தரையில் படுத்து
வெளிச்சம் தழுவிய
சுவரைப் பார்த்தேன்
கையைக் குவித்துக் கொண்டு -
அதன் ஊடே
சிறிதாய்ச் சுவர்
மட்டுமல்லாது
சின்னச் சின்ன மேடுபள்ளம்
சுவரெங்கும்
கையை எடுத்துவிட்டு
வழக்கம்போல் சொல்லிக் கொண்டேன்
பார்வைக்கு வெளியேயும்
காட்சிகள் உண்டு
(கவிதா சரண் ஜூன் 1992ல் வெளியானது)
கார்காலக் குறிப்புகள் - 60
6 hours ago
17 comments:
1992?
GREAT!
வாவ்..ஜ்யோவ்!
(60க்கு பிறகு பிறந்தவர்கள் எல்லாம் எனக்கு பிறந்தது தமிழ் என்கிறார்கள்.. என்று வைரமுத்து சொன்னது போல்.. 92லயே இப்படி எழுதிய உங்கள் முன் வார்த்தைகள மடக்கி மடக்கி கவிதைன்ற பேர்ல நான் எழுதறத நிறுத்தனும் குருவே..)
அருமையான சொல்லாடல்
நர்சிம்..
இப்போது புரிந்திருக்கும், ஏன் தமிழ் வாத்தியார் என்று சொன்னேன் என்று!
நல்ல கவிதை!
பார்வைக்கு வெளியேயும்
காட்சிகள் உண்டு
எளிமையா சொல்லிட்டீங்க, எல்லாத்துக்குமே இதான் நிதர்சனம்.
படித்தேன். இத தவிர வேற என்ன சொல்ல? உங்களுக்கு புரிந்திருக்கும்...
நன்றி, பரிசல்காரன். என்னுடைய பதிவில் கிட்டத்தட்ட பாதி கவிதைகள் 1991லிருந்து 1998வரை எழுதப்பட்டவையே.
நன்றி, நர்சிம்.
நன்றி, ரமேஷ்.
நன்றி, கென்.
எதிர் கவிதை
சும்மா தமாசுக்கு
மல்லாந்து படுத்து
நீலம் தழுவிய
கவரைப் பார்த்தேன்
விரலை நீட்டி கொண்டு -
அதன் ஊடே
விட்டது
மட்டுமல்லாது
சின்னச் சின்ன கிழிசல்கள்
கவரேங்கும்
விரலை எடுத்துவிட்டு
வழக்கம்போல் சொல்லிக் கொண்டேன்
கவருக்கு உள்ளேயும்
கவர் உண்டு
பரிசல், நர்சிம், கென் வந்தாயிற்று. கவிதை என்பதால் ஸ்ரீதர் வருவாரா அல்லது பின்னோட்டம் இடுவாரா என்பது தெரியாது. ஒரு அனானி சொன்னதுபோல் நீங்க எங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவீர்கள். நாங்கள் உங்க கவிதையை 'தலைவா, சூப்பர்' என்று பதில் மரியாதை செய்ய வேண்டும். என்ன பொழப்பு இது!
அனானியை ஏமாற்ற விரும்பாததாலும், மனச்சாட்சி இன்னமும் துடிப்புடன் செயல்படுவதாலும்.....
//பார்வைக்கு வெளியேயும்
காட்சிகள் உண்டு//
ஆழமான வரிகள். '92 என்றால் மிக மிக இளைஞன்! இயக்குனராகும் கனவுகளுடன்? பிறகு கையைக் குவித்துக்கொண்டு ஏன் பார்த்தீர்கள்?
அனுஜன்யா
நன்றி, கார்க்கி.
நன்றி, வால்பையன்.
நன்றி, அனுஜன்யா. :)
சொல்ல நினைக்கறத கென் சொல்லிட்டாரு அதனால ஒரு ரிப்பீட்....
//பார்வைக்கு வெளியேயும்
காட்சிகள் உண்டு//
அருமை.
//பரிசல், நர்சிம், கென் வந்தாயிற்று. கவிதை என்பதால் ஸ்ரீதர் வருவாரா அல்லது பின்னோட்டம் இடுவாரா என்பது தெரியாது. ஒரு அனானி சொன்னதுபோல் நீங்க எங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவீர்கள். நாங்கள் உங்க கவிதையை 'தலைவா, சூப்பர்' என்று பதில் மரியாதை செய்ய வேண்டும். என்ன பொழப்பு இது!
//
அதானே என்ன பொழைப்பு இது :((
கவிதைகள்ன்னா நான் படிக்க மாட்டேன்னு நினைச்சிட்டிங்களா அனுஜன்யா? நாங்களே கவிதை எல்லாம் எழுதி பிரசுரமாயிருக்கு. சுட்டி தந்தேன்னா சுந்தர் இந்த பின்னூட்டத்தை வெளியிட மாட்டார் :))
அ-கவிதைகள் விளையாட்டுல நானும் 2-3 தடவை கலந்து கவிதையெல்லாம் எழுதியிருக்கேன்.
இப்பல்லாம் எனக்கும் புரியற மாதிரி சுந்தர் கவிதை பதிவிடறாரா..... எனக்கு சந்தேகமா இருக்கு. நிஜமாவே நமக்கு புரியுதா, இல்ல வலதுசாரி-முதலாளித்துவ சிந்தனையால அப்படி தோனுதா... இப்படி யோசிச்சிகிட்டே இருந்ததினால இடுகை ஆறிப்போய் பின்னூட்டம் இடாம விட்டுட்டேன்.
மற்றபடி முதுகு சொறிதல் எல்லாம் பக்காவா செஞ்சிடுவோம்ல :-)
mozhi, please have a look..
one of the best as I feel what you say.
http://veenaapponavan.blogspot.com/2008/10/blog-post_08.html#comments
அதிகாலை
நடைப்பயிற்சி செய்யும் வேளையில்
என்னை நிறுத்தி
'எந்தத் திசையில் வீடுகள் இருக்கின்றன?'
என்று கேட்டான்
குடுகுடுப்பைக்காரன்.
Thanks
Bala
நன்றி, கிருத்திகா.
நன்றி, கார்த்திக்.
நன்றி, ஸ்ரீதர் நாராயணன். :)
நன்றி,அனானி. முகுந்த் நாகாராஜனின் கவிதைகள் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கிறேன்.
பார்வையில் இல்லை. சிந்தனையில் உள்ளது.
Ecellent.... I too feel it when i was in my old home (Hut)
வால்பையன் said...
//மல்லாந்து படுத்து
நீலம் தழுவிய
கவரைப் பார்த்தேன்
விரலை நீட்டி கொண்டு -
அதன் ஊடே
விட்டது
மட்டுமல்லாது
சின்னச் சின்ன கிழிசல்கள்
கவரேங்கும்
விரலை எடுத்துவிட்டு
வழக்கம்போல் சொல்லிக் கொண்டேன்
கவருக்கு உள்ளேயும்
கவர் உண்டு//
It is also nice :)
Post a Comment