நண்பர் ஒருவர் அரட்டைப் பெட்டியில் வந்து உங்களைப் பத்தி கிசுகிசு வந்திருக்கு பார்த்தீங்களா என்றார். முதலில் பெருமையாகவே இருந்தது. அதை அடக்கிக் கொண்டு யார் எழுதியிருக்காங்கன்னு கேட்டேன். செல்வேந்திரன் என அவர் சொன்னதும் கொஞ்சம் பொசுக்கென்று போய்விட்டது. அந்தக் காமெடி பீஸா என்று மனதிற்குள் முணுமுணுத்துக் கொண்டேன்.
ஆனால் கிசுகிசு எழுதுவதற்குக்கூட ஒரு அடிப்படை நேர்மை வேண்டும். அதையெல்லாம் செல்வேந்திரனிடம் எதிர்பார்க்க முடியாது போல.
இதுதான் அவர் எழுதியிருந்தது :
/
நவீன இலக்கிய தாத்தா ஒருநாள் 'ஐம்பது கட்டுரைகளுக்கு மேல படிச்சிட்டேன். ஒண்ணுகூட ரசிக்கலை' எனச் சொல்ல 'ரசிக்கலன்னா ஏனய்யா ஐம்பது கட்டுரைகள். ஒன்றிரண்டோடு நிப்பாட்ட வேண்டியதுதானே என அந்த 'முந்திரிக்கொட்டை பதிவர்' சொல்ல...அதன்பிறகுதான் முத்துக்கள், குத்துக்கள் என கும்மாங்குத்து பதிவுகள் போட ஆரம்பித்தாராம் அந்த 'ஞான-ரிவர்'.
/
அந்தத் தாத்தா வேறு யாருமில்லை நான்தான்.
முதல்முறையாகச் சந்தித்தபோது நேர்ப்பேச்சில் சொன்னது அந்த 50 கட்டுரைகள் விஷயம். அந்த முந்திரிக் கொட்டை பதிவர் இப்போது பதிவில் எழுதியிருப்பது போல் எல்லாம் ஒன்றும் சொல்லவில்லை - தலையைத் தலைய ஆட்டிக் கொண்டிருந்தார். இங்கு பதிவில் நக்கலடித்ததாய் எழுதியிருக்கிறார். அப்படி அவர் நக்கலே அடிக்காதபோது அதற்காகத் தான் நான் அந்தப் பதிவு எழுதியாதாகச் சொல்வது நேர்மையற்ற செயல்.
நான் சொல்வதில் சிலருக்கு நம்பிக்கையில்லாமலிருக்கலாம். எங்களுடைய அந்த நேர்ப்பேச்சுக்குப் பிறகு (நேர்ப்பேச்சின் போது மற்ற சில நண்பர்களும் இருந்தார்கள் என்றாலும் அவர்களை இதற்குள் இழுக்க எனக்கு விருப்பமில்லை) செல்வேந்திரனே எங்களுடைய அந்தச் சந்திப்பைப் பதிவு செய்திருக்கிறார். விருப்பமுள்ளவர்கள் அதைப் படித்துப் பார்க்கலாம் :
/
'உங்களோட கட்டுரைகள் சுமார் நாற்பது, ஐம்பது படித்திருப்பேன். அப்படியொன்றும் சுவாரஸ்யமில்லை. எனக்குப் பிடிக்கவுமில்லை' என்ற முகத்திலடிக்கிற விமர்சன நேர்மை எனக்குப் பிடித்திருக்கிறது.
/
http://selventhiran.blogspot.com/2009/04/blog-post_27.html
முதலில் இப்படி விமர்சன நேர்மை பிடித்ததாக எழுத வேண்டியது. பிறகு அவரது கருத்தை மறுத்து எழுதினேன் என்றவுடன் இவ்வாறு உள் நோக்கம் கற்பித்து எழுதுவது....
என்னுடைய அந்தப் பதிவிற்கான காரணங்களை நான் தெளிவாகவே முன்வைத்திருப்பதாக நினைக்கிறேன். ஒருவர் அதை மறுக்கலாம். ஆனால் அதற்கு இப்படி இல்லாததை எல்லாம் இட்டுக்கட்டி உள்நோக்கம் கற்பித்து கிசுகிசுவாக்கத் தேவையில்லை.
அப்புறம், இந்தக் கும்மாங் குத்து விஷயம். என்னுடைய அந்தப் பதிவு சும்மா லேசான ஒரு தட்டுதான். அதற்கே அலறி அடித்து கிசுகிசு புண்ணாக்கில் போய் ஒளிந்து கொண்டு கம்பு சுழற்ற ஆரம்பித்துவிட்டார். இவரையெல்லாம் போயா கும்மாங் குத்து விடுவேன்! நோஞ்சான்களைப் போய் யாராவது குத்துவார்களா என்ன :)
கார்காலக் குறிப்புகள் - 60
8 hours ago
104 comments:
செல்வேந்திரனின் சமீப எழுத்துகள் எல்லாரையும் போல எனக்கும் எரிச்சலை தருகிறது. எப்படியாவது பிரபலமடைய துடிக்கும் ஆர்வம் தெரிகிறதே ஒழிய, அதற்கான உழைப்பும், தன்முனைப்பும் அவரிடமிருப்பதாக தெரியவில்லை. எங்கு இலக்கியம் தொடர்பான விஷயங்கள் நடந்தேறினாலும் உள்ளேன் ஐயா என்று குரல் எழுப்புவதை தவிர்த்து உருப்படியாக எதையாவது எழுதி தள்ளினாரென்றால் அவரும் இலக்கியவாதியாக நாலு பேரால் மதிக்கப்பட போகிறார். அதைவிடுத்து அவரை தவிர வேறு யாரும் இலக்கியத்தை சொந்தம் கொண்டாடகூடாது என்ற மனோபாவத்தில் செயல்படுவது வடிகட்டிய அயோக்கியதனம்.
நான் இங்கே சிறப்புரை ஆற்றினேன், அங்கே முன்னிலை வகித்தேன் என்று தம்பட்டம் அடித்துகொள்ளும் அவர் வெகுசன எழுத்துக்கும், இலக்கியத்துக்கும் இதுவரை தந்திருக்கும் பங்களிப்புகள் என்னென்ன?
முளை கட்டுமுன்பே பூவாகி, காயாகி, கனியாகிட ஆசைபடக்கூடாது என்பதை மட்டும் செல்வேந்திரனுக்கு சொல்லிகொள்ள விரும்புகிறேன்.
ரைட்டு...ஆரம்பமா அடுத்த குத்து..
ஸ்டாட் மீசிக்!
என்ன நடக்குதிங்கே?
// நோஞ்சான்களைப் போய் யாராவது குத்துவார்களா என்ன?//
:-)))))
பின்னூட்ட கலாட்டாக்களை மின்மடலில் பெற்றுக்கொள்ள இந்த சிரிப்பான்!
லாலா லாலலி லாலா...
டீஆர்பி ரேட்டிங்???
