மக்கள் நல அரசுக்கு பொதுமக்களின் சுமைகளைக் குறைக்கவேண்டிய கட்டாயமுண்டு. அந்த வகையில் தமிழக அரசு இவ்வருடம் செப்டம்பர் 15லிருந்து கிலோ அரிசி 1 ரூபாய்க்கு கொடுப்பதாக அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கதே. இந்தியாவிலேயே மிகக் குறைந்த விலையில் தமிழகத்தில்தான் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி கொடுக்கப்படுவதாக அறிகிறேன்.
உணவிற்கு அத்தியாவசியத் தேவையான அரிசியை வசதிகுன்றியவர்களுக்கு அரசு மலிவுவிலையில் கொடுப்பதை சிலர் எதிர்க்கிறார்கள். அவர்கள் வைக்கும் காரணங்களில் சில :
வாக்குகளுக்காகச் செய்யப்படுவது. தேர்தல் - அரசியலில் இதில் ஒன்றும் பெரிய தவறில்லை. அடிப்படையில் இச்சலுகை தேவையா என்பதே முக்கியம். பிறர் வாக்குகளுக்காகக்கூட இதைச் செய்யமுடியவில்லை / மனமில்லை என்பதையும் கணக்கிலெடுத்துக் கொள்ளவேண்டும்.
திசை திருப்புவதற்காக - குறிப்பாக மின்வெட்டு - செய்யப்படுவது. மின்வெட்டென்பது குறைந்தகாலமே இருக்கப்போவது. அதற்கென வருடம்முழுவதும் மலிவுவிலையில் அரிசி தருவதாகச் சொல்வது கொஞ்சம் இடிக்கிறது.
மக்களைச் சோம்பேறியாக்குவது. இது ஒரு டிஃபால்ட் விமர்சனம். எல்லாவிதமான மக்கள் நலத்திட்டங்களுக்கும் - பள்ளி மாணவர்கள் மதிய உணவிலிருந்து இலவச கால் செருப்புவரை - இதைச் சொல்லலாம்.
வேறு சிலர் மக்களால் இரண்டு ரூபாய்கூடக் கொடுத்து வாங்கமுடியாத அளவிலா இந்த அரசுகள் வைத்திருக்கின்றன என்று வக்கனையாகக் கேட்கிறார்கள். சிபொம / stp / மற்றும் பல பெரிய நிறுவனங்களுக்கு அரசுகள் சலுகைகள் தரும்போது கேள்வி எழுப்பாத மிடில் கிளாஸ் ஆசாமிகள், இப்படி வசதிகுன்றியவர்களுக்கு உதவும்போது மட்டும் நீட்டிமுழக்கிக் கொண்டு வந்துவிடுகிறார்கள். அவர்களுக்குப் புறநகரில் ஒரு அப்பார்ட்மெண்டும், வங்கிக் கணக்குகளில் ஏறும் பேலன்ஸுமே முக்கியமாகிப் போகிறது!
அரிசித் திருட்டு அதிகமாகும். இதற்குச் சோத்தனமாக பதில் சொன்னால், தவறாக உபயோகப்படுத்தப்படாத திட்டம் / சட்டம் ஏதாவது இருக்கிறதா என்ன?
திருட்டைக் குறைக்கவேண்டுமெனச் சொன்னால் பரவாயில்லை. அதைக் காரணமாகச் சொல்லி, திட்டத்தை ஒழிக்க நினைப்பதைத்தான் ஏற்க முடியவில்லை.
இப்போது துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு போன்றவையும் குடும்ப அட்டைகளுக்குத் தருகிறார்கள். இன்னும் இத்திட்டத்தை விரிவுபடுத்தினால் நலம்.
மின்வெட்டு
சென்னையிலும் அதன் புறநகர்களிலும் செப்டம்பர் 1 முதல் 6 வரையே மின்வெட்டு இருந்துள்ளது. முதன்முறை அறிவிக்கப்பட்டபோதும் இவ்வாறு குறைந்த நாட்களே இருந்தது. மற்ற இடங்களிலும் இன்றிலிருந்து மின்வெட்டு இருக்காதென்று தெரியவருகிறது. (இது வீடுகளுக்கு மட்டுமே பொருந்தும், தொழிலகங்களுக்கு அல்ல).
