ரசம் சாதமும் அதற்குத் தொட்டுக் கொள்ள வழவழா வெண்டைக்காய் பொரியலும் சாப்பிடுபவர்களுக்கு, மிளகாய்க் காரமான (அதுவும் சாராயத்திற்குக் கடித்துக் கொள்ளும் மிளகாய்) சாரு நிவேதிதாவின் எழுத்துகள் ஆபாசமாய்த் தெரிவதில் வியப்பில்லை.
55 வயதானவன் காதலிக்கலாமா, சின்னப் பெண்களைக் காதலிக்கலாமா, திருமணமானவன் பிறபெண்களைக் காதலிக்கலாமா... இதுகூடப் பரவாயில்லை, அவற்றை அப்படியே எழுதலாமா... (சிலருக்கு அப்படிச் செய்வதுகூடப் பிரச்சனையில்லை, ஆனால் எழுதக் கூடாதாம்!). I would like to eat your pussy என்ற வரி ஆபாசமானதாம். நல்லது; அவர்களது வாய் உணவருந்த மட்டுமே பயன்படுவதாயிருக்கும் :)
தன்மேல் வீசப்படும் வன்மத்தைக்கூட இலக்கியமாக்கக்கூடிய சாமர்த்தியம் வெகு சிலருக்கே உண்டு. இவருக்கு பாலியல் பிரச்சனைகள் இருக்கலாம், அதனால்தான் இப்படியெல்லாம் எழுதித் தன் ஆசையைத் தீர்த்துக்கொள்கிறார் எனச் சிலர் 'அபிப்ராயப்பட்டதற்கு', சாரு ஒரு கதையில் சொன்னது : நான் ஆண்மையுள்ளவனா எனச் சோதிக்க, என் கதைகளைப் படித்தால் போதாது; அதற்கு உங்கள் மனைவிகளை ஓரு இரவு என்னுடன் அனுப்ப வேண்டும்!
கலை உன்னதம் எனச் சிலர் கும்மியடித்தபோது சாரு ஆய்வு பத்திரிகையில் எழுதிய கட்டுரையின் தலைப்பு : Art is Fart. (இத்துடன் ஆஸ்கார் வைல்டின் பிரசித்திபெற்ற வாசகமான Life is imitating Artஐ இணைத்துப் பார்க்கலாம்). சிலர் அமைப்பியல் என்ற பெயரில் புரியாத ஆட்டம் போடுவதாக விமர்சித்து சாரு கவிதா சரணில் எழுதிய கட்டுரை ‘பூம் பூம் ஷக்கலக்க அமைப்பியல்வாதம்'. ஷங்கன்னா என்ற புனைபெயரில் எஸ் ராமகிருஷ்ணன் ஒரு கட்டுரை எழுதினார். அதற்கு மறுப்புக் கட்டுரை எழுதிய சாரு வைத்துக் கொண்ட புனைபெயர் ஃபக்கன்னா. இப்படிக் கலை, அமைப்பியல் எனச் சகலத்தையும் பகடி செய்யும் எழுத்து சாருவினுடையது.
ரெண்டாம் ஆட்டம் என்ற நாடகத்தை சாருவும் அவரது சில நண்பர்களும் ஒருங்கிணைத்தார்கள். அதில் ஒரு காட்சி : இரண்டு ஆண்கள் பத்தடி இடைவெளியில் ஓரினப் புணர்ச்சி செய்வதுபோல் மைமாக நடித்தார்கள். பின்னணியில் சுப்ரபாதம். அந்நாடகக் குழுவில் பலர் இருந்தபோதும் சாருவின்மீது குறிவைத்து உடல்ரீதியான வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. (பின்னணியில் சுப்ரபாதம் இசைக்கப்பட்டதையே பெரிதாக அப்போது தினமலரிலிருந்து இடது சாரிப் பத்திரிகைகள் வரை எழுதியது இன்னொரு நகைச்சுவை). வேறுமாதிரியான வன்மம் சாருவின்மேல் இணையப் பக்கங்களில் விசிறியடிக்கப்படுகின்றது.
ஒன்றரையணா கருத்துகளை உதிர்ப்பவர்கள் குறைந்த பட்சம் சாரு இதுவரை என்ன செய்திருக்கிறார், இப்போது என்ன செய்ய முயன்று கொண்டிருக்கிறார் என்பதையாவது தெரிந்துகொண்டு கருத்துகளை உதிர்க்கலாம். ஒன்றுமே செய்யாமல் இணையத்தில் கொஞ்சம் மேய்ந்துவிட்டு கண்டபடி திட்டி / மிரட்டி எழுதுவது அயோக்கியத்தனம்!
அ.மார்க்ஸ்தான் சொன்னாரென்று நினைக்கிறேன் : இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய கதை சொல்லி சாரு நிவேதிதா.
(தற்போது இடுகைகள் நீக்கப்பட்டுவிட்ட பதிவொன்றையும், ஒரு இணைய விவாதக் களத்தில் வைக்கப்பட்ட சில வாதங்களையும் படித்ததும் எழுதியது. இணையத்தில் பல இடங்களில் சாருவின் மீது துவேஷம் கக்கும் பதிவுகளைப் பார்க்கிறேன். அதற்கான சிறு எதிர்வினையே இது).
யுவான் ரூல்ஃபோ (Juan Rulfo)
10 hours ago
83 comments:
Nice!
Where are the links for the last para mention!
It's a tough world out there!
forgot one more thing,
Do you have links for S Ramakrishnan and the related articles.. on art?
:) நன்றாக எழுதியிருக்கிறீர்கள். எனது இரண்டனாக்கள் -
1. ரசம் சாதமோ சுண்டக் கஞ்சியோ... ஆனா சமீபமாக ரொம்பவே ஆறிப் போய் அலுப்பு தட்டுகிறது.
2. //அ.மார்க்ஸ்தான் சொன்னாரென்று நினைக்கிறேன் : இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய கதை சொல்லி சாரு நிவேதிதா.// நீங்க எப்பவும் சொல்ற 'ஸ்வீப்பிங் ஸ்டேட்மெண்ட்'டா இது :-)
//அவர் நிறைய பொய் சொல்லுகிறார். ஏதாவது foreign போர்ன் ஸ்டோரி படித்துவிட்டு, அதை கை காது மூக்கு வைத்து "பெருமாள் எக்ஸ்பீரிண்ஸ்" என்று சும்மா கதை விடுகிறான்.
I think he is living in "delusion" and he is really SICK!
இவர் எழுதுவது ஒரு விலைமாது தன் இரவுகளை எழுதுவதுபோலத்தான் இருக்கு.
யார் வேணா இதை விளாவரியா எழுத முடியாதா என்ன?//
i think this is the opt comment on Charu..
Please add this too..
//அந்த மாதிரி பாதிக்கப்பட்ட ஒரு சில பேர் "சிக்" ஆகிவிடுவாங்களாம்! தாங்களும் சின்னப்பிள்ளைகளை அப்யூஸ் பண்ணுவான்களாம்.
அதைத்தான் "நம்ம பெருமாள்" 17-வயது பெண்களிடம் அவன் செய்யும் லீலைகள் காட்டுகிறது.
இவனை விட்டால் இதேபோல் எழுதி எல்லா அரைவேக்காடுகளையும் "சிக்" ஆக்கிவிடுவான்!
He needs to be "treated" or "taken care of" before it is getting too late!//
For more details please have a look at the comments in the following blog :
http://timeforsomelove.blogspot.com/2008/09/360-7.html
Thank you :-)
உங்கள் பார்வையில் நீங்கள் சொல்வது சரியாகவேத் தெரிகிறது சுந்தர். ஆனால் என்னைப்போன்ற முதல் முறை அவரைப் படிக்கும் வாசகர்களுக்கு (அவரை நான் படிக்க ஆரம்பித்ததே தற்போதைய குட்டிக்கதைகளில் இருந்துதான்), முதலில் முகத்தில் படுவது அவரது ஆபாசம்தான். அங்கங்கே லேசாக இவை இருந்தால் தெரியாது. ஆனால் 50% அதைப்பற்றியே என்றால் சரோஜாதேவி புத்தகங்களுக்கும் இதற்கும் வித்தியாசம் தெரியாது.
அதே நேரம் உங்களுக்கு முன்னரே லக்கி, பரிசல், அதிஷா எல்லோரும் அவரை சிலாகித்து சொன்னது மட்டுமல்லாமல் ராஸலீலா, ஸீரோ டிகிரி, கோணல் பக்கங்களை பரிந்துரைத்துள்ளனர். ஆர்டர் செய்துள்ளேன். அவற்றை படித்தபின், அவர் மீதான என் அலட்சியம் குறையும் என்று நம்புகிறேன்.
கதையெல்லாம் நல்லாத் தான் சொல்றாரு
ஆனா கொள்கைகலை மட்டும் ஏன் அடிக்கடி மாத்திகிறார்னு தெரியல.
அது அவருடய தனிப்பட்ட விசயமாக கொள்ளலாம் தான். ஆனால் இன்று அவருக்கு சரியெனப்பட்டதை கொண்டாடுகிறார். நாளைக்கே........
வாசகன் இதையெல்லாம் பார்க்ககூடாதோ!
//அந்நாடகக் குழுவில் பலர் இருந்தபோதும் சாருவின்மீது குறிவைத்து உடல்ரீதியான வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது.//
அப்படி வன்முறையை கட்டவிழ்த்துவிட்டவர்கள் மார்க்கஸீய கம்யூனிஸ பாரம்பரியத்தில் வந்த முற்போக்கு எழுத்தாள சங்கத்தைச் சேர்ந்தவர்கள்.
அடித்தவர்கள் யாராக இருந்தாலும், பழி என்னவோ சுப்ரபாதத்திற்குத்தான்.
எதிர்க்கமுடியாதவனுக்குத்தான் பழிச்சொல். அல்-குவைதாவாவை பழிக்க பத்திரிக்கைகள் என்ன மடையர்களா?
என்ன சொல்லுகிறீர்கள் ஜ்யோவ்ராம்?
சாருவை பிடிக்குமோ இல்லையோ அவரது எழுத்துக்களை எனக்கு நெடுங்காலமாக பிடிக்கும். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு மேலாக அவரை தூரத்தில் இருந்து பார்த்து ரசித்துக்கொண்டேயிருக்கிறேன். நெருங்கிப் பார்த்தப் பிறகும் ஆள் அவ்வளவு மோசமில்லை என்று எடைபோட முடிந்தது.
அவர் எழுதுவது போர்னோ இல்லை என்று அவரே ஒத்துக் கொள்கிறார். இதையெல்லாம் போர்னோன்னு சொன்னா போர்னோவை என்னன்னு சொல்லுங்க என்று கேட்கிறார்.
அரைகுறைகள் சிலதுக்கு மயிறு, மட்டு என்று சொன்னாலே அது ஆபாசமாகப் படுகிறது. என்னத்தைச் சொல்ல? அரைகுறைகளால் நம்மைப் போன்றவர்களுக்கு லாபம். முன்பை விட முனைப்பாக குறை சொல்லுபவர்களை குனியவைத்து எழுதப் போவதாக அறிவித்திருக்கிறார்.
