அ-கவிதை (3)

உனக்குச் சொல்ல
வளர்ந்தது உணர்ந்தபோது
யார் அதையெல்லாம் செய்வார்கள்
collage கவிதை
சாதாரண வாசக மனம்
assemblage கவிதை
கேள்வி எழுப்பும்
Reader Reception Theory
என்று
வெட்டி ஒட்டப் படுவது
கவிதை
நாகார்ஜூனன் சொன்னால்
கவிதை வந்தது
ஒன்றுமில்லை

18 comments:

Anonymous said...

ஒண்ணுமே புரியல உலகத்துல

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

எனக்கும் தான். என்ன செய்வது...?

ஆடுமாடு said...

ஜி.

நானும் ட்ரை பண்றேன். போன அ கவிதையையும் நேரமின்மையால் ட்ரை பண்ணலை. இதை கண்டிப்பா பண்றேன். நான் சில சொற்களை சேர்க்கலாம்தானே...

வானவில் said...

கவிதை
உனக்குச் சொல்ல
ஒன்றுமில்லை

assemblage கவிதை
collage கவிதை
என்று

வெட்டி ஒட்டப் படுவது
வளர்ந்தது உணர்ந்தபோது
கவிதை வந்தது

நாகார்ஜூனன் சொன்னால்
யார் அதையெல்லாம்
செய்வார்கள்

சாதாரண வாசக மனம்
கேள்வி எழுப்பும்
Reader Reception Theory

ஹ????? :-)))))

-வானவில்

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

வானவில்,

முதலில் நான் எழுதியதிலிருந்து கொஞ்சம் மாறுபட்டிருக்கிறது. ஆனாலும், மிக நன்றாக வந்திருக்கிறது உங்களுடைய கவிதை.

வாசகப் பிரதிதானே முக்கியம்...

நன்றி.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, ஆடுமாடு.

நீங்களும் எழுதுங்க. இது ஒரு விளையாட்டு மாதிரித்தான். சில வார்த்தைகள் சேக்கறது என்ன, இதில இருக்கறத சிதைக்கக் கூடச் செய்யலாம். நல்லாவே வரும்.

கிருத்திகா said...

ஜ்யோவ்ராம்.. கொஞ்சம் சுத்தத்தான் செய்கிறது.. ஆனாலும் நானும் கொஞ்சம் முயற்சிசெய்தேன்.. (எனக்கும்) என்ற வார்த்தை மட்டும் உபரியாய்.. (மற்றவர் படைப்புக்களில் கைவைப்பது சரியல்ல என்ற போதும்.. ஒரு விளயாட்டு என்றதால்.. )

-------
சாதாரண வாசக மனம்
உனக்கு சொல்ல உணர்ந்தபோது
கேள்வி எழுப்பும்
காலேஜ், கவிதை, தியரி, ரீடர், ரிசெப்ஷன்
யார் அதையெல்லாம் செய்வார்கள் என்று
நாகார்ஜுனன் ஒன்றுமில்லை
வெட்டி ஒட்டப்படுவது
கவிதை
வளர்ந்தது சொன்னால் கவிதை
ஆஹா.. எனக்கும்
கவிதை வந்தது..

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, கிருத்திகா. உங்கள் கவிதை நன்றாக உள்ளது. அது கொலாஜ், ஆனால் காலேஜும் நன்றாகத் தான் உள்ளது :)

அது என்ன மற்றவர் படைப்பில் கை வைப்பது சரியல்ல.? படைப்பைப் புனிதப் படுத்துதல் வேண்டாமே...

ஜமாலன் said...

விளையாட்டு அருமையாக உள்ளது. வானவில் மற்றும் கிருத்திகாவிற்கு பாராட்டுக்கள். நானும் முயன்று பார்க்கிறேன்.. வேறுமாதிரி எதாவது வருமா? என்று.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, ஜமாலன். நீங்களும் எழுதுங்கள்.

