சில கேள்விகள், சில பதில்கள்

1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

இயற்பெயர் சுந்தர். பிரமிளின் பல பெயர்களுள் ஒரு பெயரின் ஒரு பாகமான ஜ்யோவ்ராம் என்பதையும் சேர்த்து நானே வைத்துக் கொண்டதுதான். பிடித்ததால்தான் வைத்துக் கொண்டிருக்கிறேன். மட்டுமல்லாது, பெயரில் என்ன இருக்கிறது, அல்லது பெயரில் என்னதான் இல்லை என யோசித்துப் பார்ப்பது நல்ல மொழி விளையாட்டாகவும் இருக்கும்.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

தனிமையில் மிதமான போதையில் இருக்கும்போது வண்ணதாசனின் செடிகளுக்கு மாதிரியான கதைகளைப் படித்தால் அழுகை வரும். அப்படித்தான் கடைசியாக அழுதிருப்பேன் என நினைக்கிறேன் - நாள், தேதி நினைவிலில்லை.

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

கோழி கிறுக்கியதைப் போல் இருப்பதால் பிடிக்காது. நீங்கள் கேட்பது signatureஐ என்றால், ஓரளவு பரவாயில்லை.

4.பிடித்த மதிய உணவு என்ன?

உணவு விஷயங்களில் நான் அதிகம் கவனம் செலுத்துவதில்லை. ருசியான, உடல் நலத்திற்கு அதிகக் கேடில்லாத உணவு எதுவானாலும் எனக்குப் பிடித்தமானதுதான்.

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

உடனே என்றால் கொஞ்சம் சிரமம்தான். பழகிப் பழகித்தான் நட்பாக ஆகும்.

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

அருவியில். நீர் ஃபோர்ஸாக உடலில் வீழ்வது இதமாக இருக்கும். கடலுல் உப்புத் தண்ணீர் வேறு. அடித்துப் புரட்டிப் போடும் அலைகள் சில சமயம்.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

முகத்தை.

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?

நான் ஒரு சுயமோகி. எல்லா விஷயங்களும் எனக்குப் பிடித்தமானவைதாம்.

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயம் எது?

நான் அப்படி எல்லாம் ஆராய்ச்சி செய்பவன் இல்லை.

10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

என்னுடைய 15 வயதுவரை உற்ற நண்பனாய் இருந்த என் அண்ணன் ராமச்சந்திரன்.

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

கறுப்பு நிற கால்சட்டையும் வெள்ளை அரைக்கைச் சட்டையும்.

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

எதுவும் இல்லை.

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

இள மஞ்சள் நிறம் எனக்குப் பிடித்தமானது. அதனால் அந்த நிறமாகவே மாற்றிவிடுங்கள்.

14.பிடித்த மணம்?

பெட்ரோல் வாசனை, நல்ல பெர்ஃப்யூம் வாசனை, லேசாக மழை அடிக்கத் துவங்கியவுடன் கிளம்பும் மண் வாசனை, குழந்தை வாசனை... நிறைய உண்டு.

15.நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார்? ஏன் உங்களுக்கு அவர்களை பிடித்து உள்ளது. அவர்களை அழைக்கக் காரணம் என்ன?

கென் - என்னுடைய நண்பர் மற்றும் சிறந்த புனைவெழுத்தாளர்.
ஸ்ரீதர் நாராயணன் - இதுவமது.

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

அதிஷாவின் எழுத்துகளில் இப்போதுதான் கொஞ்சம் பண்பட்ட தன்மை வந்திருக்கிறது. இன்னும் அவர் நிறைய முயற்சி செய்ய வேண்டும் என்பது என் ஆசை.

ஆடுமாடு - இவரது வட்டார மொழிக் கதைகள்.

17. பிடித்த விளையாட்டு?

I like all ball games :) கிரிக்கெட், செஸ், கேரம்.

18.கண்ணாடி அணிபவரா?

இல்லை

19.எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?

திரைப்படங்களைப் பார்ப்பதில்லை.

20.கடைசியாகப் பார்த்த படம்?

பல மாதங்களுக்கு முன் சுப்ரமணியபுரம்.

21.பிடித்த பருவ காலம் எது?

குளிர்காலம்.

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?

வண்ணதாசனின் ஓய்தலும் பெய்தலும் (இரண்டாவது முறையாக வாசிக்கிறேன்), வா மு கோமுவின் அழுவாச்சியா வருதுங் சாமி, நாஞ்சில் நாடனின் சூடிய பூ சூடற்க.

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

படமே வைத்துக் கொள்வதில்லை. அதனால் மாற்றும் பிரச்சனையே இல்லை.

24.உங்களுக்கு பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?