அசத்துங்க சாரு!
லிங்கப்போடுங்க தல...எங்கன்னு போயி தேடுறது ?
சாரு ஒரு யதார்த்தவாதி, என்னைப் பொறுத்தவரை...
அவருடைய எழுத்துக்களுக்கு எதிராக வன்மை புரிபவர்களைப் பார்த்தால்...I think its out of frustration that they restricted themselves with soft drinks alone.
சுந்தர்,மெயின் சாப்பாட்டுக்கு மிளகாய் சைடு டிஷ்ஷா தான் வரும்.
நிற்க, எப்பவுமே மிளகாய் கடிச்சுட்டு இருந்தா வயித்துகடுப்பு வந்துடும்.
(பேதி புடுங்கிடும் என்றும் சொல்லலாம்). :))
இப்ப உட்காந்துக்கலாம். :))
enya saru nivethithavukaga vakalathu vanguringa?
Point taken, Sundar!
I like his work but I don't like the man. But that doesn't matter much!
நிறையா பதில் சொல்ல முடியும். ஆனா வழக்கம் போல விழலுக்கு இறைத்த நீர். கடைசியில் ஆயாசம்தான் மிஞ்சும். ஆனால் என்னளவில் அவரின் எழுத்து ஷாக் வேல்யூதானே தவிர இலக்கியம் எல்லாம் இல்லை.
"If a person shouts , He is afraid"
என்பது போல் சருவின் மீது தொடுக்கபடும் வன்மங்களும், அவரை கருத்தால் எதிக்கொள்ள முடியதவர்களின் கொழைத்தந்த்தையும், போதிய அறிவின்மயையும் காட்டுகிறது.
எனக்கு வல்டோரின் வரிகளே ஞபகத்திற்க்கு வருகின்றன..
“I disagree with you, but I will fight for your right to say it,”
என்கிற பெருந்தன்மை வரவேண்டும்
பதிவுலகத்தைப் பற்றிய அவர் கருத்துக்கள் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே.
டிஸ்கி: இது மின்னஞ்சலில் மற்ற பின்னூட்டங்களைப் பெறுவதற்காக செய்யப்பட்ட பின்னூட்டக் கயமைத்தனம். :)
//இவருக்கு பாலியல் பிரச்சனைகள் இருக்கலாம், அதனால்தான் இப்படியெல்லாம் எழுதித் தன் ஆசையைத் தீர்த்துக்கொள்கிறார் எனச் சிலர் 'அபிப்ராயப்பட்டதற்கு', சாரு ஒரு கதையில் சொன்னது : நான் ஆண்மையுள்ளவனா எனச் சோதிக்க, என் கதைகளைப் படித்தால் போதாது; அதற்கு உங்கள் மனைவிகளை ஓரு இரவு என்னுடன் அனுப்ப வேண்டும்!//
இரண்டு தரப்புமே சகிக்கலை :(
காமம் பற்றி எழுதுவது மிக எளிது, அதை நாம் கூட மிக எளிதாக எழுதலாம்.
சாரு எழுதிய மூன்று புத்தகங்கள் வெளியீட்டு விழாவிற்கு சென்று இருந்தேன் (கனிமொழி அக்கா அழைப்பை ஏற்று), அந்த விழாவில் இவர் பண்ணிய அட்டகாசம், பந்தா, கர்வம் தாங்க முடிய வில்லை. ஏன்டா இந்த விழாவிற்கு போனோம் என்றாகி விட்டது. (savera hoel function)
நாங்களும் சுஜாதா, பாலகுமாரன், தி க சி, வண்ண நிலவன், சு ப வீ, எழுத்தாளர் கலைஞர் கருணாநிதி புத்தக வெளியீட்டிற்கும் சென்று உள்ளோம், ஆனால் இவர் போல ஆடம்பரம், பந்தா பண்ணிய எழுத்தாளரை நான் கண்டதில்லை.
அந்த அடக்கம் அற்ற தன்மையை நினைத்தாலே படிக்க தோணுவதில்லை.
குப்பன்_யாஹூ
எனக்கு சுயமைதுனம் செய்யத் தோன்றினால் என்னை பெருமாளாக நினைத்து அவர் கதைகளை படிப்பேன். கக்குவதெல்லாம் இலக்கியமெனில் சரோஜாதேவி எழுதியவனும் இலக்கியவாதியே.’கத்தியை உறைக்குள் எப்போது வைத்திருப்பார் போல சாரு.
// லக்கிலுக் said...
சாருவை பிடிக்குமோ இல்லையோ அவரது எழுத்துக்களை எனக்கு நெடுங்காலமாக பிடிக்கும். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு மேலாக அவரை தூரத்தில் இருந்து பார்த்து ரசித்துக்கொண்டேயிருக்கிறேன். நெருங்கிப் பார்த்தப் பிறகும் ஆள் அவ்வளவு மோசமில்லை என்று எடைபோட முடிந்தது.
அவர் எழுதுவது போர்னோ இல்லை என்று அவரே ஒத்துக் கொள்கிறார். இதையெல்லாம் போர்னோன்னு சொன்னா போர்னோவை என்னன்னு சொல்லுங்க என்று கேட்கிறார்.
அரைகுறைகள் சிலதுக்கு மயிறு, மட்டு என்று சொன்னாலே அது ஆபாசமாகப் படுகிறது. என்னத்தைச் சொல்ல? அரைகுறைகளால் நம்மைப் போன்றவர்களுக்கு லாபம். முன்பை விட முனைப்பாக குறை சொல்லுபவர்களை குனியவைத்து எழுதப் போவதாக அறிவித்திருக்கிறார்.
அசத்துங்க சாரு!//
haaha. asaththal comment lucky :)
unnala matum epdi nanbaa ithellam mudiyuthu.kalakkal pa. :)
//
இராமன் said...
...
யார் வேணா இதை விளாவரியா எழுத முடியாதா என்ன?
//
உங்களுடைய சவால் மிக சிறந்த ஒன்று.... ஆகவே நீங்கள் உடனடியாக ஒரு கதை எழுதி வெளியிடவும். கதையைவிட அதை சொல்லும்விதம் சிறப்பாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.
வாழ்த்துக்கள்.
சாருவிற்கு விளம்பரம் சூப்பர்..
அவரோட சைட்டு Hits பத்தி சொல்லுவாரு வாசிக்க சிரிப்பு வரும். refresh பண்ணிகிட்டே இருந்த hits சும்மா அள்ளும்..அது புரியாம 5 லட்சம் hits 6 லட்சம் hits என்று.. கிக்கிக்கி :-)
டேய் ஒங்களுக்கெல்லம் வேற வேல இல்லையா? சாரு என்றவுடனே நாக்கையும் மத்த ஒண்ணையும் தொங்கப் போட்டபடி ஏன்டா வாறீங்க!!
//அரைகுறைகள் சிலதுக்கு மயிறு, மட்டு என்று சொன்னாலே அது ஆபாசமாகப் படுகிறது.//
அரைகுறைகள் சிலதுக்கு மயிறு மட்டு என்று சொன்னாதான் புடிக்குது..
எனது கருத்தில் என்ன தவறு இருந்தது ஏன் வெளியிடவில்லை? நான் ஆபாசமாகவோ தரக்குறைவாகவோ எழுதவில்லையே? இதிலிருந்தே உங்களைப் போன்றவர்களின் மன அழுக்குகள் தெரிகிறது.
ம்ம்ம் சுந்தர் ... ”சாரு பல்ல உடச்ச வளர்மதி”தான் எழுதறேன் :)
சாரு என்கிற தனிப்பட்ட நபர் மீது ... ஒரு பதினைந்து வருடங்களுக்கு முன்பாக ... அவர் தனது இலக்கிய நாட்டத்திற்காக செய்த அர்ப்பணிப்புகளையெல்லாம் அறிந்தபோது எனக்கு மிகுந்த மரியாதை இருந்தது.
அவரோடு பழகிய மிகக் குறைந்த காலத்தில், நான் அறிந்ததிலிருந்து மாறியிருந்த அவரது இயல்புகள் அந்த மரியாதையைக் குறைத்திருந்தது.
என்றபோதிலும், ஒரு வகையில் தனக்கான தனித்துவத்தோடு செயல்படும் ஒரு எழுத்தாளர் என்பதில் எனக்கு எப்போதும் அவர் மீது ஒரு தனித்த மரியாதை உண்டு. அவரது எழுத்துக்கள்மீது எவ்வளவு கடுமையான விமர்சனங்கள் இருந்தபோதும்.
சொல்லப்போனால், அவரது ”zero degree” நாவல் வெளிவந்த புதிதில் அதை மிக வெளிப்படையாக ஆதரித்துப் பேசத் துணிந்தது நான் மட்டுமே. களியக்காவிளையில் நடந்த கூட்டத்தில். அவருக்கு அது நினைவிருக்குமோ என்னவோ!
அதன் பின் “சனதர்மபோதினி”யில் அவரது சிறுகதையை வெளியிடக்கூடாது (அதற்கான வேலைகளை ஒருங்கிணைத்ததும் அடியேனே ... கிட்டத்தட்ட ஒரு எடிட்டர் என்ற அளவில் ... இதை ஷோபா சக்தியோ சுகனோ ஒப்புக்கொள்வார்களா!) ... என்று கடும் வாதமிட்டவனும் அடியேனே.
இப்போது, அவரது முதல் நாவல் தொடங்கி, இப்போதைய அவரது எழுத்துக்கள் மீதும் (”zero degree” உட்பட - அதன் மீது ஒரு கடுமையான மறுபரிசீலனை வந்துவிட்டது) கடுமையான விமர்சனங்கள் எனக்குண்டு.
ஆனால், இங்கு, இந்த ப்ளாக் உலகில் அவர் மீது வைக்கப்படும் அசட்டுத்தனமான, மடத்தனமான ... எனது ட்ரேட் மார்க் attack ... middle class morons ... களுடைய குப்பையான விமர்சனங்கள் மிகமிக அற்பத்தனமானவை என்பதைப் பதிவு செய்ய விரும்பியே இது அனைத்தையும் எழுதுகிறேன்.
முதலாவதாக, இந்த middle class moron - கள் பாலியல் ரீதியில் ஒழுக்கவாதப் புழுக்கள். “I would like to eat your pussy" என்று எழுதக்கூடாது என்று கூச்சல் போடுபவர்களின் நாக்கை அறுத்துவிட வேண்டும் என்பது எனது பரிந்துரை ;)
சோத்தை சப்பு கொட்டி தின்பதற்கு மட்டும்தான் நாக்கு என்றால் அத்தகையவர்கள் கஞ்சி குடித்து உயிர் வாழட்டும் ;)
கடைசியாக, நாவல், சிறுகதை, கவிதை, பொதுவில் இலக்கியம் என்பது வாழ்க்கையில் அனுபவித்ததை அல்லது அனுபவிக்க விரும்புவதை register பண்ண இந்த எழுத்தாளர்கள் முயற்சி பண்ணுகிறார்கள் என்று நினைக்கும் மூடப்பிறவிகளை என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை.
