உள்-வெளி பற்றி இரு கவிதைகள்

நீ வேறு
கதைவைத் தட்டாதே
எனக்குள் இருக்கும்
நான்
வெளியில் இருக்கும்
உலகம்
தடைப் பட்டிருக்கிறது
வாழ்க்கை
இதில் நீ வேறா.?

*

உள்ளே இருக்கும்
புறாக்கள்
பறந்து போய்விடுகின்றன
முக்கியமாக
விஜி, சுப்ரமணி
வெளியே இருந்தும்
சில புறாக்கள்
உள்ளே சென்று விடுகின்றன

(நடு கல் ஏப்ரல் 1994ல் வெளியானது)

12 comments:

ஜமாலன் said...

சுந்தர் யார் அது விஜி, சுப்ரமணி...
உங்கள் பிள்ளைகளா?

மன்னிக்கவும் பர்சனலாக கேட்பதற்கு...

உள்-வெளி முரணா? அல்லது உள்வயப்பட்ட வெளியா?

எனக்குள் இருக்கும்
நான்
----
நான்
வெளியில் இருக்கும்
உலகம்

நான் இரண்டுவரிகளிலும் தனித்தனியாக உள்ளேயும் வெளியேயும் ஆடிக் கொண்டிருக்கிறது. தனி அர்த்தங்களில் பொறுந்துகிறது.
கவிதை நன்றாக உள்ளது.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, ஜமாலன்.

விஜி சுப்ரமணி என் பிள்ளைகளின் பெயர்களில்லை.

Muni said...

Its nice!!!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, முனி.

அரை பிளேடு said...

நல்லாருக்கு.

ஆனா.. புரியல்ல.. :)

ஒரு வீடு. வீட்டுக்குள்ள ஒருத்தர். விஜி, சுப்பிரமணின்னு இரண்டு புறா. கதவைத் திறந்தா புறா வெளிய பறந்துடும்னு அவரு கதவை திறக்க மாட்டேங்குறாரு. கரெக்டா.


கவிதைன்னா அனுபவிக்கணும். ஆராய்ச்சி பண்ணக்கூடாதுன்னு நினைக்கிறேன். :)

பாச மலர் said...

விஜி, ச்சுப்ரமணி..மூன்றாம்பிறை தானே?!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, அரை பிளேடு. கவிதையை ஆராய்ந்தால் தானே அனுபவிக்க முடியும் :)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, பாச மலர். ஆம், மூன்றாம் பிறையின் தாக்கம் தான்.

மிதக்கும்வெளி said...

இரண்டாவது கவிதை பிடித்திருக்கிறது.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, சுகுணா.

Umapathy said...

நன்றாக வந்துள்ளது...

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, உமாபதி.