லக்கி லுக்கிற்கு வந்த சில பின்னூட்டங்களை அவர் வெளியிடவில்லையென கொஞ்ச நாட்களாக பலர் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். எனக்கந்த அனுபவமில்லை.
நான் பதிவெழுத வருமுன்பே அவருடைய கருத்துகளை மறுத்து எழுதிய பின்னூட்டங்களை அவர் வெளியிட்டே உள்ளார்.
ஆனால் வெளியிடவில்லை எனச் சொன்னவர்களுக்கு அவரது பதில்கள் ஆணவத் தெறிப்புகளாயுள்ளது. என்னுடைய பெயரை உபயோகிப்பதால் அவர்களுக்கு போணி ஆகிறது, மப்பில் வேறு எங்காவது போட்டிருப்பார்கள் என்பதெல்லாம் ஆணவமன்றி வேறென்ன??
லக்கி லுக்கின் எழுத்துகளிள் எனக்குப் பிடித்தது அவரது அரசியல் நிலைப்பாடு.
வால்பையனின் ஞாநி பற்றிய பதிவில் சில விஷயங்கள் ஏற்புடயவையே. ஆனால் அவர் ‘நான் இந்தியன்' ‘ஜாதி வித்தியாசங்கள் இல்லை' மாதிரியான பிரகடனங்கள் எரிச்சலூட்டுகின்றன. அவர் அரசியல் - நீக்கம் செய்வதாய் நினைத்துக் கொண்டு செய்யும் சில காரியங்களும். அவ்வளவு சிம்பிள் இல்லை வால்பையன்.
இருவரும் எனது நண்பர்களே. இப்படி எழுதுவதால் கோச்சுக்காதீங்க மக்கா...!!
***
நிறைய எழுதுவதா குறைவாய் எழுதுவதா எனச் சிலருக்கு அவ்வப்போது சம்சயம் வந்துவிடுகிறது. கநாசு ஒரு நாளைக்கு 25 பக்கங்கள் எழுதுவார் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். அத்துடன் ஒப்பிட்டால் இங்கு பதிவில் 'நிறைய' எழுதுபவர்கள் குறைவாகவே எழுதுகிறார்கள். நிறைய எழுதவேண்டும், தேர்ந்தெடுத்து, நிறைவாய்ப் பதிவிட்டால் நலம்! சிலர் சினிமா விமர்சனங்களாகவும் மொக்கையான கருத்து உதிர்ப்புகளாகவும் எழுதித் தள்ளுகின்றனர். இன்னும் சிலர்... சொல்லவே வேண்டாம் கட் & பேஸ்ட்தான்!
***
ஆரம்பித்த சில மாதங்களிலேயே தமிழிஷ்.காம் (www.tamilish.com) நிறைய பேரால் பார்க்கப்படுகிறது. இது வழக்கமான திரட்டியல்ல. சிலர் வாக்களித்து பதிவுகளையோ அல்லது செய்திகள் / படங்களையோ பிரபலமாக்குகிறார்கள். அப்படிப் பிரபலாமக்கப்பட்டவை முதல் பக்கத்தில் சில மணிநேரங்கள் இருக்கின்றன. அலெக்ஸா ரேட்டிங்கில் இப்போது அது தமிழ்மணத்தைவிட முன்னேறியிருப்பது தமிழிஷின் சாதனையே.
***
என்னுடைய காமக் கதைகளுக்குப் பின்னூட்டங்கள் திரட்டப்படாதென தமிழ்மணம் அறிவித்திருந்தது முன்பு. ஆனால் போன கதைக்கு *** என வந்து பின்னூட்டங்கள் திரட்டப்பட்டிருந்தது. இதில் இன்னொரு சிக்கல் இருக்கிறது. *** பார்த்து ஆவல் தூண்டப்பட்டு அதிக வாசகர்கள் வந்துவிடுகிறார்கள். நம் மக்களின் செக்ஸ் வறட்சி அப்படி!
எப்படியும் பாண்டிச்சேரி பெண்கள் யாராவது தமிழ்மண நிர்வாகத்திற்குத் தெரியப்படுத்தப் போகிறார்கள். அதற்குமுன்பு அந்தக் காரியத்தை நாமே செய்துவிடலாமே என்றுதான் இக்குறிப்பு :)
***
திமுக சார்புப் பதிவுகளே அதிகமிருந்த நிலையில் இப்போது எதிர்ப்புப் பதிவுகளும் நிறைய வருகின்றன. இது வரவேற்கத்தக்கதே என்றாலும் அவர்களின் மொழி வன்மத்தைக் கக்குவதாகவே இருக்கின்றன. கயவன் கருணாநிதி போன்ற வார்த்தைகளை அனாயசமாக வீசிச் செல்கிறார்கள். வார்த்தைகளல்ல, அவற்றின் பின்னிருக்கும் வன்மமே என்னைச் சங்கடப்படுத்துகிறது.
***
R P ராஜநாயஹம் இப்போது பதிவெழுதுகிறார். இவரது எழுத்துகளை அங்குமிங்குமாக 1990களிலிருந்தே படித்துவருகிறேன். இப்போது, அவரது பெயரை நாகார்ஜூனன் பதிவொன்றின் பின்னூட்டத்தில் பார்த்து கிளிக் செய்து அவரது பக்கத்திற்குப் போனேன். பிறகு ரீடரில் வைத்துத் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கிறேன். ராஜநாயஹம் என்றாலே சிலருக்கு மு தளையசிங்கம் / தொழுகை / ஊட்டி / ஜெமோ இந்தப் பெயர்கள் உடனடியாக நினைவிற்கு வருபவை! இவரது பதிவைப் பற்றி இதுவரை சாரு நிவேதிதா, பிரகாஷ், ஸ்ரீதர் நாராயணன் எழுதியிருக்கிறார்கள்.
இப்போது தமிழ்மணத்திலும் அவரது பதிவுகள் வருகிறது. அவருடைய sadism பதிவு தமிழ்மணத்தில் வந்ததா எனத் தெரிந்துகொள்ள ஆவல். எனக்கு அந்த இடுகை பிடித்திருந்தது. பாண்டிச்சேரியிலிருப்பவர்களுக்கு எப்படியோ தெரியவில்லை!!
***
காலச்சுவடு செய்யும் அலப்பறை தாங்கமுடியவில்லை. அவர்களது பத்திரிகையை நூலகங்களில் வாங்கவில்லையென்றால் அது கருத்துரிமையின் குரலை நெறிக்கும் செயலாம். இதுபற்றி வினவு விரிவாக எழுதியிருக்கிறார் (http://vinavu.wordpress.com). படித்துப்பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
கார்காலக் குறிப்புகள் - 59
5 days ago
62 comments:
லக்கிலுக் அப்படி பின்னூட்டம் இடுவதில் எந்த தவறும் இல்லை. அவர் வெளிப்படியாக ஒத்து கொண்டுள்ளார். தான் கலைஞர் அபிமானி என்று. அவரை திருத்தும் நோக்கில் பின்னூட்டம் இடுவது நமது தவறுதான். அதை மட்டுறுத்தும் உரிமை அவருக்கு உண்டு. அவர் நடுநிலைமைவாதி என்ற போர்வையில் இருந்தால் நீங்கள் அவருக்கு அறிவுறுத்தலாம்.
இல்லையெனில் அவர் கருத்துகளில் நீங்கள் முரண்பட்டால் உங்கள் பதிவுகளில் அதை எதிர்க்கலாமே ஒழிய , நீங்கள் போடும் பின்னோட்டத்தை அவர் கண்டிப்பாக வெளியிட வேண்டும் என்று வலியுறுத்த கூடாது.