(தனக்குப் பிடிக்காதவர்களை, தான் பழி தீர்க்க விரும்புபவர்களைத் திட்டி எழுதுவதற்காகவே ‘கதை' எழுதுவதை ‘கதை' - இலக்கியம் என்றே நான் ஒப்புக்கொள்வதில்லை. அவற்றை குப்பை என்பேன். அந்த வகையில் சாரு பல சந்தர்ப்பங்களில் இடறிவிட்டவர் என்ற விமர்சனம் எனக்குண்டு.)
ஆனால், இத்தகைய மூடர்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புவது - “கதை” என்றாலே ”பொய் சொல்லுதல்”. அவன் “கதை அடிக்கிறான்” என்று சாதாரணமாக வழக்கில் நாம் சொல்வதை நினைத்துப் பாருங்கள்!
அந்த வகையில், சாரு 17 - வயதுப் பெண்ணைப் புணர்வதாக எழுதுவது ஒரு “கதை” என்றுகூட புரிந்துகொள்ள முடியாதவர்களுடைய பிரச்சினை என்ன?
அவர்களுக்கு “பாட்டி வடை சுட்ட கதை”தான் கதை.
அதாவது, கதை என்றால் ஒரு ‘நீதி' சொல்ல வேண்டும். ஒரு ஒழுக்கம் - 'moral education' இருக்க வேண்டும் என்ற ஒரு கற்பனையான முன்தீர்மானம் இருக்கிறது.
இவர்கள்தான் கலாச்சாரக் காவல்காரர்கள்.
இத்தகைய கலாச்சாரக் காவல்காரர்கள் ”கிய்யா மிய்யா” என்று நடுராத்திரியில் - கவனிக்க :) 'நடுராத்திரியில்' கிய்யா மிய்யா - எல்லோருடைய மகிழ்ச்சியையும் கெடுத்துக்கொண்டிருக்கும் வரையில் சாருவுக்கு இந்தச் சூழலில் ஒரு இடம் இருக்கும்.
இணையத்தில் அவருடைய 'கதை'களை மட்டுமே படித்து ஓலமிடுபவர்கள் அவருடைய கட்டுரைகளைத் தேடிப்பிடித்து படித்தால் நல்லது. “கோணல் பக்கங்களை”ச் சொல்லவில்லை. அதற்கும் முன்பாக அவர் எழுதியவற்றை.
அ'ம்'புடன் ...
சாரு பல்லை உடைத்த ...
வளர் ...
////"If a person shouts , He is afraid"
என்பது போல் சருவின் மீது தொடுக்கபடும் வன்மங்களும், அவரை கருத்தால் எதிக்கொள்ள முடியதவர்களின் கொழைத்தந்த்தையும், போதிய அறிவின்மயையும் காட்டுகிறது.
எனக்கு வல்டோரின் வரிகளே ஞபகத்திற்க்கு வருகின்றன..
“I disagree with you, but I will fight for your right to say it,”
என்கிற பெருந்தன்மை வரவேண்டும்////
Where did we have a debate with him and he was declared as a WINNER?
Must be in your dreams!
His rights are not taken away but people those who criticises him are treated UNFAIRLY even in thamizhmaNam.
I am ready to debate!
He wrote a thamizh sentence and unit two sentences using a conjunction "CUM" in one of his short stories. Bcos he wants to introduce VULGARITY and he is a sick-minded!
Tell me what is the need for the term "CUM" here when you are writing a thamizh sentence!
That is nothing but SICKNESS!!
Are you in the DEBATE?
Win if you can! Offer an explanation for need for the vulgar word "CUM". If you wish I can cite the sentence. I avaoid as I dont want to spoil a healthy debate
-vAsagan-1
\\அவர்களது வாய் உணவருந்த மட்டுமே பயன்படுவதாயிருக்கும் :)\\
;-)))))))))))))
கலக்கல் பதிவு அண்ணா...
This guy Charu is a sick puppy. Thought some parts of his writings are entertaining, most of them fall under the vulgar category. If this guy does anything to a 17 year old teenager in USA, he will be spending his time in Jail. He could concentrate on issues other than his life. Sorry, if this hurts dude!
எப்படி ஆபாசமாக்கலாம்?
பாக்யராஜ் சொன்னதுதான். கட்டிலின் அசையும் சத்தத்தை போட்டாவே போதும். ஆபாசமாகிரும். அதுக்கு வார்த்தையும் சேர்த்து போட்டா சாரு. :) ஆனாலும் வாரமலரில் சாரு கதைகளைப் படித்து ரசிகனாவன் நான். வலைக்கு வந்த பிறகுதான் அவரின் இன்னொரு பரிணாமும் தெரிஞ்சது.
மயிறு, மட்டைன்னு எழுதினா வயிறு எரிகிற அரைகுறைகளில் நானும் ஒருவன். சாரு அதே மயிறு மட்டைய பொது மக்கள் படிக்கும் வாரமலரில் எழுதட்டுமே பார்க்கலாம். லக்கி சொல்வதை அப்போது ஏற்றுக்கொள்கிறேன் அது வரைக்கும்ம்...
////////நவம்பர் 7, 2008 2:59 PM
Pot"tea" kadai said...
சாரு ஒரு யதார்த்தவாதி, என்னைப் பொறுத்தவரை...///////////
எதை எதார்த்தம் என்று சொல்கிறீர்கள் பொட்"டீ"கடை புரியவில்லை
சாருவின் யதார்த்தம் என் பார்வையில் உங்கள் பார்வையில் மாறுபடக்கூடும்.
மற்றபடி சமகால எழுத்தாளர்களில் சாரு முக்கியமானவர்.
அப்படி இல்லாமல் எழுத முடியாததும் இயலாமை தானே?
Please check www.karurtoday.com ,especially சாமானியன் சொல்லும சரித்திரம்... its one of the good article..if somebody like you encourage him,he will be more interested to write...
ஒன்றரையணா கருத்துகளை உதிர்ப்பவர்கள் குறைந்த பட்சம் சாரு இதுவரை என்ன செய்திருக்கிறார், இப்போது என்ன செய்ய முயன்று கொண்டிருக்கிறார் என்பதையாவது தெரிந்துகொண்டு கருத்துகளை உதிர்க்கலாம். ஒன்றுமே செய்யாமல் இணையத்தில் கொஞ்சம் மேய்ந்துவிட்டு கண்டபடி திட்டி / மிரட்டி எழுதுவது அயோக்கியத்தனம்!
If so you cant criticise anyone unless you achive something in their own field.Dont promote charu like this.Is he such a great writer as you claim?
சாருவின் நாவலான் ஜீரோ டிகிரி போன்றவை 'ஆபாசம்' அல்லது வக்கிர எழுத்து என்று 'over-simplification' எளிமைபடுதுவது தவறு. அந்த நாவலை படிக்க ஒரு 'தகுதி' அல்லது ஒரு அகண்ட வாசிப்பனுபவ்ம் தேவை என்பதே என் அபி. நான் லீனியர் எழுத்துக்கள், மற்றும் சாரு மேற்கோள் காட்டும் பல பல மேலை மற்றும் இதர எழுத்தாளர்களை படித்திருந்தால் மட்டுமே ஜீரோ டிகிரி அய் appreciate பண்ண முடியும் என்று நினைக்கிறேன்.
தமில் சூழலுக்கு இது மிக புதிது. அதிர்ச்சி வைத்தியம் செய்கிறது. காலத்தில் மிகவும் அட்வான்ஸாக இருக்கிறாதாக கொள்ளலாம். இன்னும் ஒரு 30 ஆண்டுகள் கழித்து அவரின் எழுத்துக்கள் சிலாக்கிக்கபடலாம்..
May be should have been born much later, say in 2025 and write for future generations...
//மயிறு, மட்டைன்னு எழுதினா வயிறு எரிகிற அரைகுறைகளில் நானும் ஒருவன். சாரு அதே மயிறு மட்டைய பொது மக்கள் படிக்கும் வாரமலரில் எழுதட்டுமே பார்க்கலாம். லக்கி சொல்வதை அப்போது ஏற்றுக்கொள்கிறேன் அது வரைக்கும்ம்...//
சீரோ டிகிரியும், ராஸலீலாவும் பொதுமக்கள் படிக்க வெளியிடப்பட்டவை அல்ல என்ற இளாவின் கண்டுபிடிப்பில் அகமகிழ்ந்தேன். சாருவின் எழுத்துக்கள் பொதுமக்களை சென்றடையாமல் தனிச்சுற்றுக்கு விடப்படுகிறது என்ற தகவல் அறிந்து மெத்த மகிழ்ச்சி இளா! :-)
இது எல்லாவற்றையும் விட என்னை மிகவும் எரிச்சலூட்டியது சாருவின் சமீபத்திய வித்தை: வலைத்தளத்தில் இவர் படித்து ரசித்த கென் - கென்னை - தன் வாரிசு என்று அறிவித்தது. பாசிசம் பற்றியும் அதிகார மையங்கள் பற்றியும் பீராயும் அதிபுத்திசாலி சாரு, இந்த "வாரிசு" வித்தையை எந்த ரகத்தில் சேர்ப்பார்? கென் சாருவிடம் போய் "ஐயா நான் உங்கள் பரம ரசிகன், உங்களை நான் என் தந்தைக்கும் மேலாக நினைக்கிறேன், ஆதலால் என்னை உங்கள் வாரிசாக அறிவியுங்கள்" என்று மன்றாடினாரா?
http://englishtamil.blogspot.com/2008/07/blog-post_12.html
ஆங்கிலத்தில் வந்த மூன்று அனானிப் பின்னூட்டங்கள் நிராகரிக்கப்படுகின்றன. பொதுவெளியில் வேண்டாம், எனக்குத் தனிமடல் இட்டால் அவர்களுக்கு என்னுடைய செருப்படி விளக்கங்களைத் தருவேன் :)
தம்பி லக்கி, உன் சேவைக்கெல்லாம் தேவைக்கு அதிகமாகவே கைமாறு செஞ்சிட்டேன். இன்னும் என் புகழ் பரப்பிட்டு இருக்கிறாயே. இன்னும் நான் என்ன செய்வேன் என் செல்லமே. ரஜினிகாந்தை அழைத்தீர்களா என்பது போல் என் செல்லம் லக்கியை அழைத்திர்களா என ஒரு பதிவு போடட்டுமா? :)
சாருவிற்க்கு மிகவும் பிடித்த ஒரு எழுத்தாளரான (Paulo Coelho) பாலோ கொல்கா, 'முற்போக்கு எழுத்தாளர்கள் பற்றி சிலாகித்தி எழுதிய ஒரு சுட்டி : (இதை பிரதி எடுத்து சாருவிற்கு பரிசளித்தேன் ! :))
http://tamilopinion.blogspot.com/2008/11/paulo-coelho-on-progresive-writers.html
இது ஆங்கிலம் ஆனாலும், அனுமதியுங்கள் சுந்தர். அனைவரும் ரசிப்பார்கள் !!
