வாழ்க்கையில் எந்தக் காதலியுமில்லாமல் வறண்டிருந்தபோது அதீதன் தன் நண்பன் குமாரிடமிருந்து வினிதாவின் அலைபேசி எண்ணை வாங்கியிருந்தான்.
'என் ஆள்தான், பரவாயில்லை, நீ வச்சுக்கோ' எனப் பெருந்தன்மையாகச் சொல்லிவிட்டான் குமார்.
வினிதாவிடம் நாளொன்றிற்கு 4 மணிநேரம் மொக்கை போட ஆரம்பித்தான் அதீதன். அவள் மிஸ்ட் கால்தான் கொடுப்பாள், இவன்தான் அழைக்க வேண்டும்.
மெதுவாக டிரைவர் அந்தஸ்திற்கு உயர்ந்தான். அவளைக் கல்லூரியில் சென்று விடுவது, அழைத்துக் கொண்டு வருவது என. அப்புறம், காஃபி ஷாப், சினிமா, மகாபலிபுரம் ரிசார்ட் என வளர்ந்தது.
அவளுக்குத் திரைத்துறை விஷயங்கள் நிறைய தெரிந்திருந்தன. அந்தப் பழைய பிரபல மா வரிசை நாயகிகளை அறிமுகப்படுத்திய இயக்குனர் கதாநாயகிகளைத் தேர்ந்தெடுக்கும் விதத்தைச் சொன்னாள். ஒரு ரூபாய் நாணயத்தை முலைக்கடியில் வைப்பாராம். நாணயம் விழுந்து விட்டால், அந்த நடிகை தேர்ந்தெடுக்கப்படுவாள். முலை அழுத்திப் பிடித்துக் கொண்டு நாணயம் கீழே விழாவிட்டால் ரிஜக்டட்! வாய் பிளந்து கேட்டுக் கொண்டிருப்பான் அதீதன். தன் மொபைலில் சேமித்து வைக்கப்பட்டிருந்த அந்த இளம் நாயகன் + பிரபல நாயகியின் வீடியோவைக் காண்பிப்பாள், அல்லது இன்னொரு (இப்போழுது திருமணமாகிவிட்ட) நாயகியும் அவளது காதலனும் இணைந்திருக்கையில் எடுத்த வீடியோவை.
அதீதனின் செல்ஃபோனில் ப்ளூடூத் இல்லாததால் இதையெல்லாம் சேமித்து வைத்துக் கொள்ள முடியவில்லை. இதில் அவனுக்கு வருத்தமே.
சில மாதங்கள் கழித்து திடீரென்று ஒரு நாள் ‘எனக்கு செமஸ்டர் எக்ஸாம் ஆரம்பமாகப் போகுது. நிறையப் படிக்கணும், அதனால நாம இனிப் பழக வேண்டாம்' என்றாள். அதீதனுக்கோ வியப்பு.
குமாரிடம் சொன்னான். ‘அவளுக்கும் போரடிக்காதா... அதான் மேட்டர் முடிச்சிட்ட இல்ல, அப்புறம் என்ன லூஸ்ல விடு' என்றுவிட்டு பாஸ்கருக்கு ஃபோன் போட்டு வினிதாவின் எண்ணைக் கொடுத்தான்.
‘பாஸ்கர் பாவம், நாலஞ்சு தடவை கேட்டுட்டான்...' என்றான்.
எக்ஸாம் போன இடம் தெரியவில்லை. இப்போது பாஸ்கரனுடன் சுற்றிக் கொண்டிருக்கிறாள்.
அதீதனும் வேறு ஒருத்தியைத் தேடத் துவங்கிவிட்டான்.