அவர் ஆணவ போக்கில் கருத்து சொல்வதாக புதிதாக குற்ற சாட்டு வந்துள்ளது. அவரை தூண்டி விட்டார்கள். அவர் திருப்ம கொடுத்துள்ளார். அவரை மட்ட ரகமாக பேசியதாலேயே பேசியவர்கள் பாசையிலேயே பேசியுள்ளார்.
திமுக சார்புப் பதிவுகளே அதிகமிருந்த நிலையில் இப்போது எதிர்ப்புப் பதிவுகளும் நிறைய வருகின்றன. இது வரவேற்கத்தக்கதே என்றாலும் அவர்களின் மொழி வன்மத்தைக் கக்குவதாகவே இருக்கின்றன. கயவன் கருணாநிதி போன்ற வார்த்தைகளை அனாயசமாக வீசிச் செல்கிறார்கள். வார்த்தைகளல்ல, அவற்றின் பின்னிருக்கும் வன்மமே என்னைச் சங்கடப்படுத்துகிறது// உண்மைதான் சுந்தர் என்ன செய்ய
இல்லையெனில் அவர் கருத்துகளில் நீங்கள் முரண்பட்டால் உங்கள் பதிவுகளில் அதை எதிர்க்கலாமே ஒழிய , நீங்கள் போடும் பின்னோட்டத்தை அவர் கண்டிப்பாக வெளியிட வேண்டும் என்று வலியுறுத்த கூடாது.///
லோகு சொல்லும் கருத்தில் உண்மை இல்லாமல் இல்லை.
இந்த பதிவில் பாருங்கள்
http://bleachingpowder.blogspot.com/2008/09/fyi.html
// Ganesh said...
தம்பீ உனது ஆர்வம் புரிகிறது , நீ லக்கியை சொறிந்து புகழடைய எண்ணுகிறாயா , அது தற்காலிகமானது தம்பீ , உனது கருத்துக்களை மக்களுக்கு பிடித்தது போல சொன்னால் நீயும் அந்த லக்கி பக்கி புக்கி என்று யாரையும் விட அதிக புகழுடன் வலையுலகில் பின்னி பிடலெடுக்கலாம் அதை விடுத்து அது போல வலையில் புகழ் வாய்ந்த லக்கி போன்ற பதிவர்களை வம்புக்கிழுத்து நீ உனது வலைப்பதிவிற்கு விளம்பரம் செய்யாதே...
உன்னை பார்த்தால் படித்தவன் போல இருக்கிறது , போய் உன் பிள்ளை குட்டிகளை படிக்க வைக்கும் வழியை பார் , அதை விட்டு விட்டு என்னோட டவுசர கழட்டல ஜட்டிய கழட்டலனு எதற்கு இந்த வீண் வேலை ..
உனக்கு எல்லாம் வல்ல பழனிமலை முருகப்பெருமான் அருள் புரியட்டும்
இப்படிக்கு உன் மீது மதிப்பு மரியாதை எதையும் வைக்காத உனக்கு ஆகாத
உட்டாலக்கடி தமிழன்....
//
இந்த பின்னூட்டத்திற்கு பிளீச்சிங் பவுடர் கொடுத்த பதிலை பாருங்கள். முழுக்க முழுக்க லக்கி மீதான தாக்குதல், கொஞ்சம் ஓவராகவே... சகிப்பு தன்மை இல்லாமல்
// Bleachingpowder said...
தம்பி கனேஷா,
இங்க நான் இருக்கறதே உங்க லக்கி சொல்ற மாதிரி, சும்மா டைம் பாஸ் மச்சி.
சும்மா டைம் பாஸ் மச்சினு சொல்லிட்டு, தமிழ்மணத்திலேயே குத்த வச்சுட்டு இருக்க நான் ஒன்னும் உங்கள மாதிரி வேலை வெட்டி இல்லாம இல்ல.
இல்ல பேருக்கு ஒரு வேலைல இருந்துட்டு ஒரு நாளைக்கும் முனு படம் பார்த்துட்டு விமர்சணம் எழுதிட்டு, பிச்சுல சுண்டல் சாப்பிட்டு வெட்டி கூட்டம் போட எனக்கு நேரமும் இல்லை. கிட்ட தட்ட ஒரு மாசதுக்கு அப்புறம் இப்ப தான் இந்த பதிவ எழுதுறேன். அதனால யாரையும் சொறிஞ்சு அதனால கிடைக்குற புகழெல்லாம் ( haiyo..haiyo) எனக்கு தேவையும் இல்லை.
//உன்னை பார்த்தால் படித்தவன் போல இருக்கிறது //
நிஜாமா அப்படியா தெரியுது... தேங்ஸ்பா
//அதை விட்டு விட்டு என்னோட டவுசர கழட்டல ஜட்டிய கழட்டலனு எதற்கு இந்த வீண் வேலை ..
//
இது அபாண்டமான குற்றச்சாட்டு, உன் டவுசர், ஜட்டிய நான் எப்போங்க கழட்டுனேன்.வேனும்னா அடிக்கடி ஒருத்தர் தாவு தீருது, டவுசர் கிழியுது சொல்லுவாரு, அவர போய் கேளு.//
இப்படி ஒரு விமர்ச்சனம் வரும் போது, லக்கி யின் தற்போதைய பதில்கள் ஆணவமாக எனக்கு தெரியவில்லை. சும்மா பதிலடிதான்.
உருப்படியாக எழுதுங்கள் என்பதை இதைவிட நாகரிகமாக சொல்லமுடியாது என்றே நினைக்கிறேன்.
நல்ல பதிவு..
(பதிவரசியல், நுண்ணரசிய்யல், அடையாள அரசியல்.. என்று பிரச்சனைக்குரிய விசயங்களுக்கு அரசியல் என்ற வார்த்தையை இணைப்பதானால் அரசியல் என்றாலே வெறுப்பாகிறதா?.. அல்லது அரசியல் மீது இருக்கும் வெறுப்பால் இதுபோன்ற பிரச்சனைகளைக் குறிப்பிடும் பொழுது அரசியல் என்ற வார்த்தையை சேர்த்துக்கொள்கிறோமா.. குருவே??)
நர்சிம்
தமிழிஷ் வெற்றிக்கு அதன் விளம்பரமும் ஒரு காரணம். நான் முதன் முதலில் அங்கு போனது தினமலர் வலைதளத்தில் இருந்த விளம்பரத்தை கிளிக் செய்துதான்..
***
//இது வரவேற்கத்தக்கதே என்றாலும் அவர்களின் மொழி வன்மத்தைக் கக்குவதாகவே இருக்கின்றன//
மன்னிக்கவும் சுந்தர். திமுக சார்பு (அ) எதிர்ப்பு, பெரியாரிஸ சார்பு (அ) எதிர்ப்பு இப்படி எல்லாமே ஒரு கட்டத்திற்கு மேல் மொழி வன்மத்தைக் கக்குகின்றன. அத்திப்பூத்தாற் போன்றே ஒரு சில நல்ல பதிவர்களும் ஆரோக்கியமான விவாதங்களும் வருகின்றன. அதனால்தான் இப்போதெல்லாம் அந்த பக்கம் தலை வைத்துக்கூட படுப்பதில்லை.
//R P ராஜநாயஹம் //
அவரது வலைதள முகவரி கொடுங்களேன் சுந்தர்.
அட ரெண்டு பின்னூட்டம் போட்டும் சொல்ல வந்த முக்கியமான விசயத்த சொல்ல மறந்துட்டேன். உங்கள பாண்டிச்சேரிகாரங்க ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிட்டாங்கன்னு நெனக்கிறேன் சுந்தர். எதுக்கும் ஒரு தடவ பாண்டிச்சேரி போய்ட்டு வாங்களேன்.. அட.. பேச்சு வார்த்தைக்குப்பா :))))
R P ராஜநாயஹத்தின் வலைமுகவரி :
http://rprajanayahem.blogspot.com
//. அட.. பேச்சு வார்த்தைக்குப்பா //
:)
//வெண்பூ said...