:)))
//காமெடி பிஸு //
இது செம காமெடி மட்டும் அல்ல உண்மையும் கூட
தல அந்த மொக்க கிசுகிசுக்கு போய் ஒரு பதிவா ?
இதை தான் அவர் எதிர்பார்ப்பது
இன்று உங்கள் புண்ணியத்தில் ஹிட்ஸ் நிச்சயம்
போன குத்தில் 'குரங்குப் புணர்ச்சி' என்ற பதிவை படித்தீர்களா ? என்று கேட்டார்
இந்த கும்மாங்குத்தில் 'குரங்கு குட்டி கரணம் அடித்ததை பார்த்தீர்களா ? (நான் கிசுகிசு பதிவை கூறினேன் ) என்று கேட்பார்
//அதிஷா said...
லாலா லாலலி லாலா...//
இது கூட அவர் முந்தைய கிசுகிசுவின் எதிர் பின்னுட்டம்
அப்பாடி அதிஷாவ மாட்டி விட்டாச்சு (பாஸ்சு இந்த பிட்டு போதுமா ?)
அடுத்த கிசுகிசுவில் அதிஷா நிச்சயம் வருவார்
ஹைய்யா...ஜாலி ஜாலி...
...முளை கட்டுமுன்பே பூவாகி, காயாகி, கனியாகிட ஆசைபடக்கூடாது என்பதை மட்டும் செல்வேந்திரனுக்கு சொல்லிகொள்ள விரும்புகிறேன்...
இதில் நான் எந்த இடத்தில் இருக்கிறேன் என்பதை தெரிந்துகொள்ள ஆசை.
அப்புறம்...உங்களை நேரில் சந்தித்து பழகியவர்கள் கூடவா உங்களை புரிந்துகொள்ளவில்லை என்று தெரிந்துகொள்ளும்போது உண்மையிலேயே குஷ்டமாக உள்ளது...
அப்படிபோடு அரிவாளை ........
:)))
சுந்தர் இதற்கெல்லாம் நீங்கள் எதிர்வினையாற்ற தேவையில்லை என்பது என் கருத்து :)
வயசான தாத்தா என்பதை வன்மையாக கண்டிக்கிறேன் எவ்ளோ இளமை என்பது என்னிடம் தனிமடலிட்டு தெரிந்துகொள்ளலாம்
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. உங்களுக்கு தெரியாதது இல்லை.
எல்லாரும் பரஸ்பரம் விட்டு கொடுத்து நல்ல நண்பர்களை இருப்போமே.
இங்காவது (வலை உலகில் ) நான் அறிவானவன் , நான்தான் அதிகம் வாசித்தவன், நாந்தான் பிரபலமானவன் என்ற போட்டி வேண்டாமே.
அதிஷா said...
லாலா லாலலி லாலா..//
யாரடா அது சண்டைக்காட்சிக்குள் வந்து லாலா மீஜிக் போடுறவன்.?
//நவீன இலக்கிய தாத்தா //
உங்க ஹேர்ஸ்டைலை பார்த்து தவறாக எடைபோட்டு விடுகிறார்களோ? :-)
லக்கிலுக் :
உங்க ஹேர்ஸ்டைலை பார்த்து தவறாக எடைபோட்டு விடுகிறார்களோ? :-)
//
குருஜியை கிண்டல் செய்யும் லக்கியை கண்டிக்கிறோம்.
நாங்களும் கிசுகிசு சொல்லுவோமில்லே!
“எப்படியாவது வலையுலகில் ஹைலைட் ஆக நினைவுக்கும் சொம்பு பதிவரொருவர் மற்ற பதிவர்களை வம்புக்கிழுத்து லாடம் கட்ட நினைத்து தனக்கு தானே ஆப்பு சொருகி கொண்டாராம். கிசுகிசுவில் மாட்டிய ஞானதாத்தா ஏன்யா இப்படின்னு சாட்டிங்கிலே கேட்டப்போ இப்படியெல்லாம் எழுதுனாலாவது நாலு பேரு நம்மளை எட்டி பாக்கமாட்டானான்னு சொம்பு பதில் சொன்னாராம். சொம்பு எப்பவுமே இப்படி சொம்பு தூக்கியே பொழைப்பை நடத்துது என்று விஷயம் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள்”
//எல்லாரும் பரஸ்பரம் விட்டு கொடுத்து நல்ல நண்பர்களை இருப்போமே.//
அப்படியே மொத்தமா போய் விக்ரமன் படம் பார்ப்போமே?
*****
கிசுகிசு எழுதுவதற்குக்கூட ஒரு
அடிப்படை நேர்மை வேண்டும்.
*****
ஓஹோ !
//கிசுகிசு எழுதுவதற்குக்கூட ஒரு
அடிப்படை நேர்மை வேண்டும்.
*****
ஓஹோ !//
ஓஹோஹோ!
who is selvendran?
[[[ரமேஷ் வைத்யா said...
//கிசுகிசு எழுதுவதற்குக்கூட ஒரு
அடிப்படை நேர்மை வேண்டும்.
*****
ஓஹோ !//
ஓஹோஹோ!]]]
ஓஹோ..!
ஓஹோஹோ..!
ஓஹோஹோஹோ..!
[[முத்து தமிழினி said...
who is selvendran?]]
நல்ல வேளை..
Who is sundar-ன்னு கேக்காம போனாரே..?
//அதிஷா said...
லாலா லாலலி லாலா...//
ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒஹ்(கோரஸ்)
:-)
//முத்து தமிழினி said...
who is selvendran?//
அய்யய்யோ. அடிக்கடி கேட்குறீங்களே குத்து தமிழினி. செல்வேந்திரன் அழுதுடப் போறாரு. அவரு ஒரு இலக்கிய ஜாம்பவான். அவருக்கு தெரியாத, அவர் வாசிக்காத இலக்கியமே இல்லை. எல்லா இலக்கிய படைப்பாளிகளும் அவரது நண்பர்கள். இலக்கிய விழாக்களில் செல்வேந்திரன் மட்டுமே ஹீரோ. இப்படியெல்லாம் அவரே அவர் பிளாக்கில் சொல்லி கொள்வார். நீங்க பார்த்தது இல்லையா குத்து?
ஓஹோன்னு ஒரே சொம்புங்க மயமா இருக்கு பின்னூட்டங்களில்.
முத்து தமிழினி அவர்களே..
உங்களைப்போல இப்படி கேள்வி கேட்டுக்கொண்டிராமல், கூகிள் நிறுவனத்தை நாடி அவரை கண்டுபிடித்தேன். என்னுடைய இண்டலிஜெண்டலி உங்களுக்கு வருமா என்பது கேள்விக்குறி....
இவிங்க ஏப்போதுமே இப்படித்தான் குருநாதா....
jai hoo
பதிவை விட பின்னூட்ட கும்மி களை கட்டுது.. ம்ம்ம்ம்.. ஆகட்டும், ஆகட்டும்..
எனெர்ஜியை வேஸ்ட் செய்ய வேண்டாம்
அட்ராசக்கை... அட்ராசக்கை... அட்ராசக்கை... அட்ராசக்கை...
