பதிவுலக நண்பர்களுக்கு,
அறிந்த எழுத்தாளர் கோபி கிருஷ்ணனின் அறியாத வாழ்க்கையை 'மழை' சிற்றிதழ் அறிய வைத்தது. நெகிழ்ந்த மனம் கொண்ட கோபியின் தன் வரலாறு, ஒருவகையில் முக்கியமான ஆவணம். இதற்கு காரணமான அன்பு நண்பர் யூமா வாசுகிக்கு நன்றி.
அச்சில் 2002ம் ஆண்டு கோபியின் செவ்வி வெளிவந்தபோது எந்தவகையான தாக்கத்தை ஏற்படுத்தியதோ, அதே வகையான பாதிப்பை இன்று வலையுலகிலும் ஏற்படுத்தியிருக்கிறது. மின்னஞ்சல் / பின்னூட்டம் வழியாகவும், தொலைபேசி வழியாகவும் தொடர்பு கொண்ட நண்பர்கள் கோபியின் முழுமையான படைப்புகள் அடங்கிய தொகுப்பு எங்கே கிடைக்கும் என்று விசாரித்தார்கள்.
வரும் 2010ம் ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில் 'தமிழினி' பதிப்பகம் கோபி கிருஷ்ணனின் அனைத்து படைப்புகளையும் ஒரே நூலாக கொண்டு வர இருக்கிறது என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.
தவிர, தமிழின் முக்கியமான படைப்புகளில் ஒன்றாக கருதப்படும் கோபி கிருஷ்ணனின் 'டேபிள் டென்னிஸ்' , மற்றும் 'தூயோன்' சிறுகதைத் தொகுப்பை தேவைப்படும் வலையுலக நண்பர்களுக்கு இலவசமாகத் தர முன்வந்திருக்கிறோம். இப்படியொரு வாய்ப்பை வழங்கிய 'தமிழினி' வசந்தகுமாருக்கு நன்றி.
பிரதிகள் தேவைப்படும் நண்பர்கள், செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். பைத்தியக்காரன் அல்லது ஜ்யோவ்ராம் சுந்தரின் இணைய முகவரிக்கு உங்கள் முழுவிலாசத்துடன் மெயில் அனுப்பினால் போதும். ஒரு வாரத்திற்குள், பிரதிகள் தபாலில் அனுப்பி வைக்கப்படும். இதற்காக நீங்கள் பணம் செலவழிக்க வேண்டியதில்லை. உங்களுக்கு இரண்டு பிரதிகளும் தேவையா அல்லது இரண்டில் எந்தப் பிரதி வேண்டும் என்ற விவரத்தையும் அஞ்சலில் தெரிவிக்க வேண்டுகிறோம்.
வெளிநாடுகளில் வசிக்கும் வலையுலக நண்பர்கள், இந்திய முகவரியை அளிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
ஜ்யோவ்ராம் சுந்தர் jyovramsundar@gmail.com அலைபேசி : 98845 71371
பைத்தியக்காரன் sivaraman71@gmail.com அலைபேசி : 98409 07375
தோழமையுடன்
பைத்தியக்காரன்
ஜ்யோவ்ராம் சுந்தர்
கார்காலக் குறிப்புகள் - 60
1 day ago
36 comments:
வலையுலக நண்பர்கள் இதற்கு தரும் ஆதரவை பொறுத்து தொடர்ந்து இதுபோல் செய்யலாம் சுந்தர்.
தோழமையுடன்
பைத்தியக்காரன்
அன்புள்ள ஜ்யோவ்ராம் மற்றும் பைத்தியக்காரன் அவர்களுக்கு!
கோபிகிருஷ்ணன் குறித்த தங்களது பதிவுகளை தொடர்ந்து வாசித்து வருகிறேன். கோபிகிருஷ்ணனை முழுமையாக வாசிக்க விரும்புகிறேன். தங்களால் எத்தனை புத்தகங்களை தந்து உதவ முடியுமோ அத்தனை புத்தகங்களையும் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
என்னுடைய இந்திய (..த்தா).. இல்லையில்லை.. தமிழ் முகவரியை தங்களுக்கு தனிமடலில் அனுப்பியிருக்கிறேன்.