அட ரெண்டு பின்னூட்டம் போட்டும் சொல்ல வந்த முக்கியமான விசயத்த சொல்ல மறந்துட்டேன். உங்கள பாண்டிச்சேரிகாரங்க ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிட்டாங்கன்னு நெனக்கிறேன் சுந்தர். எதுக்கும் ஒரு தடவ பாண்டிச்சேரி போய்ட்டு வாங்களேன்.. அட.. பேச்சு வார்த்தைக்குப்பா :))))
//
:))
IMPERIA VODKA - Sema bothaya irukku. etho oru comment podanumnu inge vanthen jyovji. ennannu maranthurichu. intha pathivu pudchirukku. ana etho solnamnu.. ok gnabakam vanthodne solren. goodnight chellam
//அலெக்ஸா ரேட்டிங்கில் இப்போது அது தமிழ்மணத்தைவிட முன்னேறியிருப்பது தமிழிஷின் சாதனையே//
I checked the ratings today:
www.thamizmanam.com ca 251,000
www.tamilish.com ca 99,000
www.tamilmanam.net ca 65,000
"பதிவரசியல்" -- apt title indeed, but doesn't reflect good on yourself when play the game yourself.
Nevertheless, while thamizmanam/tamilmanam can feel happy it is still ahead of the game, its owners should take a note of rapidly growing popularity of tamilish and get more creative
அனானி நண்பருக்கு, நீங்கள் 3 மாதத்திற்கான ஆவரேஜைச் சொல்கிறீர்கள் என நினைக்கிறேன். 1 வாரத்திற்கான ஆவரேஜிலும் மற்றும் நேற்று எனயிருப்பதிலும் தமிழிஷ் தொடர்ந்து முன்னிருப்பதை நான்கைந்து நாட்களாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
பாண்டிச்சேரியில் போய்ப் பேச்சு வார்த்தை நடத்துவது இருக்கட்டும்... இப்போது தமிழ்மண சூடான இடுகைகளில் 'ஜட்டியோடு கரீனா கபூர் புகைப்படம்' என ஒரு இடுகையுள்ளது.
ஒருவேளை அவர்களுக்குக் காமக் கதைகள்தான் பிரச்சனையாயிருந்திருக்கலாம்.. ஜட்டியோடு நடிகைகள் இருந்தால் பரவாயில்லை போல :)
மஸ்கட்ல இருக்க 'செடி'ய பத்தி எழுதலாம்னா இஸ்லாமாபாத் 'மரியட்ல' குண்ட போட்டு பீதிய கெளப்புறாய்ங்க.
பதிவுலக அரசியலுக்கும் இந்த பின்னூட்டத்தும் என்ன தொடர்பு?
-------------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'08)
கட்டாயமாக சொல்ல வேண்டிய விடயங்கள் இவை சுந்தர் அண்ணன்...
\\
ஆனால் வெளியிடவில்லை எனச் சொன்னவர்களுக்கு அவரது பதில்கள் ஆணவத் தெறிப்புகளாயுள்ளது. என்னுடைய பெயரை உபயோகிப்பதால் அவர்களுக்கு போணி ஆகிறது, மப்பில் வேறு எங்காவது போட்டிருப்பார்கள் என்பதெல்லாம் ஆணவமன்றி வேறென்ன??
\\
வேறென்ன??
இது அவருடைய வாடிக்கைதானே...
யாருப்பா அது லோகு இதை உங்களோட சொந்த பெயரில் வந்து சொல்லி இருந்தால் தோழர் லோகு என அழைத்திருப்பேன் நிறைய வாசியுங்க லோகு...புரிந்து கொள்வதற்கு நிறைய இருக்கிறது...
லோகு போணியாவதற்காக எழுதுபவர்கள் மிகச்சிலரே...
ஜ்யோவ்ராம் சுந்தர் said...
\\
பாண்டிச்சேரியில் போய்ப் பேச்சு வார்த்தை நடத்துவது இருக்கட்டும்... இப்போது தமிழ்மண சூடான இடுகைகளில் 'ஜட்டியோடு கரீனா கபூர் புகைப்படம்' என ஒரு இடுகையுள்ளது.
ஒருவேளை அவர்களுக்குக் காமக் கதைகள்தான் பிரச்சனையாயிருந்திருக்கலாம்.. ஜட்டியோடு நடிகைகள் இருந்தால் பரவாயில்லை போல :)
\\
நானும் பார்த்தேன் இதை இன்னமும் யாரும் கிளறவில்லையே...
//ஒருவேளை அவர்களுக்குக் காமக் கதைகள்தான் பிரச்சனையாயிருந்திருக்கலாம்.. ஜட்டியோடு நடிகைகள் இருந்தால் பரவாயில்லை போல :)//
அதுகூட இல்லாட்டி ரொம்ப அசிங்கமா இருக்குமேண்ணே :(
சுந்தர்,
இரு நபர்கள் புழங்கும் புள்ளியிலும், ஒரு நபரே இரு நபர்களாக மாறும் புள்ளியிலும் அரசியல் வரலாம். வராமலும் போகலாம்.
சிறுபத்திரிகை சார்ந்த வாசகராக இருக்கும் நீங்கள் அறியாத, பார்க்காத அரசியலோ, நுண்ணரசியலோ, வார்த்தை வன்மமோ இருக்கிறதா என்ன?
தனிப்பட்ட தாக்குதல் வேண்டாம், என சொல்வதும், பரிந்துரைப்பதும் கூட ஒரு புள்ளியில் நியாயவானாக மாற நினைக்கும் பிம்பமாக இருக்கலாம். இல்லாமலும் போகலாம்.
பதிவுலகை பொறுத்தவரை லக்கிலுக் ஆகட்டும் அல்லது லக்கிலுக்கை விமர்சிப்பவர்களாகட்டும்,
வால் பையனாகட்டும், வால் பையனை விமர்சிப்பவர்களாகட்டும்,
எக்ஸ் ஆகட்டும், எக்ஸை விமர்சிக்கும் ஒய் ஆகட்டும்,
ஒருவருக்கொருவர் தெரிந்தவர்களாகத்தான் இருப்பார்கள். இருக்கிறார்கள். இருக்கலாம்.
இருப்பதே 500 பேர் என்னும்போது அறிவதும், அறிந்துக் கொள்வதும் பெரிய விஷயமும் அல்ல. முடியாததும் அல்ல.
இருவரும் ஒருவருக்கொருவர் விமர்சனம் செய்து கொள்வது வெறும் பதிவையோ, பின்னூட்டத்தையோ மட்டுமே முன்வைத்து அல்ல. அதற்கு பின்னால் தனிப்பட்ட வாழ்க்கை கலந்த, வாழ்க்கை தெரிந்த, வாழ்வு தெரியா...
பழகிப் பார்த்த, பழகாமல் விட்ட, புண்பட்ட, புண்படாத, எரிச்சல்பட்ட, எரிச்சல்படாத...
வேறு அரசியலும் இருக்கலாம். இருக்கிறது. இருக்குமோ. இருக்கிறதா?
பிரதியில் (பதிவில்) ஆசிரியன் இருக்கிறானா? ஆசிரியன் வேறு பிரதி வேறா? ஆசிரியன் என்பதே பிரதிக்கு உண்டா? பிரதியில்லாமல் ஆசிரியன் உண்டா... என்ற வினாக்களின் அறியப்பட்ட, அறியப்படாத விடைகள், அல்லது விடை போல் இருப்பவை, இதற்கும் பொருந்தலாம், பொருந்தாமலும் போகலாம்.
