புகைப்பிடிப்பது பற்றிய சட்டமும் எதேச்சதிகாரமும்

காற்றின் கிளையேறி
திகுதிகுவென பரவின
எரியும் பிரச்சனைகள்
நாடி ஒடுங்கிற்று
வார்த்தை பூதம்
- தேவதச்சன்

ஆனால் இதற்கு நேர்மாறாகத்தான் நடந்து கொண்டிருக்கின்றன இங்கு. சட்டங்களின் வாயிலாக பூதங்கள் ஏவப்படுகின்றன. பிரச்சனைகள் மறக்கடிக்கப்படுகின்றன.

முதலில், கேட்கப்படவேண்டிய கேள்வி, இப்போது இச்சட்டத்திற்குத் தேவையென்ன? ரயில்களில் & ரயில்நிலையங்களில், பேருந்துகளில், விமானங்களில் புகைபிடிக்க முதலிலிருந்தே தடை இருக்கின்றது (ஏற்கனவே தடைசெய்யப்பட்ட பலவிஷயங்கள் பரவலாக நடந்து கொண்டிருப்பது நாமறிந்ததே). இப்போது புதிதாக தனியார் அலுவலகங்களையும் வேறுசில இடங்களையும் சேர்த்திருக்கிறார்கள்.

இந்தச் சட்டத்தை ஆதரிப்பவர்கள் பிரதானமாக இரண்டைச் சொல்கிறார்கள் :

(1) சிகரெட் பிடிப்பது உடல்நலத்திற்குத் தீங்கானது
(2) புகைபிடிப்பவர்களின் அருகிலிருப்பவர்களுக்கும் அது தீங்கிழைக்கும்

என் உடல்நலத்தைப் பற்றி என்னைவிட அரசு அதிகக் கவலைப்படவேண்டாம். நன்றாக இருப்பதோ அல்லது நாசமாகப் போவதோ நானே பார்த்துக் கொள்கிறேன். முடிந்தால் இதைவிட அதிகத் தீமையான பலவிஷயங்களை முதலில் சரிசெய்யட்டும்.

இந்த passive smoking பற்றியே எல்லாரும் பேசுகிறார்கள். என்னவோ புகைப்பிடிப்பவர்கள் எல்லாம் கொலைகாரர்களைப் போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்க முனைகிறார்கள். இங்கு இதுவரை எத்தனை பேர் பேஸிவ் ஸ்மோகிங்கால் கேன்சர் வந்திருக்கிறது என்பதற்கு ஏதாவது ஆதாரம் உண்டா.? கெடுதல் இல்லாமலிருக்காது, ஆனால் அது மிகக்குறைவான விகிதமே. அதைப்போய் ஏன் ஊதிப் பெரிதாக்கவேண்டும்?

விமான நிலையங்களில் புகைபிடிக்கவென தனியறை இருக்கிறது. ஆனால் பேருந்து நிலையங்களில் இல்லை. ஐயா, வண்டிகள் எல்லாம் தாழ்தள சொகுசுப் பேருந்துகளாக வந்துகொண்டிருக்கின்றன. மணிக்கணக்கில் காத்திருக்கவேண்டிய சூழலில், ஒருவன் பீடிகூடப் பிடிக்கக்கூடாதா?

அமெரிக்கா வாழ் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது சொன்னார், அங்கு பேருந்து நிலையங்களில் புகைக்க அனுமதியுண்டாம். பலநாடுகளிலும் இல்லாத ஒன்றை இங்கு திணிக்க முயல்கிறார்கள்.

சரி, அப்படியே பிடித்துத்தான் ஆகக்கூடாதெனில், விமான நிலையங்கள் போல பேருந்து நிலையங்களிலும் தனிஅறை புகைக்கவெனக் கொடுத்துவிட்டு இச்சட்டதை அமுல்படுத்தலாம்.

இந்தியா ஒரு எதேச்சதிகார நாடாக மாறிக்கொண்டிருக்கிறதோ! அவர்கள் சிகரெட் பிடி என்றால் பிடிக்கவேண்டும், அபராதம் கட்டு என்றால் கட்டவேண்டும்.

ஒரு நண்பர் பேசும்போது சொன்னது : சிகரெட் / பீடி என்பது முழுக்க முழுக்க bio product (இயற்கையிலிருந்து வருவது), இதனால் என்ன பெரிய தீங்கிருக்கமுடியும். பெட்ரோல் டீசல் போன்றவற்றோடு ஒப்பிட்டால் இதில் தீமைக்குறைவாக இருக்கவே (ஒப்பீட்டளவில்) வாய்ப்புண்டு என்றார்.

இன்னொன்று, இதை வெறும் உடல்நலம் சம்பந்தப்பட்டதாக மட்டும் குறுக்கிவிடமுடியாதென்று தோன்றுகிறது.

இச்சட்டத்தின் இணை-நிகழ்வான போலீஸ் / போலீஸாக மாற விரும்புபவர்களின் அதிகாரம் / அது பிரயோகிக்கப்படப்போகும் விதம்... இவற்றை விலக்கிவிட்டு தனியாக இப்பரச்சனையைப் பற்றிப் பேசமுடியாதென்பது என் எண்ணம்.

WHO போன்ற அமைப்புகளின்மூலம் கேன்சர் பூச்சாண்டியைக் காட்டி, எய்ட்ஸ் பேயைக் காட்டி, மரண பயத்துடனேயே வாழ நிர்பந்திக்கப்பட்டவர்கள் நாம். மரண பயத்திலிருப்பவனுக்கு அதைத்தவிர வேறு எதைப்பற்றியும் உணரமுடியாது. அதுவே அவர்களின் அரசியலோ?

என் பார்வையில் இது பெரும்திரளான மக்கள் கூட்டத்தைக் குற்றவாளிகள் ஆக்கும் சட்டம். குற்றம் செய்கிறோம் என்ற guilt senseலேயே அவர்களை வைத்திருக்க உதவுவது.

இம்மாதிரியான சட்டங்களின் பின்னிருக்கும் அபாயம் இதுதான். இதைப் பலர் உணர்ந்து கொள்ளாதது வருந்தத் தக்கதே.

93 comments:

PRABHU RAJADURAI said...

வேடிக்கையாக இருக்கிறது...சட்டமல்ல, உங்களது பதிவு!

சமீபகாலம் வரை அவ்வப்பொழுது புகைபிடித்தவன் என்ற முறையில் இந்தக் கட்டுப்பாடு மிகத் தேவை என்றே நான் நினைக்கிறேன்.

முதலில் உங்கள் உடல்நலத்தில் அரசுக்கு அக்கறை உண்டு. நோயுற்ற குடிமகன்களை குணமாக்குவதில் அரசின் பணம் செலவழிக்கப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளும் இங்கு அரசின் பல சலுகைகளைப் பெற்றே நடத்தப்படுகின்றன.

பக்கத்திலிருப்பவருக்கு புற்றுநோய் வருகிறதோ இல்லையோ...நாற்றம் விரட்டியடிக்கிறது இல்லையா? ஒருவர் புகைபிடிப்பதால்...அருகிலிருக்கும் எவ்வளவு பெயருக்கு தலைவலி வருகிறது...

எனக்கு புகைபிடிக்கும் அரிப்பு மிகவும் வரும் இடம் இரயில் பய்ணம் மற்றும் விமான நிலையங்களில். அங்கு வந்த தடையால் பின்னர் அங்கு அவ்வித எண்ணம் வருவதே நின்று போயிற்று.

இதைவிட தீமையான விடயங்கள் இருப்பதால் இதை கண்டுகொள்ளக்கூடாது என்பது சரியான வாதமல்ல!

புகைபிடிப்பதன் மீதான தொடர்ந்த விளம்பரங்கள் நல்ல பலனைத் தருகின்றன என்றே நினைக்கிறேன். பத்து வருடங்களுக்கு முன்பு புகை பிடிப்பது ஒரு ஸ்டேடஸ் ஸிம்பல் போல இருந்தது...தற்பொழுது வெளியே புகை பிடிக்க வெட்கப்பட்டே அதை விட வேண்டியுள்ளது.

பொய் வழக்கு போட காவல்துறைக்கு மற்ற பல வழக்குகள் இருக்கையில் உங்கள் கையில் சிகரெட்டை திணிக்க வேண்டாம்...

போலீஸ் மீது பயமென்றால் வீட்டிற்குள் கதவை சாத்திக் கொண்டு புகை பிடியுங்கள்

செயின் ஸ்மோக்கர் என்று முன்பு பெருமையாக கூறுவார்கள்...அப்படியென்றால், சென்னையிலிருந்து தில்லிக்கு விமானத்தில் சென்றால் சுமார் நான்கு மணி நேரம் ஒன்றும் செய்ய முடியாது. செத்தா போய் விட்டார்கள்?

புகைபிடிப்பது எனக்கும் இன்பமாயிருந்திருக்கிறது. ஆனால் கணிசமான அளவில் எனது வேலைத்திறனை அது பாதித்தது என்றே கூற வேண்டும்.

கட்டுப்பாடுகளை நான் வரவேற்கிறேன்...உங்களது கோபத்தினைப் பற்றி கவலைப்படாமல்:-)

அமர பாரதி said...

சுந்தர்,

சரியாக சொல்லியிருக்கிறீர்கள். இது போலீஸுக்கு உடனடி வருமானம் தரும் வாய்ப்பாக மட்டும்தான் இருக்கப்போகிறது. மேலும் இருக்கிற போலீஸுக்கு இது கூடுதல் பளுவாக அமைந்து மற்ற குற்றங்கள் பெருகும் அபாயமும் இருக்கிறது. ஒருவருக்கும் நம் நாட்டில் சட்டம் அமுல்படுத்தப்படும் முறை பற்றி எந்த விபரமும் புரியவில்லை. நம் நாட்டில் துஷ்ப்பிரயோகம் மூலமாக மட்டுமே அதிகாரம் அமுல்படுத்தப்படுகிறது.

ஒரு கொசுவை ஒழிக்க முடியவில்லை. மக்களுக்கு அடிப்படை சுகாதாரம் பற்றிய புரிதலை ஏற்படுத்த முடியவில்லை. தேவையான அளவில் இலவச சுகாதரமுள்ள கழிப்பிடங்களை ஏற்படுத்த முடியவில்லை. தெருவையும் பொது இடங்களையும் சுத்தமாக வைத்திருக்க முடியவில்லை. சுத்தமான தண்ணீரை தர முடியவில்லை. இந்த லட்சனத்தில் இந்த சட்டம் வேறு.

இங்கு அமெரிக்காவில் இரயில் நிலையம், ரெஸ்ட்டாரன்ட்டுகள் மற்றும் பார்களில் புகை பிடிக்க முடியாது. ஆனால் அவை எல்லாம் ஏ.சி. செய்யப்பட்டவை. திறந்த நிலையில் இருக்கும் இரயில் நிலையங்களில் புகை பிடிக்கலாம்.

இந்த சட்டத்துக்கு பதிலாக பள்ளிக்குழந்தைகளுக்கு தொடர்ச்சியாக துண்டுப் பிரசுரங்களை கொடுப்பதன் மூலம் இன்னும் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.

கல்வெட்டு said...

Sundar,
If a married couple (husband and wife ) stays in a small lodge in Tamil Nadu (Ex: Ooty), they needs to have proof for marriage when police comes. Otherwise they may be questioned.

If they stay in a 5 star hotel, they will have different experience.

****

Even if govt. ban the liquor and palm wine (Kallu) in whole country, govt will give provision for people who stays in a star hotel.

But the same time some one in village will get arrested for drinking palm wine.

Even in gulf, european citizens are allowed to have liquor in their hotel room but not all. (Correct me if I am wrong)

*

Those who travel in plane will get separate room for smoking in Airport , but you cannot expect the same for bus-stand.

*
You cannot expect the same level of service in Sleeper Class and 1 st A/C.

For example, if train running out of water in bath room, which compartment will get re-filled first (if there is limited water available in station)?

**
In train, not all passengers get same level of service though their origin/destination and citizenships are same.

Same thing applicable for flights too.

In coming days they may add 'smoke-zone coupe' for 1st class people but you cannot expect the same in SL class.

*

Though there is a law , you need to have money to get justice.
I mean getting lawyer and going all the way up to Supreme Court and all the related expenses.

You may get a free law service, but they don’t take your case all the way up to Supreme Court. At least you need to cover your own
expenses.
*


Money matters**


This is for Dr Bruno : -))))

Condom –> can not be used in Bus Stand as well as in Airport
(there is no condom zone in airport. Please do not jump to airport hotel and give another fun example . We are talking about airport general place Ex:lobby)

Cigarette -> Airport has a smoke zone but Bus Stand doesn’t have.

So for the arguments please do not compare any thing with everything.

**


I welcome the law.

I am not asking to provide smoke zone in bus-stand ( or all the places ).

All I am asking is to ban the 'smoke zone' in airport too or justify that.This is not just smoking-zone differences.

There is a politics in this. I think Sundar is trying to tell that one.

If govt. can provide A/C equipped smoke-zone for Airport passengers then at least they can provide a small hut (keeththu koottakai) in Bus Stand. If not ban them all.

நாமக்கல் சிபி said...

வழி மொழிறேன்!

தேவகோட்டை ஹக்கீம் said...

இருக்கிர சட்டத்தையே பேண முடியவில்லை... இதுலெ வேற இப்படி ஒரு தேவை இல்லாத சட்டம்.இப்பொழுது இந்த சட்டத்திர்கான அவசியம் என்ன? இதனால் பயன் பெற போவது நம்ம போலீஸ்தான்.சும்மாவே போலீசு தொல்லை தாங்க முடியலை. இனிமே இது வேற...நம்ம பாடு திண்டாட்டம்தான்.

Unknown said...