இதையும் கொஞ்சம் முன்கூட்டியே சரி செய்திருந்தால் கெட்ட பெயராவது வராதிருந்திருக்கும். ஏன் செய்யவில்லை என்பது ஆற்காட்டாருக்கே வெளிச்சம் :)
இப்பதில்களைப் பொதுப் புத்தி பார்வையிலேயே எழுதியிருக்கிறேன். சில சமயங்களில் அதுவும் தேவையானதுதானே :))
கார்காலக் குறிப்புகள் - 59
5 days ago
32 comments:
//திசை திருப்புவதற்காக - குறிப்பாக மின்வெட்டு - செய்யபடுவது. மின்வெட்டென்பது குறைந்தகாலமே இருக்கப்போவது. அதற்கென வருடம்முழுவதும் மலிவுவிலையில் அரிசி தருவதாகச் சொல்வது கொஞ்சம் இடிக்கிறது.//
கொஞ்சம் அல்ல.. நிறையவே இடிக்கிறது.. இதுபோன்ற சித்து விளையாட்டால் தான் இன்று இந்த நிலை..
நல்ல பதிவு
நர்சிம்
"சில சமயங்களில் அதுவும் தேவையானதுதானே "....
:)
சில விஷயங்களுக்கு தேவை தான்
ஒரு கிலோ உப்பு 7 ரூபாய் விற்கிறார்கள். அதை ஒரு ரூபாய்க்கு கொடுக்கலாம். மிளகாய் மல்லி அஞ்சு ரூபாய் இல்லை பத்து ரூபாய்க்குக் கொடுக்கலாம். ஏன் கொடுக்கவில்லை அல்லது முடியவில்லை?
http://jothibharathi.blogspot.com/2008/09/blog-post.html
நல்ல கருத்துக்களோடு கூடிய பதிவு. இன்னும் விரிவாக எழுதியிருப்பீர்கள் என்று நினைத்தேன். முன்கதைச் சுருக்கம் மாதிரி சின்னதாக இருக்கிறது.
//ஒரு கிலோ உப்பு 7 ரூபாய் விற்கிறார்கள். அதை ஒரு ரூபாய்க்கு கொடுக்கலாம். மிளகாய் மல்லி அஞ்சு ரூபாய் இல்லை பத்து ரூபாய்க்குக் கொடுக்கலாம். ஏன் கொடுக்கவில்லை அல்லது முடியவில்லை?//
ஜோதிபாரதி!
நீங்கள் கூட நாற்பதாயிரம் சம்பளம் வாங்குவதற்கு பதிலாக நாலாயிரம் வாங்கலாம். அப்படி வாங்கினால் இன்னும் 9 பேருக்கு வேலைவாய்ப்பு கொடுக்கலாம். ஏன் வாங்குவதில்லை?
ஜோதிபாரதி, நன்றி.
ஒரு கணக்குப் போடுவோம். நாலுபேர் உள்ள குடும்பத்திற்குச் சுமார் 20 கிலோ அரிசி தேவைப்படும் ஒரு மாதத்திற்கு. உப்பு அப்படியா? அதனால்தான் உணவிற்கு அத்தியாவசியத் தேவையான அரிசி விலைக் குறைப்பை ஆதரிக்கிறேன்.
நீங்கள் சொல்லியதுபோல் உப்பு, மிளகாய் போன்றவற்றையும் விலைகுறைத்து (அதாவது அரசு மானியம் வழங்கி - விவசாயிகளைத் துன்புறுத்தி அல்ல) வழங்கினால், மகிழ்ச்சியே :)
////ஒரு கிலோ உப்பு 7 ரூபாய் விற்கிறார்கள். அதை ஒரு ரூபாய்க்கு கொடுக்கலாம். மிளகாய் மல்லி அஞ்சு ரூபாய் இல்லை பத்து ரூபாய்க்குக் கொடுக்கலாம். ஏன் கொடுக்கவில்லை அல்லது முடியவில்லை?//
ஜோதிபாரதி!
நீங்கள் கூட நாற்பதாயிரம் சம்பளம் வாங்குவதற்கு பதிலாக நாலாயிரம் வாங்கலாம். அப்படி வாங்கினால் இன்னும் 9 பேருக்கு வேலைவாய்ப்பு கொடுக்கலாம். ஏன் வாங்குவதில்லை?//
சூப்பர் லாஜிக்.
அநானி, நீங்க 14 இட்லி சாப்பிடுவதற்கு பதிலா 4 இட்லி சாப்பிடாலாமே?
