வானவில்லின் தோளேறி வந்து
ரசவாதக் குணப்படுத்தலுக்குக் காத்திருக்கும்
உயர் ரத்த அழுத்தத்திற்கு
டெல்ஸார்டன் 40 மி.கி.
இதயப் பாதுகாப்பிற்கு
எகோஸ்ப்ரின் 75 மி.கி.
மூத்திரத்தில் அல்பமின் அளவு கூடியதற்காய்
டெல்ஸார்டன் மாறி டெல்ஸார்டன் H 40 மி.கி.
கொழுப்பிற்கு ஒரு எழவு
கால் கை எலும்புகள் திடமாக இன்னொன்று
குடிக்காதே புகைக்காதே
அறிவுரைகள் கூடவே
மாத்திரை வில்லைகளே
கடவுளாகும் இடப்பெயர்ச்சி
கார்காலக் குறிப்புகள் - 60
2 days ago
19 comments:
தீதும் நன்றும் பிறர் தர வாரா---வாஹே குரு
தலைப்பே கவிதை..
நான் தலைப்பை மட்டும் பாக்காமல் படிச்சுட்டு கமெண்டுறேங்கோ..
பிரமாதாம்.
//
மாத்திரி வில்லைகளே
கடவுளாகும் இடப்பெயர்ச்சி
//
சுருக்கமா இருந்தாலும் ஆலகாலம் மாதிரி வீர்யமா இருக்கு...
நல்லா இருக்கு சார், எனக்கு பலர் ஞாபகத்துக்கு வருகிறார்கள்,,,,,
அப்பாடா! இப்ப தான் ஓரளவு உங்க கவிதை புரிஞ்சுது :-)
தலைப்பு பிடித்திருக்கிறது...
அப்புறம் கடவுளாகும் இடப்பெயர்ச்சி..
உடம்பை பார்த்துக்கோங்கண்ணா!
இடப்பெயர்ச்சி - பெயர்ச்சி
ரெண்டும் ஒன்னா?
//மாத்திரை வில்லைகளே
கடவுளாகும் இடப்பெயர்ச்சி//
rasiththeen
நூத்துக்கு நூறு உண்மை தலைவரே..
//
மாத்திரை வில்லைகளே
கடவுளாகும் இடப்பெயர்ச்சி
//
Excellent !!!
நேற்று இந்தியாவுக்கு விடுமுறைக்குச் சென்றுவந்த நண்பர் ஒருவர் மூலம் விகடன் வாசிக்ககிடைத்தது.
அதிலிருந்த தொலைந்த பருவம் பற்றிய உங்கள் கவிதைகளை வாசித்தேன். நல்ல அனுபவமாக இருந்தது. ரசித்தேன்.
//
குடிக்காதே புகைக்காதே
அறிவுரைகள் கூடவே
மாத்திரை வில்லைகளே
கடவுளாகும் இடப்பெயர்ச்சி
//
அற்புதமான வரிகள்.
குரு, நர்சிம், தேனியார், அது சரி, யாத்ரா, கிரி, தமிழன் - கறுப்பி, அதிஷா, மண்குதிரை, கேபிள் சங்கர், எ.அ. பாலா, ஜோ... நன்றி.
அருமை!
அருமையான கவிதை சுந்தர்.
எனக்கு ஏன் நன்றி சொல்லல நீங்க ?
ஒரு நோயாளியின் கோணத்தில் நன்றாக உள்ளது!
இவைகளை சாப்பிட்டால்
இடப்பெயர்ச்சியில்
கடவுளாவீர்கள்,
சாப்பிடவில்லையென்றால்
இங்கேயே
கடவுளாவீர்கள்!
கடவுளானவன்!
ஜோதிபாரதி, மணிகண்டன், தேவன்மயம், வால்பையன்... நன்றி.
Post a Comment