சுந்தர்

பேஸிவ் ஸ்மோக்கிங் மிகவும் ஆபத்தானது.அமெரிக்காவில் மட்டும் பேஸிவ் ஸ்மோக்கிங்கால் வருடத்துக்கு 3000 உயிர்கள் பலியாகின்றன.வருடத்துக்கு 150,000 அமெரிக்க குழந்தைகள் பேஸிவ் ஸ்மோக்கிங்கால் நிமோனியா போன்ர வியாதிகளுக்கு ஆளாகிறார்கள்.

http://www.epa.gov/smokefree/pubs/etsfs.html

சீனாவில் வருடத்துக்கு 48000 பெண்கள் பேஸிவ் ஸ்மோக்கிங்கால் மரணமடைகிறார்கள்.புகைபிடிப்பவர்கள் மரணம் எந்த எண்ணிக்கையில் இருக்கிரதோ அதே எண்ணிக்கையில் பேஸிவ் ஸ்மோக்கிங்கால் மரணமடைபவர்கள் எண்ணிக்கையும் இருக்கிறது என பெர்க்லி பல்கலைகழகம் தெரிவிக்கிறது.


http://berkeley.edu/news/media/releases/2005/09/04_smoking.shtml

பொது இடங்களீல் புகைபிடிப்பது மிகவும் ஆபத்தான செயல்.அதை எத்தனை கடுமையாக சட்டம் போட்டு தடுத்தாலும் தவறே இல்லை.அடுத்தவன் உயிரை பறிக்க யாருக்கும் உரிமை கிடையாதல்லவா?

புருனோ Bruno said...

//முதலில், கேட்கப்படவேண்டிய கேள்வி, இப்போது இச்சட்டத்திற்குத் தேவையென்ன?//

புகைப்பவர்களால் சமூகத்திற்கு ஏற்படும் நோய்களை குறைப்பதற்கு

//ரயில்களில் & ரயில்நிலையங்களில், பேருந்துகளில், விமானங்களில் புகைபிடிக்க முதலிலிருந்தே தடை இருக்கின்றது (ஏற்கனவே தடைசெய்யப்பட்ட பலவிஷயங்கள் பரவலாக நடந்து கொண்டிருப்பது நாமறிந்ததே). இப்போது புதிதாக தனியார் அலுவலகங்களையும் வேறுசில இடங்களையும் சேர்த்திருக்கிறார்கள்.//

நோய்களை மேலும் குறைப்பதற்கு

புருனோ Bruno said...

//இந்தச் சட்டத்தை ஆதரிப்பவர்கள் பிரதானமாக இரண்டைச் சொல்கிறார்கள் :

(1) சிகரெட் பிடிப்பது உடல்நலத்திற்குத் தீங்கானது
(2) புகைபிடிப்பவர்களின் அருகிலிருப்பவர்களுக்கும் அது தீங்கிழைக்கும்

என் உடல்நலத்தைப் பற்றி என்னைவிட அரசு அதிகக் கவலைப்படவேண்டாம். நன்றாக இருப்பதோ அல்லது நாசமாகப் போவதோ நானே பார்த்துக் கொள்கிறேன். முடிந்தால் இதைவிட அதிகத் தீமையான பலவிஷயங்களை முதலில் சரிசெய்யட்டும்.//

உங்கள் உடல்நலத்தை பற்றி அரசு கவலைப்படவில்லை. அதனால் தான் வீட்டினுள் புகைக்க அனுமதி அளித்து, அது குறித்து உங்களையே தீர்மானிக்க சொல்கிறார்கள்

ஆனால் என் உடல்நலத்தை நீங்கள் கெடுப்படை நான் பார்த்துக்கொண்டிருக்க வேண்டுமா


//இந்த passive smoking பற்றியே எல்லாரும் பேசுகிறார்கள். என்னவோ புகைப்பிடிப்பவர்கள் எல்லாம் கொலைகாரர்களைப் போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்க முனைகிறார்கள். இங்கு இதுவரை எத்தனை பேர் பேஸிவ் ஸ்மோகிங்கால் கேன்சர் வந்திருக்கிறது என்பதற்கு ஏதாவது ஆதாரம் உண்டா.? கெடுதல் இல்லாமலிருக்காது, ஆனால் அது மிகக்குறைவான விகிதமே. அதைப்போய் ஏன் ஊதிப் பெரிதாக்கவேண்டும்?//

மன்னிக்கவும். passive smoking மூலம் வரும் ஆபத்து மிகப்பெரிது.

தனியாக புகைப்பவர்கள் தற்கொலை செய்கிறார்கள். பொது இடங்களில் புகைபிடிப்பவர்கள் அடுத்த்வர்களை கொல்கிறார்கள் என்றால் அது மிகையாகாது

புருனோ Bruno said...

//விமான நிலையங்களில் புகைபிடிக்கவென தனியறை இருக்கிறது. ஆனால் பேருந்து நிலையங்களில் இல்லை. ஐயா, வண்டிகள் எல்லாம் தாழ்தள சொகுசுப் பேருந்துகளாக வந்துகொண்டிருக்கின்றன. மணிக்கணக்கில் காத்திருக்கவேண்டிய சூழலில், ஒருவன் பீடிகூடப் பிடிக்கக்கூடாதா?//

நீங்கள் என்ன கூறுகிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை

1. பொது இடங்களில் புகை பிடிக்க அனுமதித்து அனைவரின் நுரையீரலை பாழ்படுத்த வேண்டுமா

அல்லது

2. அனைத்து கட்டிடங்களிலும் புகை பிடிக்க தனி இடம் வேண்டுமா


//அமெரிக்கா வாழ் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது சொன்னார், அங்கு பேருந்து நிலையங்களில் புகைக்க அனுமதியுண்டாம். பலநாடுகளிலும் இல்லாத ஒன்றை இங்கு திணிக்க முயல்கிறார்கள்.//

அமெரிக்கா பின்னால் இருந்தால் இந்தியா முன்னேறக்கூடாதா. உதாரணம் மின்னனு வாக்கு இயந்திரம்

//சரி, அப்படியே பிடித்துத்தான் ஆகக்கூடாதெனில், விமான நிலையங்கள் போல பேருந்து நிலையங்களிலும் தனிஅறை புகைக்கவெனக் கொடுத்துவிட்டு இச்சட்டதை அமுல்படுத்தலாம்.//

நீங்கள் என்ன கூறுகிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை

1. பொது இடங்களில் புகை பிடிக்க அனுமதித்து அனைவரின் நுரையீரலை பாழ்படுத்த வேண்டுமா

அல்லது

2. அனைத்து கட்டிடங்களிலும் புகை பிடிக்க தனி இடம் வேண்டுமா

புருனோ Bruno said...

//இந்தியா ஒரு எதேச்சதிகார நாடாக மாறிக்கொண்டிருக்கிறதோ! அவர்கள் சிகரெட் பிடி என்றால் பிடிக்கவேண்டும், அபராதம் கட்டு என்றால் கட்டவேண்டும்.
ஒரு நண்பர் பேசும்போது சொன்னது : சிகரெட் / பீடி என்பது முழுக்க முழுக்க bio product (இயற்கையிலிருந்து வருவது), இதனால் என்ன பெரிய தீங்கிருக்கமுடியும். பெட்ரோல் டீசல் போன்றவற்றோடு ஒப்பிட்டால் இதில் தீமைக்குறைவாக இருக்கவே (ஒப்பீட்டளவில்) வாய்ப்புண்டு என்றார்.//

முற்றிலும் தவறான தகவல். தவறான தகவலில் அடிப்படையில் விதண்டாவாதம்
பாம்பு விஷம் கூட முழுக்க முழுக்க bio product (இயற்கையிலிருந்து வருவது), இதனால் என்ன பெரிய தீங்கிருக்கமுடியும் என்று எங்கள் நண்பர் பாம்பிடம் கடி வாங்க தயாரா

//இன்னொன்று, இதை வெறும் உடல்நலம் சம்பந்தப்பட்டதாக மட்டும் குறுக்கிவிடமுடியாதென்று தோன்றுகிறது.
இச்சட்டத்தின் இனை-நிகழ்வான போலீஸ் / போலீஸாக மாற விரும்புபவர்களின் அதிகாரம் / அது பிரயோகிக்கப்படப்போகும் விதம்... இவற்றை விலக்கிவிட்டு தனியாக இப்பரச்சனையைப் பற்றிப் பேசமுடியாதென்பது என் எண்ணம்.
WHO போன்ற அமைப்புகளின்மூலம் கேன்சர் பூச்சாண்டியைக் காட்டி, எய்ட்ஸ் பேயைக் காட்டி, மரண பயத்துடனேயே வாழ நிர்பந்திக்கப்பட்டவர்கள் நாம். மரண பயத்திலிருப்பவனுக்கு அதைத்தவிர வேறு எதைப்பற்றியும் உணரமுடியாது. அதுவே அவர்களின் அரசியலோ?
என் பார்வையில் இது பெரும்திரளான மக்கள் கூட்டத்தைக் குற்றவாளிகள் ஆக்கும் சட்டம். குற்றம் செய்கிறோம் என்ற guilt senseலேயே அவர்களை வைத்திருக்க உதவுவது. இம்மாதிரியான சட்டங்களின் பின்னிருக்கும் அபாயம் இதுதான். இதைப் பலர் உணர்ந்து கொள்ளாதது வருந்தத் தக்கதே.//

மன்னிக்க வேண்டும்
இது பெரும்திரளான மக்கள் கூட்டத்தைக் புற்றுநோயிலிருந்து காக்கும் சட்டம்
புகைபிடிக்கும் சிறுபாண்மை மக்களில் பொது இடங்களில் புகைக்கும் மிக மிக குறுகிய வட்டத்தையே இச்சட்டம் தடுக்கிறது

Sridhar V said...

//முதலில், கேட்கப்படவேண்டிய கேள்வி, இப்போது இச்சட்டத்திற்குத் தேவையென்ன? //

இந்த சட்டம் 2003-ல் இயற்றப்பட்டு பின்னர் அமலாக்கப்படவும் செய்யப்பட்டது. தற்போது 'பொது இடங்கள் எவை' என்பன போன்ற வரைமுறைகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன என்று நினைக்கின்றேன். அந்த காலகட்டத்தில் புகைபிடிக்கும் பழக்கம் இருந்த காரணத்தினால் எனக்கு நேரிடையான அனுபவம் இருந்திருக்கிறது. மதுரையில் பல இடங்களில் பொதுவில் புகைபிடிப்பவர்களை போக்குவரத்து காவலர்களால் 'பொது இடத்தில் புகை பிடிக்கக் கூடாது' என்று அறிவுறுத்தப் பட்டார்கள். சமயத்தில் அபராதமும் விதிக்கப் பட்டது.

Passive Smoking பற்றி கேள்வி எழுப்பியிருந்தீர்கள். புகைபிடிப்பவர் விடும் புகையினால் ஏற்படும் மாசுபட்ட காற்று அருகிலிருப்பவர்களை உடனடியாக பாதிக்கத்தான் செய்கிறது. இதற்கு நிறைய அறிவியல் தரவுகள் உண்டு. மிக லேட்டஸ்டான தரவாக சிகரெட் புகையினால் ஏற்படும் பல்வேறு உபாதைகளில் புதியதாக ஒன்றையும் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். 'கண்டுபிடிக்க முடியாத காசநோய்'. சிகரெட் புகையிலிருக்கும் கார்பன்-மோனாக்ஸைடு வாயுவால் ஏற்படும் ஒரு உபாதை இது. இந்தக் கண்டுபிடிப்பினால் இப்பொழுது 'மாசற்ற காற்றை' பற்றிய விழிப்புணர்வு அதிகமாக ஆரம்பித்திருக்கிறது. புற்று நோயோ, காச நோயோ, ஆஸ்துமாவோ ஒரு மனிதன் சுதந்திரமாக தனக்கு எந்த அளவிற்கு வேண்டுமானாலும் தீங்கிழைத்துக் கொள்ளலாம். ஆனால் அதே தீங்கை சுற்று சூழலுக்கு ஏற்படுத்தி மற்றவர்களையும் பாதிக்க செய்வது நியாயமா?

//அமெரிக்கா வாழ் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது சொன்னார், அங்கு பேருந்து நிலையங்களில் புகைக்க அனுமதியுண்டாம். //

ஆம். அமெரிக்காவில் பொது இடங்களில் புகைபிடிக்க தடை இதுவரை கிடையாது. ஆனால் பொதுவாகவே அமெரிக்கவாழ் மக்கள் பொது இடங்களில் சுற்றுசூழலை மாசுபடுத்துவது இல்லை. கட்டாயமாக Exceptions உண்டு.

//விமான நிலையங்கள் போல பேருந்து நிலையங்களிலும் தனிஅறை புகைக்கவெனக் கொடுத்துவிட்டு இச்சட்டதை அமுல்படுத்தலாம்.//

பொது இடங்களில் சிறுநீர் கழித்தால் அது நியூசென்ஸ் குற்றம். பொது கழிப்பறைகள் ஏற்படுத்தினாலும் அதை சரிவர பராமரிக்காமல், உபயோகிக்க லாயக்கில்லாததாகத்தான் இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் Smoking cabin எல்லாம் எந்த அளவிற்கு சாத்தியம் என்பது கேள்விக்குறிதான்.

//சிகரெட் / பீடி என்பது முழுக்க முழுக்க bio product (இயற்கையிலிருந்து வருவது), இதனால் என்ன பெரிய தீங்கிருக்கமுடியும். பெட்ரோல் டீசல் போன்றவற்றோடு ஒப்பிட்டால் இதில் தீமைக்குறைவாக இருக்கவே (ஒப்பீட்டளவில்) வாய்ப்புண்டு என்றார்.//

இது மிகவும் தவறான வாதம். வாகன எரிபொருள் வெளியிடும் புகையும் சுற்றுபுற சூழலை மாசுபடுத்திக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் இங்கே புகைப்பாளர்கள் தங்கள் நுரையீரலை காயப்படுத்திய பின்னர்தான் சுற்றுசூழலை மாசுபடுத்துகிறார்கள். bio-product என்றால் என்ன? நஞ்சு கூட இயற்கைதான். உணவாக சாப்பிட முடியுமா என்ன?

//WHO போன்ற அமைப்புகளின்மூலம் கேன்சர் பூச்சாண்டியைக் காட்டி, எய்ட்ஸ் பேயைக் காட்டி, மரண பயத்துடனேயே வாழ நிர்பந்திக்கப்பட்டவர்கள் நாம்.//

மன்னிக்கவும். பூச்சாண்டி என்பதெல்லாம் ஓவர். இன்றைய நிலையில் மனித இனத்தில் இறப்பின் விகிதத்தை பெரிதளவு குறைத்திருப்பது இது போன்ற நிறுவனங்கள்தான்.

