அவ்வப்போது இணையத்தில் மேயும்போது படிக்கும் பதிவுகளில் பிடித்தவற்றை அறிமுகம் செய்து வருகிறேன். இன்றைக்கு : மதன் (www.azhagiyalkadhaigal.blogspot.com).
நிறைய கவிதைகளும் எப்போதாவது கதை / கட்டுரைகளும் எழுதுகிறார். 'போலக் கவிதை'களாகவே நிறைய இணையத்தில் பார்க்க முடியும் வேளையில், இவரது கவிதைகள் தனித்துவமானவையாகத் தெரிகின்றன. பல்வேறு முறைகளில் கவிதைகளைச் சொல்லிச் செல்கிறார்.
எனக்குப் பிடித்திருக்கும் இவரது கவிதைகளை நீங்களும் வாசித்துப் பாருங்களேன்!
***
இதை எழுதிவைத்து மூன்று நாட்களாக வெளியிடவேண்டாமென்றுதான் யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனாலும் 'திடீர் சாம்பார்' 'திடீர் ரசம்' மாதிரி சில திடீர் தமிழ்ப் பற்றாளர்கள் இணையத்தில் ஈழப் பிரச்சனை தொடர்பாக எழுதும் இடுகைகளைப் படித்தால் சிரிப்பு வருகிறது; சில சமயம் எரிச்சலும். என்னவோ கலைஞர்தான் எல்லாப் பிரச்சனைகளுக்கும் காரணம் என்பதுமாதிரி இவர்கள் திரிக்கும்போது கோபம்வராமல் என்ன செய்யும்? காங்கிரசைக்கூடக் கும்முகிறார்கள் - ஆனால் நீங்கள் கவனமாகப் பார்த்தால் புரியும், அதிமுகவையோ அல்லது ஜெயலலிதாவையோ லேசான நகக்கீறல்கூடப் படாமல் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
கைது நடவடிக்கைகளின்போது போலீஸ் எப்படி நடந்து கொள்வார்கள்? ஜெயேந்திரனை எப்படிக் கைது செய்தனர், கதிரவனை எப்படிக் கைது செய்தனர் என்பதை நீங்கள் மனக்கண்முன் கொண்டுவந்தால் இதற்கான விடை கிடைக்கலாம். அல்லது ராமலிங்க ராஜூ Vs 1000 ஆயிரம் ரூபாய் பிக்பாக்கெட் அடித்த திருடன் அல்லது ஜெயலலிதா கைது செய்யப்பட்டது Vs கலைஞர் கைது செய்யப்பட்டது ... இப்படியாகப் பல உதாரணங்களை நீங்கள் யோசித்துப் பார்க்கலாம். அந்தப் போலீஸ் மனநிலையே கலைஞர் x ஜெயலலிதா விஷயத்தில் வலைப்பதிவர்களிடம் இருக்கிறது.
இதில் சிலர் முன் ஜாமீன் வாங்கிவிடுகிறார்கள் : ஜெ என்றால் அவர் அப்படித்தான் என்பதால் பிரச்சனையில்லையாம். அதாவது நீங்கள் நட்பு சக்தியைத்தான் அதிகம் விமர்சிப்பீர்களா..? எதிரிகளை அவர்கள் எதிரிகள் என்பதற்காகவே கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவீர்களா... :(
உண்மையான அக்கறையுடன் சிலர் எழுதுவது புரிந்தாலும் (இந்த விஷயத்தில் கலைஞர் மேல் எனக்கும் கோபமும் வருத்தமும் உண்டு), இதையே சாக்காக வைத்துக் கொண்டு சிலர் கலைஞரைக் காய்வதையும் சில இணைய திடீர் புரட்சியாளர்கள் சதிகார கருணாநிதி என்றெல்லாம் எழுதுவைதையும் ஏற்றுக் கொள்ள முடியாது.
