அலறல் சத்தம் கேட்டு
திடுக்கிட்டு எழுந்தவன்
தேடத் துவங்கினேன்
மழைக்கால இரவில்
அறையில் படுத்திருந்தவன் பார்த்திருந்த
மொழ மொழவென
தரையில் வழுக்கிச் செல்லும் பாம்பை
அதைப் பார்க்கும் ஆவலில்
கதைவைத் திறந்தவன்
பார்வையில் படும்
ஈர மணலில்
தாவிச் செல்லும்
தவளையின் கால்பாதம்
பனிக்காலத் தனிமை - 02
6 days ago
14 comments:
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.........நல்லாயிருக்கு
காலே இல்லாத பாம்புக்கு தவளை பயப்படுதுன்னு சொல்ல வர்ரிங்களா?
பாம்பு தவளைய புடிக்க வந்திருக்கு!
நீ எண்டா கத்தி எழுப்பினேன்னு நண்பனுக்கு எழுதியதா?
இந்த கவிதை மூன்றாம் மனிதன் சொல்வது போல் இருக்கிறதே
அப்படியானால் அலறியது நீங்களா
இல்லை பாம்பு தான் நீங்களா
ஒரு வேலை வெளியே தாவும்....
போன கவிதை புரிஞ்சிருச்சுன்னு சொன்னதுக்கு இப்படி டவுசர அவுக்குறதா?
ஈர மணலில்
தாவிச் செல்லும்
தவளையின் கால்பாதம் :)
இந்த கவிதை எனக்கு வேற எதையோ சொல்லுது .
சுந்தர்,
ரொம்ப நல்லாருக்குங்க.
ஏதோ கில்மா கவிதைனு வந்தா ... மெய்யாலுமே பாம்பும் தவளையும்தானா..
நான் கூட பாம்பு புத்துல தவளை பூந்துருச்சுனு ஏதாவது இருக்கும்னு நெனச்சேன்
புரியலை தல
அத்திரி, வால்பையன், கென், முபாரக், அதிஷா, நர்சிம்... நன்றி.
நிச்சயமா எனக்கு நல்லாப் புரிஞ்சிடுச்சி.நல்லா இருக்கு.
கவிதை முடிவை வாசகர் கைக்கே விட்டிருக்கும் யுத்தி மிக அருமை.
ayyo shame shame!
அப்படியே என்னோட கவிதையையும் வந்து படிங்க பாஸ்!
முத்துவேல், மின்னல், ராஜி... நன்றி.
Post a Comment