//குற்றம் செய்கிறோம் என்ற guilt senseலேயே //

அன்புமணி ராமதாஸின் குறிக்கோளும் அதுதான் என்று நினைக்கிறேன்.

கஞ்சா, அபின், மரிஜுவானா, ஓபியம் போன்ற வஸ்துக்கள் கூடத்தான் நிழலான இடங்களில் கிடைக்கின்றன. அவைகளை குற்றம் செய்கிறோம் என்ற பிரக்ஞையில்லாமல் உபயோக படுத்த முடியுமா என்ன?

சிகரெட் பழக்கத்தை முழுவதுமாக தடைசெய்துவிடவில்லை. சுற்று சூழல் பாதுகாப்புக்காகவும், இளைய சமுதாயம் எளிதில் இந்த பழக்கத்திற்கு 'அடிமை'யாகிவிடக்கூடாது என்பதற்காகவும் இது சரியான அணுகுமுறையாகத்தான் தோன்றுகிறது.

ஆனால் சட்டம் இயற்றுவதோ / அமலாக்குவதோ ஒரு பகுதிதான். நடைமுறை சிக்கல்கள் நிறையவே இருக்கின்றன என்பதுதான் உண்மை.

இறுதியாக ஒரு சுய-தம்பட்டம். :-)

என் சொந்த அனுபவத்திலிருந்து சொல்கிறேன் புகைபிடிக்கும் பழக்கத்தை விடுவது மிகவும் எளிதானது. எப்படியும் ஒரு நாள் இருதய நலனுக்காக ஏதாவது ஒரு மருத்துவர் 'புகைபிடிக்காதீர்கள்' என்று கட்டளையிடத்தான் போகிறார். அதுவும் ஒரு பை-பாஸ் சர்ஜரி பண்ணியபிறகு. ஒரே ஒரு தீர்மாணத்தில் நீங்களும் இதே போல் 'சுய தம்பட்டம்' அடிக்கலாம் :-))))

(எரிச்சல் படாதீங்க பாஸு :-)) )

'காலையில ரெண்டு தம்மு இழுத்தாத்தான் வெளிக்கே போக முடிகிறது' என்பது போன்ற 'எனிமா' காரணங்கள் எல்லாம் வெறும் மூட நம்பிக்கைகளே.

புருனோ Bruno said...

//This is for Dr Bruno : -))))

So for the arguments please do not compare any thing with everything.//

உதாரணம் என்பது புரிந்து கொள்வதற்கு தானே தவிர அப்படியே ஏற்றுக்கொள்ள அல்ல

நான் அளித்த உதாரணம் எதற்கென்றால் அடுத்தவரை பாதிக்கக்கூடிய விஷயத்தை தங்களின் சுயநலனுக்காக தொடர்வது என்பது சிறுபிள்ளத்தனம் என்று காட்டத்தானே தவிர ஆணுறையும் வெண்குழல் வத்தியிம் ஒன்று என்று சொல்ல வில்லை.

//So for the arguments please do not compare any thing with everything.//

விவாதத்தில் உள்ள பொருள் - உதாரணப்பொருள் ---- இரண்டிற்கும் பல வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் சொல்ல வந்த கருத்து என்ன என்று புரிந்து கொள்ள வேண்டும்

உதாரணமாக ஆணுறை பயன்படுத்த இருவர் வேண்டும்
வெண்குழல் வத்தி புகைக்க ஒருவர் போதும்

எனவே (இந்த வித்தியாசத்தால்) நான் கூறிய உதாரணம் பொருந்தாது என்று கூற வேண்டாம்

--

பொதுவில் பயன் படுத்த முடியாத பொருளை கடையில் ஏன் விற்கிறார்கள் என்ற கேள்விக்கு பதிலளிக்களையில் “கடையில் விற்கப்படும் பொருட்கள் அனைத்தும் பொது பயண்பாட்டிற்கு அல்ல, சில தனிப்பயண்பாட்டிற்கு” என்று விளக்கத்தான் ஆணுறை உதாரணம் அளிக்கப்பட்டது

இந்த எளிய விஷயம் உங்களைப்போல் படித்த சமூக அக்கறை உள்ளவர்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்.
--
நீங்கள் வயதில் மூத்தவர் என்பதால் உங்களுடன் மேலும் விவாதித்து உங்களை தர்ம சங்கட படுத்த விரும்பவில்லை
--
சட்டங்கள் / விதிமுறைகள் குறித்து சரியாக புரிதல் இல்லாமலேயே வெட்டி விவாதம் செய்வது மிகவும் எளிய விஷயம்
--

புருனோ Bruno said...

//I welcome the law.//

இந்த சட்டத்தை வரவேற்பதாக கூறும் நீங்கள் ஏன் அணுறையை வைத்து எனக்கு தனிப்பட்ட கேள்வி எழுப்பினீர்கள்

//I am not asking to provide smoke zone in bus-stand ( or all the places ). //

மிகவும் நன்றி

//All I am asking is to ban the 'smoke zone' in airport too or justify that.//
சுந்தர் சார்,

கல்வெடு சார் தெளிவாக கூறிவிட்டார்

புரிகிறதா

புருனோ Bruno said...

நான் ஆணுறை மற்றும் வெண்குழல் வத்தியை ஒப்பிட்டது எதற்கென்று தெளிவாக கூறிவிட்டேன்

So for the arguments please do not compare any thing with everything.

புரியும் என்று நினைக்கிறேன் :) :)

புரியவில்லை என்றால் கூட கடைசி வரை விளக்கத்தயார்

புரிகிறது. ஆனால் அடுத்தவரின் நலன் பற்றி கவலைப்படாமால் நான் பொது இடத்தில் புகை பிடிப்பேன் என்று கூறினால் உங்களுடன் விவாதித்து என் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை

Unknown said...

சுந்தர்,

நீளமாக ஒரு பின்னூட்டம் அனுப்பினேன்.பிளாக்கர் பகவான் விழுங்கிவிட்டார் போலும்.

பேஸிவ் ஸ்மோக்கிங்கால் லங் கேன்சர் வந்து அமெரிக்காவில் ஒரு வருடத்துக்கு நேரும் உயிரிழப்புக்கள் 3000.இவர்கள் அனைவரும் சிகரெட் குடிக்காதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் வருடத்துக்கு சுமார் 150,000 முதல் 300,000 குழந்தைகள் பேஸிவ் ஸ்மோக்கிங்கால் நிமோனியா வந்து பாதிக்கப்படுகிறார்கள்.2 லட்சம் முதல் 10 லட்சம் குழந்தைகளுக்கு பேஸிவ் ஸ்மோக்கிங்கால் ஆஸ்த்மா அதிகரிக்கிறது.

http://www.epa.gov/smokefree/pubs/etsfs.html#Public%20and%20Scientific%20Reviews

சீனாவில் வருடத்துக்கு 48000 non-smoking பெண்கள் பேஸிவ் ச்மோக்கிங்கால் உயிரிழக்கிறார்கள்.இந்த எண்ணிக்கை சிகெரெட் பிடித்து உயிரிழப்பவர்களுக்கு சரிசமமாக இருக்கிறது.

http://berkeley.edu/news/media/releases/2005/09/04_smoking.shtml

இந்த தடையை மனதார வரவேற்கிறேன்.

புகை நமது அனைவரின் உடல்நலத்துக்கும் கேடான விஷயம்.

ரவி said...

காமெடி செஞ்சுட்டீங்க !!!! காமெடி தானே ????

//கெடுதல் இல்லாமலிருக்காது, ஆனால் அது மிகக்குறைவான விகிதமே. அதைப்போய் ஏன் ஊதிப் பெரிதாக்கவேண்டும்?///

புகை மேட்டர் இல்லையா ? ஊதித்தான் பெரிதாக்கவேண்டும்...

ஒரு ப்ராஸஸை அல்லது விதியை அமுல்படுத்தவேண்டும் என்றால், அதனை இண்ஸ்ட்டிடீயூஷனலைஸ் செய்யவேண்டும் என்று கார்னகி மெலன் யுனிவர்ஸிட்டியின் SEI பற்றி புத்தகம் சொல்கிறது...

அதனால் புகைப்பிடிப்பதற்கான தடையை இப்படிதான் அமுல்படுத்தவேண்டும்..

புகைபிடிப்பதை வீட்டில் செய்துகொள்ளலாம் என்று சொல்கிறார்கள்...வீட்டில் குழந்தை இருக்கும் (உடல்நலனுக்கு கேடு) மனைவி இருப்பார் (உதைப்பார்) அதனால் அங்கே புகைக்கமாட்டேன் என்கிறார் என் நன்பர்...

ஆகக்கூடி ஊரு கெட்டா பரவாயில்லை, நாம சந்தோஷமா இருப்பதுக்கு ஏன் தடைவிதிக்கிறார்கள் என்று டென்ஷன் :)

என்னுடைய அலுவலகத்தில் பணியாற்றும் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் இப்போது மிகவும் கஷ்டப்படுகிறார்கள், இவ்வளவு நாளாக இருந்து வந்த ஸ்மோக்கிங் ஸோன் இரண்டாம் தேதியில் இருந்து விலக்கப்பட்டுள்ளது..

டாக்டர் புருனோவின் பதிவு அருமையாக உள்ளது, வாசித்து பார்க்கவும்...

இந்த தடையால் வாரநாட்களில் 5 சிகரெட் அடித்துக்கொண்டிருந்த நான் இப்போது 2 அல்லது 1 என்று குறைந்துவிட்டேன்..:))

கட்டுடைக்கறது சரி, அதுக்காக ட்ராபிக் சிக்னலை கட்டுடைத்தால் காலில் கையில் கட்டுப்போடவேண்டியது தான் :)))

Anonymous said...

மிக நன்றாக உள்ளது உங்கள் பதிவு மேலும் கல்வெட்டுவின் பின்னுட்டம் மிக அருமை

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

இன்னும் சில பின்னூட்டங்கள் இருக்கின்றன. அவற்றை சில மணிநேரங்கள் கழித்து வெளியிடுகிறேன். பொறுத்துக் கொள்க.

நாமக்கல் சிபி said...

//If govt. can provide A/C equipped smoke-zone for Airport passengers then at least they can provide a small hut (keeththu koottakai) in Bus Stand. If not ban them all.
//

:)

இதற்குப் பதில் விமான நிலையத்திலும் தடை செய்துவிட்டாலும் யாரும் இதுபற்றி கேள்வி எழுப்ப வேண்டிய அவசியம் வந்திருக்காது அல்லவா!

சட்டம் அனைவருக்கும் சமம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதைத்தான் ஜ்வ்யரோம் வலியுறுத்துகிறார்

Anonymous said...

நல்லா காமெடி பண்ணுறீங்க சுந்தர் ...

சிகரெட் குடிப்பது உடல் நலத் துக்கு நல்லது என்று பிரசங்கம் செய்ய ஆரம்பிப்பீர் போலும் ....
என் உடலைப் பற்றி என்னை விட அரசாங்கத்துக்கு என்ன அக்கறை இருக்கிறது என்று கேட்கிறீர்களே ...
நீர் விடும் இழுக்கும் புகையை வெளியே விடாமல் உள்ளுவைய்த்தததுக் கொள்ள முடிந்தால் யாரும் கண்டிப்பாக உம்மிடம் வந்து கேட்க மாட்டார்கள் .. ஏன் சிகரெட் பிடிக்கிறீர் என்று ...

பக்கத் தில் இருப்பவன் சுவாசத்தில் உம் புகையை கலக்க உமக்கு என்ன உரிமை இருக்கிறது ..
சரி .. உங்கள் நண்பர் ஒரு சூராதி சூரர் சொன்னார் என்று சொன்னீர்களே ...
பெட்ரோல் டீசல் புகையை விட மோசம் இல்லை என்று ..?..
இப்பொழுது உங்கள் குழந்தை இருக்கிறான் என்று வைத்துக் கொள்வோம்.. நான் புகைத்து அவன் முகத்தில் புகை விடுகிறேன் ..
அவன் சுவாசிக் கட்டும் ..
உமது போதைக்கு பக்கத் தில் இருப்பவன் ஊறுகாயா ?...

அன்புமணி ராமதாஸ் தனது வாள் நாளில் செய்த மிக மிக நல்ல தொரு விசயம் இது தான் ...
இதை பதிவில் ஏற்றுவீரா ? என்று தெரிய வில்லை ...
எனினும் இது உங்களுக்கான பதில் ..

buginsoup said...

passive smoking ப‌ற்றி ரொம்ப‌ச் சாதார‌ண‌மாக‌ எழுதியிருக்கிறீர்க‌ள்.கேன்ச‌ர் வ‌ருமா வ‌ராதா என்ற‌ ஆராய்வ‌து இருக்க‌ட்டும். ஒரு புகைப்பவ‌னின் எச்சில் வாயில் (ந‌ல்ல‌ அல்ல‌து ஊத்தை) இருந்தும் மூக்கில் (ச‌ளி பிடித்த‌ அல்ல‌து பிடிக்காத‌) இருந்தும் வ‌ரும் நாற‌ப்புகையை ம‌ற்ற‌வ‌ர் ஏன் சுவாசிக்க வேண்டும்? துஷ்டர்க‌ளைக்க‌ண்ட‌து போல் தூர‌ வில‌கிச்செல்ல‌ வேண்டுமா?

narsim said...

சுந்தர்ஜி, மருத்துவர் புருனோ மற்றும் பதிவர்களின் எதிர்வாதத்தின் மூலமும் உங்கள் வாதத்தின் மூலமும் நல்ல கருத்துக்கள் மக்களுக்கு கிடைத்தால் அதுவே போதும்..

தேவதச்சனின் கவிதை அருமை..

நர்சிம்

வெண்பூ said...

சுந்தர், புருனோ,

இந்த சட்டத்தில் இரண்டு விசயங்கள் இருக்கின்றன. ஒன்று இந்த சட்டம் தேவையா என்பது.. இரண்டு எப்படி அமல்படுத்த்ப்படப் போகிறது என்பது.

