நோக்கியாவின் சிறப்பு பொருளாதார மண்டலம் சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்பதூரில் இருக்கிறது என்பது பலருக்குத் தெரிந்திருக்கலாம். அதற்கு வழங்கப்பட்ட சலுகைகள் குறித்து தகவல் அறியும் சட்டத்தின்கீழ் சில விவரங்கள் பெறப்பட்டுள்ளன. அத்தகவல்களை இன்று New Indian Express வெளியிட்டுள்ளது.
நோக்கியோவின் உள்கட்டுமானத் தேவைகளுக்காக அவர்கள் சில அசையாச் சொத்துகளை வாங்க வேண்டியிருக்கிறது. அப்படி வாங்குவதற்கு ஆகும் செலவை அரசே ஒரு சலுகையின் மூலம் திருப்பித் தர உறுதியளித்திருக்கிறது. எப்படி? 2005லிருந்து மூன்று வருடங்களுக்கு நோக்கியா செலுத்தும் விற்பனை வரியை (VAT) திருப்பிக் கொடுத்துவிடுவதன் மூலம் இது சாத்தியப்பட்டிருக்கிறது. இப்படித் திருப்பிக் கொடுப்பது மட்டுமே ரூ 638 கோடிகள்! அதாவது நோக்கியாவின் உள்கட்டுமானத் தேவைகளுக்கு தமிழக அரசு பணம் கொடுக்கிறது!
பல சலுகைகள் கொடுக்கப்பட்டுள்ளன இந்த சிபொமவிற்கு. நிலங்களின் விலையை வழிகாட்டும் மதிப்பில் (guideline value) பாதி விலைக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. வழிகாட்டும் மதிப்பென்பதே மிகக் குறைவானதுதான் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதிலும் 50% வசூலித்திருக்கிறது. அப்படிக் குறைந்த விலைக்கு கொடுத்தது மட்டுமல்லாமல் அதற்கான முத்திரைத்தாள் வரியிலிருந்தும் விலக்களித்திருக்கிறது அரசு.
நோக்கியா சிபொமவில் விற்கும் / வாங்கும் பொருட்களுக்கு எவ்விதமான மாநில / நகரசபை வரிகள் கிடையாதென்றும் ஒரு சலுகை.
தொழிலாளர் நலனுக்கு எதிரானதாகவும் நோக்கியாவிற்குச் சாதகமாகவும் பல சலுகைகளை அரசு அளித்திருக்கிறது. அதில் முக்கியமானது, அரசு இந்த சிபொமவை public utility யாக அறிவித்திருப்பதாகும். contract labourகளாகவும் மற்றும் மிகக் குறைந்த ஊதியத்தில் (ரூ 3,400 ரூபாயிலிருந்து ரூ 5,400 வரை) வேலை செய்யப் பணிக்கப்படுகிறார்கள்.
இப்படிப் பல சலுகைகளை வழங்குவதற்கு அரசுகள் தரும் காரணங்கள் : வேலை வாய்ப்பு அதிகரிக்கச் செய்வது, முதலீட்டை அதிகரிப்பது என்பதாகும். ஆனாலும், பாருங்கள், இங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் உலக அளவில் நோக்கியாவில் வேலை செய்பவர்கள் வாங்கும் சம்பளத்தில் 45ல் ஒரு பங்கைத்தான் வாங்குகிறார்கள்!!
இரண்டு நாட்களுக்கு முன் வந்த செய்தியின் படி, சென்னையில் உள்ள நோக்கியாதான் உலகத்திலேயே அதிகப்படியாக அலைபேசிகளை உற்பத்தி செய்கிறதாம். இன்னும் தங்கள் முதலீட்டையும் உற்பத்தியையும் அதிகப்படுத்தப் போகிறார்களாம்.
தொழிலாளர்கள் குறைந்த ஊதியத்தில் பல உரிமைகள் மறுக்கப்பட்டு வேலை செய்வதால் அவர்களுக்கு லாபம் கிடையாது. சரி, அரசிற்காவது ஏதாவது வருமானம் வருமா என்று பார்த்தால், அதுவும் கிடையாது. உங்களுக்குத் தெரிந்திருக்கலாம், சிபொமவில் இருக்கும் நிறுவனங்களுக்கு சுங்க வரி, கலால் வரி எதுவும் கிடையாது. ஏன், வருமான வரியிலிருந்தும் விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது!
இப்போது ஒரு கேள்வியை கேட்டுக் கொள்வோம். இப்படிப்பட்ட சிபொமக்களால் யாருக்கு லாபம்? விடை தெரிய மூளையைக் கசக்க வேறு வேண்டுமா என்ன? ஆனால் உப கேள்வியாக எழும் ‘பிறகு ஏன் பல சிபொமக்கள் ஆரம்பிக்கப்படுகின்றன' என்பதற்கு நிச்சயம் மூளையைக் கசக்கித்தானாக வேண்டும்!
கார்காலக் குறிப்புகள் - 60
8 hours ago
48 comments:
ஓட்டுப் போடுறவன் சரியா இல்லைன்னா ஓட்டுப் பொறுக்கிங்க வேற என்னங்க செய்வான்!
நம்ம காசை பிடுங்கி கம்பெனி காரனுங்க கூட பங்கு போடத்தான செய்வான்!
யாருக்கு லாபம் என்பது தெரியாது ஆனால் நமக்கு நஷ்டம் அது மட்டும் தெளிவு!!!!!
கோடீஸ்வரர்களை மேலும் கோடிகளைக் குவிக்க வைப்பதற்கான அமைப்பே அரசாங்கம். சிறப்பு பொருளாதார மண்டலங்களின் சாராம்சமும் அதுதான். அடுத்த சிறந்த உதாரணங்களுள் ஒன்று: காற்றாலைகள் அமைத்தல்.
உங்கள் கட்டுரையின் கடைசிப் பத்தியின் முதல் கேள்விக்கான் விடை மூன்றாவது கேள்விக்கான பதில்.
