என் குறியை அறுத்துவிட்டு
நடந்து கொண்டிருக்கிறேன்
நடைபாதையின் ஓரத்தில்
ஆடைகளற்ற
தனி மனிதனின்
சுதந்திர நடை
ஏதோ ஒன்றை எதிர்த்தோ
அல்லது எல்லாவற்றையும்
எதிர்த்தோ இருக்கிறது
என்னுடைய நடை பயணம்
கிரிக்கெட் ஸ்கோர்கள்
மற்றும்
சினிமாப் பாடல்களின்
நடுவே
யாரும் கண்டுகொள்ளாத தனிப்பயணம்
(மூன்று நான்கு மாதங்களுக்கு முன் ஏதோ ஒரு ஆங்கிலக் கவிதையைப் படித்ததன் தாக்கத்தில் எழுதியது - மொழிபெயர்ப்பல்ல - இப்போது தேடியும் மூலத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை).
கார்காலக் குறிப்புகள் - 58
6 days ago
33 comments:
நல்லா இருக்கு சுந்தர். (எனக்கு புரிஞ்ச அர்த்தத்துல )
மிக அருமையான கவிதை ... மூலக் கவிதையைப் படிக்க ஆவலாக இருக்கிறது ...
நடைப் பயிற்சி
பயிற்சி நடையில்...
சரக்கை மாத்துங்க...
:)
ம்ம்ம்:)
ஏன் இப்படிஜி!
இது சங்கத்தை எதிர்த்த கவிதையா ((-
உங்கள் சமீபத்திய கவிதைகளில் எனக்கு மிகப் பிடித்தது இது though you say it is inspired
மூடியை கழற்றி எரிந்துவிட்டு
குடித்து கொண்டிருக்கிறேன்
சாக்கனாங்கடையின் ஓரத்தில்
சைடிஸற்ற
தனி மனிதனின்
சுதந்திர குடி
ஏதோ ஒன்றை புகைத்தோ
அல்லது எல்லாவற்றையும்
குடித்தோ இருக்கிறது
என்னுடைய போதைப் பயணம்
பார் கூச்சல்கள்
மற்றும்
சினிமாப் பாடல்களின்
நடுவே
யாரும் கண்டுகொள்ளாத தனிப்பயணம்
அருமை சுந்தர்ஜி.
குறி என நீங்கள் இங்கே சொல்ல வருவது அடையாளம், பதவி, பணம், இமேஜ் என்பதையா அல்லது ஆண் குறியை யா
சங்கத்துக்கும் இந்த கவிதைக்கும் ஏதும் தொடர்பிருக்கா?
முதல் வாசிப்பில் புரியலை...பிறகு வாரேன்.
வால் வர வர கவிஞானாகிறது தான் புரியமாட்டேங்குது... :)
அன்பின் சுந்தர்
படித்தேன் - ரசித்தேன் - மறுமொழிகளையும் படித்தேன் - ரசித்தேன் -
எழுதுபவனின் எண்ணங்களும் படிப்பவனின் எண்ணங்களூம் ஏன் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஒரே சொற்கள் ஏன் பல பொருள் தருகின்றன
நல்வாழ்த்துகள் சுந்தர்
நட்புடன் சீனா
வாலின் எதிர்கவுஜயும் நன்று
பா.ராஜாராம் said...
முதல் வாசிப்பில் புரியலை...பிறகு வாரேன்.
//
டிரை பண்ணு ராசா.. புரிஞ்சா எனக்கும் சொல்லு.(ஒண்னு புரியனும்.. இல்லைன்னா நடிக்கணும்..எதாவது செய்டா ராசா)
ரொம்ப அருமை, கவிதையில் பேசப்படாத பல விஷயங்களை நான் நிறையவே உணர்கிறேன்
மறுபடியும் வாசிக்க ரொம்ப நல்லாயிருக்கு குரு...நன்றி!
ம்ம்ம் நன்று!
அந்த ஆங்கிலக்கவிதையைப் பகிரலாமே!
கவிதையில் குறி'ப்பிட்ட்டு சொல்றமாதிரி எதுவும் இல்லையே ?
பெண்களில் சல்மா , லீனா போல் ஆண்களில் குறி பற்றி எழுத ஆளில்லை.
நீங்கள் ஆரம்பித்து வைத்துவிட்டீர்கள்
இனி பல குறிகளை பார்க்கலாம்
சூரியன்
//என் குறியை அறுத்துவிட்டு// இதுலதான் இருக்குது சூத்திரம்.
இது நித்தியை நினைத்து எழுதியதோ!
அருமை..
- பிரவின்ஸ்கா
குறியை அறுத்துவிட்டு நடப்பது என்ற கற்பனையே ஆஹா.. ஓஹோ.. அள்ளிக்குதே :-)
அபாரமான கவிதை!
தனியானது..தனித்துவமானது..
ம்ம்ம்..முடியலைடா மக்கா.
இன்ஷா அல்லா.தானி மர்ரா..
புரியுதா?
ரௌத்திரனிடம் கேள்.சொல்வார். :-)
பாவி.
மிக அருமையான கவிதைகளில் மூடியை கழற்றி பிடித்தது அடையாளம்.
பல பொருள்,பதவி, பணம், இமேஜ் ஏன் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.
ஒன்றை ஆவலாக புகைத்தோ,பயிற்சி நடையில் நடிக்கணும் என நீங்கள் இங்கே சொல்ல டிரை பண்ணுவது
மூலக் கவிதையைப் படிக்க ஆவலாக இருக்கிறது ...
நித்தியை நினைத்து நித்தியை நினைத்து குறியை அறுத்துவிட்டு நடப்பது என்ற கற்பனையே நல்லா இருக்கு சுந்தர்.
.
.
.
.
சரக்கை மாத்துங்க...
மணிகண்டன், நந்தா, அனானி, ஆடுமாடு, சுகுணா திவாகர், வால்பையன், ராம்ஜி யாஹு, அதிஷா, ராஜாராம், அஷோக்,சீனா, மணிஜி, யாத்ரா, ரௌத்ரன், அத்திவெட்டி ஜோதிபாரதி, செந்தழல் ரவி, சூரிய நிலா, ராஜசுந்தர்ராஜன், மஞ்சூர் ராசா, பிரவின்ஸ்கா, யுவகிருஷ்ணா, அனானி... நன்றி.
எதோ விரக்தி - மற்றபடி ஒன்றும் புரியல
yes!
:-)
nice lines..
cheers,
shangaran
http://shangaran.wordpress.com
virakthiyin vilimbil..,
verumaiyaai alaiyum
thanimaip paduththappatta
manathin thattuth thadumaariya payanamaa ithu??
திருநங்கை பற்றிய கவிதையா ?
அருமையான கவிதை
//இப்போது தேடியும் மூலத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை).//
நீங்க பொது கழிப்பிடம் போறதே இல்லை போல.. அங்க நெறைய நோட்டிஸ் ஒட்டி இருப்பாங்க சுந்தர்ஜி.. அவங்க கிட்ட போனா மூலத்தை கண்டுபிடிச்சி குணப்படுத்துடுவாங்களாம்.
சுகுமார், ஷங்கரன், இரசிகை, கோவி கண்ணன், சஞ்சய் காந்தி... பின்னூட்டங்களுக்கு நன்றி.
Post a Comment