அதே மருத்துவரைப்
பார்க்கும்போதெல்லாம்
ஒரே கேள்விகள்
குடிப்பதை நிறுத்திவிட்டாயா
புகைப்பதை?
அதே பேச்சுக்களுக்கு
ஒரே பதில்கள்
நடைப் பயிற்சி நல்லதாயிற்றே
அலுவலகத்திற்கு நடக்கிறேனே
கையில் அதே பிபி கட்டைச் சுற்றி
காதில் அதே ஸ்டெதெஸ்கோப் வைத்து
சோதிக்கும் அவர்
அதே எடையையும் சோதிப்பார்
ஒரே மாதிரி அவரிடம் பணம் கொடுத்து
அதே வழியில் திரும்புகையில்
அதே மதுக்கடையில்
அதே ஓல்ட் மாங்கும்
அதே கோல்ட் பிளேக் கிங்ஸும்
அதே விலையில்
அதே விக்ரமாதியனின்
ஒரே வரி நினைவுக்கு வருகிறது
வயிற்று வலி பயத்தில்கூட குடிப்பதை...?
மு.பொன்னம்பலம்
23 minutes ago
15 comments:
அதே தான்..
அருமை
ம்ம், உடம்புக்கு ஆகுமா சுந்தர்? உங்க கவிதையை படிச்சு, முன்பே எழுதிய ஒரு கவிதையை இன்னிக்குப் பதிவுல போட்டேன். சேம் ப்ளட் :))
அனுஜன்யா
அதே சுந்தரின்
அதே பதிவில்
அதே சுவரிசியமான நடையில்
ஒரே வர்த்தை நினைவுக்கு வந்தது
‘சபாஷ்’.
படித்'தேன்'
சுந்தர்,
நல்லா இருக்கு.
”கட்டிங் கவிதைகள்” ஒரு தொகுப்பு போடலாம்.
ஆனா எங்களுக்கு இதே சுந்தர் ரெம்ப நாளைக்கு வேணும்ங்கிறாதால அதே மருத்துவர் சொன்ன அதே அறிவுரைதான்.
வேணாமே ப்ளீஸ்.
அதே மாதிரியான உணர்வை தருகிறது தல!
என்பேரு
ஈரோடு சிவகிரி..
உன்பேரு
என்ன?
இப்படித்தான்
டாக்டர்
விளையாட்டும்
நல்லா இருக்கு,
கவிதை நல்லாவே இருக்கு??????????????
//வயிற்று வலி பயத்தில்கூட குடிப்பதை...?//
குடித்ததில் வலிக்கலாம்
வலித்ததில் குடிக்கலாம்
அதே வயிறுதான்!
//”கட்டிங் கவிதைகள்” ஒரு தொகுப்பு போடலாம்.//
:-)
நல்ல ரசிக்கும் படியான கவிதை.
கார்க்கி, அனுஜன்யா, அக்னி பார்வை, அனானி, ரவிஷங்கர், வடகரை வேலன், வால்பையன், சுரேஷ், ஆ முத்துலிங்கம், அத்திரி, ஸ்ரீதர் நாராயணன், உதயகுமார், கார்த்திக்... நன்றி.
சுந்தர்!
'வாழ்க்கை பழக்கத்தின் தடத்தில் ஊறிக்கிடக்கிறது, அதை அறிவின் தளத்துக்கு உயர்த்த வேண்டும்' ஜே.ஜே.சில குறிப்புகளில் வரும் வரிகள் இவை.
நான் சுந்தரராமசாமியை வசதியாக முன் வைத்து நகர்கிறேன்.
Post a Comment