இன்று மதியம்தான் கவனித்தேன், நான் வலைப்பதிவு எழுதத் துவங்கி ஓராண்டு ஆகிவிட்டதை. முதலில் பதிவிட்டது 29/11/2007ல். இத்துடன் சேர்த்து 150 இடுகைகள். என்னளவில் இது பெரிய விஷயம்.
பதிவிட்டதில் மிகப் பெரும்பாலும் கவிதைகளே (அதிலும் பல கவிதைகள் ஏற்கனவே பத்திரிகைகளில் வெளியானவை). முதலில் அறிமுக அளவில் அ-கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தேன். இரண்டு எதிர்-கவிதைகளும் பதிவிட்டிருக்கிறேன்.
இதுவரை 1,11,000ற்கும் மேற்பட்ட பக்கங்கள் வாசிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிப்பவர்களுக்கும், எனக்குத் தொடர்புச் சுட்டி கொடுத்துள்ளவர்களுக்கும் என் நன்றிகள். போலவே தமிழ்மணம், தமிழிஷ் போன்ற திரட்டிகளுக்கும்.
மூன்று நான்கு மாதங்களுக்கு முன்னால் எழுதுவதைக் கொஞ்ச காலம் நிறுத்திவைக்கலாமா எனத் தோன்றியது (இப்போதும் மனதின் ஓரத்தில் அந்த எண்ணம் இருக்கிறது). தொடர்ந்து வலைப்பதிவில் எழுதிக் கொண்டிருப்பதில் ஏனோ ஒருவித ஆயாச உணர்ச்சி.
கடந்த 18 வருடங்களாக என்னை மிகவும் ஈர்ப்பவை : வாசிப்பு, மது & ஸெக்ஸ். இப்போது - கிட்டத்தட்ட ஒன்பது வருடங்கள் கழித்து மறுபடி - எழுதுவதும் சேர்ந்து கொண்டிருப்பதில் மகிழ்ச்சியே. இந்த ஒரு வருட காலத்தில் சிலநாட்கள் தவிர்த்து அனேக நாட்கள் ஏதாவது கிறுக்கியே வந்திருக்கிறேன் (பதிவில் ஏற்றாவிட்டாலும்!).
எழுதும்முறையிலும் கொஞ்சம் மாற்றம். முதலில் பேப்பரில் எழுதிக் கொண்டிருந்தவன் இப்போது நேரடியாக கணினியில் எழுதுகிறேன். அகால வேளைகளில் ஏதாவது எழுதத் தோன்றினால் மட்டுமே தாளில் எழுதுவது.
திரும்பிப் பார்க்கையில், செய்ய நினைத்து முடிக்காமல் விட்ட விஷயங்கள் நிறைய இருக்கின்றன. காமக் கதைகள் தொடரை முடிக்க வேண்டும் (மூன்று கதைகள் கையிருப்பில் எழுதி வைத்திருந்தாலும் செப்பனிட மனம் ஒட்டவில்லை). அதிகம் அறியப்படாத சிறுபத்திரிகைகள் என ஒன்றை ஆரம்பித்து, ஒரு பதிவுடனேயே நின்றுபோனதைத் தொடரவேண்டும். சோம்பேறித்தனம் ஆட்கொள்ளாமல் இருந்தால் இதையெல்லாம் செய்யவேண்டும்.
அவ்வப்போது நான் வலைப்பதிவில் வாசிக்கும் சுவாரசிய எழுத்துகளை அறிமுகம் என்ற அளவில் செய்யவேண்டும் என்பது என் ஆசை. இதற்குமுன்பு நான்கு பதிவர்களைப் பற்றி எழுதியிருக்கிறேன்.
சமீபமாக நான் வாசிப்பதில் கே ரவிஷங்கர் (http://www.raviaditya.blogspot.com/) என்னைக் கவர்கிறார். கவிதைகள், ஹைகூ, கதைகள் எனக் கலந்துகட்டி எழுதுகிறார். வித்தியாசமாக கவிதைகள் எழுதுகிறார். சுஜாதா தாக்கம் அதிகம் தெரிவதைக் குறைத்துக் கொண்டால் நல்லது (இது இங்கு பலரிடமும் நான் பார்ப்பதுதான்).
