வார்த்தைகளை உபயோகப்படுத்தும் உரிமை மாற்று இனத்தவருக்கும் உண்டு என்பதை ஏற்கத்தானே வேண்டும் ? அந்த அளவிற்கு தீவிர எதிர்ப்பு மனோநிலையில் செயல்படுபவர் ஏன் அதற்கு எதிரான அமைப்பில் இருக்க வேண்டும் என்பது மட்டுமே என் கேள்வி.
000
சற்றே நீண்டு விட்ட இந்த பின்னூட்டத்தை வெளியிடுவீர்கள் என நம்புகிறேன்.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

மணிஜி said...

நல்ல அடை மழை நாளில்
மிளகாய் பஜ்ஜி சூடாய் சாப்பிட்டு பார்த்திருக்கிறீர்களா?சூப்பர் சுவையாய் இருக்கும்.உங்கள் முதல் பத்தியில் அந்த சுவையை உணர்ந்தேன்

மணிஜி said...

/ஒன்றல்ல,இரண்டல்ல ஒரு கூட்டமாக ஓடிவருகின்றன.தண்டோரா,அகநாழிகை,செல்வேந்திரன் என்று ஒரே அலைவரிசையில் சிந்திக்கும் ஒரு பெரிய கூட்டம்//

9/11 பண்பலை வரிசையா?இல்லை 26/11 ஆ(இதற்கு உங்கள் பதில் 6/12 ஆக இருந்தால் ஆச்சர்யபடமாட்டேன்)

Karthikeyan G said...

//அசிஃப் அண்ணாச்சி, இந்துத்துவ வெறியனாக இருப்பதைவிட மனநோயாளியாக இருப்பதையே நான் தெரிவு செய்கிறேன். உரக்கச் சொல்லிக் கொள்ளுங்கள், இவன் ஒரு மன நோயாளி!//

அசிஃப் அண்ணாச்சிக்கு நகைச்சுவையாளர் என்ற இமேஜ் பில்டப் ஆகியிருக்கு, அந்த பதிவின் மூலம் அதை மெயின்டையின் பண்ணியிருக்கார்.

'நம்ம இமேஜ விட நம் கோபம் பெரிதில்லை' என அவருக்கு தோன்றியிருக்கலாம்.

மணிஜி said...

/இப்படி, உன்னைப் போல் ஒருவன் படத்தின் மூலம் பல பூனைக்குட்டிகள் வெளியே வந்ததுதான் ஒரே நல்ல விஷயமென நினைக்கிறேன்//

எலிகள் அட்டகாசம் அதிகமாகும்போது பூனைகள் தேவைதானே

பரிசல்காரன் said...

சுந்தர்ஜி...

காமன்மேன் அரசியல் நீக்கம் செய்யப்பட்டவனல்ல. ஆனால் அந்த அரசியல் காமன்மேனுக்கு எந்த எழவையும் பெற்றுத்தரவில்லை -அல்லது - எழவை மட்டுமே பெற்றுத் தந்திருக்கிறது என்பதும் உண்மை. அப்படி இருக்கிற பட்சத்தில் அந்த காமன்மேன் அரசியல் கந்தாயங்களையெல்லாம் எப்படி கவலைப்படுவான் ஜி?

எனிவே.... பூனைகளை நீங்கள் கண்டுகொள்ள உதவியது போலவே, சில பூனைகள் நாளை புலியாய் மாறவும் இந்த விவாதங்கள் உதவியிருக்கின்றன!

தராசு said...

குருஜி ஏண்டா இன்னமும் மௌனமாவே இருக்காரேன்னு பார்த்தேன்.

அப்ப நீங்களும் காமன் மேன் இல்லையா குருஜி????????

நந்தாகுமாரன் said...

என்ன ஜ்யோவ் இப்படி சூடு பறக்கிறது ... செம காரம் ... இந்த பெங்களூர் குளிரிலும் எனக்கு வியர்க்கிறது ... I liked the hindi version - "A Wednesday" inspite of it's hindutva ... ஆனால் இதன் தமிழ் remake "உன்னைப் போல் ஒருவன்” பார்க்கக் கூடாது என நினைத்திருந்தேன் (I have never liked Kamal Hassan's remakes of Nasrudein Shah - e.g. Drohkaal as குருதிப்பினல் in Tamil) ... but ... இந்தப் படத்தை என்னை பார்க்க வைத்து விடுவார்கள் போல ... விஷயம் படத்தை பற்றி மட்டுமல்ல என்பது விளங்கினாலும்

சுகுணாதிவாகர் said...

