நான் டுவிட்டரில் சேரவில்லை. வேறொன்றும் இல்லை - இந்த 150 வார்த்தைகளுக்குள் கதையெழுதுக, 200 வரிகளுக்குள் இந்திய சுந்தந்திர வரலாற்றைப் பற்றிய சிறு குறிப்பு வரைக போன்ற கட்டுப்பாடுகள் எனக்கு 9ம் வகுப்புப் பரிட்சைத் தாள்களையே நினைவுபடுத்துகின்றன. அப்போதே வகுப்புகளைக் கட் அடித்துவிட்டு அருகிலிருக்கும் சினிமா தியேட்டருக்குச் சென்றுவிடுவேன். அப்படிச் செய்யும் நான் சில சமயங்களில் அம்பத்தூரில் இருக்கும் அழகப்பா நூலகத்திற்குச் சென்று புத்தகங்களும் படித்துக் கொண்டிருப்பேன் (ஆனால் நிச்சயமாக கடினாமான கணக்குச் சூத்திரங்களை அல்ல).
உடனே.. ஆஹா, இவன் 9ம் வகுப்புதான் படித்திருக்கிறான், இவனுக்கெப்படி சிக்கலான கலை இலக்கியச் சூத்திரங்கள் புரியும் எனச் சிலர் கேட்கலாம். என்ன செய்ய, எனக்கிருப்பது குருவி மண்டைதான். நான் படித்ததே +2 வரை... அதுவும் தத்தக்கா பித்தக்கா என்றுதான் முடித்தேன்.
IIM, IITல் படித்தவர்களுக்கோ அல்லது ஜப்பானிலோ சான் ஃபிரான்ஸிஸ்கோவிலோ வாழ்ந்துகொண்டு கடினமான சூத்திர வாய்ப்பாடுகளை மனனம் செய்து திண்ணைப் பேச்சாகப் பேசிக் கொண்டிருப்பவர்களுக்கோ சில விஷயங்கள் புரிவதில்லை. அதில் முக்கியமான ஒன்று : இலக்கியம் என்பது எளிமையானது என்பதுதான். இதற்கு பர்ரோஸிலிருந்து ஆரம்பித்து பாடம் நடத்தும் ஆசையை கஷ்டப்பட்டு அடக்கிக் கொள்கிறென். தர்க்கங்களாலேயே தங்களது மூளையை / மனதை வடிவமைத்துக் கொண்டவர்களுக்கு இது சர்வ நிச்சயமாய்ப் புரியாது.
நண்பர் ஒருவர், இவன்சிவன், சுரேஷ் கண்ணன், ரோசா வசந்த் மற்றும் இன்னும் சிலரின் டுவிட்டரின் திண்ணை அரட்டைப் பேச்சுகளின் இணைப்பைக் கொடுத்தார். (முதலிலேயே வேறொரு அனானி நண்பர் ரோசா வசந்தின் டுவிட்டர் எழுத்தின் இணைப்பைக் கொடுத்திருந்தார்).
விஷயம் பெரிதாக எல்லாம் ஒன்றுமில்லை. நான் பதிவிட்டிருந்த மூன்றாவது வகுப்பும் ஏழாவது வகுப்பும் பதிவைப் பற்றித்தான் காரசாரமாக வெற்றிலை எச்சில் தெறிக்க ‘விவாதித்துக்' கொண்டிருந்தார்கள்.
ஐயா, மகாஜனங்களே, அது நான் எழுதியதில்லை என்று முதல் பின்னூட்டத்திலேயே சொல்லிவிட்டேன். குறைந்த பட்சம் நான் எழுதிய ஏதாவது ஒன்றை எடுத்து வைத்துப் பேசியிருந்தாலும் கொஞ்சம் கெத்தாக இருந்திருக்கும் :). டுவிட்டரும் இணையத்தில்தான் இருப்பதால் அந்த 'விவாதங்களில்' பங்குபெறும் யாராவது பதிவில் இணைப்பு கொடுத்தால் எங்கள் தரப்பு விஷயங்களைச் சொல்ல ஏதுவாயிருக்கும்.