அடப்பாவிங்களா! அநியாயத்திற்கு இப்படியா நஷ்டத்திற்கு இந்திய மனித வளத்தை ஏலம் விடுவாங்க. சீனாவிற்கு போட்டியா வரவேண்டும் என்பதற்காக விலை உயர்ந்த கடைத்தேங்காய எடுத்து மோசம்போன வழிப்பிள்ளையாருக்கு உடைக்கிறாங்களே! இதை தட்டி கேக்கறதுக்கு யாருமே ஆளில்லையா? நம்முடைய அடிமை மோகம் இன்னும் நம்மை விட்டு போனபாடில்லையே! வெள்ளைக்காரன் போய் பிறகு கொள்ளைக்காரன் வந்து இப்போ எல்லோரும் ஒன்றாய் சேர்ந்து அனைத்து இந்திய மக்களையும் எதுக்கும் உதவாத நொல்லைக்காரனாக ஆக்கியிருக்கிறார்கள். அனைவரும் அவசியம் படித்து இந்தியாவின் சொத்தையாகிப்போன போன்டி இ.பொ.ம. கொள்கைகளை படிக்க கொடுத்தற்கு மிக்க நன்றி நண்பரே.
Behind every great fortune, there is a crime. - Honoré de Balzac
kakசிறப்பான கட்டுரை நண்பரே. இந்தியர்களின் தொழில் நுட்ப அறிவு சர்வதேச அளவில் பல துறைகளில் இல்லை என்பது உண்மையே. ஆனால் அதையே காரணம் காட்டி சம்பளத்தை மிக மிக மிக குறைத்து தருகிறார்கள். அது வேறு யாரும் இல்லை,.. நம் படித்துவரும் மகா புத்திசாலிகள்தான். இந்தியர்களுக்கு எதிரி எங்கும் இல்லை,.. நம் இந்தியர்கள்தான் எதிரி. அரசாங்கம் படிப்பிற்கு ஏற்ற நியாயமான குறைந்தபட்ச சம்பளத்தை நிர்ணயம் செய்யாதவரை இதி கஷ்டமே.,..
கோபமும் விரக்தியும் மட்டுமே மிஞ்சுகிறது......வாழுக இந்திய சன நாயகம்
அடுத்ததா 1000 சதுர கி.மீக்கு ஒரு சி.பொ.ம. அமைக்கப்போறாங்களாமே?? போற போக்கைப் பாத்தா மொத்தத் தமிழ்நாட்டையுமே சி.பொ.ம ஆக்கிடுவாங்கன்னு நினைக்கிறேன். :(
சுந்தர்ஜி,
என்னிடம் சில கேள்விகள் இருக்கின்றன.
1. சி.பொ.ம. கம்பெனிகளுக்குத்தான் வரி கிடையாது. வேலை செய்பவர்கள் வரி கட்டியாக வேண்டும். அது அரசுக்கு வருமானம்தானே (குறைந்த அளவாக இருந்தாலும்)
2. அந்நிய செலவாணி உள்ளே வருகிறது, அதனால் பணப்புழக்கம் அதிகரிக்கும் அல்லவா? உதாரணமாக சென்னை டி.எல்.எஃப் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் 50,000 பணியாளர்கள் வேலை செய்வதுதான் இலக்கு. ஒருவரின் சம்பளம் சராசரியாக குறைந்தது மாதம் 30,000 ரூபாய்கள் என்றாலும், 1,800 கோடி ரூபாய்கள் அந்நிய செலவாணியாகவும், புழக்கத்திற்கும் வருகிறது.
3. இங்கே 50,000 பேர் வேலை செய்தால் சராசரியாக 5,000 ஆன்சைட் கோ ஆர்டினேட்டர்கள் வேண்டும். அவர்களில் 50 சதவீதம் இந்தியர்கள் என்றாலும் குறைந்தது 2,500 பேருக்கு வெளிநாட்ட்டில் வேலை கிடைக்கிறது. அவர்கள் தங்கள் முதலீடுகளை இந்தியாவில்தான் செய்வார்கள் (வருடம் 20,000 டாலருக்கு குறையாமல். அதுவும் லாபம்தானே.
4. எல்லாவற்றையும் விட வேலை வாய்ப்பை உருவாக்குகிறதே. இந்த டி.எல்.எஃப் சி.பொ.ம இல்லையென்றால் இந்த 50,000 பேருக்கான வேலைவாய்ப்பிற்கு என்ன மாற்று வழி?
ஜி.. உங்கள் பதிவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்..
வெண்பூ பின்னொட்டம் ஆறுதல் அளித்தது.
கண்டிப்பாக அனைவரும் ஓட்டளியுங்கள் திரட்டிகளில்.
[[[நாமக்கல் சிபி said...
ஓட்டுப் போடுறவன் சரியா இல்லைன்னா ஓட்டுப் பொறுக்கிங்க வேற என்னங்க செய்வான்! நம்ம காசை பிடுங்கி கம்பெனிகாரனுங்ககூட பங்கு போடத்தான செய்வான்!]]]
முதல் கமெண்ட்டே முத்தாய்ப்பாக வந்துள்ளது..
பெரிய ரிப்பீட்டு ஒண்ணு போட்டுக்குறேன்..!
"ஓட்டுப் போடுறவன் சரியா இல்லைன்னா ஓட்டுப் பொறுக்கிங்க வேற என்னங்க செய்வான்!
நம்ம காசை பிடுங்கி கம்பெனி காரனுங்க கூட பங்கு போடத்தான செய்வான்"
நாமக்கல்லாரை நானும் வழிமொழிகிறேன்
"கோடீஸ்வரர்களை மேலும் கோடிகளைக் குவிக்க வைப்பதற்கான அமைப்பே அரசாங்கம். சிறப்பு பொருளாதார மண்டலங்களின் சாராம்சமும் அதுதான். அடுத்த சிறந்த உதாரணங்களுள் ஒன்று: காற்றாலைகள் அமைத்தல்"
உண்மைதான் காற்றாலை குறித்த எனது பதிவு ஒன்று http://rajasabai.blogspot.com/
இப்போது உலகம் முழுதும் Nokia - Made in India (Chennai)
தான் நன்றாக விற்பனை ஆகிறது
//1. சி.பொ.ம. கம்பெனிகளுக்குத்தான் வரி கிடையாது. வேலை செய்பவர்கள் வரி கட்டியாக வேண்டும். அது அரசுக்கு வருமானம்தானே (குறைந்த அளவாக இருந்தாலும்)//
நம்ம ஊரில் 5000, 10,000 மாத வருமானம் பெறுபவர்களெல்லாம் வரிகட்டுகிறார்களா என்பதை தெளிவு படுத்தவும்.