கார்காலக் குறிப்புகள் - 58
2 days ago
30 comments:
///இந்திய கலாச்சாரத்தை சீர் குலைக்கும் அதீதன் மற்றும் அவனது காதலிகளை, விரட்டி விரட்டி அடிக்குமாறு இந்திய கலாச்சார காவலர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.///
முன்பொரு பதிவில் ஜோ எழுதிய பின்னூட்டம். பின்னூட்டம் போடக் கூட சரக்கில்லீங்கண்ணா :-)))
அண்ணாச்சி, நன்றி :)
அண்ணாச்சி என்னா மாடல் மொபைல் ப்ளூடூத்தோட வேண்டும் என்று சொல்லுங்க வாங்கி அனுப்பிவிடுகிறேன்!
ஆனால் நேரில் பார்க்கும் பொழுது எல்லா கிளிப்பிங்ஸும் என் மொபைலுக்கு அனுப்பனும்!
// பாஸ்கருக்கு ஃபோன் போட்டு வினிதாவின் எண்ணைக் கொடுத்தான்.//
பாஸ்கருக்கு அடுத்து யாரு.குமார்கிட்ட சொல்லி இடம் காலியான நமக்கும் நம்பர் குடுக்கச்சொல்லுங்க அதீதன்.
நன்றி, குசும்பன். ஏதாவது நல்ல மாடலா வாங்கி அனுப்புங்க :)
நன்றி, கார்த்திக். அடடா, நிறைய பேர் க்யூல இருக்காங்க போல :)
அதீதனுக்கு எங்கியோ மச்சம் இருக்குன்னு நெனக்கிறேன். ம்ம்ம்ம்ம்.. எனக்கும்தான் கழுத்துல மச்சம் ஒண்ணு இருக்குது, ஒண்ணுத்துக்கும் உதவாம.. :)))
//அந்தப் பழைய பிரபல மா வரிசை நாயகிகளை அறிமுகப்படுத்திய இயக்குனர் கதாநாயகிகளைத் தேர்ந்தெடுக்கும் விதத்தைச் சொன்னாள்.//
அப்படியா
பென்சில் என்றல்லவா கூறினார்கள் !!
//'என் ஆள்தான், பரவாயில்லை, நீ வச்சுக்கோ' எனப் பெருந்தன்மையாகச் சொல்லிவிட்டான் குமார்.//
இந்த மாதிரி நண்பர்கள் எங்கே கிடைப்பார்கள்!
நானும் வரண்டு போய் தான் இருக்கிறேன்
//அதீதனின் செல்ஃபோனில் ப்ளூடூத் இல்லாததால் இதையெல்லாம் சேமித்து வைத்துக் கொள்ள முடியவில்லை. இதில் அவனுக்கு வருத்தமே.//
இதுக்காகவே ஒரு ப்ளூடூத் மொபைல் வாங்கி தர்றாராம் குசும்பன்.
சேமித்து வைத்து இந்துயா வரும் போது வாங்கிகிறாராம்
உண்மையாவும் இருக்குமோ?
இந்த மாதிரி அழுத்தமான உறவுச்சிக்கல்களுடன் இருக்கும் படைப்புத்தளம் பல தரிசனங்கள் நிரம்பியதாயிருக்கிறது.
//'என் ஆள்தான், பரவாயில்லை, நீ வச்சுக்கோ' எனப் பெருந்தன்மையாகச் சொல்லிவிட்டான் குமார்//
//குமாரிடம் சொன்னான். ‘அவளுக்கும் போரடிக்காதா... அதான் மேட்டர் முடிச்சிட்ட இல்ல, அப்புறம் என்ன லூஸ்ல விடு' என்றுவிட்டு பாஸ்கருக்கு ஃபோன் போட்டு வினிதாவின் எண்ணைக் கொடுத்தான்.
‘பாஸ்கர் பாவம், நாலஞ்சு தடவை கேட்டுட்டான்...' என்றான்.
எக்ஸாம் போன இடம் தெரியவில்லை. இப்போது பாஸ்கரனுடன் சுற்றிக் கொண்டிருக்கிறாள்.
