எந்த சினிமாவையும்
முழுதாக அமர்ந்து பார்க்க முடிவதில்லை இப்போதெல்லாம்
மனதிற்குப் பிடித்த புத்தகமேயானாலும்
இரண்டு மணிநேரத்திற்குமேல் படிக்க முடிவதில்லை
கிரிக்கெட் மேட்ச் என்றாலும் 10 ஓவர்களுக்குமேல்
பார்க்க முடிவதில்லை தொலைக்காட்சியை
பேரழகியாய் இருந்தாலும் எவளையும்
ஒரு வருடத்திற்குமேல் காதலிக்க முடிவதில்லை
பெற்றோரிடமும் மனைவி குழந்தைகளிடமும்
தொடர்ந்து அன்பு செலுத்த முடிவதேயில்லை
உத்தியோகமும் அடிக்கடி
மாறிக் கொண்டேயிருக்கிறது இவனுக்கு
நெருக்கமான நட்புகளும் நெடுங்காலம் தொடர்வதில்லை
எழுதுவதும் சலித்துப் போகிறது பல சமயம்
இப்பட்டியலில் சிக்காமல் இருப்பது
கோல்ட் பிளேக் கிங்ஸும்
ஓல்ட் மாங்கும்
எப்போதாவது புணர்ச்சியும்
சுய இன்பங்களும்
கார்காலக் குறிப்புகள் - 58
1 day ago
33 comments:
கலக்கல் சுந்தர்.. வாழ்க்கையின் நிதர்சனங்களை உங்க கவிதைகளை அப்பட்டமா போட்டு தாக்குது..
//கோல்ட் பிளேக் கிங்ஸும்
ஓல்ட் மாங்கும்
எப்போதாவது புணர்ச்சியும்
சுய இன்பங்களும்//
ரொம்பவும் தான் குசும்பு !
காயடித்த விலங்குகளை நினைத்துப் பாருங்கள்........
கலக்கிட்டீங்க போங்க...! (நம்மாள்தானா நீங்க...?!!!)
100% ஒத்துக்கொள்கிறேன்...!!!!!!!
நிதர்சனம்
அட இந்த கவிதை புரியுதே...!
That's a good one..
I have added it in படித்தது / பிடித்தது series of my webpage..
http://www.writercsk.com/2009/02/10.html
********* பார்க்க முடிவதில்லை தொலைக்காட்சியை *********
இந்த வரி மட்டும், எதுகை / மோனைக்கு ஒத்து வராம இருக்கு ! "முடிவதில்லைன்னு" முடிச்சி இருக்கணும். "தொலைக்காட்சியை" ன்னு முடிச்சது இந்த செய்யுளோட இலக்கணத்த மாசு படுத்துது !
என்னாலே படிச்சி புரிஞ்சிக்க முடியற கவிதைகள் ரொம்பவே கம்மி. இது எனக்கு புரிஞ்சது.
சூப்பர் சுந்தர்.
//எந்த சினிமாவையும்
முழுதாக அமர்ந்து பார்க்க முடிவதில்லை//
ஸ்பைனல்கார்டில் பிரச்சினை
//இரண்டு மணிநேரத்திற்குமேல் படிக்க முடிவதில்லை
கிரிக்கெட் மேட்ச் என்றாலும் 10 ஓவர்களுக்குமேல்
பார்க்க முடிவதில்லை//
கண்ணில் பிரச்சினை
//ஒரு வருடத்திற்குமேல் காதலிக்க முடிவதில்லை//
மனசுல பிரச்சினை
//ஓல்ட் மாங்கும்
எப்போதாவது புணர்ச்சியும்
சுய இன்பங்களும்//
எப்படி அங்க மட்டும் நோ பிராபிளம்?
(அப்ப சேலம் சித்தவைத்தியர் சிவராஜ் சொல்வது எல்லாம் டூப்பா?)
சுந்தர்!
அதுவும் எல்லோருக்கும் தெரிகிற மாதிரி அனுமதிக்கப்பட்டால் அலுத்துப் போகலாம்.
ஓல்ட் மாங்கும்
புணர்ச்சியும்
சுய இன்பங்களும்
எப்போதாவது கோல்ட் பிளேக் கிங்ஸும்...
இப்போ கரீக்டா இருக்குது ;)
நன்று!
அடடா... இந்த உண்மை கசக்கலையே
Ass hole. Bull shit. Idhellam oru kavithai. idhukku jaalra paoda oru maanga madaya koottam.