/ம்ஹூம், ஒரு .... இல்லை. (பாருங்க மக்கா, புள்ளி புள்ளியா வச்சு கண்ணியத்தைக் காப்பாத்திட்டேன்!)/

(( - நன்றி சுந்தர்!

மணிப்பக்கம் said...

நடக்கட்டும் தல, ;)

நிதானத்துல வந்துட்டேன், ஒண்ணும் பிரியல ... அப்பாலக்க வந்து .... எங்கங்கயோ போய் படிக்கணும் போலிருக்கே ... ஷ்ஷப்பா....

சுகுணாதிவாகர் said...

அகநாழிகை இட்ட பின்னூட்டம் தொடர்பாக சில விளக்கங்கள் மட்டும்...

முதலாவதாக, நான் உ.போ.ஒ விமர்சனம் எழுதியபிறகு அந்த் பதிவில் நான் குறிப்பிட்டிருந்த அரசியல் குறித்தோ, தகவல்கள் குறித்தோ எந்த விமர்சனமும் வைக்காமல் நான் செய்யும் வேலை குறித்து தண்டோராவும் அகநாழிகையும் கேள்வி எழுப்பினார்கள். இருவரின் கேள்விகளோ என் வேலை சம்பந்தமான விமர்சனங்களாக இருந்தமையாலேயே இருவருக்கும் பொதுவான பதில் சொல்ல வேண்டியிருந்தது. நான் வேலைக்குச் சேர்வதற்கு முன்பு என்னவிதமான பார்ப்பன எதிர்ப்பு மற்றும் இந்துத்துவ எதிர்ப்புத் தொனியில் எழுதினேனோ அதே குரலில்தான் இன்றும் பேசுகிறேன் என்பதில்தான் என்னுடைய நேர்மை இருக்க முடியும். அதை விட்டு விட்டு நான் பதிவில் அரசியல் விமர்சனங்களை வைப்பதாலேயே வேலையை விட்டு விட்டு வரவேண்டும் என்று எதிர்பார்ப்பது என்ன நியாயம்? பொதுவாக நான் எந்த பின்னூட்த்தையும் நிராகரிப்பதில்லை. ஆனால் அகநாழிகை வெளியிட்ட இரண்டாவது பின்னூட்டத்தை வெளியிட எனக்கு விருப்பமில்லை. அதற்கான காரணங்களைச் சொல்லவும் விருப்பமில்லை.

மேலும் ஆதிக்கத்திற்கு எதிரான குரல்கள் எப்பொழுதும் 'நாகரீகமாகத்தான்' இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமில்லை. பார்ப்பனரல்லாத மக்களைச் சூத்திரர்கள், வேசி மக்கள் என்று எழுதி வைத்தவவை இந்துப்பிரதிகள்தான்.

என்.டி.ராஜ்குமார், தய்.கந்தசாமி, மதிவண்ணன் உள்ளிட்ட விளிம்புநிலைக்குரலை முன்வைக்கும் தலித் கவிஞர்கள் தங்களது கலகக்குரலை 'கெட்ட வார்த்தைகளினூடாகத்'தான் முன்வைக்கின்றனர். 90 களுக்குப் பிறகு தமிழ் இலக்கியச் சூழலில் நாகரீகம், கலாச்சாரம் குறித்து இப்படியான மாற்றுப்பார்வைகள முன்வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இதையெல்லாம் தன்னளவில் ஏற்றுக்கொள்ளத அகநாழிகையின் இதழ், மாற்றுப்பார்வையை முன்வைக்கும் இதழாக இருக்குமா என்கிற என் அய்யத்தைத்தான் பதிவு செய்தேன். மேலும் அகநாழிகை அதற்காக நான் வேசைப்பிழைப்பு செய்கிறேன் என்று எழுதியது என்னவகையான 'நாகரீகம்" என்பதையும் அவரது அளவுகோலில் இருந்துதான் விளக்க வேண்டும். மற்றபடி

/ந்த அளவிற்கு தீவிர எதிர்ப்பு மனோநிலையில் செயல்படுபவர் ஏன் அதற்கு எதிரான அமைப்பில் இருக்க வேண்டும் என்பது மட்டுமே என் கேள்வி. /

நான் பி.ஜே.பியிலோ ஆர்.எஸ்.எஸ்ஸிலோ இல்லை.