கழிவறை வாசகங்களை உயர்ந்த இலக்கியம் எனச் சொல்ல நான் ஒன்றும் மூடனில்லை. அதே சமயம், அப்படி யாரும் பாடுவதேயில்லை என்று சொல்ல முடியுமா என்ன? மூன்றாம் வகுப்பில் முதல் பாடலைப் பாடியது எவ்வளவு நிஜமோ அதே போல்தான் ஏழாம் வகுப்பில் பாடிய இரண்டாவது பாடலும். ஒரு சமூக ஆய்வாளனின் பார்வையோடுதான் அதைப் பதிவிட்டிருந்தேன். அதைப் பிறர் தங்களுக்கு விருப்பப்பட்டவாறு புரிந்துகொள்ளவோ அர்த்தப்படுத்திக்கொள்ளவோ செய்யலாம். அது பிரச்சனையில்லை.
ஒரு டுவிட்டர் (பதிவெழுதுபவர்கள் பதிவர், டூவிட்டர் எழுதுபவர்கள்? - தெரியாததால் டுவிட்டர் என்றே தொடர்கிறேன்), தன் குடும்பப் பெண்களின் பெயர்களை ஸ்ரீதேவிக்குப் பதிலாக எழுதுவார்களா என அறச் சீற்றம் கொண்டிருந்தார் (அவரது வெத்தலைக்குச் சுண்ணாம்பு கிடைக்காத கோபமோ என்னவோ). அப்படி என் குடும்பப் பெண்களின் பெயர்களை ஸ்ரீதேவிக்குப் பதிலீடாகச் செய்வதில் ஒன்றும் பிரச்சனையில்லை - ஆனால், பள்ளி மாணவர்கள் ஸ்ரீதேவி என்றுதானே பாடுகிறார்கள் என்று நானும் லாஜிக்கலாக மடக்கலாம்தான். ஆனால் எதற்கு வம்பு.. பிறகு டுவிட்டரை விட்டுவிட்டு துண்டுச் சீட்டில் எழுதி வைத்துக் கொண்டு தம்வீட்டின் அகலக் கண்ணாடி முன்நின்று வெவ்வவ்வே காண்பித்தாலும் காண்பிப்பார்கள். யாராவது ஏதாவது சொல்லப் போனால், உன் வீட்டில் இருப்பது குறுகிய எளிமையான சுவர், உனக்கெல்லாம் கண்ணாடியின் அருமை தெரியாது எனலாம்!
இதில் ரோசா தான் செம காமெடி (எனச் சொல்ல ஆசைப் படுகிறேன்). அவர் சொல்லியிருந்தது எனக்குப் பின்னூட்டமாக வந்தது :
/ஜ்யோவ்ராம் சுந்தர் எனக்கு இலக்கிய சுகுணா திவாகராக தெரிகிறார்; அவருக்கு எளிய அரசியல் சூத்திரங்கள், இவருக்கு அதே போன்ற இலக்கிய சூத்திரம்./
பதிவுலகத்திலிருந்து VRS வாங்கிக் கொண்டு போய்விட்டவர் ரோசா. ஆனாலும் அவ்வப்போது பென்ஷன் வாங்கவோ அல்லது பழைய பாசத்தில் இன்னமும் எழுதிக் கொண்டிருக்கும் நண்பர்களைப் பார்க்கவோ பதிவுலகிற்கு வந்து செல்பவர். அவருக்கென்ன பதில் சொல்ல என்று யோசித்தேன். நண்பரோ, ‘இப்படியெல்லாம் நீங்கள் இருக்கக்கூடாது, ஏதாவது பதில் சொல்லாவிட்டால் உங்களது புகழுக்கு ஹாரம் வந்துவிடும்' என்றார். இன்னொருவர், ரோசா கையில் கத்தியுடன் யாருடைய குறியையோ அறுக்க இணையப் பக்கங்களில் அலைந்ததைச் சொல்லிக் கிலியூட்டினார். ம்ஹூம்; எனக்குப் பயமாயிருக்கிறது - நான் ஒப்புக் கொள்கிறேன் - ரோசா சொன்னதெல்லாம் 100% உண்மையானதுதான். தொடருங்கள் ரோசா உங்களது இரண்டு வரித் தீர்ப்புகளை...
(பதிவின் தலைப்பில் மம்மி என்ற வார்த்தை இருப்பதால் மம்மி ரிடர்ன்ஸ் பார்ட் III என்று யாராவது வாசித்தால் நான் பொறுப்பல்ல. உடனே 'இதுவும் உம்பர்டோ ஈகோ உபயோகித்த உத்திதான், அதான் சொல்கிறேனே ஜ்யோவ்ராம் சுந்தருக்கு எல்லாமே எளிய சூத்திரங்கள்தாம்' என்று தீர்ப்பு எழுதிவிடாதீர்கள் சாமிகளா!).
