இரை
அசையாதிருக்கும் இரவின் வெளிச்சத்தில்
ஊர்ந்துகொண்டிருக்கிறது
ஓலைக்கூரையின் நடுவில்
இரை தேடும் பாம்பு
இப்புறம் திரும்புமா
அப்புறம் செல்லுமா
என்பதில் இருக்கிறது
வாழ்வு
பிரார்த்தனையின் இரைச்சலில்
திரும்பிய பாம்பு
விழுங்கிச் செல்லும்
பெரியவன் ஆவது
தோளில் அமர்ந்து பின் பறக்கும்
புறா இறக்கைகளின் கதகதப்பு
இருந்துகொண்டேயிருக்கிறது
இருக்கிறாற் போல் இருந்து
திடீரென்று முட்டும் கன்றுக்குட்டியின் மோதல்
இன்னமும் இதமாய் வலிக்கிறது
உணவுக்காகத் தாவிய நாய்
மார்பில் கால் வைக்க
பயந்து தடுமாறி விழுந்த
சிறு வயதுக் காயத் தழும்பு
முதுகில் இருக்கிறதா தெரியவில்லை
டி.வி. பார்க்க அமரும்போதெல்லாம்
மடியில் வந்து படுத்துக்கொள்ளும் பூனை
எங்கே போயிற்றோ
எல்லாம் காணாமல் போக
நான் பெரியவனானேன்
அம்மாவும் அப்பாவும் காணாமல் போக்கியவை
காணாமல் போக்கியவை பற்றிய
நீண்ட பட்டியலே அப்பாவிடமிருந்தது
சின்ன வயதில் அட்லஸ் சைக்கிள்
அக்காவை விட்டு வரப்போனபோது
எடுத்துச் சென்ற ஃபாரின் குடை
கோயிலில் எப்போதோ செருப்பு
வேலையிலிருந்து திரும்பும்போது
இருநூறு ரூபாய் பணம்
என ஆரம்பித்து சென்றுகொண்டேயிருந்தது
அம்மாவும் சிலவற்றைத் தொலைத்திருந்தாள்
வெளித் திண்ணையில் மறந்துவைத்த
டிரான்சிஸ்டர்
ஒரு காதுத் தோடு
மற்றும்
பதினேழு வயது மகன்
(இந்த வார ஆனந்த விகடன் இதழில் - 5.11.2008 தேதியிட்டது - வெளியானவை)
கார்காலக் குறிப்புகள் - 60
6 hours ago
39 comments:
பின்னூட்டம் போடுவதற்கென்றே பிறந்தவர்கள் "வாழ்த்துக்கள்" என்று ஆரம்பியுங்கள் உங்கள் வேலையை.........
சுந்தர்ஜி .... வாழ்த்துக்கள்
ஒரு புதினத்துக்கு உரிய தன்மையுடன் முற்றுப் புள்ளி இல்லாமல் தலைமுறை தலைமுறையாக 'அம்மாவும் அப்பாவும் காணாமல் போக்கியவை' தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன... இல்லையா சுந்தர்?
அனானி நண்பர் சொன்னதுபோல் பின்னூட்டம் போடுவதற்கென்றே பிறந்தவன்தான் நான்...
எனவே -
வாழ்த்துக்கள் சுந்தர். எறும்புகளாக அச்சில் ஊறும் எழுத்துக்கள் இனி, சுந்தரின் கவிதைகளை சுமக்கட்டும்...
வாழ்த்துக்கள்...! சுந்தர்ஜி
இவண்..
பின்னூட்டமும் போடுவதற்கு பிறந்தவன்
வாழ்த்துக்கள் தலை
Nice! Very Nice!
(Anonymous, I do write, and at times, give comments to some bright stuff!)
எதிர் கவிதை
நில்லாது ஓடும் ரயிலின் ஓசையில்
ஊர்ந்து கொண்டிருக்கிறான்
இருக்கையின் நடுவில்
படபடக்கும் குப்பை
இப்புறம் திரும்புமா
அப்புறம் திரும்புமா
என்பதில் இருக்கிறது
அவனது விளக்கமாருக்கு வேலை
காலை தூக்கும் பயணிகளுக்கு
தெரியுமா அவனது பசி
ரயிலின் இரைச்சலில்
அந்த எதிர்கவிதைக்கு பசின்னு பேரு வைக்க மறந்துட்டேன்
ஆனந்தவிகடனில் உங்கள் கவிதைகள் வெளிவந்தால் தான் வாழ்த்துக்கள் சொல்ல வேண்டுமா என்ன?
உங்களுக்கான வாழ்த்துக்கள் ஆயிரக்கணக்கில் என்னிடம் ஸ்டாக் இருக்கிறது.
வாழ்த்துக்கள்!!
