சிறு கல்லைக் காலால் எத்தி எத்தி
விளையாடுகிறான் சிறுவனொருவன்
ஒன்றுமில்லாததைப் பற்றி
எவ்வளவு தான் பேசுவது ?!
அழித்தொழிப்பு வேலை நடக்கிறது
காந்தியின் ராஜ்ஜியத்தில்
செயலற்றுப் போன அரசாங்கங்கள்
நம்பிக்கை வைக்க பின்பற்ற தொழ
தலைவனில்லாது போன சோகம்
எதிர் இருக்கையில் அமர்ந்து எக்கனாமிக் டைம்ஸ்
படித்துக் கொண்டிருக்கிறார்
கனவானாய்க் காட்டிக் கொள்ளும் ஒருவர்
காலொடிந்த சிறுமி அழுக்கு ஆடையுடன்
பிச்சை கேட்டுக் கொண்டிருக்கிறாள்
பக்க விரிசல்களில் சிக்கிக் கொண்டிருந்த
விளம்பரத் துண்டுகள் கீழே சிதறுகின்றன
அக்காகிதங்களைப் படித்துப் பூப்படைகிறாள்
(வேறொரு) சிறுமி
எல்லோர்க்குமான ரயில் வந்து கொண்டேயிருக்கிறது
கார்காலக் குறிப்புகள் - 58
2 days ago
23 comments:
ஆம்..
ரயில் பற்றி என்ன எழுதினாலும் அழகு.எழுத எழுத தீராமல் ஓடிக்கொண்டிருக்கிறது ரயில்
//அக்காதிகங்களைப்
காகிதங்களை? Speling
நல்லதொரு கவிதை சுந்தர்.
நல்லாயிருக்கு தல!
எல்லோருக்குமான ரயில்
nice poem, thanks for sharing
as mentioend by Ken, the rail is common for rich, poor, straight, gay.
என் புரிதலின் படி எவ்வளவு அழுத்தமான கவிதை இது ...
காலொடிந்த சிறுமியும் பிறிதொரு சிறுமி பூப்படைவதும் எகனமிக் டைம்ஸும் ஒன்றுமில்லாததும் தரும் சப் டெக்ஸ்ட் ....பேனா மசியை காகிதத்தில் கொட்டி அதை ஊதி வரையும் ஓவியம்
நன்றாக எழுதிய கவிதை
நன்றாக ஓடுகிறது
தண்டோரா, விநாயகமுருகன், செல்வராஜ், கென், ராம்ஜி யாஹு, நேசமித்ரன், யாதவன்... நன்றி.
@விநாயகமுருகன் - மாற்றிவிட்டேன், சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.
கவிதையின் முதல் பகுதியும், இரண்டாம் பகுதியும் இணைத்து புரிந்து கொள்ள முடியவில்லை.
அதனாலென்ன கவிதையை சரியாக புரிந்து கொள்ள பல சமயங்களில் இடைவெளி தேவைப்படுகிறது. ஒரு பிராயணத்தின் பொழுதோ, ஒரு கணமான அமைதியின் பொழுதோ சட்டென அது தன்னை வெளிப்படுத்திக்கொள்ளலாம்.
காத்திருக்கிறேன்.
ரயில் வந்தா ஏறி போக வேண்டியதுதான.. ரயில்ல ஏறியோ ரயில் மேல ஏறியோ!
எல்லோர்க்குமான ரயில் - impressive
ரொம்ப பிடிச்சிருக்கு சுந்தரா!