அதீதனும் வேறு ஒருத்தியைத் தேடத் துவங்கிவிட்டான்.//
எந்த ஒழுக்க விதிகளிலும் சார்போ நிலைப்பாடோ இன்றி நிகழ்வுகளை அதன் போக்கில் யதார்த்தத்துடன் புலம்பலும் துவேஷமுமல்லாத லேசாய் எடுத்துச்செல்லும் எள்ளல் நிரம்பிய சொல்வெளிகளின் தரிசனங்கள் அருமையாயிருக்கிறது.
இருப்பதை இல்லை என்று முடிவில்லாமல் சொல்லி வந்தால் ஒரு நாள் இல்லாமல் போகும் என்பது தான் இங்கு வழக்கம்...ஆனால் நீங்கள் சொல்லி விடுகிறீர்கள்...
வணக்கம்..29க்கு வெயிட்டிங்.
நிஜ வாழ்க்கையில இருக்கிற நண்பர்கள் மட்டும் இந்த மாதிரி வேண்டுகோள் வைச்சா, செருப்பால அடிக்க வர்றாங்களே?
ஆஸிப் பாய், பிரிட்ஜ்-ல சரக்கு இருக்கு, கெளம்பி வந்தீங்கன்னா முடிச்சிரலாம்!
ஓஹோ, நீங்க அந்த சரக்கை சொல்லலையோ?
சுந்தர்,
வறண்டு என்பது தானே சரி?
ங்கோத்தா இவன் தொல்லை தாங்க முடியலைடா-ன்னு அடிக்க வராதீங்க.
நன்றி, வெண்பூ. அர்ஜூன மச்சம் பத்திக் கேள்விப் பட்டிருக்கீங்களா :)
நன்றி, டாக்டர். அதீதனிடம் சொன்னது பென்சில்தான். நான் தான் கதைக்காக ரூபாய் நாணயம்னு மாத்தினேன். வினிதாகூட உங்களுக்கும் பழக்கமுண்டா :)
நன்றி, வால்பையன். இருக்காங்க, இருக்காங்க :)
நன்றி, இளா. இருந்தாலும் இருக்கும் :)
நன்றி, யாத்ரா.
நன்றி, அது சரி.
நன்றி, நர்சிம்.
நன்றி, ஜோ. மாற்றி விட்டேன் :)
//அந்தப் பழைய பிரபல மா வரிசை நாயகிகளை அறிமுகப்படுத்திய இயக்குனர்//
யார் இந்த இயக்குனர்..?
மா வரிசையில் வந்த நடிகைகள் யாரோ..?
அந்த பென்சில் எதற்கு..?
ம்ஹும்.. இந்த மாதிரிக் கதைகளைத் தொடர்ந்து படிக்கணும்னு அதுக்கே தனியா ஒரு அறிவு வேணும் போலிருக்கே..! முருகா..!
//சில மாதங்கள் கழித்து திடீரென்று ஒரு நாள் ‘எனக்கு செமஸ்டர் எக்ஸாம் ஆரம்பமாகப் போகுது. நிறையப் படிக்கணும், அதனால நாம இனிப் பழக வேண்டாம்' என்றாள்.//
ஆமா என்ன எக்ஸாமு??
\\
ம்ஹும்.. இந்த மாதிரிக் கதைகளைத் தொடர்ந்து படிக்கணும்னு அதுக்கே தனியா ஒரு அறிவு வேணும் போலிருக்கே..! முருகா..!
\\
உண்மைத்தமிழா உனக்கென்ன வேலை இங்கே?.
பக்தா ஏனிந்த ஈனப்பிழைப்பு. என் சன்னதிக்கு கூட மொட்டை போட வருவதில்லை. காமக்கதைப்படித்து களியாட்டம் போடுகிறாயா.
உன்னை எல்லாம் எப்படி பக்தனாக ஏற்றுக்கொள்வது. இதற்கு பழனிமலையிலிருந்து குதித்து நானே தற்கொலை செய்துகொள்ளலாம் 'போலி'ருக்கிறது.