அன்புடன்
லக்கிலுக்
நல்ல முயற்சி சுந்தர்ஜி...
எனது முகவரியை நானும் தனிமடலில் அனுப்பி வைக்கிறேன். தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி!
இப்படியும் ஒரு முயற்சி ஆச்சரியமளிக்கிறது...
ஜ்யோவ்ராம்சுந்தருக்கு தனி மடல் அனுப்பியுள்ளேன்.
பாராட்டப்படவேண்டிய விடயம். உங்கள் இருவருக்கும் மற்றும் திமிழினி வசந்தகுமாருக்கும் பாராட்டும் மற்றும் நன்றிகளும்.
அனுஜன்யா
சுந்தர்ஜி & பைத்தியக்காரன்.. மிக நல்ல முயற்சி/முன்னுதுராண முயற்சி..
வாசிப்பவர்கள் சார்பாக நன்றிகள்..தொடருங்கள்..ஆதரவு நிச்சயம் இருக்கும்
மிக மிக அற்புதமான செயல்! உங்கள் முயற்சி மிகவும் போற்றுதலுக்கு உரியது!
// இப்படியொரு வாய்ப்பை வழங்கிய 'தமிழினி' வசந்தகுமாருக்கு நன்றி.//
பைத்திய்காரன்,சுந்தர் மற்றும் தமிழினி பதிப்பகத்தாருக்கு நன்றிகள் பல.
My sincere Thanks sundar, very good work.
மிகவும் நெகிழ்ச்சியாக உணர்கிறேன், கோபிகிருஷ்ணன் அவர்களின் படைப்புகள் நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற ஆசையை தாங்கள் மற்றும் பைத்தியக்காரன் அவர்களும் நிறைவேற்றியிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழினி பதிப்பகத்துக்கும் அனேக நன்றிகள்.
நல்ல முயற்சி ஜயோவ்ராம்.கோபிகிருஷ்ணன் அவர்கள் புத்தகம் 'டேபிள் டென்னிஸ்' என்னை மிகவும் கவர்ந்த ஒன்று.ஆனால் வெளிநாட்டில் இருப்பதால் உங்கள் மூலம் வாங்க முடியவில்லை.
இருந்தாலும் anyindian.com வழியாக இன்று ஆர்டர் செய்துவிடுவேன்!
இந்த பதிவுலகம் மூலம் உங்களை அறிந்தது மகிழ்ச்சிகரமாக உள்ளது.
இந்த முயற்சிக்கு என் வாழ்த்துகள்.அவர் ஆக்கங்கள் எல்லோராலும் வாசிக்கப் பட வேண்டும்.
ஒரேஒரு வேண்டுகோள்: நியூ ஹரைசன் பதிப்பாளர்கள் செய்தது போல,இந்த புத்தகத்தை வாங்குபவர்கள் கண்டிப்பாக அதைப் பற்றி தங்கள் எண்ண்ங்களை பதிய வேண்டுமென ஒரு அன்பு வார்த்தையும் சொல்லிவையுங்களேன்.
நன்றி.
மிக நல்ல முயற்சி இருவருக்கும் பாராட்டுகள்.
பதிவுலக நண்பர்களுக்கு,
இந்தப் பதிவுக்கும், கோபி கிருஷ்ணனுக்கும் நீங்கள் செலுத்தும் மரியாதை எங்களை உணர்ச்சிவசப்பட வைக்கிறது.
வலைப்பூவில் எழுதாத பலர் மெயில் மூலம் தொடர்பு கொண்டிருக்கிறார்கள். பிரதிகளை கேட்டிருக்கிறார்கள். ஆச்சர்யமாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது.
சிலர், பிரதிகள் இருக்கிறதா அல்லது தீர்ந்துவிட்டதா என தயக்கத்துடன் விசாரித்திருக்கிறார்கள்.
கவலையே வேண்டாம். வேண்டிய அளவுக்கு பிரதிகள் இருக்கின்றன. எனவே ஆர்வமுள்ள உங்கள் நண்பர்களுக்கும் அவசியம் பரிந்துரை செய்யுங்கள்.