நர்சிம் said...

//சரி, வார்த்தைகளில் கண்ணியம் வேண்டும் என்ற நர்சிம், கார்க்கி மற்றும் பலர் மாற்றுக் கருத்துடையவர்களை மன நோயாளிகள் என்று சொன்ன ஆசிஃப் மீரானுக்கு ஏதாவது எதிர்ப்பு தெரிவித்தார்களா எனத் தேடித் தேடிப் பார்த்தேன்.. ம்ஹூம், ஒரு .... இல்லை//

அந்தப் பதிவை படித்தேன்.அவரின் புரிதலும் அல்லது நகைச்சுவை உணர்வையும் பார்த்துவிட்டு வந்துவிட்டேன்.

அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தால்தான் என் கருத்து வலு என்று என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. ஒருவர் பிரச்சனையை விட்டு வேறு புள்ளியில் பேசும்பொழுது தவிர்த்துவிடுவதே என்னளவில் சரி.

மணிகண்டன் said...

உங்களோட இடுகை பிளஸ் சுகுணாவின் இடுகைக்கு என்னோட பதில்

http://thodar.blogspot.com/2009/09/blog-post_24.html

ரொம்ப பெருசா கமெண்ட் போனதுனால தனி இடுகை. மன்னிக்க.

Anonymous said...

வெண்பூ அண்ணாச்சி

வசதியா இப்படியா போட்டுக் கொடுக்குறது? சும்மாவே சுந்தர் அண்ணாச்சி காலுக்கிடையில கரப்பான்பூச்சியை விடுறாரு

கார்த்திகேயன் அண்ணாச்சி சொன்னது போல நகைச்சுவையாளன் என்ற இமேஜுக்காக எழுதப்பட்டதல்ல என் பதிவு. எனது வழக்க்மான மொக்கைகளுள் அதுவும் ஒன்று. ஆனால் அது மாற்றுக் கருத்தாக்கங்களை மலினப்ப்டுத்துகிறதென்று சுகுணா சொல்லும்போதுதான் எனது பகடி கோமாளித்தனமானதோ என்ற ஐயம் ஏற்பட்டது.ஆனால் நான் எம்மாதிரி நேரங்களில் எம்மாதிரி கோட்டிக்காரத்தனன்க்ள் செய்வென் என்பது எனக்கே தெரியாதென்பதால் நான் எழுதியதைத் தவ்றாக நினைக்கவில்லை

படத்தில் நிறைய நெருடல்கள் இருந்தும் சுகுணா போன்றவர்க்ள், சென்ஷி போன்றவர்க்ள் அளவுக்கு அழுத்தமாகப் பதிய என்னால் முடியாதென்பதால் அதைப் பகடியாக்க முயன்றேன். இலகுவான வாசிப்பு என்பதே எனது நோக்கமாக இருந்தது. பொத்திக்கொண்டு பேசாமலேயே இருந்திருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது :-(

பத்தாண்டு கால இணைய உலகத்தில் ஒவ்வொரு காலத்திலும் ஏதேனும் ஒன்றைகக் கற்றுக் கொண்டே வருகிறேன் கற்றுக் கொள்ள இனியும் நிறையவே இருக்கிறதென்பது மட்டும் நன்றாகப் புரிகிறது

நர்சிம் சொன்னதோடு முற்றும் உடன்படுகிறேன் எனது புரிதலைப் பற்றிய புரிதல் அவருக்கு இருக்க வாய்ப்பிலையெனினும் :-)நான் விசயத்தை விட்டு வெளியே இயங்குகிறேன் என்பதைப் புரிந்து கொண்டமைக்கு

மனநோயாளிகளின் உல்கம் என்று தலைப்பு வைத்தது வழக்கமான குமுதத்தனமான கூட்டம் சேர்க்கும் உத்தி. இரண்டையும் சேர்த்துப் பார்த்ததால்தான் பிரச்னை வலுத்து விட்டதோ?

ஆனாலும் நான் சொல்றதயெல்லாம் வச்சு என்னையும் கேள்வியெல்லாம் கேக்குற சுந்தர் அண்ணாச்சியை நெனச்சா.. எனக்கு ஆனந்தக் க்ண்ணீரை அடக்க முடியலை.அவ்வ்

Beski said...

