சட்டக்கல்லூரி மாணவர் மோதலும் பொதுப்புத்தியின் தலித்விரோதப் போக்கும்

இந்தப் பதிவை அனுப்பியவர் ஒரு பத்திரிகையாளர், வலைப்பதிவுகளில் பரவலாக அறியப்பட்டவர். இப்போதுள்ள சூழலில் தன்னால் தன் வலைப்பூவில் சட்டக்கல்லூரி மாணவர்கள் பிரச்சினை குறித்து எழுத இயலாது என்பதால் இதை அனுப்பியுள்ளார்.

தொலைக்காட்சியில் 'மனதைக் குலுங்க வைக்கும்' அந்தக் காட்சிகளைக் கண்டவர்களின் மனட்சாட்சிகள் இருகேள்விகளை மீண்டும் மீண்டும் எழுப்பின.

1. என்ன இது காட்டுமிராண்டித்தனமான வன்முறை?

2. வன்முறையைக் கண்டு போலீஸ் கைகட்டி வேடிக்கை பார்ப்பது அவலமில்லையா?

1. உண்மைதான். இந்த வன்முறை கண்டிக்கத்தக்கதுதான். இது மட்டுமல்ல, எல்லாவிதமான வன்முறையும். ஆனால் இந்த வன்முறை எதிர்ப்பு மனச்சார்பு உடைய இந்திய ஆதிக்க சாதி மனங்கள், கயர்லாஞ்சி வன்முறை, தாமிரபரணிப் படுகொலை, திண்ணியத்தில் தலித்துகளின் வாயில் பீ திணிக்கப்பட்ட வன்முறை, குஜராத்தில் முஸ்லீம் கர்ப்பிணிப் பெண்ணின் வயிறு கிழித்த வன்முறை என தூலமான வன்முறை தொடங்கி கௌதம் மேனன் என்னும் தேவடியாப் பையன், முஸ்லீம்களைப் பிள்ளைபிடிப்பவர்களாகப் படமெடுக்கிற கருத்தியல் வன்முறை வரை எதுகண்டும் எப்போதும் அதிர்ந்ததில்லை. அப்படியானால், வன்முறை எதிர்ப்பு என்பது பக்கச்சார்பாய் இருக்கும் போது வன்முறையும் வன்முறை ஆதரவும் பக்கச்சார்பாய் இருந்தே தீரும். தென்மாவட்டங்களில் பள்ளர்களின் எழுச்சி சாதிக்கலவரமாக முன்வைக்கப்பட்டதைப் போலவே இப்போது சட்டக்கல்லூரி மாணவர் 'வன்முறை' குறித்துக் கதையாடப்படுகிறது. ஆனால், ஒரே ஒரு உண்மையை மட்டும் வரலாற்றின் மிதிபட்ட பாதங்களுக்கு அடியில் நசுங்கிக்கிடக்கும் துணுக்குகளிலிருந்து கண்டுபிடிப்பது சிரமமான காரியமில்லை. தலித்துகள், முஸ்லீம்கள் 'வன்முறை' நிகழ்த்துவது, குண்டுவெடிப்பை நிகழ்த்துவது, பார்ப்பனர்களின் பூணூல் அறுக்கப்படுவது ஆகிய 'வன்முறைச் சம்பவங்கள்' மட்டுமே பொதுப்புத்தியால் வன்மையாகக் கண்டிக்கப்படுகின்றன. ஆனால் சிரிப்பதற்கும் அழுவதற்குமான முரண்நகை என்னவென்றால் இந்தியாவின் ஆகப்பெரும் ஆளும் கருத்தியல் சித்தாந்தமான பார்ப்பனீயத்தால் ஓரத்திற்குத் தள்ளப்பட்ட மேற்கண்ட மக்கள் குழுமங்கள் நிகழ்த்துவது வன்முறையல்ல, எதிர்வன்முறை என்கிற எதார்த்தம்தான்.

2. இரண்டாவது கேள்விக்கு வருவோம். போலீஸ் எப்போது வேடிக்கை பார்த்தது, எப்போது 'செயல்பட்டது?' என்கிற கணக்குகள் சாதியக் கறைபடிந்த வரலாற்றில் காணக்கிடைப்பவைதானே. தாமிரபரணி ஆற்றங்கரையில் தலித்துகளையும், பெண்களையும் அடித்து நொறுக்கி, 'கிருஷ்ணசாமி சிவப்பா இருக்கியான்னு பார்க்க வந்தியாடி' என்று பள்ளரினப்பெண்களைக் குண்டாந்தடியால் வன்மையாய்த் தாக்கி, விக்னேஷ் என்னும் ஒன்றரை வயதுக் குழந்தை ஆற்றில் வீசிக் கொல்லப்பட்டபோது போலீஸ் 'செயல்படத்தானே' செய்தது? அப்போது போலிஸ் 'செயல்பட்டதை' ஏன் ஊடகங்களும் தமிழ்கூறு நல்லுலகமும் கேள்வி எழுப்பவில்லை? போலீஸ் இந்தச் சம்பவத்தில் மட்டும்தானா வேடிக்கை பார்த்தது? தமிழகம் முழுவதும் தலித்துகள் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகள் எவ்வளவு? இதுவரை எவ்வளவு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதியப்பட்டுள்ளன? அவற்றில் எவ்வளவு புகார்கள் விசாரிக்கப்பட்டு ஆதிக்கசாதி வெறியர்கள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்? போலீசு மட்டுமல்ல, நீதிமன்றம், அரசு என எல்லாமே தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதை ஏன் பொதுப்புத்தி கண்டிக்கவில்லை?

சரி , ஆதிக்கசாதி 'மனச்சாட்சி'களின் கேள்விகளை விடுவோம். ஊடகங்களாலும் 'பொது' மக்களாலும் கேட்கப்படாத கேள்விகளுக்கு வருவோம்.

1. அடிபட்ட மாணவர்கள் அப்பாவிகளா?

2. சம்பவ இடத்திற்கு மீடியாக்கள் எப்படி வந்தன?

3. 'பத்து பேர் சேர்ந்து காட்டுமிராண்டித்தனமாக ஒருவனைத் தாக்கும்' அளவுக்கு அவன் செய்த குற்றமென்ன?

1. அடிபட்ட மாணவர்களில் பிரதானமானவன் பாரதி கண்ணன் என்னும் மாணவன் கல்லூரியில் தொடர்ச்சியாக வன்முறைச் செயல்களை நிகழ்த்தியும் வன்முறைச் செயல்களைத் தூண்டியும் வந்திருக்கிறான். இவன் மீது பாரீஸ் காவல் நிலையத்தில் ஆறு எப்.ஐ.ஆர்கள் பதியப்பட்டுள்ளன. மூன்று வாரங்களுக்கு முன்பு 'சென்னை பூக்கடை காவல்நிலையம் அருகே அரிவாளோடு திரிந்த மாணவன் கைது' என்னும் பெட்டிச்செய்திகள் நாளிதழ்களில் வெளியாயின. அந்த இளைஞன் பாரதிகண்ணன்தான். தேவர் ஜெயந்திக்குப் போஸ்டர் அடித்தது தொடர்பாக எழுந்த பிரச்சினையில் பாலநாதன், ஜெகதீஸ் என்னும் இரண்டு தலித் மாணவர்களைக் கொடூரமாகத் தாக்கியது, தலித் பெண்களைத் தொடர்ச்சியாகச் சீண்டுவது, தலித் மாணவர்கள் மீது வன்முறையை ஏவி விடுவது ஆகிய செயல்களைத் தொடர்ச்சியாகப் பாரதிகண்ணன் கும்பல் நிகழ்த்தியுள்ளது.

2. சட்டக்கல்லூரியில் மோதல் நிகழப்போகிறது என்பது தேவரின மாணவர்களுக்கு முன்பே தெரியும். தேவரினத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் மூலமாக மீடியாவில் சில பத்திரிகை நிருபர்களுக்குச் செய்தி அனுப்பியே அவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஆனால் இதற்கு முன் தேவரின மாணவர்கள் தலித் மாணவர்கள் மீது நிகழ்த்திய எந்த வன்முறையும் மீடியாக்களில் பதியப்படவில்லை.