It is funny to see Hindu Ram has been awarded several awards by SL govt.
It seems obvious that he is in the "pay roll" of SL govt for his anti-tamil "Preaching" using his newspaper! What a traitor!
He should feel ashamed of getting such awards if he is a Tamil esp when Tamils are suffering.
Apparently, he sounds like a Hindutava rather than a Tamil. May be that is why he runs a "hindhu" newspaper!
He is a filthy RAT!
akil
akilpreacher.blogspot.com
வாழ்த்துகள் ஆனந்த விகடனின் வந்த கவிதைகளுக்கு
Congratulations. Hoping to read more of your works.
வாழ்த்துக்கள்...அண்ணன்...
வாழ்த்துக்கள் சுந்தர்.
Why is that comment abt Hindu Ram posted here?!?
வாழ்த்துக்கள்,
நல்லா இருக்கு.
முதலில் வாழ்த்துக்கள் சுந்தர்.
//இரை தேடும் பாம்பு
இப்புறம் திரும்புமா
அப்புறம் செல்லுமா
என்பதில் இருக்கிறது
வாழ்வு //
நச் வரிகள்.
வாழ்த்துக்கள்!!!!
வாழ்த்துகள் சுந்தர்
இரை மற்றும் காணாமல் போக்கியவை ரெண்டும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.
இன்னும் நிறைய வாழ்த்துகள் சொல்லிட்டே இருக்க வேண்டி வரும்னு நினைக்கிறேன் :)
புலவரே வாழ்த்துக்கள்! (உங்கள் தொடர்கதையும் ஆவியில் வர அட்வாண்ஸ் வாழ்த்துக்கள்)
வாழ்த்துக்கள் சுந்தர். ஆன்லைனில் பெயர் போடவில்லை, அதனால் நீங்கள் பதிவு போடும்வரை அது நீங்கள் எழுதியத் என்பது தெரியவில்லை. :(
இரண்டாவதும், மூன்றாவது அருமை.. (முதல் கவிதை புரியவில்லை அதனாலதான் ஹி..ஹி.).
//
எல்லாம் காணாமல் போக
நான் பெரியவனானேன்
//
கலக்கல் வரிகள்.. வளரும்போது தொலைக்கும் விஷயங்கள் குறித்த ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் ஏக்கத்தை அழகாக வடித்திருக்கிறீர்கள்
வாழ்த்துக்கள்... பரவலாக நீங்கள் அறியப்பட ஒர வாய்ப்புதானே.
மற்றபடி காணாமல்போக்கியவை பற்றி மன்பெ எழதிவிட்டேன்.
இரை பிரார்த்தனைகள் எற்படுத்தம் இரைச்சலில் இப்படித்தான் நடக்குமோ?
அன்புடன்
ஜமாலன்.
உங்களைப் பற்றி என் அண்ணனிடம் சொல்லியிருந்தேன். அவன் தான் இதை ஆ.வி.யில் படித்துவிட்டு சொன்னான். வாழ்த்துகள் நானும் சொல்லாமில்ல?
ஜ்யோவ்ராம் சுந்தர்
முதன்மையாய் வாசகன். சில சமயம் எழுதவும் செய்வேன்.
???
வாழ்த்துக்கள் அண்ணன்...
மூன்றாம் கவிதை சில தலை முறைகளாக இருக்கிறது அப்படித்தானே அண்ணன்...
வாழ்த்துக்கள்!
ஆனந்தவிகடனுக்கும் வாழ்த்துக்கள்! (ஆச்சர்யத்துடன்)
முதல் அனானி, நன்றி.
பைத்தியக்காரன், நன்றி. முடிவே பண்ணிட்டீங்களா, பின்னூட்டம் மட்டும் போடுவதென்று :)
சென்ஷி, நன்றி.
வால்பையன், நன்றி. அந்தக் கவிதையை இன்னொரு முறை மெருகேற்றுங்கள் :)
ரமேஷ், நன்றி.
லக்கி லுக், நன்றி. அதானே :)
அகில், இந்தப் பதிவுல எதுக்கு இந்தப் பின்னூட்டம்? ஆனால், நீங்கள் சொல்லியதுடன் ஒத்துப் போகிறேன்.
மின்னல், நன்றி.
கிருஷ்ணன், நன்றி.
தமிழன் (கறுப்பி), நன்றி.
ஜோ, நன்றி.
ரவிஷங்கர், நன்றி.
வடகரைவேலன், நன்றி.
மனிஸ், நன்றி.
கென், நன்றி.
குசும்பன், நன்றி. என்னது, தொடர்கதையா :(
வெண்பூ, நன்றி.
ஜமாலன், நன்றி.
கார்க்கி, நன்றி.
முத்துவேல், நன்றி. ஏன், நிறைய எழுதுகிறேனா :)
கிங், நன்றி.