அன்னிய முதலீடுகள் வருகின்றன. ஆனால் மனித உழைப்புகளும், இயற்கைவளங்களும் அன்னியர்களுக்கு விலை போகின்றன.
குறுகிய கால கண்ணோட்டத்தில் பார்த்தால் பணம் கிடைப்பது போல தோன்றினாலும். பிற்க்காலத்தில் பணம் மட்டுமே மிஞ்சும், மற்ற எல்லாவற்றுக்கும் நாம் அவர்களை கையேந்தவேண்டியிருக்கும்.
சுந்தர்ஜி,
உங்களுக்கு ஏற்கனவே பலர் கண்டனம் தெரிவித்து விட்டார்கள்...ஆனாலும் என் பங்குக்கு...
இப்படி எல்லா விஷயத்தையும் நீங்க எழுதிட்டா என்னை மாதிரி ஆளுங்கெல்லாம் என்ன எழுதறது?? :0)))
உணர்ச்சிவசப்படாமல் விவாதிக்கலாமா?
//இங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் உலக அளவில் நோக்கியாவில் வேலை செய்பவர்கள் வாங்கும் சம்பளத்தில் 45ல் ஒரு பங்கைத்தான் வாங்குகிறார்கள்!!//
என்பதற்கு ஆதாரம் தரமுடியுமா?
மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது நம்நாட்டில் விலைவாசி குறைவுதானே?
பின்லாந்தில் கொடுக்கப்படும் ஊதியத்தை இங்கும் கொடுக்கவேண்டும் என்பதைவிட இந்தியாவில் கௌரவமாக குடும்பம் நடத்தும் அளவில் ஊதியம் தரப்படுகிறதா என்பதை அல்லவா கவனிக்கவேண்டும்?
இன்று ஒரு வேலை இருப்பதனாலேயே குறைவான ஊதியத்தை பற்றி பேசுகிறோம். சி.பொ.ம-ல் நோக்கியா ஆலை தொடங்கியிராவிட்டால் அங்கு பனிபுரிபவர்களுக்கெல்லாம் வேலை கொடுக்கப் போவது யார்?
உள்ளூரில் தொழில் செய்பவர்களுக்கு ஏன் அரசு சொம்பை மட்டுமே தருகிறது!
K.Athiaman should read this article.(Nellikani)
//உள்ளூரில் தொழில் செய்பவர்களுக்கு ஏன் அரசு சொம்பை மட்டுமே தருகிறது!//
Ask Tata what they got from Gujarat govt for the Nano plant.
//யாருக்கு லாபம் என்பது தெரியாது ஆனால் நமக்கு நஷ்டம் அது மட்டும் தெளிவு!!!!//
If u get phone for 1000 Rs, is it a loss 4 u?
//சிபொமவில் விற்கும் / வாங்கும் பொருட்களுக்கு எவ்விதமான மாநில / நகரசபை வரிகள் கிடையாதென்றும் ஒரு சலுகை.
//
It is part of the SEZ concept.
//நிலங்களின் விலையை வழிகாட்டும் மதிப்பில் (guideline value) பாதி விலைக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. வழிகாட்டும் மதிப்பென்பதே மிகக் குறைவானதுதான் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதிலும் 50% வசூலித்திருக்கிறது. அப்படிக் குறைந்த விலைக்கு கொடுத்தது மட்டுமல்லாமல் அதற்கான முத்திரைத்தாள் வரியிலிருந்தும் விலக்களித்திருக்கிறது அரசு.//
Think for a moment. Without the SEZs, would the land value skyrocketed in these area?
Yes, this post is based on facts is true enough. only i doubt the minimum wages : what i heard was minimum wages of the lowest unskilled labour in Nokia is not less than Rs.5000 or even more.
Rs.3500 is too low and Nokia will not get good labourers for this wage. even in very tiny indsutries Rs.3500 is very low wages and can't get people at this rate. needs confirmation.
the concept of SEZ is unfair and and agaist free market polices. hence it is unacceptable. and the logic behind all the tax breaks to Nokia was to attract its indian factory to Sriperumbudur. Many other Indian states like Karnataka, Maharastra, Gujarat and eve W.Benagl were / are in compeition to get such MNCs to their states. hence the state with the best offer and best climate for industry gets the industry.
the old saying : "something s better than nothing" is very valid.
chennai had very little employment oppurtunities until 1990. unemployed youth with beards spoke communisim and talked about Naxalities while smoking beedis until then. now there is a chance for employment for the teeming millions. this was possible only after globalisaiton and liberalisation.
and SEZ subsidies : the ideal solution is to make the entire India an SEZ : that is with very very little or no taxes and labour laws. govt should balance its budgets to managee its revenuse and ependitures. cut defence budgets and wastages fully to live within its means.
then we can become a developed nation.
மூளையை சிரமப்பட்டு கசக்க வேண்டிய விஷயம் ஒன்றும் அல்ல இது. சிறப்புப் பொருளாதார மண்டல சட்ட நகல் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொழுதே, இதை இடதுசாரிகள் எதிர்த்தற்கான காரணங்கள் இந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் அடிப்படையில் அமைந்தவையே. இதைத்தவிட சென்ட்ரல் போர்ட் ஆஃப் டைரக்ட் டாக்ஸஸ் (CBDT) மதிப்பீட்டின் படி அரசிற்கு வருடத்திற்கு 2 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் (2005ம் ஆண்டு) இந்த சட்ட நகல் மத்திய அரசின் நிதித்துறையின் கருத்துக்காக சென்ற பொழுது CBDT இவ்வாறு மதிப்பிட்டிருக்கிறது. நாம் இதை எப்படி புரிந்து கொள்ள வேண்டுமென்றால், மக்கள் பணம் ஆண்டுக்கு 2 லட்சம் கோடி(2005ம் ஆண்டு மதிப்பு) முதலாளிகளுக்கு மானியமாக வழங்கப்பட்டிருக்கிறது என்பதே. விவசாயிகளுக்கு ஒரே முறை 60000 கோடி கடன் ரத்து செய்ததை எதிர்த்து முழங்கிய ஊடகங்கள் இதைப்பற்றி எந்த எதிர்ப்பும் காட்டாதது ஏன்? ஊடகங்கள் பொதுவாக யார் சார்பாக செயல்படுகிறது? ஊடக உரிமையாளர்களுக்கும் இந்த 2 லட்சம் கோடி மானியம் பெறுபவர்களுக்கும் என்ன உறவு இறுக்கிறது என்பதையும் நாம் தேட வேண்டியதிருக்கிறது. அரசாங்கத்தை நடத்தும் அரசியல் கட்சிகளின் முடிவாக மட்டும் இதைப் பார்க்க முடியாது. ஏனென்றால் அரசு (State) என்பது அரசாங்கம் (Government) மட்டும் அல்ல. அரசு ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தின் அல்லது சில வர்க்கங்களின் நலனை பாதுகாக்கும் கருவி. அரசாங்கம் என்பது அரசின் ஒரு உறுப்பு மட்டுமே அது எல்லா வர்க்கத்திற்கும் சொந்தமானது போல் தோற்றமளிக்கும்.