3. சட்டக்கல்லூரி மாணவர்கள் மோதலில் பெரும்பாலும் சென்னையைச் சேர்ந்த, மாணவர்கள் ஈடுபடுவதில்லை என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. தென் மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களைச் சேர்ந்த கிராமத்து மாணவர்களே மோதல்களில் ஈடுபடுகின்றனர். ஆதிக்கச்சாதி மாணவர்கள் கிராமங்களில் தங்கள் சாதிக்கு இருக்கும் அதிகாரத்தையும் செல்வாக்கையும் சட்டக்கல்லூரியிலும் கொண்டு வர முயல்கிறார்கள். ஆனால், கிராமத்தில் ஒடுக்கப்பட்ட தலித் மாணவர்கள் சட்டக்கல்லூரியில் தங்களுக்குப் பெரும்பான்மை பலம் கிடைப்பதாலும் பல்வேறு தொடர்புகளும், ஆதரவுச் சக்திகளும் சென்னையில் கிடைப்பதாலும் துணிச்சலாக எதிர்வன்முறையில் ஈடுபடுகின்றனர். சட்டக்கல்லூரியில் ஒவ்வொரு சாதியும் தனித்தனியாகக் கலைவிழாக்கள் நடத்துவதுண்டு. தேவர் சாதி மாணவர்கள் நடத்தும் கலைவிழாக்கள், முளைப்பாரி எல்லாம் எடுத்து, ஒரு தேவர் ஜெயந்தி குருபூஜை விழா போலவே இருக்கும். அப்போது சாதியுணர்வைத் தூண்டும் வகையிலான பேச்சுக்களும் முன்வைக்கப்படும். 'சென்னையில் அம்பேத்கர் பெயரில் சட்டக்கல்லூரி என்றால், மதுரையில் முத்துராமலிங்கத்(தேவர்)தின் பெயரில் சட்டக்கல்லூரி வேண்டும்' என்பது போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்படும். இந்த கோரிக்கைகள் இப்போது படிப்படியாக வளர்ந்து, இந்த மோதல் சம்பவத்தைப் பயன்படுத்தி, 'கல்லூரியிலிருந்து அம்பேத்கர் பெயர் நீக்கப்பட வேண்டும், எஸ்.சி ஹாஸ்டல்கள் மூடப்பட வேண்டும்' என்கிற வரை வளர்ந்துள்ளன..

மாணவர்கள் சாதியரீதியாகப் பிரிவதும் மோதிக்கொள்வதும் வருந்தத்தக்கதுதான், கண்டிக்கத்தக்கதுதான். ஆனால் ஆதிக்கச்சாதி மாணவர்கள் தங்கள் சாதிய மனோபாவத்தைக் கைவிடாமல் இதைத் தடுத்து நிறுத்துவது சாத்தியமில்லை. இப்போதும் கூட தாக்கப்பட்ட சித்திரைச் செல்வன் என்கிற தலித் மாணவரை எந்த மீடியாவும் கண்டுகொள்ளவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பி.ஜே.பியின் திருநாவுக்கரசரைத் தவிர வேறு எந்த பெரிய அரசியல் தலைவர்களும் சென்று நலம் விசாரிக்கவில்லை (மய்யநீரோட்ட இடதுசாரிக் கட்சிகள் உட்பட). சித்திரைச் செல்வன் கைதுசெய்யப்பட்டதைப் போலவே பாரதிகண்ணன், ஆறுமுகம் ஆகியோரும் கைது செய்யப்படவேண்டும். ஆனால் தேவர் தரப்பிலிருந்து ஒரு மாணவரும் கைது செய்யப்படவில்லை. இத்தகைய தனிமைப்படுத்தல்கள் தலித் மாணவர்கள் மத்தியில் எதிர் வன்முறை மனோபாவத்தையும் , பொதுவான மாணவர்கள் மத்தியில் சாதியக் கசப்பையும் உருவாக்கவே செய்யும்.

47 comments:

லக்கிலுக் said...

பிரச்சினையின் பின்னணியை அக்குவேறு ஆணிவேராக அலசியிருக்கும் முக்கியமான கட்டுரை. பதிப்பித்ததற்கு உங்களுக்கும், எழுதிய பத்திரிகையாளருக்கும் நன்றி!

இப்போது மின்னஞ்சலில் இந்த வீடியோ சுற்றுக்கு விடப்பட்டு அப்பாவிகளை அடிப்பதை பாருங்கள் என்று ஒப்பாரி வைத்து வருகிறார்கள்.

உண்மை அம்பலத்துக்கு வந்தே தீரும். அப்போது பொய்யான தகவல்களை பரப்புபவர்களும் நடுத்தெருவில் அம்மணமாக நிற்பார்கள்.

கோவி.கண்ணன் said...

//தேவடியாப் பையன்//

கருத்தியலும், பொதுபுத்தி பேசும் தாங்களின் இந்த வரிகள் ஜீரணிக்க கடினமாக உள்ளது, சென்றுவரும் ஆண்களை விட்டு விட்டு பாலியல் தொழில் செய்யும் பெண்ணை மட்டுமே இழிவு படுத்தும் இந்த சொல் ஏற்புடையது அல்ல. கவுதம் மேனன் செய்த கருத்து திணிப்புக்கு அவருடைய அம்மா என்ன பாவம் செய்தார் ? அந்த வரியை எடுத்துவிட்டு இந்த பின்னூட்டத்தை நீக்கிவிடுங்கள்.

Anonymous said...

எதிர் வன்முறையோ, நேர் வன்முறையோ காட்டுமிராண்டிதனத்திற்கு வேறு பெயர் கிடையாது. ஊடகங்கள் எங்கும் ஒளிபரப்பட்ட காட்சி காண்பவரை உறைய வைத்த காட்சிதான்.

அதற்கு பின்னால் இருக்கும் சாதீய காழ்ப்பை வெளிச்சம் போட ஊடகங்களா இல்லை? தலித்துகளின் நண்பன் என்று சொல்லிக் கொள்ளும் ஒரு கட்சி கூடவா தங்கள் டிவியில் அதைப் பற்றி விவரித்து சொல்லவில்லை?

அடித்தவர் தலித். அடிபட்டவர் அதற்கு முன்னால் அவரை அடித்தார். எல்லாம் சரி. இவ்வளவு தெரிந்தும் அரசாங்கம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

அட ஒரு கவிதை கூட எழுதவில்லையே காதறுத்தவனைப் பற்றியும், கட்டையால் அடித்தவனைப் பற்றியும்?

பதிவு எழுதியாயிற்று. சாக்கிரதையாக அரசாங்கத்தை குறை கூறாமல், பொது புத்தியை குத்தி காண்பித்து. அதற்கு உணர்ச்சி பொங்க கட்சி பாசத்தை விட்டுக் கொடுக்காமல் பின்னூட்டம் போட்டாயிற்று. முடிந்தது கடமை.

Ken said...

மாணவர்கள் சாதியரீதியாகப் பிரிவதும் மோதிக்கொள்வதும் வருந்தத்தக்கதுதான், கண்டிக்கத்தக்கதுதான். ஆனால் ஆதிக்கச்சாதி மாணவர்கள் தங்கள் சாதிய மனோபாவத்தைக் கைவிடாமல் இதைத் தடுத்து நிறுத்துவது சாத்தியமில்லை.

ஆதிக்க மனோபாவம் மாறாத வரையில், மாணவர்கள் மட்டுமில்லை எவருமே மனிதர்களாக இருக்க போவதில்லை. இது ஒரு ஆரம்ப நிகழ்வு தான் . இனிமேல் தாக்கப்பட போகிறவர்கள் அப்பாவி இளைத்தவர்களாகத்தான் இருப்பார்கள்.

Ramesh said...

நடு நிலையான பதிவு!

நான் அடிதடி ஏற்பட்டதன் காரணத்தை, அடுத்த நாளே விரிவாக என் போலிஸ் நண்பர்கள் மூலம் கண்டறிந்து, பதிவுபோதையில் எழுதிய போது, கொக்கரித்து போடா தலித் நாய் (நேற்று தான் தெரிந்தது தமிழ்நாட்டில் எங்கள் சமூகம் எம்.பி.சி தான்!) என்று கூகிள் அக்கவுண்டோடு எழுதினார்கள். இன்னும் அந்த பதிவில் கிண்டல் செய்த இருவர் கமண்ட்ஸ் விட்டு வைத்துள்ளேன்.

இந்த அடிதடி சம்பவங்கள், நான் கல்கத்தாவில் காலேஜில் கண்ட சி.பி.எம் / டி.ஓய.எப்.ஐ. v/s காங்கிரஸ் அடிதடி போல இல்லை! அங்கு வெட்டியே சாக்கடையில் போட்டு போவார்கள் தோழர்கள்... போலிஸ் ஒன்றும் செய்யாது. நந்திக்ராம் இன்னும் ஒரு படி மேல்.

கத்தி எடுத்தவன் கத்தியால் தன் சாவான்!

முகவை மைந்தன் said...

//'பத்து பேர் சேர்ந்து காட்டுமிராண்டித்தனமாக ஒருவனைத் தாக்கும்' அளவுக்கு அவன் செய்த குற்றமென்ன?//

பதிவு எழுதியவர்கள் இந்தக் கேள்வியை எழுப்பாதது ஏன் என்றே விளங்கவில்லை. அதுதான் பொதுப் புத்தி என்கிறீர்களா?