ஏன் சாப்பிடுவதில்லை?
Jyovramsundar, you might be referring to powercut in the cities only. Please check with someone who lives in a village, and you'd know the disturbing nature of it's regularity. Need I remind you even after such crazy rate of urbanization, TN still has close to 50% living in it's villages. On the same note, a year ago, my mother wanted me to spend 15 K on a UPS for her home in the village and I did with a grunt. Now, she eats her dinner under a well-lit environment. Got to really appreciate her forethought.
through out the country, the state is washing its hand in investing on the fundamental infrastructure for industries. That is one of the main reason in every state, proper funds are not getting alloted for the regular maintenance of power plants. Power cuts are very very common even in NCR regions including the highly industrialized noida and Gurgoan. last year I lived in Noida and have seen this directly.
Here in Tamil blogosphere I could see a blatant hatred toward Karunanithi ( particularly cross belts). and these ppl simply put the blame on him. Even talented writers like charu does the same.
But why state is not interested in maintaining existing power plants?
Why not investing in constructing new plants?
Why the power generation is not keeping pace with industrial growth?
Why the state is washing its hand from infrastructure based investments?
And finally why there is a huge push to sign the nuclear pact in such a hurry?
Its all interlinked. dig it!!
Karunanithi doesn't have any other choice. So is with any other political parties. No one have a free hand to put an end to this.. Every political parties hands are tied tightly.. Atleast MK is trying hard to reduce the burden.. This intention is very hard to find in other states..
Guys.. I am a frequent traveler.. I travel across India continuously. I've been to every other states in India.. And believe me.. Tamil Nadu is heaven compared to other states.. in many ways..
You cannot see even the basic democracy in north Indian states like UP, bihar, Jarkand etc.. Even Andhra and Karnataka.. There Casteism is up in the sky. TN is much much more better. You guys can pass nasty comments on MK in your blogs and live happily.. But a UP'ian cannot do the same with Mulayam or Maya.
Dravidian politics literally changed the face of TN over the past 40 years and made our lives better.
Santhosh kumar
//சூப்பர் லாஜிக்.
அநானி, நீங்க 14 இட்லி சாப்பிடுவதற்கு பதிலா 4 இட்லி சாப்பிடாலாமே?
ஏன் சாப்பிடுவதில்லை?//
அதற்கும் ஜோதி பாரதி தான் பதிலளிக்க வேண்டும். ஏனென்றால் அவர் இதற்கு இட்லி சாப்பிடுவதற்கு பதிலாக தோசை சாப்பிடலாமே என்று பதிலளிப்பார்
இன்னொரு அநாநி
//Anonymous said...
//ஒரு கிலோ உப்பு 7 ரூபாய் விற்கிறார்கள். அதை ஒரு ரூபாய்க்கு கொடுக்கலாம். மிளகாய் மல்லி அஞ்சு ரூபாய் இல்லை பத்து ரூபாய்க்குக் கொடுக்கலாம். ஏன் கொடுக்கவில்லை அல்லது முடியவில்லை?//
ஜோதிபாரதி!
நீங்கள் கூட நாற்பதாயிரம் சம்பளம் வாங்குவதற்கு பதிலாக நாலாயிரம் வாங்கலாம். அப்படி வாங்கினால் இன்னும் 9 பேருக்கு வேலைவாய்ப்பு கொடுக்கலாம். ஏன் வாங்குவதில்லை?//
பெயர் வெளியிட விரும்பாமல் எனக்கு ஆலோசனை சொன்னவருக்கு நன்றி!
என்னையே தெரியாத அவருக்கு எனது சம்பளம் தெரிந்ததாகச் சொல்கிறார். சரி.
தமிழ்நாடு(அவர் பிறந்த மாநிலம், அல்லவா? இருக்க வேண்டும் இல்லை என்றால் இங்கு பின்னூட்ட அவசியம் இருந்திருக்காது) கண்டிப்பாக அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும். அதன் வரவு செலவு எப்படி நடக்கிறது என்று கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமே. பட்ஜெட்டில் துண்டு விழுந்தால், அந்த துண்டு பலவாறாகக் கிழிக்கப்பட்டு பல்வேறு வழிகளில் யார் யார் தலையில் போடப்படும் என்பதைத் தெரிந்து கொண்டால் நல்லது. எனது வேறு கோணத்திலான பதிவு. கொஞ்சம் இதையும் படிங்களேன்!