இப்படியொரு பதிவு எப்படி அவசியமோ, அவசியமில்லையோ -
அதுபோலவே இந்த பின்னூட்டமும் அவசியமோ, அவசியமில்லையோ...
லூஸ்ல விடுங்க சுந்தர்...
அதுசரி, மொழி இருப்பதால் வன்மம் வெளிப்படுகிறதா? வன்மம் இருப்பதால் மொழி வருகிறதா?
மொழிக்கு வன்மம் உண்டா? அல்லது வன்மத்துக்கு மொழி உண்டா?
மொழியில்லாத வன்மம் எது? வன்மம் இல்லாத மொழி எது?
மொழியே வன்மமா? வன்மமே மொழியா?
//எப்படியும் பாண்டிச்சேரி பெண்கள் யாராவது தமிழ்மண நிர்வாகத்திற்குத் தெரியப்படுத்தப் போகிறார்கள். அதற்குமுன்பு அந்தக் காரியத்தை நாமே செய்துவிடலாமே என்றுதான் இக்குறிப்பு//
:) இப்படியா அவமானப்படுத்தறது.
//இல்லையெனில் அவர் கருத்துகளில் நீங்கள் முரண்பட்டால் உங்கள் பதிவுகளில் அதை எதிர்க்கலாமே ஒழிய , நீங்கள் போடும் பின்னோட்டத்தை அவர் கண்டிப்பாக வெளியிட வேண்டும் என்று வலியுறுத்த கூடாது.//
லோகு இதுக்கு முன்னாடி உங்கள் பேரை வேற எங்கயுமே பார்த்தத ஞாபகமே இல்லையே. :)
ஒருவர் போடும் பதிவோட கருத்துக்கள் பிடிக்கலைன்னா அதை நாகரீகமான முறையில் எதிர் கருத்துக்களை வைப்பதற்குத்தான் ப்ளாக்ன்னு ஒண்ணே இருக்கு. அப்படி இல்லைன்னா புத்தக எழுத்தாளர்கள் மாதிரி கமெண்ட்ங்கற ஒரு ஆப்சனே இல்லாமலோ அல்லது இதை பதிவாக இல்லாமல் வெறுமனே ஒரு வலைத்தளமாக வைத்திருந்து விட்டுப் போகலாம். அப்படி இல்லை எனக்கு கமெண்டும் வேணும் ஆனால் எனக்கு ஜால்ரா தட்ற பின்னூட்டம் மட்டும்தான் நான் வெளியிடுவேன் என்று நீங்கள் சொல்வது, காமெடியாய் இருக்கிறது.
லோகு இது நான் உங்களுக்குச் சொல்வது. லக்கிலுக்கை உதாரணமாய் வைத்துச் சொன்னதில்லை. லக்கியின் பதிவுகளில் எதிர் கருத்துக்களும் வந்திருக்கிறதைப் பார்த்திருக்கின்றேன். ஆனால் ஒரு சில கருத்துக்களை வெளியிடுவதே இல்லை என்று சிலர் சொல்லி இருக்கிறார்கள். சுந்தர் சொன்னதைப் போல எனக்கும் அந்த அனுபவமுமில்லை.
அதே சமயம் லக்கியின் பதிவுகளில் குறிப்பாய் கலைஞர் அல்லது திமுக குறித்தான பதிவுகளை கலைஞர் மற்றும் ஜெயா நியூஸ்களின் தரத்திற்குத்தான் என்னால் ஒப்பிடத் தோன்றுகிறது.
//
திமுக சார்புப் பதிவுகளே அதிகமிருந்த நிலையில் இப்போது எதிர்ப்புப் பதிவுகளும் நிறைய வருகின்றன. இது வரவேற்கத்தக்கதே என்றாலும் அவர்களின் மொழி வன்மத்தைக் கக்குவதாகவே இருக்கின்றன. கயவன் கருணாநிதி போன்ற வார்த்தைகளை அனாயசமாக வீசிச் செல்கிறார்கள். வார்த்தைகளல்ல, அவற்றின் பின்னிருக்கும் வன்மமே என்னைச் சங்கடப்படுத்துகிறது.//
இந்த இடத்தில் வெண்பூ சொன்னது நூற்றுக்கு நூறு சதம் உண்மையாகத்தானிருக்கிறது. வார்த்தைகளை நேரடியாகவோ, அல்லது வழக்கம் போல அனானியாகவோ வந்து அள்ளி வீசுவது திராவிடப் பதிவுகள், பார்ப்பனீய ஆதரவுப் பதிவுகள், உடன்பிறப்புகளின் கலைஞர் புகழ் பரப்பும் வலைப்பூக்களும் சரி, அம்மாவிற்கு ஆதரவாய் வந்து விழும் பதிவுகளும் சரி மாற்றுக் கருத்துக்களை எதிர் கொள்வதில் பெரும் கருத்தியல் வன்முறையாளர்கள் மனோபாவத்திலேயே நடந்து கொள்கிறார்கள்.
கெட்டவார்த்தைகளாக்கப்பட்டு விட்ட வார்த்தைகள் என்று ஒரு பெரிய பட்டியலே இடலாம் போல. காமம் (சுந்தருக்கு இதைப் பத்தி நல்லா தெரியும் :) ), பொதுப்புத்தி, சுயம், என்று அந்தப் பட்டியலின் நீளம் நீண்டுக் கொண்டே போகின்றது. அந்தப் பட்டியலில் இப்போது புதிதாய்ச் சேர்ந்திருக்கும் வார்த்தை (போலி?)அறிவுஜீவித்தனம். ஒரு விஷயத்தில் நியாய, அநியாயங்களை பகுத்தறிந்து மனதிற்குச் சரி என்று பட்டதை முன்வைக்கும் போது நீ ஒரு போலி அறிவுஜீவிவாதி என்று சொல்லி புறம் தள்ளுதல் வெகு எளிதில் நமக்கு கை வந்து விடுகிறது. வருத்தப் பட வேண்டிய விஷயம் பகுத்தறிவுவாதிகளும் இதை பின்பற்றுவது.
http://blog.nandhaonline.com
பைத்தியக்காரன் நீங்க ஃபுல்லா டைட்டாகிட்டு ஒரு கமெண்டை போட்டுட்டு அவரை லூஸ்ல விடச் சொல்றீங்க???
கண்ணைக் கட்டுதுடா சாமி....
//ஒருவர் போடும் பதிவோட கருத்துக்கள் பிடிக்கலைன்னா அதை நாகரீகமான முறையில் எதிர் கருத்துக்களை வைப்பதற்குத்தான் ப்ளாக்ன்னு ஒண்ணே இருக்கு.//
ஆஹா! . இந்த புது definition எங்கே படிச்சீங்க. அவனவன் எண்ணங்களையும் கருத்துகளையும் இணையத்தில் சொல்லவே பிளாக் இருக்கு. அடுத்தவர் கருத்தை போட அல்ல. தூற்றுபவர்கள் கமெண்ட் அனுமதிக்க வேண்டும் என்ற கட்டாயம் ஆசிரியருக்கு இல்லை. நீங்கள் அவர் சுதந்திரத்தில் மூக்கை நுழைத்து "கமெண்ட் ஐ போடு" என்று கூற முடியாது. அதைத்தான் இங்கே கூறி இருக்கிறேன்
//லோகு இதுக்கு முன்னாடி உங்கள் பேரை வேற எங்கயுமே பார்த்தத ஞாபகமே இல்லையே. :)//
பார்த்திருக்க முடியாது. இங்குதான் என் முதல் கமெண்ட் போட்டுள்ளேன்.