ஒருவகையில் இதுவும் ஒரு தரப்பான பதிவு தான். கோவி குறிப்பிட்ட சொல் நீக்கப் படுவது பதிவின் கேள்விகளுக்கு வெளிச்சத்தைக் கூட்டும்.

பெண் சீண்டல் சாதி வடிவில் எல்லாக் கல்லூரிகளிலும் நிகழ்கிறது. சாதிக் காப்பாளர்கள் அடுத்த சாதிப் பெண்களை மட்டும் சீண்டி நல்லவராவது தான் நடக்கிறது. மாணவர்கள் ஒன்று கூடிப் பழக ஆயத்தமாயிருந்தாலும் வேலை வேட்டி இல்லாத கூட்டம் ஒன்று உசுப்பேத்தியே கெடுக்கிறது. வேரை விட்டு தளிரை வெட்டி என்ன கிடைக்கும்?

Anonymous said...

Two negatives will never make a positive. All the students involved in this incident, irrespective of their caste,should be dismissed from the college and should never be accepted in any other college, thereby sending a strong message to other students. If you have come to college, then your job is to study.

I just fail to understand, how ppl can shamelessly defend and justify these student's actions - I am referring to students of both sides -

Its high time Government take strong actions to prevent its colleges becoming a breeding place for rowdies and future politicians. Strong rules should be laid and enforced. Lets really concentrate on academics and try to create real good lawyers.

- Ramya.

Anonymous said...

இவணுங்க அக்கா தங்கச்சி மேல பஸ்சுல ஒருத்தன் கைய வச்ச கும்பலா குமுறமாட்டாங்களா, என்ன பேசுறானுங்க டுபாக்கூறுங்க?

பிச்சைப்பாத்திரம் said...

வழக்கமான "மொழிகளுடன்" கூடிய உணர்ச்சிகரமான கட்டுரை. ஆனால் இவ்வளவு வீராவேசமான கட்டுரையை எழுதியவர் தன்னுடைய முகத்தை எதனாலோ காட்டத் துணியாதது ஒரு நகைமுரண்தான். பரவாயில்லை. அதுவொன்றும் முக்கியமான பிரச்சினையில்லை.

ஊடகங்கள் பிரதானமாக பதிய இயன்றது ஆதிக்கசாதியை சேர்ந்த மாணவன் ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்த மாணவனால் வெறித்தனமாக அடிபட்ட காட்சியைத்தான். எனவேதான் பொதுப்புத்தி அந்த மாணவனுக்கு தன்னுடைய அனுதாபத்தை தெரிவிக்கிறது.

அதே காட்சியை வலமிருந்து இடமாக திருப்பிப் பார்ப்போம். இதற்கு நேர்மாறாக ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த மாணவன் ஆதிக்கச் சாதியை சேர்ந்தவரால் வன்முறைக்குள்ளாவது ஊடகங்களில் பிரதானமாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தால் அப்போதும் பொதுப்புத்தியின் அனுதாபம் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவனின் மீதும் கண்டனமும் கோபமும் ஆதிக்க்ச் சாதியை சேர்நதவனின் மீதும்தான் பாய்ந்திருக்கும்.
இது ஓர் உடனடியான தன்னிச்சையான இயல்பான எதிர்வினை. கண்ணெதிரே ஒருவன் அடிபடும் போது மனச்சாட்சியுள்ள பொதுப்புத்தியின் மனம் ஜாதி வித்தியாச பின்னணிகளின் யோசிப்பின்றி அவனுக்காக பதறுமே ஒழிய ஒரு அரசியல்வாதியைப் போல அல்லது மத,இன அமைப்புகளைச் சார்ந்தவர்கள் போல அல்லது புத்திஜீவிகளின் சவுகரியமான பாவனைகள் போல அதன் பின்னணிகளை கணக்கில் எடுத்துக் கொண்டு தன்னுடைய சார்புக்கேற்ப சாவகாசமாய் வெளிப்படுத்தாது.

புத்திஜீவிகள் அல்லது புத்திஜீவிகளாய் தங்களை நினைத்துக் கொள்கிறவர்களின் வழக்கமான எதிர்வினை என்னவாக இருக்கும் என்றால் பொதுப்போக்கிற்கு எதிரான நிலையிலேயே தங்கள் நிலைப்பாட்டினை மேற்கொள்வது. சமயங்களில் பொதுப்புத்தியின் பார்வை சரியானதாக இருந்தாலும் கூட அதை ஒப்புக் கொண்டால் தன்னுடைய தனித்தன்மை என்னாவது என்ற கேள்வியுடன் வீம்பாக அதை மறுப்பது மற்றும் எதிராக செயல்பட்டு தங்களை புரட்சி வீரர்களாக கற்பனை செய்து கொண்டு அபத்தமான வாதங்களை முன்வைப்பது.

சட்டக்கல்லூரி சம்பவத்தை பொறுத்தமட்டில் இந்தப்பதிவும் அப்படியான ஒரு வாதமாகத்தான் எனக்குத் தோன்றுகிறது.

We The People said...

//கௌதம் மேனன் என்னும் தேவடியாப் பையன், முஸ்லீம்களைப் பிள்ளைபிடிப்பவர்களாகப் படமெடுக்கிற கருத்தியல் வன்முறை வரை எதுகண்டும் எப்போதும் அதிர்ந்ததில்லை.//

கௌதம் மேனன் தவறு செய்தால் எப்படி அவங்க அம்மாவை தேவடியா ஆக்குவீங்கன்னு புரியல! இது தான் பின்நவீனத்துவமா?? நல்லா இருக்கு! வாழ்க! வளர்க! தன் சொந்த கருத்தை தன் வலையில் ஏற்றக்கூட பயப்படும் ஒருவர் முகமூடி போட்டு அடுத்தவன் வீட்டு பெண்களை கேவலமாய் பேசுவிட்டு "பாரதி கண்ணன் தலித் பெண்களைத் தொடர்ச்சியாகச் சீண்டுவது" என்பதை பற்றி பேச அருகதை அற்றவராகிவிட்டீரே நண்பரே!!

டி.அருள் எழிலன் said...

இன்று தமிழ்கத்தின் ஏக போக சண்டியர்களாய் இவர்கள் வளர்ந்திருக்கிறார்கள். அதிமுக என்கிற ஒரு பார்ப்பன கட்சிதான் இந்தத் தடித்தனத்தை வளர்த்தெடுத்தது. கொலை செய்ப்வர்கள் தேசபக்தர்களாகவும், கொள்ளையடிப்பவர்கள் மாவீரர்களாகவும்,பஸ்ஸை எரிப்பவர்கள் தேசபக்தர்களாக்வும் மாற்றப்படும் பார்ப்பன இந்து வெறி தந்திரம் இங்கும் கடை பிடிக்கப்படுகிறது. இவர்கள் அவர்களிடன் இருந்து கற்றுக் கொண்டார்கள். இப்போது இந்த அரசியல் ரௌடியிசத்தை நாம் கண்டிக்கத் தவறினால் எதிர்காலத்தில் தமிழகம் குஜராத்தாக மாறும். அதர்கான சாத்தியங்களோடுதான் ஆதிக்க சாதியினமான கள்ளர்கள் தமிழகத்தில் இன்று வளர்த்தெடுக்கப்படுகிறார்கள். திமுகவோ வழக்கம் போல் தன் தொடை நடுங்கித்தனத்தாலும் அதன் உடகட்சி தேவர் சாதி ஆதிக்கத்தாலும் தலித்துக்களை துடைத்த‌ழித்து தேவ‌ரின‌ வாக்குவ‌ங்கியை பெற்றுக் கொள்ள‌லாம் என‌ நினைக்கிற‌டது.ஜ‌ன்நாய‌க‌த்தை விரும்புகின்ற‌ யாவ‌ரும் இந்த‌ ச‌ண்டிய‌ர்க‌ளுக்கு எதிராக‌ அணிதிர‌ள‌ வேண்டும்.

ஜமாலன் said...

இச்சம்பவம் குறித்து எழுதவேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் பதிவு இது. சற்றுமுன்தான் ஆணந்த் தல்தும்பட்டின் உண்மை அறியும் குழு அறிக்கையை வாசித்தேன். அதில் சொல்லப்பட்ட பல பெயர்கள் இந்த பதிவில் குறிக்கப்பட்டுள்ளது. பதிவின் கருத்துடன் நான் முழுமையாக உடன்படுகிறேன்.

ஒன்றே ஒன்று நண்பர் கோவி கூறியதுபோல அந்த வார்த்தையை நீக்கியிருந்தால் சிறப்பாக இருக்கும். ஒருவேளை இது அதீத உணர்ச்சி வெளிப்பாட்டின் வடிவம் என்றாலும் செய்தி சேரவேண்டும் என்பது முக்கியம். தவிரவும் அது இந்த பதிவுடன் தொடர்பற்ற ஒன்றும்கூட.