பிடித்தது : மெலிதான ஏசி உறுமல்.
பிடிக்காதது : தரையில் மம்மட்டியால் தேய்க்கும்போது எழும் சப்தம் உடலைக் குறுகுறுக்க வைக்கும். அந்த இடத்தை விட்டு வேகமாக அகன்றுவிடுவேன்.

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

டெல்லி.

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

தனித்திறமை என ஒன்றும் கிடையாது - அப்படி நாம் நம்பும் திறமையும் வேறு யாருக்காவது இருக்குமென்று நினைக்கிறேன்.

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

இங்கு, இணையத்தில், பலர், தெரியாத விஷயத்தைத் தெரிந்ததாக சீன் போடுவது எரிச்சலைக் கிளப்பும்.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

வழக்கமாகிப் போன பழக்கத்திற்கு இவனொரு அடிமை.

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

சாதாரணமாக வீட்டை விட்டு எங்கும் வெளியில் செல்லாமல் அறைக்குள் வெறும் லுங்கி பனியனுடன் தரையில் உருண்டு கொண்டிருப்பதே என் விருப்பம்.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

இப்போது இருப்பதைக் காட்டிலும் இன்னும் கொஞ்சம் தீவிரமாக இயங்கியபடி.

31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?

அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை.

32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?

இப்படி கேப்ஸ்யூல் வடிவ கொட்டேஷன்களில் எனக்கு நம்பிக்கை கிடையாது.

(இந்தத் தொடர் விளையாட்டிற்கு என்னை அழைத்த அதிஷா மற்றும் ஆடுமாடுக்கு நன்றி)

25 comments:

மிதக்கும்வெளி said...

பதில்கள் பரவாயில்லை. ஆனால் இதுமாதிரியான கேள்விகள் பயங்கர போரிங் ஆக இருக்கிறது.

Athisha said...

கிழிஞ்சுது..!

மணிகண்டன் said...

அதிஷா கூப்பிட்டதுல நீங்க ஒருத்தர் தான் இதை எழுதி இருக்கீங்க ! கல்யாணம் ஆகி ரொம்ப வருஷம் ஆச்சு போல. மனைவி குறித்தான கேள்வி பதில்ல ஒருவித maturity தெரியுது !!!!

Raju said...

Yes..
Finally you too.

anujanya said...

இருபத்தொன்பதாம் பதில் பிடித்தது :)

அனுஜன்யா

இராகவன் நைஜிரியா said...

ஹை... இந்த விளையாட்டில் நீங்களும் ஐக்கியமாயிட்டீங்களா...

ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு...

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

வீ்ட்டைவிட்டு சென்ற அதிகபட்ச தொலைவு - டெல்லி,

ஆனா உங்கட வீடு எங்க இருக்குது?

:D

அகநாழிகை said...

அன்பின் சுந்தர்,

//14.பிடித்த மணம்?

பெட்ரோல் வாசனை//

ரொம்ப டேஞ்சர்.

//17. பிடித்த விளையாட்டு?

I like all ball games :) //

உங்களோட ‘டச்‘ வரிகள்

//22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?

வண்ணதாசனின் ஓய்தலும் பெய்தலும் (இரண்டாவது முறையாக வாசிக்கிறேன்), வா மு கோமுவின் அழுவாச்சியா வருதுங் சாமி, நாஞ்சில் நாடனின் சூடிய பூ சூடற்க.//

“வா மு கோமுவின் அழுவாச்சியா வருதுங் சாமி“ சரியான புத்தகம்,

நாஞ்சில் நாடனின் சூடிய பூ சூடற்க
ஞாயிறு அன்றுதான் தமிழினிக்கு சென்று வாங்கிவந்தேன் படிக்கவேண்டும்.

பதில்களை ரசித்தேன்.

Jackiesekar said...

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

சாதாரணமாக வீட்டை விட்டு எங்கும் வெளியில் செல்லாமல் அறைக்குள் வெறும் லுங்கி பனியனுடன் தரையில் உருண்டு கொண்டிருப்பதே என் விருப்பம்.--//


தனிமை விரும்பி + கூண்டு பறவை போல....

தமிழன்-கறுப்பி... said...

:))

Ashok D said...

அனுஜன்யாவிற்கு பிடித்த பதிலே எனக்கும் பிடித்தது...
இப்படியான கேள்விகளுக்கு பதில் அளித்தது(கலந்துக்கொண்டது) ஆச்சரியம் அளித்தது.

மணிஜி said...

இங்கு, இணையத்தில், பலர், தெரியாத விஷயத்தைத் தெரிந்ததாக சீன் போடுவது எரிச்சலைக் கிளப்பும்.