கார்காலக் குறிப்புகள் - 58
2 days ago
40 comments:
இந்த ஏரியாவில் இந்த பொடியனுக்கென்ன வேலை என்று நினைக்கவேண்டாம்.
நன்பர் ரோசா, ஜப்பானில் குழந்தை குஞ்சைக்கூட வெளியில் காட்டமுடியாமல் இந்த டைப்பர் உறுத்துகிறதே என்று எழுதியதாக நியாபகம்.
அதற்கு நான் போய் என்ன அய்யா குஞ்சு என்றெல்லாம் எழுதுகிறீர்கள் என்று டென்ஷன் ஆனேன்.
அதாவது நான் பதிவுலகிற்கு புதிதாக வந்த காலம். கட்டுடைப்பு எல்லாம் அடியேனுக்கு அறிமுகமாகாத குழந்தைப்பருவம்..
குஞ்சு என்று எழுதலாம், புண்டை என்று எழுதக்கூடாதா ? என்ன கொடுமை அய்யா ? இது ஆணாதிக்கம் இல்லையா ?
இந்த கருமாந்திரம் எல்லாம் எனக்கு நியாபகம் வந்து தொலைந்ததால் இந்த பின்னூட்டம். பாப்பா ஆய் போயிருச்சு. பின்னூட்டத்துக்கு பதில் எதுவும் சொல்லியிருந்தால் தெரியப்படுத்தவும்
நல்லவேளையா பின்னூட்டம்ல அனுஜன்யா வந்து அந்த கவிதைக்கு விளக்கம் கொடுத்தாரு. இல்லாட்டி இந்த மரமண்டைக்கு அந்த கவிதையும் புரிஞ்சி இருக்காது !
நண்பர் ரோசா வசந்தின் எழுத்துக்களின் மேல் மிகுந்த மரியாதை வைத்திருந்தேன் . முதன் முதலில் அவரை சந்தித்த போது கடற்கரை சந்திப்பு சாருவின் சிஷ்யர் என்று எவரோ அறிமுகப்படுத்த அவர் உடனே கேட்டார் சாருவுக்கு எத்தனை ரூபாய்க்கு சரக்கு வாங்கிக்கொடுத்தீர்கள் என்று :)
அதே ரோசா சாருவின் ஸீரோ டிகிரி உரையாடலில் :) வந்திருந்த எல்லோரையும் தாண்டி நேரடியாக சாருவை புகழ்ந்து ஐஸ் வைத்துக் கொண்டிருந்தார்
என்னத்தை சொல்ல இலக்கிய சூத்திரம் இருந்தா என்ன இல்லாட்டி என்ன ?
வாங்கிற பென்சனுக்கு எதும் சொல்லிட்டு போகட்டும் விடுங்க :)
இந்த வாரம் சண்டை வாரமா?
ஜ்யோவ்,
இது என்ன சண்டை/சர்ச்சைகள் வாஆஆஆரம் என்றில்லாமல் மாஆஆஆஆதம் ஆகிவிடும் போல இருக்கே.
இப்படி பதப்படுத்தப்பட்டால், என்னைப் போன்ற அப்பாவி ஜீவன்கள், சகஜ நிலை திரும்பி, இலக்கியமும், மொக்கைகளும் மலரும்போது, 'ஆவ்வ்' என்று கொட்டாவி விடும் அபாயம் இருக்கிறது. எங்கடா இந்த வாரத்துச் சச்சரவு என்று தேடத் துவங்குவோம்.
Aside, பேசாமல் நீங்களும் ட்விட்டருக்கு மாறி விடுங்களேன் :)
அனுஜன்யா
vote போட்டேன்.
அடுத்த ஆட்டம் ஆரம்பமா?
வெற்றியோடு திரும்பி வர வாழ்த்துக்கள்!
பாலபாரதி கட்டைவிரலை கீறி வெற்றி திலகம் உடல் முழுவதும் இட்ட பின் களத்துக்கு செல்லவும்!!!
இந்த இலக்கியவாதிங்க சும்மாவே இருக்கமாட்டீங்களா எப்ப பாரு சண்டைப்போட்டுகிட்டு.. பதிவர்கள பாருங்க எப்படி ஒற்றுமையா விக்ரமன் பட அண்ணன் தம்பியா இருக்காங்கனு.