புருனோ சட்டம் தேவை என்கிறார். கண்டிப்பாக நான் உடன்படுகிறேன். நான் புகைப்பதில்லை (அதை ஆதரிப்பதும் இல்லை, எனக்குத் தெரிந்து என் நண்பர்கள் சிகரட்டுக்கு நான் பணம் கொடுப்பதில்லை, டீ குடிக்க செல்லும்போது அவர்கள் புகைத்தால் அவர்கள்தான் என் டீக்கும் சேர்த்து பணம் தரவேண்டும்) அதனால் பேஸிவ் ஸ்மோக்கிங்கின் கஷ்டங்கள் எனக்கு புரியும். நூறு சதவீதம் இந்த சட்டம் தேவையானது. யாரும் யாரையும் புகைக்கவேண்டாம் என்று சொல்லவில்லை. மற்றவர்கள் அருகிலிருக்கும்போது புகைக்காதீர்கள் என்றுதான் சொல்கிறோம். நண்பர்கள் இருக்கும்போது பேசும் கெட்ட வார்த்தையை நண்பன் குடும்பத்துடன் இருக்கும்போது சொல்லமுடியாதல்லவா? அதுபோல்தான் இதுவும்..

அதேநேரம் அதை இந்தியாவில் அமல்படுத்தமுடியுமா என்றால், சிரிப்பதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியாது. ஆங்கிலத்தில் மேலே எழுதியிருக்கும் பின்னூட்டம் நூறு சதவீதம் சரி என்பது எல்லோர்க்கும் தெரியும். சென்னை போன்ற பெரு நகரங்களில் சாலை விதிகளை மீறினால் உயிருக்கு ஆபத்து என்பது தெரிந்தும் சிவப்பு சிக்னலை கடக்கும் வாகனங்களும், அவற்றை போக்குவரத்து காவல்துறை கையாளும் முறையும் ஒவ்வொரு நாளும் பார்க்கிறோம். தனிமனிதனும் அடுத்தவனைப் பற்றி கவலைப்படப் போவதில்லை, சட்டத்தை அமல்படுத்துவோரும் அதில் பணத்தைத் தவிர வேறு ஒன்றும் பார்க்கப்போவதில்லை. முடிவு இது ஏட்டுச் சுரைக்காயாக மக்களை இம்சிக்கும் சட்டமாக மட்டுமே இருக்கப் போகிறது. :(

வால்பையன் said...

பாத்ரூம் புகையினால் நிரம்பி விட்டது.

பின்னாளில் காரில் இருந்து வரும் புகையினால் உடலுக்கு ஆபத்து என்று பொது இடங்களில் கார் ஓட்ட கூடாது என்று சொல்வார்களா

Anonymous said...

பொது இடங்களில் புகைப்பிடித்தலை கட்டுப்படுத்தல், தடை செய்தல் தவறில்லை.புகைப்பிடிக்க முடியாவிட்டால் யாரும் செத்து
விடமாட்டார்கள். காற்று தேவை
மூச்சுவிட, அதை பாழ்படுத்தும்
புகைபிடிக்கும் பழக்கம் இருப்பவர்கள்
மூடப்பட்ட அறைகளுக்குள் புகைபிடித்துக் கொள்ளட்டும்.

Anonymous said...

புகைபிடித்தலால் தனக்கு மட்டுமல்ல அடுத்தவர் நலனுக்கும் கேடு எனும்போது இச்சட்டத்தை கட்டாயம் கடைப்பிடிக்கவேண்டும். பொதுஇடம் தனிமனிதனுக்குச் சொந்தமல்ல.

மக்களின் நலன் சார்ந்த விடயங்களில் வெறுமனே 'தம்'கட்டி விவாதிப்பதில் பொருளில்லை.

ச.சங்கர் said...

ஜ்யோவ்ராம் சுந்தர்

உண்மையைச் சொல்லுங்கள். நீங்கள் புகை பிடிப்பீர்கள்தானே?:) அதனால்தான் கோபம் வருகிறது. இல்லையேல் இது பற்றி இவ்வளவு கோபம் வராது :)(இதுவும் அடிக்ஷன் சிண்ட்ரோம்தான்)

மற்றபடி சிகரெட் பிடிப்பது பிடிப்பவற்கும் பக்கத்தில் இருப்பவற்கும் சுற்றுச் சூழலுக்கும் கேடானதுதான் என்பது நிரூபிக்கப்பட்ட ஒரு உண்மையே.

எனக்குள்ள ஒரு சந்தேகம், சிகரெட் தயாரிக்கும் கம்பனிகளை விட்டு விட்டு வாங்குபவர்கள்/புகைப்பவர்கள் மீது சட்டம் போடுவது சரியா? ஏன் அந்தக் கம்பனிகளை மூடும் அல்லது உற்பத்திப் பெறுக்கத்தை தடை செய்யும் சட்டங்களை அரசாங்கம் போடக்கூடாது.அன்புமணி குடிக்கத் தடை விதிக்கும் அதே சமயத்தில் தயாரிப்புக்கும் தடை போட ஏன் முயலக்கூடாது?

சிகரட்டை தயாரிப்பது தப்பில்லை என்றால் கஞ்சா பயிரிடுவது எந்த வகையில் குற்றமாகிறது ?

Unknown said...

// சிகரெட் / பீடி என்பது முழுக்க முழுக்க bio product (இயற்கையிலிருந்து வருவது), இதனால் என்ன பெரிய தீங்கிருக்கமுடியும். பெட்ரோல் டீசல் போன்றவற்றோடு ஒப்பிட்டால் இதில் தீமைக்குறைவாக இருக்கவே (ஒப்பீட்டளவில்) வாய்ப்புண்டு என்றார்.//

கஞ்ச கூட பயோ புரோடேக்ட் தான் அதுக்காக அதையும் சிபாரிசு செய்வீர்கள இதனால் என்ன தீங்கு இருக்க முடியும் என்பதைவிட இதனால் என்ன நன்மை இருக்குன்னு ஒரு உதாரணம் கூட சொல்லமுடியாது.பெட்ரோல் டீசல் போன்றவற்றோடு இதை ஒப்பிட்டு பார்கவே கூடாது.

நானும் புகைப்பவந்தன்:( இருந்தாலும் பொது இடங்களில் புகைப்பது தவறுதான்.

மணிகண்டன் said...

I go with lawyer's comment. Even if passive smoking does not cause cancer, it causes headache ! Non-smokers can vouch for that. Even smokers gets irritated when others smoke standing next to them. I had a friend (who smokes) arguing with the automan when he was smoking on the auto.

And this is not a place to bring in rich/poor thinking (like what kalvettu did). What do you mean by saying that airports have smoking zones ? In india there are probably around 100 airports. Have a guess on number of busstops and bus stands.And also, i have travelled through trichy airport and there are no smoking zones there ! (Does it mean that the people who travel in air from trichy airport are poor ?) So, there is no point in arguing with something that is fictional !

In bruno's post, i also mentioned that they need to think about smokers and provide them smoking zone. As i believed that is the only way where they can implement even a fraction of this law. I believe that jayalalitha brought this ruling sometime in the past. we were forced to come up with other law (by anbumani). In few years time, we would once again come up with another law through another minister !

But to the question on whether it intrudes someone's individual right, i think it does and i don't have any problems with it.

புருனோ Bruno said...

வெண்பூ,

இந்த சட்டம் தேவை என்ற உங்கள் கருத்திற்கு நன்றி.

அடுத்த விஷயம் குறித்து எனது இடுகையில் மறுமொழி 88யை பாருங்கள்

உங்கள் கருத்து சரியே. ஆனால் சட்டத்தின் முக்கிய நோக்கம் என்னவென்றால்

பொது இடங்களில் புகைபிடிப்பது ஒரு அவமான செயல் என்ற எண்ணம் அனைவரிடமும் வர வேண்டும் என்பது தான்.

--
எல்லா சட்டங்களும் எப்படி அமல்படுத்தப்படுமோ இதுவும் அது போல் தான்
--
ஆனால் சுந்தர் போன்றவர்களிடமிருந்து புகையிலை இயற்கை, அதனால் தீங்கில்லை போன்ற வாதங்களை நான் எதிர்ப்பார்க்கவில்லை :( :(


ம்

புருனோ Bruno said...

//பின்னாளில் காரில் இருந்து வரும் புகையினால் உடலுக்கு ஆபத்து என்று பொது இடங்களில் கார் ஓட்ட கூடாது என்று சொல்வார்களா//

சில நாட்களில் (வருடங்களில்) அனைவரும் மின்சார வாகனங்களைத்தான் ஓட்ட வேண்டும் என்பது நிதர்சணம்

--

வாகனப்புகையை விட ஆயிரக்கணக்கான மடங்கு ஆபத்தானது புகையிலை புகை என்பது விஞ்ஞானம்

--

- யெஸ்.பாலபாரதி said...

இதில் எனது கருத்து ஒன்றுதான். பொது இடங்கள் தொடங்கி, சாலையோரத்தில் கட்டப்பட்டிருக்கும் சிறுநீர் கழிவறை போல ( அதுவே ஒழுங்க இல்லைன்னு யாரும் சொல்லக்கூடாது) புகைப்பவர்களுக்குமான தனி இடத்தை அரசு ஏற்பாடு செய்யவேண்டும். அனைத்து அலுவலகங்களிலும் தனி இடம் வைக்க அனுமதி கொடுக்க வேண்டும். இதற்கு மறுக்கும் பட்சத்தில்.. இந்தியாவில் புகையிலையையே அரசு தடுக்க வேண்டும்.

எது வசதியோ.. அதை செய்து தரட்டும்.

Sridhar V said...

//காரில் இருந்து வரும் புகையினால் உடலுக்கு ஆபத்து என்று பொது இடங்களில் கார் ஓட்ட கூடாது என்று சொல்வார்களா//

'Green Air' இயக்கங்கள் எல்லா வகையான நச்சுக் காற்றையும் தடுக்க போராடிக் கொண்டுதான் இருக்கின்றன. கார்கள் பொது இடங்களுக்கான சாதனங்கள். அவற்றுக்கான Emission controls தீர்மானமாகவே வரையறுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை மீறும் வண்டிகள் பொது இடங்கள் மட்டுமல்ல, உங்கள் வீட்டு பாத்ரூமில் கூட ஓட்ட முடியாது.

//அன்புமணி குடிக்கத் தடை விதிக்கும் அதே சமயத்தில் தயாரிப்புக்கும் தடை போட ஏன் முயலக்கூடாது?

சிகரட்டை தயாரிப்பது தப்பில்லை என்றால் கஞ்சா பயிரிடுவது எந்த வகையில் குற்றமாகிறது ?//

சிகரெட் குடிப்பது தடுக்கப் படவில்லை. கஞ்சா என்பது தீவிரமான போதை மருந்து. சிகரெட் அவ்வளவு தீவிரம் இல்லை. நீங்கள் இருமல் வரும்போது குடிக்கும் மருந்தில் ஆல்கஹால் கலந்துதான் இருக்கும். டாஸ்மாக்கில் இருக்கும் சரக்கில் அதே ஆல்கஹால் அளவிற்கு அதிகமாக இருக்கும்.

சிகரெட், பான்பராக், மூக்குப் பொடி, வெற்றிலை பாக்கு சீவல் இவை எல்லாம் லாகிரி வஸ்துகள்தான். மிதமான போதை தருபவை. சுற்று சூழலை மாசாக்காமல் மனிதர்கள் இதை பயன்படுத்தலாம் என்பதுதான் இந்த சட்டத்தின் அடிப்படை.

Sanjai Gandhi said...

நான் உங்கள் கருத்தை முற்றிலும் எதிர்க்கிறேன் சுந்தர்ஜி.. பதிவை படித்துக் கொண்டிருக்கும் போது எனக்கு எற்பட்ட அனைத்து கருத்துக்களையும் டாக்டர் புருனோ சொல்லிவிட்டார்.. ஆகவே அவரது கருத்துக்களை அபப்டியே சிந்தாமல் சிதறாமல் ஆதரிக்கிறேன்..

புதியதாக சொல்ல எதுவும் இல்லை..

பத்மா அர்விந்த் said...

நியுஜெர்சியில் மதுபான கடைகளில் (bar), உணவகங்ளில் த்டைசெய்யப்பட்டுள்லது. இப்போது கார்களில் புகை பிடிப்பதையும், குறிப்பாக குழைந்தைகள் இருக்கும் போது புகைபிடிப்பதையும் தடை செய்ய சட்டங்களை திருத்த ஆவண செய்து வருகிறோம்.
சிகரெட் வரியை மிகவும் அதிகமாக்கியதோடு அதன் வருமானத்தை குழந்தைகளுக்கு புகையால் வரும் உடல் நல தீங்கை சொல்ல பயன் படுத்துகிறோம். ஒரு தனி நபரின் உடல் நலம் அவருடைய கவலை மட்டும் இல்லை. நீங்கள் அதிக நாள் பணிக்கு செல்லாமல் இருந்தால் (உடல் நலம் காரணமாக) குறையும் உற்பத்தி, அவருடைய குடும்ப மன நலன், அதன் காரணமாக அவரின் குழந்தைகள் மனைவி என்று எல்லோருடைய உற்பத்தி திறனும் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை, அவருக்காக அரசி செய்யும் மருத்துவ நிதி ஆகியவற்றை பாதிக்க கூடும். நல்ல ஆரோக்கியமான குடிமகன்களே நாட்டின் பலமாக இருக்க கூடும். மேலும் ஒருவரின் தனிப்பட்ட உடல் மற்றும் மனநலன் பொதுநலத்தையும் பாதிக்க கூடியதே. குழந்தைகலுக்கு வரும் காது வலி (ear infection) அதிக வரவும் ஆஸ்த்மா வரவும் இது காரணம் என்றறியப்பட்டிருக்கிறது.

மக்கள் சட்டம் said...

பெருவாரியான சட்டங்கள் எதேச்சதிகாரமாகத்தான் உருவாக்கப்படுகின்றன என்பது உண்மைதான்.

குறிப்பாக இன்றைய பல சட்டங்கள் வர்த்தக அமைப்புகளின் நலன் சார்ந்தும், அவற்றின் பிரதிநிதிகளாலும் உருவாக்கப்படுகின்றன.