விஜயன்
Interesting article!
As usual it is kept in a simple and clear manner..The govt has done its job..The next step is for us to monitor our govts and this cos.
Let me go into detail:
1. What is the opportunity cost or alternative benefit of say the 1000 acres in which Nokia is built?
Govt would get agricultural returns from the land or it may get some profit on the sales/property tax on real estate. Obviously they cant compare to the long term economic and social benefits of a factory in the area.
2. You have correctly pointed out that a tax benefit is investing in a company. So what is wrong in that? If we don't do it, Maharashtra would do it..Gujarat would do it..Malaysia would do it, Philipines would do it..So we would just lose the benefits..
3. We are not gaining much? So what is the point?
This is where our collective intelligence needs to come into play. Using Right for Information act is the first step. Once a factory is built, it is v hard to move it. At this point, We need to bargain this cos to make sure they return the benefits for the money invested by govt. We can ensure that by making sure they contribute to infrastructure projects, education and sanitation in the neighborhood.
Labor unions can negotiate to make sure
We can threaten to take them to court if they fail..
Labour unions can negotiate to make sure the salaries are comparable to what they pay in a developed nation..
Incidentally an unmarried maid in our house quit saying she wanted to join Nokia-The Nokia benefits were relatively v good pay, freedom for women(compared to working at home..Being young and single, this was a problem for her), respect for the job and long term career option..
Also we need to look at the opportunity for ancillary industries created by it to truly calculate the benefits of SEZ..
சிறப்பு பொருளாதார மண்லங்களை நான் எதிர்க்கவில்லை, அது உருவாக்கும் வேலை வாய்ப்பினால். ஆனால் உழைப்பு சுரண்டல் என்பது உண்மையே ,அதற்கு உழைப்பை தமக்கும் பயன்படுத்தும் நோக்கத்தில் திட்டங்கள் இல்லாமை.இது பற்றிய நான் ஒரு பதிவு எழுதும் எண்ணம் உள்ளது, நிறைய படிக்கவேண்டியுள்ளதால் முடியவில்லை.
இந்த திட்டத்தை 100% ஆதரித்து விட்டு விவசாயிகளுக்கு இலவசத்தை எதிர்ப்பது நியாயமல்ல. அது பற்றிய என் பதிவு
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் சரியா? தவறா? -பாகம் 2 ~ வருங்கால முதல்வர்
//இதைத்தவிட சென்ட்ரல் போர்ட் ஆஃப் டைரக்ட் டாக்ஸஸ் (CBDT) மதிப்பீட்டின் படி அரசிற்கு வருடத்திற்கு 2 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் (2005ம் ஆண்டு) இந்த சட்ட நகல் மத்திய அரசின் நிதித்துறையின் கருத்துக்காக சென்ற பொழுது CBDT இவ்வாறு மதிப்பிட்டிருக்கிறது. நாம் இதை எப்படி புரிந்து கொள்ள வேண்டுமென்றால், மக்கள் பணம் ஆண்டுக்கு 2 லட்சம் கோடி(2005ம் ஆண்டு மதிப்பு) முதலாளிகளுக்கு மானியமாக வழங்கப்பட்டிருக்கிறது என்பதே.///
wrong. but for these tax breaks there would be no new investement and NO new/ extra tax revenue. that is the net revenue for the govt would be not at present quantity. the govt did not "donate" or dole out cash subsidy to companies, unlike the cash subsidy to farmers thru loan waivers (the banks were compensated by govt). compare the net tax revene of the govt per year for the past 20 years.
that will give the correct picture.
anyway, tax rates should have been reduced across the board for all companies within or outside SEZs and labour laws relaxes throughout.
that is the only way for more employment and tax revenues and propserity.
சி.பொ.ம. கட்டுரையில் பல விடயங்கள் உண்மைதான் என்றாலும் சில யதார்த்தங்களை நாம் புரிந்து கொள்வது, பிரச்சனை என்று நாம் பார்ப்பவற்றை வேறு கோணத்தில் பார்க்க இயலும்.
1. முதலீடு (Investments) செய்வதில் Incremental Investments & Incremental Returns எனும் சித்தாந்தம் உண்டு. Marginal cost & Marginal Returns என்றும் சொல்லலாம். சுலப வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால் - சரிப்பா -சி.பொ.ம. வேண்டவே வேண்டாம்; அப்போது என்ன நிலைமை இருக்கும்? சி.பொ.ம. இத்தனை ஓட்டைகளுடன் இருக்கட்டும்; அப்போது என்ன நிலைமை இருக்கும்? இரண்டையும் யோசித்துப் பார்த்தால், ஓட்டைகளுடன் சி.பொ.ம. வருவதே பயன் தரும் என்ற உண்மை தெரியும். இந்த உண்மை மாநில, மத்திய அரசுகள் மட்டுமல்லாது, முதலீடு செய்து அதிக இலாபம் காணும் நிறுவனங்களுக்கும் தெளிவாகப் புரிந்த உண்மையே. ஆதலால், ஒட்டுமொத்தமாக இவற்றை நிராகரிப்பதை விட, இவற்றை நிறுவி, அதே சமயம் எவ்வளவு நலம் பெற முடியுமோ அவற்றைப் பெற முயல்வது நடைமுறை புத்திசாலித்தனம். இல்லையென்றால், ஒரு அற உச்சத்தில் உட்கார்ந்து கொள்ளும் சவுகரியம் மட்டுமே எஞ்சும்.