அவங்கள பாத்தாவது திருந்துங்க
லாலாலா
லால
லாலாலா
// தர்க்கங்களாலேயே தங்களது மூளையை / மனதை வடிவமைத்துக் கொண்டவர்களுக்கு இது சர்வ நிச்சயமாய்ப் புரியாது//
சுந்தர், சூப்பர்.
:)))
‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்
என்னமோ போங்க...!
:)
இமோஜின்னின் பிறந்தநாளில் கேத்தலீனோடு மதுவருந்தி எரினோடு படுக்கச் செல்வதில் ஏதேனும் தவறா?
அனுஜன்யா சொல்வதை அப்படியே என் கருத்தாகவும் எடுத்துக் கொள்ளவும்
சாரு வாழ்க....
ஆஹா.. இன்னொரு சண்டையா..?
இப்பத்தான் ஆரம்பிக்குதா..?
நல்லது நடத்துங்க சுந்தர்..
ஒரே நாள்ல போன மேட்டர் முடிஞ்சதுனால போரடிக்குது..!
பாவம் ரோசாவசந்த்..! உங்களைப் பத்தி சரியாத் தெரியாதோ என்னவோ..?!!!
இமோஜின்னின் பிறந்தநாளில் கேத்தலீனோடு மதுவருந்தி எரினோடு படுக்கச் செல்வதில் ஏதேனும் தவறா
தவறே இல்லை பொட்டீ...ஆனால அதை மப்படித்துவிட்டி ஏதாவதொரு பின்னூட்டத்தில் உளறிவிடுவது தப்பு. பின்னால் வரும் ஆப்பு..
ஆகா, அருமை,, இந்தவாரப் பொழுதும் அருமையாக விடிகிறது.. நல்லா அடிச்சு ஆடுங்கப்பா ..
சண்டையை ரசிக்க காத்திருக்கிறேன்...........
யாராவது கண்டண பதிவு போடுவாங்களே!
//
அதே சமயம், அப்படி யாரும் பாடுவதேயில்லை என்று சொல்ல முடியுமா என்ன?
//
நான் பாடியிருக்கிறேன்...எனக்கு தெரிந்து சுமார் முன்னூறு நானூறு பேர் பாடியிருக்கிறார்கள்...
சம்மன் அனுப்பினால், சாட்சி சொல்ல நான் தயார்...
ஒரு வேளை பின்னாளில் நான் பிரிட்டிஷ் பிரதமராக பதவி ஏற்று, ஓய்வு பெற்றால், என் வாழ்க்கை வரலாற்றை வெளியிட உத்தேசம்....புத்தகத்தின் பெயர் "ஜிகுஜிக்கு ஜிகுஜிக்கு ஜிக்காங்...."
//IIM, IITல் படித்தவர்களுக்கோ அல்லது ஜப்பானிலோ சான் ஃபிரான்ஸிஸ்கோவிலோ வாழ்ந்துகொண்டு கடினமான சூத்திர வாய்ப்பாடுகளை மனனம் செய்து திண்ணைப் பேச்சாகப் பேசிக் கொண்டிருப்பவர்களுக்கோ சில விஷயங்கள் புரிவதில்லை. அதில் முக்கியமான ஒன்று : இலக்கியம் என்பது எளிமையானது என்பதுதான்//
வன்மையாகக் கண்டிக்கிறேன். கார்பரேஷன் பள்ளியோடத்துல படிச்ச எனக்கும் கடினமாத் தான் இருக்கு. :))
//இந்த ஏரியாவில் இந்த பொடியனுக்கென்ன வேலை என்று நினைக்கவேண்டாம்.//
அடிங்க.. நான் மட்டும் தான் பொடியன்.
பின்னூட்டம் சேகரிக்கும் பணிக்காக
//நண்பர் ஒருவர், இவன்சிவன், சுரேஷ் கண்ணன், ரோசா வசந்த் மற்றும் இன்னும் சிலரின் டுவிட்டரின் திண்ணை அரட்டைப் பேச்சுகளின் இணைப்பைக் கொடுத்தார். //
எனக்கு தலையும் காலும் புரியவில்லையா அல்லது மற்றவர்களுக்கா என்று கூட விளங்கவில்லை. முதலில் சுரேஷ் கண்ணன், இவன் சிவன் மற்றவர்களுடன் நான் அரட்டை எதுவும் அடிக்கவில்லை; அடிக்காத அரட்டையில் கருத்து எதுவும் சொல்லவில்லை.