//அந்தக் காமெடி பீஸா என்று மனதிற்குள் முணுமுணுத்துக் கொண்டேன்.//
இந்த வரிகளில் மட்டும் மாற்றுக் கருத்து உள்ளது.
அவரின் வார்த்தைகளை குறிப்பிட்டு அதற்கு எதிர்வினையாற்றலாமே.. என்று பின்னூட்டலாம் என்று நினைத்தேன்..
ஆனால் அங்கே.. தாத்தா போன்ற வரிகளும் இருப்பது ஞாபகம் வந்தது..
எல்லாமே அதிகாரத்தின் உரையாடல் என்றாலும் சில நேரங்களில் அதன் தத்துவார்த்த அடிப்படையின் பொதுப்புத்தில் விளையும் சிலபல மணித்துளிகளின் ஒளியளவையும் ஒலிவேகத்தையும் கடந்த ஒரு வீச்சு அதனடத்தியின் மாற்றத்திலும் அதனடர்வின் வேகத்திலுமான சில சலித்துப் போன சந்தர்ப்பங்களின் ஊடாக வெளிவரும் சிந்தனைகளின் முகாந்திரங்களின் சமநிலை மாற்றங்களைக் கொண்டே சில முடிவுகளும் அதன் தொடக்கங்களும் என்றான முடிவுகளும் அதிலிருந்து மகிழ்ந்தெழுந்து விழுந்துவிடும் என்பதில் ஐயமேற்பட வாய்ப்புண்டா?
(இனிமே இந்தப் பக்கம் வரமாட்டேன்..வந்தா விரல் அதுவா இப்பிடி டைப்படிக்குது.. )
@நர்சிம்
செல்வேந்திரன காமெடி பீசுனு சொன்னது தப்புன்றீங்களா பாசு..
மாற்றுக்கருத்துனா அதானே
(ஸ்ஸ்ப்பா கோர்த்து விடறதுலதான் என்னா சொகம் )
//இந்த வரிகளில் மட்டும் மாற்றுக் கருத்து உள்ளது. //
நர்சிம். ரொம்ப சேஃப் கேம் விளையாடுறீங்க போலிருக்கு. எப்பவுமே இப்படிதானா?
:))
//நர்சிம். ரொம்ப சேஃப் கேம் விளையாடுறீங்க போலிருக்கு. எப்பவுமே இப்படிதானா?//
உங்க அளவுக்கு ரிஸ்க் எடுக்குறதில்லைநான். நீங்க எவ்வளவு தைரியமான ஆளுன்னு எனக்குத் தெரியும்..
ஆனா ஒரு வருத்தம்..
அதுக்கு அடுத்த வரியையும் ஏன் படிக்கல நீங்க? அப்படி சொல்லாம்னு வந்தேன்..ஆனா தாத்தான்ற வார்த்தை இருக்குறதால இது சரிதான் அப்பிடின்ற அர்த்தம் அதானே .. சரி அத விடுங்க..எப்பவுமே சேஃப் அப்பிடின்ற வார்த்தை மிக அற்புதமா நீங்க யூஸ் பண்ணி இருக்கீங்க.. என்னப் பத்தி எவ்வளவு தூரத்துக்கு தெரிஞ்சிருந்தா இந்த அளவு துள்ளியமா சொல்லி இருப்பீங்க.. அருமை..ஆனா இத போன்லயும் சொல்லுங்கப்பா பேசும் போது.
மினிமம் அஞ்சு அல்லது ஆறு மிஸ்டேக் கண்டுபிடிச்சு லைஃப மிஸ்ரபிள் ஆக்கிடலாம்ன்னு நெனச்சேன்.
அடடா! இது சிறுகதை சண்டை இல்லையா?
எஸ்கேப்!
தொப்பி தொப்பி !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கும்மி நல்ல இருக்கே, கலக்குங்க
Thank you Jyov.
...
கண்ணா ... திட்டு வாங்க ஆசையா ...
...
கண்ணா ... ரெண்டு திட்டு வாங்க ஆசையா ...
...
Sundar,
I am reading your blog for a while..oops almost visit everyday like a silent follower. You have good flow in writing. why to waste your energy in one complete blog for these things...
//எல்லாமே அதிகாரத்தின் உரையாடல் என்றாலும் சில நேரங்களில் அதன் தத்துவார்த்த அடிப்படையின் பொதுப்புத்தில் விளையும் சிலபல மணித்துளிகளின் ஒளியளவையும் ஒலிவேகத்தையும் கடந்த ஒரு வீச்சு அதனடத்தியின் மாற்றத்திலும் அதனடர்வின் வேகத்திலுமான சில சலித்துப் போன சந்தர்ப்பங்களின் ஊடாக வெளிவரும் சிந்தனைகளின் முகாந்திரங்களின் சமநிலை மாற்றங்களைக் கொண்டே சில முடிவுகளும் அதன் தொடக்கங்களும் என்றான முடிவுகளும் அதிலிருந்து மகிழ்ந்தெழுந்து விழுந்துவிடும் என்பதில் ஐயமேற்பட வாய்ப்புண்டா?//
அதிகாரமென்பது கட்டமைக்கப்படுமொன்றென்பதாலதை எதிர்க்கவேண்டுமென்பது உங்களது கருத்தாகவேண்டுமென்றயென்னெதிர்பார்ப்பு சரியில்லையென்பதிலிருக்குமதிகாரமும்கருத்தியல் வன்முறைக்கூறுகளும் தெரிவிப்பதென்னவென்று எப்படி தெரிந்து கொள்ளவது
(ஐயா ஜாலி ஜாலி - நானும் பெரிய பெரிய வார்த்தை எல்லாம் வச்சு மறுமொழி எழுதிபுட்டேன். நானும் இலக்கியவாதிதான். நானும் இலக்கியவாதிதான்)
பின் குறிப்பு : இதில் எழுதப்பட்டிருக்கும் வாசகத்தின் அர்த்தம் குறித்து அதிகம் கவலைப்படவேண்டாம். ஏதேனும் சொற்குற்றமோ பொருட்குற்றமோ இருந்தால் பொறுத்தருள்க
Jyovram:
In an creative environment one starts attacking another, the creativity automatically gets controlled!
This is an indication of the popularity of tamil web writing, but also an indication of the pitfalls..
Once rancour(rancor for US version) steps in the whole milk gets spoiled, has been my experience with web communities..
Am truly enjoying your commentaries recently.. I request you to write more of those commentaries on recent issues..
