சாதாரணமாக வலைப்பதிவர் சந்திப்பென்பது நண்பர்களைச் சந்தித்துப் பேசும் ஓர் இடம். புதிய பதிவர்கள், வெளிநாட்டிலிருந்து வரும் பதிவர்கள் என அறிமுகப்படலமும் அளவளாவுதலும் நடக்கும். சந்திப்பு முடிந்தபின், டீ குடிக்கச் செல்பவர்கள் டீக்கடைக்கும், மதுஅருந்த விரும்புபவர்கள் மன்ஹாட்டனோ அல்லது டாஸ்மாக்கோ செல்வதும் வழக்கம். சுபம்.
இம்முறை பாரி அரசு வருகிறார். அதன்பொருட்டு ஒரு பதிவர் சந்திப்பிற்கு ஏற்பாடாகியிருக்கிறது. இதுகுறித்து ஏற்கனவே பாலபாரதி, அதிஷா பதிவிட்டிருக்கிறார்கள். இந்நிலையில் இன்று லக்கி லுக் எழுதியிருக்கும் பதிவையும் பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
நேற்று முன் தினம் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியில் நடந்த - தொலைக்காட்சி ஊடகங்களால் திரும்பத் திரும்பக் காட்டப்பட்ட- சம்பவங்கள் பலரை உணர்ச்சிவசப் படுத்தியிருக்கிறது. இது எதிர்பார்க்கக்கூடியதே.
இந்தப் பிரச்சனையின் உள்விபரங்கள் தெரிந்தவர்கள் நாளைய சந்திப்பிற்கு வந்து பேச இருக்கிறார்கள். ரோசா வசந்த் லக்கி லுக் பதிவின் பின்னூட்டத்தில் சொல்லியது மாதிரி வெற்று மனிதாபிமானக் கூச்சலாக இல்லாமல் இச்சந்திப்பு சில புரிதல்களைக் கொடுக்கலாம். குறைந்த பட்சம் மாற்றுப் பார்வைகளை முன்வைக்குமென எதிர்பார்க்கிறேன்.
அதனால், வலைப்பதிவர்கள், வாசகர்கள் என அனைவரையும் அழைக்கின்றோம்.
இடம் : சென்னைக் கடற்கரை காந்தி சிலையின் பின்புறம்.
நேரம் : மாலை 5.30 மணிமுதல்
தேதி : 15.11.2008
பிகு :
(1) வழக்கமான விஷயங்களும் இருக்கும் :)
(2) பரவலாகத் தெரியவேண்டியதன் பொருட்டு தனிப்பதிவாக நானும் இதை இடுகிறேன்.
பனிக்காலத் தனிமை - 03
2 minutes ago
6 comments:
வர்றஞ்சாமியோவ்.........
(மன்ஹாட்டன்..அமெரிக்காவில்தானே இருக்கு...பாரி அரசு அவ்வளவு வசதியானவரா? எல்லோரையும் அவரால் ஒன்றாக அழைத்துப்போக முடியுமா?)
இந்தப் பிரச்சனையின் உள்விபரங்கள் தெரிந்தவர்கள் நாளைய சந்திப்பிற்கு வந்து பேச இருக்கிறார்கள்.
ஐயா, அதாங்க
வர பயமாயிருக்கு :).
உள்ளேன் ஐயா
அன்று தாத்தா சொல்லி கொடுத்தார் (நள்ளிரவு கைது காட்சி - ஐயோ கொல்றாங்களே , இனிமேல் ஆண்டவனால் கூட காப்பாத்த முடியாது ).
இன்று பேரன்மார் அதையே திருப்பி செய்கின்றனர்
kuppan_yahoo
நல்ல படியா நடத்துங்க.
வாப்புக்கிடைக்கும் போது நாங்களும் கலந்துக்கிறோம்
உள்ளேன் ஐயா..
டாக்டர் புருனோ, கும்க்கி, அனானி, குப்பன் யாஹூ, கார்த்திக் & நர்சிம்... நன்றி.
Post a Comment