சுவாரசியமான உண்மை

பித்தன் said...

மனைவியைப் பற்றியக் கேள்வியில் ஒருவித எச்சரிக்கைத் தன்மைத் தெரியுதே பயமோ!!

http://niyazpaarvai.blogspot.com/

Karthikeyan G said...

//32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?

இப்படி கேப்ஸ்யூல் வடிவ கொட்டேஷன்களில் எனக்கு நம்பிக்கை கிடையாது.//

Super!! Best of answer..

//இணையத்தில், பலர், தெரியாத விஷயத்தைத் தெரிந்ததாக சீன் போடுவது எரிச்சலைக் கிளப்பும்.//

நானும் தானோ? :-)

Joe said...

நல்ல பதில்கள் சுந்தர்.

Unknown said...

பெண்ணை பார்க்கும்பொது மாரை பார்கவில்லை எண்று சொல்பவர்கள் உண்மை சொல்லவில்லை, என்று சுஜாதா கூறிஉள்ளாரே---உங்கள் பதிலில் ஒரு false தெரிகிறதே--வாஹே குரு

குப்பன்.யாஹூ said...

nice one, I enjoyed, thanks

யாத்ரா said...

\\என்னுடைய 15 வயதுவரை உற்ற நண்பனாய் இருந்த என் அண்ணன் ராமச்சந்திரன்\\

???

மற்ற பதில்களை மிகவும் ரசித்தேன்.

கோவி.கண்ணன் said...

//17. பிடித்த விளையாட்டு?

I like all ball games :) கிரிக்கெட், செஸ், கேரம்.//

சப்லிங், ஸ்பூன் லிங், ஜலபுல ஜங், டிக்கி லோனா இதெல்லாம் புடிக்காதா ?

:)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, சுகுணா. ஆம்!

நன்றி, அதிஷா.

நன்றி, மணிகண்டன். கல்யாணம் ஆகி 11 வருசம் ஆகிடுச்சு :)

நன்றி, டக்ளஸ். இம்மாதிரியான போரான கேள்விகளுக்குப் பதில் சொல்வதில் சில சமயம் சுணக்கம் ஏற்பட்டாலும், பெரிய கஷ்டமெல்லாம் ஒன்றுமில்லையே.. அதான் :)

நன்றி, அனுஜன்யா.

நன்றி, இராகவன். டக்ளஸிற்குச் சொன்னதே :)

நன்றி, மதிவதனன். சென்னையில்தான் :)

நன்றி, பொன் வாசுதேவன்.

நன்றி, ஜாக்கிசேகர்.

நன்றி, தமிழன் - கறுப்பி.

கார்க்கிபவா said...

மண் வாசனை, அப்புறம் மண்வெட்டி..

சேம் ப்ளட் தல..

நந்தாகுமாரன் said...

//

32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?

இப்படி கேப்ஸ்யூல் வடிவ கொட்டேஷன்களில் எனக்கு நம்பிக்கை கிடையாது.

//

இது சூப்பருங்க ...

நேற்று தான் படித்தேன் ஆனந்த விகடனில் வெளியான உங்கள் கவிதையை ... நன்றாக இருக்கிறது உங்கள் நேரடிக் கவிதை ... வாழ்த்துக்கள் ...

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, அஷோக். டக்ளஸிற்குச்ச் சொன்னதே :)

நன்றி, தண்டோரா.

நன்றி, நியாஸ். உள்ளதை உள்ளபடியே எழுதியிருக்கிறேன் :)

நன்றி, கார்த்திகேயன். எனக்குத் தெரிந்து நீங்களில்லை :)

நன்றி, ஜோ.

நன்றி, வாஹே குரு. சுஜாதா அவரைப் பற்றிச் சொல்லியிருப்பார் :)

நன்றி, குப்பன் யாஹூ.

நன்றி, யாத்ரா.

நன்றி, கோவி கண்ணன். அந்த விளையாட்டுகளும் பிடிக்கும் :)

நன்றி, கார்க்கி.

நன்றி, நந்தா.

Ken said...

நல்லா பதில் சொல்லிட்டு என்னையும் மாட்டி விட்டுட்டீங்களே தல

:)

Sridhar V said...

சுந்தர்,

சுவையான பதில்கள். உங்களைப் போல் நானும் வீட்டுப் பறவைதான். அதுவும் அரட்டையடிக்க ஆள் கிடைத்தால் வெளியில் சுற்றுவதெல்லாம் வேஸ்ட்தானே :))

தகவலுக்காக - உங்களின் அழைப்பை ஏற்று தொடரை இங்கே தொடர்ந்துள்ளேன்.

உங்களின் அழைப்பிற்கு நன்றி! :)