மேலே செந்தழல் சொன்னது போல் குஞ்சு என்று சொல்லலாம் புண்டை என்று சொல்லக்கூடாது என்று பொருள்படும் கருத்து எதுவும் எந்த இடத்திலும் இதுவரை என் வாழ்க்கையில் நான் சொல்லவில்லை; அப்படி ஒரு கருத்தும் கிடையாது. ஜ்யோவ்ராம் பற்றி சொன்ன கருத்து சாருவிற்கு பரிந்து அவர் எழுத்திய பதிவை பற்றியது-அதை பற்றி மட்டுமே. அவருடைய மற்ற பதிவுகளுக்கும் அந்த ஒருவரி விமரசனத்திற்கும் தொடர்பு கிடையாது -அதை படிக்கவும் இல்லை. ஒரு வரியில் சொன்ன விமர்சனத்திற்கு பின்னால் உள்ள என் நீண்ட கருத்துக்களை தேவை என்று தோன்றினால் எழுத நேரிடலாம். இப்போது இந்த பதிவை படிக்கும் போது தேவை என்றும், அதனால் பயன் இருக்கும் என்றும் தோன்றவில்லை.
சாருவை ஐஸ் வைக்கும் அவசியம் எனக்கு இருப்பதாக தெரியவில்லை. கவனமாகவே அவருடன் நான் நட்பு வைத்துக்கொள்ளவில்லை. ஆனால் ஜீரோ டிகிரி குறித்தும் (சாருவின் மற்ற எழுத்துக்கள் அல்ல) ஃபேன்ஸி பனியன் குறித்தும் அவை முக்கிய இலக்கிய ஆக்கங்கள் என்ற கருத்து உண்டு. ஆனால் அந்த கூட்டத்தில் அப்படி ஒரு கருத்தை கூட நான் சொல்லவில்லை. ஒருவர் சாரு தன் மனைவி குறித்து ஆபாசமாக எழுதவில்லையே என்பதாக முன்வைத்து பேசியதை, எம்.எஃப். ஹுஸைனின் ஓவியத்தை முன்வைத்து இந்துத்வாவின் ஒரு தர்கத்துடன் தொடர்பு படுத்தி ஒரு வரி பேசினேன். அது யாருக்கும் அங்கே புரிந்ததாக எனக்கு தோன்றவில்லை. அந்த ஒற்றை கருத்தை சாருவுக்கு நான் வைத்த ஐஸ் என்பதாக திரிக்கும் கென்னின் அறிவு மற்றும் நேர்மையுடன் உரையாடுவது எனக்கு சாத்தியமில்லை. பொதுவான தெளிவிற்காக இந்த பின்னூட்டம்.
ரோசா,
1. உங்கள் விமர்சனம் குறிப்பிட்ட அந்த சாரு இடுகைக்கானது என்பது எனக்குத் தெரியவில்லை. அதற்கான குறிப்பும் உங்களுடைய டுவிட்டர் இடுகையில் இல்லை.
2. நீங்கள் இப்போது குறிப்பிடும் அந்தப் பதிவு பைத்தியக்காரனின் கிசுகிசு பாணியிலான பதிவுக்கான எதிர்வினை. அதிலிருந்து நீங்கள் இவ்வாறான முடிவுக்கு வந்தது எனக்கு ஆச்சரியமே - அதுவும் மற்ற எதையும் படிக்காமலேயே!
கென்னின் அறிவு மற்றும் நேர்மையுடன் உரையாடுவது எனக்கு சாத்தியமில்லை
:)
ரோசா அளவுக்கு எனக்கு அறிவு நேர்மை எதுவுமில்லை ஆனாலும் எவ்வளவு ரூபாய்க்கு சரக்கு வாங்கி கொடுத்தேன் என்று என்னிடம் நேரடியாக கேட்டதை மட்டும் தெளிவாக தவிர்த்து விட்டு பதிலளித்த திறமைக்கு முன் நான் எல்லாம் சும்மா :)
மற்றபடி எனக்கு அறிவில்லை என்பதை ஒப்புக்கொள்வதில் எந்த தயக்கம் எனக்கு எப்போதும் இல்லை ரோசா :)
கென்,
̀நான் எல்லாரையும் தாண்டி சாருவிற்கு ஐஸ் வைத்தேன்' என்று அப்பட்டமாக நீங்கள் புளுகியதை பற்றி பேசுவது எனக்கு முக்கியமாக பட்டது. அந்த கூட்டத்தில் நான் பேசிய கருத்தை முக்கியமானதாக நினைக்கிறேன். அது எனக்கு நினைவும் இருக்கிறது என்பதால் அதை பற்றி பதில் சொன்னேன்.