இந்த சந்தேகம் உ.போ.ஒ. பற்றியதல்ல, பொதுவானது.

//ம்ஹூம், ஒரு .... இல்லை. (பாருங்க மக்கா, புள்ளி புள்ளியா வச்சு கண்ணியத்தைக் காப்பாத்திட்டேன்!)//
எது கண்ணியம்? எது ஆபாசம்?
’ஒன்றும் இல்லை ’
என்று சொல்லியிருக்க முடியாதா?
’ஒரு ______ இல்லை’ என்று சொன்னாலும் வார்த்தை வெளியில் வந்துவிட்டதே!

அப்படியென்றால்
’அவன் ஒரு தே______ பய’ என்று எழுதினால் கண்ணியமா?

வால்பையன் said...

இந்த எழவுக்கு தான் நான் தமிழ் சினிமாவே பாக்குறதில்ல!

நர்சிம் said...

//நர்சிம் சொன்னதோடு முற்றும் உடன்படுகிறேன் எனது புரிதலைப் பற்றிய புரிதல் அவருக்கு இருக்க வாய்ப்பிலையெனினும் :-)நான் விசயத்தை விட்டு வெளியே இயங்குகிறேன் என்பதைப் புரிந்து கொண்டமைக்கு//

புரிதல் என்ற வார்த்தை இந்த பிரச்சனைப் பற்றியது மட்டுமே அண்ணாச்சி.புரிதலை தவறாக புரிந்துகொண்டுவிடாதீர்கள் என்பதையும் புரிதலுக்கான புரிதலில், புரியவைப்பது முக்கியம் என்பதாலும் இந்தப் பதில்.

(மொழிவிளையாட்டுக்கு வந்தா இப்பிடி ஆகிடுது அண்ணாச்சி..பதிலுக்கு விளையாடுங்க..)

கிரி said...

//எவனோ ஒருவன் said...

’அவன் ஒரு தே______ பய’ என்று எழுதினால் கண்ணியமா?//

நல்ல கேள்வி :-)

சுந்தர் இந்த UPO விவாதங்கள் எதிலும் நான் கலந்து கொள்ளவில்லை என்றாலும், உங்கள் அனைவரின் (அனைவரின் என்றால் அனைவரும் தான்) மாறுப்பட்ட கருத்துக்களும் எனக்கு ஒரு நல்ல அனுபவத்தை தந்தது என்றால் மிகையில்லை.

எத்தனை விதமான கோணங்கள் கேள்விகள் விமர்சனங்கள் பார்வைகள் அடேயப்பா! கற்று கொள்ள எவ்வளோ இருக்கிறது..அடுத்தது "எந்திரன்" வரும் போது எனக்கு இன்னும் அதிகம் கிடைக்கும் (அனுபவத்தை சொன்னேன்) ;-)

வால்பையன் said...

//பிரச்சனைப் பற்றியது//

”ப்” வரனுமா,
”பிரச்சனையைப் பற்றியது” என்றால் ஒகே!
மேலே அது கொஞ்சம் செயற்கையாக இருப்பது போல் தெரிகிறதே!

(சந்தேகம் தான், எனக்கு அதை பற்றி ஒன்றும் தெரியாது தல)

Athisha said...

பைத்தியக்காரன் அண்ணாச்சியை உடனடியாக மேடைக்கு அழைக்கிறோம்..!

வெண்பூ said...

ஆசிஃப் அண்ணாச்சி, நர்சிம்,

உங்க ரெண்டு பேரோட புரிதலையும் நாலு நாலு தடவை படிச்சி நாக்கு சுளுக்கிக் கொண்டது என்பதை தாங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். :)))

உண்மை said...

சுந்தர்ஜி,

இந்த பெரும்பான்மை வாதம் என்பதுதான் எனக்கு சரியா புரியமாட்டேங்குது..

80% மக்கள் 15% மக்களுக்கு எதிரா பேசினா அது பெரும்பான்மை வாதம்தான் ஒத்துக்கறேன். அதை ஒழிச்சே ஆகனும்.

ஆனா 90% மக்கள் 3% மக்கள ஒட்டுமொத்தமா ப்ராண்ட் பண்ணினா அது இல்லீங்களா??

ரவி said...

படம் பாக்கலாமா கூடாதான்னு எழுதுங்கப்பா !!!

