யாரும் சொல்லித்தரவில்லை
தூத்துக்குடி துர்க்காவின்
துரோகம் இப்படித்தான்
இருக்குமென்று
இறந்து போன மாமாவின்
இரண்டாவது அத்தை
கட்டித் தொங்கவிடப்பட்டது
இன்றுவரை யாரும்
வாய்திறக்கவில்லை
பெரிய தம்பியின் சின்ன வீட்டு
விஷயம் பெற்றோருக்கே தெரியாது
வழக்கின் தீர்ப்பு
வாய்க்கரிசிக்கும் மிஞ்சாது என
வக்கீலுக்கு முன்னரே
எனக்குத் தெரிந்தது
கங்கை கொண்டான் பேருந்தின்
கடைசி இருக்கையில்
வாந்தி எடுக்கப்பட்டுள்ளதை
எச்சரித்தார் எவருமில்லை
நான் உட்காரும்வரை
எவரும் குறிப்பிடவில்லை
இசக்கியம்மன் சாமியாடி
வேண்டியவருக்கு மட்டும்தான்
குறிசொல்வாள் என்பதை
சபை நடுவே சப்தமில்லாக்
குசு போடும் நாசூக்கு
நவின்றார் எவர்
எனினும்
அசைபோட பசுவய்யா கவிதை
என்றிருந்தவனை
எல்லோரும் சொன்னார்கள்
இவன் எங்கே
உருப்படப் போறான் என்று
குமார்ஜி எழுதியது
கார்காலக் குறிப்புகள் - 58
2 days ago
25 comments:
கைப்புண்ணுக்குக் கண்ணாடியா? கவிதை பிடித்தால்/படித்தால் எங்கே உருப்படுவது என்பது அரிச்சுவடி பருவத்திலேயே சொல்லிக் கொடுக்கிறார்கள் போல!
Jokes apart, கவிதை - மொழியின் கொதிநிலை (நன்றி: பெருந்தேவி) என்பதால், நிறைய பேருக்கு தாங்க முடியாத சூடாக இருக்கிறதோ என்னமோ :)
நல்லா இருக்கு குமார்ஜி.
அனுஜன்யா
கலக்கல்
அனுஜன்யா & மஞ்சூர் ராசா - நன்றி.
குமார்ஜி அவர்களின் கவிதைகள் ரொம்பப் பிடித்திருக்கிறது, பகிர்விற்கு மிக்க நன்றி.
நல்லதொரு பகிர்வு.
கலக்கல் கவிதை
//வழக்கின் தீர்ப்பு
வாய்க்கரிசிக்கும் மிஞ்சாது என
வக்கீலுக்கு முன்னரே
எனக்குத் தெரிந்தது//
அனைவருக்குமே தெரியும்
மற்றய வரிகள் இயல்பாய்.......
ஒன்னும் புரில.. இரெண்டு வாட்டி தான் படிச்சேன். ஒரு நாலஜ்ஜி வாட்டி படிச்சிட்டு சொல்றேன்.
குமார்ஜி- இவரின் அத்தனை கவிதைகளும் மிக அருமை. பகிர்வு மற்றும் உங்களின் பரந்த மனத்திற்கு பல நன்றிகள் சுந்தர்.
நாஞ்சில் நிலம் பற்றி அவரது கவிதை இருந்தால் பகிரவும்.
"கவிதை பிடித்தால்/படித்தால் எங்கே உருப்படுவது என்பது அரிச்சுவடி பருவத்திலேயே சொல்லிக் கொடுக்கிறார்கள் போல! "
Anujanya:
Even if it was meant as a joke it not a valid stereotyping..Let me quote a few people who are into poetry: Vajpai, Gujral, MK, Obama..
And even our successful entrepreneur Jyovram or an ok entrepreneur like me..
I think those who confuse (love) poetry and their own hormones might fall into the genre, u might say..but even that is a phase isnt it?
I respect people who read poetry because they have emotional intelligence. I feel they are more bound to be successful in leadership roles, if they wish to..
ps: your statement was an observation on reinforcing a misconception, hence my angst on the misconception
//
யாரும் சொல்லித்தரவில்லை
தூத்துக்குடி துர்க்காவின்
துரோகம் இப்படித்தான்
//
//
அசைபோட பசுவய்யா கவிதை
என்றிருந்தவனை
எல்லோரும் சொன்னார்கள்
இவன் எங்கே
உருப்படப் போறான் என்று
//
கலக்கல் என்று சொல்வது வழக்கமான வார்த்தை....ஆனால் வேறு எப்படி சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை!
நல்லா இருக்குல்ல சுந்தரா...பழைய form க்கு வந்துட்டான் போல...சொல்ல போனால்,கூடுதலாக கூட!எல்லாத்துக்கும் நீயும் ஒரு காரணம்.நன்றிடா,நண்பா.
சுந்தர்,
கவிதை நன்றாக இருக்கிறது.
“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்
\\யாத்ரா said...
