அதிகாலையில்
ஒலிக்கிறது தொலைபேசி
இழுத்துக் கொண்டிருந்த பெரியப்பாவின் சாவு
நின்று போன வண்டி
மாமா பெண்ணிற்குக் குழந்தை
கலால்துறையின் ரெய்டு
உத்திராபதிக்கு ஹார்ட் அட்டாக்
(சே, எவ்வளவு கேவலமானவண்டா நீ!)
குலுக்கலில் பரிசு
ப்ரீதாவின் கொஞ்சல்
எதுவாகவும் இருக்கலாம்
முக்கியமானது
நிற்பதற்குள் எடுத்துவிட வேண்டும்
தொலைபேசி அழைப்பை
நிற்பதற்குள் நிற்பதற்குள்
வாசகர்கள்..!
5 days ago
18 comments:
புரிகிறது கவிதை :-)))
:-)))
நல்லா இருக்கு மக்கா.keep going.
கூப்பிட்டு குத்துறதுக்கு இல்லையே?
அனானி, தயவுசெய்து இம்மாதிரியான பின்னூட்டங்கள் வேண்டாம். இனி, இப்படியான பின்னூட்டங்களை வெளியிட முடியாது :(
மனித மனங்கள் சிக்கலானவை..
இது போலத்தான்...இது போலவேதான்...சில நேரங்களில்.
நல்லா இருக்கு.நிற்பதற்குள் எடுக்காவிட்டால் ......
கடைசியில் ரெண்டு தரம் "நிற்பதற்குள்" எதுக்கு குருஜி???
புரியலையே
May be from bank for Credit cards also.
புரியுது!
அப்ப கவிதை இல்லையா!?
கவிதை அருமை பாஸ்.
கூடிய சீக்கிரம் இன்னொரு எந்திரம்/ தொழில் நுட்பம் வந்து விடும்
தானாகவே தொலை பேசி on ஆகி தானாகவே என்ன செய்தி என்று சொல்லும் அளவு.
சில வேளைகளில் இப்படித்தான் அது சந்தோஷமோ சோகமோ ... பதற்றமாகவே ஒரு அழைப்பை எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது ... அழைப்பை ஏற்றே ஆக வேண்டிய நிர்பந்தம் இன்னும் கொடுமை
நல்லாயிருக்கு, சுந்தர்.
ராதாகிருஷ்ணன், சூர்யா, ராஜாராம், கும்க்கி, ரவிஷங்கர், தராசு, செல்வராஜ் ஜெகதீசன், வால்பையன், குப்பன் யாஹூ, நந்தா, அகநாழிகை... நன்றி.
கவிதை ரொம்பப் பிடித்திருக்கிறது, செல்பேசியில் வரும் அழைப்பு என்றால் பரவாயில்லை, காலர் ஐடி இல்லாத லேண்ட் லைனில் வரும் அழைப்பை எடுப்பதற்குள் நின்று விடும் போது யார் யார் என்ன என்ன என மனம் அலைவுற்றுக் கொண்டேயிருக்கும்.
செந்தழல் ரவி & யாத்ரா... நன்றி.
nalla irukkunga kavithai.
நல்ல கவிதை சுந்தர், இது போலத்தான் நானும் உணர்ந்திருக்கிறேன். மேற்சொன்ன யாதுமில்லாமல் ஏதோ நினைத்திராத இணக்கமான ஒரு செய்தியாயிருக்கும்போது எனக்கு மட்டுமே கேட்கும் ஒரு பெருமூச்சு வெளியாகுமே அது ஒரு சுகம்... இளைப்பாறும் சுகம்.
Post a Comment