அரகோரா போடும் வாய்க்கு பென்சில் கேட்கிறதா. பென்சில் ஜாக்கிரதை. பென்சிலை பிடித்துக்கொண்டே அலையாதே,யாராவது சீவிவிட போகிறார்கள்.
\\
அண்ணாச்சி என்னா மாடல் மொபைல் ப்ளூடூத்தோட வேண்டும் என்று சொல்லுங்க வாங்கி அனுப்பிவிடுகிறேன்!
\\
ஆந்திரா கேரளா மாடல்களும் சப்பளை செய்வீர்களா?
குரு/டாக்டர்,
எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும். உ.தமிழன் அண்ணாச்சி உண்மையிலேயே இவ்வளவு வெள்ளந்தியான ஆளா?
அனுஜன்யா
சுந்தர்,
எங்கள ஒரு வழியாக்காம விட மாட்டீங்க போல?
கிழ் உள்ளதை சிவாஜி வாய்ஸ் தோரணையில் படிக்க:
“இத படிக்க வேண்டாம்னு தோன்றது..
ஆனா இழுக்கறதே அது.. எது படிக்க வைக்கறது?..நேக்குத் தெரியலயே?”.,-.,=-,./,/
(இரும்புகிறேன்)
நன்றி, உண்மைத் தமிழன். இதில் எதற்கு முருகனை அழைக்கிறீர்கள், அவர் பதில் சொல்லுவாரென்றா :)
நன்றி, அத்திரி.
நன்றி, தண்டாயுதபாணி from பழனிமலை. நீங்க யாருன்னு எனக்குத் தெரிஞ்சுடுச்சே :)
நன்றி, குசுகுசு குசும்பன். இதுவமது :)
நன்றி, அனுஜன்யா. எனக்கும் அந்தச் சந்தேகமுண்டு :)
நன்றி, ரவிஷங்கர்.
ஆம்பிளை ஊர் மேஞ்சா பரவாயில்லை..பொம்பிளை மேஞ்சா தப்பா என்பது தான் இதன் சாரமா..
ஃஃஃஃஃ
அப்படியும் வைத்துக்கொள்ளலாம்(அந்த வைத்து அல்ல அல்ல அல்ல) என்று டகால்டி பின்னுட்டம் போட்டால், வினிதாவை உங்களிடம் அனுப்பிவிடுவோம்.
நன்றி, டிபிசிடி. யாராவது பதில் சொல்லட்டும் :)
//ஆம்பிளை ஊர் மேஞ்சா பரவாயில்லை..பொம்பிளை மேஞ்சா தப்பா என்பது தான் இதன் சாரமா.. //
யார் ஓவரா மேஞ்சாலும் நமக்கு காமக்கதை கிடைக்கும் என்பதே இதன் சாரம்சம்.
காமக்கதையில் என்ன எழுதினாலும் காமம் என்கிற ஒன்று கட்டிப்போட்டு நம்மை படிக்க வைத்துவிடும் என்பது உம்.
எனக்கு ஒரேயொரு ம வரிசை நடிகைதான் தெரியும், சொன்ன கதை உண்மை மாதிரித்தான் இருக்கு...
:)
சட்டென்று வேகம் மாற்றியிருக்கிறீர்கள்..
//ம்ஹும்.. இந்த மாதிரிக் கதைகளைத் தொடர்ந்து படிக்கணும்னு அதுக்கே தனியா ஒரு அறிவு வேணும் போலிருக்கே..! முருகா..!//
பிச்சிக்கிட்டு போனாலும் கதை படிக்கறத விடறதில்லை.. முருகா..முருகா..
அதீதன் உண்மையிலேயே அதிர்ஷ்டக்காரன்.. ம்ஹூஹூம்...
என்னுடைய மனசாட்சி, தமிழன் - கறுப்பி, கேபிள் சங்கர்... நன்றி.
Post a Comment