ரொம்ப வருத்தமான விஷயம் சுந்தர் ! படைப்பாளிக்கு இருக்கு வேண்டிய போர் குணம் தவறான முறைல வெளிப்படுத்த படுறது ஒரு கேவலமான விஷயம்.
பெரிய பெரிய எழுத்தாளர்களே ,அமைதியா வேலைய செஞ்சுட்டு இருக்கும் பொழுது சும்மா 4 பதிவு எழுதிட்டு எல்லாரெயும் "போட மயிருன்னு'ன்ற" ரீதியில கொச்சைப் படுத்துறதே இந்த தவளைகளின் வேலையா போச்சு.
இவனுங்கள்ல பாதி பேரு நீங்க சொன்ன மாதிரி 4 பட விமர்சனம் , அவனவன் மொக்க போட்டது , பஜ்ஜி சாபிட்டது இதை எல்லாம் எழுதிட்டு பெரிய படைப்பாளின்னு நினைச்சுகிறானுங்க
இது எல்லாம் எழுத்து'ல ஒரு வகைன்னு வச்சா கூட , அதுல கூட உருபடியனது ரசிக்க கூடியதுன்னு பார்த்தா 100'ல 1 இல்லை 2 தான் வரும்
இதை எல்லாம் விட இவனுங்க பண்ற அரசியல் எப்பா கண்ணை கட்டுது சாமி .
என்னமோ மொத பக்கத்துல வரதுனாலா, பத்து ரசிகர் மன்றம் ,3 லட்ச ரூபா எழுத அட்வான்ஸ் எல்லாம் கிடைக்குற மாதிரி நினைச்சிட்டு தலைப்பு வச்சிரானுங்க.
மொத்தமா அங்க இருக்க போறது 3 , 4 மணி நேரம் தான் அதுக்கா இவ்வளவு அரசியல் , வெறுப்பு, திமிரு , கொச்சைத்தனம் எல்லாம் ?
தேவையா இது ?
//அவர் ‘நான் இந்தியன்' ‘ஜாதி வித்தியாசங்கள் இல்லை' மாதிரியான பிரகடனங்கள் எரிச்சலூட்டுகின்றன.//
சில விசயங்கள் எனக்கு புரியாமல் இருக்கலாம், ஆனால் ஜாதி வித்தியாசங்கள் எனக்கில்லை என்பதை நான் பெருமையாக தான் சொல்லி கொள்கிறேன்.
இதற்காக நான் தனி பதிவும் எழுத உள்ளேன், இங்கே ஒரு முன்னோட்டம்.
ஜாதி,இனம் ஏன் மொழி கூட ஒரு கட்ட நாகரிக வளர்ச்சிக்கு பின் தான். அதற்கு முன்னர் குழுக்களாக வாழ்ந்த மனிதர்கள் தங்களை ஒரு இனங்களாக அடையாள படுத்தி கொண்டனர் என்று வேண்டுமானால் கூறலாம்.
ஆரிய திராவிட ஆராய்ச்சியில் யாருடைய எழுத்துகளை நம்பலாம், பொதுவான மனிதர்கள் யார் இங்கே, ஒரு ஆரியன் அவனது இனமே பெரிது என்பான், ஒரு திராவிடன் அவனது இனமே பெரிது என்பான்.
நீ பிறப்பால் திராவிடன், அதை ஒத்து கொள் என்று சொல்கிறார்கள்,
பிறப்பால் நான் ஒரு ஹிந்து அதற்காக அதை பிடித்து தொங்க முடியுமா,
என் அப்பாவும், அம்மாவும் ஒரு ஜாதியை சொல்லி கொண்டு திரிகிறார்கள் அதை பிடித்து தொங்க முடியுமா!
அவைகளை நீக்குவது சுலபம் இல்லை தான், ஆனால் அதை ஓழிக்க முதலில் அதை வெறுக்க வேண்டும் அதை தான் நான் செய்து கொண்டிருக்கிறேன்.
பார்ப்பனியம் என்பது பிறப்பால் வருவதா, இல்லை அது ஒரு வகையான குணமா?
மற்றவர் தனக்கு கீழே என்று நினைப்பது ஒரு வகையான சாடிசம் அப்படி நினைப்பவர்கள் பார்ப்பனிய போர்வையில் இருக்கும் மனநோயாளிகள்,
சில மனநோய்களை குணப்படுத்த முடியாது, அவைகளை ஒதுக்கி விட்டு, சமதர்ம சமுதாயம் அமைக்க நினைக்கலாமே!
விரிவாக!!!! பதிவாக!!!
//இருவரும் எனது நண்பர்களே. இப்படி எழுதுவதால் கோச்சுக்காதீங்க மக்கா...!!//
முழுமையாக கற்று கொண்டவர்கள் இங்கே யாருமில்லை, அதிலும் நானெல்லாம் சிறுவன், சில விசயங்களை நான் புரிந்து கொண்ட வகையில் அல்லது என் அறிவுக்கு எட்டிய வகையில் தான் விவாதம் புரிவேன், அது ஒருவேளை தவறாக கூட இருக்கலாம் பெரியவர்கள் உங்களுக்கு தானே அதை திருத்தும் பொறுப்பு இருக்கிறது.
//கயவன் கருணாநிதி போன்ற வார்த்தைகளை அனாயசமாக வீசிச் செல்கிறார்கள். வார்த்தைகளல்ல, அவற்றின் பின்னிருக்கும் வன்மமே என்னைச் சங்கடப்படுத்துகிறது.//
இம்மாதிரியான வசனங்களை நான் உபயோகித்ததில்லை தலைவா!
நமக்கு கருத்து சுதந்திரம் தானே இருக்கிறது
அவர்கள் கழுத்தில் கத்தி வைக்கும் சுதந்திரம் இல்லையே
//அவரை திருத்தும் நோக்கில் பின்னூட்டம் இடுவது நமது தவறுதான். அதை மட்டுறுத்தும் உரிமை அவருக்கு உண்டு. //
இந்த கருத்துடன் மட்டும் ஒத்து போகிறேன்.
ஒருவரை திருத்த வேண்டும் என்று நினைத்தால் நினைத்தவன் அவனை விட்ட புத்திசாலியாக நினைத்து கொண்டிருக்கிறான் என்று அர்த்தமாகிறது.
ஆனால் ஒன்றை தெரிந்து கொள்வதற்காக விவாதம் புரிவது ஒன்றும் தவறில்லையே!
அதற்கு கூட அவர் விருப்பபட்டால் தான் விவாதம் புரிவார் என்று பதில் இருக்குமோ
அண்ணன் பைத்தியக்காரன் அவர்களுக்கு!
ஒரு விஷயத்தை பெரிதாக எடுத்து கொள்வதும்
இல்லை அதை விட்டு விலகுவதும் எமது எண்ணத்தில் தான் இருக்கிறது என்று சொல்கிறீர்கள்.
ஒரு வேலை நான் புரிந்து கொண்டது தவறாக இருக்கலாம், அதை இது போல் கேட்டு தெளிவு படுத்தி கொள்வது தவறா?
//தனிப்பட்ட தாக்குதல் வேண்டாம், என சொல்வதும், பரிந்துரைப்பதும் கூட ஒரு புள்ளியில் நியாயவானாக மாற நினைக்கும் பிம்பமாக இருக்கலாம். இல்லாமலும் போகலாம்.//
இவை சரி தான், இருப்பினும் மொழி ஆளுமையில் மைல்கல்லை இருக்கும் உங்களிடம் திட்டு வாங்குதல் கூட எனக்கு பெருமையாக கருதுகிறேன்.
வந்து ஏதாவது திட்டிட்டு போங்க
ஜ்யோவ்ராம் சுந்தர்!
