தெருவோர நாய்
நரகல் தின்று ஓடும்
சிறுவன் ஒருவன்
துரத்துவான்
கையில் கல்லிருக்கும்
துணிச்சலில்
இடையில்
நழுவும் நிஜாரைச்
சரி செய்ய நிற்பான்
நாய் ஓடிவிடும்
நாய்களை
(அதிலும் நரகல் தின்னும்
நாய்களை)
ஒழிக்க வழி தெரியாமல்
வீடு திரும்புவேன்
அந்தச் சிறுவன் மேல்
பரிதாபப் பட்டபடி
(மாலைக் கதிர் டிசம்பர் 1995ல் வெளியானது)
கார்காலக் குறிப்புகள் - 58
1 day ago
6 comments:
வழக்கம்போல் பல வாசிப்புகளை சாத்தியமாக்கும் கவிதை. உள்ளே கட்டிப்போட்டு வளர்த்துவரும் சில உயர்ரகம் என சொல்லப்படும் நாய்களை என்ன செய்வது?
நன்றி, ஜமாலன். தெருவில் திரியும் நாய்களை விட வீட்டில் கட்டிப் போட்டு வளர்த்து வரும் நாய்கள் ஆபத்தானது.
நாய் என்பதை உருவகமகக்கொண்டால்.. இதுபோல் எத்தனை எத்தை நாய்கள் துரத்த வழி தெரியாமல், பல சமயம் வழி தெரிந்தும் துரத்தும் மனம் இல்லாமல்.... இது போன்ற கவிதைகள் நம்முள் புறப்பொருளையும் தாண்டிப்பயணைக்கும் ஆற்றல் பெற்றது.... வாழ்த்துக்கள்
நன்றி, கிருத்திகா.
nalla irukku.
நன்றி, முனி.
Post a Comment