2. இதற்காக நோக்கியா போன்ற நிறுவனங்களின் exploitation களை முற்றிலும் கண்டு கொள்ளாமல் விட்டு விடலாம் என்று சொல்ல வரவில்லை. இது ஒரு வியாபார பேரம் போலத்தான். நிச்சயம் இந்த வியாபாரம் நமது மாநிலத்தில் நடக்க வேண்டும். ஆனால், எவ்வளவு குறைந்த விலையில் (அதாவது அதிக பயன்களுடன்) விலை படிகிறது என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
3. தொழிலாளர் நலன் (ஊதியம் மற்றும் பிற நலன்கள்) விடயத்தில் அரசு நிச்சயம் ஒரு குறைந்த பட்ச கோரிக்கை வைத்திருக்க வேண்டும். அதே சமயம் இவர்கள் Finland or any other developed country - அங்கு வேலை செய்யும் ஊழியர்களின் ஊதியத்துடன் ஒப்பீடு செய்து அந்த அளவோ அல்லது ஓரளவு அந்த அளவோ ஊதியம் பெற வேண்டும் என்பது நடைமுறைக்கு ஒவ்வாதது என்பது மட்டுமின்றி, இத்தகைய ஒப்பீடுகள் அடிப்படையில் ஓரளவு தவறானவை என்பது என் எண்ணம். இங்கு மூவாயிரம் ரூபாய் சம்பளமும் அமெரிக்காவில் அறுபத்திரண்டு டாலர் ஊதியமும் (இன்றைய மதிப்பில் ஒரு டாலருக்கு 48.31 ரூபாய்கள்) கணித அளவில் மட்டுமே சமம். அங்கு மாதம் அறுபத்திரண்டு டாலருக்கு ஒன்றுமே செய்ய முடியாது. You have to apply Purchasing Power Parity Index. இவை எல்லாம் சற்று சிக்கலான பொருளாதார விடயங்கள்.
4. அதற்கு பதிலாக இத்தகைய சி.பொ.ம. இல்லாத இடங்களில் வேலை செய்யும் ஊழியர்களின் ஊதியத்துடன் சி.பொ.ம. நிறுவன ஊழியர்களின் ஊதியம் ஒப்பீடு செய்யப்பட்டு, அரசு முயற்சியில் ஊதியங்கள் முன்னதாகவே வரையறுக்கப் பட வேண்டும்.
5. முன்னமே சொன்னது போல, நமக்கு விருப்பமோ/அல்லவோ, மற்ற மாநிலங்களும், மற்ற நாடுகளும் இது போன்ற முதலீடுகளுக்கு போட்டி போடுவதால், நடைமுறை யதார்த்தம் என்பதை மனதில் கொள்வது நல்லது.
6. ஆயினும், ஒரு பேச்சுக்கு சொல்கிறேன் - தமிழ் நாடு அரசு மொத்தமாக நோக்கியா நிறுவனத்துக்கு வரி விலக்குகள், குறைந்த ஊதிய சாத்தியக் கூறுகள் இன்னபிற பயன்கள் என்று அளிக்கும் சலுகைகளின் மதிப்பு ஆயிரம் கூடி ரூபாய் என்றால், அதனை ஒரு முன்னூறு கோடியில் செய்திருக்க முடியுமா என்று நிச்சயம் தணிக்கை செய்யப்பட வேண்டும். கோடிகள் என்பதால் ஊழல் இருப்பதற்கு நிறையவே சாத்தியங்கள் உண்டு.
7. இது போன்ற தனியார் முயற்சிகளின் (அவர்களின் சுரண்டல்களும் சேர்த்து தான்) அடிப்படைக் காரணமே, அரசால் வேலை வாய்ப்புகளை பெருக்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதால் தான். அதற்குத் தீர்வு வரும் வரையில் இவற்றைச் சகித்துக் கொள்ள வேண்டியதுதான்.
ஆயினும், இத்தகைய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவை என்னும் கோணத்தில், உங்கள் கட்டுரையுடன் நான் ஒத்துப் போகிறேன்.
அனுஜன்யா
பதிவு ரொம்ப சப்புன்னு இருக்கு சுந்தர்ஜி. சத்யம்-மேடாஸ் மாதிரி அசத்தலான கட்டுரை எழுதிய உங்களிடம் இந்த விஷயத்தில் சரியான பதிவாக இது இல்லை. வெண்பூ , சில அனானி பின்னூட்டம் மற்றும் அனுஜன்யா நன்றாக சொல்லி இருக்காங்க. SEZல் குறைபாடுகள் நிச்சயம் இருக்கு. ஆனால் பலன் அதைவிட அதிகமே. அதை சுற்றி வசிக்கும் மக்களுக்கும் அதில் வேலை பார்க்கும் தொழிலாளிகளுக்கு வருமானம் மற்றும் அவர்களால் அரசுக்கு வருமானம். கொஞ்சம் செலவழிச்சி வேலைவாய்ப்புகள் மற்றும் உப தொழில்வாய்ப்புகள் உறுவாக்கி அதன் மூலம் அரசாங்கம் வருமானம் பார்க்கிறது. குறையைவிட நிறை அதிகம் என்பதே என் கருத்து. குறைகள் சரி செய்யப் பட வேண்டும்.
வெண்பூ,
1. /சி.பொ.ம. கம்பெனிகளுக்குத்தான் வரி கிடையாது. வேலை செய்பவர்கள் வரி கட்டியாக வேண்டும். அது அரசுக்கு வருமானம்தானே (குறைந்த அளவாக இருந்தாலும்/
Even brick and mortar company employees have to pay this I.T. :) So what is great fun in this?
2. முதலீட்டின் மூலம் கிடைக்கும் அந்நியச் செலாவணி. இதிலும் சிக்கல்கள் இருக்கின்றன. நிறைய நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் operationsஐ தொடங்கும்போது மற்ற நாடுகளில் தங்களிடமுள்ள பழைய இயந்திரங்களை அனுப்பிவிடுவார்கள். இதை மூதலீட்டாகக் கணக்கு காண்பிப்பார்கள். அப்படியில்லாவிட்டால், நான் கொடுத்த உதாரணம் போல அவர்களது முதலீட்டைத் திரும்பத் தந்துவிடுகிறார்கள் :( இது போக, அந்நியச் செலாவணி பற்றி நிறைய பேச வேண்டும். நேரம் கிடைக்கும்போது பேசுவோம்.