//ஆனால் வெளியிடவில்லை எனச் சொன்னவர்களுக்கு அவரது பதில்கள் ஆணவத் தெறிப்புகளாயுள்ளது. என்னுடைய பெயரை உபயோகிப்பதால் அவர்களுக்கு போணி ஆகிறது, மப்பில் வேறு எங்காவது போட்டிருப்பார்கள் என்பதெல்லாம் ஆணவமன்றி வேறென்ன??//
நான் ஆணவக்காரன் என்பதை நானே உணர்ந்திருக்கிறேன். எனவே உங்கள் விமர்சனத்தை அப்பட்டமாக ஏற்றுக் கொள்கிறேன்.
'எழுதுவது' குறித்து எனக்கு சில ஆலோசனைகளை சொன்ன எழுத்தாளர் ஒருவர் சொன்ன முக்கிய ஆலோசனை
”நீ எழுதும்போது நீ மட்டுமே பெரியவன். சுஜாதா பாலகுமாரன் எல்லாம் உனக்கு பின்னாடி என்று நினைத்து எழுது. முதலில் உன் வலைப்பூவில் வைத்திருக்கும் 'சுஜாதாவும் அல்ல பாலகுமாரனும் அல்ல' என்ற வாசகத்தை எடு. நீ மட்டும் தான் எழுத்தாளன் என்று அகங்காரம் கொள்” என்பது தான். இத்தனைக்கும் அவர் ஒரு மிகப்பெரிய எழுத்தாளர்.
மற்றபடி நந்தா உள்ளிட்டோர் ‘பின்னூட்ட கருத்து சுதந்திரம்' பற்றி பேசியிருப்பதாக தெரிகிறது. (இங்கே நந்தாவின் பெயரை மட்டும் குறிப்பிட அவர்மீது எனக்கிருக்கும் மரியாதையே காரணம்)
நந்தா பின்னூட்டத்தையோ, ஜ்யோவ்ராம் சுந்தர் பின்னூட்டத்தையோ நான் வெளியிடாமல் இருந்திருந்திந்தால் மட்டுமே இவ்விஷயம் குறித்து பேச அவர்களுக்கு தார்மீக உரிமை இருப்பதாக நினைக்கிறேன். எவனோ ஒரு மொள்ளமாறி அனானி வந்து நந்தாவையோ, ஜ்யோவ்ராமையோ திட்டி பின்னூட்டம் போட்டால் அதை வெளியிடுவதும், வெளியிடாததும் எனக்குள்ள உரிமை என்று கருதுகிறேன்.
நான் பின்னூட்டங்களை வெளியிடவில்லை என்று விமர்சனம் வைக்கும் எல்லோருக்கும் இப்பதில் பொருந்தும்.
மற்றபடி திமுக ஆதரவு கருத்துக்கள் குறித்து என்னுடைய நிலைப்பாடு எப்போதுமே திமுகவுக்கு ஆதரவானது என்பதை மறைக்க நான் வெட்கப்பட்டதில்லை.
‘முன்பெல்லாம் கலைஞரை பிடித்தது, இப்போது பிடிக்கவில்லை' என்று சொல்லுபவர்கள் அறிவுஜீவிகளாகிவிட்டார்கள் என்பது தான் என் பதில். கலைஞரின் அரசியல் உணர்வுப்பூர்வமானது. அறிவுஜீவிகள் உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவர்கள். அவர்களுக்கு கலைஞரைப் பிடிக்காமல் போவதில் ஆச்சரியம் எதுவுமில்லை.
கலைஞரின் அரசியலை நேர்மையாக எடைபோட அறிவுஜீவிகளால் கட்டாயம் இயலாது. கலைஞரை அதிகாரமையமாக, சர்வாதிகாரியாக தான் அவர்களால் காண இயலும். இது அவரவர் பார்வைகளின் எல்லைக்குட்பட்டது. என் மீது இவ்விஷயத்தில் குறை சொல்ல எதுவுமில்லை :-)
லோகு என்ற பெயரில் நான் இங்கு பின்னூட்டம் இட்டதாக என் பதிவில் அனானிவீரம் பேசி பின்னூட்டிய நண்பருக்கு...
நான் இருநாட்களாக இணையம் பக்கம் ஒதுங்க இயலவில்லை. என்னுடைய பெரியம்மா காலமாகிவிட்டது தான் அதற்கு காரணம். இணையத்துக்கு வந்திருந்தால் நானே அனானியாக எனக்கு வக்காலத்து வாங்கியிருக்க முடியும்! லோகு தேவையில்லை :-)
எனக்காக இங்கு வக்காலத்து வாங்கிப் பேசிய நண்பர் லோகுவுக்கு நன்றி!!
//கலைஞரின் அரசியலை நேர்மையாக எடைபோட அறிவுஜீவிகளால் கட்டாயம் இயலாது. கலைஞரை அதிகாரமையமாக, சர்வாதிகாரியாக தான் அவர்களால் காண இயலும்.//
அவரும் அவரது இளவரச மகன்களும் வீசுவதை பொறுக்கி தின்ன மனமில்லாதவர்கள் நிச்சயம் அறிவு ஜீவிகள்தான் ,
கோவியைதான் சொல்கிறீர்கள் என தெரிகிறது .
உங்கள் தலைவனுக்கு சொறிந்து கொடுக்க உங்களாலும் ,உங்களுக்கு சொறிந்து கொடுக்க உங்கள் அல்லக்கைகளாலும் தான் முடியும் ,
அவ்வாறு செய்யாதவர்கள் அனானி முண்டங்கள் என நீங்கள் நினைத்தால் ஆமாம் அதுதான் பகுத்தறிவு , திராவிட ஜனநாயகம்
திரு சுந்தர் ,
இன்னொரு லக்கிலுக்காக மட்டுறுத்த வேண்டாம்
நிழலின் குரல், நன்றி.
நீங்கள் சொல்லியிருப்பதுடன் எனக்கு உடன்பாடில்லை. அதுவும் கோவியாரைத் தேவையில்லாமல் இதில் இழுத்திருப்பது தவிர்க்கப்பட்டிருக்கலாம்.
முதல் பின்னூட்டத்தைப் போட்டுவிட்டு அடுத்த நிமிடமே மட்டுறுத்த வேண்டாம் என்றால் என்ன அர்த்தம்? யார் இங்கே உங்கள் பின்னூட்டத்தை மட்டுறுத்தியது!
//அவரும் அவரது இளவரச மகன்களும் வீசுவதை பொறுக்கி தின்ன மனமில்லாதவர்கள் நிச்சயம் அறிவு ஜீவிகள்தான் ,
கோவியைதான் சொல்கிறீர்கள் என தெரிகிறது .
உங்கள் தலைவனுக்கு சொறிந்து கொடுக்க உங்களாலும் ,உங்களுக்கு சொறிந்து கொடுக்க உங்கள் அல்லக்கைகளாலும் தான் முடியும்//
நாங்கள் கலைஞரை ஆதரிப்பதில் உமக்கென்ன கேடு வந்து தொலைத்தது? நீர் விமர்சிக்க வேண்டுமானால் விமர்சித்துப் போங்கள்.. எங்கள் இடத்தில் ( பதிவில்) நாங்கள் கலைஞர் ஆதவாளர்களாய்த் தான் இருப்போம்.. அறிவுசீவிகள் எண்ணிக்கை கூடக்கூட எமது வீம்பும் கூடுமேயன்றிக் குறையாது.
கலைஞரை ஆதரிப்பவன் அவர் வீசும் எலும்புத் துண்டை பொறுக்குபவன் என்றால் அவரை எதிர்ப்பவனெல்லாம் ஜெயலலிதாவிடம் _________வனா? என்னய்யா உமது அறிவு..