மற்றபடி இது அறிவுஜீவிகளின் பொதுபுத்தி அரிப்பு அல்ல. பதிவில் சுட்டப்பட்ட எல்லா தலித் விரோத நடவடிக்கைகளுக்கு நாம் என்ன பொதுமக்களாக செயல்பட்டு சாதித்து விட்டோம். கயலர்லாஞ்சியில் பந்தாடியதைவிட இது கொடுமை அல்ல. தலித் பெண்ணின் பெண்குறியில் மூங்கிலை சொறுகியபோது நமது பொதுபுத்தி புண்ணாக்கை தின்று கொண்டிருந்தது என்பது முக்கியம். ஊர்மத்தியில் வைத்து அம்மாவையும் சகோதரியையும் வன்பணர்சசி செய்ய ஊர்ப்பெணகள் கூடி நின்று பார்த்ததை. இறுதயில் மகளை தாயயும் சகோதரியுயம் புணரச்சொல்லி மறுத்ததால் அவனை வெட்டி பந்தாடியதை எதில் சேர்ப்பத? அதையும் அறிவுசீவிகள்தான் வெளியே கொணடுவந்தனர் என்பது முக்கியம். ஊடகத்தை பார்த்து சீரியல்போல உணரும் பொதுபுத்தியும் மக்களும் எப்படி உண்மை அறிவார்கள். இப்படி வெளிப்படத்தினால்தான்.

அல்லது இதுவரை பொதுபுத்திதான் என்ன சாதித்தது இத்தகைய கொடுமைகளுக்க எதிராக?
மாத்தி மாத்தி ஓட்டு போட்டதைத்தவிர. முதலில் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த இது முக்கியம். ஊடகங்கள் ஏன் உயர்சாதி வன்முறையை படம் பிடிக்கவில்லை? இதுதான் அறிவுசீவிகள் பொதுமக்கள் என்று தங்கள் சாதிய மனோபாவத்தை காட்டுபவர்களிடம் முன்வைக்கும் கேள்வி. சாதிகளாக பிளவுண்ட சமூகத்தில் பொதுமக்கள் என்பதே ஒடுக்கப்பட்ட மக்களை மீண்டும் மீண்டும் ஒடுக்கத்தான்.

விரிவாக பிறகு

அன்புடன்
ஜமாலன்.

Anonymous said...

'சற்றுமுன்தான் ஆணந்த் தல்தும்பட்டின் உண்மை அறியும் குழு அறிக்கையை வாசித்தேன்.'

என்ன அறிக்கை,இணையத்தில் இருந்தால் சுட்டி தருவீர்களா?

Unknown said...

//கவுதம் மேனன் செய்த கருத்து திணிப்புக்கு அவருடைய அம்மா என்ன பாவம் செய்தார் ? அந்த வரியை எடுத்துவிட்டு இந்த பின்னூட்டத்தை நீக்கிவிடுங்கள்//

ரிப்பீட்டூ.

To Ramesh
//இன்னும் அந்த பதிவில் கிண்டல் செய்த இருவர் கமண்ட்ஸ் விட்டு வைத்துள்ளேன்.//

பத்திரிக்கை செய்திகளின் அடிப்படையில் அமைந்த நகையாடல்தான் அது. மேலும் அவன் கத்தியை தூக்குறான் அதனால் நாங்களூம் தூக்குகிறோம் எனற வாதமே எனக்கு சரியாக படவில்லை,குறிப்பாக மாணவர்கள் சார்பாக எழுப்படும் போது. இதற்கு பதிலாக தலித சமூக மாணவர்கள் படித்து அனைவரும் சமூகத்தில் உயர்ந்த நிலைக்கு வருவதாலயே சாதிய மனப்பாங்கு குறைய வாய்ப்பிருக்கிறதேயன்றி வன்முறை மூலம் மனமாற்றம் ஏற்படாது என்பது எனது கருத்து. நீர் நினைப்பதை போல் நான் இல்லை,பார்க்க கோவிசாரின் பதிவில் நான் இட்ட பின்னூட்டம்.

ananku said...

இது ஒரு நடு நிலமையான பதிவு என்பதை என்னால் ஒத்துக்கொள்ள முடியாது. ஆனால் நியாயமானது. தனக்கு கோபம் வந்தால், கண்ணில் தெரியும் பேருந்தில் கல்லெரியும் மனோபாவதில்தான் இன்றும் தலித் மக்கள் உள்ளனர். இவர்களை சமூக விரொதிகளாக சித்தரிப்போருக்கு இது மிகவும் வசதியாக உள்ளது. இவர்களை வழிப்படுதும் கட்சி தலைமைகளோ சுயனலத்தோடு உள்ளது. இது தொலைக்காட்சியில் வந்தது நல்லாதெற்கென்றே சொல்ல வேண்டும். இல்லையென்றால் இதுபோல் தாக்குதலும், எதிர் தாக்குதலும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

ஊருக்கு இளிச்சவன் பிள்ளையார் கோவில் ஆண்டின்னு சொல்ற மாதிரி, எதுக்கு பாப்பானை இழுப்பானேன். அவன் பாட்டுக்கு அவனும் அவன் சகாக்களும் முன்னேற வழி சென்ச்சிட்டு இருக்கான். எல்லோருக்கும் இது ஒரு பொழுது போக்காயிருச்சு, ஊர்ல என்ன பிரச்சனைனாலும், சும்மா பாப்பானை திட்டுறது.

Anonymous said...

வன்முறையை நியாயப்படுத்த பொதுப்புத்தியின் தலித் விரோதப்
போக்கு என்று எழுதுபவர்கள் இந்த
வன்முறை மூலம் தலித் மாணவர்கள்
சாதித்தது என்ன என்பதை விளக்கலாம்.இந்தப் பிரச்சினையில் வன்முறை/பதிலுக்கு அடித்தல்தான் சிறந்த/பொருத்தமான தீர்வா?

திருநெல்வேலியில் காவல் துறை
செய்ததை ஊடகங்கள் கண்டிக்கவில்லையா இல்லை
கயலர்லாஞ்சியில் நடந்த கொடுமைகள் பரவலாக கண்டிக்கப்பட
வில்லையா.

எரிகிற தீயில் எண்ணெய் விடாமல்
அதை அணைக்க நினைப்பது பொதுப்புத்தி. அதை வளர்த்து, அதில் அரசியல் செய்து குளிர் காய்ந்து, அதன் மூலம் இன்னும் வன்முறையை
உருவாக்க நினைப்பது ‘அறிவுசீவி' புத்தி.அதைத்தான் இந்த இடுகையை
எழுதியவர்,அதை ஆதரிப்பவர்கள்
செய்கிறார்கள்.

ரவி ஸ்ரீநிவாஸ் said...

என் 2 பைசாக்கள்
-----------------

வன்முறையை நான் ஆதரிக்கவில்லை

சட்டக்கல்லூரி மோதலில், தலித் மாணவர்கள் பதிலுக்கு வன்முறையில் ஈடுப்பட்டதை ஆதரித்து/நியாயப்படுத்தி சில வலைப்பதிவுகளில் எழுதப்பட்டுள்ளது. அதை நான் ஆதரிக்கவில்லை. மாறாக வன்முறை பொருத்தமான தீர்வே அல்ல. அது நீண்டகாலப் போக்கில் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதுகிறேன். சென்னை நகரில்,தமிழ்நாட்டில் உள்ள தலித் ஆதரவு சக்திகளை, சிவில் சமூக அமைப்புகளை பயன்படுத்தி தலித் மாணவர்கள் தங்கள் தரப்பு நியாயத்தை, கோரிக்கைகளை அரசின், பொதுமக்களின், ஊடகங்கள் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கலாம். அதன் மூலம் அழுத்தம் கொடுத்திருக்கலாம். அதனால் தீர்வுகள் உருவாக வாய்ப்பிருந்திருக்கும்.

இப்போது இது அரசியலாக்கப்பட்டுவிட்டது. தலித் மாணவர்களின் பால் பொதுமக்களின் ஆதரவு,அனுதாபம் கிடைப்பதற்கு இந்த வன்முறை தடையாகிவிட்டது. மேல்விபரங்கள் தெரியவந்த பின் விரிவாக எழுத முயற்சிக்கிறேன்.

ரவி ஸ்ரீநிவாஸ் said...