Paulo Coelho on 'Progresive Writers'
(from the preface of 'Like the Flowing River')
a) A writer always wears glasses and never combs his hair. Half the
time he feels angry about everything and the other half he depressed. He spends most of his life in bars, arguing with other dishevelled, bespectacled writers. He says very 'deep' things. He always has amazing ideas for the plot of his next novel, and hates the one he has just published.
b) A writer has a duty and an obligation never to be understood by his own generation ; convinced, as he is. that he has been born into an age of mediocrity, he belives that being understood would mean loosing his chance of ever being considered a genius. A writer revises and rewrites eacj sentance many times. The voabulary if the average man is made up of 3,000 words ; a real writer never uses any of these, because there are another 1,89.000 in the dictonary, and he is not the
average man.
c) Only other writers can understand what a writer is trying to say. Even so, he secretly hates all other wirters, because they are alwyas jockeying for the same vacancies left by the history of literature over the centuries. And so the writer and his peers compete for the 'most complicated book' : the one who wins will be the one who has succeeded in being the most difficult to read.
d) A writer understands about things with alarming names, like
seminotics, epistomology, neoconcretism. When he wants to shock someone, he says things like : 'Einstein is a fool', or 'Tostoy was the clown of the bourgeoisie'. Everyone is scandalised, but they
neverthless go and tell other people that the theory of relativity is bunk, and that Tolstoy was a defender of the Russian aristocracy.
e)When trying to seduce women, a writer says : 'I'm a writer', and
scribbles a poem on a napkin. It always works.
f) Given his vast culture, a writer can always get work as a literary critic. In that role, he can show generosity by writing about his freinds' books. Half of any such reviews are made up of quotations from foreign authors and other half of analysis of sentances, alwyas using expressions such as 'the epistemological cut', or 'an integrated bi-dimensional vision of life'. Anyone reading the reviews will say :'What a cultivated person', but he won't buy the book because he will
be afraid he might not know how to continue reading when the
epistemological cut appears.
g)When invited to say what he is reading at the moment, a writer
always mentions a book no one has ever heard of.
h)There is oonly one book that arouses the unanimous admiration of the writer and his peers : Ulysess by James Joyce. No writer will ever speak ill of this book, but when someone asks him about what it is all about, he can't quite explain, making one doubt that he has actually read it.
From the preface of 'Like the Flowing River'
ஆ... தெரியாம வுள்ள வந்துட்டேன் போல... ஏரியா ரணகளமா இருக்கு... ஒன்னு மட்டும் சொல்லிகறேன் சாமிகளா... சாருவ நான் திட்டல... ஹிஹி...
Is he a writer worth a supporting blog(s) and these many comments? Too difficult for me to ratioanalize whats going on here. The guys support him have read anything outside Tamil? or they just read him and think that this is The Writing? Did they think about what people generally consider morale is, what is civilization?... can keep writing... but its hurting to see blank ignorance
எழுத்திற்காக தன் வாழ்வின் ஒரு பகுதியை ஆய்வுக்களமாகவே (உதாரணம் :அடுத்த புத்தகத்திற்கான தற்போதய டெலிபோன் உரையாடல்கள் )அமைத்துக்கொண்ட இலக்கிய விஞ்ஞானி சாரு .அவர் எழுத்து ராஜ போதையை தரும் . அதை விரும்பி ஏற்றுக்கொள்பவர்கள் , என்னைப்போன்ற வாசகர்கள் . அந்த போதையை விட முடியாமல் தினமும் குட்டிக்கதைகளை படித்து பிதற்றுபவர்கள் தான் வலைப்பூக்களில் விமர்சனம் (எதிர்மறையாக ) செய்பவர்கள் . குட்டிக்கதைகள் தப்பு அப்டீன்னா ஏங்க படிக்குறீங்க ?
உருப்படியா வேற வேலைய போய் பாக்கலாம்ல !. ஜீரோ டிகிரியில் உங்கள் கண்ணுக்கு ஆபாசம் தெரிகிறதா ?
சமுதாயத்தில் பெண்களுக்கு ஏற்படும் கொடுமைகளையும் , குடும்பம் எனும் அமைப்பு பெண்களுக்கு தரும் வலிகளையும் பிரதிபலிக்கும் கண்ணாடியாகத்தான் எனக்குத் தெரிகிறது .
ramvinothbabu@gmail.com
இசை பற்றிய சாருவின் கட்டுரைகள் அருமையானவை. அவரின் 'கலகம், காதல் இசை' - உலக இசையோடு ஒரு பயணம் book : அவரின் ஆக்கங்களில் தலை சிறந்ததாக நான் கருதுகிறேன். இதைப் போல உலக இசை பற்றி எழுத தமிழ்நாட்டில், ஏன் இந்தியாவில் வேறு யாரும் இல்லை என்று சொல்லாம். அதற்க்கா அவருக்கு ஒரு : "hats off to you Charu"
ஆனால் பிற எழுத்தாளர்கள் மற்றும் அவர்களின் படைப்புகள் பற்றிய விமர்சனங்களில் ஒரு விருப்பு/ வெறுப்பற்ற நடுவுனிலைமை (neutral stand)இல்லாத தன்மை அவரிடம். புதுமைப்பித்தனின் அனைத்து (ரிபீட் : அனைத்து) சிறு கதைகளும் குப்பை, புல்ஷிட் வகை தரித்தர புலம்பல்கள் என்று விளாசுகிறார், ஒரு மதிப்பீட்டு கட்டுரையில். புதுமைபித்தனுக்கு 100க்கு 100 மதிப்பெண் போட வேண்டும், superlative எழுத்தாளார் என்று கொண்டாட வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் சாரு 100க்கு முட்டை (சுழி) மதிப்பெண் போடுகிறார். ஜ்ஸ்ட் பாஸ் கூட இல்லை ! கொத்து புரோட்டா போடுவது போல புதுமைபித்தனை குதறுகிறார். இது அவரின் இன்டெக்ரிட்டை (integrity) சந்தேகிக்க வைக்கிறது. இதே பாணியில் சாருவின் படைப்புகளை ஒரு எழுத்தாளர் குதறினால் தாங்கிவாரா என்ன ? objective critisism is totally different..
///அமைத்துக்கொண்ட இலக்கிய விஞ்ஞானி சாரு///
அண்ணாச்சி!!!
செம காமடி பண்ணுறீங்க போங்க! விஞ்ஞானத்தை கேவலப்படுத்த வேணாம்.
இவர் எழுதுறார் பிராண்ஸ் நாட்டில் மக்களின் ஆவரேஜ் வயது
-----------------------------
பிரான்ஸில் ஒரு மனிதனின் சராசரி வயது 95.
..........
மதாம் பவாரி ’ நாவலைப் படித்துக் கொண்டிருக்கிறாள். நூறு வருடத்திற்கு முன்னால் எழுதப்பட்ட நாவல் அது. அதனால்தான் அங்கு ஆயுள் அதிகமாக இருக்கிறது.
--------------------------------
Life expectancy of French in France has NEVER BEEN 95 EVER!
http://en.wikipedia.org/wiki/List_of_countries_by_life_expectancy
தவறான உண்மைகளையும் இவர் கொடுக்கிறார்.
விஞ்ஞானம் உண்மைகளை அடிப்படையாக கொண்டது. சாரு கொடுக்கும் அரைகுறை உண்மைகளை க்கொண்டு அவருக்கு விஞ்ஞான அடைமொழி கொடுத்து விஞ்ஞானத்தை அவமானப்படுத்தாதீர்கள்!
-வாசகன் 1
Charu = Half Baked Fakir
ஆக எல்லோரும் சாருவைப் படிக்கிறவர்கள்...
நான் உட்பட...
சாரு எழுதுகிற விசயங்கள் இப்போதைக்கு கொஞ்சம் அதிகப்படியாக தெரிந்தாலும் அது வாசிக்கிறவரின் வாசிப்பனுபவத்தை பொறுத்தது என்பது என் கருத்து ...
பெருமாள் சொல்கிற கதைகளை விட பெரிய கதைகள் எல்லாம் எனக்கு படிக்க கிடைத்த நாட்குறிப்புகளில் இருக்கிறது
அவருடைய இயல்புகள் பற்றி ஆணவம், தலைக்கனம் பற்றி கேள்விப்பட்டவற்றை பேசுகிற அளவுக்கு அவருடன் நெருக்கமோ அனுபவமோ இல்லை என்பதால் அதனைப்பற்றிய கருத்துகளை இப்பொழுது சொல்ல முடியாது
மற்றப்படி உணவு அருந்துவதற்கு பயன் படுத்துவதை... இதுவரையும் வேறதெற்கும் பயன்படுத்த சந்தர்ப்பம் அமையவில்லை... ;)
இன்னொரு அனானியின் ஆங்கிலப் பின்னூட்டம் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. நீங்க சொல்லியிருப்பதற்குத்தான் ஏற்கனவே சாரு கதையில் பதில் சொன்னாதாகச் சொல்லிவிட்டேனே.. பதிவையே படிக்காமப் பின்னூட்டம் போடாதீங்கப்பா :)
//
55 வயதானவன் காதலிக்கலாமா, சின்னப் பெண்களைக் காதலிக்கலாமா, திருமணமானவன் பிறபெண்களைக் காதலிக்கலாமா... இதுகூடப் பரவாயில்லை, அவற்றை அப்படியே எழுதலாமா... (சிலருக்கு அப்படிச் செய்வதுகூடப் பிரச்சனையில்லை, ஆனால் எழுதக் கூடாதாம்!). I would like to eat your pussy என்ற வரி ஆபாசமானதாம். நல்லது; அவர்களது வாய் உணவருந்த மட்டுமே பயன்படுவதாயிருக்கும்
//
சுந்தர் சார்,
எனக்கு ஒன்று புரியவில்லை.. 55 வயதானவன் காதலிப்பதோ, சின்ன பெண்ணைக் காதலிப்பதோ என்னுடைய பிரச்சினை இல்லை...என்ன எழுதுவது என்பது அவர் விருப்பம்..அதற்காக அவர் எழுதுவது எல்லாம் இலக்கியம் என்று ஒப்புக் கொள்ள வேண்டுமா?
குறிப்பாக, அவர் கோணல் பக்கத்தில் எழுதும் காதல் சமாச்சாரம், உண்மையில் காதல் பற்றி பெரிதாக இல்லை...
இவர் தனது காதலியை ஒரு நண்பருக்கு அறிமுகப்படுத்தினாராம்(அலெக்ஸ்?), கடைசியாக அந்த நண்பர் சொன்னாராம்..இப்படி ஒரு பெண்ணை காதலிக்காவிட்டால் வாழ்க்கையே இல்லை (வார்த்தைகள் எனக்கு ஞாபகம் இல்லை..ஆனால் அர்த்தம் இப்படி தான் இருந்தது!)
"இதில் காதல் பற்றி எதுவும் இருப்பதாக தெரியவில்லை..இங்க பாரு எனக்கு வயசு அறுவது, ஆப்பரேஷன் வேற வச்சிருக்கேன்..ஆனா என்னோட சின்ன வீட்டுக்கு வயசு பதினெட்டு தான்..சின்ன பொண்ணா பாத்து பிடிச்சிட்டேன்..அது தான்டே தெறம!"
