தூமைத் துணியின் விளம்பரம் கொண்ட வாசகங்களை
முகத்தில் அப்பிக் கொள்கிறான்
ஜெய்ஹோ ஜெய்ஹோ
எனக்கூக்குரலிடுகிறார்கள்
சேரிநாய் பணக்காரர்கள்
விபத்தில் இறந்தவரின்
கழுத்துவரை மூடிய வெள்ளை உடையில்
ஆங்காங்கே ரத்தத் திட்டுகள்
சின்னச் சின்ன தேசங்களின்
வரைபடங்களாய் உறைந்திருக்கின்றன
இதுவரை தாங்கள் பார்த்திருந்த
விபத்துச் சாவுகளைக் குசுகுசுத்துக் கொண்டிருக்கிறார்கள்
அடுத்த பத்தியில் இருந்த வாசகங்களில்
cheer leadersன் ஜட்டி தெரியும் புகைப்படங்கள்
புணர்ச்சியின் உச்சத்திற்கு முந்திய கணமொன்றில்
i am on pills, cum for me எனக் கத்துகிறாள்
விளம்பரங்கள் & சிகரெட் புகைகளுடன்
முற்றும்
கார்காலக் குறிப்புகள் - 58
2 days ago
39 comments:
க்ளாஸ்!
அற்புதம்
அண்ணே கவிதையா?ரொம்ப நாளாச்சு.சூடு போய் சாந்தி?
உங்க சிஷ்ய கோடிகள் மாதிரி ‘ம்ம்ம்ம்”(plural)”கலக்கல்ஸ்(plural)
”நச்”(singular).
//தூமைத் துணியின் விளம்பரம்....
cheer leadersன் ஜட்டி தெரியும் புகைப்படங்கள்//
இந்தப் பக்கங்கள் பட படக்கும்போது
மட்டும் சீறி எழுகிறார் கவிஞர்.
நவின விருட்சத்துல cheer leader என்ற தலைப்பிட்ட என் கவிதை படிச்சீங்களா?
கொஞ்சம் எங்கோ படிச்ச வாசனை வருதே.
வாழ்த்துக்கள்!
அருமை
ரவிஷங்கர் சார்!
வாழ்க்கையில் ஒருவரையாவது விமர்சனமின்றி இதுவரை பாராட்டியதுண்டா? :-)
உங்களுக்கு சமைச்சி போடுறவங்க நெலைமையை நெனைச்சா ரொம்ப பாவமாயிருக்கு :-(
//லக்கிலுக் said...
க்ளாஸ்!
//
//முரளிகண்ணன் said...
அற்புதம்
//
இனிமே நம்ம மீட் பண்ணாமலா போயிரப் போறோம்.. அன்னிக்கு இதுக்கு விளக்கம் சொல்லாம மட்டும் போங்க... இருக்கு லக்கி,முரளி.. !
//நவின விருட்சத்துல cheer leader என்ற தலைப்பிட்ட என் கவிதை படிச்சீங்களா? //
வறுமையின் நிறம் சிகப்பு படத்துல.. கடைசி சீன்ல கமல் ரொம்ப சீரியஸா.. அடித் தொண்டைல இருந்து “ வெள்ளை நிறத்தில் ஒரு பூனை” அப்பிடினு சொல்லுவாரு..
தேங்காய் சீனிவாசன்.ரொம்ப கூலா.. “செரிரி” அப்பிடினுவாரு.. ரவிஷங்கர் வரிய பாக்கும் போது அப்ப்டி சொல்லனும்னு ஞாபகம் வந்துச்சு..
********
இந்தக் கவிதை எதைப் பற்றிய சிந்தனையின் நீட்சி குருவே?
கலக்கல் குருநாதா !
"சிந்தனையின் நீட்சி குருவே?"
நரசிம்மரே நீங்கள் எளக்கியவியாதி ஆகிவிட்டதை இப்படியெல்லாம் தம்பட்டம் அடிச்சிகணுமா.
clap...
சுந்தர்,
கவிதை எனக்குப் பிடித்திருந்தது.
‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்
//Anonymous said...
