முகமூடி

எனக்குக் கிடைக்கும்
நேரமே கொஞ்சம்
அதிலுன்
தழும்பேறிய கோரமான
முகத்தைக் காட்டாதே
நான்
படிக்கவேண்டிய புத்தகங்கள்
கிழிக்க வேண்டிய கவிதைகள்
ஏராளமிருக்கின்றன
பிரபஞ்சத்தின் பேருண்மைகளை
யோசித்துக் கொண்டிருக்கையில்
உன்னுடைய விகாரமான
கற்பனைகளை நீட்டாதே
போ போய்விடு
இல்லையா
இந்தா முகமூடி
அணிந்து கொண்டு
ஓர் ஓரமாக உட்கார்

(கவிதா சரண் மார்ச் 1993ல் வெளியானது)

9 comments:

ஆடுமாடு said...

//பிரபஞ்சத்தின் பேருண்மைகளை
யோசித்துக் கொண்டிருக்கையில்
உன்னுடைய விகாரமான
கற்பனைகளை நீட்டாதே//

ஜி ஏதோ எனக்கே சொன்ன மாதிரி இருக்கு.

முகமூடியை அணிந்துகொள்ளவா?

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, ஆடுமாடு.

தங்ஸ் said...

எல்லோரும் முகமூடியோடதான் இருக்கோமில்லையா?
நல்ல கவிதை!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, தங்ஸ்.

Anonymous said...

Good one. I liked it.

Regards,

Ramesh

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

Thanks, buddy.

G.Muthukumar said...

முகமூடி அணிந்து கொள்ள சொல்வது எதனை - தனிமையா.. நினைவில் கொள்ளும் மறக்க முடியாத கசப்புகளையா ... கண்ணை மூடியவுடன் மனம் போர்த்தி கொள்ளும் கவலை கூட்டங்களையா.. அல்லது.. என்றும் தனியாத கேள்விகளையா..

LakshmanaRaja said...

மிக நல்ல கவிதை.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, முத்துக்குமார் & லக்‌ஷ்மண் ராஜா...