ராக்கெட்டைக் கையில் பிடித்துக் கொளுத்து
திரி பற்றியவுடன்
வீசியெறி
வானத்தில் புகைபரப்பி
விர்ரெனச் சென்றால் மகிழ்ச்சி
இன்னொன்றை
கொளுத்தி பக்கவாட்டில் விசிறி அடி
வாகனங்களின் புகையைக் கிழித்து
தூரத்தில் இருப்பவனின் சூத்து
காலியாகுமென கெக்கலி
அடுத்த ராக்கெட்
பாலத்தின் மேல் வருபவனை
அலறி வண்டியை ஒதுக்கி ஓட்ட வைக்கட்டும்
(நடுவில் காரின் மேல் எய்த அம்பு
குறி தவறி பக்கவாட்டுச் சுவரில்
மோதி விழுவதை விட்டுவிடு)
நமக்கிது தீபாவளி
நம் உலகம்
நம் தீபாவளி
நம் கொண்டாட்டம்
நானும் ஒன்று கொளுத்திக் கொள்கிறேன்
என் வழுக்கைத் தலைமேல் விழாதிருக்கட்டும்
இந்த எழவெடுத்த ராக்கெட்.
கார்காலக் குறிப்புகள் - 58
3 days ago
14 comments:
ஒரே ஒரு வரியை வச்சு பின்னவினத்துவ கவிதைன்னு கண்டுபிடிச்சன் ஜி. :)
அருமை நன்றிகள் சுந்தர்.
நம் மனதையும் இயந்திரத் தனமாக மாற்றி விட்டது நகர வாழ்க்கை சூழல். இம்மாதிரி பண்டிகை நாட்கள் தான் மனதிற்கு ஓய்வு நாட்கள்.
எங்கும் எல்லோருக்கும் மகிழ்ச்சி மட்டுமே பொங்கட்டும்.
kovi kannan... athu ennai vaarthainnu nallaa theriyuthu :)
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
தங்களுக்கு தங்கள் குடும்பத்தினருக்கும் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
:)
எனக்கும் இந்த ராக்கெட் பயம் இருந்துச்சு.. வாகனத்த கவனமா ஓட்ட முடியாம நான் பட்டா அவஸ்த்தை எனக்குதான் தெரியும்...
அந்தக்காலத்தில் எரோப்ளேன் என்றொரு சிறிய வாணமுண்டு
கொளுத்தியவுடன் எப்பக்கம் போகுமென யாருக்கும் தெரியாது
என் வீட்டு சன்னல் திரை எரிந்ததொரு நாள் அதன் தாக்குதலால்
பின்னாளில் தடை வந்தது
பிழைத்தோம் நாமெல்லாம்
இந்த ராக்கெட்டும் அதே ரகம்தான்
ராக்கெட்டை ரோட்டில் படுக்க வைத்து கொளுத்திய நாளும் உண்டு
ஹூம்!அதெல்லாம் அக்காலம்
இன்று!என்ன வெடியோ என்ன வாணமோ!
உங்கள் கவிதையை ரசித்தேன்!
கோவி கண்ணன், ராம்ஜி யாஹு, இனியா, வெங்கட், எஸ்கே, நந்தா, கேஆர்பி செந்தில், சென்னைப் பித்தன்... நன்றி.
:) வர்ண வெடி வரிகள். மத்தாப்பாய் ஆரம்பித்து ஆட்டம்பாம் போல முடிகிறது
”நானும் ஒன்று கொளுத்திக் கொள்கிறேன்
என் வழுக்கைத் தலைமேல் விழாதிருக்கட்டும்
இந்த எழவெடுத்த ராக்கெட்”
--- இது நல்லா இருக்கு. சுயத்தின் இயக்கம் இப்படித்தானோ?
விநாயக முருகன் & ஜமாலன்... நன்றி.
//என் வழுக்கைத் தலைமேல் விழாதிருக்கட்டும்//
விழுந்தாலும் தாமரை இலை தண்ணீர் போல் ஒட்டாமல் வழுக்கிட்டு சும்மா சொய்ங்ங்ங்ன்னு போய் அடுத்தவன் தலையை பதம் பார்த்துவ்விடும் குருஜி டோண்ட் ஒர்ரி:)))
சூத்து என்று சொல்வது நன்றா?
Post a Comment