இப்படியான மனநிலை தான் அந்த எழுத்துக்களில் தெரிகிறதே தவிர, எந்த விதமான "எளக்கியமோ", "மொயற்சி"யோ தெரியவில்லை...
இந்த வகையில் பார்த்தால், 16 வயதில் தொடுப்பு வைத்திருக்கும் 80 வயது பண்ணையார்கள் "எளக்கியமாகவே" வாழ்ந்தவர்கள்!
வெண்டைக்காயை வெளக்கெண்ணையில வதக்கி சாப்பிட்றவன்னு நீங்க திட்டினாலும் பரவாயில்லை, இது எந்த வகை "எளக்கியம்"னு எதுனா லிங்க் கொடுத்தா புண்ணியமா போகும்!
எல்லாரும் ஒரு காலத்தில் middle-class moronகளாக இருந்தவர்கள்தான். இவர்களை கலாச்சாரக் காவலர்கள் என்று எத்தனையோ காலமாக சொல்லிக்கொண்டுதான் இருக்கிறோம். அதன் மூலம் நமது ஆளுமையை, நமது identityஐ உருவாக்கிக்கொள்கிறோம்.
அவர்களின் கருத்துக்களுக்கு எதிர்வினை விடுப்பது சரியானதே. அதே சமயம், don't take it to the extremes. you end up aggravating the whole damn thing.
இனி விஷயத்துக்கு வருவோம்.
“ரசம் சாதமும் அதற்குத் தொட்டுக் கொள்ள வழவழா வெண்டைக்காய் பொரியலும் சாப்பிடுபவர்களுக்கு, மிளகாய்க் காரமான (அதுவும் சாராயத்திற்குக் கடித்துக் கொள்ளும் மிளகாய்) சாரு நிவேதிதாவின் எழுத்துகள் ஆபாசமாய்த் தெரிவதில் வியப்பில்லை.”
யப்பா. எத்தன நாளா இதே பல்லவிய பாடுவீங்க? ”நீ தச்சிமம்மூ. நான் தலக்கறி, ரத்தப்பொறியல்.. நாறுதா? மூக்க..மூக்க மூடுரியா? ங்கோத்தா மூக்க மூட்ர? என்னன சூத்துக் கொழுப்பு உனக்கு..”
plain boring!
“கலை உன்னதம் எனச் சிலர் கும்மியடித்தபோது சாரு ஆய்வு பத்திரிகையில் எழுதிய கட்டுரையின் தலைப்பு : Art is Fart.”
'கலை, உன்னதம் எனச் சொல்பவர்களை' ஏன் கும்மியடிப்பதாக சொல்றீங்க? என்ன காரணம்? art is fart என்று சாரு சொல்வது எவ்விதமான ஒரு மாற்றுக் கருத்து?
“
ரெண்டாம் ஆட்டம் என்ற நாடகத்தை சாருவும் அவரது சில நண்பர்களும் ஒருங்கிணைத்தார்கள். அதில் ஒரு காட்சி : இரண்டு ஆண்கள் பத்தடி இடைவெளியில் ஓரினப் புணர்ச்சி செய்வதுபோல் மைமாக நடித்தார்கள். பின்னணியில் சுப்ரபாதம். அந்நாடகக் குழுவில் பலர் இருந்தபோதும் சாருவின்மீது குறிவைத்து உடல்ரீதியான வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது.”
உடல்ரீதியான வன்முறையை கண்டிக்கிறேன். அதே சமயம், இந்நிகழ்ச்சி பற்றி பிரமிள் எழுதின ஒரு நீள்கவிதையை வாசித்திருப்பீற்கள் என நினைக்கிறேன்("Counter Culture Unlimited"). அதன் வீச்சு என்னை மிகவும் பாதித்தது. அது பற்றி உங்கள் கருத்துக்களை அறிய ஆவல்.
“கவிதா சரணில் எழுதிய கட்டுரை ‘பூம் பூம் ஷக்கலக்க அமைப்பியல்வாதம்'. ஷங்கன்னா என்ற புனைபெயரில் எஸ் ராமகிருஷ்ணன் ஒரு கட்டுரை எழுதினார். அதற்கு மறுப்புக் கட்டுரை எழுதிய சாரு வைத்துக் கொண்ட புனைபெயர் ஃபக்கன்னா”
ஃப்க்கன்னா? அதனால்?
தான் எழுதுவது போர்னோவிற்கு பக்கத்தில் கூட வராது என்று அவரே கூறியிருக்கிறார். அது உண்மையும் கூட. என் விமர்சனமும் அதுதான். சாரு ‘காமம்' குறித்து முழுவீச்சுடன் எழுதவேயில்லை என்பதே. அதன் என்னற்ற, பின்னிப்படரும் dimensions அருகே கூட அவர் வரவே இல்லை என்பதே என் கருத்து.
காமம் குறித்தும், sexuality குறித்தும், சிதறுண்ட தன்னிலை குறித்தும் மிக உக்கிரமாக பல எழுத்தாளர்கள் கூறியிருக்கிறார்கள். Nikos Kazantzakis முக்கிய உதாரணம். அவ்வளவு தூரம் கூடப் போக வேண்டாம். நிமிடத்திற்கொருமுறை ‘உத்தமத் தமிழ் எழுத்தாளன்' என்று கூறும் அவர், உ.த.எவின் ‘பின் தொடரும் நிழலின் குரல்' அல்லது ‘காடு' போன்ற நாவல்களைப் படித்திருக்கிறாரா? பின் தொடரும் நிழலின் குரலில் வீரபத்ரபிள்ளையின் கடிதங்களில் தெறிக்கும் காமத்தின், பிதற்றலின், அழிவின் விஸ்வரூவத்தின் அருகே கூட அவரது தற்போதய எழுத்துக்கள் வர முடியாது என்பது என் கருத்து.
சர்சையைக் கிளப்ப இந்த comparisonஐ வைக்கவில்லை. சாருவின் விசிறியாக ஒரு காலத்தில் இருந்திருக்கிறேன். அதன் மூலம் ஒரு அடையளத்தையும் தேடிஅடைந்தேன்.
*-*-*
மிகுந்த அலைசலுக்குப் பின் நான் வைக்கும் கருத்துக்கள் இவை.
//சீரோ டிகிரியும், ராஸலீலாவும் பொதுமக்கள் படிக்க வெளியிடப்பட்டவை அல்ல என்ற இளாவின் கண்டுபிடிப்பில் அகமகிழ்ந்தேன். //
சரோஜாதேவி பொஸ்தகம் கூட பொதுமக்களுக்காக வெளியிடப்படுறதுதாங்க. அதுக்காக?
//கிரி said...
எல்லாரும் ஒரு காலத்தில் middle-class moronகளாக இருந்தவர்கள்தான். இவர்களை கலாச்சாரக் காவலர்கள் என்று எத்தனையோ காலமாக சொல்லிக்கொண்டுதான் இருக்கிறோம். அதன் மூலம் நமது ஆளுமையை, நமது identityஐ உருவாக்கிக்கொள்கிறோம். //
நல்ல கருத்து. பகிர்தலுக்கு மிக்க நன்றி கிரி. பெருமளவிற்கு ஒத்துப் போகிறேன். (அட யாருப்பா கேட்டது உன்னை? என்று கேட்பது புரிகிறது:) )
அவரவர் கருத்துக்களை அவரவர் வெளியிடுகிறார்கள்.
நேற்று காங்கிரசுக்கு வோட்டுப்போட்டார்கள்.
இன்று திமுகவுக்கு ஓட்டுப்போட்டார்கள்
நாளை அதிமுகவுக்கு ஓட்டுப்போடுவார்கள்.
அதற்கு அடுத்த நாள் தேமுதிக.
மக்களின் மனநிலையே மாறும்போது, சாருநிவேதிதா - அவரது கருத்துகளில் அவ்வப்போதைக்கு மாறுதல் ஏற்படுவது சஹஜம் தானே?
அடிக்கடி கொள்கையும், கருத்துக்களும் மாறுபவர்களுக்கா இத்தனை சண்டை?
சாரு மசும்தார் (Charu Mazumdar)என்ற நக்ஸல் போராளியின் முதல் பெயரையும், விவேகானந்தரின் சிஸ்சியையான நிவேதித்தா தேவியில் பெயரையும், சேர்த்து 'சாரு நிவேதித்தா' என்ற புணை பெயரை பூண்டவர் ஒரு போராளியும் அல்ல, துறவியும் அல்ல. உலகலாவிய இன்பங்களை நுகரத்துடிக்கும் இந்த 'வாழ்க்கையை கொண்டாடுபவர்' பூண்ட புனைபெயர் ஒரு பெரிய முரண்நகை. 'போகர்' என்று தன்னை அழைத்துக்கொள்ளாம்.
கம்யூனிசம், நக்ஸல்பாரிகளை கடுமையாக எதிர்ப்பவன் தான் நான். ஆனாலும் ஒரு உண்மையான போராளிக்குண்டான் அடிப்படை குணனலன்களாலான எளிமை, சுயநலமில்லா தியாக வாழ்வு, கொளகை பிடிப்பு மற்றும் அர்பனம் மற்றும் மனோவைராக்கியம் போன்றவை மரியாதைக்குரிய தன்மைகள்.
It is an insult to Charu Mazumdar and Sister Nivedita Devi. They would certainly disown him, where they been alive today..
சாரு நிவேதாவின் இணையத்தளத்தை அவ்வப்போது படித்து வந்த அனுபவத்தில் என் பார்வைகள்..
1) சாருவின் படைப்புக்கள், கருத்துக்கள் எப்போதுமே பரபரப்பானவை. பத்தி எழுத்தாளர் என்பதே அவருக்கு சரியாக இருக்கும்.
2) ஒவ்வொரு படைப்பாளிக்கும் ஒவ்வொரு சமூகக்கடமைகள் இருக்கிறது. சாருவின் எழுத்துக்கள் காமம் என்ற சுழியிலே விழுந்த சருகுபோல சுற்றிக்கொண்டே இருக்கின்றன.
3) எல்லோரும் ஒன்று சொன்னால், சாரு தன்னை வித்யாசப்படுத்துவதற்காக இன்னொன்றை சொல்வார். தமிழகம் சார்ந்த பெருமை படத்தக்க விஷயங்களை தவிர்த்து விடுவார். இவர் கண்ணுக்கு எப்போதும் தென்படுபவை ஃப்ரெஞ்சு நாடு, கேரளா மற்றும் சென்னையில் உணவு மாளிகைகள் மற்றும் மதுபானக்கடைகள். இவரது எழுத்துக்களில் இந்தியாவின், தமிழகத்தின் பெருமைகளை, போற்றக்கத்தக்க விஷயங்களை பார்க்கவே முடியாது.