ஒன்றுமில்லாததைப் பற்றி எவ்வளவு தான் பேசுவது
ஒன்றுமில்லாததைப் பற்றி எவ்வளவு தான் எழுதுவது
ஒன்றுமில்லாததைப் பற்றி எவ்வளவு தான் படிப்பது
ஒன்றுமில்லாததில் எவ்வளவு காலம் தான் வாழ்வது
ஒன்றுமில்லாததைத் திரும்பத் திரும்ப எத்தனை முறை தான் செய்வது
ஒன்றுமில்லாததைப் பற்றி ஏன் இவ்வளவு யோசிக்க வேண்டும்
ஏன் எதிலுமே எதுவுமே அற்றுப் போகிறது போய்விட்டது
எல்லா கேள்விகளுக்கும் பெறப்படும் ஒன்றும் இல்லை என்ற பதில் ஏன் இவ்வளவு வலிக்கிறது
எதற்கு வலிக்கிறது
எது காயமடைகிறது
ஒன்றுமில்லாததிற்கா
ஒன்றுமில்லாததிற்கு எப்படி வலிக்கும்
ஏன் வலிக்க வேண்டும்
வலி என்ற ஒன்று உண்மையில் இருக்கிறதா
ஒன்றுமில்லாததைப் பற்றி பேசிப் பேசியே யோசித்து யோசித்தே சாக ஏன் இப்படி சபிக்கப்பட்டிருக்கிறோம்
இந்த ஒன்றுமில்லாததிலிருந்து விடுதலையே இல்லையா, அப்போது இதுவரை இதற்கு நான் அடிமையாக இருக்கிறேனா என்ன
அதுசரி ஒன்றுமில்லாததைப் பார்த்து நான் ஏன் இவ்வளவு பயப்பட வேண்டும்
ஏன் ஒன்றுமில்லாததிற்கு பல ஒன்றுமில்லாததுகள் துணையாக தேவைப்படுகிறது. ஏன் ஒன்றுமில்லாதைதிற்காக ஏங்குகிறது, அடைய நினைக்கிறது, துறக்க விரும்புகிறது,
இந்த ஒன்றுமில்லாதது என்றைக்காவது எந்த ஒன்றாகவாவது இருந்திருக்கிறதா, அப்படி இருப்பதாகத் தெரிந்ததெல்லாம் அப்படித்தானா,
ஒன்றுமில்லாததை ஏன் ஒன்றுமில்லாதது என பெயரிட்டு அழைக்க வேண்டும். ஒன்றுமில்லாதது ஏன் பெயரற்று ஒலியற்று மொழியற்று இருக்கக் கூடாது
இவ்வளவிற்குப் பிறகும் என்னையே நான் கேட்டுக் கொள்கிறேன்
ஏன் என்ன ஆயிற்று
ஒன்றும் இல்லை
ஒன்றுமே இல்லை
எல்லார்க்குமான ரயில் வந்து கொண்டேயிருக்கிறது போய்க் கொண்டேயிருக்கிறது. நான் ஏறினேனா பயணித்தேனா இறங்கினேனா பயணித்துக் கொண்டேயிருக்கிறேனா அல்லது ஏறாமல் இருந்த இடத்திலேயே இருந்து கொண்டிருக்கிறேனா எதுவுமே தெரியவில்லை எதையுமே தீர்மாணிக்க முடியவில்லை. எதுவுமே யாருமே ஏன் நானே ஒன்றுமில்லை என்றாகிவிட்ட பிறகு எதுவும் நிகழ்கிற மாதிரியுமில்லை நிகழாத மாதிரியுமில்லை ஏதோ நிகழ்கிறது ஒன்றுமற்று ஒன்றுமில்லாததிற்கு
இங்கு இந்த கணம் நகுலனோடு அருகில் அமர்ந்து அவரையே பார்த்துக் கொண்டு அப்படியே அமர்ந்திருக்க வேண்டும் போலிருக்கிறது, ( இருப்பதற்கென்று தான் வருகிறோம் இல்லாமல் போகிறோம் ) இருக்கும் போதே இல்லாமல் தான் ஒன்றும் இல்லாமல் தான் போகிறோமா, வீட்டுக்குச் சென்று அவரின் புத்தகத்தை தேடியெடுத்து அட்டையிலிருக்கும் அவரையே பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் போலிருக்கிறது
( எனக்கென்று யாருமில்லை நான் கூட )
ஏன் இங்கு எனக்கு மேற்கண்ட நகுலனின் வரியை எழுத வேண்டுமென்று தோன்றியது
இது தெளிவா சுய இரக்கமான்னு கேக்கறீங்களா எனக்கே தெரியல எதுவும் இல்ல அப்படி இல்ல எப்படியும் இல்ல. ஏன் எதுவும் எப்படியாவது ஒன்னா தான் இருக்கணுமா, எதுவாவுமே ஒன்னா இல்லாம இருக்கக் கூடாதா
ஒன்றும் இல்லை
ஒன்றுமே இல்லை
ஒன்றுமில்லாததைப்பற்றி ஏன் இவ்வளவு எழுதியிருக்கன்
ஒன்றும் இல்லை
ஒன்றுமே இல்லை
பித்தம் பைத்தியம் பிறழ்வு
ஒன்றும் இல்லை ஒன்றுமே இல்லை
00000000000000000000000000
0000000000000000
000000
0000
0
0
0
0000000000000
0000
0
0
0
000000000000000
000000
0
0
0
0000000000
00
00
0
0
0
000000000000
000000000
000000000000000000000
கவிதையும்.....