Regards,
சம்பந்தமில்ல...ஆனாலும் ஏன்னு தெரியல...திடீர்னு "அதிரடி காரன் மச்சான் மச்சான் மச்சான்டி"ன்னு பாட்டு ஞாபகம் வருது :0))
//
அதிகாரமென்பது கட்டமைக்கப்படுமொன்றென்பதாலதை எதிர்க்கவேண்டுமென்பது உங்களது கருத்தாகவேண்டுமென்றயென்னெதிர்பார்ப்பு சரியில்லையென்பதிலிருக்குமதிகாரமும்கருத்தியல் வன்முறைக்கூறுகளும் தெரிவிப்பதென்னவென்று எப்படி தெரிந்து கொள்ளவது
//
படிச்ச நீங்களே இப்படி எல்லாம் பொது இடத்துல நடந்துக்கலாமா புருனோ & நர்சிம்??? ஏன் இப்படி கெட்ட கெட்ட வார்த்தையில திட்டுறீங்க? படிக்கிறவங்க என்ன நெனைப்பாங்க... :))))
//அதன்பிறகுதான் முத்துக்கள், குத்துக்கள் என கும்மாங்குத்து பதிவுகள் போட ஆரம்பித்தாராம் அந்த 'ஞான-ரிவர்'.//
அவர் சொல்லவந்தது உங்கள் விமர்சனத்திற்கு பிறகு காரசரமான பதிவுகள் போடுகிறாராம் என்று!
பதிவுலகில் ஒருவரை ஒருவர் கலாய்த்தல் சகஜம் தானே ஏன் இவ்ளோ டென்ஷன்!
//செல்வேந்திரனின் சமீப எழுத்துகள் எல்லாரையும் போல எனக்கும் எரிச்சலை தருகிறது. எப்படியாவது பிரபலமடைய துடிக்கும் ஆர்வம் தெரிகிறதே ஒழிய,//
தினமும் அதிகபட்சமாக ஆயிரம் பேர் படிக்கும் வலைபூவில் எழுதி என்னாத்த பிரபலமடையப் போகிறோம் என்று தெரியவில்லை!
செல்வேந்திரன் ஏற்கனவே ஆனந்தவிகடனில் ”முடியலத்துவம்”. சிறுகதைகள் எழுதி பிரபலமானவர்!
நீங்க புதுசு போல!
//தினமும் அதிகபட்சமாக ஆயிரம் பேர் படிக்கும் வலைபூவில் எழுதி என்னாத்த பிரபலமடையப் போகிறோம் என்று தெரியவில்லை!//
திரு. வால்பையன் அவர்களே!
தங்கள் வயிற்றெரிச்சலுக்கு எனது நன்றிகள். நீங்கள் வயிறெரிய, வயிறெரிய எனது வாழ்க்கை வளமாகிக் கொண்டிருக்கிறது.
என் மீது மட்டுமன்றி, இன்னும் என் நண்பர்கள் சிலரின் மீதும் நீங்கள் வயிறெரிய முடியுமானால் அவர்களது வாழ்க்கையும் தங்களால் வசந்தம் பெறும் என்று மட்டும் தங்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்!
//தங்கள் வயிற்றெரிச்சலுக்கு எனது நன்றிகள். நீங்கள் வயிறெரிய, வயிறெரிய எனது வாழ்க்கை வளமாகிக் கொண்டிருக்கிறது.//
:)
எப்படி இப்படி!
அப்போ பிரபலம்னு கன்பாஃர்மே பண்ணிட்டிங்களே!
ஹா ஹா ஹா
ரொம்ப நாள் கழிச்சி ஜோக் அடிச்சிருக்கிங்க!
நன்றி சிரிக்க வச்சதுக்கு!
//என் மீது மட்டுமன்றி, இன்னும் என் நண்பர்கள் சிலரின் மீதும் நீங்கள் வயிறெரிய முடியுமானால் அவர்களது வாழ்க்கையும் தங்களால் வசந்தம் பெறும் என்று மட்டும் தங்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்! //
என்னால் பலர் வாழ்க்கை வளம் பெறும் என்றால், வயிற்றில் பெட்ரோல் ஊற்றி கூட பற்றவைக்க தயார்! பகுத்தறிவு தங்கமே!
//செல்வேந்திரன் ஏற்கனவே ஆனந்தவிகடனில் ”முடியலத்துவம்”. சிறுகதைகள் எழுதி பிரபலமானவர்!//
அப்படிங்களா? முடியலத்துவம் ஒரு எபிசோடு கூட உங்களால படிக்க முடியலையா?
நாங்கள்லாம் முடியலத்துவம் கவிதைகள்னு நெனைச்சிக்கிட்டு இருந்தோம் வால்பையன். செல்வேந்திரனும் அதெல்லாம் கவிதைகள் என்றே சொல்லிகொண்டு திரிகிறாராம். அவையெல்லாம் சிறுகதைகள் என்று கண்டறிந்து சொன்ன உங்களுக்கு வாழ்த்துக்கள்.
இந்த உலகதர சிறுகதைகளை எழுதியதற்கு பிறகே செல்வேந்திரனை வால்ஸ்ட்ரீட் ஜர்னலில் எழுத கூப்பிட்டார்கள் என்றும் கேள்விபட்டிருக்கிறோம்.
மதுரையிலே கேட்டாக, மன்னார் குடியில் கேட்டாக பாட்டு ஞாபகத்துக்கு வருகிறது வால்பையன்.
//ரொம்ப நாள் கழிச்சி ஜோக் அடிச்சிருக்கிங்க!
நன்றி சிரிக்க வச்சதுக்கு!//
ஐயோ பாவம். அழுதுக்கினே பின்னூட்டம் போட்டிருக்கீங்களே வாலு. காமெடி.. காமெடி..
முடியலத்துவம் கவிதைன்னு நான் எங்கேயாவது சொன்னேனா,
பின்னூட்டத்தை ஒழுங்க படிச்சிட்டு பின்னூட்டம் போடுங்க
அனானி வாசகன்!
ஐயகோ. வால்பையன் இவ்வளவு அப்பாவி? முடியலத்துவம் கவிதை இல்லைன்னு நீங்க சொன்னது எல்லாருக்கும் காமெடி. செல்வேந்திரனுக்கு மட்டும் டிராஜடி.
வேணுமின்னா செல்வேந்திரனுக்கு போன் பண்ணி உங்க முடியலத்துவம் சிறுகதைகள் சூப்பர்னு சொல்லி பாருங்க. ஒருவேளை உங்களுக்கு உண்மை விளங்கினாலும் விளங்கலாம்.
//முடியலத்துவம் கவிதைன்னு நான் எங்கேயாவது சொன்னேனா,//
ஏன்யா வாலு. உனக்கு சம்பந்தமில்லாத எடத்துக்கு வந்து வாயை கொடுத்துட்டு எது எதையோ புண்ணாக்கிட்டு போற. முடியலத்துவம் கவிதைகள் மூலம் இலக்கிய உலகில் தடம் பதித்தவர்னு செல்வேந்திரன் அவருக்கு அவரே சொட்டு கொடுத்துக்கிறதை படிச்சதே இல்லையா.
வாசகன்!
முடியலத்துவத்துக்கும், சிறுகதைகளுக்கும் இடையில் ஒரு கமா இருக்கு அந்த பின்னூட்டத்தில்.
நோகடிக்காதிங்க!
முடியலத்துவம் கவிதையில் சேராது நான்கு வரி ஹைகூவில் சேர்க்கலாம்!
