டிசைனர் ஆடையுடுத்தி
பெர்ஃப்யூமை அப்பிக் கொண்டு
பாட்டொன்றை முணுமுணுத்து
மாருதியில் விர்ரென்று செல்வான்
எதிர்ப்படும் கீரைக்காரியின்
விலகிய
முலையைப் பார்த்தபடி
லுங்கியை மடித்துக் கட்டி
புதிதாக வாங்கிய
(காலைக் கடிக்கும்)
செருப்பைத் திட்டியபடி
பக்கவாட்டில் நடக்கும்
வெள்ளைக்காரியின்
முலை பார்த்து
எச்சில் முழுங்குவேன்
நான்
டிலானேயின்
ஆர்ஃபிசத்தை
வியந்தபடி நிமிர்ந்தால்
உன் பார்வையில் படும்
எதிர் வீட்டு ஜன்னலின்
திரை விலகிய -
ஆடை மாற்றல்
கார்காலக் குறிப்புகள் - 59
4 days ago
10 comments:
Kavithai Nalla Irukku
முதல் இரண்டு பத்திகளும், திட்ட மிட்ட செயலாக உள்ளது, மூன்றாம் பத்தி, தற்செயலாக உள்ளது. வாயூரிசம் என்பது, திட்டமிட்டு செய்யப்படுவதா?, தற்செயலாக நடப்பதா?
நன்றி, முனி.
சூப்பரோ சூப்பர்.
திணேஷ், அகராதி அர்த்தப்படி எல்லாம் தலைப்பு வைக்கவில்லை. ‘ஏதோ வைத்தது'. இது குறித்து சட்டென்று தோன்றிய என் கவிதை ஒன்று :
கவிதையில் தலைப்பெதற்கு - நான்
அது கவிதையே இல்லை - நீ
பொதுவாக கவிதைகளுக்குத் தலைப்பு வைத்து எழுதுவதில்லை (பத்திரிகைகளில் வெளியான கவிதைகள் கிட்டத்தட்ட அனைத்தும் தலைப்பின்றியே வெளியாயின). இப்போது பதிவில் எழுதும் போது எவ்வளவு கவிதைகளுக்குத் தான் 'no title' என இருப்பது. அதனால் ஏதோ தோன்றிய தலைப்பை வைக்கிறேன்.
பார்வையின் முரண்பாடுகள்... நன்றாக வந்துள்ளது.
கீரைக்காரியின் விலகிய முலையும் வெள்ளைக்காரியின் விலகாத முலையும்.. முலைதான் அடிப்படையில் என்றாலும்.. இரண்டிலுமே ஆண் முதன்மையாவதை சொல்வதாகிறது.
நுகர்வின் மாறுபட்ட அடுக்கை சொல்வதாகிறது.
ஒவ்வொருவர் மனதில் இருப்பதையும் கவிதை நன்றாகபவே பிரதிபலிக்கிறது.
இளைய கவி, நன்றி. உங்கள் பின்னூட்டத்தில் உள்குத்தொன்றும் இல்லையே :)
நன்றி, ஜமாலன்.
நன்றி, தெய்வா.
Post a Comment