4) காமத்தை ஓரளவுக்கு மேல் விவரித்து ஒரு படைப்பாளி எழுதும்போது, வாசகர்கள் யாராக இருந்தாலும் ஒரு வித அருவருப்பை உணரமுடிகிறது. இவரது குட்டிக்கதைகளில் பெரும்பாலும் "குட்டி" பற்றிய கதைகளையே காணமுடிகிறது. சில நேரங்களில் நாலே நாலு வரிகளில் ஒரு பத்தியை நிரப்பிவிட்டு அதையெல்லாம் ஒரு குட்டிக்கதையாக காட்டுவது நகைப்பைத்தான் உண்டாக்குகிறது. இப்படியெல்லாம் சென்றால் சாருவால், நூத்தியெட்டு என்ன, பத்தாயிரத்து எட்டு என்ற எண்ணிக்கையை தொட முடியும்.
5) அடிக்கடி பண உதவியை வாசகர்களிடம் எதிர்பார்க்கும் ஒரு எழுத்தாளரிடம் எப்படி ஒரு தனித்துவக் கொள்கையை எதிர்பார்க்க முடியும்? சங்கராச்சாரியார் பற்றிய கட்டுரைக்கு இவரது வாசகர்களிடம் வந்த எதிர்ப்பை போல, நாளைக்கே இது போன்ற காமக் களியாட்ட கதைகளுக்கும் எதிர்ப்பு வரும். அப்போது கொள்கைகளை தளர்த்திக் கொண்டு சாரு வேறொரு தளத்திற்கு செல்வாரா? பண உதவி தரும் வாசகர்களின் நிர்ப்பந்தங்களுக்கு சாரு தள்ளப்படுவார் என நினைக்கிறேன்.
6) இளையராஜவை விட யுவன் நன்றாக பிண்ணனி இசை அமைக்கிறார் என்ற ஒரு கருத்து மூலமே தனக்கும் இசைக்கும் காத தூரம் என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கிறார். நுண்ணோக்குத் திறன் இல்லாத மிக மேலோட்டமான ஒரு எழுத்தாளர் சாருலதா என்பதற்கு ஒரு சோறு பதமே இது.
7) "கேட்கின்றவன் கேனப்பயலாக இருந்தால் " என்பது போல, சில நேரங்களில் சிலவற்றை பகிர்ந்து கொள்வார். மெரினாக் கடற்கரைக்கு அடிக்கடி செல்லும் பழக்கமாம். ஆனால் கடற்கரைக்கு அருகே வங்கக்கடல் இருப்பதே இவருக்கு வெகுநாட்கள் கழித்து அவரது நண்பர் ஒருவர் சொல்லியே புலப்பட்டதாம். கவுண்டமணி காமேடி தோற்றது போங்க. இவர் எதைச் சொன்னாலும் அதை அப்படியே ஏற்றுக்கொள்ள ஒரு கூட்டம் சேர்ந்து விட்டது.
ஆங்கில இலக்கியத்தை (ஷேக்பியர் தவிர) முற்றாக நிரகரிக்கிறேன் என்றார் சாரு. ஏனென்றால் என்று 140ஆண்டுகளுக்கு முன் free sex பற்றி ஆங்கில கோணம் (mid victorain pruidentarty) அப்ப்டி இருந்தாதம். அதாவது free sex அய் எதிர்த்தார்கலாம். French இலக்கியத்தில் தன் வாசிப்பனுபவத்தை துவக்கிய சாரு, அதனால் ஸாமர்சட் மாம் (Somerset Maughaum)போன்ற ஆங்கில ஜாம்பவானகளை இன்னும் வாசிக்கவில்லை. ஆங்கிலேயர்களின் இலக்கிய மரபு சுத்த வேஸ்டாம். :)))
நாட்டில் இன்றைய தலையாய பிரச்சனை : Free sexக்கு அங்கீகாரம் இல்லாத கட்டுபொட்டித்தனம் என்பதே சாருவின் நிலை மற்றும் கவலை. சமூக பிரச்சனைகளுக்கு அடிப்படை காரணம் இந்த கட்டுப்பொட்டித்தனம் தான் காரணமாம். !!
Free Sex சரி அல்லது தவறு என்று வாதட வரவில்லை. நேர்மை பற்றி தான் நான் சொல்ல விழைகிறேன். Free Sex தவறு அல்ல. ஆனால் பொய் சொல்லி ஏமாற்றுதல் தான் தவறு. பல ஆண்கள் பெண்களை வெறும் போகப்பொருளாக மட்டும் பார்த்து, thru false promise ஏமாற்றுவது இங்கு அதிகம். பெண்களும் தான். திருமணத்திற்க்கு முன்பே கணவன் அல்லது மனைவியடம் தம்மை பற்றிய முழு உண்மைகளையும் சொல்லி, பிறகு திருமணத்திற்க்கு பின் தான் எப்படி இருப்பேன் என்பதையும் தெளிவு படுத்துவதே அடிப்படை நேர்மை. அந்த வெளிப்படையான தன்மை இல்லாததால் தான் ஆண் / பெண் உறவுகளில் கடும் சிக்கல்கள், ஏமாற்றங்கள், மனமுறிவுகள், காயங்கள் மற்றும் சிதைவுகள். இது உலகெங்கும்தான். சாருவின் சொந்த வாழ்க்கையில் தான் எத்தனை முறிவுகள் மற்றும் வலிகள் மற்றும் காயங்கள்...
In the West, the definition for கற்பு is not 'ஒருவனுக்கு ஒருத்தி' ; 'One at a time' என்பதே அவர்களின் definiton for கற்பு .
அமைதியான, அன்பான, நிறைவான வாழ்க்கை, உறவுகளில் உண்மை மற்றும் ஆழாமான ஈர்ப்புகள், இவை தான் முக்கியம். காமம் வாழ்க்கையில் ஒரு பகுதிதான்.
ஆண் / பெண் உறவுகளை ஆழப்படுத்தி, அன்பை அதிகரிக்க செய்ய அது ஒரு கருவி. that is all.
'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும்' என்பது சாதாரணமான பழமொழியல்ல. There is a optimum level for all things in life, including sex.
ரமேஷ், நன்றி. நான் மேற்கோள் காட்டியிருந்தது பழைய பத்திரிகைகளிலிருந்து. சுட்டி கிடைக்காதென்று நினைக்கிறேன்.
நன்றி, ஸ்ரீதர் நாராயணன். நல்ல வேளை ஒன்றரையணா இல்லை :)
நன்றி, இராமன். அந்தப் பதிவையும் படித்தேன். என்ன சொல்ல?? :(
நன்றி, லக்கி லுக்.
நன்றி, வெண்பூ. ஆம். படித்துப் பாருங்கள்.
நன்றி, வால்பையன்.
நன்றி, Dew Drop.
நன்றி, செந்தழல் ரவி. எதற்கென்று லின்க் போடுவது :)
நன்றி, பொட்டீக்கடை.
நன்றி, அம்பி. சாப்பிட்டிற்கு இல்லை, சாராயத்திற்கு :)
சாருவை பற்றி லிவிங் ஸ்மைல் வித்யா போட்ட ஒரு பதிவு படித்தேன்
சுந்தர் அண்ட் லக்கி சார் படித்து பார்த்தீர்களா?.உங்கள் கருத்து என்ன?
livingsmile.blogspot.com
இவரிடம் பிடித்தது: எளிமையான் எழுத்துக்கள்.
இவரிடம் பிடிக்காதது: மிகை படுத்துதல்.
ராஜசேகர், நன்றி. இது வக்காலத்து இல்லைங்க.
அனானி, நன்றி. ஆம், தனிப்பட்ட முறையில் அவரைப் பிடிக்கிறதா இல்லையா என்பது தேவையில்லாத விஷயம்.
இலவசக் கொத்தனார். நன்றி. நிச்சயம் நீங்கள் உங்கள் விமர்சனங்களை வைக்கலாம். அதை ஆபாசம் என்ற ஒற்றைத் தன்மையிலேயே இருக்க வேண்டாம் என்பதே என் வேண்டுகோள். பதிவர்களைப் பற்றி அவர் சொன்னது (கிழக்கு பதிப்பகக் கூட்டத்தில்) பெரும்பாலும் எனக்கு ஏற்புடையதே.
அக்னி பார்வை, நன்றி.
பொடியன், நன்றி.
குப்பன் யாஹூ, நன்றி. ஒரு எழுத்தாளனின் ‘நல்ல' குணங்களைப் பட்டியலிடுவது தேவையில்லாதது. அதன்மூலமே அவனது எழுத்துகளை அணுகுவதென்பதோடு எனக்கு உடன்பாடில்லை.
அனானி, நன்றி. உங்கள் கருத்துகளுடன் எனக்கு உடன்பாடில்லை.
இன்னொரு அனானி, நன்றி.
//
இசை பற்றிய சாருவின் கட்டுரைகள் அருமையானவை. அவரின் \'கலகம், காதல் இசை\' - உலக இசையோடு ஒரு பயணம் book : அவரின் ஆக்கங்களில் தலை சிறந்ததாக நான் கருதுகிறேன். இதைப் போல உலக இசை பற்றி எழுத தமிழ்நாட்டில், ஏன் இந்தியாவில் வேறு யாரும் இல்லை என்று சொல்லாம். அதற்க்கா அவருக்கு ஒரு : \"hats off to you Charu\"
//
மிகுந்த யோசனைக்குப் பிறகே இந்த கமெண்ட்டை இடுகிறேன். இங்கே வெறும் எக்ஸ்ட்ரீம் நிலைப்பாடுகளாக மட்டுமே இருக்கின்றன.
நண்பரே,
உண்மையில் சாருவுக்கும், இசைக்கும் ரொம்ப தூரம். ஒரு வெகு எளிமையான ரசிகனின் கருத்தாகவே சாருவின் இசை குறித்த கட்டுரைகள் இருக்கின்றன. அப்படி ஒரு ரசிகனாகக் கருத்துகளை முன் வைப்பது தவறேயில்லை. ஆனால், அதை மட்டுமே வைத்துக்கொண்டு என்னைப்போல உலக இசை எவருக்கும் தெரியாது என்ற ரீதியில் சாரு தொடர்ந்து பேசுவதும், எழுதுவதும்.
உண்மையில் சாருவின் இசை தொடர்பான கட்டுரைகளில் இசையைக் குறித்து அவருக்கு சொல்ல எதுவுமே இருப்பதில்லை. எப்போதுமே இசைக்கலைஞர்களின் பின்னணியில் உள்ள அரசியலைப் பற்றியோ, பாடல் வரிகளைப் பற்றியோ பேசுவதோடு சாருவுக்கும், இசைக்குமான தொடர்பு நின்று விடுகிறது. அதையும் தாண்டி அவர் இசையைப் பற்றி எதுவும் சொல்லும்போது அவர் எப்படிப்பட்டதொரு இசை குறித்த அடிப்படை புரிதல் கூட இல்லாதவர் என்று விளங்கி விடுகிறது.
வெகு சமீபத்திய உதாரணம்: யுவன்சங்கர் ராஜாவையும், கார்த்திக்ராஜாவையும் ஒப்பிடும்போது ஹார்மோனியைப் பற்றி அவர் உளறியது.
கிட்டத்தட்ட இதுபோன்ற நுனிப்புல் புரிதல்கள் அடிப்படையிலேயே சாருவின் இலக்கிய/தத்துவ/அரசியல் கண்ணோட்டங்களும் இருக்கின்றன.