http://jothibharathi.blogspot.com/2008/09/blog-post.html
//சென்னையிலும் அதன் புறநகர்களிலும் செப்டம்பர் 1 முதல் 6 வரையே மின்வெட்டு இருந்துள்ளது. முதன்முறை அறிவிக்கப்பட்டபோதும் இவ்வாறு குறைந்த நாட்களே இருந்தது. மற்ற இடங்களிலும் இன்றிலிருந்து மின்வெட்டு இருக்காதென்று தெரியவருகிறது. (இது வீடுகளுக்கு மட்டுமே பொருந்தும், தொழிலகங்களுக்கு அல்ல).//
சுந்தர் கடந்த இரண்டு மாதங்களாகவே எங்களது சொந்த ஊரில்(கொளத்தூர்-சேலம் மாவட்டம்) அறிவிக்கப்படாத மின்வெட்டு இருந்துக் கொண்டிருக்கிறது. ஒரு நாளைக்கு குறைந்தது ஐந்து மணி நேரங்கள் வீடுகளுக்கு மட்டும் தடை செய்யப் படுகின்றது.
சில மாதங்களுக்கு முன்பு 3 ஃபேஸ் சப்ளை வைத்திருப்பவர்களுக்கு ஒரு நாள் முழுதும் பவர் கட் என்று சொன்னார்கள். அந்த கிழமை ஊருக்கு ஊர் மாறும்.சென்னையில் அது திங்கட்கிழமை என்று அறிவித்தார்கள். TCS போன்ற கம்பெனிகள் கூட ஒரு நாள் முழுதும் ஜெனரேட்டர் ஓடினால் கட்டுபடியாகாது என்று சொல்லி சனிக்கிழமையை வேலை நாளாய் அறிவித்து விட்டு ஞாயிறு, திங்களை விடுமுறையாய் கடைபிடித்து வந்தார்கள் சில நாட்களுக்கு. பின்பு மெல்ல சென்னையில் மட்டும் அல்லது முக்கியமான ஊர்களில் மட்டும் 3 ஃபேஸ் மின் தடையை எடுத்து விட்டார்கள்.
அதனால் நமக்கு (சென்னைவாசிகளுக்கு) மின் தடைதானே கொஞ்ச நாள்தான் இருந்துச்சு. இப்போ சரியாயிடுச்சுப்பா என்று தோன்றலாம். ஆனால் உண்மை அதுவல்ல. இந்த 3 ஃபேஸ் மின் தடையை எதிர்த்து பல சிற்றூர்களில் சிறு சிறு அளவில் போராட்டங்கள் நடந்தன. எங்கள் ஊரிலும் நடந்தது. ஆனால் பலன் என்னவோ ஜீரோதான். எங்கள் சுற்று வட்டார ஊர்களில் உள்ள ரைஸ்மில்களில் இன்றும் புதன் கிழமை காலை 6 மணி முதல் மாலை 9 மணி வரை ஒரு முழு நாள் கண்டிப்பாய் எந்த மோட்டாரையும் இயக்கக் கூடாது. மீறினால் கடும் அபராதம் என்று எச்சரித்திருக்கிறார்கள். அதை தவிர ஒவ்வொரு நாளும் காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை 6 மணி முதல் 10 மணி வரையும் கண்டிப்பாக மோட்டரை இயக்கக் கூடாது என்று ஆணை பிறப்பித்திருக்கிறார்கள்.
அது மட்டுமில்லாமல் இது போன்ற ரைஸ் மில்களுக்கு குறைந்தது இந்தளவுக்கேனும் மின்சாரத்தையாவது உபயோகிக்க வேண்டும் என்ற ஒரு அளவு கோல் இருக்கிறது.எங்கள் ஊரிலுள்ள 8 மில்களில் 5 மில்கள் கடந்த முறை குறைந்தளவு மின்சாரத்தை கூட உபயோகிக்க முடியாமல் மின் தொகையுடன் இரண்டாயிரம் ரூபாய் அபராததையும் சேர்த்து கட்டி இருக்கிறார்கள். அது மட்டுமல்ல இந்த முறையும் மீட்டர் ரீடிங்கை பார்க்கும் போது அப்படித்தான் கட்ட வேண்டியிருக்கும் என்று சொல்லி விட்டுச் சென்றிருக்கிறார்கள். அந்த 5 மில்களில் எங்களது மில்லும் ஒன்று.