கடைசியாக : இணையம் என்பது கட்டற்ற வெளிதான். ஆனால் மும்பையில் நடந்த தீவிரவாதக் கொலைகளைப் பற்றி எழுதும்போதாவது கொஞ்சம் பொறுப்புணர்வோடு எழுதினால் நலம். வெறுப்பை உமிழும் எழுத்துகளைப் பார்க்கையில் பயமாகவும் சங்கடமாகவும் இருக்கிறது.
பனிக்காலத் தனிமை - 02
5 days ago
26 comments:
பாராட்டுக்கள் சுந்தர்.. ஒருவருடத்தில் 150 பதிவுகள் (அதுவும் எழுதிய எல்லாவற்றையும் பதிவில் ஏற்றாமலேயே) & 1,11,000 ஹிட்ஸ்.. நிச்சயமாக சாதனைதான்.. உங்கள் ஆசைகள் (லட்சியங்கள்?) நிறைவேற வாழ்த்துக்கள்..
Congrats! Excellent!
Thanks to your blog to make my blog.
:-( What about my poems (incl. dubbed)
வா
ழ்
த்து
க
ள்
:)
வாழ்த்துக்கள சுந்தர்.
வாழ்த்துகள் சுந்தர் சார்!
அன்புடன்,
ஆர்.நாகப்பன்.
குருவே வாழ்த்துக்கள்!!!
சுந்தர்,
வாழ்த்துக்கள். ஒரு வருடத்தில் 150 பெரிய சாதனைதான். மேன்மேலும் தொடருங்கள். இது பெருந்தலைகளின் வாஆஆரம் போலும். அய்யானர் இருநூறு அடித்து விட்டார். நானும் 500 பின்னூட்டங்கள் போட்டு விட்டேன் :)
ரவி வலைப்பூ பரிச்சயம் உண்டு. மும்பை... சில தினங்களுக்கு சூட்டைத் தவிர்க்க இயலாது. தானாகச் சரியாகிவிடும். எனக்கும் நிறைய அதிர்ச்சி, கோபம், சோகம், ஆயாசம் கலந்து, முடிவில் சூன்ய உணர்வே மிஞ்சியது.
அனுஜன்யா
சுந்தர்,
உங்கள் 150 இடுகைகள் மற்றும் 1,11,000ற்கும் மேற்பட்ட பக்கங்கள் வாசிக்கப்பட்டதற்கு வாழுத்துக்கள்.
"போற்றிப் பாடடடி கண்ணே! ஜ்யோவ்ரம்சுந்தர் பதிவே!
அடுத்து எதிர்பாராத ஒரு இன்ப அதிர்ச்சி!
நன்றி! நன்றி! நன்றி!
வாழ்துக்கள் ஜூனியர் :-))
ஒரு வருசத்திற்கு 150 பதிவுகள் என்பது உண்மையிலேயே சாதனை தான்!
வாழ்த்துக்கள்!!!!!!!
சுந்தர்!
வாழ்த்துக்கள்.
தொடர்ந்து எழுதிக் கொண்டே இருக்கும் போது, ஒருவித ஆயாசம் வரத்தான் செய்கிறது.
ஆனாலும் சொல்வதற்கும் நிறைய இருப்பது போல தொந்தரவும் செய்கிறது.
அப்புறம்....
மும்பை தாக்குதல் குறித்து உங்கள் பயம் ரொம்ப நியாயமானது.
சி.என்.என்னையும், டைம்ஸையும் பார்த்தால், ஒரு யுத்தம் உருவாவதற்கான உரையாடல்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன.
கோபமும் வருகிறது.
வாழ்த்துக்கள்!!!
வாழ்த்துக்கள் அண்ணா...
\\
கடந்த 18 வருடங்களாக என்னை மிகவும் ஈர்ப்பவை : வாசிப்பு, மது & ஸெக்ஸ். இப்போது - கிட்டத்தட்ட ஒன்பது வருடங்கள் கழித்து மறுபடி - எழுதுவதும் சேர்ந்து கொண்டிருப்பதில் மகிழ்ச்சியே. \\
ரசித்தேன்.
\\
சமீபமாக நான் வாசிப்பதில் கே ரவிஷங்கர் (http://www.raviaditya.blogspot.com/) என்னைக் கவர்கிறார். \\
ஒரு மிகச்சிறந்த பதிவரை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி
ஒரு வருடம் ஆகிவிட்டதா அதற்குள்?
