போலியைப் பார் என்பார்
அவனென்பார் இவனென்பார்
தெரியுது பார் ஸ்கீர்ன் ஷாட்டிலென்பார்
கெட்ட வார்த்தை உபயோகிப்பான் என்பார்
தாயையும் மகளையும் இழுப்பான் என்பார்
(சில சமயம் தந்தையையும் இழுப்பானாம்)
அவனுக்கென உள்ள சில வார்த்தைச் சேர்க்கைகளில்
எளிதில் அடையாளம் காணலா மென்பார்
அடுத்தவர் செயல்களை ஆராய
தன்னை மேல் நிலையில் நிறுத்தி
போலியின் நண்பர்களென சிலர் அடையாளம்
சுட்டப் படுவர்
எதிர்ப் பதிவு போட்டே சோர்ந்து போவார் சிலர்
பின் நவீனச் சிந்தனையாளர்களாய் அறியப்படும்
சிலர் அதிகாரக் குறுந் தரகர்களாய் ஆவது போலியில்லையா.?
எழுத்தில் பெண்ணியம் பேசும் பலர்
தம் மனைவிகளையைக் கொலை செய்கின்றார்
மெதுவாக
எழுத்தில் அறம் குறித்துப் பேசுபவர் செயல்பாடுகளில்
அறமற்ற தன்மையே துறுத்தி நிற்கிறது பெரும்பாலும்
எல்லார்க்குள்ளும் கொஞ்சம் கொஞ்சம்
போலி இருக்கிறான்
குளியல் தொட்டியில் இதமான வென்னீரும்
நுரை ததும்ப சோப்புக் கட்டியும் தயாரானதால்
பாதியில் நிற்கப் போகிறது
இந்த (ப் போலிக்) கவிதை
பனிக்காலத் தனிமை - 02
4 days ago
16 comments:
ravi entra pathivar govikannan entra pathivarai pinnutathil miratti yirupathai parungkal.
http://govikannan.blogspot.com/2008/02/blog-post_9575.html
நீயும் போலியோட ஆளாடா
இதுக்கெல்லாம் ஒரு கவிதையா ?
"போலி = மூர்த்தி = ? = ? = ஜ்யோவ்ராம் சந்தர்="
என்று பட்டியலில் இடம் பிடிக்கப் போறிங்க...
பி.கு:-
1.தலைப்பை வைத்து பின்னுட்டம் போட்டு இருக்கேன்.
2. இப்ப எல்லாம் பதிவில், போ,லி என்று பயன்படுத்தினாலே, நீங்களும் ? இல்லையின்னா, ?யின் அல்லக்கை. அந்த வகையில், உங்க கவிதையில் "?" என்றே போட்டு இருக்கீங்க. அந்த வகையில் நான் போட்ட பின்னுட்டம் சரியானதே
/நீயும் போலியோட ஆளாடா/
நல்ல வேளை, நீதான் போலியா எனக் கேட்காமல் விட்டீர்கள்.
எனக்குள்ளும் கொஞ்சம் போலி இருக்கிறான். அது தான் நான் கவிதையில் சொல்ல வந்தது.
ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள்.
கவிதையின் சாரத்துக்கு போக விரும்பவில்லை. ஆனாலும் கவிதைக்கான இந்த வடிவம் அருமையாக இருக்கிறது.
"எல்லார்க்குள்ளும் கொஞ்சம் கொஞ்சம்
போலி இருக்கிறான்" சரியாத்தான் சொல்லியிருக்கீங்க. இது ஒரு வெங்க்காயம் மாதிரி, உரிக்க உரிக்க ஒன்றுமற்றுப்போகும் ஆனால் உரிக்கத்தொடங்க வேண்டும், கண் எரிச்சல்களை, வெங்காயச்சருகுகளைப்புரட்டும் காற்றைப் புறந்தள்ளத் தெரியவேண்டும்..
/இதுக்கெல்லாம் ஒரு கவிதையா ?
/
இது வெல்லாம் ஒரு கவிதையா எனச் சொல்லாதவரை சரி :)
இதை ஒரு கவிதையாகவே அணுக வேண்டுகிறேன். யாருக்கும் ஆதரவாகவோ அல்லது எதிர்த்தோ எழுதப் பட்டதல்ல இப்பதிவு.
www.charuonline.com - Q/A Section, Last 3 Lines saying, Who is Who
TBCD, அப்படியெல்லாம் ஆகாது என்ற நம்பிக்கை தான் :)
நன்றி, லக்கி லுக்.
நன்றி, கிருத்திகா.
அனானிக்கு, நீங்கள் கொடுத்துள்ள தொலைபேசி எண்ணை வெளியிட முடியாது - அவர் யாருடைய மாமானாராகவோ அல்லது வேறு யாராகவோ இருந்தாலும் சரி. அது இந்தப் பதிவிற்குத் தேவையில்லாதது.
தயவு செய்து இது போன்ற பின்னூட்டங்களைப் போட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். அவை நிச்சயம் வெளியிடப் பட மாட்டாது.
http://thatstamil.oneindia.in/news/2008/04/09/Tn-Cyber-crime-charges-leveled-against-Malaysian.html
"எல்லார்க்குள்ளும் கொஞ்சம் கொஞ்சம் போலி இருக்கிறான்" சரிதான் ஆனால் உன்மையான போலி, போலியான போலி உன்மையான போலி போலி, போலியான போலி போலி, உன்மையான போலி உன்மை மற்றும் போலியான போலி உன்மைகளும் இருப்பார்கள், எல்லோருக்குள்ளும்.
doondu தளம் மீன்டும் உயிர்பெறும்போது புரியும்.
Post a Comment