இதுவரை பிரதிகளை கேட்டு விலாசம் தந்துள்ள 25 நண்பர்களுக்கும், இனி விலாசம் தரப் போகும் தோழர்களுக்கும்,
வரும் திங்கள் முதல் பிரதிகள் தபாலில் அனுப்பப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஒருவேளை காலம் கடந்து இந்தப் பதிவை வாசிக்கும் நண்பர்கள், இப்போது நாம் விலாசம் தரலாமா? பிரதிகள் இருக்குமா? என சந்தேகத்துடன் மவுனமாக இருக்கவேண்டாம்.
இந்தப் பதிவை எப்போது நீங்கள் வாசித்தாலும், கோபி கிருஷ்ணனின் படைப்புகள் தேவையெனில் அவசியம் உங்கள் விலாசத்தை தெரிவியுங்கள்.
தொடர்ந்து நீங்கள் காட்டி வரும் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி.
தோழமையுடன்
சுந்தர்
பைத்தியக்காரன்
அன்புள்ள ஜ்யோவ்ராம் மற்றும் பைத்தியக்காரன் அவர்களுக்கு
மிக்க நன்றி. தொடரட்டும் உங்கள் அரிய பணி
Wow Great!!!
Thanks to Mr Sundar, Mr Vasanthakumar, Mr Sivaraman for this great effort.
இப்படியெல்லாம் எழுத வேண்டும் என்று நண்பர்களை வழிகாட்டும் தகுதி உங்கள் இருவருக்கும் உண்டு என்பதை வெறும் சொல்லால் அன்றி பல செயல்களாலும் நிரூபித்துக் கொண்டிருக்கும் பைத்தியக்காரன்/சுந்தர்ஜிக்கு எனது அன்பு முத்தங்கள்.
கோபி.கிருஷ்ணன் குறித்த முந்தைய பதிவுகளைப் பார்த்து/படித்து மனம் அலைபாய்ந்த நிலையில் இருக்கிறேன்.
தமிழினி.வசந்தகுமாருக்கும் என் அன்பு.
முகவரி மின்னஞ்சலில்.
அளவில்லா அன்போடு
-பரிசல்காரன்
சுந்தர் & சிவராம்.
என்ன சொல்ல? எது சொன்னாலும் உங்கள் நல்ல முயற்சிக்கு உறைபோடக் காணாது.
தமிழினி வசந்தக் குமாருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
நன்றி மற்றும் வாழ்த்துக்கள் தல, உங்கள் முயற்சிகளுக்கு..
இந்த இரண்டு புத்தகங்களும் என்னிடம் இருக்கிறது. சமீபத்தில் புத்தக கண்காட்சியில் வாங்கினேன்.. ஆனால் ஒவ்வாத உணர்வுகள் கிடைக்கவில்லை.
எப்படி இருக்கீங்க. நம் வலையுலக நண்பி பொயட்ரீ சார்பாக ஒரு உதவி தேவை. அவர்களின் நண்பி சரஸ்வதி காமேஸ்வரன் மிகுந்த முயற்சிக்கு பிறகு வட மற்றும் தென் துருவங்களுக்கு 2007ல் பயணித்திருக்கிறார். இரண்டு துருவங்களுக்கும் சென்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றும் இவருக்கு சரியான மீடியா அறிமுகம் கிடைக்கவில்லை. அவர்கள் முயன்று பார்த்தும் இந்த செய்தி சரி வர ஊடக வாயிலாக வெளியே வரவேயில்லை. ஆனால் கொடுமை என்னவென்றால் சமீபத்தில் 2010ல் ஒரு பெண்மணி இதே இரண்டு துருவங்களுக்கும் போகிறார் என்றும் அவரே இந்தியாவின் முதல் பெண்ணாக இருப்பார் என்றும் செய்திகள் வெளி வரத் துவங்கி இருக்கின்றன. நம் வலையுல நண்பர்கள் யாரேனும் பத்திரிகை துறையில் இருந்தாலோ அல்லலது அவர்களுக்கு தெரிந்தவர்கள் இருந்தாலோ, இந்த செய்தி(உண்மை) வெளி வர உதவ முடியுமென்றால் தயவு செய்து பின்னூட்டம் மூலம் தெரிவியுங்களேன் ப்ளீஸ்....மிக்க நன்றி.
http://dubukku.blogspot.com/2009/04/blog-post.html
அருமையான முயற்சி. நன்றி மூவருக்கும்.