ஆனால் பொது இடத்தில் புகை பிடிப்பதை தடுக்கும் இந்த சட்டம் வர்த்தக அமைப்புகளின் எதிர்ப்புகளை மீறி நிறைவேறியுள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் நிறைவேற்றியுள்ள பல சட்டங்கள் பலவிதங்களிலும் சர்ச்சைக்குரியவை. குறிப்பாக மருத்துவ சேவையை ஏழைகளுக்கு மறுக்கும் விதத்திலும் அவை அமைந்துள்ளன என்ற கருத்துகளும் நிலவுகின்றன. ஆனால் அவை பரவலாக விமர்சிக்கப்படவில்லை.

ஆனால் மிகப்பெரும் வர்த்தக அமைப்புகளின் நலன்களுக்கு எதிரான இந்த சட்டம் பரந்த விவாதங்களுக்கு உள்ளாகி வருகிறது.

ஆண்களில் ஒரு தரப்பினர் மட்டுமே அதிக அளவில் புகை பிடிக்கின்றனர்.
அவர்களிலும் பலர் புகைப்பழக்கத்தை விடவே விரும்புகின்றனர். அவர்களுக்கு இந்த சட்டம் ஒரு நல்வாய்ப்பாகவே அமையும்.

பெண்களிலோ மிகச்சிலரே புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவர்கள். அவர்களிலும் பொது இடத்தில் புகைபிடிக்கும் "தில்" உடையவர்கள் எத்தனை பேர் என்பது கேள்விக்குறியே.

ஆக மொத்தத்தில் நாட்டில் உள்ள மக்கள் தொகையில் சுமார் 75%க்கும் மேல் புகை பிடிக்காதவர்களே.

அவர்களை (புகையிலிருந்து) பாதுகாக்கும் சட்டமே இந்த சட்டம்.

-சுந்தரராஜன்

குழலி / Kuzhali said...

//All I am asking is to ban the 'smoke zone' in airport too or justify that.//
no smoking zone at chennai airport and bangalore airport for last few years, if you go inside the airport you cannot smoke...

About this post... Jyrom sundar again proves that he is an "Arivu Jeevi".... ha ha arivu jeevi nu sonnadhu adhe ketta arthathula dhaan

குழலி / Kuzhali said...

//கட்டுடைக்கறது சரி, அதுக்காக ட்ராபிக் சிக்னலை கட்டுடைத்தால் காலில் கையில் கட்டுப்போடவேண்டியது தான் :)))
//
LOL... ha ha really enjoyed this comment cheers Ravi

புருனோ Bruno said...

//குறிப்பாக இன்றைய பல சட்டங்கள் வர்த்தக அமைப்புகளின் நலன் சார்ந்தும், அவற்றின் பிரதிநிதிகளாலும் உருவாக்கப்படுகின்றன.

ஆனால் பொது இடத்தில் புகை பிடிப்பதை தடுக்கும் இந்த சட்டம் வர்த்தக அமைப்புகளின் எதிர்ப்புகளை மீறி நிறைவேறியுள்ளது. //

மிக அருமையான கருத்து வக்கீல் சார்

//மத்திய சுகாதார அமைச்சகம் நிறைவேற்றியுள்ள பல சட்டங்கள் பலவிதங்களிலும் சர்ச்சைக்குரியவை. குறிப்பாக மருத்துவ சேவையை ஏழைகளுக்கு மறுக்கும் விதத்திலும் அவை அமைந்துள்ளன என்ற கருத்துகளும் நிலவுகின்றன. ஆனால் அவை பரவலாக விமர்சிக்கப்படவில்லை.

ஆனால் மிகப்பெரும் வர்த்தக அமைப்புகளின் நலன்களுக்கு எதிரான இந்த சட்டம் பரந்த விவாதங்களுக்கு உள்ளாகி வருகிறது. //

காரணம் தெரிந்தது தானே !! வாழ்க ஊடகங்கள் !!!

புருனோ Bruno said...

//And this is not a place to bring in rich/poor thinking (like what kalvettu did). What do you mean by saying that airports have smoking zones ? In india there are probably around 100 airports. Have a guess on number of busstops and bus stands.And also, i have travelled through trichy airport and there are no smoking zones there ! (Does it mean that the people who travel in air from trichy airport are poor ?) So, there is no point in arguing with something that is fictional !//

வழி மொழிகிறேன்....

இதற்கு கல்வெட்டு சார் என்ன பதில் சொல்கிறார் என்று அறிய ஆவல்

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

மறுபடி மறுபடி அடுத்தவர் நலத்திற்குத் தீங்கு என்பதையே பலரும் சொல்கிறார்கள். நான் அதைப் பதிவில் மறுக்கவேயில்லை. ஒப்பீட்டளவில் அது குறைவானதே என்பதே என் பார்வை.

யோசித்துப் பார்த்தால் கிட்டத்தட்ட நம் எல்லா செயல்களிலும் அடுத்தவருக்கு ஏதோ ஒருவிதத்தில் பாதிப்பு இருக்கத்தான் செய்கிறது.

(1) ஏர்போர்டில் அனுமதியுண்டு
(2) நட்சத்திர விடுதிகளில் அனுமதியுண்டு (அதற்காகவே 30 அறைகளுக்கு மேல் உள்ள விடுதிகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது)

எய்ட்ஸ் நோய்க் கிருமிகளைக் கிளப்பிவிடவேண்டியது. பிறகு உனக்கு எய்ட்ஸ் வந்துவிடும் என பயமுறுத்த வேண்டியது. அதைப்போன்றே இந்தப் புகையிலை விஷயத்திலும் நடக்கிறது :(

அப்புறம், குழலி, நீங்கள் சொல்லியுள்ளது factually not correct. சென்னை விமான நிலையத்தில் புகைப்பிடிக்க அறை உண்டு. இருக்கும் அறையைப் புகையைப் போட்டு இல்லாமல் ஆக்கியதால், நீங்களே அந்த அறிவு ஜீவிப் பட்டத்தை வைத்துக் கொள்ளுங்கள் :)

இலவசக்கொத்தனார் said...

//அமெரிக்கா வாழ் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது சொன்னார், அங்கு பேருந்து நிலையங்களில் புகைக்க அனுமதியுண்டாம். //

ஆம். அமெரிக்காவில் பொது இடங்களில் புகைபிடிக்க தடை இதுவரை கிடையாது. ஆனால் பொதுவாகவே அமெரிக்கவாழ் மக்கள் பொது இடங்களில் சுற்றுசூழலை மாசுபடுத்துவது இல்லை. கட்டாயமாக Exceptions உண்டு.//


இது முற்றிலும் சரியான விபரம் இல்லை. நியூயார்க், நியூஜெர்ஸி போன்ற மாநிலங்களில் பொது இடங்களில் புகைப்பிடிப்பது தடை செய்யப் பட்டு இருக்கிறது. நன்றாகவே செயல்படுத்தவும் செய்கிறார்கள். மனமிருந்தால் மார்க்கமுண்டு.

மணிகண்டன் said...

***********மறுபடி மறுபடி அடுத்தவர் நலத்திற்குத் தீங்கு என்பதையே பலரும் சொல்கிறார்கள். நான் அதைப் பதிவில் மறுக்கவேயில்லை. ஒப்பீட்டளவில் அது குறைவானதே என்பதே என் பார்வை************

சரி. (நீங்கள் கூறுவது சரியாகவும் இருக்கலாம்.)

********************(1) ஏர்போர்டில் அனுமதியுண்டு
(2) நட்சத்திர விடுதிகளில் அனுமதியுண்டு (அதற்காகவே 30 அறைகளுக்கு மேல் உள்ள விடுதிகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது)************

முதலில் செய்த அதே ஒப்பீட்டை இதில் செய்து பார்க்கலாம் !!!

கல்வெட்டு said...

Kuzali,
I welcome the law and it is important.

But the same time we need to look other side of this too. We can go around and around find the way to argue.

I do remember Chennai airport was declared as 'smoking free zone' well before this law. May be I am wrong. I could not find a quick ref for this.

per following link ....Hyderabad airport has smoking-zone.

FYI:
http://www.hinduonnet.com/2008/03/16/stories/2008031658970600.htm

// The negative pressure system adopted in the exclusive smoking zone of the passenger block merits a special mention. “The old airport also had exclusive area for smoking, but there was every possibility of the smoke escaping via crevices. Here, the possibility is ruled out as the system allows outside air to come in but prevents the other way round..//


Most Important:

Current Law has provision to set-up smoking zone in airport and other places.

My point is not about arguing. Here I am making simple statements. Agree, disagree, research and finding the truth is individual’s choice

Ministry of Health & Family Welfare

http://mohfw.nic.in/smoke%20free%20rules.pdf

http://mohfw.nic.in/STEP%20BY%20STEP.doc

Following information is from above "Ministry of Health & Family Welfare" web site is STEP BY STEP DOC

"Step by Step Guidelines to Become Smoke Free"

* All Hotels, Restaurants and Airport being public place have to be smoke-free. However, owner, proprietor, manager or supervisor or in-charge of affairs of the hotels having 30 or more rooms and restaurants having seating capacity of 30 or more and the manager of the airport may provide a separate smoking area /space as per the following specifications.

* Physically separated and surrounded by full height walls on all four sides.

* Having an entrance with automatically closing doors normally kept in close position.

* Has an airflow system
That is exhausted directly to the outside and not mixed back into the supply to the other parts of the building.
That is fitted with a exhaust ventilation system which is non re-circulating in nature or an air cleaning system or a combination of two, in such a manner that air does not permeate into non smoking areas.

* Has a negative air pressure in comparison with the remainder of the building.

* The smoking area /space shall not be established at the entrance or exit of the hotel, restaurant or airport and shall be distinctly marked as ‘smoking area’ in English and one Indian language as applicable.

* The smoking area/space should be used only for the purpose of smoking and no other service(s) shall be allowed.

* The owner, proprietor, manager or supervisor or in-charge of affairs having 30 or more rooms may designate separate smoking rooms in a manner as provided:

- All rooms designated as smoking rooms shall form a separate section in the same section or wing.

-In case there is more than one floor/wing, these rooms shall be in one floor or wing as the case may be.

-All such rooms shall be distinctly marked as smoking rooms in English or one Indian language.
The smoke from such room shall not be ventilated outside and does not permeate in non smoking areas of the hotel including lobbies and corridors.

குழலி / Kuzhali said...

//அப்புறம், குழலி, நீங்கள் சொல்லியுள்ளது factually not correct. சென்னை விமான நிலையத்தில் புகைப்பிடிக்க அறை உண்டு.//

from 2004 to 2008 Jan I have visitied almost 12+ times, when i WAS a smoker I was searching for the smoking zone inside chennai international airport... I enquired also... I couldn't find... There is a smoking zone in colombu airport but if enter in to that zone sure you no need to smoke you get the effect of smoking 100+ cig.

please verify about the smoking zone in chennai airport again, if they allow I donot mine asking sorry for the wrong info.

//நீங்களே அந்த அறிவு ஜீவிப் பட்டத்தை வைத்துக் கொள்ளுங்கள் :)
//
Hee hee I have to go a long way for this and to reach you guys :-)

Anonymous said...

Here in Pune Airport also there is no smoking Area. :(((((

-Raj.

குழலி / Kuzhali said...

Kalvettu,
I agreed, atleast provide a smoking zone in some of the areas... but definetly not bus stands or bus stops :-) until that let continue not smoking at public places :-)

in singapore an year back you can smoke anywhere in the hocker centers(namma ooru tea kadai maadhiri), they imply a rule to smoking is allowed only in a seperate smoking zone ,few shops there is no smoking zone at all....

உண்மைத்தமிழன் said...

சுந்தர் ஸார்,

மறுபடியும், மறுபடியும் சின்னப் பிள்ளை மாதிரி ஏன் அடம் பிடிக்கிறீங்க..

நோய் வராமல் போனால் சந்தோஷம். வந்துவிட்டால் என்ன செய்வது என்பதனால்தான் இந்தத் தடை.

நோயின் பாதிப்பை அறிய ஒரு நாளாவது சென்னை பொதுமருத்துவமனைக்குச் சென்று கேன்ஸர் நோயாளிகளைப் பாருங்கள்.. அந்தக் கஷ்டம் யாருக்கும்(உங்களுக்கும் சேர்த்துத்தான்) வரக்கூடாது என்பதால்தான் இந்தத் தடை.

இந்தத் தடையால் சிகரெட்டை விட நினைப்பவர்களும் வெளியிடங்களுக்கு வரும்போது கண்டிப்பாக நிறுத்த வேண்டி வந்து சிகரெட்டின் அளவைக் குறைப்பார்களே.. அது சந்தோஷமில்லையா..

நட்சத்திர ஹோட்டல்களிலும், விமான நிலைய ஓய்வு விடுதிகளிலும் அறிவிக்கப்பட்டுள்ள விதிவிலக்கு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை முன் வைத்து எடுக்கப்பட்ட முடிவாக இருக்கும். இதுவும் போகப் போக நீக்கப்படலாம்.

உங்களால் விட முடியாத போதையை அரசு சட்டம் கொண்டு வந்து தடை செய்கிறது. சந்தோஷப்படுவதை விட்டுவிட்டு இப்படி அழிச்சாட்டியம் செய்வது உங்களைப் போன்ற எழுத்தாளர்களுக்கு அழகல்ல.

நல்லது எது, கெட்டது எது என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும். நீங்களே இப்படி பேசினால் எப்படி ஸார்..

ச.சங்கர் said...

///சிகரெட் குடிப்பது தடுக்கப் படவில்லை. கஞ்சா என்பது தீவிரமான போதை மருந்து. சிகரெட் அவ்வளவு தீவிரம் இல்லை. நீங்கள் இருமல் வரும்போது குடிக்கும் மருந்தில் ஆல்கஹால் கலந்துதான் இருக்கும். டாஸ்மாக்கில் இருக்கும் சரக்கில் அதே ஆல்கஹால் அளவிற்கு அதிகமாக இருக்கும்.

சிகரெட், பான்பராக், மூக்குப் பொடி, வெற்றிலை பாக்கு சீவல் இவை எல்லாம் லாகிரி வஸ்துகள்தான். மிதமான போதை தருபவை. சுற்று சூழலை மாசாக்காமல் மனிதர்கள் இதை பயன்படுத்தலாம் என்பதுதான் இந்த சட்டத்தின் அடிப்படை.///

ஏற்றுக் கொள்கிறேன் :)

Anonymous said...