// கோல்ட் பிளேக் கிங்ஸும்
ஓல்ட் மாங்கும் //
எப்படித்தான் இந்த மங்கு கருமத்த குடிக்கிரீங்களோ.
கவிதை அருமை
அப்படியே என்னோட இந்த கவிதையை கொஞ்சம் வாசிச்சு பாருங்களேன்.......
http://tamiludhayan.blogspot.com/2008/10/mg.html
நன்றி
தமிழ் உதயன்.
அருமை சார்....கவித....கவித....!!!
S....
உண்மை...
இப்படி நிறைய இருக்கு...
very well written
கலக்கல் வார்த்தைகள் குருவே..
//எந்த சினிமாவையும்
முழுதாக அமர்ந்து பார்க்க முடிவதில்லை//
என்னால் போஸ்டரையே பார்க்கமுடிவதில்லை
//பேரழகியாய் இருந்தாலும் எவளையும்
ஒரு வருடத்திற்குமேல் காதலிக்க முடிவதில்லை//
எனக்கு இரண்டு மாதங்களே போதுமானது!
ஆனாலும் உங்களுக்கு ரொம்பத்தான் பொறுமை
//இப்பட்டியலில் சிக்காமல் இருப்பது
கோல்ட் பிளேக் கிங்ஸும்
ஓல்ட் மாங்கும்//
இங்கேயும் அதே. ஆனால் சிறு மாற்றம்
கேல்ட் பிளேக் பில்டரும்
நெப்போலியன் பிராண்டியும்.
வர வர
நான்
எல்லோருமாகிப்போகிறேன்.
அதாவது மற்றவர்கள் மாதிரியே நானும் ஆகிட்டேன்னு சொல்லவர்றேன்
என்னையா உன்னொட problem, ஏன் எப்பொழுது பார்தாலும் குடி, காமம் அல்லது புகை பற்றி எழுதுகிறாய்,
காரனம் வேண்டும்
கவிதை சொல்லும் அத்தனையும் வாழ்வை கண்டுபிடிக்காத அல்லது தொலைத்து விட்டதற்கான அறிகுறிகள்.
அப்புறம் யாரிது முகவரி இல்லாத மேதாவி :)
எந்தப்பதிவனையும் தொடர்ந்து படிக்க முடியவில்லை என்ற வரியைத் தேடினேன் ஜ்யோவ்
விட்டுப்போனது.
முடியாதவையான...
இவை யாவற்றையும் பகிர்ந்து கொள்ள
நல்ல நண்பர்கள் இருக்கிறார்கள்.
சிலநேரம் விமரிசிக்கவும் கூட.
"
Anonymous said...
என்னையா உன்னொட problem, ஏன் எப்பொழுது பார்தாலும் குடி, காமம் அல்லது புகை பற்றி எழுதுகிறாய்,
காரனம் வேண்டும்"
Sariyaana Comedy! This should also be added to the poem as a ps note..
There is another poetical movie abt such a feeling -"american beauty"..highly recommend it..
நன்றி, வெண்பூ.
நன்றி, கோவி கண்ணன்.
நன்றி, சிவாஜி த பாஸ். ஆமாம் :)
நன்றி, முரளிகண்ணன்.
நன்றி, அதிஷா. கவிதை என்பது புரிந்து கொள்ளத்தானே :)
நன்றி, சரவண கார்த்திகேயன், உங்கள் வலைப்பதிவில் இதைச் சேர்த்ததற்கு.
நன்றி, மணிகண்டன். இந்தக் கவிதை என்ன, உங்களுக்குத்தான் அ-கதைகளே தண்ணி பட்ட பாடாச்சே :)
நன்றி, குசும்பன். உங்களுக்கு எதில் பிரச்சனை :) :)
ம்ம், தெரிந்தது தானே. நமக்கு Biological needs எனத் தோன்றுவது பிறருக்கு addiction போலத் தோன்றுகிறது :)
அனுஜன்யா
மாதவராஜ், பொட்டீக்கடை, கார்க்கி, அனானி, கார்திக், தமிழ் உதயன், ராமசுப்ரமணிய சர்மா, தமிழன் கறுப்பி, டாக்டர் ருத்ரன், நர்சிம், வால்பையன், அனானி, சுகுமார், செல்வேந்திரன், காமராஜ், ரானின், அனுஜன்யா... நன்றி.
Old monk? wow, you took me back to that good old 1997 in Bangalore!
Awesome poem!
நன்றி, ஜோ.
Post a Comment