சொந்தமாய் நெல்லை வாங்கி அரைத்து அரிசியாக்கி விற்கும் பெரு மில் முதலாலிகள் இந்த நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் இரவு பகலாய் வேலை செய்து இந்த இழப்பீட்டை சரி செய்து கொள்கிறார்கள். ஆகையால் அவர்களுக்கு இதில் பிரச்சினை இல்லை. ஆனால் அரவையை மட்டும் வைத்து செயல்படும் சிறு மில் வணிகர்கள் இதனால் பெருமளவு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இது பல ஊர்களில் நடந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக நகராட்சிகளிலும், பேருராட்சிகளிலும்.
நான் சொன்ன எடுத்துக்காட்டு மில் என்ற ஒன்றை வைத்து. இதே போன்று 3 ஃபேஸ் சப்ளையை உபயோகிக்கும் பல அமைப்புகள் இந்த பிரச்சினையைச் சந்தித்துக் கொண்டுதானிருக்கின்றன. இஞ்சினீயரிங் ஒர்க்ஸ் செய்யும் பட்டறைகள், மரப் பட்டறைகள், அட இவ்வளவு ஏன் கட்டிட வேலைகளின் போதும் கூட.
2200 சதுர அடி நிலப் பரப்பை இரண்டு பேர் தொடர்ச்சியாய் வேலை செய்து டிரில் போட்டு தளத்தை கொத்தி எடுக்க 4 நாட்கள் ஆகின்றன. அந்தளவுக்கு மின் தடை அமலாக்கப் பட்டிருக்கின்றது.
இந்த சூழ்நிலையில் போன ஆட்சியில் நடந்த தவறுதான் இதற்குக் காரணம் என்று பொறுப்பில்லாமல் பதில் சொன்னால் "ஓ அப்படியா? யப்பா இது இவங்க தப்பு இல்லையாம்பா" என்று சமாதானமாய் போய் விடுவார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாரோ???
நான் சொல்ல வருவது தமிழ் நாடு என்பது சென்னையுடன் முடிந்து போய் விட வில்லை என்பதே. யோசித்துப் பாருங்கள் கேவலம் குறைந்த பட்ச மின்சார அளவை உபயோகிக்க முடியாதவாறு ஒரு அரசு மின் தடையை பல ஊர்களில் சத்தமில்லாமல் நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. அதனால் பாதிக்கப்பட்டவர்கள் "ஒரு ரூபாய்க்கு அரிசி தந்த வள்ளலே, கடவுளே" என்பது போன்ற போஸ்டர்களை கிண்டி மேம்பாலத்தில் பார்த்தால் வாழ்த்துவார்கள் என்று நினைக்கிறீர்களா????
http://blog.nandhaonline.com
//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
ஜோதிபாரதி, நன்றி.
ஒரு கணக்குப் போடுவோம். நாலுபேர் உள்ள குடும்பத்திற்குச் சுமார் 20 கிலோ அரிசி தேவைப்படும் ஒரு மாதத்திற்கு. உப்பு அப்படியா? அதனால்தான் உணவிற்கு அத்தியாவசியத் தேவையான அரிசி விலைக் குறைப்பை ஆதரிக்கிறேன்.
நீங்கள் சொல்லியதுபோல் உப்பு, மிளகாய் போன்றவற்றையும் விலைகுறைத்து (அதாவது அரசு மானியம் வழங்கி - விவசாயிகளைத் துன்புறுத்தி அல்ல) வழங்கினால், மகிழ்ச்சியே :)//
பேனா ஒரு ரூபாய் அதில் போடுகிற நிப்பு 100 ரூபாய் இந்த
முரண்பாட்டை எந்தவகையில் எடுத்துக் கொள்கிறீர்கள்.