3. இங்கு இருக்கும் on site co-ordinatorகளுக்கு சம்பளம் எப்படி அந்நியச் செலாவணியில் வரும் என்கிறீர்கள்? புரியவில்லை.
///2. முதலீட்டின் மூலம் கிடைக்கும் அந்நியச் செலாவணி. இதிலும் சிக்கல்கள் இருக்கின்றன. நிறைய நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் operationsஐ தொடங்கும்போது மற்ற நாடுகளில் தங்களிடமுள்ள பழைய இயந்திரங்களை அனுப்பிவிடுவார்கள். இதை மூதலீட்டாகக் கணக்கு காண்பிப்பார்கள். அப்படியில்லாவிட்டால், நான் கொடுத்த உதாரணம் போல அவர்களது முதலீட்டைத் திரும்பத் தந்துவிடுகிறார்கள் :( இது போக, அந்நியச் செலாவணி பற்றி நிறைய பேச வேண்டும். நேரம் கிடைக்கும்போது பேசுவோம்.
////
எத்தனை நிறுவனங்கள் இப்படி மோசடி செய்கின்றன ? அவைகளின் விகிதம் என்ன ? இதை அறியாமல், இப்படி பொதுப்படுத்தக் கூடாது.
அன்னிய செலவாணி : 1990கள் வரை கடும் பற்றக்க்குறையை சமாளிக்க தொடர்ந்து அய்.எஃப்.எஃப் வங்கியில் கடன் வாங்க வேண்டிய கொடுமையான நிலை. அதன் பிறகு, தாராளமயமாக்கலினல், அய்.எம்.எஃப் இடம் கடனே வாங்க தேவை இல்லா நிலை. ஒப்பிட்டாலே விளங்கும். அதை பற்றிய எமது ஒரு பதிவு :
http://nellikkani.blogspot.com/2008/05/1991.html
1991இல் இந்தியா திவாலாகியிருந்தால் ?
//
3. இங்கு இருக்கும் on site co-ordinatorகளுக்கு சம்பளம் எப்படி அந்நியச் செலாவணியில் வரும் என்கிறீர்கள்? புரியவில்லை.
//
சுந்தர்ஜி.. இங்கிருக்கும் மக்களுக்கும் க்ளையண்ட்களுக்கும் பாலமாக இருக்கப்போவது ஆன்சைட் கோ ஆர்டினேட்டர்கள்தான். அவர்கள் அமெரிக்காவில்தான் இருப்பார்கள். ஆனால் இந்திய நிறுவனங்கள் இந்தியர்களையே பெரும்பாலும் நியமிப்பார்கள் அல்லது இங்கிருந்து அனுப்புவார்கள். அப்படி செல்லும் இந்தியர்கள் பெரும்பாலும் தங்கள் முதலீடுகளை இந்தியாவிலேயே செய்வார்கள். அதைத்தான் நான் லாபம் என்று சொன்னேன்.
அதியமான், நான் ‘மோசடி' செய்கிறார்கள் என்று சொல்லவில்லை. நான் சுட்ட வந்தது அந்நியச் செலாவணி குறித்து. அதாவது இங்கு தொழிற்சாலை தொடங்கும்போது investment-ன் ஒரு பகுதியை (சிலர் பெரும்பகுதியை) தங்களுடைய இயந்திரங்களை அனுப்புவதன் மூலம் ஈடுசெய்வார்கள். இதை நீங்கள் இங்கு தொழிற்சாலை வைத்திருக்கும் MNC நிறுவனங்களிடம் விசாரித்து அறிந்து கொள்ளலாம். என்னிடம் புள்ளிவிவரங்கள் இல்லை - ஆனால் மிகப் பெரும்பான்மையானவர்கள் செய்வது அது என்பது என் நேரடி அனுபவம். அப்படிச் செய்வதால் we will have deemed savings on foreign exchange, but no direct inflow.
வெண்பூ, இங்கிருக்கும் நோக்கியா unitற்கு வெளிநாட்டில் இந்தியர்கள் பணிசெய்ய தேவைப்படுவார்களா? சுமாரா எவ்வளவு பேர் தேவைப்படுவார்கள்? (எனக்குத் தெரியாததால் கேட்கிறேன்).
நோக்கியா குறித்து எனக்குத் தெரியவில்லை சுந்தர்ஜி.. நீங்க பொதுவாக சி.பொ.ம குறித்து கூறியதால் பெரும்பான்மையாக இருக்கும் ஐ.டி. நிறுவனங்கள் குறித்துக் கூறினேன்.
இங்கு பின்னூட்டமிட்ட சிலர், பிரதானமாகக் கீழ்வரும் வாதங்களை முன் வைக்கிறார்கள் :
1. something is better than nothing என்கிறார். இதை சுரண்டுபவர்கள் காரணமாகக் காட்டிச் சுரண்டலாம், நாம் அப்படிச் செய்வது அறமற்ற காரியம் இல்லையா?
2. வேலை வாய்ப்புகள் உருவாகிறது.
MNCகளால் மட்டுமல்ல, இந்தியக் கம்பெனிகளாலும் இந்த வேலை வாய்ப்புகள் உருவாகத்தான் செய்கின்றன. அப்படியிருக்கையில் அவர்களுக்கு மட்டுமென்ன தனிப்பட்ட சலுகைகள் என்பதே என் பதிவிலுள்ள கேள்வி.
3. இந்தப் புள்ளி நோக்கியாவிற்கல்ல, ஆனால் பொதுவானது. இங்கு இப்போதிருக்கும் தொழிலகளில் MNCகளை அனுமதிப்பதன்மூலமும், அவர்களுக்குப் பல சலுகைகளை அளிப்பதன் மூலமும் the balance is tilted favourably towards their side. ஏற்கனவே பணபலமும் இருக்கும் அவர்களுக்குச் சலுகைகளும் கொடுப்பதால, இங்கிருக்கும் தேசியத் தொழில்கள் நசிவடைகின்றன.
4. பல லட்சம் கோடிகளில் பெரும் முதலாளிகளுக்குச் சலுகைகள் கொடுக்கப்படும்போது கேள்வி கேட்காதவர்கள், விவசாயிகளுக்கு free electricity, கடன் ரத்து செய்யப்படும்போது மட்டும் அலறுவது ஏன்? இந்தக் கேள்வியையும் நாம் கேட்டுக் கொள்ளலாம்.