கடற்கரை கூட்டத்தில் சாரு பற்றி உங்களிடம் என்ன பேசினேன் என்பது எனக்கு நினைவில்லை. தனிப்பட்ட முறையில் சொன்னதை என்னிடம் அனுமதி வாங்காமல், சுமார் ஒன்றரை வருடம் கழித்து, உங்கள் நினைவில் இருந்து பதிவில் எழுதுவது அநாகரிகம் என்பது கூட புரியாத உங்களிடம் நான் என்ன பேசமுடியும்! நான் சொல்லயிருக்க கூடியது அரசியல்ரீதியான கருத்து அல்ல. கிண்டலாக சொல்லியிருக்கலாம், வேறு ஏதாவது சொல்லி உங்களுக்கு வேறுவிதமாக புரிந்து இருக்கலாம். நீங்கள் சொல்லுவது போல கூடவும் சொல்லியிருக்கலாம், அப்படியிருந்தாலும் ரொம்ப அநியாயமாக ஏதோ சொல்லிவிட்டதாக எனக்கு தோன்றவில்லை. இது குறித்து பேச எதுவும் இல்லாததால் அதை தொடவில்லை.
ஜ்யோவ்,
சுகுணாவுடன் உங்களை ஒப்பிட்டது மோசமானதாக உங்களூக்கு தோன்றுகிறதா என்று எனக்கு தெரியவில்லை; நான் அப்படி நினைக்கவில்லை. சுகுணாவின் அரசியல் கருத்துக்களையும் உங்கள் எழுத்துக்களையும் பொதிவானதாகவே பார்கிறேன்.
சாருவை ஆதரித்து நீங்கள் எழுதிய இரண்டு பதிவுளில் உள்ள ஒரு குறிப்பிட்ட தன்மை, சுகுணாவின் கெட்டவார்த்தை தொடர்பாக போலி டோண்டுவை ஆதரித்தது போன்றவற்றை ஒருவகையில் நினைவு படுத்தியது.
//கார்க்கி said...
பின்னூட்டம் சேகரிக்கும் பணிக்காக
//
ரிப்பீட்டேய்...
கடற்கரை கூட்டத்தில் சாரு பற்றி உங்களிடம் என்ன பேசினேன் என்பது எனக்கு நினைவில்லை. தனிப்பட்ட முறையில் சொன்னதை என்னிடம் அனுமதி வாங்காமல், சுமார் ஒன்றரை வருடம் கழித்து, உங்கள் நினைவில் இருந்து பதிவில் எழுதுவது அநாகரிகம் என்பது கூட புரியாத உங்களிடம் நான் என்ன பேசமுடியும்! நான் சொல்லயிருக்க கூடியது அரசியல்ரீதியான கருத்து அல்ல. கிண்டலாக சொல்லியிருக்கலாம், வேறு ஏதாவது சொல்லி உங்களுக்கு வேறுவிதமாக புரிந்து இருக்கலாம். நீங்கள் சொல்லுவது போல கூடவும் சொல்லியிருக்கலாம், அப்படியிருந்தாலும் ரொம்ப அநியாயமாக ஏதோ சொல்லிவிட்டதாக எனக்கு தோன்றவில்லை.
:)
உங்கள் பதில் அளிக்கும் திறமைக்கு முன்னால் என்னால் நிற்க முடியாது.
மற்ற படி அநியாயமாக எதுவும் சொல்லாத நிலையில் எவரிடமும் நான் அனுமதி வாங்கத்தேவையில்லை.
விமர்சிக்கப்பட்டது குறித்தல்ல விமர்சனம் குறித்தே எழுதினேன். தனிப்பட்ட அனுமதி வாங்க எந்த தேவையும் இல்லை. உண்மையை ஒப்புக்கொள்ள மனம்தான் தேவை
சபாஷ்..
எனக்கு தலையும் காலும் புரியவில்லையா அல்லது மற்றவர்களுக்கா என்று கூட விளங்கவில்லை. முதலில் சுரேஷ் கண்ணன், இவன் சிவன் மற்றவர்களுடன் நான் அரட்டை எதுவும் அடிக்கவில்லை; அடிக்காத அரட்டையில் கருத்து எதுவும் சொல்லவில்லை.