'Its high time Government take strong actions to prevent its colleges becoming a breeding place for rowdies and future politicians. Strong rules should be laid and enforced. Lets really concentrate on academics and try to create real good lawyers'

ரெளடியிசம் வேண்டாம், நல்ல அரசியல்வாதிகள் சட்டக்கல்லூரிகளில்
உருவாகட்டும்.நல்ல வழக்கறிஞர்கள்
என்று எழுதியிருக்கிறார்.பின் நவீனத்துவ ‘அரிவு சீவிகள்' சட்டம்
என்பதே வன்முறை,சட்டப்படிப்பு
என்பதே ஆதிக்க அரசியலால்
கட்டமைக்கப்படுகிறது என்று
விரைவில் எழுதக் கூடும்.இந்திய அரசியல் சட்டத்தை போதிக்கும் சட்டப்
படிப்பு ஒரு பார்பனிய-பனியா சதித்திட்டம் என்று சிலர் எழுதலாம்.
அவர்கள் பார்வையில் மாணவர்கள்
படித்து திறமையான வழக்கறிஞர்களாக
உருவாவதை விட உருட்டுக்கட்டைகளை தூக்கிக்
கொண்டு அடிப்பதே ‘பொலிடிகலி
கரெக்ட்' செயலாக இருக்கலாம்.
கல்லுரிகளில் ஒழுங்கு,கட்டுப்பாடு
என்பதன் பின்னால் உள்ள ஆதிக்க சாதி,இந்த்துவ,பார்பனிய,ஏகாதிபத்திய சொல்லாடல்களை ‘கட்டுடைத்து' கட்டுரை(கள்) எழுதப்படலாம்.
பின்னூட்டம் இட்டது
ரவி ஸ்ரீனிவாஸ்- பொலிடிகலி
இன்கரெக்ட் மிடில்க்ளாஸ் மாதவன்
cum moron :)

Anonymous said...

Whatever the caste, all these people indulging in violence must be punished!

//கௌதம் மேனன் என்னும் தேவடியாப் பையன், முஸ்லீம்களைப் பிள்ளைபிடிப்பவர்களாகப் படமெடுக்கிற கருத்தியல் வன்முறை வரை எதுகண்டும் எப்போதும் அதிர்ந்ததில்லை.//

Calling names not acceptable!

Not sure when he made Muslims as villains in any of his movies.

I laughed out loud, when I heard the villain's name, "Lawrence" in PachaikiLi muthucharam. Grow up Gautham, we are not in 1960s! LOL

இனியா said...

Atleast there are few blogger who can realize the true nature of the issue and who can support the all time suppressed Dalit students.

வித்யாசாகரன் (Vidyasakaran) said...

சுந்தர்,
இது பற்றி தொடர்ந்து பதிவதற்கு நன்றி.
உண்மையை ஊருக்குச் சொல்ல யாருமில்லை.
நான் விடுமுறையில் வீட்டுக்குப் போனால், உறவினர்களின் சாதி மனோபாவம் கலந்த (இந்த மற்றும் பல பிரச்சினைகள் குறித்தான) அலசலை எதிர்கொள்ள வேண்டும், வழக்கம் போல.
சமத்துவம் பேசுவது சும்மா. பெரும்பாலானோர் சில சாதிக்களுக்குத் தாழ்ந்து போகத் தயார், சில சாதிகளை மிதிக்க வேண்டுமென்பதற்காக. இளைய தலைமுறையிலும் சாதிப் பெருமை குமட்டுகிறது.
- வித்யாசாகரன்

ராஜரத்தினம் said...

//கௌதம் மேனன் என்னும் தேவடியாப் பையன், முஸ்லீம்களைப் பிள்ளைபிடிப்பவர்களாகப் படமெடுக்கிற கருத்தியல் வன்முறை வரை எதுகண்டும் எப்போதும் அதிர்ந்ததில்லை.//

நீங்கள் இல்லை நீ இப்படி எழுதிய பிறகும் உன்னுடைய பதிவுக்கு பின்னூட்டம் இடும் எங்களையும் அப்படி ஒரு சிலர் அழைக்க கூடும்.

உனக்கு என்ன அப்படி என்ன பிரச்னை? தலித்தா? முஸ்லீமா? இதுவரை ஒரு 1000 படங்களில் 100 படத்தில் அப்படி காண்பித்து இருப்பார்களா? கருத்து சுதந்திரம் என்பது உனக்கு மட்டும்தானா?

உன்னுடைய வலைதளத்தை சாரு எப்படி பரிந்துரைத்தார்? அவரால்தான் இந்த பின்னூட்டம்.

உன்னை போன்ற போலி, அதாயம் வேண்டி போடப் படுபவர்கள் பதிவு இதை விட கேவலமாய் இருக்கமுடியாது. உன்னையும் நான் அப்படி அழைக்கமுடியும். ஆனால் அது தீர்வாகாது.

ஜமாலன் said...

அனானி நண்பருக்கு...

இந்த இலையில் அந்த அறிக்கை மீள்பதிவு செய்யப்பட்டுள்ளது.

http://groups.google.com/group/panbudan/browse_thread/thread/0089d1f6fbf9b7e8?pli=1

ஜமாலன் said...

அறிவுசீவிகள் மேல் ஆங்காரம் கொண்ட அனானிக்கு... ))))

இனி இப்பிரச்சனையில் வன்முறை வெடித்தால் அது தலித்துகளால் வெடிக்காது. நீ்ங்கள் சொல்லும் பொதுபுத்தி அதாவது இன்று அது சாதிபுத்தியாக உள்ளதால்.. அதால் வெடித்தால்தான் உண்டு.

தலித் மாணவர்கள் சாதித்தது..
1. இனியும் குனிஞ்சி அடிவாங்கி பிழைக்கமாட்டோம் என்பதை அறிவித்துள்ளனர். இனியுமு் தீண்டாமை கொடுமை நிலவினால்.. தலித்துகள் அதை எதிர்ககொள்வது எப்படி என்கிற தயார்நிலைக்கான ஒரு அறிவிப்பு இது.
2. சாதியற்ற ஒரு சமூகம் உள்ளதாக சொல்லப்பட்டுவரும் ஒரு சமூகத்தில் அதிலும் சட்டம் படிக்கும் கல்லூரியில் சாதி எப்படி புறையோடிப்போயுள்ளது என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
3. சாதியக் கொடுமை என்பது எப்படி தீணடாமை வடிவில் காகக்ப்படுகிறது என்பதை.
4. அம்பேத்கர் என்கிற தேசியத்தலைவரை சாதியத்தலைவராகவும் சாதியத்தலைவர்களை தேசியத்தலைவராகவும் ஆக்கும் முயற்சிக்கு கல்லூரி நிர்வாகம் மற்றும் அரசு, காவல்துறை ஊடகம் உள்ளிட்டவை காவடி தூக்கும் நிலை.
5. தட்டிக் கேட்க அளற்றதாக வளர்ந்துவரும் சாதிய ரவுடித்தனங்களை எப்படி எதிர்கொள்வது எனன்பதற்கான முறை...

என பலவற்றை சொல்லலாம். மிக முக்கியமானது இந்திய கல்வி மாணவர்கள வளர்க்கும் பண்பாட்டு லட்சணம் பற்றிய முகத்திரையை இது கிழித்துள்ளது. கல்வி எபப்டி அரசு எந்திரத்திறகான “நெட்டு“-களையும் “போல்ட்டு“-களையும் தயாரிக்கிறது என்பதை இது நமக்கு சொல்லி உள்ளது.

முதலில் சாதிய சங்கம் வைக்க அனுமதித்த கல்லூரிநிர்வாகத்திற்குள் உள்ள புரையோடிய சாதியத்தை களைய வேண்டும். இச்சம்பவத்திற்கு முன்பே 2 வாரங்களாக தீண்டாமை கொடுமையை நடைமுறைப் படுத்திய அனைத்து உயர்சாதி மாணவர்களையும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் உள்ளே தள்ளப்பட்டு தண்டனைத் தரவேண்டும். தமிழகத்தின் அனைத்து சட்டக் கல்லூரிகளையும் அம்பேத்கர் பெயர் வைக்க வேண்டும். இப்படி பல முக்கிய நடவடிக்கைகைள் பற்றிய பேச்சை இன்று இந்த சம்பவம் வெளிக்கொண்டுவந்துள்ளது என்பது முக்கியம். மேல்விளக்கங்களை இன்னும் ஓரிருநாட்களில் தனிப்பதிவாக எழுதுகிறேன்.

அன்புடன்
ஜமாலன்.

Anonymous said...

//இந்த்துவ,பார்பனிய,ஏகாதிபத்திய சொல்லாடல்களை ‘கட்டுடைத்து' கட்டுரை(கள்) எழுதப்படலாம்.//

எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம், எதுக்கு கட்டை உடைக்கணும்? அவுத்தா போதாது?

Anonymous said...

//இது ஓர் உடனடியான தன்னிச்சையான இயல்பான எதிர்வினை. கண்ணெதிரே ஒருவன் அடிபடும் போது மனச்சாட்சியுள்ள பொதுப்புத்தியின் மனம் ஜாதி வித்தியாச பின்னணிகளின் யோசிப்பின்றி அவனுக்காக பதறுமே ஒழிய ஒரு அரசியல்வாதியைப் போல அல்லது மத,இன அமைப்புகளைச் சார்ந்தவர்கள் போல அல்லது புத்திஜீவிகளின் சவுகரியமான பாவனைகள் போல அதன் பின்னணிகளை கணக்கில் எடுத்துக் கொண்டு தன்னுடைய சார்புக்கேற்ப சாவகாசமாய் வெளிப்படுத்தாது.