இங்கே பலபேர் தலையில் வைத்துக் கொண்டாடும் ஸீரோ டிகிரியைப் போன்ற போ.மோ புத்தகம் மாதம் ஒன்றாக சந்தையில் வெளி வருகிறது.
சமீபத்திய புத்தகம்: Girls
மற்றபடி உலக இசையைப் பற்றி தொடர்ந்து எழுதுபவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஷாஜி, சேதுபதி அருணாசலம்.
இந்தியாவிலேயே வேறு யாருமில்லை என்பது ஹி... ஹி... ஹி...
மிகத் தாமதமாகத்தான் இந்த பதிவை காண நேர்ந்தது. இதை பற்றி சொல்வதானால்,
சிக்மண்ட் பிராய்ட் என்ற உளப்பகுப்பாய்வாளரை அனைவரும் அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். ஆமாம் அவர்தான் மனோதத்துவ தந்தை. ஆனால் அவர் கண்டுபிடித்து கூறிய உண்மையை அன்றைய மருத்துவகள், இவர் காம ஆசையில் பைத்தியம் பிடித்து உளறுகிறார் என்றார்களாம். காரணம் அவரது கண்டுபிடிப்பு முழுக்க முழுக்க குழந்தை பாலுமை பற்றியது. அதாவது பெரும்பாலான மன நோய்கள் பால் உணர்ச்சியுடன் தொடர்புடையது என்பது போன்ற உண்மைகள். உதாரணத்திற்கு குழந்தை விரல் சப்புவது கூட பாலுமை உணர்ச்சியுடன் தொடர்புடையது என்றார் அவர். அவர் அதுபோலவே கனவுகளுக்கும் விடை கொடுத்துள்ளார். ஆனால் இன்னாளில் இவர் உளப்பகுப்பின் தந்தை என போற்றப்படுகிறார்.
அதுபோலத்தான் இன்று சாரு. ஒருவன் மனதில் (ஒருவன் என்பது அவர் மனது மட்டுமல்ல எனது மற்றும் உங்களையும் சேர்த்துதான்) என்ன உள்ளது என்பதனை தனக்கே உரிய தனி நடையில் வெளிக்காட்டுகிறார். என்ன இருக்கிறதோ அதை மழுப்பாமல் எழுதுவது அவரது தனி சிறப்பு.
பி.கு: இன்றைய மன நிலை என்னவென்றால், ஆடையில்லாமல் இருந்தால் அது ஆபாசம். அதுவே பாலிதீன் உடை அணிந்திருப்பது சுத்தம் .
நன்றி!
ஆர். கே. அதியமான்!
நல்லா இருக்கு உங்க பின்னூட்ட மெல்லாம்! இதைப்பற்றி நிறையவே பேசலாம்!
ஆனால், It is not worth it for sure! Some people love that writer and some find him as a guy who is worthless!
These two groups can agree to disagree and move on with our lives!
----------------------------
BTW, சுந்தர்!
"ஐ வாண்ட் டு ஈட் யுவர் புஸ்ஸி" என்று தமிழ் இலக்கியத்தில் எழுதுவது ஆபாசம் இல்லைனு உங்களிடமிருந்துதான் தெரிந்து கொண்டேன்!
அதை தமிழாக்கம் செய்து எழுதிப்பாருங்க! அப்போவும் ஆபாசமா தெரியலைனா, பேசாமல் ஆபாசம் என்கிற வார்த்தையை நம்ம தமிழ் அகராதியில் இருந்து எடுத்து விடுங்க! இது ஆபாசம் இல்லைனா, ஆபாசம் என்கிற வார்த்தையே தேவை இல்லை, சுந்தர்!
http://casuallly.blogspot.com/2006/09/blog-post_115887453705704315.html
நானும் சாருவும்
தெரியுங்க உள்ளார வந்தவுடனே எண்ணத்தை எதிர்பாபீங்கனு,ஆன்ன இது அது இல்ல,எனக்கும் அவருடைய எழுத்துக்கும் இருக்கற ஒரு ஒரு... எண்ணத்தை சொல்றது ஒரு தொடர்புனு வேணா சொல்லாம்
இப்பதான் சமீபகாலமா ஒரு நாலஞ்சு வருஷமாத்தான் அவரப்பத்தி தெரியும். கதைகள், கோணல் பக்கங்கள் அப்புறம் மத்த எழுத்தாளர்களின் அவரைப்பற்றிய
அக்கப்போர் போன்ற சிலபல நல்ல விஷயங்களின் மூலமாத்தான் அவரப்பத்தி தெரிஞ்க்கிட்டது எல்லாம்
அவரப்பத்தி எதாவது எழுதலாம்ன்னு நெனைச்சாலே ஒர் கலவையான எண்ணங்கள தவிக்கமுடியறதிலை எல்லாரமாதிரியே தான் நானும் லட்சம்தடவ கோணல் பக்கங்கள் படிச்சாச்சு, அனுதாபம், வெறுப்பு, அன்பு, காதல்( தான் வேறேன்ன), அவருக்கு நடந்ததெல்லாம் படிப்பவருக்கு நடந்ததை போலவே ஒர் மாயத்தோறத்தை உருவாக்கிவிடுவதில் வல்லவர்ன்னு தான் தோணுது, இது வேற யாருக்கோ நடந்தது அல்லது நடக்கிறதுன்னு படிக்கறவங்க ஒதுங்கிட முடியாது குறைந்தபட்சம் ஒரிரு நாட்களுக்காவது அது நம்மை பாதித்தே தீரும்..
கண்டிப்பா இவருக்கு உதவி பண்ணியே தீரனும்னு நெனைச்சு 1000 மே 500ஓ அனுப்பி வைச்சுட்டு,ஏற்கனவே இந்த மாதிரி 1000 மே 500ஓ அனுப்பி வைச்சுட்டு அவருக்கிட்ட ஙோ..த, ங்..மா நு திட்டு வாங்கற வரிசைல அப்படியே நானும் கடேசியா வந்து நிண்ண காலமெல்லம் உண்டு,அடுத்து நம்ம பேருதான் கோணல் பக்கத்துல நாறப்போகுன்னு அப்பாவியா ரொம்ப நாள் பயந்துக்கிட்டே இருந்து அப்பறம்தான் தெரிஞ்சது, அவருகிட்ட திட்டு வாங்கனும்னாக்கூட பொம்பள பேருல போனாத்தான் வேலைக்காகும்ன்னு.
என்னக்கேன்னமோ இவருக்கும் நம்ம தல சுஜாத்தா சாருக்கும் எழுத்துமுறைல நெறையா ஒத்துமை தெரியுது
சாரு : நானும் மணியும் பார்க் ஹோட்டல்லா ஒரு லார்ஜ் சாப்பிட்டுக்கிட்டே
சுஜாதா: நானும் மணியும் (இது வேற, இது ரத்னம்) ஒரு பட பூஜைல..
சாரு : யாருக்குமே தெரியலைன்ன நல்ல ரைட்டர் இல்லயா சத்தார் சாகும்போது வெறும் ரெண்டு பேருதான் பக்கத்துல இருந்தான், ஆனா அண்ணத்துரை....
சுஜாதா: நான் பிரபலமாகா இருப்பதாலேயே என்னை இவர்களால் ஒரு இலக்கியவாதி என்ற் ஒத்துக்கொள்ள் முடிவதில்லை
சாரு :எது வன்முறை, எது கலாச்சார சீரழிவு, நீலப்படங்களை ஒத்த தமிழ் சினிமாவை பாரட்டும் இவர்கள் ....
சுஜாதா: முன்று மணி நேரம் அதற்குள் கதை, 5 பாடல்கள், 4 ஸ்டண்ட் ,செண்டிமெண்ட் வினியாகஸ்த்தர்களின் ரசனை என் பல்வேறு கார்ணங்களிருந்தாலும் ஷங்கர் போன்றவர்கள் திறம்பட கதை சொல்கிறார்கள் இருந்தாலும் பதேர் பாஞ்சாலி போன்ற படங்கள் எப்போத்து.....
சாரு :புரியாத, பின் தொடரமுடியாத இருந்தாலும் நிறைய உழைப்பை கோருகிற லத்தீன் அமெரிக்க எழ்த்தாளர்கள், பாடகர்கள் பற்றி பத்திபத்தியாக எழுதுவது அதையே தன் சாதனையாக்கொண்டிருப்பது, அது யாருக்குமே புரியாது என்பதால் "அவன் ஒரு வெட்டிப்பய எப்பொபாத்தாலும் ஸெக்ஸப்பத்திதான் எழுதுவானு" பொது ஜனங்களின்(வேற யாரு நம்மதான்) மாத்துக்கு ஆளாவது
சுஜாதா:முயற்ச்சித்தாலும் புரியாத ஆனாலும் புரியவேண்டிய, புரியலைல நீயெல்லாம் அவ்வளாதான் என்று குற்றவுணர்ச்சி ஏற்படுத்துகிற அறிவியல் கட்டுரைகளை எழுதுவது அது யாருக்குமே புரியாது என்பதால் மணிரத்தினம் பற்றியும் கமலஹாசன் பற்றியும் கட்டுரைகள் வரைவது...
சாரு :....
சுஜாதா:.....
இது முடிவுற்ற எண்ணிக்கையி தொடரலாம்...
இது சாருவுக்கு தெரியவந்தால் அவர் எழுதுவதை நிறுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்க்கு ஒன்றும் இல்லை..
இப்பொது அவர் எழுத்தில் இருக்கும் முரண்பாடுகளைப் பார்ப்போம்
1) நல்ல இலக்கியத்தை தீமானிப்பது எண்ணிக்கை என்றால் குழந்தைகூட
சிரித்துவிடும்
2) மத்யமம் ஒரு தரமான மலையாள இலக்கியப்பத்திரிக்கை வாரம் 50000 பிரதிகள் விற்கிறது
சத்தியமா எனக்கு புரியலீங்க
1)தமிழில் நான் படிப்பதை நிறுத்தி வருடக்கணக்காகிறது
2) தமிழில் ஒருவருக்கு நோபல் பரிசு கோடுக்கலாம் என்றால் அது அசோகமித்திரன் தான்
சரியாக நினைவில் இல்லை, ஆனாலும் ஒருவர் கோணல் பக்கங்களை முழுவதும் படித்தாலே நிறைய முரண்பாடுகள் தட்டுப்படும்..
ஆனால் இது எதுவுமே அவரது வலைப்பக்கத்தில் புதிய கட்டுரைக்கண்டவுடன் நீங்கள் சொடுக்கும் வேகத்தை கட்டுப்படுத்திவிடாது, மேலும் இது அனைத்துமே ஒர் இயல்பான மனிதனின் அவ்வப்போதைய எண்ணங்கள், மற்றும் மாற்றங்கள் என்பதும் நீங்கள் உணரமுடியும்
மேலும் அவர் ஸெக்ஸ், ஸெக்ஸ் ஸெக்ஸ் என்று ஒரேடியாக அதைப்பற்றியே எழுதுவதாக நினைத்தாலும் என்ன செய்வது
நாம் அப்படித்தானே இருக்கிறோம்
சந்திரா, நன்றி.
