நமஸ்காரம்!
சாலமன் கிரண்டி பார்ன் ஆன் மன்டே!
போஸ்டர் திங்கற கழுதை, அறியுமோ
இது ஜென்னும் இது ரஜினின்னும்?
எது எப்படியோ
பூனையும் பொடக்காலில சிரிக்குது.
கேரம் போர்டு விளையாடு பாப்பா
உன் வீட்டில் கேரம் போர்டு
இல்லாமல் இருக்கலாமா பாப்பா?
டப்பா டப்பா வீரப்பா எப்படா மேரேஜ்?
M.G.R. சண்டை
பானுமதி கொண்டை
கொண்டையில் என்ன பூ?
கூடையில் குஷ்பு
உனக்கென்னப்பா உங்கப்பா Father
உங்கம்மா Mother
நல்ல மாட்டுக்கு மூணு சூடு.
சாந்தாமணி சாராஜ் உன்னை
விசாரிச்சான் "காயடிக்கப்படுவான்"
சாந்தாமணி கூறிப்போயிற்று!
ஒன்னுக்கு வருது சந்தாமணி
ஊத்திகிட்டு கொஞ்சலாம்
நல்ல கதையாயிருக்கே! - இப்படி
எழுதினா நாங்கெட்ட பையனா?
நெலாவ பார்த்து நரி ஊளை உட்டா?
எல்லாம் சாந்தும்மாவுக்கு தெரியும்
அடியேன் பத்துமாத்து தங்கம்னு!
ரே கருப்பா!
சுருக்கா பீடி தீசிக்கினி ராரா ரே!
- ராஜமைந்தன் (வா மு கோமு என்ற பெயரிலும் எழுதுபவர்) எழுதி நடு கல் 13வது இதழ் 1994 ஜனவரியில் வெளியானது. எதிர் கவிதைக்கு நான் அடிக்கடி உதாரணம் காட்டுவது!
பனிக்காலத் தனிமை - 02
5 days ago
21 comments:
அபார எதிர்வினை
சூப்பர் என்று சொல்லாவிட்டால் எனக்கு இது புரியாதது போல் ஆகிவிடும்!
ஆகையால்
சூப்பர்
(தயவு செய்து என்ன இது என்று மெயிலாவது சொல்லவும்)
//சூப்பர் என்று சொல்லாவிட்டால் எனக்கு இது புரியாதது போல் ஆகிவிடும்!
ஆகையால் சூப்பர்
(தயவு செய்து என்ன இது என்று மெயிலாவது சொல்லவும்//
:))
சுந்தர்,
குசும்பன் நாங்கள் சொல்ல வந்ததை சொல்லிவிட்டார். கொஞ்சம் விளக்கி சொன்னால்தான் என்ன? அகவிதை விளக்கியதுபோல எ-கவிதையையும் விளக்கலாமே. புரியாவிட்டாலும், படித்தால் குதூகலமாக இருக்கு, மப்பு வந்ததைப்போல்.
அனுஜன்யா
எந்த கவிதைக்கு இது எதிர்கவிதை ?
நர்சிம்
எதிர் கவிதை என்பதை counter poetry என்பதற்கு உபயோகித்திருந்தேன்.
கவித்துவம் என அறியப்படும் அனைத்தையும் ஒதுக்குதல் அல்லது பகடி செய்தல், படைப்பு உன்னதம் என்பதை குலைத்துப் போடுதல் இதன் சில அம்சங்கள்.
ஓடி விளையாடு பாப்பாவை இது கேரம்போர்டு விளையாடு பாப்பா எனப் பகடி செய்கிறது; எதுகை / மோனைக்கு எம்ஜியார் சண்டை / பானுமதி கொண்டை! தலைப்பிலிருந்து, இந்த எ-கவிதையில் கவிதைக்கான கூறுகளே இல்லை!!
முரளி கண்ணன், குசும்பன், RVC, அனுஜன்யா, நர்சிம்... நன்றி.
ஓகே.. உங்கள் விளக்கத்திற்கு பிறகு டபுள் ஓகே..
:))
சுந்தர்,
அடி தொம்சம் கலப்புரிங்க!
சரவண குமார் & மோகன் கந்தசாமி... நன்றி.
கிட்டத் தட்ட சங்கர் காதலன் படத்தில் எழுதிய பாடல் மாதிரி. சரியா?
அன்புடன்
சூர்யா.
எதிர்கவிதை தான் தினம் தினம் சினிமால பாக்கரமே. ஆனாலும் நல்லா இருந்தது.
சூர்யா, அவனும் அவளும்... நன்றி.
வெளங்கிடிச்சிய்யா.. :))
தோழர் லக்கி இதை படித்தாரா ?
அப்படி படிக்கும்போது அவர் டவுஸர் போட்டிருந்தாரா என்ற தகவல் மட்டும் எனக்கு இப்போது வேண்டும்...
சஞ்சய் & செந்தழல் ரவி.. நன்றி.
could not control laughing...
சூப்பரோ சூப்பர். பகிர்ந்ததற்கு நன்றி!
ஒரு வார்த்தையுமே (எழவும்) விளங்காத கவிதைகளுக்கு இது எவ்வளவோ பரவாயில்லை.
-ஆனந்த்
நன்றி, சதீஷ், லக்கி லுக் & ஆனந்த்.
இவளும் நோக்கினாள். அவனையும் நோக்கினாள்.
இவளுக்கு காமம் கலை.அவனுக்கு ஆண்களே துனை.
தனித்திருந்தாள். திட்டமிட்டால்.
இவனோடு ஓடிப் போனாள்.
அவன் தேடிபோனான். தூதுவிட்டான்.
இவள் வரமறுத்தாள். இவன் விட மறுத்தான்.
இவனும் இவளும்
தேகம் முழுதும் மோகம் கொண்டனர்.
காமத்தில் காதல் கொன்டனர்.
அவன்
வென்றான். கொன்றான்.
இழுத்து வந்தான்.
இவள் இரவில் அணைத்தாள்.
அவன் விலகிப் போனான்.
இவள் விடவில்லை.
காலையில் குளக்கரையில் குழம்பினான்.
குதிரை ஏற்றம் எப்படிக் கற்றாள்?
கண்டதை கேட்டதை சொன்னான் கூட இருந்தவன்.
குண்டி எரிந்தது இருவருக்கும்.
மீண்டும் காட்டிற்குப் போனாள்.
இம்முறை தனியாகவே.
-------------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'08)
Post a Comment