தி.மு.க ஆதரவாளர்கள் சொரிந்து கொடுப்போரென்றால்.. எமது எதிர்ப்பாளர்கள் நக்கிக் கொடுப்பவர்களா?
இங்கே எவருக்கும் எவரையும் ஆதரிக்க உரிமையுண்டு. அந்த ஆதரவின் பின்னேயுள்ள அரசியலை விமர்சிக்க முடிந்தால் விமர்சிக்கலாம்.. ஆயின் அவ்வாதரவின் காரணம் எலும்புத்துண்டு/ பொறுக்கித்தனம் / காவாளித்தனம் என்பீர்களாயின் எமது எதிர்வாதமும் கடினமாய்த்தானிருக்கும்.
எமது மொழியின் வன்மம் உமது மொழியின் வன்மத்துக்கு பதில் அவ்வளவே..
//எமது மொழியின் வன்மம் உமது மொழியின் வன்மத்துக்கு பதில் அவ்வளவே..//
தமிழ்நாட்டுக்கு மொழியின் வன்மம் மட்டுமேவா கற்றுதந்தீர்கள் ?
நீங்கள் மற்றவர்களுக்கு காட்டிய வன்முறை நாளை உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் வராதா என்ன ?
அப்போது நாங்கள் உங்கள் பக்கம்தான் இருப்போம் .
//தமிழ்நாட்டுக்கு மொழியின் வன்மம் மட்டுமேவா கற்றுதந்தீர்கள் //
அந்த “மட்டுமே” மட்டுமே இருந்திருந்தால் உமக்கு பிரச்சினையிருந்திருக்காதல்லவா? அந்த ”மட்டுமே” மட்டுமே இருந்ததால் தானே இன்று அம்பேத்கர் படத்தை உம்மைப் போன்ற கண்ட காவாளிகளும் பயன்படுத்திக் கொள்கிறீர்?
அந்த “மட்டுமே”யை விட்டுக் கீழிறங்கி வந்து உமது சொக்காயைப் பிடிக்காமலிருந்திருந்தால் இன்று எமது தலைவன் உம் வாயால் ”சாணக்கியன்”என்றோ.. அறிவுசீவியென்றோ போற்றப்பட்டிருக்கலாம்..
நீர் இன்று அவரைக் கயவன் என்று விளிப்பதற்கும் எம்மை எலும்பு பொறுக்கி என்று கூறவும் கூட யாம் கீழிறங்கியது தானே காரணம்?
//நீங்கள் மற்றவர்களுக்கு காட்டிய வன்முறை நாளை உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் வராதா என்ன ?
//
எம்மேல் காட்டப்பட்ட “கருணை”களுக்கு ஈடாய் வேறு எதைக் காட்டியிருக்கவேண்டுமென்கிறீர்? எமது குழந்தைகளுக்கு நாம் தேடித்தந்த இந்த ”வன்முறை” யாம் விரும்பியே தேடித்தந்ததாகும்.. நாங்கள் எப்படியிதை எதிர் கொண்டோமோ அப்படியே அவர்களும் எதிர் கொள்ளக்கடவராக. உமது அக்கறையை யாசிக்கும் நிலை அவர்களுக்கு வந்துவிடக்கூடாதே என்பதே எமது இன்றைய கவலை..
அன்புள்ள ஜ்யோவ்ராம்!
தங்கள் பதிவில் வரும் சில பின்னூட்டங்களில் என்னுடைய சொந்தப்பெயர் சொல்லி திட்டப்படுவதையெல்லாம் நீங்கள் ரசிக்கிறீர்களோ இல்லையோ, நான் ரசிக்கவில்லை.
உங்கள் பதிவு, பின்னூட்டங்களை வெளியிடுவது உங்கள் விருப்பம் என்ற போதிலும் என்னை தரக்குறைவாக உங்கள் பின்னூட்டங்களில் கண்ட கபோதிகள் பேசுவது உங்களுக்கு ஏற்புடையதா என்பதை மட்டும் அறிய விரும்புகிறேன்.
உங்களை எவனாவது இதுபோல திட்டி நீங்கள் பின்னூட்டத்தை வெளியிட்டீர்களேயானால் அது உங்களுடைய பெருந்தன்மை. இப்போது நீங்கள் செய்துகொண்டிருப்பது என் மீதான உரிமை மீறல் என்பதை மட்டும் பணிவோடு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
மேலும் இதுபோல என்னையும், குறிப்பிட்ட சில நண்பர்களையும் 'கார்னர்' செய்து அனானி மற்றும் அதர் ஆப்ஷன் பின்னூட்டங்கள் போடும் நண்பர் யார் என்பதையும் சில பேர் ஆதாரப்பூர்வமாக எனக்கு தெரிவித்திருக்கிறார்கள். தமிழகத்தின் மேற்கு மாவட்டம் ஒன்றில் வசிக்கும் நண்பர் அவர். வெள்ளத்தனையது நீர்மட்டம்! :-)
லக்கி லுக், என்ன நண்பா, இப்படிச் சொல்லிட்டீங்க!
நானும் இப்போதுதான் கவனித்தேன் அந்தக் கடைசி வரியை. அப்பின்னூட்டத்தை நீக்கிவிட்டேன்.
நிழலின் குரல், மன்னிக்கவும் - உங்களுக்கு பிளாக்கர் அக்கவுண்ட் இருந்தால் அதில் பின்னூட்டம் போடவும். அதர் ஆப்ஷனில் வேண்டாம்.
பொதுவாகவே அடுத்தவர்களைத் தாக்கி எழுதும்போது அனானி / அதர் ஆப்ஷன்களிலேயே பின்னூட்டங்கள் வருகின்றன. இதைத் தவிர்ப்பது நல்லது. அப்படிப்பட்ட பின்னூட்டங்களை இனி வெளியிட இயலாது.
சுந்தர், நான் முதலில் போட்ட பின்னூட்டம் சரி என்று நிரூபித்துள்ளன இந்த பின்னூட்ட உரையாடல்கள். :(((
மிகவும் வருத்தமாக இருக்கிறது.
//மன்னிக்கவும் சுந்தர். திமுக சார்பு (அ) எதிர்ப்பு, பெரியாரிஸ சார்பு (அ) எதிர்ப்பு இப்படி எல்லாமே ஒரு கட்டத்திற்கு மேல் மொழி வன்மத்தைக் கக்குகின்றன. அத்திப்பூத்தாற் போன்றே ஒரு சில நல்ல பதிவர்களும் ஆரோக்கியமான விவாதங்களும் வருகின்றன. அதனால்தான் இப்போதெல்லாம் அந்த பக்கம் தலை வைத்துக்கூட படுப்பதில்லை.
//
மன்னிக்க வேண்டும் சுந்தர் ,
அப்போ ஓசி நெட் , அதனால் பிளாக்ரில் லாகின் ஆகலை.
லக்கியின் பெயர் கிருஷ்ணகுமார் என யாருக்கும் தெரியாதா ?
இந்த பதிவு அவரை பற்றியதுதானே , அவர் விமர்சிக்காமல் யாரை விமர்சிப்பது என கொஞ்சம் கேட்டு சொல்லுங்கள்.
மேற்குமாவட்டமாம் , கண்டுபிடிசுட்டாரு , அய்யோ பயமாயிருக்கே ,
ஐபி கோயமுத்தூர் என காமிக்கும் என லக்கியின் கலைஞர் டிவி பதிவில் பின்னூட்டியபோது எனக்கு தெரியாதா என்ன ?
ஏதோ நீட்டம் குட்டை என சொல்கிறார் , புரியலை .எந்த கொண்டையை சொல்றாருன்னு தெரியலையே .
லோகு, jackiesekar, நர்சிம், வெண்பூ, டாக்டர் புருனோ,சென்ஷி, பொய்யன், தறுதலை, கிங்... நன்றி.
