no title

கண்களை மூடிக் கொண்டு
கிறுக்குகையில்
ஆழ்கனச் சகதியிலிருந்து
மேலே வருகிறது
புதைக்கப்பட்டு வெகுநாளாகிவிட்ட உருவம்
மெதுவாகச் சுருக்கங்கள் அகற்றி
தெளிவாகிறது முகம்
பாய்ச்சலாக இல்லாது
ஓடிப் போய்த் தேங்குகின்றன நினைவுகள்
அணையை உடைத்துக் கொள்ள முடியாமல்
அறுந்து ஒரு மூலையில் தொங்குகிறது
கிழிபட்ட நான்

(இந்தக் கவிதை மவ்னம் அக்டோபர் 1993ல் வெளியானது)

6 comments:

கிருத்திகா ஸ்ரீதர் said...

மனதில் தைக்கும் வரிகள்.. கொஞ்சம் கனமாக.. வாழ்த்துக்கள்

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, கிருத்திகா.

ஆடுமாடு said...

அருமையா இருக்கு சார்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, ஆடுமாடு.

ஜமாலன் said...

'ஆழ்கன' வா அல்லது 'ஆழ்மன'வா

//மேலே வருகிறது
புதைக்கப்பட்டு வெகுநாளாகிவிட்ட உருவம்//

அவ்வப்பொழுது எனக்கும் வரும்
என் அறையிலும் தொங்கும் இப்படியாக கிழிப்பட்ட நான்கள்.

பழைய நினைவுகளை தூண்டிய கவிதை.

//அறுந்து ஒரு மூலையில் தொங்குகிறது
கிழிக்கப்பட்டு ஒரு மூலையில் தொங்குகிறது
கிழிபட்ட நான்//

இதில் ஏதோ பிழையிருப்பதாக தோன்றுகிறது. சரி பார்க்கவும். அல்லது எனது புரிதல்தான் தவறோ?

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, ஜமாலன்.

'அறுந்து ஒரு மூலையில் தொங்குகிறது
கிழிபட்ட நான்.'

மேலே உள்ள வரிகள் தான் சரி. தவறாக இன்னொரு வரி தட்டச்சும் போது வந்து விட்டது. சுட்டியமைக்கு நன்றி; திருத்தி விட்டேன்.