***
இந்த ஞாயிறு மாலை 4 மணிக்கு ஒடுக்குமுறைக்கெதிரான வலைப்பதிவர்கள் குழு தோழர்கள் முத்துக்குமார் மற்றும் ரவிக்கான வீரவணக்கக் கூட்டம் ஒன்றை அறிவித்திருக்கிறார்கள். விவரங்கள் :
நாள் : 08.02.2009 ஞாயிறு மாலை 4.00 மணி முதல்
இடம் : நடேசன் பூங்கா, தி. நகர், சென்னை.
(அவ்வறிவிப்பில் இருக்கும் ஒரு வார்த்தை எனக்கு ஏற்புடையதில்லை என்பதால் முழுதாகத் தரவில்லை. நேரில் சந்திக்கும்போது பேசிக் கொள்வோம்).
வலைப்பதிவர்கள் / வலைப்பதிவுலக வாசகர்கள் அனைவரையும் வரும்படி அழைக்கிறோம்.
கார்காலக் குறிப்புகள் - 58
1 day ago
24 comments:
//அதிமுகவையோ அல்லது ஜெயலலிதாவையோ///
ஒரு ஜோக் நினைவுக்கு வருகிறது. தனக்கு தினமும் உணவு வழங்கும ஒரு வீட்டாரைப் பார்த்து பிச்சைக்காரன் சொன்னானாம்.
" எப்பவும் கொடுக்காத அந்த மகராசி இன்னைக்கும் கொடுக்கல சரி. தெனமும் கொடுக்கற பரதேசி உனக்கு என்ன கேடுகாலம் வந்துச்சு?"
எனக்கு வேற மாதிரி தோனுச்சு...
அன்னாடும் படுக்கிற தாசி தூரமாம் , ஆனா எப்பாவது படுக்கிற ஆத்துகாரிக்கு என்ன கேடாம்??
// திடீர் ரசம்' மாதிரி சில திடீர் தமிழ்ப் பற்றாளர்கள் இணையத்தில் ஈழப் பிரச்சனை தொடர்பாக எழுதும் இடுகைகளைப் படித்தால் சிரிப்பு வருகிறது.//
இது பரவாலைங்க
அடுத்தவங்க பதிவுல போயி அங்க தெனமும் செத்துகிட்டு இருக்கான் நீ இங்க சினிமா பதிவு போடுரியான்னு வேற ஒரு கேள்வி கேக்குறாங்க.என்னத்த சொல்லுறது.
//ஜெ என்றால் அவர் அப்படித்தான் என்பதால் பிரச்சனையில்லையாம். //
ஜெ என்றால் அப்படித்தான் என்பதால் விமர்சிக்காமல் இல்லை. அரசியலில் நம்பருக்குத்தான் மதிப்பு. ஜெயலலிதாவை பொறுத்தவரை, அவர் நினைத்தால் கூட மத்திய அரசை கட்டுப்படுத்த முடியாத ஒரு நிலையில் இருக்கிறார். ஆனால் கலைஞர் அப்படியல்ல, இலங்கையில் சகஜ நிலைமை திரும்ப "உடனடி போர் நிறுத்தம் வேண்டும் இல்லையெனில் நாளையே மத்திய அரசுக்கு ஆதரவு வாபஸ்" என்ற ஒரு அறிக்கை போதும். ஆனால் இன்று வரை செய்யவில்லை. அதனால் தான் விமர்சனம் அவர் பக்கம் திரும்பியிருக்கிறது.
//கைது நடவடிக்கைகளின்போது போலீஸ் எப்படி நடந்து கொள்வார்கள்?//
ஈழம் விவகாரத்துக்கும் இதற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. தேவையில்லாத மேற்க்கோள்.
சுந்தர்,
உண்மையில் ஜெயலலிதாவை கும்முவதிலோ இல்லை ஆத்திரப்படுவதிலோ எவ்வித முன்னேற்றமும் ஏற்பட்வியலாது. அதே போல் ஜெயலலிதாவும் தமிழ்ச்செல்வன் படுகொலைக்கு கவிதை வாசித்து நீலிக்கண்ணீர் வடிக்கவுமில்லை. ஜெயலலிதா அன்று போல் தான் இன்றும்...தமிழ்ப்புலிகளைத் தீவிரவாதிகள் என அழைக்கிறார். கலைஞரும் அழைக்கலாம் ஆனால் யோசிக்கிறார் இவ்வளவு காலமும் உழைத்து உருவாக்கிய பிம்பமும் உடைந்து போகுமோவென்று.