உங்களுக்கு சொந்தமா ஐடியில்லதப்ப உங்களால இந்த பின்னூட்டத்தை பாலோ பண்ண முடியாது, ஆனா நீங்க உடனே பாலோ பண்றிங்க, அப்போ இதுக்கு முன்னாடி சொந்த ஐடியில பின்னூட்டம் போட்ட ஒரு பதிவர் தான் நீங்க சரியா!?
ஒருவேளை நீங்க பயங்கர!? பிரபலமாகவும் இருக்கலாம் யார் கண்டா!
(பிரபலங்கள் ஏன் இப்போ பொடக்காலையில உள்ளே வர்றாங்க)
பொடக்காளை=பின்புறம்
சுந்தர்ஜி. வால்பையனை ரவுண்டு கட்டி அடிக்கும் ரவுண்டா இன்றைக்கு. பாவம் சரக்கில்லாதவர்கள் மூடிகொள்ள வேண்டியதை திறந்து வைத்துகொள்வதால் கிடைக்கும் பலன்கள் இன்று வால்பையனுக்கு கிடைக்கிறது. அவர் காலண்டரில் நாள்பலன் பார்த்திருக்கலாம். அவர் ராசிக்கு இன்று சந்திராஷ்டமமோ என்னவோ.
//ஏன்யா வாலு. உனக்கு சம்பந்தமில்லாத எடத்துக்கு வந்து வாயை கொடுத்துட்டு எது எதையோ புண்ணாக்கிட்டு போற. முடியலத்துவம் கவிதைகள் மூலம் இலக்கிய உலகில் தடம் பதித்தவர்னு செல்வேந்திரன் அவருக்கு அவரே சொட்டு கொடுத்துக்கிறதை படிச்சதே இல்லையா. //
இல்லை, என்ன பண்ணலாம்!
//வால்பையனை ரவுண்டு கட்டி அடிக்கும் ரவுண்டா இன்றைக்கு. //
ஆவலுடன் உள்ளேன்!
எனக்கும் பொழுது போகவேண்டாமா!
//பாவம் சரக்கில்லாதவர்கள் மூடிகொள்ள வேண்டியதை திறந்து வைத்துகொள்வதால் கிடைக்கும் பலன்கள் இன்று வால்பையனுக்கு கிடைக்கிறது.//
அதை முகம் இல்லாதவர்கள் சொல்லும் போது தான் சிப்பு சிப்பா வருது!
//அவர் காலண்டரில் நாள்பலன் பார்த்திருக்கலாம். அவர் ராசிக்கு இன்று சந்திராஷ்டமமோ என்னவோ. //
அந்த வேலையெல்லாம் பகுத்தறிவு பகலவர்களும், திராவிட சிங்கங்களும் தான் செய்வார்கள்.
நான் சாதரண மனிதனய்யா!
மிஸ்டர் டெயில்
//செல்வேந்திரன் ஏற்கனவே ஆனந்தவிகடனில் ”முடியலத்துவம்”. சிறுகதைகள் எழுதி பிரபலமானவர்!//
இதுதான் நீங்கள் எழுதியிருந்தது. செல்வேந்திரன் விகடனில் ஒரு சிறுகதை கூட எழுதினதாக தெரியவில்லை. நீங்கள் -சிறுகதைகள்- எழுதி என்றும் எழுதியிருக்கிறீர்கள்.
ஏடாகூடமாக ஏதோ சொல்லிவிட்டீர்கள். அதற்கு சப்பைகட்டு கட்ட மேலும் மேலும் அபத்தமாக பின்னூட்டமிட்டு உங்களது அரைகுறை அறிவை உலகுக்கே பறைசாற்றாதீர்கள்.
//முடியலத்துவம் கவிதையில் சேராது நான்கு வரி ஹைகூவில் சேர்க்கலாம்!//
ஹைகூவை கண்டுபிடிச்ச ஜப்பான்காரன் உதைப்பான். பரவாயில்லையா.
வால்பையன்,
/அவர் சொல்லவந்தது உங்கள் விமர்சனத்திற்கு பிறகு காரசரமான பதிவுகள் போடுகிறாராம் என்று!/
இது தவறானது. என்னுடைய பழைய இடுகையான செல்வேந்திரனும் முத்து உதிர்ப்புகளையும்தான் அவர் ரெஃபர் செய்கிறார். நீங்கள் அவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
மற்றபடி, அவருடைய முடியலத்துவம் கவிதைகள் எனக்கு ஏற்புடையவை அல்ல. ஆனால், அது பிரச்சனையில்லை :)
நான்கு வரி ஹைகூக்களா.. சரி :) :) :)
//செல்வேந்திரன் விகடனில் ஒரு சிறுகதை கூட எழுதினதாக தெரியவில்லை.//
அதை நீங்கள் ஆனந்தவிகடனில் கேட்டு தெளிவுசெய்து கொள்ளுங்கள், புள்ளிவிபரம் கொடுக்க நான் கேப்டன் இல்லை.
//அபத்தமாக பின்னூட்டமிட்டு உங்களது அரைகுறை அறிவை உலகுக்கே பறைசாற்றாதீர்கள். //
முழு அறிவு உள்ளவர்கள் தான் வந்து சொல்லி கொடுங்களேன்!
//அதை முகம் இல்லாதவர்கள் சொல்லும் போது தான் சிப்பு சிப்பா வருது!//
சிரிக்கறமாதிரி தெரியலை வாலு. குலுங்கி குலுங்கி அழுதுகொண்டே பின்னூட்டுகிறீர்கள் போலிருக்கு. டேக் இட் ஈஸி. இன்னைக்கு உங்களுக்கு நேரம் இப்படிதான். யார் மாற்றமுடியும்.
//மற்றபடி, அவருடைய முடியலத்துவம் கவிதைகள் எனக்கு ஏற்புடையவை அல்ல. ஆனால், அது பிரச்சனையில்லை :)//
தனிமனித ஏற்பை பற்றி ஒன்றுமில்லை அது எனக்கு பிரச்ச்னையுமில்லை என்று கூறிவிட்டீர்கள்!
அனானிக்கு அளித்த பதிலில் சொல்லியுள்ளேன், அது ஆனந்தவிகடனில் வந்ததென்று, பதிவெழுதி பிரபலம் ஆவது எப்படின்னு தான் தெரியல!
ப்ளாக்குன்னா என்னான்னு பக்கத்து வீட்டுகாரனுக்கே தெரியல! ஆனா நான் பிரபலம்னு சிலதுங்க சொல்லிட்டு திரியுதுங்க!
//சிரிக்கறமாதிரி தெரியலை வாலு. குலுங்கி குலுங்கி அழுதுகொண்டே பின்னூட்டுகிறீர்கள் போலிருக்கு.//
இம்மாதிரியான பின்னூட்டம் மன ரீதியான டென்ஷனை எனக்கு கொடுக்கும் என்று எதிர்பார்த்தீர்களேயானால்.