"சிந்தனையின் நீட்சி குருவே?"
நரசிம்மரே நீங்கள் எளக்கியவியாதி ஆகிவிட்டதை இப்படியெல்லாம் தம்பட்டம் அடிச்சிகணுமா.
//
வேண்டும் என்றே ஜாலிக்கு எழுதப்பட்ட வார்த்தைகள்க்கு கூட வித்தியாசம் தெரியவில்லையா அனானி.. உங்கள் வார்த்தைகளை வைத்து நீங்கள் யார் என்பது தெரிவதால் தான் மனம் வலிக்கிறது..
ஒரு படத்தில் விஜய் சொல்வாரே.. நீ அடிக்கிறது வலிக்கல..ஆனா அடிச்சது நீங்கறதால வலிக்குதுனு”
என்னத்தச் சொல்ல??????
தலைப்பு குமுதமா ஆனந்த விகடனா? :))
//ஒரு படத்தில் விஜய் சொல்வாரே.. நீ அடிக்கிறது வலிக்கல..ஆனா அடிச்சது நீங்கறதால வலிக்குதுனு”//
இதுக்கு கவிதையையே கஷ்டப்பட்டு படிச்சு புரிஞ்சுக்கலாம் போலருக்கே :))
சரி.. சரி.. எளக்கியவாதிகளுக்குள் சண்டை சச்சுரவு.. சாரி சச்சரவு வேண்டாம்..
நிஜமாவே எனக்குகூட கவிதை பிடிச்சிருக்கு..(புரிஞ்சிருக்கு)
அன்புள்ள லக்கி,
//வாழ்க்கையில் ஒருவரையாவது விமர்சனமின்றி இதுவரை பாராட்டியதுண்டா? :-)//
மேல் இருப்பதை சொன்னவர் இப்படியும் சொல்லுகிறார் அதிஷா வலையில்(24 வர் ஹைகூ):-
//ரவிசங்கர் அவர்களின் பின்னூட்டம் இங்கே எப்படி இருக்கும் என்ற சஸ்பென்ஸ் தாங்கவில்லை. அவருடைய பின்னூட்டத்துக்காக ஏங்குகிறேன்//
அடுத்து ஒரு அனானி:-
//“உங்க குரு அதிஷா ஒரு கவிதை எழுதியிருக்கார் பாருங்க//
கைப்பிடித்து இழுக்கிறார்.
//உங்களுக்கு சமைச்சி போடுறவங்க நெலைமையை நெனைச்சா ரொம்ப பாவமாயிருக்கு//
அவங்களுக்கு ஆவில ஒரு தோசை கவித எழுதி அமுக்கி வச்சுருக்கேன்.
கடைசியாக;
//எதிர் கட்சிகளின் ஆரோக்கியமான விமர்சனங்கள்தான் என்னை வளர்த்து
இந்த நிலைமைக்கு ஆளாக்கியிருக்கிறது.//
சொன்னவர் யார்? விளம்பரத்திற்குப் பின்.....
Cable sir எனக்கும் புரிஞ்சிடிச்சு...
Sundar sir
//தூமைத் துணியின் விளம்பரம் கொண்ட வாசகங்களை
முகத்தில் அப்பிக் கொள்கிறான்
ஜெய்ஹோ ஜெய்ஹோ
எனக்கூக்குரலிடுகிறார்கள்
சேரிநாய் பணக்காரர்கள்// contradictions
//குசுகுசுத்து
cum for me// பகடி
நல்லாத்தான்யிருக்கு...