அதையெல்லாம் விட நான் இவ்வாறு எழுதுவதற்கு கூட கலைஞர் திருக்குவளை முத்துவேல் கருனாநிதி தான் காரணம்!! என்ன செய்வது ஜெயலலிதா இருந்திருந்தால் அமுக்கி வாசி பொச்சியிலே போட்டுருவானுங்கன்னு போக வேண்டியது தான்.
ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். பொருளாதார, சுற்றுச்சூழல் சிக்கல்கள் நிறைந்த சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றியேத் தீருவோம் என்று மஞ்சத்துண்டைத் தோளில் தட்டிப்போட்டுக்கொண்டு வந்து உண்ணாவிரதப் பந்தலில் அமர்ந்தபோது இருந்த உணர்வு இப்போது மட்டும் கடிதம் எழுதுவதிலேயே முடிந்து விடுகிறதே?
வாஜ்பாயோ, சோனியாவோ தாம் விரும்புவது நடக்காவிட்டால் கவிழ்த்துப் போடவும் தயங்காத செயலலிதாவையும்,,,தனக்குத் தேவையென்றால் ஒரு நாளென்ன ஒரு மாதம் கூட கடுங்குளிரோ, சுடுவெயிலோ எதைப் பற்றியும் கவலைப்படாமல் தரை மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறையும், தொலைதொடர்புத் துறயும் தான் வேண்டுமென வென்று வந்த கருனாநிதியையும் ஒரே தராசில் வைக்க முடியாது தான்...
ங்கோத்தா பாடுன்னு திட்டத்தான் தோணுது. இருக்கிற ஒரே உணர்வாளன் திருமாவை அரசியல் நீரோட்டத்தில் நீர்த்துப் போக வேலை நடந்து கொண்டிருக்கிறது
நன்றி, சுரேஷ் கண்ணன்.
நன்றி, அனானி.
நன்றி, கார்த்திக்.
நன்றி, நிலோஃபர் அன்பரசு. அந்த உதாரணம் வலைப்பதிவர்கள் மனநிலையைச் சொன்னது, ஈழத்துடன் தொடர்புபடுத்த அல்ல.
நன்றி, பொட்டீக்கடை சத்யா. கலைஞரின் செயல்களை நியாயப்படுத்த முயலவில்லை (அது முடியுமா என்ன!). ஆனால் வலைப்பதிவில் சிலர் (இட்லிவடை போன்றவர்கள்) இதுதான் சாக்கென்று கிளம்பிவிடுகிறார்கள். அந்த எரிச்சலில் எழுதியது.
ஒரு அனானிப் பின்னூட்டம் நிராகரிக்கப்படுகிறது.
கலைஞர் மீதான உங்கள் பார்வைக்கு நன்றி.
திமுக செயற்குழு கூடி பதவி விலகலை அறிவிக்கும் என எதிர்பார்த்தோம்.அசாதாரணமான சூழ்நிலை அப்படி நம்மை ஆக்கியிருந்தது(திமுக ஆதரவாளர்களை).அப்படி நடக்கவில்லை என்றவுடன் தையத்தக்கா என்று குதிக்கின்றனர்.சொன்னாலும் புரியாது மண்ணாளும் வித்தைகள் என்று பழைய பட வசனம் ஒன்று உள்ளது.உணர்ச்சிவசப்பட்டு நாம் எடுக்கும் புரட்சிகர முடிவுகளை ஆட்சியாளர்கள் (கலைஞர்) எடுக்க முடியாது.கலைஞரின் இன்றைய பேட்டியில்'இந்திய அரசுக்கு கட்டளையிடும் அளவுக்கு அதிகாரமும்,வலுவும் இல்லை என்று கூறியுள்ளார்.இந்திய அரசுக்கு கோரிக்கை வைப்பதைத்தவிர வேறு ஒன்றும் செய்ய இயலாது என்பது முகத்திலறையும் உண்மை.