அனானி, என்னது சாருவிற்கு விளம்பரமா :))
அனானி, சைட் ஹிட்ஸ் அது இதுன்னு எதுக்கு தேவையில்லாம :(
பாரு நிவேதிதா, நன்றி :)
காவியா, நன்றி. என்னங்க செய்யறது :)
அனானி, நன்றி. நேற்றும் இன்று காலையும் இரண்டு ஆங்கிலப் பின்னூட்டங்கள் நிராகரிக்கப்பட்டன. நீங்கள் எதைச் சொல்கிறீர்கள் என்பது புரியவில்லை.
வளர்மதி, நன்றி.
வாசகன் 1, நன்றி. உங்ககூடல்லாம் விவாதம் பண்ணமுடியுமாங்க? :)
//அதாவது பெரும்பாலான மன நோய்கள் பால் உணர்ச்சியுடன் தொடர்புடையது என்பது போன்ற உண்மைகள். //
என்னது உண்மைகளா?? மனநல அறிவியலில் சிக்மண்ட் ப்ராய்டின் கோட்பாடுகள் காலாவதியாகி நீண்ட வருடங்கள் ஆகிவிட்டன தோழரே.. வட்டத்தை விட்டு வெளியே வாருங்கள் :-))
அதிஷா, நன்றி.
அனானி, நன்றி. இதைத்தான் வன்முறை என்கிறேன்.
இளா, நன்றி. வாரமலருக்கு ஏற்ற எழுத்துகளைத்தான் அவர்கள் வெளியிடுவார்கள். சிறுபத்திரிகை / இணையம் மாதிரியான மாற்று ஊடகங்களும் அதே அளவுகோலை வைத்துக் கொள்ள வேண்டுமா என்ன?
பாண்டித்துரை, நன்றி.
ஆட்காட்டி, நன்றி.
அனானி, நன்றி. பார்க்கிறேன்.
அனானி, நன்றி. நான் எங்கே அப்படிச் சொன்னேன்? சாருவை நான் promote எல்லாம் செய்யவில்லை :)
அதியமான், நன்றி.
அனானி, நன்றி. வாரிசு என்பதையை அப்படியே லிட்டரல் அர்த்தத்தில் எடுத்துக் கொள்ளவேண்டாமே...
சாரு, நன்றி. (எந்தப் பேர்ல்லாம் பின்னூட்டம் போடறாங்கய்யா!)
அனானி, நன்றி. சரி, நீங்க சாருவைத் திட்டலை :)
அனானி, நன்றி. என்ன சொல்ல வர்ரீங்க.. யாருமே தமிழ்ல தவிர (அப்படியிருந்தாத்தான் என்ன?) வேற ஒன்னுமே படிக்கறதில்லை என்றா?
வினோத்பாபு, நன்றி.
கிங், நன்றி.
அது சரி, நன்றி. நீங்கள் மேற்கோள் காட்டியிருப்பது மட்டுமல்ல அவர் எழுதியிருப்பது. அவரது மூன்று நாவல்களையும், பல சிறுகதைகளையும் நீங்கள் படித்துப் பார்க்கலாம்.
//(அப்படியிருந்தாத்தான் என்ன?) //
1) ஃபக்கண்ணா என்று பெயர் வைத்துக்கொள்வது பெரிய விஷயம் போலத் தோன்றும்.
2) சிக்மண்ட் ப்ராய்ட் எப்போதோ காலாவதியாகி பரணுக்குப் போய்விட்ட விஷயம் தெரியாமல் போகும்.
3) ஒரு எழுத்தாளர் மேல் உண்மையான விமர்சனமும், பாராட்டும் போய் \'எழுத்துலக சூப்பர்ஸ்டார்\' என்று கொண்டாடத் தோன்றும்.
4) பின் நவீனத்துவம் இந்தியச் சூழ்நிலைக்கு எந்த விதத்தில் ஒத்து வரும் என்று புரியாமல் போகும்; அப்படிப் புரியாமலே பல எழுத்தாளர்கள் பின்நவீனத்துவத்தைப் பற்றிப் பிய்த்து உதறும் போது அதைக் கொண்டாடத் தோன்றும்.
5) கலகம் என்பது இலக்கியத்தின் ஒரு பங்கு என்பது போய், கலகம் மட்டுமே இலக்கியம் என்று தோன்றும்.
6) நான்ஸி அஜ்ரம் என்ற சுமாரான பாடகியை தலைமேல் வைத்து கொண்டாடத் தோன்றும். அதற்கான விளக்கம், அடி, தொகை எதுவுமில்லாமல், \"தமிழ் சினிமாவில் இதற்கு முன் இப்படிப்பட்ட சிருஷ்டித்தன்மை கொண்ட பாடல் வந்திருக்கிறதா\" என்று கேட்கும்போது பதில் சொல்ல முடியாமல் போகும்.
7) தென்னாற்காடு மாவட்டத்திலேயே, ஏன் தமிழ்நாட்டிலேயே, ஏன் இந்தியாவிலேயே உலக இசை பற்றி எழுதுபவர்னா அது இவர்தான் என்று சொல்லத் தோன்றும்.
8) வெறுமனே யூரோப்பிய, அராபியப் பெயர்களை உதிர்த்து ஜாலம் செய்யும்போது வாய் பிளந்து பார்க்கத் தோன்றும்.
கொஞ்சமாவது சுத்தி, முத்தி பாருங்க பாஸ்! பழங்காடியாகிப்போன \"கிணற்றுத் தவளை\" உதாரணம்தான் நினைவுக்கு வருகிறது.
தமிழ் இலக்கியம், சூழல் தவிர வேறெதுவும் தெரியாமலிருப்பது தப்பில்லை. ஆனால் அப்படியிருக்கும்போது நிறைய பேர் தங்கள் சொந்த அரசியலையும், கொள்கைகளையும் நம் தலையில் அரைத்து விடும் துரதிர்ஷ்டம் நேரும். அதுவாவது பரவாயில்லை, அப்படி அரைக்கப்படுவது கூடப் புரியாமல் போய் புளங்காகிதம் அடையும் அபாயமும் ஏற்படும்.
மதுரையில் நடந்த நாடகவிழாவில்
சாரு நிவேதிதா தாக்கப்பட்டதை நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்.
பெண்கள் பலரும் கலந்து கொண்ட நாடக விழாவில் நாடகத்தின் அந்தக் காட்சியினைப் (சுப்ரபாத பின்னணியில் ஆண்களின் ஓரினப் புணர்ச்சி) பார்த்து
அதிர்ச்சியும், அருவருப்பும் கொண்டு பெண்கள் அரங்கை விட்டு வெளியேறிய நிலையில்தான் அந்த நாடகத்தை உருவாக்கிய சாரு நிவேதிதா தாக்கப்பட்டார் என்பதையும் தாங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். சுப்ரபாதம்தான் காரணம் என்பது, பிறகு உருவேற்றிக்கொண்ட புனைவாகவே படுகிறது.
எதையும், நிலைதடுமாற வைக்கிற மிரட்சியை ஏற்படுத்துவதுதான் கலை, எழுத்து ஆகியவற்றின் நோக்கமாக சாரு நிவேதிதா கொண்டிருப்பதாகப் படுகிறது.
அது எல்லோர் கவனத்தையும் தன் மீது திருப்புவதற்கான உத்தி ஒழிய வேறில்லை. அந்தக் கவனம் அறிவு சார்ந்ததாக இருக்காது. ஒருவித வியப்பு அல்லது வேடிக்கை சார்ந்ததாகவே இருக்கும்.
சாரு நிவேதிதாவின் சில எழுத்துக்கள் முக்கியமானவை என்பதில் ஐயமில்லை. ஆனால், அவையும் அவரது விசித்திர நடவடிக்கைகளால் கவனமற்றுப் போவது வருத்தத்திற்குரியது.
இதுவும் ஒரு வகை மன நோயாமே?
எனக்கு இவர பிடிக்காது. ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம், அடிப்படையில். :)
இவரு எழுதுனதுல ஏதாச்சும், சூப்பர் கதை இருந்தா, உரல் கொடுங்களேன். படிச்சு பாக்கறேன். இவ்ளோ தூக்கு தூக்கறீங்களே, நியாயமானு படிச்சு தெரிஞ்சுக்கத்தான்.
சுந்தர் இதுக்கு நான் சொல்லவேண்டியதை பாதிபேரும், அதுக்கு பதில் மீதி பேரும் சொல்லியிருக்காங்கதான். ஆனாலும் நானும் அந்த அறைகுறை லிஸ்டல சேர்ந்துக்கறதுல ஆட்சேபனையில்லை. அவரோட பத்தி எழுத்துக்கள்ள இருக்கற காரமும் நேர்மையும் என்னை அதிகம் கவர்ந்ததுண்டு ஆனாலும் கதைகளை வாசிக்க முடிவதில்லை அதை எந்த இலக்கிய வகையில் சேர்ப்பதற்கு என அவர் எழுதுகிறார் என்றும் புரியவில்லை.. அவரவர் பார்வை அவரவர்க்கு.....
nee yenna saruvukku kodukka....avaru aapasamathan yeluthuraru...neeyum paliyal noi ullavannuthan ninaikiren
did Charu Niveditha really attempt to commit suicide? what's going on here? why on earth people would behave so mean.
நான் முன்பே இங்கு குறிப்பிட்டுள்ளது போல, குட்டிக்கதைகள் 108 என்ற தலைப்பில் இவர்கள் செய்யும் அலும்பு இருக்கிறதே.. வெட்கக்கேடு.. சொந்தக்கதை, சோகக்கதை பேசுவதற்கு குட்டிக்கதைகளா கிடைத்தது.. பெருமாள் ஜெஸ்ஸியோடு சல்லாபித்ததை பெருமாளின் மனைவிக்கு யாரோ போட்டுக்கொடுத்து விட்டார்களாம்.. தற்கொலை முயற்சியாம்.. சாரு இந்தக்கருமத்தையெல்லாம் கலைந்து விட்டு, விரைவில் நல்லதொரு இலக்கியம் படைக்க் பயணிப்பார் என நம்புவது வீணென்று தோன்றுகிறது. ஒரு புறத்தில் தான் ஆன்மீகப் பேர்வழி.. மறுபுறத்தில் அதையெல்லாம் அந்தர் செய்யும் பேர்வழி.. இவருக்கும் ரஜினிக்கும் வித்யாசமில்லை.
தன்னுடைய தற்கொலை முயற்சிக்கு காரணம் ஜெயமோகன் தான் என்று சாரு அடுத்து சொல்லப் போகிறார். பார்த்துக் கொண்டே இருங்கள்.
saruvai padikkum pothu appadi ondrum puthiyathaka theriyavillai,vasakarkale... muthalla lenin ezhuthina "arasu kudunbam thani sothu akiyavar'in thottram" book'kai padikkavum
---Prabhu
saruvai padikkum pothu appadi ondrum puthiyathaka theriyavillai,vasakarkale... muthalla lenin ezhuthina "arasu kudunbam thani sothu akiyavar'in thottram" book'kai padikkavum
---Prabhu
Post a Comment