பழக்கம்

பேனா பிடிக்கக் கற்றுக் கொண்ட
நாள் முதலாய் வரைந்து கொண்டிருக்கிறேன்
பெட்டிகள்
மையெடுக்காமல்
கோடுகளை இணைத்து
சதுரமாய்
நீள் சதுரமாய்
செவ்வகமாயும்கூட
வண்ணம் நிரப்பியும் நிரப்பாமலும்
நிரப்பியதாய் நினைத்துக் கொண்டும்
நிரப்ப மறந்து போயும்

சில சமயம் வெறுங்கையில் காற்றில்

போதையில்
ஆங்காரத்தில்
பெட்டிகளை உடைத்துவிடுவதும்

15 comments:

வால்பையன் said...

வரைதலும் வரையப்படுதலும் ஓவியம் என்றழைக்கப்படுகிறது.

வால்பையன் said...

//பேனா பிடிக்கக் கற்றுக் கொண்ட
நாள் முதலாய் வரைந்து கொண்டிருக்கிறேன்//

நீங்க விரல்லையே படம் வரைவிங்கன்னு சொன்னாங்க!

வால்பையன் said...

//சில சமயம் வெறுங்கையில் காற்றில்//

அட நீங்களே ஒத்துகிட்டிங்களா

வால்பையன் said...

//போதையில்
ஆங்காரத்தில்
பெட்டிகளை உடைத்துவிடுவதும்//

போதையினால் படைப்புகள் அழிந்துவிடுவது இங்கே உறுதியாகிறது.

வால்பையன் said...

ஆனாலும் அதிலும் ஒரு கட்டுடைக்கப்பட்ட படைப்பு கிடைக்கிறதே

நன்றி

கென்., said...

சில சமயம் வெறுங்கையில் காற்றில்

போதையில்
ஆங்காரத்தில்
பெட்டிகளை உடைத்துவிடுவதும்

:) nadathunga

கார்க்கி said...

ஒன்னும் புரியல தல.. மறுபடியும் படிச்சு பார்க்கிறேன்

கார்த்திக் said...

//வண்ணம் நிரப்பியும் நிரப்பாமலும்
நிரப்பியதாய் நினைத்துக் கொண்டும்
நிரப்ப மறந்து போயும்

சில சமயம் வெறுங்கையில் காற்றில்

போதையில்
ஆங்காரத்தில்
பெட்டிகளை உடைத்துவிடுவதும்.//

ரசித்தேன் :-))

K.Ravishankar said...

நல்ல இருக்குழ்ழ்ழ்........?

//சில சமயம் வெறுங்கையில் காற்றில்////போதையில்//

ஏன் இரண்டுக்கும் நடுவில் இடைவெளி?

சித்திரம் கை பழக்கம்
செந்தமிழ் நா "குழ்ழார" பழக்கம்?

அப்புறம் நீங்க சொன்ன "மொன்னைய" இருந்த என் கவிதையை மாத்திட்டேன் .படிங்க

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

வால்பையன், கார்க்கி, கார்த்திக், ரவிஷங்கர்... நன்றி.

Anonymous said...

மேலோட்டமாப் பார்க்கையில் வரைதல் பற்றி இருந்தாலும், வாழ்வியல் சார்ந்த ஒரு படிமத்தை முன்வைக்கிறது சுந்தர். நல்லா இருக்கு.

Saravana Kumar MSK said...

ஓவியங்கள் வழி பழக்கங்களை சொல்லி இருப்பதை போல எனக்கு தெரிகிறது..

மின்னல் said...

புரியுது ஆனா புரிய‌ல‌ என்ப‌து போல‌ இருக்கு.

அனுஜன்யா said...

சுந்தர்,

நல்லா இருக்கு. வேலன் சொல்லியிருப்பதைத்தான் நானும் நினைத்தேன்.

அண்மையில் எழுதியதா?

அனுஜன்யா

Joe said...

ஒன்னும் புரியல தல.. மறுபடியும் படிச்சு பார்க்கிறேன்

I agree with Gorky!

I guess it started well but ended slightly blurred! But I'm certainly not going to ask you to explain!