புத்திஜீவிகள் அல்லது புத்திஜீவிகளாய் தங்களை நினைத்துக் கொள்கிறவர்களின் வழக்கமான எதிர்வினை என்னவாக இருக்கும் என்றால் பொதுப்போக்கிற்கு எதிரான நிலையிலேயே தங்கள் நிலைப்பாட்டினை மேற்கொள்வது. சமயங்களில் பொதுப்புத்தியின் பார்வை சரியானதாக இருந்தாலும் கூட அதை ஒப்புக் கொண்டால் தன்னுடைய தனித்தன்மை என்னாவது என்ற கேள்வியுடன் வீம்பாக அதை மறுப்பது மற்றும் எதிராக செயல்பட்டு தங்களை புரட்சி வீரர்களாக கற்பனை செய்து கொண்டு அபத்தமான வாதங்களை முன்வைப்பது.
//
thannichai yaana ethir vinai makkalidamirunthu sariyaagavum, vilangu vunarchi yai vidavum vyarntha thaagavum irukka vendum ena arivu jeevigal virumbukirargal. ithu kuuda puriyaathaa

Anonymous said...

ந்த ரவி அழுவாத...பரவாயில்ல கண்ண தொடச்சுக்கோ, நீ விளையாட இங்க சந்து இல்லேன்ன என்ன வேற எங்கேயாவது கிடைக்கும்...அது வரைக்கும் See ya

Unknown said...

//முத்துராமலிங்கதேவர் பிறந்தநாள் விழாவுக்கு போஸ்டர் அடிக்கும் போது வெறும் சட்டக்கல்லூரி மாணவர்கள் என்று அச்சிட்டதே காரணம், இதில் உள்ள நுண்ணரசியல் அம்பேத்கார் பெயர் வேண்டுமென்றே விடப்பட்டதானால் என்று கேட்க்கும் போது வெட்கபட வேண்டியுள்ளது நம் இளைஞன் இது போன்ற வெட்டி சித்தாந்தக்கு, சாதி வெறி தூண்டும் வண்மைக்கு அழைத்து செல்லப்படுவது வருத்த அளிக்கிறது!///

The above is from We the People's article on Law college Thevar Caste Atoricity. We The People doesn't say anything about the Caste feeling behind Ambedkar name missed in the poster. He generally speaks aganist Castism. By this he tries to equate the Violence of Upper caste and the Counter voilence of oppressed caste. Vry good Tactics.

Even here he tries to project himself as a good samiritan by pointing fingers at 'Thevadiya magan' instead of expressing his opinion about the core issue of this article... ie. thevar caste politics.

Good drama We the people. We believe you are good kind hearted human being.

Prognostic Sage

வால்பையன் said...

இவ்விசயத்தை ஒருதலை பட்சமாக சித்த்ரிக்கும் ஊடகங்களை வன்மையாக கண்டிக்கிறேன்.
சில நாட்களாகவே ஆதிக்க சாதிகளின் ஆட்டம் தமிழகத்தில் அதிகமாக இருக்கிறது.
தீர்வு தான் கிடப்பில் கிடக்கிறது.
இப்ப்ரச்சனையால் உத்தாபுரம் பிரச்சனை காணாமல் போக வாய்புண்டு

Unknown said...

We The people argument in his article very conveniently divert the focus from Caste ridden Indian Socio Economy to Private college Govt College issue.

May he taste the Caste atrocities of South Tamil Nadu Colleges(Regardless of Private or Govt) in his Next birth.

By this half baked half messured conclusions, as he always use to do, he conveiniently hides his malingn expression of wonder on Castism behind Innocence. he tries to show that Caste atrocities are Individual Incidents. And he has never wrote anything on Caste atrocities happened against Dalits across India so far, Even for Kayierlanchi Incident.

I request a strong unequivocal statement from We The People on Castism and its Genesis. Then we can have some credibility on his Truthfullness.

Anonymous said...

கட்டையாலும், தடியாலும், குச்சியாலும் தாக்குகிற இந்தக் காட்சியே நம்மை இவ்வளவு திகில் அடைய வைக்கிறதே, மேலவளவு என்ற கிராமத்தில், பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு நின்று வெற்றி பெற்றார் என்கிற ஒரே காரணத்திற்காக, ஓடுகிற பஸ்சில் ஆதிக்க ஜாதி வெறியர்களால் வித விதமாக வெட்டி கொலை செய்யப்பட்டார் ஒருபாவமும் அறியாத முருகேசன்.

அந்தக் கொலை வழக்கில் உயர்நீதி மன்றம் வழங்கிய தீர்ப்புரையின் சிறிய பகுதி உங்களுக்கு...

1. “ஈனப்பயலான உனக்கு எதற்கு தலைவர் பதவி, எதற்கு நஷ்ட ஈடு?” என்றபடி, தான் பதுக்கி வைத்திருந்த (அருவாள்) ஆயுதத்தால் அழகர்சாமி முருகேசனின் வலது தோளில் வெட்டினார். பேருந்திலிருந்த பயணிகள் அலறி அடித்து இறங்கி ஓடினார்கள். அழகர்சாமி முருகேசனின் தலையைத் துண்டித்து, துண்டித்த தலையோடு மேற்கு நோக்கி ஓடினார்” (சாட்சி கிருஷ்ணன்).

2. “மார்க்கண்டன் முருகேசனின் வயிற்றில் குத்தினார். அய்யாவு முருகேசனின் வலது உள்ளங்கையை வெட்டினார். அழகர்சாமியோ முருகேசனின் தலையைத் துண்டித்து, துண்டித்த தலையை எடுத்துக்கொண்டு வடமேற்கு திசை நோக்கி ஓடினார்” (சாட்சி ஏகாதெசி).

3. “முருகேசனின் துண்டிக்கப்பட்ட தலை, பேருந்தின் படிக்கட்டில் வந்து விழுவதைப் பார்த்தேன். அழகர்சாமி அந்தத் தலையை எடுத்துக் கொண்டு போய்விட்டார்” (சாட்சி மாயவர்).

4. “சக்கரமூர்த்தி முருகேசனின் கைகளை அருவாளால் வெட்டினார். அழகு முருகேசனை சரமாரியாக வெட்டினார்” (சாட்சி கல்யாணி).

5. “அழகர்சாமி முருகேசனை அருவாளால் வெட்டினார். அழகு முருகேசனின் இடது கன்னத்தை வெட்டினார்; பாரதிதாசன் முருகேசனின் இடது கையை வெட்டினார்; நாகேஷ் முருகேசனின் இடது மணிக்கட்டை வெட்டினார். கதிர்வேல், தங்கமணி, கணேசன், மணி ஆகியோரும் முருகேசனின் வயிற்றுப் பகுதி மற்றும் மார்புப் பகுதியில் வெட்டினார்கள். அழகர்சாமி முருகேசனை வெட்டுவதைப் பார்த்தேன். முதல் வெட்டு முருகேசனின் வலது தோளில் விழுந்தது. பின்னர் முருகேசன் இழுக்கப்பட்டு மற்ற அம்பலக்காரர்களும் முருகேசனை வெட்டினார்கள், குத்தினார்கள்” (சாட்சி பழனி).

6. “அழகர்சாமி முருகேசனின் வலது தோளில் அருவாளால் வெட்டினார். பேருந்தில் இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு இறங்கி ஓடினார்கள். அப்போது மேலும் சில அம்பலக்கார சாதியினர் அங்கு வந்து, ஆதி திராவிடர்களைத் தாக்கினார்கள். இத்தாக்குதல்களினால் முருகேசன், மூக்கன், ராஜா, பூபதி, செல்லத்துரை, சேவகமூர்த்தி ஆகியோர் செத்துவிட்டனர். நான் பார்த்துக் கொண்டிருந்தபோது, முருகேசனின் தலையில்லா உடல் பேருந்திலிருந்து வெளியே வீசி எறியப்பட்டது” (சாட்சி கணேசன்)

மனிதாபிமானம் கொண்ட எந்த ஜாதிக்காரர் இதைப் படித்தாலும் ஆத்திரமும், அழுகையும் இல்லாமல் படிக்க முடியுமா?

இதை நினைத்துப் பார்க்கவே நெஞ்சு நடுங்குகிறதே….
இந்தக் கொலைகளையும் காட்சியாகத் தந்திருந்தால்…..

Unknown said...

//Whatever the caste, all these people indulging in violence must be punished!
//

Why this has been never expressed so loudly when Dalits suffered all kind of Atorcities across India?

Why now this slogan is coined as a common slogan when Upper caste is tasting the repercussion effect of their own Violence?

