'எப்படி இருப்பே
தெரியுமாடா...'
அக்கா ஆரம்பித்த விதமே
அலாதியாயிருந்தது
‘நாந்தான் தூக்கிப்பேன்
நாந்தான் தூக்கிப்பேன்னு
நானும் பவானியும் சண்டை போடுவோம்...'
கண்கள் விரிய
கடந்த காலத்தில் வசிக்க ஆரம்பித்தாள்
சற்றுத் தள்ளி நின்று கொண்ட
என்னைப் பார்த்தபடி
‘ஏண்டா இப்படி ஆயிட்டே...'
கேள்வியை முடிக்காமலேயே
நகர்ந்து போனாள்
எனக்கு இரண்டிரண்டாக
எல்லாம் தெரிய
(கவிதா சரண் ஃபிப்ரவரி 1995ல் வெளியானது)
பனிக்காலத் தனிமை - 02
5 days ago
6 comments:
இந்த மாதிரி கவிதைகளும் கதைகளும் எல்லார் வாழ்க்கையிலும் இருக்கும்னு நினைக்கிறேன். இதை மாதிரி ஒருத்தங்க பேசுனதை நான் பாத்திருக்கேன். சூப்பரான கவிதை
நன்றி, சின்ன அம்மிணி & கோபிநாத்.
நல்லாயிருக்குஜி.
நன்றி, ஆடுமாடு.
இறுதி இரண்டு வரிகள் இல்லாதிருந்தாலும் நன்றாக வந்திருக்கும் என்றே தோன்றுகிறது
நன்றி, சுந்தரேஸ்வரன்.
Post a Comment