காலையில் எழுந்து தெருவிற்கு வந்தால்
வேலையினால் முகம் நசுக்கப் பட்ட மனிதர்கள்
தற்காலிக ஆசுவாசத்துடன் ஊர்ந்து கொண்டிருக்கிறார்கள்
கொஞ்சம் படிக்க முடிந்தது
மாடுகள் சுகமாகத் திரிந்து கொண்டிருக்கின்றன
மதிய வெயிலில்
பேப்பர் பொறுக்கும் சிறுவர் சிறுமிகளுக்கு
விடுமுறை இல்லை போலும்
வியர்வை வழிய பார வண்டியை
இழுத்துப் போகிறார்
கறிய பெரியவர் ஒருவர்
மின் விசிறிக் காற்று உடலைத் தழுவ
என் அறை ஜன்னல் வழியாக
அவர்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்
மதியத் தூக்கத்தின் பின் முழித்துப் பார்த்தால்
தொலைக்காட்சி சினிமாவை
சந்துஷ்டியுடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்
ஒரு நாள் விடுமுறை
என்பதைத் தவிர விசேஷமாய் ஒன்றுமில்லை
உலக மக்கள் அமைதியாகவே இருக்கிறார்கள்
பனிக்காலத் தனிமை - 02
5 days ago
12 comments:
சுந்தர்,
கடைசி வரியை மட்டும் நீக்கி இருக்கலாமோ என்று தோன்றுகிறது.
Nalla kavithai sundar.
நன்றி, பைத்தியக்காரன். கடைசி வரி கவிதையை வேறு தளத்திற்குத் தள்ளுகிறது என்பது என் அபிப்ராயம்.
நன்றி, விடாது கருப்பு.
நன்றாக இருக்கிறது கவிதை.
நன்றி, அனானி.
மற்ற கிழமைகள் என்ன பாவம் செய்தன. முக்கியமாக சனிக் கிழமை பற்றிய உங்கள் கவிதையை எதிர்பார்க்கிறேன் :P
நன்றி, அனானி, முயற்சிக்கிறேன் :)
(ஆமாம், நீங்க யாருங்க.? தொடர்ச்சியா வந்து கலாய்க்கறீங்க.)
இதற்கு கவிதை என்று முத்திரை குத்தியதற்கு என் கண்டனம்.
ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதினால் அது கவிதையா.
இதை விட பலமான உணர்வுகளை கொண்ட உண்மையான கவிதையை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்
வால்பையன்
வால்பையன், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
நன்றாக இருக்கிறது கவிதை...
நன்றி, உமாபதி.
Post a Comment