Chennai Airport has a Smoking Zone in the new terminal. There was none in the old terminals. Kuzhali might have seen the old terminals when he was a smoker, new terminal after quitting. (new terminal was functional from 2005)

The Smoking room is behind the coffee shop, between gate 3 & 4

கயல்விழி said...

புகைப்பிடித்தலை எந்த வகையிலும் நியாயப்படுத்தவே முடியாது. இதனால் தான் "Smoking is injurious to health" என்று சிகரெட் பெட்டிகளின் மேலேயே அச்சடித்திருக்கிறார்கள். அதை பார்த்தும் அதை வாங்கி புகைப்பவர்களை என்ன சொல்லுவது? இந்தியா மாதிரி மக்கள் தொகை பெருக்கம் அதிகமான நாட்டில் மூச்சு விடவே சிரமம், அதில் புகை வேறு! அமரிக்காவிலும் பொது இடங்களில் புகைப்பவர்கள் முறைப்புகளுக்கு உள்ளாகிறார்கள். மேலும் நிலப்பரப்பு அதிகமான நாடுகளில் யாராவது புகைக்க ஆரம்பித்தால் எங்கேயாவது ஓடிப்போய் தப்பித்துக்கொள்ளலாம். 10 பேர் உட்கார வேண்டிய இடத்தில் 50 பேர் உட்கார்ந்திருக்கும் நெருக்கடியான சூழலில் ஒருவர் புகைப்பிடித்தால் மற்றவர்கள் எப்படி தப்பிக்க முடியும்?

இந்த சட்டம் உதவுமோ இல்லயோ, புகைப்பவர்களுக்கு நிச்சயம் சங்கடம் ஏற்படுத்தும் என்பது உண்மை. இதை ஒரு திருந்த கிடைத்த வாய்ப்பாக நினைத்து புகைப்பவர்கள் அனைவரும் தயவு செய்து இந்த தீய பழக்கத்தை விட்டு விட வேண்டும். மேலும் புகைக்காததால் சேமிக்கும் பணத்தையும் மற்றும் உடல் நலத்தையும் மனதில் கொள்க!

sundar said...

I undestand that the stand point of this write up is not challenging the ill effects of cigarrette, but as said in the opeing poem- despite many burning issues why the focus is on something that can addressed much latter. Just to argue a person is hospitalised for heart attack or cancer- but he has flu which is contageous. Ofcourse he MAY spread the flu to few.But the treatment shd be given to life threating ones. Doing otherwise is just to shift the attention to mean thing to stir up and get noticed.As Makkal sattam said- *மத்திய சுகாதார அமைச்சகம் நிறைவேற்றியுள்ள பல சட்டங்கள் பலவிதங்களிலும் சர்ச்சைக்குரியவை. குறிப்பாக மருத்துவ சேவையை ஏழைகளுக்கு மறுக்கும் விதத்திலும் அவை அமைந்துள்ளன * These shd be addressed first as it is for most needed.

Also most of the arguments says Cigarrette smoke is injurious.- You get cancer.

Points to be highlighted- There is no real mechanism is found how it is affected as in the case of AIDS or other desease. It is a study (Survey-not a scietific experiement) taken among the smokers and non-smokers and they found smokers are BIT more prone to cancer and other desease. Please advise me if I am wrong- still there is no VALID scientific data on how cancer comes to a person- is it genetical (in few breast cancer yes)or any other things- See poison is fatal- I cannt show even a single person who can be administered poison and not get affected. I can show a thousands of SMOKERS who are healthier than many non smokers- I know a person-who drinks- who chew tobacco and smoke lived 97 years- and I knwo many examples- If it is poisonous why he is not even affected.

So here the point is it is just a scintific survey thhat points to a relationship between smoking and desease and shd not be related to poison. there is no PROVEN expt results instead of study you can show.

Also one more point to note- Drinking is a BAD habbit-who goes to bar. But for who is working in martuary or drainage cleaning that gives them the withstanding power. It is like anesthesia. Similarly smoking. I heared from few rikshaw wala- a beedi is sometime they use to divert from Hunger.

To sum up- This is not burning issue- as said in the poem and is not the best time.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

பிரபு ராஜதுரை, நன்றி.

/போலீஸ் மீது பயமென்றால் வீட்டிற்குள் கதவை சாத்திக் கொண்டு புகை பிடியுங்கள்/

நீங்களே இன்னொருமுறை இதைப் படித்துப் பாருங்கள், எவ்வளவு எதேச்சதிகாரமான வரியென்று!

நன்றி, அமரபாரதி.

கல்வெட்டு, நன்றி. இயன்றால் உங்களது பின்னூட்டங்களைத் தமிழில் தரப் பாருங்கள்.

நன்றி, நாமக்கல் சிபி.

நன்றி, hayat 001.

நன்றி, செல்வன். உங்களுடைய பின்னூட்டத்திற்கும் சுட்டிகளுக்கும். அதில் உள்ள விஷயங்களோடு எனக்கு ஒப்புமையில்லை :)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

டாக்டர், நன்றி. நீங்கள் இச்சட்டம் புகைப்பிடிப்பதை குறைப்பதற்காகவும் / புகையால் வரும் கேடுகளை களைவதற்காகவும் எனச் சொல்கிறீர்கள். நல்லது.

பான் பராக் போன்றவற்றைத் தடை செய்து ஒரு சட்டம் வந்தது, இன்னமும் அது இருக்கிறது. ஆனால் என்ன ஆனது?

இரண்டு வாழைப்பழம் வாங்கித் தின்றதற்குப் பணம் கேட்டால், எளிதாகப் போடுவதற்கு அந்தச் சட்டம் துணைபுரிகிறது! அதுவேதான் இதற்கும் நடக்கப் போகிறது. இல்லையென நீங்கள் நம்பினால்... மகிழ்ச்சியே :)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

அந்த bio product பற்றி எழுதியதை பெட்ரோல் / டீசல் போன்றவற்றுடன் இணைத்தே எழுதியிருந்தேன். அதாவது, இரண்டும் வெளியிடும் புகைக்காக அந்த ஒப்புமை. ஆனால் பாம்பு விஷம், கள்ளிப் பால் போன்றவற்றோடு ஒப்பிட்டால் என்ன செய்ய??? :((

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ஸ்ரீதர் நாராயணன், நன்றி.

/கஞ்சா, அபின், மரிஜுவானா, ஓபியம் போன்ற வஸ்துக்கள் கூடத்தான் நிழலான இடங்களில் கிடைக்கின்றன. அவைகளை குற்றம் செய்கிறோம் என்ற பிரக்ஞையில்லாமல் உபயோக படுத்த முடியுமா என்ன?/

ஆனால் சிகரெட் நேர் எதிர். சட்டப்படி வெளிப்படையாக விற்கிறார்கள். 'நிழலான' இடங்களில் புகைக்கச் சொல்கிறார்கள்!

/பொது இடங்களில் சிறுநீர் கழித்தால் அது நியூசென்ஸ் குற்றம். பொது கழிப்பறைகள் ஏற்படுத்தினாலும் அதை சரிவர பராமரிக்காமல், உபயோகிக்க லாயக்கில்லாததாகத்தான் இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் Smoking cabin எல்லாம் எந்த அளவிற்கு சாத்தியம் என்பது கேள்விக்குறிதான்/

அப்படியெனில், விமான நிலையங்களில் ஏன் புகைக்கவெனத் தனியறை?

இன்னும் அதிகப்படியான அறைகள் கட்டப்படவேண்டும் :)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

செந்தழல் ரவி, நன்றி.

ஆமாம், கட்டுடைக்கறதுன்னா என்ன?? :))

நமக்குத் தெரியாத விஷயத்துல ஏன் தலையப் போட்டு உழப்பிக்கணும்???

விட்டுறலாமே!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, vallankai.

நன்றி, விக்னேஷ்வரன். நீங்கள் என் மகன்மேல் சிகரெட் புகைவிடுவதோ அல்லது நான் உங்கள் மகள்மேல் பெட்ரோல் புகைவிடுவதோ முக்கியமல்ல.. இப்பதிவு வேறு விஷயங்களைப் பற்றிப் பேசுகிறது.

எனது போதைக்கு எப்போதும் அருகிலிருப்பவனல்ல, ஊறுகாய்தான் ஊறுகாய் :)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, buginsoup.

நன்றி, நர்சிம்.

நன்றி, வெண்பூ.

நன்றி, வால்பையன்.

நன்றி, அனானி. பெண்களைக் கூடாவிட்டாலும்தான் யாரும் சாகமாட்டார்கள். செக்ஸையும் தடை செய்துவிடலாமா?? :))

நன்றி, குரு.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, ச சங்கர். ஆம், புகைப்பவனே.. நிறைய இல்லீங்க.. ஒரு நாளைக்கு 15தான் :)

நன்றி, கார்த்திக். நான் சிகரெட்டையோ அல்லது கஞ்சாவையோ சிபாரிசு செய்யவில்லை.. ஆனால் அதனால் வெளிவரும் புகை, பெட்ரோல்/ டீசல் புகையைவிட ஆபத்து குறைவாயிருக்குமென்பதே என் எண்ணம். அதைத்தான் சொல்லியிருந்தேன்.

நன்றி, மணிகண்டன். ஏழை / பணக்கார வித்தியாசத்தை நிச்சயம் இவ்விஷயத்திலும் கொண்டுதான் வந்தாக வேண்டும்!

நன்றி, பாலபாரதி.

பொடியன், நன்றி. மீண்டுமொருமுறை படித்துப் பாருங்கள் :)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, பத்மா அரவிந்த்.

நன்றி, சுந்தரராஜன். இது புகைப்பிடிப்பதிலிருந்து பாதுகாக்கும் சட்டமெல்லாம் ஒன்றுமில்லை. டாக்டருக்கு சொல்லியிருக்கும் பதிலைப் பாருங்கள்.

குழலி நன்றி. நான் smoking zone இருப்பதாகச் சொன்னது domestic terminalல். international terminalல் இருக்கிறதா தெரியவில்லை. நானெல்லாம் லோக்கல் ஆள்தானே :)

நன்றி, இலவசக் கொத்தனார்.

நன்றி, மணிகண்டன்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

குழலி, அப்படியா சொல்கிறீர்கள். நான்தான் உங்களை நெருங்க கடுமையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென நினைத்தேன்.. எதற்கும் அன்புமணியைக் கேட்டுக் கொள்ளட்டுமா? :)

நன்றி, உண்மைத் தமிழன். நல்லது / கெட்டது என்ற இருமைகளுக்குளே சிக்காத விஷயமிது என நினைக்கிறேன்.

நன்றி, அனானி.

நன்றி, கயல்விழி. யாரும் யாருக்கும் நியாயப்படுத்தத் தேவையில்லை இங்கு என நினைக்கிறேன்.

நன்றி, சுந்தர்.

ரங்குடு said...

பொது இடத்தில் புகைப் பிடிப்பதைத் தடை செய்யும் சட்டத்தை
வரவேற்கிறேன். அது போலவே:
பொது இடத்தில் புகையைக் கக்கும் அரசு பஸ்களைத் தடை செய்க.
பொது இடத்தில் இருமி, தும்மி கிருமிகளைப் பரப்பும் நோயாளிகளைத்
தடை செய்க.
பொது இடத்தில் குளிக்காமலும், தோய்த்த ஆடைகளை அணியாமல்
வரும் அழுக்கு மக்களைத் தடை செய்க.
கண்ட இடத்தில் கண்டதைச் சாப்பிட்டு விட்டு கு விடும் மக்களைத் தடை
செய்க.
கூவம் நதியை 30 வருசமாகச் சுத்தம் செய்கிறேன் என்று இன்றும் அதே
பொலிவுடன் விளங்கச் செய்யும் தி.மு.க அரசைத்தடை செய்க.
இப்படி பல விஷயங்கள் இருக்கும் வரை, புகை பிடிப்பதால் ஒன்றும்
குறைந்து விடப் போவதில்லை.

புருனோ Bruno said...

//smokers and they found smokers are BIT more prone to cancer and other desease.//

மன்னிக்கவும்

புகைப்பதினால் வரும் தீமைகள் குறித்த ஆய்வுகள் பல இருக்கின்றன.

BIT more prone என்ற சொல் முற்றிலும் தவறானது.

இது போன்ற ஆதாரமில்லாத முழுப்பொய்களை எழுத வேண்டாம்.

என் பதிவில் நான் விளக்கியுள்ளேன்

//Please advise me if I am wrong- still there is no VALID scientific data on how cancer comes to a person-//

You are TOTALLY WRONG. SMOKING Causes Cancer

There is valid Scientific Evidence regarding how smoking causes Cancer. All of Bradford Hill's Criteria are met in this causation theory.

//is it genetical (in few breast cancer yes)or any other things- See poison is fatal- I cannt show even a single person who can be administered poison and not get affected. I can show a thousands of SMOKERS who are healthier than many non smokers- I know a person-who drinks- who chew tobacco and smoke lived 97 years- and I knwo many examples- If it is poisonous why he is not even affected.//

அவர் பாதிக்கப்படவில்லை என்று யார் கூறியது ??

இந்தியாவில் புகைபிடிக்கும் 20 லட்சம் பேர்களில் பாதிப்படையாத 1000 பேர் என்பது 0.05 சதம் என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்

போபாலில் கூட விஷவாயு பரவிய பின்னர் பலர் உயிருடன் இருந்தனர். அது விஷவாயு இல்லையா ??

விஞ்ஞானத்தில் ED 50, LD 50 என்று சில சித்தாந்தங்கள் இருக்கின்றன.

//So here the point is it is just a scintific survey thhat points to a relationship between smoking and desease and shd not be related to poison.//

மன்னிக்க வேண்டும். கடந்த 45 ஆண்டுகளாக இது குறித்து ஆயிரக்கணக்கான ஆய்வு முடிவுகள் வந்துள்ளன.

// there is no PROVEN expt results instead of study you can show.//

என் பதிவில் நான் அளித்த ஆய்வு நடத்தப்பட்டு 40 வருடங்களாகி விட்டது. அதன் பின் பல ஆய்வுகள் வந்து விட்டன.