//எப்பவும் கொடுக்காத அந்த மகராசி இன்னைக்கும் கொடுக்கல சரி. தெனமும் கொடுக்கற பரதேசி உனக்கு என்ன கேடுகாலம் வந்துச்சு//
பரதேசியா? என்னமோ இடிக்குதே சுரேஷ் கண்ணன்...
வலைப்பதிவில் கவிதையைப் படிக்கும் மனப்பாங்கு எனக்கு ஏனோ இன்னும் அமையவில்லை. நிறைய கிடைப்பதாலா, அல்லது ஸ்க்ரால் பார் துள்ளலா, அல்லது அலுவல் அவசரத்தின் நடுவில் குவியாத மனமா! ஏதோ ஒன்று. அச்சில்தான் வசதிப்படுகிரது.
1. பொதுவாகவே எந்த ஒரு அரசியல்வாதியையும் 'இவன் நல்லவன்', 'இவன் கெட்டவன்' என்றோ சொல்லாமல் அந்தந்த பிரச்சினை சார்ந்து கும்முவதுதான் ஆரோக்கியமான அரசியலுக்கு வழிவகுக்கும்.
2. சும்மா ஒரு கேரக்டரை அரசியல்வாதிக்கு அட்டாச் செய்வதும், கண்மூடித்தனமாக ஆதரிப்பதும், எதிர்ப்பதும், இந்த அரசியல்வாதிகளுக்கு ஒரு பயம் இல்லாமல் ஆக்கிவிடும்.
3. மக்களுக்கும் அரசியல்வாதிக்குமான உறவு, வாடிக்கையாளருக்கும், கடைக்காரனுக்குமானதைப் போலத்தான் இருக்க வேண்டும்.
4. வாடிக்கையாளர்கள் இந்தக் கடைக்குத்தான் நான் எப்பவும் போவேன் என்று முடிவெடுத்துவிட்டால் கடைக்காரருக்கு விலையைக் குறைக்க வேண்டிய கட்டாயம் இருக்காது.
5. வாடிக்கையாளன் குறைந்த விலை தரும் எந்தக் கடைக்கும் போவேன் என்றிருந்தால், கடைக்காரர்கள் போட்டி போட்டுக்கொண்டு விலையைக் குறைப்பார்கள்.
6. அதுபோல, நமது எதிர்பார்ப்புகளை மேலானதாக வைத்துக் கொண்டு ஒழுங்காக நமது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாத அரசியல்வாதிகளை விமர்சனங்களால் துளைத்தெடுப்போம்.
7. ஜெயலலிதாவின் இருப்பால் கலைஞரின் துரோகத்தைக் கண்டிக்காமல் விட்டால் அரசியல்வாதிகளுக்கு ஒரு அழுத்தமே எப்பவும் இருக்காது. அவர்களது குடும்பத்தை மட்டும் நன்கு கவனித்துக் கொண்டு 'தமிழினத் தலைவர்' பட்டத்தையும் பெற்றுக் கொண்டு கவிதையில் கண்ணீர் விட்டுக் கொண்டிருப்பார்கள்.
8. ஜெயலலிதா என்ற தமிழினவிரோத அரசியல்வாதியுடன் ஒப்பிட்டால் மட்டும்தான் கலைஞர் தமிழுணர்வாளராகத் தெரிவார். கலைஞர் உண்மையிலேயே தமிழுணர்வாளரா இல்லை ஜெயலலிதா என்று ஒருவர் இருப்பதால் தமிழுணர்வாளராக பார்க்கப்படுகிறாரா என்பதுதான் கேள்வி... அவர் தனது நலனுக்கு குந்தகம் வராமல் ஆட்சியில் சாதித்தது எல்லாவற்றையும் விட அதிகமாக நீங்களோ, நானோ சாதிக்கமுடியும் என்றே எண்ணுகிறேன்
9. மேலும், இந்த அளவிற்காவது நிலைமை கொஞ்சம் சொரனையுள்ளதாக மாறி இருப்பதற்கு இது போல கலைஞரிடம் தங்களை 'ஒப்புக் கொடுக்காதவர்கள்' தான் காரணம் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.