ஐ யாம் ஸாரி, யூ ஆர் லாஸ்
ஹிஹிஹிஹி
(எத்தனைய பார்த்திருப்போம்)
//அதை நீங்கள் ஆனந்தவிகடனில் கேட்டு தெளிவுசெய்து கொள்ளுங்கள், புள்ளிவிபரம் கொடுக்க நான் கேப்டன் இல்லை.//
அப்புறம் என்ன HAIR-உக்கு செல்வேந்திரன் சிறுகதைகள் எழுதி பிரபலமானார்னு இங்கே பின்னூட்டம் போடறீங்க. செல்வேந்திரன் யாருன்னு எனக்கும் தெரியாது. நிறைய பேருக்கும் தெரியாமல் போகவே தான் இங்கே வந்து Who is Selventhiran என்று கேட்கிறார்கள்.
இணைய தமிழர்களுக்கு பிரபலமான செந்தழல் ரவிக்கே செல்வேந்திரன் யார் என்று தெரியாதபோது அவர் எப்படி பிரபலமானவர் ஆவார்.
//செல்வேந்திரன் யாருன்னு எனக்கும் தெரியாது//
யாருன்னே தெரியாதப்ப என்ன எழுதினார்ன்னு உனக்கு எங்க தெரிய போவுது!
//இணைய தமிழர்களுக்கு பிரபலமான செந்தழல் ரவிக்கே செல்வேந்திரன் யார் என்று தெரியாதபோது அவர் எப்படி பிரபலமானவர் ஆவார். //
யார் அது செந்தழல் ரவி?
//ப்ளாக்குன்னா என்னான்னு பக்கத்து வீட்டுகாரனுக்கே தெரியல! ஆனா நான் பிரபலம்னு சிலதுங்க சொல்லிட்டு திரியுதுங்க!//
ஐயோ பாவம். வயித்தெரிச்சல் கண்டினியூஸ்.
//இம்மாதிரியான பின்னூட்டம் மன ரீதியான டென்ஷனை எனக்கு கொடுக்கும் என்று எதிர்பார்த்தீர்களேயானால்.
ஐ யாம் ஸாரி, யூ ஆர் லாஸ்//
சரி. சரி. ரொம்ப அழுவாதீங்க. பாவமாயிருக்கு.
//னிமனித ஏற்பை பற்றி ஒன்றுமில்லை அது எனக்கு பிரச்ச்னையுமில்லை என்று கூறிவிட்டீர்கள்!//
அதற்கு அடுத்து சுந்தர்ஜி என்ன எழுதியிருக்கார் என்றும் பார்த்துவிட்டு பின்னூட்டம் போடுங்கள் வாலு. மறுபடியும் மறுபடியும் அரைகுறை என்று நிரூபித்துகொண்டே இருக்கனுமா.
//யாருன்னே தெரியாதப்ப என்ன எழுதினார்ன்னு உனக்கு எங்க தெரிய போவுது!//
யாருன்னே தெரியாத ஒரு மாங்காயை பிரபலம்னு தலையில் வெச்சி தூக்கிட்டு ஆடுற இன்னொரு மாங்காயை இப்போதான் பார்க்குறோம். வால்பையன் மற்றவர்களுக்கு வாலாகவோ, நூலாகவோ இருங்கள். பொதுவெளியில் பேசும்போது கொஞ்சமாவது லாஜிக்கோடு பேசுங்கள். இல்லாவிட்டால் உங்களுக்கு மட்டுமே தெரிந்த நீங்கள் முட்டாள் என்ற விவரம் ஊருக்கே தெரிந்துவிடும்.
//
யார் அது செந்தழல் ரவி?
//
வால், நீங்க இப்படி ஒரு கமெண்ட் போட்டீங்களே, அவருதான்..
//
வால்பையன் said...
அண்ணே நான் எப்போ வருவேன்!
எதாவது சொல்லுங்க!
ஒரே பதட்டமா இருக்கு!
//
//
வால்பையன் said...
:)
ரொம்ப நன்றியண்ணே!
60 மார்க் கொடுத்ததுக்கு, வித்தியாசமான முயற்சிக்காக தான் செய்தேன், மற்றபடி கருத்து சொல்ல தான் நிறைய பேர் இருக்காங்களே நானும் எதுக்கு!
//
அட போங்கப்பா, இந்த வெளையாட்டு எனக்கு புடிக்கவே இல்லை, ஒரு வெட்டில்லை, குத்தில்ல, சும்மா விறுவிறுன்னு 20-20 மாதிரி இருக்க வேணாமா???? என்னவோ போங்க வால் & அனானி...
டென்ஷன் ஆகாதீங்கப்பா.. சும்மா ஜாலிக்கு பின்னூட்டம் போட்டேன்..
ஹி..ஹி.. போன கமெண்ட் "மீ தி 75த்" :)))
//அதற்கு அடுத்து சுந்தர்ஜி என்ன எழுதியிருக்கார் என்றும் பார்த்துவிட்டு பின்னூட்டம் போடுங்கள் வாலு. மறுபடியும் மறுபடியும் அரைகுறை என்று நிரூபித்துகொண்டே இருக்கனுமா. //
நான்கு வரி ஹைகூக்களா.. சரி :) :) //:)//
அவருக்கு சிரிப்பு வருது சிரிச்சிட்டு போறார்! உமக்கு என்னய்யா வந்துச்சு!
அடுத்தவன் சிரிக்கவே கூடாதா உமக்கு!
வரும்போதே பின்னாடி முளாகாய் தடவிட்டு வருவீரோ!
அனானிக்காக நான் சொந்த பெயரில் வெளியிடும் இந்த பின்னூட்டத்தை தடை செய்து விடாதீர்கள்
செய்யமாட்டிங்க இருந்தாலும் ஒரு ரெக்வெஸ்ட்!
//ஹைகூவை கண்டுபிடிச்ச ஜப்பான்காரன் உதைப்பான். பரவாயில்லையா. //
கவிதைன்னு சொல்லக்கூடாது!
ஹைகூன்னு சொல்லக்கூடாது!
சரி வேற பேர் வைப்போமா!
இனிமே செல்வேந்திரன் எழுதுவதை “குவிதை” என்று அழைப்போம். யாராவது அந்த சொல்லை பயன்படுத்தினால் நாம போய் உதைப்போம் எப்பூடி!?
//வால்பையன் மற்றவர்களுக்கு வாலாகவோ, நூலாகவோ இருங்கள். பொதுவெளியில் பேசும்போது கொஞ்சமாவது லாஜிக்கோடு பேசுங்கள். இல்லாவிட்டால் உங்களுக்கு மட்டுமே தெரிந்த நீங்கள் முட்டாள் என்ற விவரம் ஊருக்கே தெரிந்துவிடும்.//
நான் வாலாவோ, ..லாவோ இருந்துட்டு போறேன்.
சிறுகதை எழுதுனது தெரியாதுன்னு சொன்னபிறகு நான் சொல்ரதுக்கு என்ன இருக்கு!
நீங்க யாருக்காவது ..லா இருந்திங்கன்னா அங்க கேட்டு பாருங்க சொல்லுவாங்க!