மேலே செந்தழல் சொன்னது போல் குஞ்சு என்று சொல்லலாம் புண்டை என்று சொல்லக்கூடாது என்று பொருள்படும் கருத்து எதுவும் எந்த இடத்திலும் இதுவரை என் வாழ்க்கையில் நான் சொல்லவில்லை; அப்படி ஒரு கருத்தும் கிடையாது. ஜ்யோவ்ராம் பற்றி சொன்ன கருத்து சாருவிற்கு பரிந்து அவர் எழுத்திய பதிவை பற்றியது-அதை பற்றி மட்டுமே. அவருடைய மற்ற பதிவுகளுக்கும் அந்த ஒருவரி விமரசனத்திற்கும் தொடர்பு கிடையாது -அதை படிக்கவும் இல்லை. ஒரு வரியில் சொன்ன விமர்சனத்திற்கு பின்னால் உள்ள என் நீண்ட கருத்துக்களை தேவை என்று தோன்றினால் எழுத நேரிடலாம். இப்போது இந்த பதிவை படிக்கும் போது தேவை என்றும், அதனால் பயன் இருக்கும் என்றும் தோன்றவில்லை.
சாருவை ஐஸ் வைக்கும் அவசியம் எனக்கு இருப்பதாக தெரியவில்லை. கவனமாகவே அவருடன் நான் நட்பு வைத்துக்கொள்ளவில்லை. ஆனால் ஜீரோ டிகிரி குறித்தும் (சாருவின் மற்ற எழுத்துக்கள் அல்ல) ஃபேன்ஸி பனியன் குறித்தும் அவை முக்கிய இலக்கிய ஆக்கங்கள் என்ற கருத்து உண்டு. ஆனால் அந்த கூட்டத்தில் அப்படி ஒரு கருத்தை கூட நான் சொல்லவில்லை. ஒருவர் சாரு தன் மனைவி குறித்து ஆபாசமாக எழுதவில்லையே என்பதாக முன்வைத்து பேசியதை, எம்.எஃப். ஹுஸைனின் ஓவியத்தை முன்வைத்து இந்துத்வாவின் ஒரு தர்கத்துடன் தொடர்பு படுத்தி ஒரு வரி பேசினேன். அது யாருக்கும் அங்கே புரிந்ததாக எனக்கு தோன்றவில்லை. அந்த ஒற்றை கருத்தை சாருவுக்கு நான் வைத்த ஐஸ் என்பதாக திரிக்கும் கென்னின் அறிவு மற்றும் நேர்மையுடன் உரையாடுவது எனக்கு சாத்தியமில்லை. பொதுவான தெளிவிற்காக இந்த பின்னூட்டம்.
////////////////////
சார்...
பெரிய சண்டையா ஆவும்னு நெனைச்சேன் சார் இந்த புண்டை மேட்டர்...
இப்படி ச்சப்புனு பூடுச்சே..ரூம் போட்டு அழுவப்போறேன்...
//நண்பர் ஒருவர், இவன்சிவன், சுரேஷ் கண்ணன், ரோசா வசந்த் மற்றும் இன்னும் சிலரின் டுவிட்டரின் திண்ணை அரட்டைப் பேச்சுகளின் இணைப்பைக் கொடுத்தார். //
ஐயா,இவன்சிவனைப் படிப்பதற்கு நன்றி. சுரேஷ்கண்ணன் இணையம் மூலம் அறிமுகமான நல்ல நண்பர். பல வருடங்களாக அவரை அறிவேன். இந்தியாவிற்குச் சென்ற போது ஒன்றுக்கு மேற்பட்ட முறைகள் சந்தித்திருக்கிறேன். என்னுடைய உள்வட்ட இணையக் குழுமங்களில் உறுப்பினர். நன்றாக அறிந்தவர் என்ற முறையில் அவர் தங்கள் பதிவுக்கு இட்டப் பின்னூட்டம் பற்றி எனக்கிருந்த கருத்துகளை டிவிட்டரில் அவர் உங்கள் பதிவுக்கு இட்ட கருத்துக்கு முரண்பாடான கருத்தொன்றைச் சொல்வதுபோல எனக்குத் தோன்றியபோது பகிர்ந்து கொண்டேன். நண்பர் டைனோவும் சுரேஷ்கண்ணனிடம் பேசினார்.
