காணாமல் போக்கியாகிவிட்டது
சிறு வயதுப் பேனாவை
அற்புதமான பேனா அது
விரல்களுக்கேற்ற கனபரிமாணம் உடையது
தாளில் வழுக்கிக் கொண்டு ஓடும் அழகே தனி
என் முக்கிய கணங்களில் உடனிருந்திருக்கிறது
பத்தாவது பரிட்சைகூட அதில்தான் எழுதிய ஞாபகம்
இலக்கியத்தின் வீச்சை
நட்பின் வகசிப்பை
ப்ரியமானவர்களின் ஆதுரத்தை
என எல்லாவற்றையும் அதில் கண்டிருக்கிறேன்
எங்கு தேடியும் கிடைக்கவில்லை
இப்போது வேறு பேனா வந்து விட்டபோதும்
சிறுவயதுப் பேனாவை ஏனோ மறக்க முடியவில்லை
கார்காலக் குறிப்புகள் - 59
4 days ago
18 comments:
நானும் ஸ்கூலில் படிக்கும் போது, "டோரிக்" என்று ஒரு பேனா கொண்டுதான் எழுதுவேன். மிக அழகாகவும் இருக்கும். பரீட்சை எல்லாம் வேகமாக எழுத முடியும்.
இன்று மை உற்றி எழுதும் பேனாவே நல்லதாக கிடைக்க வில்லை. நெக்கைத் திறந்து ஃபில்லரினால் மை சிந்தாமல் உற்றுவதே சுகம்.
இன்று எல்லாமே பால் பாயிண்ட்தான். எழுத ஆரம்பிக்குமுன் ரஃப் தாளில் கிறுக்கிப் பார்த்து தான் துவங்க வேண்டும். பிறகு பைலட் பேனா வந்தது. பார்க்கர், ஷீபர்ஸ் என்று எத்தனையோ பேனா வந்தாலும் என் டொரிக் போல ஒரு பேனா வரவில்லை.
சகாதேவன்
பகிர்வுகளுக்கு நன்றி, சகாதேவன்.
சிறு வயது பேனா மட்டுமில்லை. சிறுவயதையே மறக்க முடியவில்லை.
நிறைய காணாமல் போக்கியிருப்பீர்கள் போலிருக்கிறது; மொழி, பேனா; இன்னும் என்னென்னவோ. எல்லாவற்றையும் கவிதையாக எழுதித் தொலையுங்கள் :)
எதையும் தொலைக்காதவரே, நான் தொலைத்ததைப் பற்றி இன்னும் இரன்டு மூன்று கவிதைகள் ஸ்டாக்கில் இருக்கின்றன. நான் எழுதித் தொலைக்கிறேன்; நீங்கள் படித்துத் தொலையுங்கள் :)
வேறு பேனாவுக்குத் தெரியுமா, இன்னும் சிறுவயதுப்பேனாவை மறக்காமல் இருப்பது?
:-)
முபாரக், தெரிஞ்சா பிரச்சனை ஆகிடாது.? :)
I like this one very much.
சிறு வயது பேனா போல மறக்க முடியாத எத்தனையோ உண்டு சிறு வயது நிகழ்வுகள்!!
அன்புடன் அருணா
நன்றி, முனி & அருணா.
தொலைந்து போன சிறு வயது பேனாவையே நினைத்துக் கொண்டிருந்தால், இப்பொழுது உபயோகிக்கும் பேனாவை எப்படி மனமார உபயோகிப்பது?
ஜியோ,
"சிறு வயதுப்பேனா" என்றால் பேனாவுக்கு சின்ன வயசா இருந்தப்போ வச்சிருந்ததா, இல்லை உங்களுக்கு சின்ன வயசா இருந்தப்போ வச்சிருந்ததா :-))
(ஏன்னா , இப்போ சிறு வயதுப்பையன் என்று சொன்னால் பையனுக்கு தானே சின்ன வயதுனு அர்த்தம்)
வாழ்த்துக்கள்! தங்களின் கவிதை எனது பால்ய கால கரு நீல ‘camlin' பேனாவைப்பற்றிய ஞாபகத்தை கிளர்ந்தெளச் செய்துவிட்டது..
ஒவ்வொரு தேர்வுக்கு முன்பும் - பேனாவை அக்கு வேறு ஆனி வேறாகப்பிரித்து தண்ணிரில் கழுவி - உடுத்திய கைலியால் ஈரம் துடைத்து -முற்றத்தில் பழைய செய்தித்தாள் பரப்பி - அதன் மீது பேனாவை காய வைத்து மை நிறைத்து -எழுதியது - ஏப்ரல் முதலாம் தேதி சகமாணவர்கள் மீது ‘இங்க்' அடித்து விளையாடி மகிழ்ந்தது..மறக்க முடியாது..
திணேஷ், அது சரிதான் :)
வவ்வால், பாயிண்ட் :)
(என் / என்னுடைய ) சிறு வயதுப் பேனா என வாசிக்கலாம் அல்லது நீங்கள் சொன்ன மாதிரி பேனாவிற்குச் சின்ன வயதென்றும் கொள்ளலாம் (அதனால தான் சில பேர் தூக்கிப் போட்டு விட்டு காணாமல் போச்சு என்று சொல்கிறார்களோ என்னவோ.?) :)
பகிர்வுகளுக்கு நன்றி, பிறைநதிபுரத்தான்.
இன்று உனக்காக use ஆகும் பேனா இல்லையா
அது ஒளிவீசும் எழில் கொண்ட பேனா இல்லையா
அதன் வாழ்வு நெடுநாட்கள் வருமல்லவா
அன்போடு அதனோடு மகிழ்வாயய்யா..
:-)
சரி, வானவில். புதுப் பேனாவோடு அன்புடன் நெடுநாள் வாழ்கிறேன் :)
Post a Comment