அடுத்தவர்களைப் புரிந்து கொள்ள
கற்றுத் தரப்படுகிறோம்
அடுத்தவர் பார்வைக் கோணங்களின்
முக்கியத்துவம் பற்றி
அதை நாம் புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் பற்றி
அடிப்படை நாகரிகம் பற்றி
ஜனநாயகம் பற்றி
கற்றுத் தருகிறார்கள் தொடர்ந்து -
அடுத்தவன் கருத்து எவ்வளவுதான்
முட்டாள்தனாமாக
கேப்மாரித்தனமாக
கேவலமாக இருந்தபோதும்
போங்கடா வெண்ணைவெட்டிகளா
(சார்லஸ் புயுகோவ்ஸ்கியின் கவிதையொன்றை ஒட்டி எழுதியது - மொழிபெயர்ப்பல்ல).
பனிக்காலத் தனிமை - 02
5 days ago
13 comments:
சுந்தர்,
இதுக்கு நல்லயிருக்குன்னு பின்னூட்டம் போட்டா சரியாத் தப்பா? நீங்க எப்படி எடுத்துகுவீங்க?
புரியுது, புரியுது.
யார சொல்ரிங்கன்னு புரியுது
சிகரெட் பிடிக்க விழைந்தேன்.
விரல்களும் உதடுகளும் சிகரெட்டும்தான் இருந்தன.
தீப்பெட்டி இல்லை.
சுற்றியிருந்தவர்களும் மனம் திரும்பிய மைந்தர்களாக இருந்தார்கள்.
என் தவிப்பைப் பார்த்த நண்பர் ஒருவர், என்னிடமிருந்த சிகரெட்டை வாங்கி ஜன்னல் வழியாக வெளியே நீட்டினார்.
சிகரெட் பற்றிக்கொண்டது. சென்னை!
ஒன்னுமே புரியல...............
வடகரை வேலன், வால்பையன், அனானி, அத்திரி... நன்றி.
"முட்டாள்; கேப்மாரி; கேவலம்; வெண்ணைவெட்டி (!); "
என்ன சுந்தர் இவ்வளவு எரிச்சல்? அன்பே சிவம். ஒரு தம் அடித்தபின் எல்லாம் சரியாகி விடும் :)
இப்போ என்னை என்னான்னு சொல்வீங்க ? :)))))
அனுஜன்யா
சுந்தர்....!
கோபக் கவிதையா...
கவிதைக் கோபமா?
// அடுத்தவன் கருத்து எவ்வளவுதான்
முட்டாள்தனாமாக
கேப்மாரித்தனமாக
கேவலமாக இருந்தபோதும்
போங்கடா வெண்ணைவெட்டிகளா.//
:-))
யார சொல்லவர்ரீங்க.
அனுஜன்யா, மாதவராஜ், கார்த்திக்... நன்றி.
//அடிப்படை நாகரிகம் பற்றி
ஜனநாயகம் பற்றி
கற்றுத் தருகிறார்கள் தொடர்ந்து //
தொ...டர்ந்...து..
sundar
really its great !
நர்சிம், பாண்டித்துரை... நன்றி.
இந்தக் கவிதையை நான் முன்னமே இங்கு வாசித்து ரசித்திருக்கிறேன், மிகவும் பிடித்திருக்கிறது, தற்போது ப்யூகோவ்ஸ்கியை வாசித்துக் கொண்டிருக்க தாங்கள் குறிப்பிட்டது நினைவில் வர தேடி மறுபடியும் வாசித்தேன். மிக்க நன்றி
Post a Comment