மிக்க நன்றி சுந்தர். கவனத்தைக் கூட்டி பொறுப்பைக் கொடுத்திருக்கிறீர்கள். முயற்சி செய்கிறேன்!
முற்றிலும் சரியான பதிவு!!!
வரவேற்கிறேன்..
மதன் வலைதளத்தை அறிமுகுபடுத்தியமைக்கு நன்றி
சுந்தர் - அனைவரும் கிளம்பிவிடுகிறார்கள் என்று சொல்கின்றீர்.. உண்மையில் அப்படியான வாய்பை கலைஞர் கொடுத்துவிடுகிறார் என்பதே நிதர்சனம்..
இந்த 5 மாதங்களில் அவரின் நிலைப்பாட்டை யோசியுங்கள்..
கலைஞர் நல்ல முடிவு எடுப்பார் என்று அக்டோபரில் பதிவு எழுதிய நானும் ஒரு சலிப்பில் இந்த வாரம் "உளியின் ஓசை கேட்ட காதுகளுக்கு தமிழன் ஒப்பாரி கேட்கலையோ" எழுதினேன்..
காரணம் என்னவென்றால். அவர் நினைத்தால் ஏதாச்சும் செய்யலாம்.. அதனால் தான்..
இந்தத்துறை வேண்டும் என்று மத்திய அரசை கலைஞர் எந்தள்வுக்கு சென்று நிர்பந்தித்து வாங்கினார் என்பது எல்லோருக்கும் தெரியும் தானே.. அதில் தவறில்லை.. அவர்கள் கூட்டணியில் அப்படி கேட்டு வாங்கினார்.. தமிழகத்துக்கு முக்கிய துறைகள் வந்தது.. இன்று தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பாலங்கள் வந்தது இதனால் தான்..
ஆனால், அதே போன்ற ஒருஅழுத்தம் இப்போது ஏன் தரப்படவில்லை என்பது தான் புரியல..
பதவி எனக்கு முக்கியமில்லை என்றவர் திடீரென்று.. ஆட்சி கவிழ்க்க சதி , சதி என்று
தொடர் அறிக்கை விடுவது அயர்ச்சியை தருகிறது., அவர்கள் அமைப்பை ஏற்படுத்தி போராடுகிறார்கள் என்ற போது ஏன் தேவையின்ற என் ஆட்சியை கவிழாதா என்று பார்க்கிறார்கள் என்று அறிக்கை விடவேண்டும்? பதவி எனக்கு முக்கியமில்லை என்று சொல்லிக்கொண்டே.. அப்புறம் இறுதி தீர்மானம் என்று சொல்லிவிட்டு இப்போது ஏன் மீண்டும் தீர்மானம் , பொதுக்கூட்டம் இது போன்ற முன்னுக்கு பின் செயல்கள், அறிக்கைகள் தான் அதிக சலிப்பை தருகிறது.. நீங்கள் சொன்னது போல இருக்கும் கூட்டத்துக்கு தெம்பை தருகிறது.. வாய்க்கு அவல் தருகிறது..
முத்துகுமாருக்கு வீர வணக்கம்.
---------------------
அணையப் போவதாய்
எண்ணிக் கொண்டிருந்த
இனநெருப்பை பற்றவைத்த
அக்கினிக்குஞ்சு நீ!
ஆம்!உன் தாய் தமிழச்சி தான்
உயிரை துச்சமென மதிக்கும்
விவேகமிக்க வீரனைப் பெற்றெடுக்க
ஓர் தமிழச்சியால் தானே முடியும்...
நீ தூத்துக்குடிதான்
கலப்படமில்லா முத்து அங்குதானே கிடைக்கும் ...
முராரியால்
பூபாளம் பாடிய
புதிய வரலாறு நீ!