ஆனா செல்வேந்திரன் க்வித மாறி யில்ல...(:-))))))
//மேல் இருப்பதை சொன்னவர் இப்படியும் சொல்லுகிறார் அதிஷா வலையில்(24 வர் ஹைகூ):-
//ரவிசங்கர் அவர்களின் பின்னூட்டம் இங்கே எப்படி இருக்கும் என்ற சஸ்பென்ஸ் தாங்கவில்லை. அவருடைய பின்னூட்டத்துக்காக ஏங்குகிறேன்////
அதிஷாவை திட்டுவீங்கன்னு நினைச்சு கமெண்டு போட்டிருப்பாரு. நான் கூட அந்த விசயத்துல லக்கிய வழிமொழிஞ்சுருந்தேனே. என் பேர மறந்துட்டீங்களா :-))
////எதிர் கட்சிகளின் ஆரோக்கியமான விமர்சனங்கள்தான் என்னை வளர்த்து
இந்த நிலைமைக்கு ஆளாக்கியிருக்கிறது.//
சொன்னவர் யார்? விளம்பரத்திற்குப் பின்.....//
அப்ப நான் டீயும் தம்மும் அடிச்சுட்டு வந்துடறேன் :-)
அன்புள்ள நர்சிம்,
//வறுமையின் நிறம் சிகப்பு படத்துல.. கடைசி சீன்ல கமல் ரொம்ப சீரியஸா.. அடித் தொண்டைல இருந்து “ வெள்ளை நிறத்தில் ஒரு பூனை” அப்பிடினு சொல்லுவாரு..
தேங்காய் சீனிவாசன்.ரொம்ப கூலா.. “செரிரி” அப்பிடினுவாரு.. ரவிஷங்கர் வரிய பாக்கும் போது அப்ப்டி சொல்லனும்னு ஞாபகம் வந்துச்சு.//
தல உங்கள மாதிரியா...பதிவின் கடைசி வரி எழுதி “ஜன்னலை மூடு”
வை கிளிக்கும்போதே ஆலங்கட்டி மழைப் போல சடசடவென்று பின்னூட்டம் விழுகிறது.(லல்லா/ தம் தம் தனனம் அடக்கம்)
நாஙக ஸ்கூட்டர் டஸ்ட் கவர் விற்பவன் போல் ரோடில் போகும் எல்லா டூ வீலர்களையும் வழி மரித்து
கை காலெல்லம் ஆட்டி விற்க வேண்டும்.
இது ஒரு மார்கட்டிங்க் strategy
நல்லா இருங்க தல!
நம்ம மாதவனா? வித்யாபாலானா?
கவிதைப் படிச்சீங்களா?(??????????)
நல்ல parody ... காட்சித் தொகுப்புகள் அருமை ...
ஒண்ணும் விளங்கலே..!
ஹிஹிஹிஹி
புரியல
ஆனா படிக்க நல்லாத்தான் இருக்கு!
ட்ரைனிங் இன்னும் பத்தலையோ!
இன்னும் ஒரு நாலு வாட்டி படிச்சிட்டு வர்றேன்!
நாங்க எல்லாம் carefree, விச்பருக்கு மாறிட்டோம்,
இந்தியa ஒளிர்கிறது.
கழக அரசு இலவச carefree வழங்கும் திட்டம் தெரியாதா .
குப்பன்_யாஹூ
kavithai arumai. samudhayam meeedhana erichal terikkiradhu sundar.
படபடக்கும் பக்கங்களின் மாறும் காட்சிகள், அதன் மூலம் உணர்த்தப்படும் விஷயம் என மறைமுகமான அர்த்த விரிவுகளுக்கு இடமளித்து கவிதை நிறைவாயிருக்கிறது.அருமை.
உச்சத்திற்கு முந்திய கணமொன்றில்
முற்றும்-
neat
Can someone please explain what they understood..(I understand the meaning is going to be diff for each person..)..Thanks.
ps: If no one is going to come forward, I will start calling names..:-)
நல்லா இருக்கு...
ரசித்தேன்...
ரவிஷங்கர் சார்!
நீங்க ஒரு வலைப்பதிவு சாலமன் பாப்பையா. கலக்குங்க :-)
ரொம்ப நல்லா வந்திருக்கு இந்த கவிதை :)
உங்க அக்மார்க் முத்திரையோட
உணர்வுகளை உண்மையாய் வெளியில் காட்டிக்கொள்ள 'அரசியல் சரிநிலை' இல்லாத மனவலிமை மற்றும் எழுதும் ஆற்றல் வேண்டும். உங்களுக்கு இரண்டுமே வாய்த்திருக்கிறது.
