ஓடிப்போய்
சில்லறைதேடி
பயணச் சீட்டெடுத்து
நடைமேடை குதித்து
மோதவந்தவனை விலக்கி
தண்டவாளம் தாண்டி
சேருமுன்
கூக்குரலிட்டபடி
தடக் லடக்கென
வெகு நீளமாய்ச்
செல்கிறது
ரயில் வண்டி
'சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில்' என்ற வரியைச் சேர்த்து முடித்தால் இது சோகக் கவிதையாகிவிடக்கூடுமென்பதால் மேற்கண்ட வரிகளோடு கவிதை முற்றுப் பெறுகிறது. 'அடுத்த ரயில் பிடித்து வீட்டிற்குச் சென்றான்' என நீங்கள் படித்துமுடித்துவிட்டு உங்கள் பணிகளைத் தொடரலாம் அல்லது
கால்மணிநேரம் தாமதமாய்
அடுத்த ரயிலில்
வீடடைந்தால்
கோட்டை விட்டிருந்தேன்
சில துப்பாக்கி வெடிச் சத்தங்களை
என வாசித்தும் இன்புறலாம்.
கார்காலக் குறிப்புகள் - 58
5 days ago
19 comments:
நான் //செல்கிறது
ரயில் - // அடுத்த வரிகள் எழுதியுள்ளேன். கடைசி வரி என்ன
என்று யாராவது யூகிக்க முடியுமா?
Sundar yoo too also.
ஓடிப்போய்
சில்லறைதேடி
பயணச் சீட்டெடுத்து
நடைமேடை குதித்து
மோதவந்தவனை விலக்கி
தண்டவாளம் தாண்டி
சேருமுன்
கூக்குரலிட்டபடி
தடக் லடக்கென
வெகு நீளமாய்ச்
செல்கிறது
ரயில் - அடுத்த
ரயிலுக்கு காத்திருக்கும்
நேரத்தில் அவிச்ச வேர்கடலை
வாங்கி அனுபவிக்கலாம்
என்று வெளி வந்து
கடலை வாங்கி உள்ளே வர.....
.......................
நன்றி, முரளி கண்ணன்.
நன்றி, ரவிஷங்கர். அந்தக் கவிதையை எப்படி வேண்டுமானாலும் முடிக்கலாம் :)
வணக்கம்
நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தியா பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.
http://www.thamizhstudio.com/
Add a Gadget - ல் இதை பயன்படுத்துக
வழி –> Add a Gadget –> select HTML/JavaScript
Title : தமிழ் ஸ்டுடியோ.காம்
Content : img alt=”தமிழ் ஸ்டுடியோ.காம்” src=”http://thamizhstudio.com/images/home_stud_logo.jpg”/>
டாக்டர், நன்றி.
கடலை வாங்கி உள்ளே வர...
”கன்” எடுத்துச் சுட்டான் கயவன்.
இப்படி முடிக்கலாமா?.என்னைத்தான் சுட்டிருக்கனும்னு சொல்றீங்களா?.அதுவும் சரிதான். :)
நான் எழுதிய கவிதைக்கு?...சரி விடுங்க .அந்த கடைசி வரியைப் பாராட்டி ஏதாவது நீங்க சொல்லி இருந்தீங்கன்னா,அட நானும் கவிஞந்தான் அப்பிடி இன்னும் பல கவிதைகளை அரங்கேற்றுவேன்.இப்படி எதுவும் சொல்லாம இருந்தா எப்படி?..அப்ப நான் கவிஞ்சனா ஆகவெண்டியதுதானா?.இதுதான் காலத்தின் கட்டாயமா?
ஒரு கவிதை பல முடிவு என்று தலைப்பிட்டிருக்கலாம்
//எப்படி வேண்டுமானாலும் முடிக்கலாம் //
கலைஞர் டைப் பதில். ரசித்தேன்.
நான் எழுதிய கடைசி வரி.
“அடுதத கடைசி ரயிலும் போயிற்று”
தங்கள் கவிதை ஏற்கனவே பல சாத்தியக்கூறுகளை முன்வைக்கும்.. அதில் தாங்களே அதற்கான முன்மொழிதல்களை வரையறுத்தது வாசகனை கட்டிப்போடுவது போலவோ அல்லது கைகாட்டிச்செல்வது போல ஆகிறதே....தேவையா அந்த கடைசி குறிப்புகள் ஒருவேளை வேறு மாதிரியான கட்டமைப்பு தாங்கள் சொல்லவந்ததை சொல்லியிருக்கூடும் என்பது என் எண்ணம். ஆனாலும் நல்ல கவிதை...
நன்றி, நல்லதந்தி. நீங்க கவிஞர்தான் :)
நன்றி, மின்னல்.
நன்றி, கிருத்திகா. ஒரு கோபத்தில் எழுதியது. பிறகு வேண்டுமென்றுதான் குறிப்புகளைச் சேர்த்தேன்.
:)
Nalla irukkuthu
நன்று!
அதிர்ஷ்டம் இல்லாததால் ரயிலை விட்டு உயிர்பிழைத்தோர் சிலர், அதிர்ஷ்டம் இருந்ததால ரயில் பிடித்து உயிர் இழந்தோர் பலர். அதிர்ஷ்டமும் துரதிர்ஷ்டமோ?
என்ன சொல்லவர்றேன்னு புரியுதா? இல்ல எனக்கே புரியல அதுதான்...
சென்ஷி, பொட்டீக்கடை, ஆ! இதழ்கள்... நன்றி.
முடிவது சுபமாகவே இருக்கட்டும்.
இனி மனிதம் தளைக்கட்டும்
மொழி விளையாட்டின் இன்னொரு அத்தியாயம். ரசித்தேன் சுந்தர்.
அனுஜன்யா
நல்லாயிருக்கு
நன்றாக உள்ளது... பல சாத்தியங்கள் மட்டுமல்ல பல உணர்வுகளையும் கட்டமைக்கும் ஒரு மொழி விளையாட்டு என்பதாக உள்ளது.
வால்பையன், அனுஜன்யா, அத்திரி, ஜமாலன்... நன்றி.
Post a Comment