ஓட்டலில் ஒரு வேலை முழுசாப்பாடு ஒரு ஆள் சாப்பிட இருபது ரூபாய்க்கு கூட கிடைக்காத நிலையில் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி கொடுப்பது என்பது ஏமாற்றுவேலையே.வெளியே வேலைக்குச்சென்றால் அங்கு இருபது ரூபய் கொடுத்து ஒருவேலை சாப்பிடவேண்டி இருக்கிறது வீட்டிலேயே இருந்தால் ஒரு ரூபாயில் சாப்பிடலாம் என்ற எதிர்மறை என்னத்தை மக்களின் மனதில் வளர்க்கவே செய்யும். ஒரு வேலை இருபது ரூபாய் இருந்த அரிசியை ஒரு ரூபாய்க்குக்கொடுத்தால் வரவேற்க்கத்தக்கதே இரண்டு ரூபாய் உள்ள விலையில் வெறும் ஒரு ரூபாய்க்கு கொடுப்பதால் யாருடைய வாழ்க்கைத்தரமும் உயர்ந்துவிடப்போவதில்லை. மக்களின் பூர்த்திசெய்யப்படாத தேவைகள் அத்தியாவசியத்தேவைகள் எவ்வளவோ இருக்கின்றன அதைவிடுத்து அரிசியை வைத்துக்கொண்டு அரசியல் பண்ணுகிறார்கள். வெட்ட வெளிச்சமாக அனுமதியின்றி ஆசிரியர் பயிற்ச்சி பள்ளிகள் நடத்தி ஏமாற்றுபவர்களை எவ்வளவு போறட்டத்திற்க்குபிறகும் கூட கண்டுகொள்ளாத அரசு. மேலும் கல்வி என்பதையே பணக்காரர்களுக்கு மட்டுமே கிடைக்க கூடிய ஒன்றாக மாற்றி காசு உள்ளவனுக்கு நல்லக்கல்வி காசு இல்லாதவனுக்கு நொல்லை கல்வி என்று வழங்கும் இந்த அர்சு. அணைத்து மக்களின் வாழ்க்கைத்தரத்தையும் உயர்த்தாமல் பணக்காரர்களுக்கு பிசா வித் பிரியாணியும் பிச்சைகாரர்களுக்கு பழையசாதம் கிடைக்கப்பண்ணுகிற அரசாக இருக்கிறது.
உண்மையில் நல்ல பதிவு, நீங்கள் இன்னும் நிறைய எழுதலாம். இரண்டு வருடங்களில் கலைஞர் கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தையும் இந்த மின்வெட்டு மறைத்துவிட்டதோ என்றுதான் தோன்றுகிறது. தயவுசெய்து இன்னொரு பதிவு எழதுங்கள்.
//Tamil Nadu is heaven compared to other states.. in many ways.. on good statement.// But not because of Dravidian parties.. for that you need to start with MR great kamaraj.
Now days even Dravidian party members silently accept they ruined TN long ago, blaming cross belts for everything. Doesn’t seem stopping anything in TN.
Look at Sun TV , Stalin, Midas, Azhakiri, Kanimozhi, you still say MK can’t do anything.. He thinks we all are fools that all.
Recent example: Selva ganapthy in DMK #$!@#$
crossbelts or not, every educated person blames Karuna today because, he is as bad as Jaya or even worse. But he talks as though he is a mahaan out to save the whole of tamil community through out the world. on the contrary one is sure of what bullshit jaya would dish out. the b*tc* is atleast predictable. here, some reporter asks him about Dinakaran burning incident, this mahaan tells him to go talk to Jaya about Dharmapuri incident. He has taken the same path throughout the last few years in dodging his responsibility.
And about all other states not doing enough compared to TN, nothing wrong in expecting these alleged saviours to do something better than other states.
ஆமாம், எல்லாம் அந்த ஆற்காட்டார் மயம் :D
நந்தா, விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி. பதிவில் சொல்லியிருப்பதுபோல மின்வெட்டு சம்பந்தமாக எழுதியிருப்பது சென்னைக்கும் புறநகர்களுக்குமே பொருந்தும். மற்ற ஊர்களைப் பற்றியோ அல்லது தொழிலகங்களைப் பற்றியோ நான் சொல்லவில்லை.
நர்சிம், கிருத்திகா, முரளி கண்ணன், நன்றி.
லக்கி லுக். ரெண்டு மூணு பத்தியைப் பெரிதென்று நினைத்து அழித்தேன் (இங்கு மலிவென்பது விவசாயிகளைப் பாதிகக்கூடிய வாய்ப்பை). ம்ம். பெரிதாக இருந்திருக்கலாம்தான் :(
//Recent example: Selva ganapthy in DMK #$!@#$//
//crossbelts or not, every educated person blames Karuna today because, he is as bad as Jaya or even worse. But he talks as though he is a mahaan out to save the whole of tamil community through out the world.//
May be you are right.. Some hick-ups here and there.. But defenetly much better than north indian states.. right?