என்னைத்தவிர பலரும் கூட பல முடிவுகளை அளித்துள்ளனர்.

எனவே தவறான் செய்திகளை மீண்டும் மீண்டும் பரப்பாதீர்கள்

புருனோ Bruno said...

//Also one more point to note- Drinking is a BAD habbit-who goes to bar. But for who is working in martuary or drainage cleaning that gives them the withstanding power. It is like anesthesia.//

அளவுக்கு அதிகமான மயக்க மருந்து மரணத்தை ஏற்படுத்தும் !!

// Similarly smoking. I heared from few rikshaw wala- a beedi is sometime they use to divert from Hunger. //

அதற்கு பதில் வயிற்றில் ஈரத்துணியை கட்டியவர்களை உங்களுக்கு தெரியாதா

புருனோ Bruno said...

//ஆனால் சிகரெட் நேர் எதிர். சட்டப்படி வெளிப்படையாக விற்கிறார்கள். 'நிழலான' இடங்களில் புகைக்கச் சொல்கிறார்கள்!//

உங்கள் வீடு எனபதை நிழலான இடம் என்று கூறுவது சரியா ?? :)

புருனோ Bruno said...

//ஆனால் அதனால் வெளிவரும் புகை, பெட்ரோல்/ டீசல் புகையைவிட ஆபத்து குறைவாயிருக்குமென்பதே என் எண்ணம். //

வெண்குழல் வத்தி புகையானது பெட்ரோல் புகையை விட பல மடங்கு மோசமானது

Anonymous said...

சுந்தர், அருமையான பதிவு.

இங்கு துள்ளிக்குதிக்கும் அன்னைவரும் ஒன்றை புரிந்து தெரிந்துக்கொள்ளூங்கள் இது புகை பிடிப்பதற்கான ஆதரவு பதிவு அல்ல, ஏதேச்சதிகாத்திற்காண எதிர்ப்பு (சரிதான சுந்தர்?). இங்கு சரி செய்வதற்க்கான ஏராளம் வரிசையில் உண்டு, ஆவார்டு ஆசையில் தனி மனித உரிமையில் சட்டம் என்பதன் ஆரம்பப்புள்ளி இது. நாளையே இந்திய மக்கள் தொகை மிக அதிகம், எனவே யாரும் குழந்தை பெறக்கூடாது என்று சட்டம் போட்டால்? இந்தியாவில் படித்தவர்கள் வெளி நாட்டில் வேலை செய்யக்கூடாது என்று சட்டம் போட்டால்? இந்த சட்டங்களுகான நியாயங்கள் கூடத்தான் உண்டு...


சரி சுந்தர். நீங்க கொஞ்சம் (மரியாதையாக) வாயை மூடிக்கொண்டு அதீதனை பேசச்சொல்லவும்.


நன்றி.
பாலா

Ken said...

1.எவை பொது இடங்கள் பொது இடங்கள் அல்ல என்பதை தெளிவாக வரையறுக்க வேண்டும்
2. மேல்தட்டு மக்களை பாதுகாக்கிற முறையிலான அரசு பீடி பிடிக்கிறவனுக்கும் எதும் மாற்று ஏற்பாடு பண்ணனும் கண்டிப்பாய்
3.இது இன்னொரு ஏதேச்சதிகார சட்டமாக மாறிவிடுகிற ஆபத்தை உணரனும்
4.புகைபிடிக்கிறவன் பொது இடமா இல்லையான்னு யோசிச்சே அதுக்கு இன்னொரு பாக்கெட் வாங்கிற சூழலை கொண்டு வந்திட்டாங்க
5. சிகரெட் பொது இடத்தில் பிடித்தல் பண நலத்திற்கு தீங்கானது

அவ்ளோதான் வாழ்க ஜனநாயகம் வாழ்க சட்டங்கள்

லக்கிலுக் said...

சட்டம் ஏதேச்சதிகாரமான முறையில் போடப்பட்டிருப்பதை தான் நீங்கள் கண்டிக்கிறீர்கள் என்பதாக புரிந்துகொள்கிறேன் ஜ்யோவ்ராம். நிஜாம் ஆட்சிக்காலத்தில் பெண்கள் வயதுக்கு வருவதற்கெல்லாம் சட்டம் போட்டார்களாம். அது நினைவுக்கு வருகிறது :-)

இச்சட்டம் இந்தியர்கள் என சொல்லப்படுபவர்கள் எல்லோருக்கும் சமமானதாக இருக்கவேண்டும் என்பது தான் நம் கோரிக்கை. இச்சட்டம் மூலமாக ஏழை வர்க்கமும், நடுத்தர வர்க்கமும் மட்டுமே பாதிப்படையும்.

நாமக்கல் சிபி said...

//இச்சட்டம் இந்தியர்கள் என சொல்லப்படுபவர்கள் எல்லோருக்கும் சமமானதாக இருக்கவேண்டும் என்பது தான் நம் கோரிக்கை. இச்சட்டம் மூலமாக ஏழை வர்க்கமும், நடுத்தர வர்க்கமும் மட்டுமே பாதிப்படையும்//

இதை நான் வழிமொழிகிறேன்!

சுந்தரராஜன் said...

//லக்கிலுக் said...

சட்டம் ஏதேச்சதிகாரமான முறையில் போடப்பட்டிருப்பதை தான் நீங்கள் கண்டிக்கிறீர்கள் என்பதாக புரிந்துகொள்கிறேன் ஜ்யோவ்ராம். நிஜாம் ஆட்சிக்காலத்தில் பெண்கள் வயதுக்கு வருவதற்கெல்லாம் சட்டம் போட்டார்களாம். அது நினைவுக்கு வருகிறது :-)

இச்சட்டம் இந்தியர்கள் என சொல்லப்படுபவர்கள் எல்லோருக்கும் சமமானதாக இருக்கவேண்டும் என்பது தான் நம் கோரிக்கை. இச்சட்டம் மூலமாக ஏழை வர்க்கமும், நடுத்தர வர்க்கமும் மட்டுமே பாதிப்படையும்.//

இந்தியாவில் உள்ள ஏறத்தாழ அனைத்து சட்டங்களுமே பணக்காரர்களுக்கு, பணக்காரர்களால் உருவாக்கப்பட்டதுதான்.

Anonymous said...

""குழலி / Kuzhali said...

About this post... Jyrom sundar again proves that he is an "Arivu Jeevi".... ha ha arivu jeevi nu sonnadhu adhe ketta arthathula dhaan""


கடைசியா வந்துட்டாருய்யா நம்ம அறிவுஜீவி பிராண்டு கொடுக்குற குழலி.

இதே சட்டத்தை டி.ஆர்.பாலுவோ, சிவராஜ் பாட்டிலோ கொண்டு வந்திருந்தா நம்ம குழலி எப்படியெல்லாம் குதிச்சிருப்பாருன்னு 2004லேருந்து பார்த்துக்கினு தானே இருக்கோம்?

குழலி அப்போ இப்படி சொல்லியிருப்பாரு. “உழைக்கும் வர்க்கத்தின் உரிமையை பறிப்பவன் எவனாக இருந்தாலும் மரத்தை வெட்டுவதை போல அவனது தலையை வெட்டுவோம்”

பினாத்தல் சுரேஷ் said...

கென்னுக்கு ரிப்பீட் போட்டுக்கிறேன்.

மணிகண்டன் said...

**************** இச்சட்டம் இந்தியர்கள் என சொல்லப்படுபவர்கள் எல்லோருக்கும் சமமானதாக இருக்கவேண்டும் என்பது தான் நம் கோரிக்கை. இச்சட்டம் மூலமாக ஏழை வர்க்கமும், நடுத்தர வர்க்கமும் மட்டுமே பாதிப்படையும் **************

ஆனாலும் உங்களோட சமுதாய பொறுப்புணர்வு புல்லரிக்க வைக்குது லக்கி !

ஆனால் உங்கள் கருத்தை வழிமொழிகிறேன் ஒரே ஒரு சிறு மாற்றத்தோடு.

(பணக்காரனான நான் புகை பிடிப்பவர்களால் பாதிக்கபடுவதால். )

இச்சட்டம் இந்தியர்கள் என சொல்லப்படுபவர்கள் எல்லோருக்கும் சமமானதாக இருக்கவேண்டும் என்பது தான் நம் கோரிக்கை. இச்சட்டம் மூலமாக ஏழை வர்க்கமும், நடுத்தர வர்க்கமும் மட்டுமே பயனடையும்.

குழலி / Kuzhali said...

//இதே சட்டத்தை டி.ஆர்.பாலுவோ, சிவராஜ் பாட்டிலோ கொண்டு வந்திருந்தா நம்ம குழலி எப்படியெல்லாம் குதிச்சிருப்பாருன்னு 2004லேருந்து பார்த்துக்கினு தானே இருக்கோம்?
//

Ha Ha maamu super...

enniyum oru 4 varusama gavanikkara pola... thanks for that...

அருண் நிஷோர் பாஸ்கரன் said...

சுந்தர்...

புகை பிடிக்கும் அனுமதி உண்டு என்பதற்காக நான் 5 star ஹோட்டல் செல்லாமல் இருக்கலாம், ஆனால் என் மகன் படிக்கும் பள்ளிக்கு அருகே உள்ள பெட்டி கடையில் புகை பிடிக்கிறார்கள் என எனது மகனை பள்ளிக்கு அனுப்பாமல் இருக்க முடியுமா?

Sridhar V said...

//ஆனால் சிகரெட் நேர் எதிர். சட்டப்படி வெளிப்படையாக விற்கிறார்கள். 'நிழலான' இடங்களில் புகைக்கச் சொல்கிறார்கள்!//

தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள். பொது இடங்களில் சிகரெட் பிடித்து சுற்று சூழலை மாசு படுத்தாதீர்கள் என்று சொல்கிறீர்கள்.

//இச்சட்டம் மூலமாக ஏழை வர்க்கமும், நடுத்தர வர்க்கமும் மட்டுமே பாதிப்படையும்.//

சத்தியமாக லாஜிக் புரியவில்லை. ஏழை / பணக்காரர்கள் எல்லாரும் அவரவர் வீடுகளிலோ இல்லை பெரும் திறந்த வெளியிலோ தாராளமாக புகைத்து புகைத்து சந்தோஷம் அடையலாமே. அது ஏன் பஸ்ஸ்டாப்பிலோ, பஸ்ஸுக்குள்ளேயோ பக்கத்தில் 4 பேரின் மூக்குமேல் புகை விடவேண்டும்? அட போங்கப்பா....

லக்கிலுக் said...

//சத்தியமாக லாஜிக் புரியவில்லை. ஏழை / பணக்காரர்கள் எல்லாரும் அவரவர் வீடுகளிலோ இல்லை பெரும் திறந்த வெளியிலோ தாராளமாக புகைத்து புகைத்து சந்தோஷம் அடையலாமே. அது ஏன் பஸ்ஸ்டாப்பிலோ, பஸ்ஸுக்குள்ளேயோ பக்கத்தில் 4 பேரின் மூக்குமேல் புகை விடவேண்டும்? அட போங்கப்பா....//

என்ன கொடுமை ஸ்ரீதர் இது?

மனைவியோடு பாலுறவுக்கு கூட வழியில்லாத ஒண்டுக்குடித்தன வாசிக்கு பணக்காரர்களுக்கு இருக்கும் ப்ரைவஸி கிடைக்குமா என்ன?

பணக்காரர்கள் காரில் கூட புகை விட்டுச் செல்ல முடியும். தெருவோரத்தில் பஞ்சர் ஒட்டுபவன்?

அடிக்கடி பஞ்சர் ஒட்டுபவனைப் பற்றி பதிவிலும், பின்னூட்டத்திலும் சொல்லுவதற்கு காரணமுண்டு. எத்திராஜ் கல்லூரி வாசலில் பஞ்சர் ஒட்டும் தோழர் ஒருவரின் புலம்பலை நானும், தோழர் அதிஷாவும் நேரிடையாக கேட்டிருந்தோம்.

Unknown said...

சுந்தர்,

பேஸிவ் ஸ்மோக்கிங்கால் வரும் மரணங்களுக்கு இந்த சட்டத்தை எதிர்ப்பவர்கள் யாரும் எந்த பதிலையும் கூறவில்லை.அந்த பாயிண்ட் அப்படியே இருக்கிறது.

சரி அடுத்த மேட்டருக்கு போவோம்.

விமான நிலையங்களில் புகை பிடிக்குமிடம் இருக்கிறது,நட்சத்திர விடுதிகளில் இருக்கிறது.பஸ் ஸ்டாண்டுகளில் இல்லை..

இதுவா பிரச்சனை?

இதற்கு என்ன தீர்வு?

ஏர்போர்ட்டில் இருக்கும் புகைபிடிக்கும் ரூமை இடிப்பதா அல்லது பஸ் ஸ்டாண்டில் புகைபிடிக்கும் ரூமை கட்டுவதா?

முன்னது தான் தீர்வென்றால் அது நகைப்புக்குரியது.பின்னது தான் தீர்வென்றால் அது நடக்காதது.

ஏழை நாட்டில் பஸ்ஸ்டாண்டுகளில்,ஊர்களில் பொதுகழிப்பிடம் கட்ட/நிர்வாகம் செய்ய கூட காசின்றி மாநகராட்சிகள் இருக்கும் நிலையில் பஸ் ஸ்டாண்ட்,பஸ் ஸ்டாண்டாக போயி ஸ்மோக்கிங் ரூம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்ய இப்போதைக்கு முடியாது.ஆயிரக்கணக்கான மக்கள் வந்துபோகும் பஸ் ஸ்டாண்டில் ஸ்மோக்கிங் ரூம் கட்டுவதென்றால் கல்யாண மண்டபம் சைஸுக்கு தான் கட்டவேண்டும்..இது இப்போதைக்கு நடக்கும் விஷயமல்ல.

இதே ரேஞ்சில் போனால் ஏர்போர்ட்டில் மட்டும் எலிவேட்டர் இருக்கிறது.ஏசி இருக்கிறது.வெயிட்டிங் ரூமில் டிவி இருக்கிறது..பஸ் ஸ்டாண்டில் அதெல்லாம் வேண்டும் அல்லது ஏர்போர்ட்டில் இருக்கும் இந்த வசதிகளை எல்லாம் எடு என்றும் கேட்கலாம். ஏற்காவிட்டால் 'சமத்துவ மறுப்பு,வர்க்க பேதம்,பூர்ஷ்வாதனம்' என்றும் முழங்கலாம்.