So the final Aim is maintaiing the Status Que. That is the Oppression against Dalits which is in India for prolonged time without any protest has to be continued. When this opression has been repelled then these Good hearted, peace loving people will come in to picture and Say violence in any form must be punished... Good Show....

Anonymous said...

'சட்டக்கல்லூரியில் மோதல் நிகழப்போகிறது என்பது தேவரின மாணவர்களுக்கு முன்பே தெரியும். தேவரினத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் மூலமாக மீடியாவில் சில பத்திரிகை நிருபர்களுக்குச் செய்தி அனுப்பியே அவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்'

இது நம்புபடியா இருக்கிறது. இல்லை.
ஏன்? மோதல் நடக்கும் என்பது தெரியுமென்றால் அவர்கள் அதாவது தேவர் மாணவர்கள் அடியாட்களைக் கொண்டு, தாக்க திட்டமிட்ட தலித் மாணவர்கள முதலிலேயே உண்டு இல்லை என்று செய்திருக்கலாமே, ஊடகங்களைக் கூப்பிடாமல் எதிர் தாக்குதல் நடத்தியிருக்க முடியுமே. அதை ஏன் செய்யவில்லை.மோதல் நடக்கும் என்று தெரிந்த ‘ஆதிக்க' சாதி மாணவர்கள் தங்களில் ஒருவர் இப்படி அடிவாங்க வேண்டும்,கிட்டததட்ட சாக வேண்டும், அது பதிவாக வேண்டும் என்று விரும்புவார்களா, இல்லை தங்கள் தரப்பில் ஆயுதங்களுடன் ஆட்களை கொண்டு வந்து இரண்டில் ஒன்று பார்த்துவிடலாம்
என்று இருந்திருப்பார்களா?. ஒருவரை
பத்து பேர் அந்த அடி அடிக்கும் போது
கூட உதவிக்கு வராமல் ஊடகங்கள்
பதிவு செய்யட்டும் என்று வேடிக்கை
பார்த்திருப்பார்களா? ஒருவேளை
இந்த எதிர்தாக்குதலை அவர்கள் எதிர்ப்பார்க்கவில்லையோ?.

அன்று,அதற்கு முன் தினம்
உண்மையில் நடந்தது என்ன என்பதை
யாராவது தெளிவாக எழுதினால்
சில கேள்விகளுக்கு விடை தெரியும்.

Anonymous said...

meenu.wordpress.com
ல் உள்ள சுட்டி அடிப்பட்டவர் திமுகவை சேர்ந்த மாணவர்,
எம்.எல்.ஏ விடுதியில் தங்கியிருந்ததாக கூறுகிறது.
அது உண்மையா

Anonymous said...

'தமிழகத்தின் அனைத்து சட்டக் கல்லூரிகளையும் அம்பேத்கர் பெயர் வைக்க வேண்டும். '

தமிழனாட்டில் உள்ள ஒரே சட்டப்பல்கலைகழகம் அம்பேத்கர் பெயரில் இருக்கும் போது இது தேவையில்லாத கோரிக்கை.
சட்டக்கல்லூரிகளுக்கு
காமராசர்,அண்ணா,பெரியார்
பெயர் வைக்கவேண்டும் என்று
அடுத்து கோரிக்கைகள் வரும்.
இருக்கின்ற ஊரில் பெயரில் சட்ட
கல்லூரிகள் இருப்பதால் என்ன
கேடு வந்தது?.

Pot"tea" kadai said...

பின்னூட்டத்தை எழுதுவதற்கு முன் இப்பதிவின் தமிழ்மண பரிந்துரைத்தல் அழுத்தானைப் பார்த்தேன் +2 மற்றும் -32. ஆக அழுத்திய 36 பேரில் (கணக்கு சரிதானா?) 32 பேருக்கும் மேல் எரிச்சலாக இருக்கிறார்கள் அல்லது சாதிவெறி புழுத்து புழுக்கைகளாக விரல் நுனியில் வந்து விழுகிற நிலையில் இருக்கிறார்கள்.

இங்கு பிரச்சினையில் மூல காரணத்தை ஆராய வேண்டுமென்று கூறிய மிக முக்கியமான பதிவுகளில் இதுவும் ஒன்று. இதற்கு முன் பதிவர் வினவு அவர்களும், தோழர் வளர் அவர்களும் மட்டுமே சம்பவத்தின் உண்மை நிலையை எடுத்து அதன் மூலம் மட்டுமே இப்பிரச்சினையை அணுக வேண்டுமென்ற கருத்தினை வலியுறுத்தியிருந்தனர். அந்த வகையில் சற்றே எனக்கேப் பிடித்தமான மென் மொழியில் எழுதப்பட்டிருந்த இப்பதிவிற்கு ஒரு சபாஷ்.

இப்பிரச்சினையில் நானும் முதன் முதலாக இணையத்தில் பார்த்த காட்சி...அடப்பாவிகளா!!! தான்? அதன் பின்னர், இன்னொரு பதிவில் கீழே அடி வாங்கும் திருட்டுத் தாயோழி அடி வாங்குவதற்கு முன் கடுஞ்சீற்றத்துடன் கொடுவா (அ) பிச்சுவாவுடன் ஓடும் காட்சி...அதைக் கண்டவுடன், ங்கொம்மால...இன்னுமா உயிரோட உட்டானுங்க இவனை என்றேத் தோன்றியது. காரணம் படிக்க வருபவன், பிச்சுவா கத்தியுடன் வரும்போது சவுக்கத் தடியெல்லாம் எம்மாத்திரம்?

கத்தியோடு ஓடிவரும் அந்த முகத்தின் வக்கிரம் பேசும் மொழிகள் ஏராளம்!! இன்று வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது என காந்தி தாத்தாவின் மூத்திரத்தை மொண்டு குடித்ததினால் ஏற்பட்ட திடீர் அகிம்சாவாதிகள், தலித் சமுதாயத்தினரும் இது மாதிரி அவர்களது பிரச்சினைகளை மீடியாவில் சேர்க்க வேண்டுமென மிடில் கிளாஸ் மோரான்கள் சில பதிவுகளில் கருத்துகளும் அள்ளித் தெளித்துள்ளனர்.

கருனாநிதி கிழவனோ அல்லது செயலலிதாவோ இஃதிரண்டுகளில் எது வந்தாலும் தரகு புத்தியும், அதிகார புத்தியும் சேர்ந்தே வருகின்றன. கருனாநிதி சாமர்த்தியமாக சா"நக்கிய" தனமாக ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினரை ஆஃப் செய்வார். செயலலிதா அதிகாரம் மூலம் செய்வார். இவ்வளவு நடந்த பிறகும், சமூக நீதிப் போராளி "ராமதாசு"வும், அடங்க மறு, அத்துமீறு என புரட்சி செய்ய புறப்பட்ட திருமாவளவனும் என்னத்தை புடுங்கினார்கள் எனத் தெரியவில்லை whereas ராமதாசின் சமூகநீதிப் போராட்டக் கூட்டாளி மூமூகூ (இதை நீங்க தப்பா புரிஞ்சுக்கக் கூடாது) தலைவன் சேதுராமன் அடிப்பட்ட ஒரு வழிப்பறி திருடனை (அதே மிடில் கிளாஸ் மன நிலை தான் எனக்கும்...கத்தியோடு அவனைப்பார்த்தால் வழிப்பறி கொள்ளையன் மாதிரி தான் இருக்கிறான்...போதாகுறைக்கு இப்போ தான் எஸ் ராவின் நெடுங்குருதி வேறு படித்துக் கொண்டிருக்கிறேன்)பார்த்து வந்திருக்கிறார். குனியக் குனியக் குட்டிக் கொண்டேயிருந்தார்கள், இன்று திருப்பியடிக்கும் போது கதறுகிறார்கள்...இதில் சில சில்லரைகளின் பின்னூட்டங்கள் சகிக்கவில்லை...(அதாவது ஒருத்தனுக்கே பிறந்தவனா இருந்தா ஒண்டிகொண்டி மோத வேண்டியது தானேயென்று) சேரியில் மாட்டுக்கறி தின்று வளர்ந்த காளை அடித்தால் எவனும் தாங்கமாட்டானுங்க...

தென்மாவட்டங்களில் தேவர்கள் கொட்டமென்றால் வடமாவட்டங்களில் வன்னியர்கள். ஏதோ பேரளவில் ராமதாசும், திருமாவும் ஒன்றாக இருப்பதாகக் காட்டிக்கொண்டிருப்பதால் இப்போதைக்கு வன்முறைகள் குறந்திருக்கலாம். ஆனால் பாட்டாளி வர்க்க படையாச்சியும் பறையர்களும் ஒன்றே. அவர்கள் பல ஊர்களில் சுமூகமாகவே இருக்கிறார்கள்...ஏற்றிவிடுவது மிராசுதார் படையாச்சிகளும், ரெட்டியார்களும், முதலியார்களும் மட்டுமே...