//ஆனால் ஒன்றை தெரிந்து கொள்வதற்காக விவாதம் புரிவது ஒன்றும் தவறில்லையே!
அதற்கு கூட அவர் விருப்பபட்டால் தான் விவாதம் புரிவார் என்று பதில் இருக்குமோ//
ஆமாம் நீங்களே பதிலும் சொல்லி விட்டிர்கள் :) .
லக்கியின் மீது அதிக பாசம் கொண்டோரே தற்போது கோபம் கொண்டுள்ளனர். தன்னை கவர்ந்த லக்கி, தனக்கு ஒவ்வாத கருத்தை சொல்கிறாரே என்று. வீட்டில் அண்ணன், தம்பிகள் முரண்படும் போது ஒரு கோபம் / சண்டை இருக்குமே. அது போன்று. அப்போது வெளிப்படும் வார்த்தைகளை நினைத்து பின்னொரு நாளில் அவர்களே வெட்கப்படலாம்.
//ஐபி கோயமுத்தூர் என காமிக்கும் என லக்கியின் கலைஞர் டிவி பதிவில் பின்னூட்டியபோது எனக்கு தெரியாதா என்ன ?//
ஈரோடு என்று காண்பிப்பதாக சொல்கிறார்களே?
//அலெக்ஸா ரேட்டிங்கில் இப்போது அது தமிழ்மணத்தைவிட முன்னேறியிருப்பது தமிழிஷின் சாதனையே//
I checked the ratings today:
www.thamizmanam.com ca 251,000
www.tamilish.com ca 99,000
www.tamilmanam.net ca 65,000
"பதிவரசியல்" -- apt title indeed, but doesn't reflect good on yourself when play the game yourself.
Nevertheless, while thamizmanam/tamilmanam can feel happy it is still ahead of the game, its owners should take a note of rapidly growing popularity of tamilish and get more creative
பெயரிலி என்ற பெயரில் வந்திருப்பவருக்கு, ஏற்கனவே இந்தப் பின்னூட்டம் வந்து அதற்கு பதிலும் சொல்லப்பட்டாகிவிட்டது!
ஜ்யோராம்சுந்தர்,
மேலே -/பெயரிலி என்ற பெயரோடு இன்னூட்டப்பின்னூட்டமிட்டிருப்பது நானில்லை என்று நீங்கள் அறிவீர்கள். எதுக்கும் இதிலே தலைமுளைத்து வால் என்னைச் சொடுக்கமுன்னால், சொல்லிவிடுவது நல்லது என்று இப்பின்னூட்டம்.
-/பெயரிலி பெயரிலே அனுமார் வாலிலே பந்தம் ஒரு கிழமையாக அங்குமிங்கும் வைக்கப்படும் அற்புதக்காட்சிகளாலே தன்யனானேன் ஸ்வாமிகளே.
பிரபலமாகவிருப்பதாலே வருவது இச்சிக்கல் :-)
-/பெயரிலி.
//லக்கிலுக் said
நான் இருநாட்களாக இணையம் பக்கம் ஒதுங்க இயலவில்லை. என்னுடைய பெரியம்மா காலமாகிவிட்டது தான் அதற்கு காரணம். //
எனது ஆழ்ந்த அனுதாபங்கள் !!
என்னவோ போங்கப்பா !! அவரு பின்னூட்டம் ரிலீஸ் பன்றாரோ இல்லைய்யோ , இரண்டு நாளா ஒரு பத்து தடவையாவது அவரு பதிவு போடிருக்கரானு போய் பாத்துட்டு வந்தேன் ..
என்ன நடக்குது இங்கே?
அன்புள்ள பெயரிலி,
எனக்குத் தெரியும் அது நீங்களில்லை என்று. அதனால்தான் பெயரிலி என்ற பெயரில் வந்திருப்பவருக்கு எனப் பதில் சொன்னேன். அடுத்த நிமிடம் உங்கள் பின்னூட்டம்!
பிரபலமாக இருந்தால் கொஞ்சம் சிக்கல்தான் :)
////ஐபி கோயமுத்தூர் என காமிக்கும் என லக்கியின் கலைஞர் டிவி பதிவில் பின்னூட்டியபோது எனக்கு தெரியாதா என்ன ?//
ஈரோடு என்று காண்பிப்பதாக சொல்கிறார்களே?//
இப்போ சேலம்னு சொல்லுமே லக்கி அண்ணை .
(அப்ப டேட்டாகார்ட் எந்த ஊர்ல இருக்கமோ அதை சொல்லுமா ? வெரிகுட்டின்னானாம் வெள்ளைகாரன்)
(ராவ் ஐபி எதுலாவது சேந்து முகாஜிதீன்களை கண்டுபிடிக்க உதவுங்கப்பா)
//லக்கி அண்ணை //
இப்ப புரிஞ்சி போச்சி! லக்கிகிட்டே விவாதம் பண்ணிகிட்டிருப்பது யாருன்னு!
//இப்ப புரிஞ்சி போச்சி! லக்கிகிட்டே விவாதம் பண்ணிகிட்டிருப்பது யாருன்னு!//
அதெல்லாம் சும்மா ட்விஸ்ட் பண்ணுறதுக்கு.
இராமாயணத்துலே ஒரு வாலி இருந்தான். லக்கிக்கு ஒரு .......லு இருக்கான்.
////லக்கி அண்ணை //
இப்ப புரிஞ்சி போச்சி! லக்கிகிட்டே விவாதம் பண்ணிகிட்டிருப்பது யாருன்னு!//
பாவம்யா நச்சு நச்சுன்னு , விட்டிருங்க , அவர் இல்லை .
//இராமாயணத்துலே ஒரு வாலி இருந்தான். லக்கிக்கு ஒரு .......லு இருக்கான்.//
லக்கிக்கு ஒரு ”லுலு” இருக்குன்னு தெரிஞ்சு எனக்கென்ன ஆக போகுது ?
இந்த டேட்டா வேற யாருக்கானும் உபயோகப்படலாம் , அங்க சொல்லுங்கப்பு ....
ங்கொய்யா ங்கொய்யாலே.
பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.
007 வேலையை நிறுத்திக் கொள்வோமே :))
alexa ranking எல்லாம் மிக சீரியசாக எடுத்து கொண்டு பதிவு எல்லாம் போடுகிறீர்கள்..
ஒரு விசயம் தெரியுமா.. அல்க்சாவில் அடிக்கடி நாம் ஒரு பக்கத்தின் ராங்கை தேடினால் நாம் முன்பு பார்ததை விட அதிகமாகவே ராங்க் காட்டும் :)
அலக்ஸா ஒரு டுபாக்கூட் தளம் அதை வைத்து இவ்வளவு பிரச்சனையா?
ரேங்கிங் எதற்க்காக விளம்பரம் கொடுப்பவர்கள் அந்த தளத்தின் ஹிட்ஸ் எத்தனை எண்டு தெரிந்து கொள்ளவே??
அதை விளம்பரம் கொடுப்பவர்கள் அல்லது விவரம் அறிந்தவர்கள் கூகிள் அல்லது யாகூ மூலமாகவோ தெரிந்து கொள்வார்கள். அதற்கான செய்ல்பாடு அவர்கள் தருகிறார்கள்.அது தான் கிட்டதட்ட நம்பும் தன்மை வாய்ந்தது.
இந்த அலக்ஸா பீலாவை எல்லாம் நம்பி..போங்க சார் போய் வேலையை பாருங்க.
என் அறிவுக் கண்களைத் திறந்ததற்கு நன்றி அனானி. இனி என் பொழப்பைப் பார்க்கிறேன் :)
Post a Comment