உங்களைப் பற்றிப் பற்றிப் பேசும் அளவுக்கு எனக்கு உங்களைத் தெரியாது. உங்களின் பதிவைப் பற்றிப் பேசுமளவுக்கு அந்தப் பதிவு எனக்கு முக்கியமானதாகப் படவும் இல்லை. மேலும், நன்றாகத் தெரிந்தவர்களிடையே இலக்கியம்/அரசியல் பேசினாலே சண்டை வருகிறது சுவாமி. ஆதலால்,நன்றாகத் தெரியாதவர்களிடம் நான் அதிகம் பேசுவதில்லை. இந்த அணுகுமுறை தவறாக இருக்கலாம். வேறு நல்லவழி தெரிந்தால் மாற்றிக் கொள்கிறேன். நன்றி.
அன்புடன், பி.கே. சிவகுமார்
அன்புள்ள சுந்தர்,
பின்னூட்டம் மிக நீண்டுவிட்டதால் இதை தனிப் பதிவாக இடுகிறேன். http://pitchaipathiram.blogspot.com/2009/07/blog-post_13.html
http://enninavinveliyilnan.blogspot.com/2009/07/blog-post_06.html
சும்மா ஒரு கும்மிக்காக
:)
///செந்தழல் ரவி said...
குஞ்சு என்று எழுதலாம், புண்டை என்று எழுதக்கூடாதா?///
///சார்... பெரிய சண்டையா ஆவும்னு நெனைச்சேன் சார் இந்த புண்டை மேட்டர்... இப்படி ச்சப்புனு பூடுச்சே..ரூம் போட்டு அழுவப் போறேன்...///
சுந்தர்..
இந்த மாதிரி கருமாந்திரம் புடிச்ச பின்னூட்டத்தையெல்லாம் டெலீட் பண்ணித் தொலையக் கூடாதா..?
இப்படியெல்லாம் செஞ்சுதான் நீங்க இலக்கியவியாதின்னு பேர் வாங்கணுமா..?
நீங்க அனுமதிக்கிறதாலதான் அந்த கபோதி இப்படி எழுதுறான்..!
என்னவோ போங்க..!
உ.தமிழன். நீங்க ரொம்ப நல்லவர்னு எல்லாருக்குமே தெரியுமே :)
சக மனிதரை கபோதி என்று திட்டுவதைவிட குறிப்பிடப்பட்ட அந்த வார்த்தைகளில் வன்முறை அதிகமொன்றுமில்லை.
அப்புறம், அது என்ன ஆனா ஊன்னா இலக்கியவியாதி... நான் யாரையும் பின்னூட்டவியாதி, பதிவுவியாதி என்று திட்டுவதில்லை. தயவுசெய்து என்னுடைய பக்கத்திலாவது இம்மாதிரியான வார்த்தைகளைத் தவிர்க்கவும்.
உ.தமிழன். நீங்க ரொம்ப நல்லவர்னு எல்லாருக்குமே தெரியுமே :)
சக மனிதரை கபோதி என்று திட்டுவதைவிட குறிப்பிடப்பட்ட அந்த வார்த்தைகளில் வன்முறை அதிகமொன்றுமில்லை.
அப்புறம், அது என்ன ஆனா ஊன்னா இலக்கியவியாதி... நான் யாரையும் பின்னூட்டவியாதி, பதிவுவியாதி என்று திட்டுவதில்லை. தயவுசெய்து என்னுடைய பக்கத்திலாவது இம்மாதிரியான வார்த்தைகளைத் தவிர்க்கவும். \\
வரிக்கு வறி.. வெறியோடு வழிமொழிகிறேன்..
"தீர்ப்பு எழுதி விடாதீர்கள்?!?"
இவன் நல்லவன், அவன் கெட்டவன், இவன் புத்திசாலி, அவன் மடையன் என்று ஏதாவது ஒரு தீர்ப்பு சொல்லிக் கொண்டே இருப்பது தான் இந்தியர்களின் தலையாய கடமை.
இணையத்தில் அவதூறு பேசுபவர்களுக்கெல்லாம் விளக்கம் சொல்ல வேண்டும் என்றால் அதற்கு உங்களுக்கு இன்னும் இரண்டு வாழ்க்கை தேவைப்படும், சுந்தர். அப்புறம் உங்க இஷ்டம்!
பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.
Post a Comment