தெரிந்தது

நாயன்மார் கதைகளும் தசரத சோகமும்
ஆச்சி சொன்னது
ஆற்று மணல் பரப்பி
விரல்களில் ரத்தம் கசிய
அம்மா சொன்னது
உயிர் எழுத்தின் சுழிவுகள்
கல் சிலேட்டை விடவும்
தகர சிலேட்டின் உழைப்பு
அப்பா சொன்னது
கடிதம் எழுதக் கற்றுத் தந்தது
கல்யாண்ஜியும் மாதவனும்
மோகமுள், பொய்த்தேவு
முதல் சரோஜாதேவி ரமணி சந்திரன்
வரை நண்பர்கள்
இன்னும் இருக்கிறது
இவள் வந்து சொன்ன
இலக்கணமில்லா இரவுகள்
நானாய்த் தெரிந்தது என்ன
காலையில் காபி நுரையில் கண்விழிப்பதும்
விளம்பரம் பார்த்து ஷேவிங் க்ரீம் மாற்றுவதும்
தவிர

(நண்பர் குமார்ஜி 1990களின் ஆரம்பத்தில் எழுதியது. நண்பர் மறுபடியும் எழுதத் துவங்கியிருக்கிறார்!)

19 comments:

அக்னி பார்வை said...

பகிர்விற்க்கு நன்றி சுந்தர்...கவிதை படித்தவுடன் , தலையில் லேசாக சுரிர் ...

பா.ராஜாராம் said...

முன்பே இந்த கவிதையை நானும் வாசித்திருக்கிறேன் சுந்தரா...அவன் திருமண நாளின் முதல் நாள் இரவென நினைவு...மொட்டை மாடியில்...முண்டா பனியனுடன்...மண்டி இட்டு அமர்ந்தபடி...இதை வாசித்து காட்டி கொண்டு இருந்தான் குமரன்!அடர் இருளில் இருந்து புறப்பட்டு வந்த தோவாலையின் பசும் நாற்றங்காலின் பச்சை வாசனை வரையில்...நினவு இழுத்து செல்கிறது.ஒன்றை தொட்டு ஒன்றாக மொட்டவிழ்கிறது இருட்டில் இருந்தபடி வேப்பம்பூ...

நேசமித்ரன் said...

பா.ரா வை தொடர்ந்து அடுத்த படைப்பாளி....
மிக்க நன்றி ஜ்யோவ்ராம் உங்களின் அறிமுகங்களுக்காக...

மண்குதிரை said...

nalla kavithai nanri

யாத்ரா said...

கவிதை மிகவும் பிடித்திருக்கிறது, பகிர்வுக்கு மிக்க நன்றி.

யாத்ரா said...

உங்கள் நண்பர்கள் மீண்டும் எழுத வந்திருப்பதில் நானும் மிக மிக மகிழ்கிறேன்.

அகநாழிகை said...

நன்றாக இருக்கு சுந்தர்.
குமார்ஜி வலைப்பக்கங்களில் எழுதுகிறாரா..?
(பா.ராஜாராம் 93களில் கணையாழியில் எழுதியவரா..?)

பகிர்தலுக்கு நன்றி.

“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்

வால்பையன் said...

//விளம்பரம் பார்த்து ஷேவிங் க்ரீம் மாற்றுவதும்
தவிர//

எல்லா விளம்பரத்தையும் பார்க்க சொல்லுங்க! அவராய் செய்வதுக்கு ஒரு கவிதை எழுதலாம்!

நந்தாகுமாரன் said...

யார் இந்த குமார் ... the way you introduce poets it's like the hypothesis train tracks converge at infiity and i always love believing it ...

அத்திரி said...

நல்ல கவிதை

ஆ.சுதா said...

(இதற்கு முன் படித்ததில்லை) கவிதை நன்று.

குப்பன்.யாஹூ said...

class writing.

அறிமுகத்திற்கு நன்றிகள் பல ஜ்யோவ்ராம் சுந்தர்.

குப்பன்_யாஹூ

Ashok D said...

தொண்ணூருகளில் எழுதியது இரண்டாயிரத்து ஒன்பதிலும் பொருந்துகிறது.. பகிர்வுக்கு நன்றி

விநாயக முருகன் said...

பகிர்விற்க்கு நன்றி சுந்தர்

பிரவின்ஸ்கா said...

பகிர்விற்கு மிக்க நன்றி


- ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

நர்சிம் said...

நன்றி.

Ken said...

நல்ல கவிதை அறிமுகத்திற்கு நன்றி சுந்தர்ஜி

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, அக்னிப் பார்வை.

நன்றி, ராஜாராம். அவர் இந்தக் கவிதையின் கடைசி வரிகளை மாற்றியிருந்தார் (நினைவிலிருந்து எழுதியதால்). நான் அவரிடம் கடைசி வரிகளைச் சொன்னவனுடன், பல வருடங்கள் கழித்தும் அந்த வரிகளை நினைவில் வைத்திருந்தது அவருக்கு மகிழ்ச்சி :)

நன்றி, நேசமித்ரன்.

நன்றி, மண்குதிரை.

நன்றி, யாத்ரா. ஆம்!

நன்றி, வாசுதேவன். குமார்ஜி வலைப்பக்கங்களில் எழுதுவதில்லை. இணையத் தொடர்புகளுக்கு அப்பால் இருக்கிறார் :) ராஜாராம் அதே 1990களின் கணையாழி ராஜாராம்தான்!

நன்றி, வால்பையன்.

நன்றி, நந்தா. அவர் மறுபடியும் எழுதத் துவங்கியிருக்கிறார் -
ஆனால் இன்னும் பழைய ஃபார்முக்கு வரவில்லை.

நன்றி, அத்திரி.

நன்றி, முத்துராமலிங்கம்.

நன்றி, குப்பன் யாஹூ.

நன்றி, அஷோக்.

நன்றி, வினாயக முருகன்.

நன்றி, பிரவின்ஸ்கா.

நன்றி, நர்சிம்.

நன்றி, கென்.

ஆதவா said...

ரொம்ப நல்லா இருக்குங்க சுந்தர். இப்படித்தான் நானும் இருக்கிறேனோ?!