அவர்கள் புலியாய் போரிடுகின்றனர்
நீ ஒளியாய் போரிட்டாய்
நாங்கள் வாய்மொழியாலாவது
போரிட வேண்டாமா?
முத்துக்குமார் தமிழ்க்கடவுள்
என்றனர் நம்பவில்லை...
முத்துக்குமார்தானே தமிழ்க்கடவுளாக
இருக்க முடியும்
இப்போது நம்புகிறேன்...
நீ எழுதி வைத்த மரண ஓலைதான்
இனி எங்கள்
புதிய புறநானூறு!
பல அரசியல் வாதிகள்
பிணங்களாய்ப் போனார்கள்....
நீ எப்போதும் உயிரோடு இருப்பாய்!
தூக்குக்கயிற்றை முத்தமிட்டான் பகத்சிங்
தீயை முத்தமிட்டாய் நீ!
அன்று இந்தியா கிடைத்தது...
நாளை ஈழம் கிடைக்கும்!
வீர வணக்கத்துடன்
Dr.ச.தெட்சிணாமூர்த்தி,
அறந்தாங்கி.
தமிழினத்தலைவி செயலலிதா என்று விளிக்கும் போதும் தமிழினத் தலைவர் கருணாநிதி என்று விளிக்கும் போதும் நீங்கள் ஒரே போல் தான் உணர்கிறீர்களா?
உங்கள் எரிச்சலுக்கான விடை இந்த கேள்வியில் கிடைக்கலாம்.
simply..superb
நேற்று நடந்த பந்த் பற்றி உங்கள் அபிப்ராயம் என்ன சுந்தர்ஜி
சுந்தர் : பெரிசா ஒன்னும் சொல்றதுக்கு இல்ல.. 1894 நான் எழுதுன கவிதை ஒன்னு ஞாபகம் வருது..
காமத்தின் வெற்றியில்
பந்தில் தோல்வியில்
புரியவில்லையே
தலைப்பு சொன்னா புரியும் "பிசுபிசுப்பு"
Send Nedumaran,Ramadoss,Vaiko and Thirumavalavan to Ceylon by a boat.They will solve the problem.
சுந்தர் ஜி நச்சுன்னு இருக்கு.
\\நேற்று நடந்த பந்த் பற்றி உங்கள் அபிப்ராயம் என்ன சுந்தர்ஜி
சுந்தர் : பெரிசா ஒன்னும் சொல்றதுக்கு இல்ல.. 1894 நான் எழுதுன கவிதை ஒன்னு ஞாபகம் வருது..
காமத்தின் வெற்றியில்
பந்தில் தோல்வியில்
புரியவில்லையே
தலைப்பு சொன்னா புரியும் "பிசுபிசுப்பு\\
நர்சிம் இதுவரை, பதிவில் கலக்கி வந்தீர்கள். இப்போது பின்னூட்டத்திலும்
கூட்டத்தில் எதாவது தீர்மானம் போடுவீர்களா?
வர ஆசைதான்!
உணர்வுகளை பகிர்ந்து கொள்ளவேண்டும்!
தற்கால அரசியல்நிலையை தெரிந்து கொள்ளவேண்டும்.
முடிந்த அளவு முயற்சி செய்து
பார்க்கிறேன்!
மலம் தின்னி கருநா(க)நிதி செய்ய வேண்டியதை செய்கிறாரா? என்று கேட்டால் ....
செயலலிதா முழுகி எத்தனை நாளாச்சு?
சோ வெளிக்கி போனாரா?
ராம்தாஸ் பீடி குடித்தாரா?
இவ்வாறெல்லாம் கேட்கும் அறிவுசீவிகளை என்னவென்பது?
சாலிசம்பர், முத்து தமிழினி, பாஸ்டன் பாலா, சுரேஷ் ஜீவானந்தம், மதன், அறிவுமணி, பாண்டித்துரை, வீ எம், முகவை மைந்தன், நர்சிம், முரளிகண்ணன், வால்பையன், அனானிகள்... நன்றி.
Post a Comment