1. ஆரம்பத்தில் எழுதிக் கொண்டிருந்த அ-கவிதைகள், எ-கவிதைகள் தொடர்ந்து காணப்படவில்லையே? இன்னமும் சில கவிதை வடிவங்களைக் கூட அறிமுகப் படுத்தலாமே?
2. அதீதன் குளிர்காலத்தில் எழுத (மட்டும்) மாட்டாராமா? :-) புதுவருடத்தில் வந்து விடுவாரா?
3. கவிதை தொகுப்பு ஏதேனும் வெளியிடும் உத்தேசம் உண்டா?
4. தற்போது அரசியல் கட்டுரைகள் நிறைய எழுதுகிறீர்களே, பத்தி எழுத்து ஏதேனும் எழுதும் எண்ணமுண்டா?
வாழ்த்துகள்.. சுந்தர்.. மேன் மேலும் நிறைய பதிவுகள் இட வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் சுந்தர்..
மொழிவிளையாட்டின் பயன்பாடுகள் பற்றிய புரிதல்கள் எத்தனைபேருக்கு பயமுறுத்தியிருக்கும் என்பது தங்களின் பதிவுக்கதைகள் வந்தபிறகு சற்று அதிகம் அறிய முடிந்தது...
அடுத்த கட்ட முயற்சிகளுக்கு வாழ்த்துக்களுடன்
அன்பு நண்பன் சென்ஷி
வாழ்த்துக்கள்!
நானும் கூட "எழுத" ஆரம்பிச்சு ரெண்டு வருஷம் ஆகிப்போச்சு.
2/11/2006ல தட்ட ஆரம்பிச்சது.
420 போஸ்ட்ஸ். அதில் 20 கூட நல்ல சரக்குள்ளதாய் தேராது என்பதை வருத்தத்துடனும், கேவலத்துடனும், வெட்கி, தலை குனிந்து, தெரிவித்துக் கொள்கிறேன் ;)
வாழ்த்துகள் தல..
வாழ்த்துக்கள் சுந்தர்.
**********சி.என்.என்னையும், டைம்ஸையும் பார்த்தால், ஒரு யுத்தம் உருவாவதற்கான உரையாடல்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன *********
மாதவராஜ் :-
மாதத்திற்கு நூற்றுக்கணக்கான உயிர்கள் இந்தியாவில் தீவிரவாதத்திற்கு பலி ஆகி கொண்டேதான் இருக்கிறது. இது யுத்தம் இல்லையா ?
வாழ்த்துக்கள் சுந்தர்
வாழ்த்துக்கள் சுந்தர்.
//அதிகம் அறியப்படாத சிறுபத்திரிகைகள் என ஒன்றை ஆரம்பித்து, ஒரு பதிவுடனேயே நின்றுபோனதைத் தொடரவேண்டும்.//
இதை நான் மிகவும் எதிர்பார்த்தேன்.
வெண்பூ, ரமேஷ், கென், ஜமாலன், ஆர் நாகப்பன், குசும்பன், அனுஜன்யா, கே ரவிஷங்கர், கார்த்திக், வெயிலான், மாதவராஜ், விஜய் ஆனந்த், அதிஷா, ஸ்ரீதர் நாராயணன், ராகவன், சென்ஷி, சர்வேசன், கார்க்கி, மணிகண்டன், கிருத்திகா, வடகரை வேலன் ... நன்றி.
// ... நன்றி.//
என்னாதிது? கேள்விகள் கேட்டா ‘நன்றி’ன்னு சொன்னா என்னாங்க அர்த்தம்?
சரி சரி... வெட்டிக் கேள்விகள் ஏண்டா கேக்கறேன்னு சொல்லாம சொல்றீங்க. புரியுது :-))
இன்னும் நிறைய அலுப்பின்றி எழுத வாழ்த்து சுந்தர்.
ஸ்ரீதர், பதில்கள் இதோ :
1. செய்யலாம் :)
2. சொல்வது மட்டும்தான் அதீதன். எழுதுவது நான்தான். திரும்பவும் எழுதணும்.
3. இப்போதைக்கு இல்லை.
4. பத்தி எழுத்து என நினைத்துத்தான் சிலவற்றைக் கிறுக்கிக் கொண்டிருக்கிறேன் :)
நன்றி, DJ.
அட நாம ரெண்டு பேர்த்துக்குமே ஒரு வயசு ஆயிருச்சா?
இப்போ பிறந்தா மாதிரி இருக்குது. காலம் ரொம்ப தான் வேகமா போகுது
Post a Comment