//1. something is better than nothing என்கிறார். இதை சுரண்டுபவர்கள் காரணமாகக் காட்டிச் சுரண்டலாம், நாம் அப்படிச் செய்வது அறமற்ற காரியம் இல்லையா?
////
சுரண்டல் என்பது ஒரு மகத்தான மாயை வார்த்தை. "உபரி மதிப்பு" சுரண்டப்படுவதாக மார்க்ஸ் 'விளக்கினார்'.
ஆனால உபரி மதிப்பு பற்றி இன்னும் தெளிவான விளக்கம் /அறிவு
கிடைக்கவில்லை. உபரி மதிப்பு என்று ஒன்றும் இல்லை என்று
ஒரு வாதம். மதிப்பு என்பது வாங்கபவரின் பார்வையை பொருத்தே
அன்று வேறி அளவீடுகள் இல்லை என்பது ஒரு முக்கிய கோணம்.
(யான் அதை வழிமொழிகிறேன்) ; அதனால் சுரண்டல் என்ற
வார்த்தை பிரயோகம் பொருத்தமானதல்ல. and neither is the word immoral or moral. the word is meaningless in real life.
சி.பொ.மண்டலங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் தவிர்த்து,
பிற நிறுவஙகள் / பகுதிகளில் பணி புரியும் தொழிலாளர்களின்
கூலி அளவு, வேலை நேரங்கள், வேலை இட சவுரியங்கள்,
நிரந்தர வேலை அல்லது சீசனல் வேலை, இதர சலுகைகள் :
இவற்றை ஒப்பிட்டால் புரியும், நோக்கியாவில் வேலை
செய்பவர்கள் அதிர்ஸ்டசாலிகள் என்று. அதனால் தான்
அங்கும், அது போன்ற நிறுவனங்களிலும் வேலை செய்ய
பலத்த போட்டி..
//MNCகளால் மட்டுமல்ல, இந்தியக் கம்பெனிகளாலும் இந்த வேலை வாய்ப்புகள் உருவாகத்தான் செய்கின்றன. அப்படியிருக்கையில் அவர்களுக்கு மட்டுமென்ன தனிப்பட்ட சலுகைகள் என்பதே என் பதிவிலுள்ள கேள்வி.
3. இந்தப் புள்ளி நோக்கியாவிற்கல்ல, ஆனால் பொதுவானது. இங்கு இப்போதிருக்கும் தொழிலகளில் MNCகளை அனுமதிப்பதன்மூலமும், அவர்களுக்குப் பல சலுகைகளை அளிப்பதன் மூலமும் the balance is tilted favourably towards their side. ஏற்கனவே பணபலமும் இருக்கும் அவர்களுக்குச் சலுகைகளும் கொடுப்பதால, இங்கிருக்கும் தேசியத் தொழில்கள் நசிவடைகின்றன.
///
MNCs compete in new areas and bring in high tech and skills ; technology transfer takes place over time. and no indian company or industrial association has so far protested against MNCs or the tax breaks for them. in fact these MNCs create not only jobs, taxes, wealth and products, but create vendor and supplier culsters around them, causing multiplier effect. Nokia suppliers are hundreds in number and there is further sub-contracting down stream feeding more SSI and tiny units and serives. hence no one is unhappy that these MNCS crush local and small units. otherwise, there would be violent protests, and cries for protectionism. reality is different.
Agreed that the "salauhaihal" for these MNCS are unfair and in an ideal free market economy the govt should stictly be an umpire and neutral and allow free market forces with no interference or susidy or SEZ, etc. that is ideal free market. but India is not one.
//4. பல லட்சம் கோடிகளில் பெரும் முதலாளிகளுக்குச் சலுகைகள் கொடுக்கப்படும்போது கேள்வி கேட்காதவர்கள், விவசாயிகளுக்கு free electricity, கடன் ரத்து செய்யப்படும்போது மட்டும் அலறுவது ஏன்? இந்தக் கேள்வியையும் நாம் கேட்டுக் கொள்ளலாம்.
///
All these tax breaks are not dole or cash subsidies but discounts in total taxes that they will pay in future. that is the govt gets tax revenue as these MNCS will pay lower taxes. Or they will not locate in that state or even India.
there is stiff competition from other Asian nations for these MNCs.
the govt actually gains more than the "deemed" losses by tax breaks.
that is proved by looking at the revenue figures of TN and Union govt in the past decade or so.
Agri subsidy and free current :
no one is against them in principle but for the fact the govt is heavliy in debt and fiscal deficts and imbalances increase due to INDISCRIMINATE subsisdes.
The govt first should target the subsidies (free power for small and tiny farmers only and not for ALL farmers) and loan waivers for deserving farmers only. the opposition is due to lack of funds for these and not in principle. if the govt is awash with own funds, no issue in the subsidies. for that
tax revenue should increase (it has increased exponentioally only after liberalisation of 1991) and cut wastages and defence spending,etc.
//பிற நிறுவஙகள் / பகுதிகளில் பணி புரியும் தொழிலாளர்களின்
கூலி அளவு, வேலை நேரங்கள், வேலை இட சவுரியங்கள்,
நிரந்தர வேலை அல்லது சீசனல் வேலை, இதர சலுகைகள் :
இவற்றை ஒப்பிட்டால் புரியும், நோக்கியாவில் வேலை
செய்பவர்கள் அதிர்ஸ்டசாலிகள் என்று.//
அதான் முதல்லயே சொல்லிடாரே! அந்த கம்பெனிகலுக்கு அரசு சலுகைகள் கொடுக்குதுன்னு, அருகிலேயே இருக்கும் ”சோனோகோயோ” என்ற கம்பெனியில் சம்பள குறைப்பு, ஆள் குறைப்பு நடந்தது, இங்கேயும் அதே போல் சலுகை கொடுத்தால் அது நடக்குமா?
வால் பையன்,
எந்த ஒரு சலுகையும் அளிக்க பெறாத, சி.பொ.ம களுக்கு வெளிய அமைந்துள்ள பன்னாட்டு நிறுவன தொழிற்சாலையில் பணி புரியும் தொழிலாளிகளின் நிலைமையை
ஒப்பீடுங்களேன். உ.ம் : கிரண்ட்ஃபோஸ் பம்ப் நிறுவனம் அல்லது அல்ஸ்தோம்
தொழிற்சாலைகள் போன்றவற்றை லோக்கல் நிறுவங்களோடு ஒப்பிடுங்கள்.