மீடியா என்னும்போது லீனாவின் சிறுதொண்டமாதேவி விவரனப்படம் வேறு வந்துத் தொலைக்கிறது. தணிக்கை என்ற பேரில் அரசு தரகுக் கூட்டணி ஆண்டை வன்னிய மிராசுகளின் கோபத்தைத் தூண்ட வேண்டாம், வீணாக சாதிக்கலவரம் ஏற்படுமென்று வெட்டியெறிந்ததும், பொதுவொளிபரப்பிற்கு அனுமதி அளிக்காததும் எதில் சேர்ப்பது?

பறையர்கள் அடிவாங்கலாம்..படையாச்சிகளோ அல்லது தேவர்களோ அடிவாங்கக் கூடாது. அப்படி வாங்கினால் சாதிக்கல்வரம் ஏற்படும்.

அடத்தூ...இந்திய தேசியத்தில் ஏறி ###க்க...

ஜமாலன் said...

கயர்லாஞ்சியில் நடந்தது என்ன? இங்கே வாசியுங்கள்

http://www.kalachuvadu.com/issue-107/page62.asp

ஜமாலன் said...

pot"tea" kadai -க்கு.

அந்த கொலைவெறி பிச்சுவா கத்தி “நாளைய பாரதத்தின் முதுகெலும்பு வக்கீல்” படத்தை அனுப்ப முடியுமா? அல்லது லிங் தாருங்கள். அதை பதிவில் வெளியிடலாம்.

Anonymous said...

"அந்த கொலைவெறி பிச்சுவா கத்தி “நாளைய பாரதத்தின் முதுகெலும்பு வக்கீல்” படத்தை அனுப்ப முடியுமா? அல்லது லிங் தாருங்கள். அதை பதிவில் வெளியிடலாம்."

படம் இந்த லிங் ல்
http://vinavu.wordpress.com/

Anonymous said...

http://vinavu.wordpress.com/2008/11/13/tmstar4/

We The People said...

//he above is from We the People's article on Law college Thevar Caste Atoricity. We The People doesn't say anything about the Caste feeling behind Ambedkar name missed in the poster. He generally speaks aganist Castism. By this he tries to equate the Violence of Upper caste and the Counter voilence of oppressed caste. Vry good Tactics.

Even here he tries to project himself as a good samiritan by pointing fingers at 'Thevadiya magan' instead of expressing his opinion about the core issue of this article... ie. thevar caste politics.//

Prognostic,On my article I was just mentioning that Students are diverted into a Caste based provocations by politicians to reap their own breed of votes by that Students loose their life and Career in return!!! My opinion politics shouldnt enter any college either Govt or Private bcoz that is spoiling the Students nature and life! And that was the core Idea behind that Article and its not meant as you think! I did mentioned base reason as the Caste based provocations and I am well aware of the reason behind the Name Ambedkar was purposefully avoided on Thevar Jeyanthi poster! I have mentioned it clearly as well.

Since there were lots of posts detailing the incidents happened to justify the Act by dalits, There is no point in me mentioning it again in my article, Since core point of the article on that Law college Incident was purely politicizing the Students!!

In this Post, I do agree all the points and core issue which lead to this incident but one small mentioning on this made the total diversion for the actual subject discussed that was ...//கௌதம் மேனன் என்னும் தேவடியாப் பையன், முஸ்லீம்களைப் பிள்ளைபிடிப்பவர்களாகப் படமெடுக்கிற கருத்தியல் வன்முறை வரை எதுகண்டும் எப்போதும் அதிர்ந்ததில்லை.// If this point was not here definitely all the comments here would have been accepting the total post!

//Good drama We the people. We believe you are good kind hearted human being//

Thanx for the comment if you say or not life is a drama, you are playing your role and I am doing mine :)

மாதவராஜ் said...

தங்களுடையது மிக முக்கியமான பதிவு என நினைக்கிறேன்.

நான் சொல்ல நினைத்ததை, அதைவிடவும், மிக நேர்த்தியாகச் சொல்லியிருக்கிறீர்கள். சந்தோஷமாக இருக்கிறது.

எல்லாவற்றையும் மேலோட்டமாகவே பார்த்து உணர்ச்சிவசப்படும் மக்களுக்கு பித்தம் தெளிய வைக்க இப்படிப்பட்ட பதிவுகள் அவசியம் என நினைக்கிறேன்.

வாழ்த்துக்கள்.

தொடருங்கள் உங்கள் பணியை.

SurveySan said...

மாட்டடி அடிச்சது யாரா இருந்தாலும், குத்தம் குத்தமே.
இதைத் தூண்டும் செயலை, அடி வாங்கியவன் செய்தீருந்தால், அவன் செய்ததும் குத்தமே.

அடிபட்டவனுக்கு குணமானதும், விசாரிச்சு உள்ள போடுங்க.
அடிச்சவனையும் உள்ள போடுங்க.

சந்தடி சாக்கில் கௌதம் மேனனை திட்டியது, கேவலமாய் இருக்கிறது. யாரோ அனுப்பியதை, நீங்க பதியும்போதாவது, அதை சென்ஸார் செஞ்சிருக்கலாம். கேவலம்.

இவ்ளோ அழுத்தமான விஷயத்துடன் உள்ள கட்டுரையில், கௌதம் மேனன் தேவையில்லாச் சொறுகல். வா.ஆயிரத்துல, கிட்னாப் பண்றத சொல்லறாரா?
மத்த படங்களில் எல்லாம் கூட வில்லன்களை இஸ்லாமியர்கள் மாதிரியா காட்டியிருக்காரு அவரு? பொத்தாம் பொதுவா இப்படி கலீஜ் பண்றது கேவலம்.
கருத்தைச் சொல்லலாம். வாந்தி எடுக்கக் கூடாது. :(

Unknown said...

//அடிபட்டவனுக்கு குணமானதும், விசாரிச்சு உள்ள போடுங்க.
அடிச்சவனையும் உள்ள போடுங்க.//

I would like to quote my Previous comments:

@@@
So the final Aim is maintaiing the Status Que. That is the Oppression against Dalits which is in India for prolonged time without any protest has to be continued. When this opression has been repelled then these Good hearted, peace loving people will come in to picture and Say violence in any form must be punished... Good Show....
@@@

@@@
XXXXX doesn't say anything about the Caste feeling behind Ambedkar name missed in the poster. He generally speaks aganist Castism. By this he tries to equate the Violence of Upper caste and the Counter voilence of oppressed caste. Vry good Tactics.
@@@@

The Whole problem is not between those individuals who were beaten up and those who beaten them up.

Instead it is the Caste ridden soceity that is much more responcible and to be precisely the Upper caste Organizations, their caste showcase rituals like 'Thevar Jeyanthi' and their economic-cultural opression against opressed caste people.

Very few people have shown their condemnation on this law college incident in this line.

We The People or Surveysun like thems still restrain themself with in condemning those individuals not the system or the other big background behind them. That is real pathetic...

It is the right time to unite the voices of those who believe themself as democratic against Untouchability and Brahmanism. But these core evils are hidden behind Pseudo Humanism. It is pathetic.

Unknown said...

//In this Post, I do agree all the points and core issue which lead to this incident but one small mentioning on this made the total diversion for the actual subject discussed that was ...////

Those who expressed their view on the caste backgrond of the incident didn't much emphasised on that anti feminism bad word.

But only those who wanted to hide their inablity to condemn the real socio economic background of this incident unequivocally have only focussed the attention on that Anti feminism bad word. That is what I wanted to point out...

Unknown said...

//My opinion politics shouldnt enter any college either Govt or Private bcoz that is spoiling the Students nature and life! And that was the core Idea behind that Article and its not meant as you think! I did mentioned base reason as the Caste based provocations and I am well aware of the reason behind the Name Ambedkar was purposefully avoided on Thevar Jeyanthi poster! I have mentioned it clearly as well. //

We the People,

I am sorry if I have hurt your Genuine Intentions. But I cannot be blammed for the short commings in your opinon or the mould you choose to express your views.

You can not aviod caste politics entering a students heart when his real life blood is living in Village, facing day today Caste atrocities and he himself a spectator of cultural Chovnism of upper caste in his surroundings in College. Your view are very narrow that you may be focusing your aim on Victims.

SurveySan said...

prognostic,

////We The People or Surveysun like thems still restrain themself with in condemning those individuals not the system or the other big background behind them. That is real pathetic...
/////

i am a small person, with less knowledge on this 'system' issue.
in my view, all the culprits must be punished.

Finding the root cause and cleansing the system is a necessity too. I am all for it.
I didnt want to say 'clean the system', just for the heck of it ;)

you seem to know a lot of things, i suggest you write in detail and explain the dumb ones like me, what the solution is for our problems.