லாஜிக் பத்தி பேசுறதுக்கும் லாஜிக் வேணும். அதை முதலில் தெரிஞ்சிகிட்டு உரையாட வாங்க
வெண்பூ அண்ணே
அவரு தான் செந்தழல் ரவியா?
இம்புட்டு நாளா தெரியாம போச்சு பாருங்க! ரொம்ப நன்றியண்னே
//அவருக்கு சிரிப்பு வருது சிரிச்சிட்டு போறார்! உமக்கு என்னய்யா வந்துச்சு!
அடுத்தவன் சிரிக்கவே கூடாதா உமக்கு!
வரும்போதே பின்னாடி முளாகாய் தடவிட்டு வருவீரோ!//
ரொம்ப டென்ஷனாயிட்டீங்க போலிருக்கு. நீங்க முன்னாடி முளகாய் தடவிக்கிறது வழக்கமோ. ரொம்ப எரியுது போலிருக்கு. இங்கே வந்து பின்னாலே வாங்கி கட்டிக்கிட்டதுக்கு ஏதாவது ஆயிண்ட்மெண்ட் ஜில்லுன்னு தடவிக்கோங்கோ.
//நான் வாலாவோ, ..லாவோ இருந்துட்டு போறேன்.
சிறுகதை எழுதுனது தெரியாதுன்னு சொன்னபிறகு நான் சொல்ரதுக்கு என்ன இருக்கு!//
அவரு சிறுகதை எழுதுனது எனக்கு மட்டுமில்லை. உங்களுக்கும் தெரியாது என்பது நல்லாவே தெரியுது. சிறுகதை பேரை மட்டுமாவது போன் பண்ணி கேட்காம சொல்லுங்க பார்க்கலாம்.
//லாஜிக் பத்தி பேசுறதுக்கும் லாஜிக் வேணும். அதை முதலில் தெரிஞ்சிகிட்டு உரையாட வாங்க//
ரொம்ப முத்திடிச்சோ. பாண்டிமடம் போயி ட்ரீட்மெண்ட் எடுத்துக்குங்க. ஆனா அங்கே வாலுள்ள பிராணிகளுக்கு ட்ரீட்மெண்ட் தருவாங்களான்னு தெரியாது.
//இனிமே செல்வேந்திரன் எழுதுவதை “குவிதை” என்று அழைப்போம். யாராவது அந்த சொல்லை பயன்படுத்தினால் நாம போய் உதைப்போம் எப்பூடி!?//
ஓஹோ. இதுமாதிரி அறிவுகெட்டதனமா பேசுறதுக்கு பேரு காமெடியோ. ஓஹோ.. ஓஹோஹோ..
முட்டாள்களிடம் இனி உரையாடி எந்த பலனும் இல்லாத பட்சத்தில் முட்டாள்களை!? கண்டுக்காமல் விடுவது நல்லது!
இனிமே சொந்த ஐடியில வர்றவங்க கூட தான் உரையாடல், மேட்டரை விட்டுட்டு உளறிகிட்டு இருக்குறவனுங்க கிட்ட பேசினா நமக்கு அவனுங்க பக்கத்து பெட்ட ரிசர்வ் பண்ணிடுவானுங்க,
//முட்டாள்களிடம் இனி உரையாடி எந்த பலனும் இல்லாத பட்சத்தில் முட்டாள்களை!? கண்டுக்காமல் விடுவது நல்லது!//
ஐயய்யோ. குடிகெட்டதே. உலகின் ஒரே புத்திசாலி இனிமேல் முட்டாள்களோடு உரையாற்ற மாட்டாராம். இவர் மட்டுமே புத்திசாலி என்கிறபோது இவர் யாரோடு உரையாற்றுவார். பேசாமல் வாயையும் மற்றவையையும் பிளாஸ்திரி போட்டு ஒட்டிகொள்வாரோ.
எச்சூச்சுமீ இங்க ஒரு தீப்பெட்டி கிடைக்குமா!
அன்பு அதிஷா!
தீ பெட்டி என்ன தீ பந்தமே தர நான் தயார்!
செல்வேந்திரன் ஒரு அப்பட்டமான சுயநலவாதி. போலி மனுஷன். நேரில் பார்க்கும்போது ஒரு மாதிரியும் முதுகுக்கு பின்னால் பகடியும் செய்யும் பிறவி.
சுந்தர் விட்டு தள்ளுங்கள்.
வார்த்தைகளை வித்தியாசமா எழுதி எந்தவித தராதரமும் இல்லாது குப்பைகளை கொட்டிவிட்டு போகட்டும். தன்னை பெரிய இலக்கியவாதியாக நினைத்து கொண்டு உளறி கொட்டட்டும். கண்டுகாதீங்க.
கிசுகிசுவின் அடிப்படை நேர்மையாக நான் சொல்ல வந்தது :
நபர்களின் பெயர்களையோ அல்லது இடங்களின் பெயர்களையோ படிப்பவர்கள் யூகிக்கவிட்டு, ஆனால் சம்பவங்களை உண்மையாக எழுதுவது.
'ஓஹோ' போட்ட நண்பர்களுக்காக இது :)
பின்னூட்டமிட்ட, கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட, மற்றும் கும்மி அடித்துக் கொண்டாடிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி :)
***
நபர்களின் பெயர்களையோ அல்லது இடங்களின் பெயர்களையோ படிப்பவர்கள் யூகிக்கவிட்டு, ஆனால் சம்பவங்களை உண்மையாக எழுதுவது
***
ஏன் இது எங்களுக்கு புரியாதா ?
ஓஹோ போட்ட நண்பர்களில் ஒருவன் ! :)-
[[[அது சரி said...
சம்பந்தமில்ல...ஆனாலும் ஏன்னு தெரியல...திடீர்னு "அதிரடி காரன் மச்சான் மச்சான் மச்சான்டி"ன்னு பாட்டு ஞாபகம் வருது:0))]]]
ச்சூ.. இதையெல்லாம் இந்த நேரத்துல வந்து ஞாபகப்படுத்துக்கிட்டு..?
அதெல்லாம் ச்சும்மா.. தொட்டுக்குறதுக்கு ஊறுகாய் இல்லைன்னா மாமன், மச்சான் சண்டை நடக்கும்.
அதையெல்லாம் போய் பெரிசா எடுத்துக்கிட்டு..?!!
[[[ஜ்யோவ்ராம் சுந்தர் said...
கிசுகிசுவின் அடிப்படை நேர்மையாக நான் சொல்ல வந்தது :
நபர்களின் பெயர்களையோ அல்லது இடங்களின் பெயர்களையோ படிப்பவர்கள் யூகிக்கவிட்டு, ஆனால் சம்பவங்களை உண்மையாக எழுதுவது.
'ஓஹோ' போட்ட நண்பர்களுக்காக இது :)]]]
நீங்கள் சொல்வதைப் பார்த்தால் கிசுகிசுவிலும் ஒரு உண்மையைச் சொல்ல வேண்டும் என்கிறீர்கள்.