யாத்ராவின் பின்னூட்டமும் என்னவோ செய்கிறது.
yathra.. i love u!
jyov ji...i love u so much..!
பிரயாணங்களின் போதெல்லாம் தோன்றுவது இது.வாழ்கையும் ரயில் போலத்தான்.இறங்கும் இடம் வரும் போது எல்லாவற்றையும் ஏன் சிந்தனைகளையும் கூட விட்டு விட்டு இறங்கி விட வேண்டும்
ரொம்ப பிடிச்சிருக்கு
ஒன்றுமில்லாததை தாண்டியும்,
ரயிலை கடந்தும் தறிகெட்ட காந்தியின் தேசம் காண்பிக்கும் ரயில் படம் மனசை என்னவோ செய்கிறது..
யாத்ரா ஆர் யூ ஆல்ரைட்? :))
சுந்தர் சார் , இப்போ சந்தோஷமா.. :))
நேசனின் காகிதத்தில் மைத்துளி - just saying wow wouldnt be enough, though, it's again a WOW in all CAPS.
யாத்ராவின் பின்னூட்டம் பிரமாண்டம். :) கல்யாணத்திற்கு பின் பெண்கள்தான் பெரும்பாலும் மாயமாய் போவார்கள் என்று கேள்விபட்டிருக்கேன். சரி போகட்டும். :))
நல்லாருக்குன்னு எப்படி சொன்னாலும் வறட்டு "நன்றி"....!!!!!!!!!
இத்தனை ரசித்து எழுதிய நேசனுக்கும் யாத்த்ராவுக்குமாவது கொஞ்சம் முகமூடியை கழற்றி விட்டு "respond" செய்திருக்கலாம்.
என் நெடுநாளைய எரிச்சல். பாராட்டுக்கு respond செய்யாத கவிதை எழுதி என்ன எழுதாமல் என்ன.. என்ன வறட்சி...
வித்யா: நன்றி
இந்த ஸ்ரமம் கூட உங்களுக்கு வேண்டாம் ஜ்யோவ். OMG
ஜெயமார்த்தாண்டன், அதிஷா, ருத்ரன், பா ராஜாராம், யாத்ரா, மஞ்சூர் ராசா, ரௌத்ரன், பத்மா, ராதாகிருஷ்ணன், கும்க்கி, சஞ்சய் காந்தி, வித்யா... நன்றி.
//அழித்தொழிப்பு வேலை நடக்கிறது
காந்தியின் ராஜ்ஜியத்தில்
செயலற்றுப் போன அரசாங்கங்கள்//
அழித்தொழிப்பு வேலையில் அரசாங்கங்களுக்குப் பங்கில்லை என்று பொருள் வருகிறது, அப்படியா?
//பக்க விரிசல்களில் சிக்கிக் கொண்டிருந்த
விளம்பரத் துண்டுகள் கீழே சிதறுகின்றன
அக்காகிதங்களைப் படித்துப் பூப்படைகிறாள்
(வேறொரு) சிறுமி//
இதுதான் டாப்பு! கவிதையின் தொடக்கக் காட்சியும்!
Post a Comment