When I said dravidian political parties, I consider even A.I.A.D.M.K. Jaya is an arrogant personality. But jaya is-not-equal-to Maya. Even during her period, things went somewhat good.
But my choice is always MK ;-) coool guy.. right?
//He has taken the same path throughout the last few years in dodging his responsibility. //
Compulsions? You can even say the same for his stands on LTTE, hogenagel, etc., But will there be change if Vijayakath or sarathkumar comes to power? or Jaya for that matter? certainly not I believe.
Or what else is the options for us?
Congress? Which group?
BJP? naaaahhhhh I'd say throw these BJP&co mother fuckers out of our state. Atleast we'll feel safe during ganesh chathurthi.
Santhosh
//But not because of Dravidian parties.. for that you need to start with MR great kamaraj.
//
Hey.. forgot to say that"I agree with this" :D
santhosh
At least global warming is going down due to power cuts in India, particularly in southern states.
I have lost few kilos, sweating without power. My health is improving too. Taking walks etc...
நல்ல பதிவு . Super Post.
Anonymous:
//But not because of Dravidian parties.. for that you need to start with MR great kamaraj.
//
Santhosh:
//Hey.. forgot to say that"I agree with this" :D//
Kamaraj was also a Dravidian leader. Wasn't he taking advice from Periyar and implementing Periyar's ideas? :-)
அதெல்லாம் சரி.யாராவது அந்த ஒரு ரூபாய் அரிசி வாங்கி சமைச்சு சாப்பிட்டு பார்த்தீங்களா?ரெண்டு நாள் சாப்பிடுங்க...அப்புறம் முடிஞ்சா வந்து பதிவு,பின்னூட்டம் இன்ன பிற எல்லாம் போடலாம்.
கொடுப்பது எதிரியாக இருந்தாலும் நமக்கு பயன்படுமென்றால் வாங்கி கொள்வது தான் புத்திசாலித்தனம், என் விருப்பமும் ஒரு ரூபாய் அரிசி போல வாழ்வியல் ஆதார பொருட்கள் அனைத்தும் குறைந்த விலையில் கிடைக்கவேண்டும் என்பது தான்,
ஈரோட்டிலும் இப்பொழுதெல்லாம் கரண்ட் போவதில்லை, போன வாரம் தான் 25,000 செலவு செய்து UPS போட்டோம், அதன் பிறகு கரண்ட் போவதில்லை, இதே நீடித்தால் நலம்
சந்தோஷ், புரட்சித் தமிழன், டாக்டர் சாரதி & குரங்கு... பகிர்வுகளுக்கு நன்றி.
புரட்சித் தமிழன், நீங்கள் சொல்வது வேறு. கல்வி போன்ற விஷயங்கள் இங்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. அவைகுறித்தும் சந்தர்ப்பம் கிடைக்கும்போது பேசுவோம்.
//சென்னையிலும் அதன் புறநகர்களிலும் செப்டம்பர் 1 முதல் 6 வரையே மின்வெட்டு இருந்துள்ளது. முதன்முறை அறிவிக்கப்பட்டபோதும் இவ்வாறு குறைந்த நாட்களே இருந்தது. மற்ற இடங்களிலும் இன்றிலிருந்து மின்வெட்டு இருக்காதென்று தெரியவருகிறது. (இது வீடுகளுக்கு மட்டுமே பொருந்தும், தொழிலகங்களுக்கு அல்ல).//
சொகுசா ஏசி அறையில் எழுதும் போது மின்வெட்டே இருக்காது ஏன் மின்சாரம் உபரியாக இருக்கின்றது என்று கூட சொல்லாம்.
எங்க ஊரில்( திருநெல்வேலி)இன்று வரை தினமும் 10 மணி நேரம் வரை மின்சார தடை, காற்றாலை மின்சாரம் எல்லாம் இங்கு இருந்து தான் செல்கிறதாம் :(
சும்மா நுனி புல் மேய வேண்டாம்.
Comedy ethum pannaliye? is the first thought I had after reading your post.
That is the same question I had when I read in pro-DMK media that normalcy has returned in power distribution.
I live in a remote (from Chennai) village. We now have about 5 hours of power cut. Normally it was 8 hours. 10 days in last it was up to 14-15 hours daily. So we are happy lot now. :)
ரமேஷ், வால்பையன், tamil short film, சரவண குமார், வைத்தி, பார்த்தி... கருத்துகளைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
Post a Comment