குமார்ஜி அவர்களின் கவிதைகள் ரொம்பப் பிடித்திருக்கிறது, பகிர்விற்கு மிக்க நன்றி.\\
இவரு ரொம்ப நல்லவரு போல..எத சொன்னாலும் நம்புறாரு.
:)
\\D.R.Ashok said...
ஒன்னும் புரில.. இரெண்டு வாட்டி தான் படிச்சேன். ஒரு நாலஜ்ஜி வாட்டி படிச்சிட்டு சொல்றேன்.\\
ஸேம் பிளட்...!
\\ராம்ஜி.யாஹூ said...
நாஞ்சில் நிலம் பற்றி அவரது கவிதை இருந்தால் பகிரவும்.\\
ஹையா..அடுத்த "மயிரு போற்றுதும், மயிரு போற்றுதும்" ரெடி..
நைனா, ஆர் யூ ரெடி...?
pa ra-vin pinnuttam pola rompa nerukkamaa irukku
குமார்ஜி சுந்தர்
கவிதை கட்டித் தொங்கவிடப்பட்டது
வாய்க்கரிசி
வாந்தி
குறி இசக்கியம்மன்
இன்றுவரை யாரும்
வாய்திறக்கவில்லை
சாமியாடி பசுவய்யா
துர்க்காவின்
குடிதூத்து
துரோகம்
கவிதை
நவின்றார்
அசைபோட
அன்பின் ரானின்,
ஒவ்வொரு கவிதை ரசிப்பவருக்கும் கவிதை என்றால் காத தூரம் ஓடுபவர்கள் குறைந்தபட்சம் பத்து பேர் இருக்கிறார்கள்.
I know your angst is against this misconception. Thats precisely what I also observed in a sarcastic way.
கவிஞர்கள் பொதுவாக மென்மையாகவும், உணர்ச்சி வயப்படுபவர்களாகவும் இருப்பதை நாம் பார்க்கிறோம். To the limited extent of my experience, I feel poets have a low quotient on Sense of Humour, while they score very high on issues that affect public at large. Again its not a generalization but only my view - still my firm view. I say this not on their individual behaviour or acts. Only based on what they write.
முன்னணி எழுத்தாளர்களான சாரு, ஜெமோ கூட அவ்வப்போது கவிதையை பகடி செய்வதை நாம் பார்க்கிறோம். அவர்களை எப்போதும் படிக்கும் வாசகர்களுக்கு அது ஒரு நகைச்சுவைக்காக எழுதியது என்றும், அவர்கள் கவிதைகளையும் பெரிதும் ரசிப்பவர்கள் என்றும் தெரியும். ஆனால் எப்போதாவது அந்தப் பதிவை மட்டும் படிப்பவர்களுக்கு இவர்களுக்கு கவிதை என்றால் ஏன் இவ்வளவு இளப்பம் என்றும் தோன்ற வாய்ப்புள்ளது.
Talking of entrepreneurs with interest in poems like you and Jyov, believe Vadakarai Velan and Pon.Vasudevan (Aganazhigai) also belong to the same breed. May be I should think of becoming one too. Who knows, I may start writing good poems then :)
அனுஜன்யா
கவிதை Superb..குமார்ஜிக்கு வாழ்த்துக்கள்..
//அனுஜன்யா said...
ஒவ்வொரு கவிதை ரசிப்பவருக்கும் கவிதை என்றால் காத தூரம் ஓடுபவர்கள் குறைந்தபட்சம் பத்து பேர் இருக்கிறார்கள்.//
அன்பின் அய்யா, கவிதை வாசிப்பவர்களை/எழுதுபவர்களை வியப்புடன் பார்ப்பவர்கள் 15 பேர் இருக்கிறார்கள். :)
இன்னும் குமார்ஜி கவிதைகள் படிக்க ஆவலுடன்.
யாத்ரா, துபாய் ராஜா, ராதாகிருஷ்ணன், பிரியமுடன் வசந்த், அஷோக், ராம்ஜி யாஹூ, ரானின், அது சரி, பா ராஜாராம், பொன் வாசுதேவன், Hindu Marriages in India, டக்ளஸ், மண்குதிரை, நேசமித்ரன், கார்த்திகேயன், குசும்பன்... நன்றி.
கவிதை நன்றாக இருக்கிறது !
இயல்புகளின் தொகுப்பு அருமை
எவரும் சொல்லவில்லை குமார்ஜி எழுதியதை ஜ்யோவ் சார் போடுவார் என்று! எவரும் சொல்லவில்லை, அதை ட்விட்டரிலும் அப்டேட் செய்வார் என்று!
அட ... குமார் ... குமார்ஜி ... கவிதைகளில் கலக்குகிறார் ... அவர் ஏன் ஒரு வலைப்பதிவு இன்னும் தொடங்கவில்லை என்பதற்கு ஏதாவது காரணம் இருக்கும் போல ...
கோவி கண்ணன், உழவன், சுமஜ்லா, நந்தா... நன்றி.
Post a Comment