உங்களையும், பைத்தியக்காரனையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி!
என் முகவரியை தனி மெயிலில் வேறு அனுப்ப வேண்டுமா? ;)
நிறைய நன்றிகள் வாழ்த்துக்களும்!
அன்புள்ள பைத்தியக்காரன் மற்றும் ஜ்யோவ்ராம் சுந்தர்!
பிரதி கிடைக்கப்பெற்றது. நன்றி. டேபிள் டென்னிஸை ஒரே மூச்சில் படித்துவிட முடியவில்லை. ஒவ்வொரு பாயிண்டாக நான்கைந்து முறை வாசிக்க வேண்டியிருக்கிறது. இதயம் முழுக்க கோபிகிருஷ்ணன் விசுவரூபம் எடுத்து தூக்கத்தை கெடுக்கிறார்.
நன்றி!
மிக்க நன்றி.
மறக்கப்பட்ட எழுத்தாளரை பரவலாக கவனப்படுத்தப்பட்ட வேண்டும் என்கிற நோக்கில் தன்ஆர்வத்துடன் ஈடுபடும் இது இணையத்தில நல்லதொரு முன்னுதாரணம். இதை சாத்தியப்படுத்திய அனைத்து நண்பர்களுக்கும் பாராட்டும் வாழ்த்தும்.
குறிப்பிட்ட பிரதிகள் என்னிடம் ஏற்கெனவே உள்ளன. ஆனால் அதைப் பற்றி எழுத வேண்டுமென்ற அவாவை இந்தப் பதிவு ஏற்படுத்தியிருக்கின்றது.
பல குடித்தனங்கள் புழங்கும் கூண்டுகளில் வாழும் கீழ்நடுத்தர மனிதர்களுக்கு கோபியின் படைப்புகள் மிக நெருக்கமாக இருக்கும். உளவியல் குறித்த சிந்தனைகளை மேதாவித்தனத்துடன் அல்லாமல் போகிற போக்கில் யதார்த்தமாக சொல்லிக் கொண்டு போவார்.
ஒரு எழுத்தாளன் இறக்கும் வரை காத்திராமல் இனியாவது அவன் உயிரோடு இருக்கும் போதே பாராட்டப் பழகுவோம்.
பாராட்டப்படவேண்டிய விடயம். உங்கள் இருவருக்கும் மற்றும் திமிழினி வசந்தகுமாருக்கும் பாராட்டும் மற்றும் நன்றிகளும்.
பாரதியை போல தான் வாழும் காலத்தில் மதிக்க படாமலும் போற்ற்படமலும் வாழ்ந்து மறைந்த கோபி அவர்களுடைய வால்ழ்கையை படிக்கும் போது மனதில் எதோ ஒரு வெறுமை ஏற்பட்டது.
பதிவிற்கு நன்றி சுந்தர்.
அன்புள்ள ஜ்யோவ்ராம் மற்றும் பைத்தியக்காரன்,
கோபி கிருஷ்ணன் பற்றி எஸ்ரா எழுதிய கட்டுரை ஒன்றை உயிர்மையில் படித்திருக்கிறேன். அந்த கட்டுரை கோபி கிருஷ்ணனின் படைப்புகளை விட கோபி கிருஷ்ணன் என்ற மனிதரையே அறிய உதவியது. இவ்வளவு தாமதமாக அவர் படைப்புகள் பற்றி அறிய வருவது வேதனை தருகிறது.
கோபி கிருஷ்ணனின் படைப்புகள் நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படும் உங்கள் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றி.
அன்புடன்,
அருண்.
Is there any soft copy ?