விதன்டாவாதாம் செய்வது உமது வழக்கம் தான் நண்பா. !!
சோனோகோயோ கம்பெனியில் எனது தம்பி வேலை செய்ததால் அது பற்றி தெரியுமே தவிர, நான் உங்களை போல் பொருளாதார நிபுணன் அல்ல என்பதும் தாங்கள் அறிந்ததே!
/All these tax breaks are not dole or cash subsidies but discounts in total taxes that they will pay in future/
எங்கே? STP / EHTP நிறுவனங்களுக்கு 10 வருடங்களாகக் கொடுத்து வந்த வரிச் சலுகைகள் 2010-ல் முடிகிறது. நீட்டிக்கச் சொல்லி ஏற்கனவே லாபி செய்யத் துவங்கிவிட்டார்கள். நிச்சயம் நீட்டிக்கப்படும் என நம்பலாம்!
நீங்கள் deemed losses for actual future revenue என்கிறீர்கள். நான் actual losses for deemed future revenues என்கிறேன். பார்ப்போம் :)
விவசாயிகளுக்கு subsidies என்றால் சிறு விவசாயி, பெரிய விவசாயி எனப் பிரிக்க வேண்டும் எனச் சொல்லும் நீங்கள் ஏன் அதே அடிப்படையை stp / ehtp / sez unit-களுக்குச் சொல்வதில்லை. இதிலிருந்தே உங்கள் மனச் சாய்வு தெரிகிறதல்லவா? எந்தப் பெரிய விவசாயி இன்ஃபோஸிஸ்களைவிட, அஜிம் பிரேம்ஜிக்களை விட பணக்காரனாயிருக்கிறான்?
//விவசாயிகளுக்கு subsidies என்றால் சிறு விவசாயி, பெரிய விவசாயி எனப் பிரிக்க வேண்டும் எனச் சொல்லும் நீங்கள் ஏன் அதே அடிப்படையை stp / ehtp / sez unit-களுக்குச் சொல்வதில்லை. இதிலிருந்தே உங்கள் மனச் சாய்வு தெரிகிறதல்லவா? எந்தப் பெரிய விவசாயி இன்ஃபோஸிஸ்களைவிட, அஜிம் பிரேம்ஜிக்களை விட பணக்காரனாயிருக்கிறான்?
//
No, Sundar, i had said that as a free market exponent, we oppose any form of govt subsidy or tax breaks to MNCs or any industry.
but the logic for current policy is this : suppose if there are no tax breaks, etc, these MNCs will not come to India but locate to a better Asian nation. instead of getting nil new tax at normal rates, we get huge tax revenue at lowest rates.
but still the moves by STPI are wrong and immoral and certainly i don't support them. in early 90s, all exporters were excepted from Income tax simply because of terrible shortage of foreign exchange. but now they are taxed normally. similarly these STPI should pay taxes after their period of concessions are over. that is the contract and moral thing. but india is a corrupt nation. that is all.
ok then, continous subsidy to all farmers bankrupted EBs and rural co-op banks. unless these are streamlined, then there will be terrible effects in future. so what shall we do ? you tell me.
the point is about leakages and theft and corruption and mis allocation of rural subisdies, for that matter all susidies.
Welfare state is not incompatible to free market. there should be a safety net and susidy to the really deserving. but for that govt first needs cash..
***
எந்தப் பெரிய விவசாயி இன்ஃபோஸிஸ்களைவிட, அஜிம் பிரேம்ஜிக்களை விட பணக்காரனாயிருக்கிறான்
***
பெரிய விவசாயி ஒரு லட்சம் பேருக்கு வேலை கொடுத்தா, நல்ல சம்பளம் கொடுத்தா, லாபத்துல பங்கு கொடுத்தா, நீங்க சொல்லும் இந்த ஒப்பீடு செய்யலாம். எனக்கு அப்படி எந்த பெரும் தெரியல. உங்களுக்கு தெரியலாம். சொல்லுங்கள். தெரிந்து கொள்கிறேன்.
SEZ - IT கம்பனிகளை இந்த சலுகையில் இருந்து தூக்கலாம். சலுகை கொடுத்து கொண்டே இருந்தால் கேட்டுக்கொண்டே தான் இருப்பார்கள். நிச்சயமாக, இச்சலுகைகள் நிறுத்தப்பட்டாலும் பாதிப்புகள் பெருமளவில் இருக்காது.
Manufacturing sector க்கு இன்னும் சில வருடங்கள் கொடுக்கவேண்டும் என்றே நினைக்கிறேன்.
மணிகண்டன், நல்ல வேளை, எவ்வளவு முறை விமானத்தில் பறந்திருக்கிறார்கள், எவ்வளவு முறை நட்சத்திர விடுதியில் சாப்பிட்டிருக்கிறார்கள் என்றெல்லாம் கேட்காமல் விட்டீர்களே :)
என்னது, லாபத்தில் பங்கா :) சம்பளத்தின் பகுதியா அல்லது லாபத்தின் பங்கா என்பது அவரவர் பார்வையைச் சார்ந்தது.
***
மணிகண்டன், நல்ல வேளை, எவ்வளவு முறை விமானத்தில் பறந்திருக்கிறார்கள், எவ்வளவு முறை நட்சத்திர விடுதியில் சாப்பிட்டிருக்கிறார்கள் என்றெல்லாம் கேட்காமல் விட்டீர்களே
***
அது எல்லாம் அடுத்த பதிவுக்கு !
இந்தியாவிற்கு, நம்முடைய அலட்சியத்தால் மிகப்பெரிய அழிவு நிச்சயம் வரும்!
இறுதியாக, சுரண்டல் பற்றி ஒரு பழைய "பொன்மொழி" :
"In capitalsim, man exploits man ;
while in communism, it is the opposite"
:))
//எந்தப் பெரிய விவசாயி இன்ஃபோஸிஸ்களைவிட, அஜிம் பிரேம்ஜிக்களை விட பணக்காரனாயிருக்கிறான்//
பொள்ளாச்சி நா மகாலிங்கம்.. திராட்சைத் தோட்ட விவசாயி ஜெயலலிதா, நான் ஒரு விவசாயி என்று சொல்லிக் கொள்ளும் அமிதப் பச்சன், பரமத்திவேலுர் கந்தகண்டர்...
பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.
Post a Comment