இரா சுந்தரேஸ்வரன், நன்றி.
நானும் பார்த்தேன் வாழ்த்துக்கள்ங்க
valthukkal. treat unda?
முதல் கவிதையை படித்ததும் சிரிப்புத்தான் வந்தது.
மழை பெய்த இந்த இரவுகளில்,
தவளைகள் பிரார்த்தனை செய்வதாக கற்பிதம் செய்வதோ அல்லது கற்பனை செய்வதோ
சிரிப்பையேத் தருகின்றன.
கலீல்கீப்ரான், தவளைகள் குறித்து எழுதிய கவிதைகளை படித்திருக்கிறீர்களா?
இரண்டாவது கவிதை முக்கியமானதாக இருக்கிறது.
பால்யம் தொலைத்த நினைவுகளில்தான் ஒவ்வொரு இலக்கியவாதியும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள் என்பது ரொம்ப உண்மையாக இருக்கிறது.
உங்கள் மொழி விளையாடவில்லை.
விளையாட வைக்கிறது.
அதென்ன....
புறா, கன்றுக்குட்டி, நாய், பூனை என பறவைகளோடும். செல்லப் பிராணிகளோடும் விளையாட்டு?
யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
மூன்றாவது கவிதை அவ்வளவாக தொந்தரவு செய்யவில்லை.
இதே போன்று, முக்கியமான கவிதை கல்யாண்ஜி எழுதி படித்த ஞாபகம்.
வாழ்த்துக்கள்..
பெரியவன் ஆவது, அம்மாவும் அப்பாவும் காணாமல் போக்கியவை
இந்த இரு கவிதைகளும் எனக்கும் மிக பிடித்தமானவை..
வாழ்த்துக்கள் சுந்தர்.. :))
That is the life.....
இவ்வளவு தன்னடக்கமா என்று கேட்க நினைத்தேன்.சில சமயங்களில் எழுதியே ஆனந்தவிகடன் வரை என்றால்..
(தமிழில் எழுத அப்போது வாய்ப்பில்லாமல் போனது.அதனால்தான் சிம்பாலிக்காக.)
வாழ்த்துகள்.
வாழ்த்துகள் தல!
'என்னது காந்தி செத்துட்டாரா'ன்னு கிண்டல் அடிக்காதீங்க. கவிதைகளை அன்றைக்கே படித்துவிட்டேன். பின்னூட்டங்களை இன்றைக்குத்தான் படித்தேன்.
//முத்துவேல், நன்றி. ஏன், நிறைய எழுதுகிறேனா//
:-)) ஆமாம்! பதினைந்து-இருபது வருடங்களாக நிறையவே எழுதிட்டீங்க.
The fact that he has posted it in blogger proves that he doesn't get any compensation from AV.
Even if they had given any, it may not be sufficient to buy half a bottle of old monk!
So there's no chance of getting a treat, midhakkumveli! ;-)
நன்றி, கார்த்திக்.
நன்றி, சுகுணா. treatற்குக் காரணங்கள் வேண்டுமா என்ன :)
நன்றி, மாதவராஜ்.
நன்றி, சரவண குமார்.
நன்றி, முத்துவேல். ஆவில வரது என்ன பெரிய சாதனையா என்ன?
நன்றி, ஸ்ரீதர் நாராயணன்.
நன்றி, அனானி. முழு போத்தல் ஓல்ட் மாங்க் + ஸ்னாக்ஸ் வாங்கும் அளவிற்கு வருமாமே :)
வாழ்த்துக்கள் சுந்தர். உங்களைப் போன்ற எதிர் அழகியல் எழுத்துக்காரர்களது வருவது நன்று. ஒரு மாறுதல் வாசிப்புக்காகவேனும்.
மூன்றும் அருமை சுந்தர். முதல் கவிதை ஹரன் எழுதிய
'ஒரு பூனையின் நிமிடங்கள்
ஒரு எலியின் நிமிடங்கள்
ஒரு பூனை மற்றும் எலியின் நிமிடங்கள்
முடிந்துவிடுகிறது பேருலகம்'
என்ற கவிதையை நினைவு படுத்தியது.
'பெரியவன் ஆவது' யாருக்குத்தான் பிடிக்காது - யாருக்கும் உண்மையில் பிடிக்காது எனினும்.
ஆ.வி.யில் வருவது பெருமைதான் சுந்தர். உங்களுக்கும், பதிவர்களுக்கும் மட்டுமல்லாமல், ஆ.வி. போன்ற தவிர்க்கமுடியாத பெரும்சக்திகள் நல்ல கவிதைகளுக்கு அங்கிகாரம் தருவது நல்ல விஷயம்தானே.
அனுஜன்யா
Post a Comment