அன்பின் ஜ்யோ,
கோபிகிருஷ்ணனின் எழுத்துக்களை படித்தது போலவும் இருக்கிறது..ஆனால் படிக்காதது போலவும் இருக்கிறது.புத்தகங்களை கேட்க தயங்கியதும் இதற்காகத்தான்.
படித்து முடித்தவுடன் நண்பர்களுக்கு புத்தகங்கள் பரிசளிக்கும் வழக்கம் இன்றளவும் தொடர்வதால், கோபியின் எழுத்துக்களை படித்தது பற்றி உறுதி செய்ய இயலவில்லை.
உங்களுக்கும், பைத்தியக்காரனுக்கும் நன்றிகள் பல.
எனது முகவரியும் தனி மெயிலில்.
வின்சென்ட் வான்காவைப்போல வாழும் போது செத்து செத்து வாழ்த்திருக்கிறார்,பசி பட்டினி,ஏழ்மையை கடைசி நிலை வரை கண்டிருக்கிறார்..கனடா போனதில்லை,அமெரிக்கா,ஆஸ்த்திரேலியா போனதில்லை.நல்ல பியூசன் இசையை உயர்தரமான பிளேயரில் கேட்டதேயில்லை.மோக்கா சென்று நூறு ருபாய் காப்பியை குடித்ததில்லை.
வாழ்வில் ஒரே மகிழ்ச்சி தன மகளுக்கு 28000 ருபாய் செலவில் கல்யாணம் செய்தது.
அய்யா இலக்கிய ரசிகர்களே இவரின் புத்தகங்கள் இந்நேரம் உங்கள் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கும்,தயவு செய்து ஒரு புத்தகம் ரூ 150 என்று கணக்கிட்டு ,தபால் செலவு ரூ 50 எனக்கொண்டு குறைந்தது ரூ 500 ஆவது இதை அனுப்பிய பதிப்பகத்திற்கு அனுப்பினால் நீங்கள் உண்மையான எழுத்தை சிலாகிப்பதற்கு அர்த்தமாகும்.இன்றைய தேதியில் மகா கேவலமான "தோரணை"படத்தின் டிக்கெட்டுகள் கூட 120 ருபாய்.காலத்திற்கும் வைத்து போற்றக் கூடிய படைப்புகளை இலவசமாக வாங்கவே கூடாது,அவர் மனைவி இன்றும் புரூப் திருத்திக் கொண்டு கஷ்ட ஜீவனம் செய்து வருகிறார்.அவருக்கு நிச்சயம் இந்த பணம் முழுவதும் போய்ச் சேரும் (தமிழினி, ஜ்யோவ்,மற்றும் இந்த குழுவின் மீது அளவு கடந்த மதிப்பு வந்து விட்டது)
வின்சென்ட் வான்காவின் பெரும்பாலான ஓவியங்கள் அவரது வீட்டு வாடகைக்கும் பிரட் வாங்கவுமே பயன்பட்டன.இன்று அதை பாதுகாப்பதற்கே ஆயுதப் படையை போட்டுள்ளனர். வாழும் போது அங்கீகாரம் செய்யாத தமிழினத்தை கண்டு வெட்கி தலை குனிகிறேன்.
கார்த்திகேயன்
அமீரகம்
கோபி.கிருஷ்ணன் குறித்த பதிவுகளைப் படித்து, என்னுடைய எண்ணங்களை எழுத்தில் கொடுக்க இயலவில்லை..
கோபிகிருஷ்ணனை முழுமையாக வாசிக்க விரும்புகிறேன். தங்களால் எத்தனை புத்தகங்களை தந்து உதவ முடியுமோ அத்தனை புத்தகங்களையும் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இன்று புத்தக கண் காட்சியில் தமிழினி ஸ்டாலில் கோபிகிரிஷ்ணனின் மூன்று நூல்களையும் வாங்கினேன். உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி.
could you please help, i would like to buy his novels, i could not find anywhere online. please suggest. thank you
மிகுந்த நண்டி திரு.ஜ்வோரம் சுந்தர். கோபி கிருஷ்ணன் பற்றிய பதிவுகள் மனம் நெகிழ செய்கின்றன.
Post a Comment