வெளிப்படையாக உண்மையையே சொல்லிவிடலாமே..?
கிசுகிசு என்பதே முழுவதுமே பொய் என்றோ, அல்லது கால், அரை, முக்கால், உண்மைகள் இருக்கலாம். அல்லது இல்லாமலும் இருக்கலாம் என்ற அர்த்தத்தில்தான் பரவலாக அறியப்படுகிறது.
நீங்கள் முழு உண்மையைக் கேட்கிறீர்கள்..
இது நல்லாயில்ல.. சொல்லிட்டேன்..
அப்புறம் படிக்கிறதுக்கு சுவாரஸ்யமே இருக்காது.. சப்புன்னு ஆயிரும்..
சின்ன குறுகுறு சந்தோஷத்துக்காகத்தான் அந்த மாதிரியான கிசுகிசு..
பதிவை அனுபவிக்கணும். ஆராயக் கூடாதுன்னு சொல்றாங்க.. பார்த்தீங்களா அது மாதிரி.
நான் நாலு தடவை ஓஹோ போட்டிருக்கேன்..
அதனாலதான் கொஞ்சம் நீண்டிருச்சு..!
[[[Anonymous said...
செல்வேந்திரன் ஒரு அப்பட்டமான சுயநலவாதி. போலி மனுஷன். நேரில் பார்க்கும்போது ஒரு மாதிரியும் முதுகுக்கு பின்னால் பகடியும் செய்யும் பிறவி. சுந்தர் விட்டு தள்ளுங்கள்.]]]
நீங்கள் எதிர்பார்த்த பின்னூட்டம் இதுதானா..?
படிக்கவே திகட்டுகிறது.. ஓவர்..
[[[வால்பையன் said...
முட்டாள்களிடம் இனி உரையாடி எந்த பலனும் இல்லாத பட்சத்தில் முட்டாள்களை!? கண்டுக்காமல் விடுவது நல்லது!]]
இனிமே சொந்த ஐடியில வர்றவங்ககூடதான் உரையாடல், மேட்டரை விட்டுட்டு உளறிகிட்டு இருக்குறவனுங்க கிட்ட பேசினா நமக்கு அவனுங்க பக்கத்து பெட்ட ரிசர்வ் பண்ணிடுவானுங்க,]]]
இதை முன்னாடியே செஞ்சிருந்தா இவ்ளோ நேரம் டைப் பண்ணி நேரமாச்சும் மிச்சமாயிருக்கும்..!
[[[மிதக்கும்வெளி said...
எனெர்ஜியை வேஸ்ட் செய்ய வேண்டாம்.]]]
நாங்க சொன்னாத்தான் கேக்க மாட்டீங்க.. உங்க மாமன் சொல்றதையாவது கேளுங்க..!
ஒண்மை தமிழன் நீங்கள் ஏன் உங்கள் பெயரை உத்தம தமிழன் என்று மாற்றி கொள்ளகூடாது. நீங்கள் இவ்வளவு நல்லவராகவும், அறிவாளியாகவும் பிறந்திருப்பது தமிழ்தாய் செய்த பாக்கியம். இலக்கியத்துக்கு கிடைத்த வரம்.
எனக்கு ஒரு சின்ன சந்தேகம் சுந்தர் சார். செல்வேந்திரனிடம் நீங்கள் உங்கள் அபிப்பிராயத்தை சொன்ன போது அவர் உங்களிடம் ஒன்றும் சொல்லாமல் பின் கிசுகிசுத்திருப்பது மிகவும் தவறான செயல்.
ஆனால், முதிர்ந்த எழுத்தாளரான நீங்கள் ஏன் பிடிக்காமல் ஐம்பது கட்டுரைகளை வாசித்தீர்கள்.... அஞ்சு படிச்சதுமே ஒன்னும் தேரலனு தூக்கிப் போட்டிருக்கலாமே. இது என் சந்தேகம் மட்டுமே. இதில் எந்த உள், வெளி, சைடு குத்தும் இல்லைங்கோ. :O
நெனச்சேன் ஏன் இன்னும் விக்னேஷ்வரி வரலையேன்னு. சண்டை போட வருவாங்கன்னு பார்த்தா சந்தேகம் கேட்டு வந்திருக்காங்க!
என்னங்க பண்றது, நொய்டால இருந்து வர்றதுக்கு கொஞ்சம் லேட் ஆகும் தானே. ;)
ஆமா, நான் வரலைனு நீங்க நினைக்குற அளவுக்கு நான் பெரிய ஆள் ஆகிட்டேனா.... அடடா....
ஏற்கனவே போய்க்கிட்டிருக்குற சண்டை பத்தலையா அபி அப்பா. நான் எதுக்குங்க சண்டை போட போறேன். அது ஏன் நான் கேட்டு வந்த சந்தேகத்தில் உங்களுக்கு ஆச்சரியம்!
என்னவோ போங்க, அஞ்சு வருஷமா எழுதுற அபி அப்பாவுக்கு இப்போ வந்த விக்னேஷ்வரியத் தெரிஞ்சிருக்குறது விக்னேஷ்வரிக்குப் பெருமையா இருக்குங்க. :))))
அட அப்படி இல்லை விக்னேஷ்வரி! சமீபத்துல யோரோ உங்க பதிவின் லிங் கொடுத்தாங்க படிச்சேன். நல்லா இருந்துச்சு. விடாம எல்லா பதிவையும் படிச்சு முடிச்சேன் ஒரே நாள்ல. அதிலே செல்வேந்திரன் பத்தி ஒரு பதிவு இருந்துச்சு. அதிலே நீங்க அவரை பத்தி சொல்லியிருந்த கருத்துக்கும் இந்த பதிவி+ பின்னூட்டங்களும் சம்மந்தமே இல்லாம இருக்கேன்னு தான் உங்க விளக்கம் எதிர் பார்த்து காத்துஇருந்தேன். மத்தபடி எனக்கு சண்டை மூட்டிவிட ஆசை இல்ல.
உங்க பதிவிலே உங்க கல்யாண நிகழ்வு பதிவு அருமை.நல்லா எழுதறீங்க வாழ்த்துக்கள்!
ஒரு மண்டூக பயல் மணவன். முதல் டெஸ்டில் பெயில் ஆகி விடுகிறான். அட அடுத்த கால் பரீட்சையிலாவது பாஸ் மார்கு எடுக்கிரானாநு பாக்குறார் வாத்தியார். அதிலயும் மண்டூகம் பெயில். அடுத்ட்து அரை பரிட்சை. அதிலும் பெயில். அதுக்காக அந்த மண்டூகம் எழுதிய முழு பரீட்சை பேப்பரை திருத்தாமல் இருப்பாங்களா? அது மாதிரியேதான் 50 பதிவுல ஒண்ணாவது தேறாதானு படிச்சுப் பார்த்திருப்பாரு ஜியோ. இதில என்ன கிண்டல்? ஒழுங்காப் பதிவு போட முயற்சிக்கணும். கிசுகிசுஎல்லாம் எழுத கூடாது.
Post a Comment