சென்ஷி said...

@ கல்வெட்டு..

//பெஸ்ட் பேக்கரி பிரச்சனை என்பதை ரொட்டி சுடும் பிரச்சனையாக யாரும் சொல்லியிருப்பார்களோ?//

:-)) அசத்தறீங்க (பலூன்)மாம்ஸ்!

Beski said...

//செந்தழல் ரவி said...
படம் பாக்கலாமா கூடாதான்னு எழுதுங்கப்பா !!!//

இவ்வளவு அலசியதற்குப் பிறகு படம் பார்ப்பது, தங்களது வழக்கமான ரசனையை பாதிக்கும்.

படம் பார்க்காமல் இருப்பது நல்லது.

Ashok D said...

பதிவும் கருத்துக்களும் interesting.

கல்வெட்டு எல்லா எடத்தலயும் கலக்கறார்.

கார்க்கிபவா said...

//, வார்த்தைகளில் கண்ணியம் வேண்டும் என்ற நர்சிம், கார்க்கி மற்றும் பலர் மாற்றுக் கருத்துடையவர்களை மன நோயாளிகள் என்று சொன்ன ஆசிஃப் மீரானுக்கு ஏதாவது எதிர்ப்பு தெரிவித்தார்களா//

மற்றொரு பிரச்சினையிலே அவருடைய ”புரிதல்” எனக்கு புரிந்துவிட்டதால் ஆசிரியரை படிப்பதில்லை தல

மணிஜி said...

ஒரு நாள் கழிந்தது(புதுமைபித்தன் எழுதிய சிறுகதை)

Karthikeyan G said...

Ashok,

//கல்வெட்டு எல்லா எடத்தலயும் கலக்கறார்.//

இல்லை உளர்றார்.. ஒன்னுமே புரியற மாதிரி இல்லை.. :-)

குப்பன்.யாஹூ said...

இந்த அளவிற்கு சிந்தனையையும்,கருத்து யுத்தம் பதிவு அலைகளையும் ஏற்படுத்தி இருப்பதுதான் கமல் மோகன்லால் முருகனின் வெற்றி எனலாம்.

Kumky said...

ஹூம்...

சுவாரஸ்யம் வற்றிப்போய் சலித்துவிட்டது...

Sanjai Gandhi said...

// TBCD said...

மாற்று பார்வையா...அதெப்படி, எல்லாம் எங்க பார்வையாக இருக்கனும். இல்லாவிட்டால், உங்க பார்வை நொள்ளை பார்வையாக இருக்கனும். :)//

சூப்பர்.. இது எல்லாருக்கும் பொருந்தும்.. :)

Ronin said...

Jyovram,

The key difference between creators like Kamal and Rajini, and other emotional creators are they have always focussed on the work..

Rajini openly said he tried to escape to another country when there were dictatorial crisis earlier..

Have you seen Kamal upset so much except for the sandiyar issue..Where was he, when his niece was stuck in the katpu issue..

When they focus on their creations, why should we focus on their creations so much..More importantly why should we be upset over creations based on creations of others..

We should only be surprised if one of us is beyond casteism or communalism..

Vittu thallungal! Time has been and will be the answer..

Murali,Dubai said...

சுகுணாதிவாகர் said...
///
/ந்த அளவிற்கு தீவிர எதிர்ப்பு மனோநிலையில் செயல்படுபவர் ஏன் அதற்கு எதிரான அமைப்பில் இருக்க வேண்டும் என்பது மட்டுமே என் கேள்வி. /

நான் பி.ஜே.பியிலோ ஆர்.எஸ்.எஸ்ஸிலோ இல்லை.///

ஆணால் பாப்பானிடம் வேலை செய்கிரீர்களே !!!
மதத்தில் மைனாரிடி பேசும் / தூக்கி வைத்து ஆடும் கனவான்களே , அப்படியானால் ஜாதியில் பாப்பான் மைனரிட்டிதானே ? அவனை மட்டும் ஏன் எதிர்கிறீர்கள் ??/

குப்பன்.யாஹூ said...

I am imagining, instead of Mohanlal if Mammootty (Mohd Kutty) would have acted, how bloggers review would be.

we will start write it is a direct fight between (kamal Hindu Brahmin) versus Muslim (Mamootty- I do not know his sub caste).

This is what they call as seeing a glass (50% full, 50% empty).

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

பின்னூட்டமிட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.