Sridhar Narayanan said...

படிக்கும்பொழுது தோன்றிய எனது எண்ணங்கள்
------------
எங்கோ ஆரம்பித்தேன்
நாகார்ஜூனன் என்ன சொன்னார்?

collage கவிதை
assemblage கவிதை
யார் அதையெல்லாம் செய்வார்கள்?

கேள்வி எழுப்பும்
சாதாரண வாசக மனம்
போதுமே!

வளர்ந்தது உணர்ந்தபோது
உனக்குச் சொல்ல
என்று
வெட்டி ஒட்டப் படுவது
கவிதை என்று ஒன்றுமில்லை

எழுதாமலே போவேனோ!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, ஸ்ரீதர் நாராயணன். உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது. நான் கூட இன்னொரு கவிதை இந்த வார்த்தைகளில் இருந்து எழுதலாமென்று இருக்கிறேன். :)

முபாரக் said...

இந்த ஆட்டையில நானும் கலந்துக்கிறேன்
---------

Reader Reception Theory
வளர்ந்தது
collage கவிதை
வெட்டி ஒட்டப் படுவது
கவிதை
உனக்குச் சொல்ல
ஒன்றுமில்லை
என்று
உணர்ந்தபோது
கவிதை வந்தது
assemblage கவிதை
நாகார்ஜூனன் சொன்னால்
யார் அதையெல்லாம் செய்வார்கள்
கேள்வி எழுப்பும்
சாதாரண வாசக மனம்
--------

நல்லாருக்கு இந்த விளையாட்டு

Sridhar Narayanan said...

நான் உங்கள் கவிதையை படித்த பொழுது இந்த விளையாட்டை பற்றி முழுவதுமாக அறிந்திருக்கவில்லை.

எனக்கு என்னவோ உங்கள் கவிதையில் ஒரு தொடர்பு இருப்பது போல்தான் தோன்றியது. அது ஒரு கலைக்கபட்ட (அ)கவிதையாக தோன்றவில்லை.

வானவில், கிருத்திகா போன்றோர் மிக நன்றாகவே கவிதையை அமைத்திருந்தனர்.

அப்பொழுது என் மனதில் தோன்றிய எண்ணங்களை உங்கள் வார்த்தைகளுடன் கலந்து எழுதி பார்த்தேன். எனக்கு புரியாத விஷயங்களை விட்டுவிட்டு, என்னுடைய கேள்விகளை அதில் வைக்க தோன்றியது.

இது விளையாட்டு விதிகளை / (அ) விதிகளை கணக்கில் கொள்ளாமல் செய்த முயற்சி.

பிரசுரித்தமைக்கு மிக்க நன்றி. :-)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

விளையாட்டில் கலந்து கொண்டதற்கு நன்றி, முபாரக். :)

உங்கள் கவிதை எனக்குப் பிடித்திருக்கிறது...

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, ஸ்ரீதர் நாராயணன்.

அ-கவிதையிலும் தொடர்புகள் இருக்கும். முக்கியப் புள்ளிகளாக எனக்குத் தோன்றியவை : ஒன்றுமில்லை / கவிதை / உனக்கு / வெட்டி ஒட்டப் படுவது

நாகார்ஜுனன் said...

Reader Reception Theory


கேள்வி வந்து,
வளர்ந்து,
க-விதை
கவி-தை
என்று
அதையெல்லாம்
செய்வார்கள்.
யார் உனக்குக்
கவிதை சொல்ல?
சொன்னால்
ஒன்றுமில்லை,
collage assemblage என
உணர்ந்து
எழுப்பும் போது,
வெட்டி ஒட்டப் படுவது
அசாதாரண
வாசக மனம்.

- நாகார்ஜூனன்

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

உங்கள் பின்னூட்டக் கவிதைக்கு மகிழ்ச்சி & நன்றி, நாகார்ஜூனன்.