கவிதை முழுதும் சில செக்யூரிட்டி பேப்பர்களில் பின்புலத்தில் ஆச்சாகியிருப்பது போல 'சுந்தர் சுந்தர்' என்ற ஸ்டாம்ப் இருக்கிறது :)
அவ்வப்போது நீங்க ஏன் பலருக்கு 'குருஜி' என்று இப்படித் தெரிவிக்கிறீர்கள். ரொம்ப புடிச்சிருக்கு சுந்தர்.
அனுஜன்யா
திரு. சுந்தர்,
மிகவும் மன்னிக்கவும். என்னுடைய தாமதமாக வந்த பின்னூட்டலுக்கு Forgive me. ஒரு பிரமாதமான கவிதையை எழுதியிருக்கிறிர்கள். A non-linear and fragmented poem.
""கழுத்துவரை மூடிய வெள்ளை உடையில்
ஆங்காங்கே ரத்தத் திட்டுகள்
சின்னச் சின்ன தேசங்களின்
வரைபடங்களாய் உறைந்திருக்கின்றன"
படர்ந்த ரத்த கறையின் விளிம்புகளை, இறந்தவரின் உடையில் தேசங்களின் வரைபடங்களாய் பார்த்திருப்பது முக்கியமாக இருக்கிறது.
லக்கி லுக், நன்றி.
முரளிகண்ணன், நன்றி.
ரவிஷங்கர், நன்றி. யாரைச் சொல்கிறீர்கள் சிஷ்ய கோடிகள் என்று?
எல்லாமே ஏற்கனவே சொல்லப்பட்டவைதாம் என்பதால் எங்காவது படித்திருக்க வாய்ப்புண்டு :)
நன்றி, ராதாகிருஷ்ணன்.
நன்றி, நர்சிம்.
நன்றி, இளைய கவி.
நன்றி, அனானி. உங்களுடைய கருத்துகளுடன் எனக்கு உடன்பாடில்லை. இலக்கியவாதி ஆவது என்பதென்ன கொலைகாரன் ஆவது போலக் குற்றமனாதா?
நன்றி, மயாதி.
நன்றி, பொன் வாசுதேவன்.
நன்றி, சஞ்சய் காந்தி. குமுதம் / ஆனந்த விகடனிலும் இம்மாதிரியெல்லாம் வருகிறதா என்ன?
கவிதைக்கேற்ற தலைப்பா இல்லை தலைப்புக்கு ஏற்ற கவிதையா? கவிதை அற்புதம்.
சென்ஷி, நன்றி. :)
கேபிள் சங்கர். நன்றி. சச்சரவு இருந்தாத்தானே களை கட்டும் :)
நன்றி, அஷோக். நிச்சயம் இருக்காது :)
நன்றி, ரவிஷங்கர். ஏங்க, அடுத்தவங்களுக்குப் பின்னூட்டம் வந்தா அது பின்பாட்டு, நமக்கு வந்தா கருத்தா?
நன்றி, நந்தா.
நன்றி, உண்மைத் தமிழன். பைத்தியக்காரன், வளர்மதி பதிவுகளையும் படித்துப் பாருங்கள். ஒருவேளை விளங்கலாம் :)
நன்றி, வால்பையன்.
தலைப்பு more than a கவிதை---வாஹே குரு
ரெஹ்மான் பாட்டு போல, படிக்க படிக்க நன்றாக உள்ளது---வாஹே குரு
me the escape...........
Wishes For Vikadan..
நன்றி, குப்பன் யாஹூ.
நன்றி, யாத்ரா.
நன்றி, டாக்டர் ருத்ரன்.
நன்றி, ரானின். நீங்கள் பைத்தியக்காரன் & வளர்மதி பதிவுகளைப் படிக்கலாம் :)
நன்றி, வேத்தியன்.
நன்றி, கென்.
நன்றி, அனுஜன்யா.
நன்றி, வாசு. வளர் பதிவில் நீங்களும் வளரும் உரையாடுவதை வாசித்து வருகிறேன்.
நன்றி, நிலாரசிகன்.
நன்றி, வாஹே குரு.
நன்றி, அத்திரி.
நன்றி, டக்ளஸ்.
Post a Comment