எதேச்சதிகாரம் என்ற குற்றசாட்டு.

இம்மாதிரி பெரிய, பெரிய வார்த்தைகளை எல்லாம் இம்மாதிரி பத்து பைசா பெறாத பீடி,சிகரெட் விஷயங்களுக்கு இழுத்துவந்தால் அப்புறம் புலி வருது,புலி வருது கதை மாதிரி பெரிய விஷயங்களுக்கு அதை பயன்படுத்தும்போது அந்த வார்த்தையின் வீரியம் நீர்த்துபோகும் அபாயம் உண்டு.

சிகரெட் என்பது அடுத்தவன் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் விஷம்.அடுத்தவனை பற்றி கவலைப்படாமல் எவன் எக்கேடு கெட்டா என்ன? எனக்கு ஐந்து நிமிஷ இழுப்பு தான் முக்கியம் என்பது சரியல்ல.அதை சட்டம் போட்டு தடுப்பதும் எதேச்சதிகாரமல்ல.

மருத்துவத்துக்கு லட்சக்கணக்கில் செலவு செய்ய முடியாத ஏழை சனத்துக்கு ஆஸ்த்மா,கேன்சரை வரவழைக்கும் உரிமை யாருக்கும் கிடையாது.

புகை உடலுக்கு பகை.

நன்றி.

Anonymous said...

///இந்தியாவில் புகையிலையையே அரசு தடுக்க வேண்டும்.

எது வசதியோ.. அதை செய்து தரட்டும்.///

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் என

பாலா எப்படி அழுகாச்சியோட அடம்புடிக்கிறார் பாருங்க ?

இந்தியா முழுமைக்கும் புகையிலை விக்கலைன்னா தான் பாலா சிகரெட்டை உடுவாரா ?

ஏன் பா.க.ச எல்லாம் ஏற்படுத்தப்பட்டது என்பது இப்போது தெரிந்திருக்குமே ?

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ரெங்குடு, நன்றி.

டாக்டர், நன்றி. மறைந்திருந்து பிடிக்கச் சொல்வதையே அப்படிச் சொல்லியிருந்தேன் :)

பாலா, நன்றி. அதீதன் விடுமுறையில் போயிருக்கிறானாம் :)

கென், நன்றி. நானும் சொல்லிக்கொள்கிறேன் : வாழ்க ஜனநாயகம்!

லக்கி லுக், நன்றி. அதே.

நன்றி, நாமக்கல் சிபி.

நன்றி, சுந்தர ராஜன்.

நன்றி, இம்சை அரசன் இரண்டாவது ராமதாஸ் (எவ்வளவு பெரிய பேரு!)

நன்றி, பினாத்தல் சுரேஷ்.

நன்றி, மணிகண்டன்.

நன்றி, குழலி. நீங்கதான் பெரிய ஆளாச்சே. கவனிக்காம இருப்பாங்களா :)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, அருண் நிஷோர் பாஸ்கரன். வீட்டில் பிடித்தாலும் சிறுவர்களுக்குப் பாதிப்புதானே :(

நன்றி, ஸ்ரீதர் நாராயணன். லக்கியின் பதிலைப் பாருங்க :)

நன்றி, லக்கி லுக்.

நன்றி, செல்வன். பேஸிவ் ஸ்மோக்கிங் நல்லது எனச் சொல்லவில்லை நான். ஒப்பீட்டளவில் அதைவிடப் பெரிய விஷயங்கள் இரும்போது.. என்பதே என் பார்வை.

எலவேட்டர் போன்றவற்றோடு சிகரெட்டை ஒப்பிடுவது சரியாக வராது என நினைக்கிறேன். எலவேட்டர் பேருந்து & விமான நிலையங்கள் இரண்டிலும் இருந்து பிறகு பேருந்து நிலையத்திலிருந்து மட்டும் நீக்கினால் ஆட்சேபிக்கவே செய்யவேண்டும். இதை எதேச்சதிகாரம் என்று உணர்ந்தே உபயோகித்தேன்.

நீங்கள் ஊதிப் பெரிதாக்கி அடுத்தவன் உயிரைப் பறிக்கும் விஷமென்றெல்லாம் சொல்கிறீர்கள். அவ்வளவு பெரிய தீங்கெனில் ஏன் சட்டப்பூர்வமாக விற்கவேண்டும் :(

நான் சிகரெட் பிடிப்பதை ஆதரிக்கவோ அல்லது எதிர்க்கவோ இல்லை.. அது தனிப்பட்ட நபர்களின் முடிவாகவே இருக்கட்டும் :)

நன்றி, செந்தழல் ரவி.

ees said...

i never expect such a "half-boil"[ mean to say it is one-sides] article from you Mr.Sundar

ees said...

Publish this one.. small mistake in the previous one..

i never expect such a "half-boil"[ mean to say it is one-sided] article from you Mr.Sundar

ச.சங்கர் said...

//நன்றி, ச சங்கர். ஆம், புகைப்பவனே.. நிறைய இல்லீங்க.. ஒரு நாளைக்கு 15தான் :)///

அப்ப கண்டிப்பா ஹார்லிக்ஸ் குடியுங்க. "குடும்ப ஆரோக்கியத்தை இப்படி விளையாட்டா எடுத்துக்கலாமா :)"

அருண் நிஷோர் பாஸ்கரன் said...

நீங்கள் உங்கள் வீட்டில் உங்கள் குழ்ந்தை முகத்தில் புகையை விடுங்கள்...அது உங்கள் சுதந்திரம்...ஆனால் என் குழ்ந்தை முகத்தில் புகையை விடும் உங்கள் செயல் மிகவும் கண்டிக்கதக்கது...அதை தான் இந்த சட்டம் தடை செய்கிறது...யார் பள்ளிளியின் முன்னால் புகை பிடிக்கிறார்கள் என கேட்காதீர்கள்...நான் படித்த பள்ளியின் முன் உள்ள பெட்டி கடைகளில் தம் அடிபதினால் நான் பல தடவை தலைவலியுடன் வீடு திரும்பி இருக்கிறேன்..இன்றும் ஏன் அலுவலக சகாக்கள் பலர் பள்ளி முன்னால் தம் அடிப்பதை பார்த்து இருக்கிறேன்...என்னை கேட்டால் இந்த சட்டத்தை மேலும் கடுமை ஆக்க வேண்டும்

நாமக்கல் சிபி said...

/என்னை கேட்டால் இந்த சட்டத்தை மேலும் கடுமை ஆக்க வேண்டும்
//

அதைத்தானே எல்லோரும் சொல்கிறோம்! ஆனா டாக்டரால அதைச் செய்ய முடியாதே!

ஆடுமாடு said...

நாலு நாளு ஊர்ல இல்லை பாஸு.

பின்னுட்டத்துல பின்னிட்டாய்ங்க...

Unknown said...

//பேஸிவ் ஸ்மோக்கிங் நல்லது எனச் சொல்லவில்லை நான். ஒப்பீட்டளவில் அதைவிடப் பெரிய விஷயங்கள் இரும்போது.. என்பதே என் பார்வை. //

சுந்தர்,

அதை விட பெரிய விஷயங்களை பட்டியலிட்டு சட்டம் போட்டு தடுங்கள் என்று சொல்லுங்கள்.ஏற்கலாம்."அதை தடுத்துவிட்டு, இதை தடு" என்பது சரியாக படவில்லை. சுதந்திரம் வாங்கி அறுபது வருடம் கழித்து இந்த சட்டத்தை போட்டதே லேட்.

பேஸிவ் ஸ்மோக்கிங் சட்டப்படி தடுக்கப்பட வேண்டிய செயல்.அதனால் பாதிப்படைகிறவர்கள் பெரும்பாலும் ஏழைகள்,பெண்கள்,குழந்தைகள் தான்..மக்கள் நலன் பேணும் எந்த அரசும் புகைப்பவர்களின் அடிக்ஷனுக்காக பொதுமக்களின் உடல்நலத்தை பணயம் வைக்க முடியாது.

//எலவேட்டர் போன்றவற்றோடு சிகரெட்டை ஒப்பிடுவது சரியாக வராது என நினைக்கிறேன். எலவேட்டர் பேருந்து & விமான நிலையங்கள் இரண்டிலும் இருந்து பிறகு பேருந்து நிலையத்திலிருந்து மட்டும் நீக்கினால் ஆட்சேபிக்கவே செய்யவேண்டும். இதை எதேச்சதிகாரம் என்று உணர்ந்தே உபயோகித்தேன்.//

எனக்கு தெரிந்து எந்த பேருந்து நிலையத்திலும் புகைபிடிக்கும் அறைகள் இருந்தது கிடையாது.பேருந்து நிலையத்தில் அவற்றை கட்டுவதை பற்றி எனக்கு ஒன்றும் ஆட்சேபமில்லை.ஆனால் தேசம் முழுக்க இருக்கும் கோடிக்கணக்கான பஸ்ஸ்டாண்டுகளில் புகைக்கும் அறையை கட்டிவிட்டு சட்டத்தை போடு என்று கூறுவது சரிவராது.பொதுமக்கள் காசை புகைப்பவர்ஜளின் அடிக்ஷனுக்காக வீனடிக்கவும் முடியாது.சிகரெட் மேல் அதிக வரி போட்டு அந்த வருமானத்தை வைத்து வேண்டுமானால் ஸ்மோக்கிங் ரூம்களை கட்டலாம்:-)

(ஏர்போர்ட் நிர்வாகம் செய்யப்படுவது பயனாளிகள் தரும் காசின் மூலம் தான்.பொதுமக்கள் வரிப்பணத்தை வைத்து அல்ல)

விமான நிலையங்களில் இருக்கும் வசதிகளை (ஏசி,எலெவேட்டர், டிவி, சொகுசு நாற்காலி, வெயிட்டிங் அறை) பேருந்து நிலையத்தில் ஏற்படுத்த சொல்வது நடைமுறை ரீதியில் ஒத்துவராது.ஏர்போர்ட், நட்சத்திர ஓட்டல் போன்றவை வாடிக்கையாளர் தரும் காசில் இயங்கும் லாபம் பெறும் வணிக நிறுவனங்கள்.பஸ் நிலையங்களும், பஸ் கம்பனிகளும் நஷ்டத்தில் மட்டுமே ஓடும் மக்கள் வரிப்பணத்தால் இயங்கும் லாபநோக்கமற்ற நிறுவனங்கள்.அதனால் ஏர்போர்ட்டில் இருக்கும் வசதிகளை பஸ் நிலையத்தில் ஏற்படுத்த கூற முடியாது.

//நீங்கள் ஊதிப் பெரிதாக்கி அடுத்தவன் உயிரைப் பறிக்கும் விஷமென்றெல்லாம் சொல்கிறீர்கள். அவ்வளவு பெரிய தீங்கெனில் ஏன் சட்டப்பூர்வமாக விற்கவேண்டும் :( //


தடுத்தால் கள்ள மார்க்கட்டில் புகையிலை அமோகமாக விற்கும் என்ற காரணமாக இருக்கலாம்.புகையிலையை உலகமெங்கும் தடுத்தால் நான் கண்டிப்பாக வரவேற்பேன்.அந்த நன்னாள் வரும்வரை இம்மாதிரி கட்டுப்பாடுகள் இருப்பது நல்லதே.

Joe said...

Hi Sundar,
I agree with your view that India is turning into a dictatorial nation (was there any democracy since independence, is a different question!)

But as a person who had smoked for 5 years and suffered from sinus thanks to that, I would really welcome this law.
It could also be due to pollen grains & other pollutants in Bangalore)

In Japan, there are seperate areas for smokers in railway stations. The smoking room is more of a punishment than pleasure for even those who enjoy smoking. I am not sure about others, but I felt like my heart was choking as I had smoked a dozen Malboro red within 10 minutes, after smoking 1 in a closed room in an airport, I guess the exhaust machines don't suck the smoke too fast.

It's proven that passive smoking also kills. So I would really appreciate if someone standing/sitting next to me would be considerate not to smoke. It's your choice/right to smoke but you have no right to blow it on me, if I don't like it or am allergic to it.

Ironically, I still see a lot of people smoking near the tea shops close to IT companies even after this law was implemented on October 2nd 2008. Perhaps the cops are not willing to travel to the villages where these companies are located and fine these guys. LOL

Think about the cinema halls in our countries, weren't the canteens so smoke filled that those going with their families, never wanted to bring their women/children to buy some snacks? It was so bloody suffocating out there! Isn't it quite nice now, that in most canteens in the cinemas are smoke free!

Anyway, in this country, this law would be nothing more than a farce!

P.S: Sorry, I could not find the time to use transliterator!

நாமக்கல் சிபி said...

//ஏர்போர்ட், நட்சத்திர ஓட்டல் போன்றவை வாடிக்கையாளர் தரும் காசில் இயங்கும் லாபம் பெறும் வணிக நிறுவனங்கள்.//

அப்போ பார் எல்லாம் பொது மக்கள் செலுத்தும் வரிப் பணத்தில் நடத்தப் படுகின்றனவா?

இம்முறை பார்களிலும் புகை பிடிக்கத் தடை போடப் பட்டிருக்கிறதே!

பார்களும் (டாஸ்மார்க் பார்கள் அல்ல) தனியார் உடைமைதானே! அவைகளும் வாடிக்கையாளர்கள் கொடுக்கும்பணத்தில்தானே இயங்குகின்றன! அல்லது அரசு ஏதேனும் மானியம் வழங்குகிறதா என்று எனக்குத் தெரியவில்லை! தவறு எனில் திருத்துங்கள்!

Unknown said...

சிபி,

ஏர்போர்ட்டிலும் பொதுமக்கள் கூடும் இடத்தில் புகைபிடிக்க முடியாது.தனியாக அதற்கென இருக்கும் ரூமில் அமர்ந்து தான் புகைக்க முடியும்.பாரிலும் அதேபோல் தனிரூமில் புகைக்கலாம்.ஹாலில் புகைக்க முடியாது.